Image Maker-ஐ பார்ப்பதற்கு முன் சில விசயங்கள்:
வெற்றியடைய நினைக்கும் பலபேர் வெற்றியடைய சிரமப்படுவதின் காரணங்கள் என்ன தெரியுமா?... வெற்றியடைந்தவர்கள் பெற்ற வலியை, அவமானத்தை கடக்க இவர்கள் தயாராக இல்லை. சமயங்களில் சில செமினார்களில் வெற்றியடைந்தவர்கள் தமது அனுபவத்தைப் பேசும்போது கேள்வி நேரத்தில் கேட்கப்படும் கேள்வி.
- உங்கள் வெற்றியை உங்களால் சிம்பிளாக சொல்ல முடியுமா?
- எப்படிப்பட்ட பிசினசில் உடன் முன்னேறலாம்.?
இதுபோன்ற ஆட்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றால் வெற்றியை ஒரு சின்ன கேப்ஸ்யூலில் போட்டுக்கொடு, அல்லது ஒரு தாயத்து மாதிரி சின்னதாக்கி கொடு... நீ 10 வருடம் சம்பாதித்ததை நான் சன் டி வி நியூஸ் ஆரம்பித்து முடிப்பதற்குள் சம்பாதித்து விட வேண்டும் !!!
கேட்கும் நமக்கே ஜக்கி யானால் கேள்விகளைச் சந்திப்பவர்களுக்கு எப்படி இருக்கும்.?.
இப்படிக் கேட்பதற்குக் காரணமே சில திரைப்படங்கள்தான். ஒரு பாட்டு ஆரம்பிக்கும்போது ஏழையாக இருக்கும் கதாநாயகன் பாட்டு முடியும்போது Mercedes Benz –S- Classல் வந்து இறங்குவதும். பல தொழிற்சாலைகளுக்கு முதலாளி ஆவதும். 'ஊர்க்காரைய்ங்க" அனைவரும் வேலை வெட்டியில்லாமல் இந்த பணக்காரன் வீட்டில் வந்து தீர்ப்புக்கும், பணத்துக்கும் நிற்பதும். இதை எல்லாம் உண்மை என்று படிக்காதவனில் இருந்து Ph.D முடித்தவன் வரைக்கும் நம்பி தொலைப்பதும்தான் காரணம்.
வெற்றியடைய [அது பிசினஸ் ஆகட்டும், கல்வியாகட்டும்] சரியான கன்சல்டேசன் முக்கியம். வீட்டை விட்டு வெளியூர் போகவே யோசிக்கும் ஆட்களிடம் எல்லாம் என்ன பிசினஸ் செய்யலாம் / என்ன கோர்ஸ் படிக்கலாம் என்று கேட்டால் என்னவிதமான பதில் வரும் என்று நான் எழுதி தெரிய வேண்டியதில்லை.
நம் ஊர் போன்ற இடங்களிலும் வெளிநாடு போய் வந்தவர்கள் தரும் தோற்றமும், உண்மையை மறைத்த பேச்சுக்களும் ஊரில் கனவுகளுடன் வாழும் இளைஞர்கள் தனது படிப்பை முழுமையாக முடிக்காமல் ஒரு டிகிரி / ஒரு டிப்ளோமாவுடன் வெளிநாட்டுக்குச் சென்று ஒரளவு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு 10 வருடமாகிறது. நான் அடிப்படை என்று சொன்னதில் சொந்த வீடெல்லாம் அடங்காது.
உதாரணமாக ஒருவர் B.Com படிப்பதாக வைத்துக் கொள்வோம்... அது academic course தான்.ஆனால் மற்றவர் பொறுமையாக இன்னும் ஒரு 5 வருடங்களில் C.A முடித்துவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்...இருவரும் வேலை பார்க்கும் சூழ்நிலையில் இந்த 5 வருடங்கள் பொறுமையாக இருந்து C.A படித்தவர்.. அந்த B.com graduate ன் ஒரு வருட சம்பளத்தை 3 - 4 மாதத்தில் சம்பாதித்து விடுகிறார்.
வாழ்க்கையில் முக்கியமாக பொருளாதார ரீதியில் வெற்றியடைய நினைப்பவர்களுக்கு ரொம்ப முக்கியம் “THINK BIG”.
