ஊட்டு பிள்ளைகளை நன்கு படிக்க விடுங்கள் / தூண்டுங்கள்....
மாணவ, மாணவியர்களுக்குத்தான் எல்லாரும் தன்னால் இயன்ற அறிவுரைகளையும் கடந்த கால நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு வழங்கி வருகிறோம். ஆனால் அதற்கு முன் அவர்கள் எவ்வித தொந்தரவும், தொல்லைகளும், தடைகளுமின்றி தன் தேர்வை நல்லபடி எழுதி முடிக்க வீட்டில் உள்ள அப்பா, பெரியம்மா, வாப்பா, உம்மா, ராத்தா, தங்கை, தம்பி, தங்கிச்சிமார்கள் அவர்களுக்கு உறுதுணையாகவும், உதவியாகவும் தேர்வுகள் முடியும் வரை எவ்வித தொந்தரவும் செய்யாதவர்களாகவும் இருத்தல் மிக,மிக அவசியமான ஒன்று.
கீழே குறிப்பிட்ட படி தொந்தரவுகள் செய்யக்கூடாது.
* தம்பி செத்த கடெக்கி போயி சாமானுவொ கொஞ்சம் வாங்கிட்டு வர்ரியா?
* போனு பண்ணியும் வரலெ செக்கடிமோட்லெ போயி ஆட்டோ புடிச்சிட்டு வர்ரியா புள்ளெ பெத்த ஊட்டுக்கு சீனி வாங்கிட்டு போகனும்?
* வாப்பா வெளியெ போயிட்டாஹ, கொஞ்சம் கூப்பன் கடையிலெ சாமான் வாங்கி தர்றியா?
* ராத்தாக்கு ஒடம்பு சரியில்லெ ஆஸ்பத்திரி வரைக்கும் தொணைக்கி வர்றியா? (அமெரிக்காவரைக்கும் தனியா போயிட்டு வரத்தெரியுது?)
* வண்ணான்ட்டெ துணி போட்டிக்கிறேன் கொஞ்சம் வாங்கித்தந்துர்ம்மா வாப்பா?
* ஊட்லெ வேலெ செய்றவ இன்னிக்கி பாத்து லீவு போட்டுட்டா கொஞ்சம் கடெத்தெருவுக்கு போயி மீனு வாங்கி தர்றியா?
* மாமா ஊடு குடி போறாஹ, காலைப்பசியாற போயிட்டு வந்துரு போவாட்டி கோவிச்சிக்கிடுவாஹ. (பரிச்சையிலெ ஃபெயிலாப்போனா கோவிச்சிக்கிட மாட்டாஹளா?)
* ராத்தாடெ புள்ளெயெ தூக்கிட்டு போயி சங்கத்துலெ போலியோ சொட்டு மருந்து கொடுக்குறாஹெ போயி போட்டுட்டு வந்துர்மா வாப்பா?
* வர்ர வழியிலெ தங்கச்சி பென்சிலும், அலி லப்பரும் வாங்கி கேட்டா வாங்கிட்டு வந்துர்ம்மா மறந்துராமெ?
* தஞ்சாவூர்லெ எக்ஸ்பிசன் போட்டிக்கிறானுவொ ராத்தம்மாவூட்லெ எல்லாரும் காரு புடிச்சி போறாஹ நாமலும் போயிட்டு வருவோம் அங்கெ சாமானுவொ வெலெ கொறஞ்சி விக்கிம் வாடா போயிட்டு வந்துர்லாம்?
* பைப்பு ஒடஞ்சி போச்சி போயி கபீராக்கா மொவனெ கூட்டிக்கிட்டு வர்றியா?
* தையல்காரன்ட்டெ துணி தக்கெ கொடுத்து பத்து நாளாச்சி. போயி வாங்கிட்டு வந்துர்றியா?
