அபுதாபி, பிப்ரவரி 08, 2012
ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அடையாள அட்டை Emirates Identity Card, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் வெளிநாட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அவசியம் எடுத்தாக வேண்டும்.
இதில் சமீபத்தில் ஒரு குழப்பமான சூழல் துபாய் மற்றும் அபுதாபியில் இருக்கும் Free Zone கம்பெனிகளில் வேலை செய்யும் அனைவருக்கும் ஏற்பட்டது. அதாவது, அபுதாபி 31-மார்ச்-2012, துபாய் 31-மே-2012 என்று கடைசி தேதி இருக்கும் பட்சத்தில் 31-ஜனவரி-2012லிருந்து அபராதம் விதிக்க தொடங்கியிருந்தனர், இதில் சிலர் அதனைச் செலுத்தி புதுப்பிக்கவும், புதிதாக செய்தும் கொண்டனர்.
இப்படி இருக்க, நேற்று செவ்வாய் கிழமை emirates id authority வெளியிட்டிருக்கும் அறிவிப்பு அபுதாபி மற்றும் துபாய் Free Zone கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கு நிம்மதியைக் கொடுத்திருக்கிறது, அறிவிக்கப்பட்ட தேதிவரை எவ்வித அபராதங்கள் இல்லை, குறிப்பிட்ட தேதிக்குள் அவர்கள் புதிய ஐ.டி.கார்டினை முறையாக பெற்றே ஆக வேண்டும்.
மற்ற அமீரகங்களான, சார்ஜா, அஜ்மான், ராசல்கைமா, ஃபுஜைரா, உம்முல்குவய்ன் இங்கே வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு ஏற்கனவே கெடு தேதி முடிந்து விட்டதால் அபராதம் தொடர்கிறது.
நன்றி : கல்ஃப் நியூஸ்
-அதிரைநிருபர் குழு
16 Responses So Far:
Thanks for the information even I read in gulf news.
அஸ்ஸலாமு அலைக்கும்.
குற்றங்களை குறைக்கவே அபராதங்கள் விதிக்கப்படுகிறது அங்கே!
டூவீலர் ஓட்டுபவர்களுக்கு தலையில் வழு வழுண்ட சட்டி (தலை கவசம்) இல்லை என்றால் அப்ப அப்ப காசை பிடுங்கபடுது இங்கே.
சவுதியில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் பணியாளர் அடையாள அட்டை (இகாமா) முன்பெல்லாம் சிறிய புத்தகம் போல் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அதை பலர் துணி துவைக்க போடும் பொழுது வாசிங் மெஷினில் போட்டு துவைத்தெடுத்தவர்கள் ஏராளம். பிறகு சொந்த செலவில் அபராதம் கட்டி அதை புதுப்பித்துக்கொள்வர். அதனால் இப்பொழுது ஏ.டி.எம். கார்டு போல் கொடுப்பதால் இது போன்ற தவறுகள் தவிர்க்கப்பட்டு வருகின்றன.
புதிதாக செல்வோருக்கு இந்த சட்டம் பொருந்துமா? அல்லது வேரு எதுவும் சட்டம் இருக்கிறதா.
//புதிதாக செல்வோருக்கு இந்த சட்டம் பொருந்துமா? அல்லது வேரு எதுவும் சட்டம் இருக்கிறதா.//
ஆம் ! அனைவருக்கும் பொருந்தும், யார் யாரெல்லாம் வேலை நிமித்தமாக இங்கு வந்து இரண்டு / மூன்று வருட விசா அவர்களின் பாஸ்போர்ட்டில் அடித்து விட்ட முப்பது நாட்களுக்குள் எடுத்தாக வேண்டும் அவ்வாறு எடுக்க தவறினால் நாள் ஒன்றுக்கு திர்ஹம் 20/- அபராதம் அதிக பட்சமாக திர்ஹம் 1000/- அபராதம் விதிக்கப்படுகிறது.
விசிட்டில் வருபவர்களுக்கு இது பொருந்தாது.