- 10 ஸ்டிக்கர் சேர்த்தால் 1 சில்வர் தட்டு இனாம் ,
- இத்தனை பாயின்ட் கிரடிட் கார்டில் கிடைத்தால் இந்த லெதர் பேக் இனாம்.
போன்ற மிடில்கிளாஸ் ஃபார்முலா எல்லாம் தொடர்ந்து சின்ன சின்ன விசயத்துக்கு போராடும் மனப்பக்குவத்தைத்தான் வளர்க்கும். "இதுக்காக நாம ஒன்னும் செய்யலியே...சும்மா தர்ரதெ ஏன் வேணாங்கனும்” என உங்களுக்குள் மறைந்திருக்கும் மிருகத்தை தூங்க வைத்து விட்டால் பிரச்சினை இல்லை..இல்லாவிட்டால் அதற்காக 'பன்ச் டயலாக்" எல்லாம் பேச வேண்டிவரும். Don’t focus on petty matters [benefit] in life. இலவசங்களை எப்படி சொந்தமாக சம்பாதிக்க முடியும் என்று செயல்படுங்கள்...அதுதான் வெற்றி.
ஏன் வாழ்க்கையில் எல்லோரும் பொருளாதார ரீதியாக வெற்றியடைய வேண்டும் என்பதைச் சொல்கிறார்கள்.பொருளாதாரத்தைத் தேடும்போது “வாழ்க்கை”யை கற்றுக்கொள்வீர்கள். ஒரு நிமிடம் வாழ்க்கையில் உங்களுக்கு எந்த விதமான நோக்கமும் இல்லை என்று வைத்துக்கொள்வோம். வாழ்க்கை சந்தோசமாக அமையுமா...வாழ்க்கையின் ப்ராசஸ் என்ன "அறியாததிலிருந்து அறிந்து கொள்வதுதான்". "தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வது” அது எப்போது ஆரம்பிக்கிறது. முதன்முதலில் நீங்கள் பிறந்த நேரத்தில் தாய்ப்பாலுக்கு அழுத அந்த நிமிடம் தான் வாழ்க்கையின் ஆரம்பம்.
எனவே “In Love with Life” வாழ்க்கையை சுமையாக நினைப்பவர்கள் முன்னேறுவதில்லை. வாழ்க்கையில் பயம் எது தெரியுமா, நீங்கள் உங்களை சந்திப்பதுதான். நாம் இதுவரை வாழ்க்கையை திருப்தியாக வாழ்ந்திருந்தால் நன்று.
”ஒலப்பிட்டியடா” என மனசாட்சி சொன்னால்??? இனிமேல் உள்ள காலங்களை ரிப்பேர் செய்ய திட்டமிட வேண்டும். கவனிக்க வளர்ச்சி எளிதாக நடக்கும் நடப்பு அல்ல. வளர்ச்சியில் சவால்கள் இருக்கத்தான் செய்யும். நீங்கள் விரும்பி செயல்பட எதுவும் இல்லை என்ற "மொட்டைத்தனமான வாழ்க்கை" நீங்கள் உலகத்தில் தோன்றவில்லை என்ற உண்மையைத்தரும்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதை கவர்ந்து கொள்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்வதுடன் எதை விரட்ட வேண்டும் என்பதை தெரிந்தும் இருக்க வேண்டும். நான் சொல்லும் விசயம் எல்லாம் உங்கள் மெக்கானிசத்தில் இருக்கும் விசயம் தான் எதையும் நான் புதிதாக சொல்லவில்லை. நீங்கள் அடையாளம் காணாத எத்தனையோ திறமைகள் உங்களுக்குள் வெளிச்சமில்லாமல் கிடக்கிறது. அதை அடையாளம் காண சொல்வதுதான் என் நோக்கம்.