* பஞ்சாயத்து போர்ட்லேர்ந்து வந்து மைக்குலெ சொல்லிட்டு போயிட்டாங்க, செத்த அங்கெ போயி தண்ணி பில்லும், ஊட்டு வரியும் கட்டிட்டு வந்துர்ம்மா வாப்பா? (பரிச்சையிலெ ஃபெயிலா போயிட்டா ஹாஜி முஹம்மது சாரு அடிப்பாருண்டு யான் அவ்வொளுக்கு தெரியமாட்டிக்கிது?)
* நாளையோட கெரண்டு பில்லு கட்ட கடைசி நாளு, இன்னெக்கி எப்புடியாவது கட்டிட்டு வந்துரும்மா? இல்லாட்டி அபராதம் போடுவாஹ. (பரிச்சையிலெ ஃபையிலா போயிட்டா வாழ்க்கையே அபராதமா போயிடும்ண்டு அவ்வொளுக்கு தெரியாதா?) கெரண்ட்டே இருக்கிறது இல்லெ...இதுலெ பில்லு வெற கட்டணுமாக்கும்? என்று அவன் முணங்குவது எல்லோர் காதுகளுக்கும் நிச்சயம் கேட்கும் என்று நெனெக்கிறேன்.
* கெரண்டு அடிக்கடி போறதுனாலெ தண்ணி மோட்டாரும் காயிலு அடிவாங்கி வீணாப்போச்சி, செத்த மோட்ரு எசவு பண்ரவனெ கூட்டிக்கிட்டு வர்றியா?
* ஊட்லெ நெத்தா உழுந்துக்கிட்டு ஈக்கிது, தேங்காய்ப்பறிக்கிறதுக்கு ஊடு, ஊடா வந்துக்கிட்டு ஈந்த அந்த ஆளும் செத்துப்போயிட்டானாம். கொஞ்சம் சேர்மாவாடியிலெ காலையிலெ சுபோடெ போயி ஆளு நிக்கிம் கூட்டிக்கிட்டு வந்துர்றியா? தேங்காய் இல்லாததுனாலெ அடுத்த ஊட்லெ கடன் வங்கனுமா ஈக்கிது? (சுபோடெ படிக்கனும்ண்டு நெனெக்காம தேங்காய் ஞாபகத்துலேயே புள்ளெ படுக்குறதுனாலெ ராத்திரி கனவுல கூட தேங்காய் கொலையா வந்துட்டு போவும்)
* வர்ர வழியிலெ மீரா மெடிக்கல்லெ கொஞ்சம் மாத்திரெ வாங்கிட்டு வந்துரு? பட்டுக்கோட்டையிலெயே நேத்து கெடக்கலெ வாப்பா சொன்னாஹெ.
* மொபைல்லெ காசு முடிஞ்சி போச்சி (கதகதையா அளந்தா வேற என்னா செய்யிம்?) கடெத்தெருவுலெ மீனு வாங்கிட்டு வரும் போது நூறு ரூபாக்கி ஈ.ஸி. போட்டுட்டு வந்துரு மறந்துராமெ?
* சத்துக்கொறவா ஈக்கிது ஆட்டுக்காலு சூப்பு வச்சி தர்ரேன். கறிக்கடையிலெ கொஞ்சம் நெஞ்செலும்பும், காலும் வாங்கிட்டு வந்துரு.
* இன்வன்டரு பேட்டரி சர்வீஸ் பண்ண ஊட்டுக்கு ஆளு வரும் போன் பண்ணுனானுவொ வந்தா கொஞ்சம் கூட இருந்து பாத்துக்கோ.
* பேரனுக்கு (ராத்தா மொவன்) நாளெக்கு பள்ளிக்கொடத்துலெ ஆண்டு விழாவாம். அவனுக்கு அதுலெ கலந்துக்கிறதுக்கு கொஞ்சம் சாமானுவொ வேனும்ண்டு டீச்சர் சொல்லி அனுப்பி ஈக்கிறாஹெ. அந்த சாமான்வொலெ கொஞ்சம் மெயின் ரோட்ல உள்ள கடையிலெ போயி வாங்கி தந்துரும்மா வாப்பா.