குடும்ப்பதோடு இருப்பவர்கள் அவசியம் எடுத்தாக வேண்டும்..., விடுமுறையைல் ஊருக்கு அனுப்பியிருந்தாலும் அல்லது ஆறுமாத காலவரையறை வரை ஊரில் இருக்கட்டும் அனுப்பி வைத்திருந்தாலும், விசா பாஸ்போர்ட்டில் இருக்குமானால் அவசியம் எடுத்தாக வேண்டும், மார்ச் 31, 2012 (அபுதாபி), மே 31, 2012 (துபாய்) இதற்கு பின்னர் இங்கு பயணம் செய்தால் (விசா ஏற்கனவே பாஸ்போர்டில் உள்ளவர்கள்) அபராதத்தை ஏர்போட்டில் கட்டிவிட்டுதான் வழியைத் திற்ந்து விடுவார்கள்.
"வேலெ செய்ய வந்த புள்ளயலுவொலெ போட்டு இப்புடி அலங்கமலங்கப்படுத்துறதுனாலெ தான் நம்ம ஆள்வொ அமெரிக்கா, ஆஸ்திரேலியாண்டு போயி எறங்க ஆசப்பட்றாஹெ..... அங்கெ ஒரு வேலையெ அந்த நாட்டுக்காரவன் செஞ்சாலும், அதிராம்பட்டினத்துக்காரவன் செஞ்சாலும் ஒரே கூலி தானாமுல்லெ??? அப்பொ "O my son! O my son!" பாட்டெல்லாம் இங்கெ பாட வேண்டிய அவசியம் ஈக்காதுண்டு நெனெக்கிறேன்."
என்னா காசு தான் கொஞ்சம் கூடுதலா 7, 8 லச்சம் கொடுக்கனுமாயீக்கிது......
//புதிதாக செல்வோருக்கு இந்த சட்டம் பொருந்துமா? அல்லது வேரு எதுவும் சட்டம் இருக்கிறதா.//
புதிதாக போக வேண்டிய காலம் நெருங்கி விட்டதோ! சட்டத்தை சாச்சா பார்த்துக்கொள்வார்கள்.
நான் கேட்ட கேள்விக்கு நெய்னா தம்பி காக்கா அவர்கள் மிக அழகாக விளக்கம் தந்துள்ளார்கள். விசிட்டில் மூன்று மாதம் வந்து இருந்து அதற்கு பிறகு கம்பெனியில் வேலையோட விசா அடித்தாலும் இந்த கார்டுக்கு பதிய வேண்டுமா?
ஜக்கால்லாஹ்.
// சட்டத்தை சாச்சா பார்த்துக்கொள்வார்கள். // எந்த சாச்சா பார்ப்பார்கள் இதை எல்லோரும் உன்னிடம் கேட்க்க போகிறார்கள். மற்றவர்களும் உன் சாச்சாவிடம் சொல்லி எனக்கும் பார்த்துக்கிட கொள்ள சொல் என்று.
//விசிட்டில் மூன்று மாதம் வந்து இருந்து அதற்கு பிறகு கம்பெனியில் வேலையோட விசா அடித்தாலும் இந்த கார்டுக்கு பதிய வேண்டுமா? //
இங்கு வந்து வேலை அமைந்து மெடிக்கல் முடித்ததும், ரெஸிடென்ஸ் விசா பாஸ்போர்ட்டில் அடித்த நாள் முதல் 30 நாட்களுக்குள் புதிதாக எமிரேட்ஸ் ஐடி எடுத்தாக வேண்டும், துபாய் விஷாவாக இருந்தால் மே 31, வரை பொறுமையாக செய்யலாம், மற்ற அமீரகங்களாக இருந்தால் உடனடியாக செய்தே ஆக வேண்டும்.
கவனிக்க, இதுவரை... இந்த எமிரேட்ஸ் ஐ.டி.அனைத்து துறைகளோடும் இன்னும் இணைக்கப்பட வில்லை ஏர்போர்ட்களைத் தவிர, சிறுக சிறுக ஜூன் மாத இறுதிக்குள், அனைத்து அரசு அலுவலங்களோடு பின்னப்பட்டு விடும் அதோடு வங்கிக் கணக்குகளோடும், இனி எங்கு சென்றாலும் எடு ஐ.டி.யை என்றுதான் கேட்பார்கள் இல்லையே ஓடு இங்கிருந்து என்ற பதிலுரையும் வந்தாலும் வரலாம் (சின்ன சின்ன நாடுகளின் தலைவர்கள் பதவியைத் துறப்பதை அவதானிக்கும்போது).