வாழ்க்கையில் உங்கள் பொறுப்பு என்ன என்பதை உணர்வது உங்களின் மிகப்பெரிய கடமைகளில் ஒன்று. அது ஏனோ தெரியவில்லை கல்யாணம் முடித்து பிள்ளைகள் என்று ஆனபின்பும் பொறுப்பு இல்லாமல் காரணங்கள் சொல்லிக்கொண்டு மற்றவர்களிடம் கேட்டுப்பெறுவதைத் தவறு என்று பல வருடங்கள் உணராத ஆட்கள் தமிழ்நாட்டிலேயே நம் ஊரில்தான் அதிகம் இருப்பதாக தெரிகிறது. குழந்தையாய் இருந்த காலங்களில் நமக்கு பொறுப்பு இல்லை..அதை தொடர நினைத்து அதில் ஒரு 'டேஸ்ட்" கண்டுவிட்டால் அதை விட்டு மீள்வது கொஞ்சம் கஸ்டம். ஆனால் வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்று தீர்க்கம் அடைந்து விட்டால் அது மிக எளிது. உங்களின் சொந்த வெற்றியை விட எதுவும் பெரிய motivation கிடையாது.
பரீட்சை நேரமாக இருப்பதால் மாணவர்கள் சிலபேர் மின்சாரம் சரியாக இருந்தால் நான் நன்றாக படிக்க முடியும் என்று காரணங்களைக் கண்டுபிடித்து சொல்லிக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். மின்சாரப் பிரச்சினை உங்களுக்கு மட்டும் அல்ல. மொத்த தமிழ்நாட்டுக்கும்தான். உங்களுக்கு ரிசல்ட் வரும்போது மற்ற மாணவர்களும் நல்ல மார்க் எடுத்து பாஸ் செய்து இருப்பார்கள், அந்த சூழ்நிலையில் "கூடங்குளத்திலிருந்து தனியாக 3 ஃபேசில் அவன் வீட்டுக்கு மட்டும் கரண்ட் வந்தது” என சொல்லபோகிறீர்களா?'. முன்பு எழுதியதுதான் உங்கள் மார்க் சீட்டில் இப்போது உள்ள “கூடங்குளம் அணு மின்நிலையப் பிரச்சினை”, “தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின் வெட்டு”, “முல்லைப்பெரியாறு அணை விவகாரம்” எது பற்றியும் பிரிண்ட் ஆகி இருக்காது, உங்கள் மார்க்கை தவிர... நீங்கள் வேலை / படிப்பு தேடி போகும் எந்த இடத்திலும் 'இந்த பிரச்சினைகளை" சொன்னால் “பாட்டி வடை சுட்டு வித்த கதை”க்கு கிடைக்கும் முக்கியத்துவம் கூட கிடைக்காது.
Concentrate on your studies… focus on your development not on finding ‘reasons'.
Tough time won’t last…tough people will…
We will meet in next episode…
ஏற்றம் தொடரும்...
-ZAKIR HUSSAIN
20 Responses So Far:
படிக்கட்டுகள் - பரவட்டும் எட்டுத் திசையெங்கும்.... அதோடு உயரட்டும் அதன் எழுத்தோட்ட எண்ணங்கள் போல் !
கடைசி பத்தி(யில்)
சொல்லும் புத்தி(யை)
நல்ல யுக்தி(யாக)
கை யாண்டால்
வெற்றி வந்தடையும் !
நீ சுட்டிக்காட்டுபவர்களை எல்லாம் நான் சந்தித்துருப்பதாகவேத் தோன்றுகிறது.
எனினும், என்னை நான் சந்திக்க நேர்ந்த தருணம் எனக்கு பயம் தோன்றவில்லை. மாறாக கைகுழுக்கத் தோன்றியது; கீப் இட் அப் சொல்லத் தோன்றியது.
காரணம் எளிதானது. என்னில் வேடம் இல்லை. யதார்த்தம் இருந்தது.
தன்னைத்தானே சந்திக்கும்போது பயம் ஏற்பட்டால் அவன் வாழ்க்கையில் எங்கோ பிழை இருக்கிறது என்றுதான் அர்த்தம்.
எழுச்சியான எண்ணங்கள் முதிர்ச்சியான எழுத்து.
உன் நண்பன் என்று சொல்லிக்கொள்ள பெருமைப்படுகிறேன்.
// வெற்றியை உங்களால் சிம்பிளாக சொல்ல முடியுமா?//
ஆம். நீங்கள் சொல்வதை செய்தால் வெல்லவும் முடியும்.
நல்ல பல அரிய கருத்துகள்!
வளரட்டும் உங்கள் ஆக்கமும், எங்கள் அறிவும்!