* பெரியம்மாவுக்கு ஒரே ஓங்காரமா ஈக்கிது கொஞ்சம் நாட்டு மருந்து கடெயிலெ போயி கொஞ்சம் சாமானுவொ வாங்கிட்டு வா. அவ்வொளுக்கு குடிநி போட்டு கொடுத்தா நல்லாப்போயிடும்.
இப்படி படிப்பைத்தவிர ஏஹப்பட்ட வேலைகளை அவர்கள் மேல் அசராமல் ஏவி விட்டு தேர்வுக்கு தயாராகும் உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கும், அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் நீங்களே எதிரியாக அவர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடாதீர்கள்.
கடெசியிலெ, அல்லாஹ் இந்த புள்ளையலுவொலெ நல்லா படிக்க வச்சி, பாஸாக்கி, வாப்பா மாரி கஸ்டப்படாமெ, பெரிய உத்யோகத்துக்கு போயி ஊட்டு கஸ்டமெல்லாம் தீரட்டும் என்று து'ஆ மட்டும் செய்ய மறக்கிறது இல்லெ.....
பரிச்சையிலெ புள்ளையலுவொ ஃபெயிலாப்போனாலோ அல்லது மார்க்கு கொறச்சி வாங்குனாலோ அது தெரிஞ்சா மொதல்ல அப்பா உங்களத்தான் ஏசுவாஹ....புள்ளையலுவொலெ இல்லெ.....தெரிஞ்சிக்கிடுங்க....ஊட்டு புள்ளையலுவொலெ செரமம் கொடுக்காம நல்லா படிக்க வைங்க...பிறகு அதன் பலாபலன்களை நீங்களும் அனுபவிப்பீங்க......இன்ஷா அல்லாஹ்...
பரீட்சை எழுதின மாதிரி ஒரே டயர்டா ஈக்கிது.... தேத்தண்ணி குடிக்கனும்... வரட்டா....
-மு.செ.மு. நெய்னா முஹம்மது
21 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும்.
எம்.எஸ்.எம். வச்ச பரிச்சை கொஞ்சம் கஷ்டமாகத்தான் ஈக்குது.என்ன பண்ணுவது புள்ளையல்வோ நல்லா ஈக்கனுனகுரத்துக்காக சிரமபட்டு எழுதனுமோ போச்சு.
//* தம்பி செத்த கடெக்கி போயி சாமானுவொ கொஞ்சம் வாங்கிட்டு வர்ரியா?//
ஆம்புளைல்வோ நீங்களெல்லாம் வெளிநாட்டிலே ஈக்கிரியலே அதுனாலத்தான் புள்ளையள்வொலே கெஞ்சனுமா ஈக்குதுண்டு நான் சொல்லலே பொம்புளைவோ மத்தியிலே பேசுறாங்களாம்.
// பரீட்சை எழுதின மாதிரி ஒரே டயர்டா ஈக்கிது.... தேத்தண்ணி குடிக்கனும்... வரட்டா....//
புள்ளையல்வொலே கடெக்கி அனுப்ப வானாண்டு சொல்லிப்புட்டியலே எப்படி டீ கெடக்கிம் ?
அஸ்ஸலாமு அலைக்கும்,
இப்படி எல்லா வேலைகளையும் செய்ய வேண்டாம் என்று சொல்லுட்டியலே..
உண்மை தான் நெய்னா பரீச்சை நேர்த்துல தான் நிறைய வேலை ஏவுவாஹ
..
நீங்கள் சொல்லியுள்ளது படிப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், இது தான் எதார்த்தம். ஊரில் உள்ள பெற்றோர்களுக்கு புரிந்தால் சரி.
அது மட்டுமில்லெ, மப்பும் மந்துரமுமா மழெ வர்ர மாதிரி ஈக்கிது மெத்தெயிலெ துணி காயப்போட்டிக்கிறேன் கொஞ்சம் எடுத்து உள்ளக்க வச்சிருடுமா....
