நீங்கள் SSLC அல்லது Higher Secondary படிப்பவரா?... அப்படியானால் உங்கள் வாழ்க்கையின் இலக்கை நிர்ணயிக்கும் நேரம் இதைத்தவிர வேறு எதுவும் இல்லை.
இந்த சமயத்தில் எடுக்கும் சரியான முடிவு உங்களின் எதிர்கால வாழ்க்கையின் ஒட்டத்தை சரியான தடத்தில் கொண்டு செல்ல உதவும். உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய கண்ணாடி அல்லது ரெக்கார்ட் செய்யப்பட்ட வீடியோ எது தெரியுமா?. நீங்கள் வாங்கும் இந்த பள்ளிக்கூட மார்க் சீட்டும் , சர்ட்டிபிகேட்டும் தான். இதில் நீங்கள் செய்த தேவை இல்லாத விசயஙக்கள் எதுவும் தெரியாது. தேவையான விசயங்களை எப்படி செய்தீர்கள் என காட்டித்தரும்.
உங்களுக்கு இன்னும் சில தினங்களில் [சரியாக சொன்னால் இன்னும் சில மணித்தியாளங்களில்] அரசாங்கத்தேர்வு வர இருக்கிறது , இதை சரியாக எழுதாமல் ' ராத்தாவுக்கு பிள்ளை பிறந்தது, தஞ்சாவூர் ஆஸ்பத்திரியில் வந்து பார்க்க வந்தவர்களுக்கு எடுப்பு சாப்பாடு எடுத்து கொடுக்க நான் அழைந்ததால் அந்த சமயத்தில் கொஞ்சம் மார்க் குறைவு” அல்லது “எக்ஸாம் டைம்லெ உடம்பு சரியில்லை” என இனிமேல் உஙகள் சர்டிபிகேட்டை பார்க்கும் எல்லோருக்கும் ஒரு ரெக்கார்டட் மெஸ்ஸேஜ் சொல்ல முடியாது... எனவே...படியுங்கள். உறுப்படியாக உங்கள் கடமை உணருங்கள்.
உங்களுக்கு பிடித்த சப்ஜெக்ட் இருக்கலாம்.பிடிக்காத சப்ஜெக்ட் என்று எதுவுமில்லை. ஏனெனில் கல்வித்துறை எல்லா பாடத்திலும் பரீட்சை வைப்பது உறுதி. உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர்கள் விதிவிலக்கு தரப்போவதில்லை.
சரியான ஆட்களிடம் உங்கள் ஆலோசனைகளை கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். கருணாநிதி, காமராஜ் எல்லோரும் படிக்கவில்லை அவர்கள் முன்னேற வில்லையா என்றும் “தாமஸ் ஆல்வா எடிசன் படிக்கலியே" [இவர் கொஞ்சம் அறிவியல் தெரிந்தமாதிரி காட்டிக்கொள்ள மாட்டிக் கொண்ட விஞ்ஞானி நம்ம தாமஸு, மற்றபடி பல்ப் பீஸ் போயிட்டா கூட இவனுகளுக்கு அதை மாத்த தெரியாது] இதுபோல் வெட்டித்தத்துவம் பேசுபவர்கள் நிறைய பேர் நம் ஊரில் இருக்கிறார்கள். இவர்களிடம் நீங்கள் என்ன படிக்கலாம் என ஐடியா கேட்பது நோய்க்கு வக்கீலை பார்ப்பதற்க்கு சமம்.
Get the right advice from the right people, not the wrong advice from wrong people.
VISUALISATION
உங்களில் யாராவது சீனியர்களிடம் உள்ள மார்க் சீட்டை (Mark sheet) வாங்கி அதை ஒரு காப்பி எடுத்து அதில் அவருடைய பேருக்கு மாற்றாக அதே போல் உங்கள் பெயரை எழுதி அந்த சப்ஜெக்ட் உள்ள மார்க்கில் நீங்கள் என்ன மார்க் எடுக்க விரும்புகிறீர்களோ அதை எழுதுங்கள் , அதை நிறைய காப்பி எடுத்து நீங்கள் படிக்கும் இடத்துக்கு பக்கத்தில், படுக்கும் படுக்கைக்கு பக்கத்தில், எல்லா புத்தகங்களின் முதல் பக்கத்திலும் ஒட்டி வையுங்கள்.