ஏனுங்க,
இலவசம் வாணாம். புரியுது. ஆனா இங்கே ப்ரோமோஷன் மற்றும் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் எனும் பெயரில் இத வாங்குனா அத ஃபிரீயாத் தர்ராங்களே என்ன செய்ய?
ஏற்கனவே அலாவுதீன் மாஸ்ட்டர் இந்த மாதிரி நேரத்ல வாங்குங்கைய்யா என்று சொல்லிக்கீராரே இப்ப நாங்க என்ன செய்ய?
கவுன்டரில் பணம் கொடுக்கும்போது தரும் இலவசங்களை வாங்கினால் ஒன்றுமில்லை. ஆனால் இலவசத்துக்கு பேயாய் அலைவதும், அதற்காக திட்டமிட்டு செயல்படுவதும் நமது மைன்ட் "வறுமைக்குள்ளும், நடுத்தர மக்களின் போராட்டங்களிலிருந்தும்" இன்னும் விடுபடாமல் வேரூன்றி இருக்கிறது என்ற உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாம் எப்படியிருக்கிறோம் என்ற அறியாமையையும் ...முயற்சிகள் இல்லாத வாழ்க்கையும் 'நயாகரா சின்ட்ரோம்' என சொல்வார்கள்.
சுருக்கமாக " கண்போன போக்கில் கால் போவது.....'
மொத்த மனிதனின் வெற்றியும் தோல்வியும் அவனுடைய Awareness Level ல் நிறைய அடங்கியிருக்கிறது.
அன்பு தம்பி ஜாகீர்,
//முதன்முதலில் நீங்கள் பிறந்த நேரத்தில் தாய்ப்பாலுக்கு அழுத அந்த நிமிடம் தான் வாழ்க்கையின் ஆரம்பம்.//
மிகவும் முதிர்ச்சியடைந்த சிந்தனைகள். காலையில் படிக்கும்போது வயதானவர்களுக்கே மிகவும் புத்துணர்வாக இருக்கிறது.
வாலிபர்களுக்கு இந்த தொடர் ஒரு வகைப்படுத்தும் வரம்.
உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். வஸ்ஸலாம்.
இப்ராஹீம் அன்சாரி
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஒற்றைப்படையில் கட்டப்பட்ட ஏழாவது படி.ஆரம்ப முதல் கடைசிவரை ஒரே கருத்துடைய. கலை நுட்ப்பமிக்கதாக காணுகிறேன்.
// இதுபோன்ற ஆட்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றால் வெற்றியை ஒரு சின்ன கேப்ஸ்யூலில் போட்டுக்கொடு, அல்லது ஒரு தாயத்து மாதிரி சின்னதாக்கி கொடு... நீ 10 வருடம் சம்பாதித்ததை நான் சன் டி வி நியூஸ் ஆரம்பித்து முடிப்பதற்குள் சம்பாதித்து விட வேண்டும் !!!//
இப்படிப்பட்டவர்கள் தான் ஹராமான வழியில் பொருளீட்டுகிரார்கள் போலும்.
சொல்லும் கருத்துக்களம் நம் வாழ்வின் நடைமுறையோடு பிண்ணி படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு மன உந்துதலை தருது. படிப்பிலோ, சொந்த வியாபாரத்திலோ, வேலை தேடுபவர்களோ இதை படித்தால் நிச்சயம் முயற்சி செய்தால் என்ன என்ற கேள்வியோடு போராட தொடங்கிவிடுவர், ஒவ்வொரு வரிகளும் வாழ்க்கையை எதிர்த்துப்போராடும் மனோபக்குவத்தை தருது, இந்த இலவச பயிற்சிக்கு மறுமையில் நிச்சயம் நற்கூலி கிடைக்கும் காக்கா, வாழ்த்த வயதில்லை...
அன்பு சகோதர் ஜாகிர் காக்கா,மெய் சிலிர்த்துவிட்டது உங்கள் வைர வரிகள்.இந்த முஸ்லிம் சமுதாயம் உங்களை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.மனித வள மேம்பாடு குறித்து,உங்களை வைத்து நம் ஊரில் வகுப்பு எடுக்க வேண்டும்,அதில் நான் ஒரு மாணவனாய் அமர வேண்டும்,இன்ஷா அல்லாஹ்.