இக்கார்டினை பதிவு செய்ய என்னென்ன நகல் கொடுக்க வேண்டும், என்பதனையும் எவ்விடத்திற்கு சென்று apply செய்ய வேண்டும், அதற்க்குரிய கட்டணம் எவ்வளவு, என்று விரிவாக தெரிக்கவும்
அதிரையர்கள் கேட்கும் கேள்விகளையும் பதிலையும் பார்த்தால் நெறியாளர் யு ஏ இ சட்டத்துறையிலுமா பணி செய்கிறார்கள் என்ற ஐயம் வரப்போகிறது.
அதன்படியே ஆகட்டும்!
"உலக நாடுகளின் கடிதங்களை நம்ம ஊர் முச்சூடும் முறையே பட்டுவாடா செய்து வந்த தொனா.கானா. என்ன அஞ்சல் துறையிலா வேலை செய்தார்?"
மச்சானுடைய கேள்விக்கு நெறியாளர் சார்பாக என் பதில்.
இதுதான் அந்தச் சுட்டி : http://www.eida.gov.ae/en/home.aspx (வேடிக்கை... இவர்களின் செண்டருக்கு சென்றால் அங்கே ஒட்டப்படிருக்கும் போஸ்டர்களில் நான்கு மொழிகள் கட்டாயம் இருக்கிறது, அரபி, ஆங்கிலம், மலையாளம் அடுத்து ஃபிரெஞ்ச்)
இதனைத் தட்டிப் பாருங்கள் உங்களிடமே எல்லாத்தையும் கேட்பார்கள்.... :)
சிறு விளக்கம், முதலாளி கல்லாவில் இல்லாத கம்பெனிகள் (அதுதான் நல்ல கம்பெனியாமே?) விடுமுறையை அரசு அறிவிக்கும் முன்னர் அவர்களே அறிவித்து விட்டு சீக்கிரம் கிளம்பிவிடுவார்கள் அவைகள்தான் இங்கே சூப்பர் கம்பெனிகள் (ஊரெல்லாம் பேச்சு) அவைகளில் சில / பல தாங்களே இந்த வேலையைச் செய்து தனது பணியாட்களுக்கு எவ்வித சிரமத்தையும் கொடுப்பதில்லை - இது அங்கொன்றும் இங்கொன்றும் நடந்து வருகிறது...
கல்லாவை கட்டிப் பிடித்திருக்கும் முதலாளி இருக்கும் கம்பெனிகளில் பணி செய்பவனையே moneyயையும் கொடுக்கச் சொல்லும் நிலைதான் பெரும்பாலும்...
அஸ்ஸலாமு அலைக்கும்.
எம்.ஹெச்.ஜே சொன்னது:
//புதிதாக போக வேண்டிய காலம் நெருங்கி விட்டதோ! சட்டத்தை சாச்சா பார்த்துக்கொள்வார்கள்.//
சாச்சா பார்த்து கொள்ளுவது இருக்கட்டும்.செய்தியாளர்களில் top 10 னாக வந்துக் கொண்டிருக்கும்.அமேஜான்.அபூபக்கர் போய் விட்டால் மூன்று வலைதளத்தை யார் பார்த்து கொள்வது ?
// சாச்சா பார்த்து கொள்ளுவது இருக்கட்டும்.செய்தியாளர்களில் top 10 னாக வந்துக் கொண்டிருக்கும்.அமேஜான்.அபூபக்கர் போய் விட்டால் மூன்று வலைதளத்தை யார் பார்த்து கொள்வது? //
இனி top 10 செய்தியாக L.M.S. அபூபக்கர் மூன்று வலைதளத்தை பார்த்துக்கொள்வார் யாருக்கும் ஒன்றும் கவலை தேவை இல்லை.
Post a Comment