இதைப் பார்க்க பார்க்க உங்கள் அவேர்னஸ் லெவல் அதிகரிக்கும்.
நான் எழுதியிருக்கும் இந்த Visualisation Technique சிறந்த ரிசல்ட் தருவதற்கு மிக முக்கியமாக கருதுகிறேன். ஏனெனில் இது ஒரு நிருபிக்கப்பட்ட உண்மை.
உங்களின் முன்னேற்றத்துக்கு தடையான விசயங்களை இந்த பரீட்சை சமயத்திலாவது பட்டியலிடுங்கள்.
உதாரணமாக:
1) இன்டர்னெட்டில் தேவையில்லாமல் சாட்டிங், பிளாக்கரில் பிரபலமாக கண்டதையும் எழுதுவது, ஃபேஸ் புக் இது போன்ற 'மட்டையடிக்கிற' விசயங்கள்.
2) சாயங்காலம் கூடும் டீக்கடை, சலூன் வாசல், குளக்கரை மேடு, ஏரிக்கரை ஓரம், தேசிய விருதுக்கு தயாராவது போன்ற பில்டப் கொடுக்கும் விளையாட்டு மைதானங்கள்.
3) உங்கள் படிப்புக்கு சம்பந்தம் இல்லாமல் அமெரிக்காவிலும், லண்டனிலும், துபாயிலும் , சவூதியிலும் பெரிதாக கிழித்துக் கொண்டிருப்பதாக பில்ட் அப் கொடுக்கும் 'வடிவேலுகள்'. இவனுக வாய் பார்க்க ஆரம்பித்தால் உங்கள் வாழ்க்கை நாறிடும்.
4) செல்போனில் வெட்டியாக பேசி வா மாப்லே, படிச்சி என்ன ப்ரொஃபொசரா ஆகப்போறெ...வா வா மோட்டார் சைக்கிள்ளதான் ஒரு 1/2 மணி நேரந்தான் பட்டுக்கோட்டை வரை போயிட்டு கொண்டு வந்து உன் வீட்டு வாசலில் விடுறது என் பொறுப்பு போதுமா என அழைக்கும் 'மொபைல் சைத்தான் மாப்ளைங்க' அவன் மோட்டார் சைக்கிளில் வந்தோமே என்பதற்கு நீங்கள் செட் லன்ச்சுக்கும், கூல் ட்ரிங்க்ஸுக்கும் செலவழித்த காசை கணக்கு செய்தால் மவுன்ட் ரோட்டில் பில்டிங் வாங்களாம்.
ஆனால் அந்த காசை சம்பாதிக்க உங்கள் தகப்பனோ, காக்காவோ வெளிநாட்டில் படும் எந்த கஷ்டமும் உங்கள் கவனத்துக்கே வருவதில்லை என்பது நான் ஒவ்வொரு முறையும் ஊர் வரும்போது பார்க்கும் அதிசயம்.
5) மச்சான் வர்ராப்லெ, மாமா வர்ராக என திருச்சிக்கும், சென்னைக்கும் ஏர்போர்ட்டுக்கும் செல்லும் காரில் “ரிசிவ்” பண்ணப்போறேன் என்பதை ஏதோ ஜனாபதி கையால் பதக்கம் வாங்கப் போகிறேன் என்பதுபோல் சொல்லி உங்கள் நல்ல எதிர்காலத்தை 'சென்ட் -ஆஃப்'செய்து விடாதீர்கள்.[ போனவங்களுக்கு வரத்தெரியாதா?].
மேற்கண்ட தடையை பட்டியலிட்ட பிறகு கவனமாக இருங்கள் இவை எல்லாம் உங்களை முன்னேற விடாமல் தடுக்கும் விசயம் & தடைகள்.
என்டர்டெயின்மென்ட் எல்லாம் தவறல்ல... ஆனால், பரீட்சைக்கு பக்கத்தில் மாபெரும் தவறு..
பரீட்சை முடிந்த பிறகு சேரப்போகும் கல்லூரி, பல்கலைக்கழகம் சம்பந்தமான நுழைவுத் தேர்வுகள், அப்ளிகேசனுக்கான கடைசி நாளை சரியாக தெரிந்து வைத்திருங்கள். ஒரு நாள் தவறினாலும் ஒரு வருடம் தாண்டி விடும்.
ஓட்டப்பந்தயத்தில் ஓடத் துவங்கியவனுக்கு இலக்கு எல்லாம் அந்த கடைசியில் உள்ள கோட்டை தொடுவதுதான் இடையில் யாருக்கும் டாட்டா காண்பிக்கவெல்லாம் நேரம் இல்லை... ஒவ்வொரு வினாடியும் உங்களின் வெற்றியை நிர்ணயிக்கும் தருணம்.
நீங்கள் அனைவரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
May Allah bless you for your Success !
- ZAKIR HUSSAIN
அதிரைநிருபரில் 11-Feb-2011ல் வெளியான பதிவின் மீள்பதி
17 Responses So Far:
சகோ. ஜாகிர்,
பலே........... பலே...........வாழ்த்துகள் !
மாணவர்களுக்கான விழிப்புணர்வு பதிவு !
அரசுப் பொதுத்தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் 10 மணி நேரம் முன்அறிவிப்பு இல்லாத மின் இணைப்புகள் துண்டிப்படும் இக்காலக்கட்டங்களில், கிடைக்ககூடிய சொற்ப நேரங்களில் மாணவ, மாணவிகள் தேர்வுக்கு தயாராவது என்பது பெரிய சவால்தான்.
பொதுத்தேர்வுகள் எழுத தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு இலகுவாக அமைய என் வாழ்த்தும் ! துவாவும் !
அஸ்ஸலாமு அலைக்கும்.
மாணவர்களுக்கு நக்கல் கூடிய அறிவுரை.நிச்சயமாக சம்பத்தப்பட்டவர்கள் உள்ளத்தில் அரிப்பெடுக்கும்.நிதானமிழந்து சொரிந்து புண்ணாக்கி (வீணாக்கி)
விடாமல்.அமைதியாக தடவிக்கொண்டு(சிந்தித்தால்) பலன்கள் நிறைய கிடைக்கும் டாக்டர் ஜாஹிர் காக்காவின் அன்புரையால்.
அஸ்ஸலாமுஅலைக்கும்.
சகோதரர் ஜாகிர் அவர்கள் தனக்கே உரித்தான நடையில் சிந்திக்கவும் செயல்படுத்தவும், அதே சமயம் எச்சரிக்கை உணர்வுடன், எப்படி பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் உள்ளத்தை அறிந்து சொல்ல வேண்டுமோ, அதை அதிரை மண்ணின் வாசத்துடன்(?) சொல்லியது மாணவர்களுக்கு மிக்க பயனுள்ளதாகவும், அதே சமயம் இந்த வருடம் அவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க துணை புரியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதை தயவு செய்து யாராவது பிரிண்ட்அவுட் எடுத்து அதிரையில் உள்ள அணைத்து ஜும்மாவிலும் நோட்டிசாக விநியோகம் செய்தால் இந்த கட்டுரையின் நோக்கம் முழுமையடையும் என்பது என் தாழ்வான வேண்டுகோள்.
இதை என் பிளாக்கிலும் நன்றியுடன் பதிவு செய்துள்ளேன்.
பரிட்சைக்கு நேரமாச்சு..!
அதனால் அதிரை நிருபரில் மாணவர்களை வழிநடத்தும் இது போன்ற ஆக்கங்களை கூடுதலாக தந்து மற்ற பொழுது போக்கு ஆக்கங்களை பரீட்சைக்கு பின் வெளியிடலாம் என்று என் ஆலோசனையை ஏற்ப்பார்கள் என்ற உரிமையுடன் சகோதரர் அபு இபுராஹீம் மற்றும் சகோதரர் தாஜுதீன் ஆகியோருக்கு உரிமையுடன் கட்டளை இடுகின்றேன்...!
அதிரை முஜீப்.
// பரிட்சைக்கு நேரமாச்சு..!
அதனால் அதிரை நிருபரில் மாணவர்களை வழிநடத்தும் இது போன்ற ஆக்கங்களை கூடுதலாக தந்து மற்ற பொழுது போக்கு ஆக்கங்களை பரீட்சைக்கு பின் வெளியிடலாம் என்று என் ஆலோசனையை ஏற்ப்பார்கள் என்ற உரிமையுடன் சகோதரர் அபு இபுராஹீம் மற்றும் சகோதரர் தாஜுதீன் ஆகியோருக்கு உரிமையுடன் கட்டளை இடுகின்றேன்...!//
சகோ. அதிரை முஜீப் அவர்களின் வேண்டுகோளை, நான் வழி மொழிகிறேன்.........................