எல்லாம் வல்ல இறைவன்,உங்களுக்கு ஈருலகிலும் வெற்றி தருவானாக,ஆமீன்
//நீ சுட்டிக்காட்டுபவர்களை எல்லாம் நான் சந்தித்துருப்பதாகவேத் தோன்றுகிறது.//
மீண்டும் மீண்டும் ஆற அமர படிக்கும்போது மேலே கண்ட கவி சபீர் அவர்களுடைய பின்னூட்டம் போலவே எனக்கும் தோன்றுகிறது
இப்படி பலரை நானும் சந்தித்து இருப்பதாகவே நிச்சயமாக உணர்கிறேன்.
அத்துடன் அவரவர் சுய விமர்சனம் செய்து பார்க்கும்போது – கீழ்க்கண்ட இந்த வரிகள் நிச்சயமானவை.
//தன்னைத்தானே சந்திக்கும்போது பயம் ஏற்பட்டால் அவன் வாழ்க்கையில் எங்கோ பிழை இருக்கிறது என்றுதான் அர்த்தம்.//
என்னை பொருத்தவரை வளர்ந்து வருபவர்களுக்கு இது வழிகாட்டி.
வளர்ந்து- வாழ்ந்து முடித்துக்கொண்டிருப்பவர்களுக்கு அவர்களின் கடந்தகால வாழ்வின் கடந்து வந்த பாதைகளை அலசி அறிவிக்கும் “ஆடிட் ரிபோர்ட். “
இபுராஹீம் அன்சாரி
வார்த்தைகள் கிடைக்கவில்லை உங்களை வாழ்த்த...ஜமீல் காக்கா சொன்னதுபோல் கனத்தகருவை...ஊர்,சமுகம் சார்ந்த, நம் அன்றாடம் காணும் நடைமுறைகளை சம்பந்தபடுத்தி அழகாகவும் அழமாகவும் காற்றுபோல் எளிதாக அதே சமயம் வாழ்விற்க்கு வலுசேர்க்கும் வகையில் உங்கள் இனிய நடையில் தந்து இருக்கின்றீர்கள் காக்கா
//பொருளாதாரத்தைத் தேடும்போது “வாழ்க்கை”யை கற்றுக்கொள்வீர்கள்//
//போய் வந்தவர்கள் தரும் தோற்றமும், உண்மையை மறைத்த பேச்சுக்களும் ஊரில் கனவுகளுடன்///
//வாழ்க்கையில் பயம் எது தெரியுமா, நீங்கள் உங்களை சந்திப்பதுதான்//
//கவர்ந்து கொள்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்வதுடன் எதை விரட்ட வேண்டும் என்பதை தெரிந்தும்//
//Tough time won’t last…tough people will…//
படிக்கட்டுகள் அல்ல இது...மனிதனின் ஒவ்வொரு செல்லிலும் சென்றடைய வேண்டிய குரோமோசோம்கள்
மிக அருமையான பதிவு - இன்றைய இளைஞர்களிடம் சென்றடைய வேண்டிய பொக்கிஷம்.
’திட்ட அறிக்கை’ தயார் செய்வது கூட காசு கொடுத்துவிட்டால் கிடைக்கிறது என்று தான் இன்றைய மாணவர்கள் கல்லூரியின் இறுதியாண்டை முடிக்கிறார்கள்; திடத்தோடு தானே முடிக்கிறவனோ சிந்தனையில் சிறக்கிறான்.
திட்டமிட்டு, திடத்தோடு வாழ்க்கையினை நகர்த்துவோமேயானால் இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம்.
நம்ம ஜாஹிர் காக்காவின் படிக்கட்டுகள் தானே? பிறகு ஆற,அமர படித்துக்கொள்ளலாம் என்று இருந்தேன். பொறுமையாக படித்ததும் ஒரு இனம் புரியாத பயத்தாலும், சில சங்கடங்களாலும் வாழ்வில் இழந்து விட்ட நல்ல பல வாய்ப்புகளை எண்ணி வருந்துகிறேன். சராசரி மனித வாழ்க்கையில் 50% சதவீதத்தை கடந்திருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இன்னும் எஞ்சியுள்ளவை எத்தனை சதவீதமோ? அதில் என்ன,என்ன சவால்களையும் அதற்கு நேர்மாறான சந்தோசங்களையும் சந்திக்க இருக்கிறோமோ?
எமக்கு முன் அல்லாஹ் அஹ்ழம்.......
காக்கா, கருத்திட முன்னப்பின்ன ஆனாலும் படிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
உங்கள் படிக்கட்டுகளில் இருந்து பாடம் படிக்கும் மாணவன்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஜாஹிர் காக்கா,
வழக்கம் போல் உங்கள் பதிவை எத்தனை முறை படித்தாலும் புத்துணர்வே.
//உங்கள் மார்க் சீட்டில் இப்போது உள்ள “கூடங்குளம் அணு மின்நிலையப் பிரச்சினை”, “தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின் வெட்டு”, “முல்லைப்பெரியாறு அணை விவகாரம்” எது பற்றியும் பிரிண்ட் ஆகி இருக்காது, உங்கள் மார்க்கை தவிர... நீங்கள் வேலை / படிப்பு தேடி போகும் எந்த இடத்திலும் 'இந்த பிரச்சினைகளை" சொன்னால் “பாட்டி வடை சுட்டு வித்த கதை”க்கு கிடைக்கும் முக்கியத்துவம் கூட கிடைக்காது.//
மிகவும் சரி காக்கா,
என் மகனிடம் நான் வற்புறுத்தி படிக்க சொல்லும் பதியுவுகளில்
ஜாகிர் காக்கா உங்களின் இந்த படியேற்றம் முக்கியமானது .....
சகோ. ஜாகிர் ஹுசைன் அவர்களின் ஏழு படிக்கட்டுகள் ஏறிவிட்டன. வாரத்தின் ஏழு நாட்களிலும் ஒவ்வொருநாளும் ஒவ்வொன்றாக மீண்டும் கண்டிப்பாக படிக்கவேண்டும். பட்டம் படித்த, படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளின் முன்னேற்றப் பாதைக்கு முழுமையான வழிகாட்டி.
இதைப் படிக்கும் பெற்றோர்கள், பெரியோர்கள் கடைசி பத்தியில் கொடுத்துள்ள அறிவுரையை பரீட்சைக்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அவ்வப்போது எடுத்துரைக்க வேண்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
//// நீ 10 வருடம் சம்பாதித்ததை நான் சன் டி வி நியூஸ் ஆரம்பித்து முடிப்பதற்குள் சம்பாதித்து விட வேண்டும் !!! ///
அரசியல்வாதியாக இருந்தால்சம்பாதித்து விடலாம் அல்லவா?
சாதாரண மனிதர்களால் முடியுமா?
///// ஒரு டிகிரி / ஒரு டிப்ளோமாவுடன் வெளிநாட்டுக்குச் சென்று ஒரளவு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு 10 வருடமாகிறது. நான் அடிப்படை என்று சொன்னதில் சொந்த வீடெல்லாம் அடங்காது. /////
அனுபவ உண்மை!
//// இருவரும் வேலை பார்க்கும் சூழ்நிலையில் இந்த 5 வருடங்கள் பொறுமையாக இருந்து C.A படித்தவர்.. அந்த B.com graduate ன் ஒரு வருட சம்பளத்தை 3 - 4 மாதத்தில் சம்பாதித்து விடுகிறார். ///// நிஜம் ... ... ..... நிஜமே!
//// தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வது” அது எப்போது ஆரம்பிக்கிறது. முதன்முதலில் நீங்கள் பிறந்த நேரத்தில் தாய்ப்பாலுக்கு அழுத அந்த நிமிடம் தான் வாழ்க்கையின் ஆரம்பம். ////
அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்ற பழமொழியும் உண்மைதானே!
//// ”ஒலப்பிட்டியடா” என மனசாட்சி சொன்னால்??? இனிமேல் உள்ள காலங்களை ரிப்பேர் செய்ய திட்டமிட வேண்டும். ////
அவசியம் திட்டமிட வேண்டும்.
//// உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதை கவர்ந்து கொள்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்வதுடன் எதை விரட்ட வேண்டும் என்பதை தெரிந்தும் இருக்க வேண்டும்.///
நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.
