Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 7 14

அதிரைநிருபர் | February 02, 2012 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்.

'நிச்சயமாக உண்மையை பேசுதல், நல்லது செய்வதை ஏற்படுத்தும். நல்லது செய்வது சொர்க்கத்தை பெற்றுத்தரும். நிச்சயமாக! உண்மையை பேசுபவர், இதில் உண்மையாளர் என அல்லாஹ்விடம் பதிவு செய்யப்படுவார். நிச்சயமாக! பொய் பேசுதல், தவறுகள் செய்வதை ஏற்படுத்தும். தவறுகள் நரகைப் பெற்றுத்தரும். நிச்சயமாக ஒருவர் பொய் பேசினால், அல்லாஹ்விடம் பொய்யர் என பதிவு செய்யப்படுவார் என்று நபி(ஸல்) கூறினார்கள்.''  (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்).                ரியாளுஸ்ஸாலிஹீன்: 54 )

'உனக்கு சந்தேகம் ஏற்படுத்துவதை விட்டு விடுவீராக! உனக்கு சந்தேகம் ஏற்படாதவை பக்கம் செல்வீராக! நிச்சயமாக உண்மை, அமைதி (அளிக்கும்). பொய் சந்தேக(த்தை வளர்க்கு)ம்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமுஹம்மத் ஹஸன் இப்னு அலீ(ரலி) அவர்கள். (திர்மிதீ). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 55 )

''இரண்டு வியாபாரிகள், அவர்கள் பிரியும் வரை – (விற்க வாங்க மறுக்கவும்) இஷ்டம் அளிக்கப்பட்டவர்களாவர். அவ்விருவரும் உண்மை பேசி, தெளிவாக பேசிக் கொண்டால் அவ்விருவரின் வியாபாரத்தில் 'பரக்கத்' அளிக்கப்படும். அவ்விருவரும் மறைத்து, பொய் பேசினால், அவ்விருவரின் வியாபாரத்தில் 'பரக்கத்' நீக்கப்படும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: (அபூகாலித் என்ற)ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 59 )

'இறைவா! உன்னிடம் நேர்வழியை, இறையச்சத்தை, பத்தினித்தனத்தை மற்றும் செல்வத்தையும் கேட்கின்றேன்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னுமஸ்ஊத்(ரலி) அவர்கள்  (முஸ்லிம்).( ரியாளுஸ்ஸாலிஹீன்: 71)

'ஒருமுறை! நபி(ஸல்) அவர்கள் எங்களிடம், நீங்கள் நடுநிலையாக இருங்கள். நீங்கள் உறுதியாக இருங்கள். உங்களில் ஒருவர் தன் செயலால் தப்பித்துவிட முடியாது என அறிந்து கொள்ளுங்கள்' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்களும்(தப்பிக்க) முடியாதா?' என்று நபித்தோழர்கள் கேட்டனர். ''அல்லாஹ் தன் அருளால். கருணையால் என்னை அரவணைத்துக் கொண்டாலே தவிர நானும் (தப்பிக்க) முடியாது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி)  அவர்கள் (முஸ்லிம்).      ரியாளுஸ்ஸாலிஹீன்: 86)

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (அல்குர்ஆன்: 13:28)

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு நல்வாழ்வும், அழகிய தங்குமிடமும் உண்டு. (அல்குர்ஆன்: 13:29)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபி(ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

- S. அலாவுதீன்

14 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அலாவுதீன் காக்கா அருமருந்தை முதலில் உட்க்கொண்டு புத்துணர்ச்சி பெற்றேன்.

// நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு நல்வாழ்வும், அழகிய தங்குமிடமும் உண்டு. (அல்குர்ஆன்: 13:29) //

நம் சமுதாயத்தில் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட சில பித்அத்களை நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்கிறோம் என்று மனப் பால் குடித்து நல்வாழ்வும், அழகிய தங்குமிடமும் உண்டு என கனவு கொண்டிருக்கிறார்கள் .

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஜஸாக்கல்லாஹ் ஹைர்.காக்கா.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பினிய அலாவுதீன் காக்கா,

வழக்கமான ஹதீஸ் தொகுப்புகள் தந்தமைக்கு மிக்க நன்றி.