பொது தேர்வு எழுத இருக்கும் அனைத்து மாணவ/மாணவியருக்கு வாழ்த்துக்கள்...
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோ. முஜீப், சேக்கனா M. நிஜாம் அவர்களின் கருத்துடன் நானும் உடன்படுகிறேன்.
Kind request..
கல்வியாளர்கள், பள்ளி தேர்வுகளில் சாதனைகள் படைத்த சகோதர சகோதரிகள் உங்கள் அனுபவங்களை நம் மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்க முன்வரலாமே. நிச்சயம் இது ஊக்கம் தரும் என்பது என் நம்பிக்கை..
என்ன நண்பர் யாசிரே...
NAS சார் தங்களின் ஆலோசனையையும் சொல்லுங்களேன் உரிமையுடன் கேட்கிறேன்
அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
அன்புச் சகோதரர் முஜீப், தங்களின் மேலான கருத்துக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்.. அதோடு சகோதரர் சேக்னா M.நிஜாம் அவர்களின் வழிமொழியுரைக்கும் நன்றி...
அதிரைநிருபர் ஏற்கனவே அதெற்கென்றும் தயாராகி விட்டது, கடந்த வருடங்களைபோல் இவ்வருடமும் நமது மாணவமணிகளை ஊக்குவிப்பதில் தொடர்ந்து ஈடுபடுவோம் இன்ஷா அல்லாஹ்...
வெற்றியாளர்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும். நிறைய அனுபவங்கள் இங்கே பேசப்படும் இன்ஷா அல்லாஹ்...!
இருட்டில் இருக்கும் சமுதாயமாக இல்லாமல், இந்த மின்சார வெட்டின் இருட்டு ஒரு பொருட்டல்லா என்று நிருபிக்கும் வண்ணம் இந்த வருடம் நமதூர் மாணவச் செல்வங்கள் சாதனை படைப்பார்கள் என்று அவர்களின் மீது நம்பிக்கை வைப்போம் நிச்சயம் சாதிப்பார்கள், சகோதர வலப்ப்பூக்கள் மாணவர்களுக்கென்று அறிவித்த அறிவிப்புகளுக்கும் நல்ல பலன் கிடைக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் மட்டுமே கையேந்துவோம்... !
-நெறியாளர்
www.adirainirubar.in
பள்ளி தேர்வு எழுத இருக்கும் நம் மாணவ மாணவிகள், தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற நாம் எல்லோரும் துஆ செய்வோமாக..
படிக்கட்டுகளை ஏறக் கற்றுக் கொடுக்கும் தம்பி ஜாகிர், அந்த படிக்கட்டுகளின் ஃபவுண்டேசனை இக்கட்டுரையில் அழகுற விளக்கியுள்ளார்.
தேர்வுக்காக தன்னை தயார் செய்து கொள்ளும் மாணவர்கள், கண்டிப்பாக படித்ததை எழுதிப் பார்த்துப் பழகிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் குறித்த நேரத்தில் முழுமையான பதில்களை எழுதி தேர்வில் தன்னிறைவு பெற்ற வெற்றியைப் பெறமுடியும்.
சிலர் நன்கு படிக்கும் மாணவர்கள் வழக்கமாக கூறும் பழக்கம், "தேர்வில் கேட்ட வினாக்கள் எல்லாமே படித்தவைகளே. ஆனால் பதில்கள் எழுத்துவதற்கு போதிய நேரம் கிடக்கவில்லை. 90 மார்குகளுக்குதான் பதில் எழுத முடிந்தது. அதில் கண்டிப்பாக 85 மார்க்குகள் வாங்கிவிடுவேன்" என்பார்கள். இந்த குறை பாடுகளிலிருந்து மாணவர்கள் விடுபட, கண்டிப்பாக படித்தவைகளை எழுதிப் பழகி சரிசெய்து கொள்ளவும்.