//// உங்கள் மார்க்கை தவிர... நீங்கள் வேலை / படிப்பு தேடி போகும் எந்த இடத்திலும் 'இந்த பிரச்சினைகளை" சொன்னால் “பாட்டி வடை சுட்டு வித்த கதை”க்கு கிடைக்கும் முக்கியத்துவம் கூட கிடைக்காது. ////
கண்டிப்பாக செயல்படத்தெரியாதவர்கள் குறை கூறிக்கொண்டு இருப்பார்கள். சாதிக்க முடிந்தவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள்.
மாஷா அல்லாஹ்!
மொத்தத்தில் படிக்கட்டு ஏழும் அறிவார்ந்த அறிவுரை. செயல்பட முயற்சி செய்வோம். வாழ்த்துக்கள்!
பள்ளிப்பருவத்தில் நீங்கள் படித்த அப்துற்றஹீம் மற்றும் டாக்டர் உதய மூர்த்தி ஆகியோரின் சுயமுன்னேற்றப் பாதைக்கு வழி காட்டும் நூற்கள் உங்களை இவ்வளவு உயரத்தில் உட்கார வைத்து, உங்களின் அணு அணுவான அனுபவங்களும் கூடி, இப்பொழுது நீங்கள் எங்கட்குச் சுயமுன்னேற்றப் படிக்கட்டுகளைக் கட்டிக் கொண்டிருக்கின்றீர்கள். எனவே, ஜெமீல் காக்கா அவர்களின் கருத்துரையில் சொல்லிய வண்ணம் இக்கட்டுரைத் தொகுப்பு நூலுருவில் வெளியாக வேண்டும் என்பது என் எண்ணம்; அதனால் நமதூரில் ஓர் உளவியலார் உருவாகி விட்டார் என்பதும் திண்ணம்
To bro Abulkalam.
எனக்கு கிடைத்த அனுபவங்களை நான் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவுதான். மற்றபடி "போற்றுதலுக்குறிய' விசயங்கள் பெரிதளவு இருப்பதாக நான் நினைக்கவில்லை. என் ஆதங்கம் நம் மக்கள் [ முக்கியமாக நம் ஊர் / பக்கத்தில் உள்ள அனைவருக்கும் நிறைய அதீத திறமைகள் இருக்கிறது. அதை நெறிப்படுத்தினால் ஒவ்வொருவரும் முன்னேற்றம் அடையளாம். "இனிமேலும் மற்றவர்களின் தயவை எதிர்பார்க்காத சமுதாயம் அமையும்"
To Bro Alavudeen,
எல்லாவரிகளையும் விடாமல் படிப்பது தெரிகிறது.
To Bro. MSM.Naina Mohamed,
//உங்கள் படிக்கட்டுகளில் இருந்து பாடம் படிக்கும் மாணவன்.//
ஆனால் நான் ஆசிரியர் இல்லை..உங்களைப்போல் சக மாணவன். கல்லுக்குச்சி கேட்டால் என்னிடம் உள்ளதை உடைத்துதரும் வேலைதான் என் வேலை.
Bro ARA ALA...உங்களுக்காக பதில் எழுதுவதற்கு MSM Naina உதவி செய்திருக்கிறார்.
To Bro Abdul Malik,
//இந்த இலவச பயிற்சிக்கு மறுமையில் நிச்சயம் நற்கூலி கிடைக்கும் காக்கா// Thanx For your wonderful thought. May Allah bless you too.
To Bro லெ.மு.செ.அபுபக்கர்
//இப்படிப்பட்டவர்கள் தான் ஹராமான வழியில் பொருளீட்டுகிரார்கள் போலும்.//
ஒரு படிக்கட்டில் இது பற்றி எழுதலாம் என்று எண்னியிருந்ததை எப்படி ரடார் வைத்து கண்டுபிடித்தீர்கள்.?
\
To Bro Ebrahim Ansari...
//உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் //
காக்கா.... உங்கள் ஆசீர்வாதங்களுக்கு நன்றி. இன்னும் சரியாக எழுத உங்கள் / ஜமீல் நானா போன்ற பெரியவர்களின் விருப்பமும் காரணம்.
Thanx to bro Thajudeen, MHJ , Harmy, Puthusurabi, Abu Ibrahim...and Yasir [ Thanx for your call]
Post a Comment