பாலு தெரஞ்சி போச்சி முபீன் ஸ்டோர்லெ போயி ஆரோக்கியா பாலு பாக்கெட்டு ரெண்டு வாங்கிட்டு வர்ரியா?
பேரண்டெ சைக்கிள் ரோதை ஒடஞ்சி போச்சி கடெத்தெரு பப்பர்சி மெவன்டெ போயி பத்த வச்சிட்டு வர்ரியா?
ஊட்லெ படிச்சிக்கிட்டு ஈக்கிற பொம்புளப்புள்ளையல்வொல்ட்டெ போயி, கொஞ்சம் வெங்காயம் உறிச்சி தர்ரியா? தேங்கா திருவி தர்ரியா? ரொட்டிக்கி மாவு பெசஞ்சி தர்ரியா? கிழிஞ்சி போன துணியெ கொஞ்சம் தச்சி தர்ரியா? மீனு ஆஞ்சி தர்ரியா? என்று தேர்வில் ஜென்மத்திற்கும் கேட்கப்படாத கேள்விகளை கேட்டு படிக்கும் பெண்பிள்ளைகளை வீட்டு பெரியவர்கள் பாடாய் படுத்திவிடுகிறார்கள் தேர்வு நேரத்தில்..
படிக்க வச்சிப்புட்டு இப்புடி மள்ளியக்கடை லிஸ்ட்டு மாதிரி வேலையலுவொலெ அவ்வொளுக்கு கொடுத்தா புள்ளெ எப்புடி படிச்சி ஒசரத்துக்கு வர்ரது?
தம்பி MSM NM
தங்களுக்கேயுரிய தனித்தன்மையுடன் ஊர் நிகழ்வுகளை உள்ளபடியே எழுதியுள்ளீர்கள். இதுவரை மற்றவர்கள் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை எழுதினார்கள். ஆனால் தங்கள் அறிவுரையோ, பெற்றோர்களுக்கு மட்டுமல்லாது, உற்றார் உறவினகளுக்கும் சேர்த்து இக்கட்டுரையில் தந்துள்ளீர்.
இக்கட்டுரையை வைத்து ஒன்றை உணர முடிகிறது. மாணவர்களுக்கு இது போன்ற வேலைகள் இருப்பதினால் அவர்களால் அதிகம் மார்க்குகள் வாங்க முடியவில்லை. ஆனதினால் மாணவிகள் அதிகமானோர் அதிக மார்க்குகள் வாங்குகின்றனர்.
நம்ம வூட்ல புள்ளையளுவலெ படிக்க உடாமெ படுத்துர பாட்டெ அப்படியே போட்டு ஒடச்சு அவெங்க தலயில குட்டுன மாதிரி இருக்கு நெய்னா. சூப்பரு!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
படிப்பின் அவசியத்தை உணராத தாய்மார்களுக்கு நல்லதொரு அறிவுரை!
புரிந்து கொண்டு நடந்தால் குடும்பத்திற்கு நன்மையே!
சகோ. நெய்னா : ஜஸாக்கல்லாஹ் ஹைர்!
சகோதரர் எம் எஸ் எம் நெய்னாவின் ஆக்கத்தை படிக்கும்போது நகைச்சுவையாய் இருந்தாலும் நம் ஊரில் எப்படி உலகத்தின் சவால்களுக்கு இன்னும் தயாராகாத சூழ்நிலை இருக்கிறது என்பது தெரிகிறது.
ஒரு பழமொழி ஞாபகம்: " ஆசை இருக்குதாம் அரசாள...அதிஷ்டம் இருக்குதாம் ஆடு மேய்க்க"
ஜாஹிர் காக்கா,
சும்மா புள்ளைலுவ படிக்கமாட்டேங்கிறாங்க என்று சொல்லி மாணவர்களையும் பள்ளிக்கூடங்களையும் குறைகாணுவதே அன்றாட வாடிக்கை நம்மவர்களுக்கு (தப்புவதற்கு காரணம் கண்டுபிடிப்பதைல் கில்லாடிகள் தானே நாம்).
மாணவர்கள் எவ்வளவு சவால்களை சந்திக்கிறார்கள் எனபதை சகோ. நெய்னாவின் வேண்டுகோளிலிருந்து அறியமுடிகிறது, என்னவோ உண்மைதான் காக்கா...
To bro Thajudeen
//நம் ஊரில் எப்படி உலகத்தின் சவால்களுக்கு இன்னும் தயாராகாத சூழ்நிலை இருக்கிறது என்பது தெரிகிறது. //
இது நம் பெண்களுக்கு...மாணவர்களுக்கு அல்ல.
செத்த அந்த வேல செத்த இந்த வேல இப்படியே செய்துகொண்டு ஒருந்தால் பரிச்சைக்கு செத்த ஒழுங்க படிக்காமே மார்க்கு வாங்காமே இத்து போக வேண்டியதுதான்..
சகோ.நெய்னா நகைச்சுவையா சொன்னாலும் நாசுக்காக,நச்சென்று தலையில் குட்டியது போன்று உள்ளது உங்கள் ஆக்கம்
அப்புறம், பரிச்சைக்கி படிச்சிக்கிட்டு ஈக்கிற புள்ளையல்வொ காதுலெ வெளங்குற மாதிரி மாப்ளெ, பொண்ணு பேச்சை ஆரம்பிச்சி அவ்வூட்ளெ கேக்குறாஹெ, இவ்வூட்ளெ கேக்குறாஹெண்டு சொல்லி அந்த புள்ளையல்வொ மனசுலெ ஒரு பெரிய பொக்ரான் அணுகுண்டு சோதனையையே நடத்திப்புட வேண்டியது. அப்புறம் என்னா? பாஸ்போர்ட் எடுத்து எங்கையாவது பேக் பண்ணி உட்ற வேண்டியது........
அருமை நெய்னா ! எதையும் விடாமல் சந்து பொந்து எல்லாத்தையும் பொளந்து கட்டிடே!
இதையே நேரடியாகச் சொன்னால் கோபிச்சுக்கிடுவாங்கன்னுதான் நெய்னா நகைச்சுவையோடு சொல்லி யிருக்காப்ல, சூப்பர்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
பெண்கள் தரப்பில் ஒரு அளவுக்குமேல் பிள்ளைகளை மேல் படிப்பு படிக்கவைத்து உயர்நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் நமதூரில் குறைவே.
பிள்ளைகள் ஓரளவு வளர்ந்ததும் வெளிநாட்டுக்கு அனுப்பவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது.
வேண்டுமானால் படிப்பா? பாஸ்போர்டா? என்று ஒரு பொது வாக்கெடுப்பு நடத்திப்பாருங்கள். படிப்புக்கு பெண்கள் மத்தியில் டெபாசிட் போய்விடும்.
ஆண்பிள்ளைகள் படித்து பதவிகளில் அமரவேண்டும் என்ற அறிவு பூர்வமான ஆசையைவிட வெளிநாடுபோய் " அக்கச்சியாமார்களுக்கு " வீடு நகை தேடிக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும், பிள்ளை பட்டம் வாங்கிவந்து காட்ட வேண்டும் என்ற ஆசையை விட பொட்டிபீஸ் பிறை மேல்துண்டும், ஜெமீலா பத்தைகைலியும் கொண்டு வந்து "பொட்டி பிரிப்பதை"ப் பார்க்க நினைக்கும் ஆசையே அதிகம். அத்துடன் அவ்வொளுக்கும் வயசாயிடுச்சு இன்னும் மூணு குமர் ஈக்கிது- இந்த புள்ள ஒரு வெளிநாட்டுப் பக்கம் போனாத்தான் கரையேத்த முடியும் என்ற நிலையும் சிந்தனையுமே அதிகம்.
விதிவிலக்குகள் இருக்கலாம்.
பெண்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணரச்செய்யவேண்டும். இவைகளில் இருந்து முதலில் மீள வேண்டும்.
நெய்னா அவர்களே ! தலைப்பில் உங்கள் பெயரைப் பார்த்தாலே கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்து படிக்கும் வண்ணம் பிரச்னைகளை மண்ணின் மொழியில் அழகுபடதருகிறீர்கள். அனைத்துமே மண்ணின் ஒவ்வொரு துகல்கலோடும் ஒட்டி இருக்கும் வாசனை கலந்த வசனங்கள். அனைவரின் வாய் மற்றும் மனநாடியை பிடித்துப்பார்த்து எழுதியது . பாராட்டுக்கள்.
வஸ்ஸலாம்.
இப்ராஹீம் அன்சாரி
கரண்டு வேற ராத்திரிலே அடிக்கடி போயிடுது பேட்டரில கூட சார்ஜு ஏற மாட்டிக்குது செத்த போயி கலாப்புலா கடைல மொலவுதிரி வாங்கிட்டு அப்படியே போயி நூர்லாட்ஜ் கடைல 10 ரொட்டியும் சால்னாவும் வாங்கிட்டு வாம்மா!!
//பெண்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணரச்செய்யவேண்டும். இவைகளில் இருந்து முதலில் மீள வேண்டும்.//
அபுதபி அய்மான் சங்க விழாவில் காயல்பட்டினம் டாக்டர் கே.வி.எஸ் அவர்களிடம் “கேள்வி-பதில்” நேரத்தில் ஒரு கேள்வி கேட்டேன்:
”பெண்கள் படிப்பில் முன்னேற்றம் பெற வேண்டும்; பட்டதாரிகளாய் வர வேண்டும் என்கின்றீர்கள்; ஆனால், அதிகம் இருபாலார்கள் சேர்ந்து பயிலும் கல்விக்கூடங்களில்/கல்லூரிகளில் நம் கண்மணிகாளானப் பெண்பிள்ளைகளைக் குறி வைத்து காமுகர்கள் கெடுப்பது நாளுக்கு நாள் மிகுதியாக உள்ள நிலைமையில், எப்படி நாம் நம் பிள்ளைகளை நம்பி இப்படி இருபாலார்கள் பயிலும் கல்லூரிகளில் படிக்க அனுப்ப முடியும்; எனவே, மகளிர்க் கல்லூரி ஒவ்வொரு முஸ்லிம் பெரும்பான்மையுள்ள ஊர்களில் உருவாக்கினால் என்ன?” என்ற என் கேள்விக்கு டாக்டர் கே.வி.எஸ் அவர்களின் பதில்:
“உங்களின் கேள்வியில் உங்களின் ஆதங்கம் வெளிப்படுவது போல், என்னுடைய கல்லூரி காலத்திலும் இது போன்றக் கொடுமைகள் நடந்து வந்திருப்பது என் கண் முன்னால் தெரிவதும் உண்மையானதால், இக்கேள்விக்கு விடை அளிக்க சமுதாயப் பெரியோர்கள்- தனவந்தர்களிடம் விட்டு விடுகின்றேன்”என்றார்கள். ஜனாப் எம்.எஸ்.டி காக்கா அவர்களிடம் மின்மடல் வழியாகவும், விடுமுறையில் செல்லும் தருணம் நேரிலும் “மகளிர்க் கல்லூரி” ஒன்று அவசரமாகவும்- அவசியமாகவும் துவங்கிட வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டே உள்ளேன். மாணவர்களை விட மாணவிகளே அதிக மதிப்பெண்கள் எடுத்தும் தொடர்ந்து மேற்படிப்புப் படிக்க முடியாமற் போவதற்குக் காரணம்
இருபாலர்கள் படிக்கும் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விரும்பாமல் வீட்டில் இருந்து விடுகின்றனர்.
ஊர் பாஷையில்,
உள்ளதை உள்ளபடி,
உள்ளத்தை அள்ளும்படி
அழகாய் சொன்ன
சகோதரன் நெயனாவுக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஹா ஹா நெய்னா ராக்ஸ்..............
சில விசயங்கள் சொல்லப்பட்டாலும் அதை செய்யாமல் மனது படிப்புலே லயிக்காது என்பதும் ஒரு எழுதப்படாத நியதி...!
பொழுதனிக்கும் படிச்சிட்டேயிருக்காம கொஞ்ஞூண்டு மனசுக்கு ஓய்வு தர இந்த வேலைகளெல்லாம் செய்வது தவறில்லைதானே நெய்னா..
//மாணவர்களை விட மாணவிகளே அதிக மதிப்பெண்கள் எடுத்தும் தொடர்ந்து மேற்படிப்புப் படிக்க முடியாமற் போவதற்குக் காரணம்
இருபாலர்கள் படிக்கும் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விரும்பாமல் வீட்டில் இருந்து விடுகின்றனர். //
கடந்த சில வருடங்களாக நம்மூர் மகளீர் பள்ளி மாணவிகளே 1200 க்கு மிக மிக அருகில் தொட்டுவிட 20-30 மார்க் குறைவாக எடுத்தும் நிறைவான மேற்கலிவி பயில வழியில்லாமல் அடுத்து நம்மூர் வழக்கப்படி கல்யாணம் என்ற போர்வைக்குள் முடக்கப்படுகிறார்கள்... இது மாற வேண்டும், அதுக்கு நிச்சயம் பெண்களுக்காக மட்டும் கல்லூரி அவசியம்...
//* ராத்தாக்கு ஒடம்பு சரியில்லெ ஆஸ்பத்திரி வரைக்கும் தொணைக்கி வர்றியா? (அமெரிக்காவரைக்கும் தனியா போயிட்டு வரத்தெரியுது?)//
எதார்தம், வாய்விட்டு சிரித்தேன்.........
மு.செ.மு. அப்துல் கபூர் - துபை.
வாப்பா, ராத்திரிக்கு பெரியப்பா ஊட்டு காக்காக்கு பசியாற கொடுக்கனும். (யான்டாக்கா கடுமையான பசியும், பட்னியுமா காக்கா வந்து எறங்கி ஈக்கிறாஹ பாரு? யாம்மா இப்புடி போட்டு என்னெ படுத்துறா? என்று மொவன் மனசுக்குள்ளெ மொணங்குவான்) கேஸூ முடிஞ்சி போர மாதிரி தெரியுது. செத்த காக்கம்மா ஊட்டுக்கு போயி சிலிண்டரெ தூக்கிகிட்டு வந்துர்றியா?
பொம்புள்ளப்புள்ளையல்வொல்ட்டெ பரிச்செ நேரத்துலெ கருவாப்புள்ளெ பறிச்சி தர்ரியா? அப்பம் சுட்டு தர்ரியா? இடியப்ப மாவு பெசஞ்சி தர்ரியா? என்று கேட்பது மஹாத்தப்புண்டு அவ்வொல்வொலுக்கு தெரிய மாட்டிக்கிது......
இதையெல்லாம் தாண்டி நம் ஊரில் மாணவ, மாணவிகள் படிச்சி பள்ளி, கல்லூரியெ விட்டு வெளியே வருகிறார்கள் என்றால் சும்மா லேசுப்பட்ட காரியம்ண்டு நெனெச்சிக்கிட்டியளா?
படிச்சிக்கிட்டு ஈக்கிம் பொழுதே மாப்ளெ, பொண்ணு பேசி அப்படியே அவர்களின் மனதிற்குள் ஆளில்லா விமானம் போல் ஏவுகணையை வீசி எதிர்கால கனவுகளை கச்சிதமாக காணாமல் ஆக்கி விடுகின்றனர்.
Post a Comment