// படிச்சி என்ன ப்ரொஃபொசரா ஆகப்போறெ...வா வா//
இதைப் படித்ததும் என் உள்ளக் கருத்தை கூற விரும்புகிறேன். 1977 ல் 15 பேராசிரியர்களை நம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வித்தந்தை மர்ஹூம் ஹாஜி SMS ஷேய்க் ஜலாலுதீன் அவர்கள் பணிக்கு அமர்த்தினார்கள். அந்த நேரத்தில் இதற்கு தகுதியானவர்கள் நம்மூர் நம்மவர்கள் கிடைக்கவில்லையே என அவர்கள் ஏங்கியதை நான் அறிவேன். அந்த பட்டியலின் முதல் பேராசிரியர்தான் அல்ஹாஜ் பேராசிரியர் N A S அவர்கள். மேலும் பேராசிரியர் N A S அவர்களின் ரெகமேண்டசனிலும் சிலர் பணி அமர்த்தப் பட்டார்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்று காலையிலேயே தம்பி ஜாகிர் அவர்களின் காலத்திற்கேற்ற அறிவுரைப் பதிவும் அதனைத்தொடர்ந்து ஊக்கப்படுத்தும் வகையில் அன்பர்கள் மற்றும் பேராசிரியப்பெருந்தகை அவர்களின் பின்னூட்டமும் காண மிக்க மகிழ்ச்சி.
மாஷா அல்லாஹ் !
நண்பர் அதிரை முஜீப் அவர்கள் பரிந்துரைத்துள்ள இரு கருத்துக்களும் இன்றியமையாதவை.
கல்வியில் பின்தங்கியுள்ள சமுதாயம், கற்கின்ற நேரத்தில் கவனத்தை சிதறவிடத்தக்க வாய்ப்புகளை – பணப்புழக்கம் உட்பட- அதிகம் பெற்றுள்ள சமுதாயம்- காலத்தின் கட்டாயம் உணர்ந்து இப்படி காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள அனைவரும் அனைத்து முயற்சிகளும் செய்யவேண்டும்.
ஊரில் ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் முன்னாள் மாணவர்கள்- தங்களால் முடிந்த நல்வழிகாட்டுதல்களை தத்தமக்கு அருகில் இருக்கும் உதவி தேவைப்படுபவர்களுக்கு முன்வந்து உதவிடவேண்டும்.
முன்னாள் ஆசிரியர்கள் இத்தகைய காரியங்களை முன்னெடுத்து சென்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
காதிர் முகைதீன் அப்பா தனது திரண்ட செல்வத்தை நமது ஊரின் கல்விப்பணிக்காக அற்ப்பணித்தார்கள். அந்த நற்செயல் மூலம் ஆளான நாம் நம்மால் முடிந்ததை நமது வளரும் இளைய சமுதாயத்துக்கு செய்யலாமே.
படிக்கட்டுகளை கட்டுவதோடு மட்டுமல்லாமல் இந்த நற் காரியத்துக்கும் “அஸ்திவாரம்” போட்ட தம்பி ஜாகிருக்கு இறைவன் எல்லா வகையிலும் துணை இருக்க து ஆ செய்வோமாக.
வஸ்ஸலாம்.
இபுராஹீம் அன்சாரி
மகனுக்கு நல்ல ஆலோசனைகள்!
நாங்க படிக்கும்போத இந்த மாதிரி அறிவுரைகள் தர யாருமில்லை....மாணவர்களே ஜாஹிர்காக்கா சொன்னதை அப்படி காப்பி பண்ணி உங்கள் மூளையில், மனதில் பேஸ்ட் செய்து...வெற்றி வாகை சூடுங்கள்...வாழ்த்துக்கள்
தமிழுரைக்கு கோனார்.
அறிவுரைக்கு ஜாகிர் என்று தாராளமாகச் சொல்லலாம்.
கச்சிதமான வழிகாட்டல்.
Bro. Zaheer,
Assalaamu alaikkum,
You are a wonder. You have advised to let their creative juices flow and not to go off track. Every drop in the ocean counts.
May Allah Bless you too!
சகோ ஜாகிர் அவர்களின் கட்டுரை மாணவர்களுக்கு ஒரு எனர்ஜி ட்ரின்க்
மீள் பதிவானாலும் உபயோகமானது என வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. மாணவர்கள் இதையும் படித்து உபயோகித்துக்கொண்டால் இதை எழுதிய எனக்கு சந்தோசமே.
அஸ்ஸலாமுஅலைக்கும்.
அருமையான கட்டுரை .
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
“Allâh will reward you [with] goodness.”
Post a Comment