/'உனக்கு சந்தேகம் ஏற்படுத்துவதை விட்டு விடுவீராக! உனக்கு சந்தேகம் ஏற்படாதவை பக்கம் செல்வீராக! நிச்சயமாக உண்மை, அமைதி (அளிக்கும்). பொய் சந்தேக(த்தை வளர்க்கு)ம்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமுஹம்மத் ஹஸன் இப்னு அலீ(ரலி) அவர்கள். (திர்மிதீ). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 55 )//

சந்தேகம் ஏற்படும் பக்கம் திரும்புவது பொய்யை ஆதரிப்பதற்கு சமம் என்பது விளங்குகிறது.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

உலக விடய‌ங்களுக்கிடையே மார்க்க சம்மந்தமான விளக்கம் மிகவும் ஆறுதல் அளித்து எம்மை அமைதிபடுத்துகிறது. அடிக்கடி இப்படி தந்துகொண்டிருங்கள் அலாவுதீன் காக்கா.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

//அல்லாஹ்வின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (அல்குர்ஆன்: 13:28)//ஹதீஸ்சுடன் தந்தமைக்கு நன்றி,ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நன்றி சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு, தொடர்ந்து இதே போன்று எழுதிக் கொண்டிருக்கள்.

எங்களுக்கு வாக்களித்த "சகோதரியே" தொடருக்காகவும் காத்திருக்கிறோம்.

உங்களைப் போன்ற சிந்தனையாளர்கள் இடையிடையே வந்து செல்லுங்கள்.

அல்லாஹ் உங்களின் நற்கருமங்களை பொருந்திக் கொள்வானாக.

Ameena A. said...

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இதனை அடிக்கடி ஞாபகப் படுத்திக் கொண்டிருங்கள்.

அதிரைநிருபர் தளத்திலும், "இன்று ஃபஜ்ர் தொழுதீர்களா?" இருப்பது போன்று இதற்கு ஒரு பேனர் வைக்கவும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

நல்லதொரு பதிவிட்டதற்கு நன்றி சகோ. அலாவுதீன்

\\அதிரைநிருபர் தளத்திலும், "இன்று ஃபஜ்ர் தொழுதீர்களா?" இருப்பது போன்று இதற்கு ஒரு பேனர் வைக்கவும் என்று வேண்டிக் கொள்கிறேன்.//

சகோதரி ஆமீனா சொல்வதுபோல் இதற்கும் தனி பேனர் வைக்கலாமே...நிருபரே

B.இர்பான்

sabeer.abushahruk said...

அலாவுதீன்,
"மருந்து" என்று நீ பதிந்தாலும் "விருந்து" எனவே உவகையோடு உட்கொள்கிறது இறையச்சம் கொண்ட மனது.

ஜசாக்கல்லாஹு க்ஹைர்!

அந்த பேனர் பரிந்துரை ஏற்புடையதே!

Anonymous said...

ஜஸாக்கல்லாஹ் ஹைர் சகோதரி,

தங்களின் வேண்டுகோள் அவசியமானதே! அவ்வாறே செய்கிறோம் இன்ஷா அல்லாஹ்.. !

-நெறியாளர்

இப்னு அப்துல் ரஜாக் said...

செறிவுள்ள கட்டுரை.இது போன்ற கட்டுரைக்கு அல்லாஹ்வின் கூலி இன்ஷா அல்லாஹ் கிடைக்கும்.ரொம்ப வாழ்த்துக்கள் சகோ

அலாவுதீன்.S. said...

வஅலைக்கும் ஸலாம் (வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள்: அனைவருக்கும் நன்றி!
ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

அலாவுதீன்.S. said...

/// Ameena A. சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்,

எங்களுக்கு வாக்களித்த "சகோதரியே" தொடருக்காகவும் காத்திருக்கிறோம். ///

சகோதரி அவர்களுக்கு : வஅலைக்கும் ஸலாம் (வரஹ்)

தொடர் எழுதுவதற்கான முயற்சிகள் செய்து கொண்டு இருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் விரைவில் தொடர் வெளிவரும்.

கருத்திட்டதிற்கு நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

Yasir said...

அடிக்கடி இந்த மாதிர் புரோ-இஸ்லாமிக் மருந்தை தந்து கொண்டு இருங்கள் காக்கா....அல்லாஹ்வை நினைவினாலே மனம் சாந்தி அடையும்...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு