மக்காவிலிருந்து மதீனாவுக்கு நபியவர்களும் முஸ்லிம்களும் வந்து சேர்ந்தவுடன் செய்த முதற்பணி, ஆங்கோர் இறையில்லத்தை நிறுவியதாகும். அப்பணியில் கற்களையும் மணலையும் சுமந்து ஆர்வத்துடன் உழைத்த தம் தோழர்களைக் கண்டு உவகையுற்று, நான்கடிக் கவியொன்றை நபியவர்கள் பாடி ஊக்கப் படுத்தினார்கள்:
هذا الحمال لا حمال خيبر، هذا أبر ربنا و أطهر
اللهم إن الأجر أجر الاخره ، فارحم الأنصار و المهاجرة
இதன் தமிழ்க் கவியாக்கம்:
கற்கள் சுமக்கும் இச்சுமையோ
கைபர்ச் சந்தைச் சுமையன்று
பொற்புள தூய நன்மையினைப்
பொழியும் இறையின் சுமையாகும்.
இறைவா! எமது கூலியதோ
இறவா மறுமைக் கூலியதே
நிறைவாய் மக்கா மதீனாவின்
நேசர்க் குதவி புரிந்திடுவாய்!
(சஹீஹுல் புகாரீ – 3906)
இக்கவிதையடிகளைக் கேட்டு ஊக்கமுற்ற ஆங்கு பணி புரிந்துகொண்டிருந்த நபித்தோழர் ஒருவர்,
இறைவா! சிறந்த நன்மையெலாம்
இறவா மறுமை நன்மைகளே
நிறைவாய் மக்கா மதீனாவின்
நேசர்க் குதவி செய்திடுவாய்!
என்று திருப்பிப் பாடி, மற்றவர்களுக்கும் ஊக்கப் படுத்தினார்.
(ஃபத்ஹுல் பாரீ)
இதைக் கேட்ட இன்னொருவர், கருணை நபியின் கடும் உழைப்பைக் கண்டு,
உன்றன் தூதர் பணிசெய்ய
உற்றுப் பார்த்து நாங்களெலாம்
நின்றோ மாயின் எம்மைவிட
நீசர் யாரும் இலரன்றோ!
என்று பாடினார்.
(ஃபத்ஹுல் பாரீ)
அவரையடுத்து, அறிவுச் செல்வர் அலியவர்கள் பாடினார்:
தொழுகைப் பள்ளிப் பொறுப்பேற்றுத்
தொழுது வணங்கும் நற்செயல்போல்
முழுமை யாம்நற் செயலுண்டோ
மொழிவீர் நற்பணி செய்வோரே?
(ஃபத்ஹுல் பாரீ)
இவ்வாறு, நபி (ஸல்) அவர்கள் கடும் உழைப்பின்போது கவி பாடி ஊக்கமூட்ட, தோழர்களும் தம் பங்குக்குக் கவி பாடியதை நபியவர்கள் ஏற்றுக்கொள்ள, அவ்விடத்தில் ஒரு சிறு கவியரங்கமே கொலு வீற்றது!
அண்ணலெம் பெருமான் (ஸல்) அவர்கள் தமது நபித்துவத்தின் தொடக்கத்தில் எதிர்கொண்ட போரின்போது ஒரு மலை மீது ஏறிச் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது கற்பாறையொன்றில் தடுக்கி விழப் போனார்கள்! கல் தடுக்கிய காலை நோக்கினார்கள்; முன் விரலிலிருந்து குருதி வடிந்துகொண்டிருந்தது! அந்த வேதனை அவர்களை வருத்தியபோதும், தமது கால் விரலைப் பார்த்துக் கீழ்க்கண்டவாறு கவியடியொன்றைக் கூறி, வேதனையை மாற்றிக்கொண்டார்கள்:
إصبع دميت هل أنت
إلا
و في سبيل الله ما لقيت
இதன் தமிழ்க் கவியாக்கம்:
செங்குருதி சிந்துகின்ற விரலே உன்கால்
செல்லுகின்ற பாதையிறைப் பாதை யன்றோ?
(சஹீஹுல் புகாரி – 2802 / 6146, சஹீஹ் முஸ்லிம் - 3675)
‘தாரகுத்னி’ எனும் நபிமொழித் தொகுப்பில் பதிவாகியுள்ள நபிமொழி ஒன்று நமது ஆய்வுக்கு உரம் சேர்க்கின்றது:
كلام فحسنه حسن و قبيحه قبيح
“நற்கருத்துடைய சொற்கள் கவிதைகளாகும். தீய கருத்துள்ளவை தீயவையாகும்.”
27 Responses So Far:
///“நற்கருத்துடைய சொற்கள் கவிதைகளாகும். தீய கருத்துள்ளவை தீயவையாகும்.”/// தெளிவான வரையறை...End of Story .... தொடரட்டும் உங்கள் ஆய்வுப்பணி..அல்லாஹ் உங்களுக்கு சுகமான வாழ்வை தரட்டும் சகோ.அஹமது காக்கா அவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும்.
நெஞ்சம் கணக்கும் க(வி)ண்ணீர் ஆதாரங்கள்.
// இதைக் கேட்ட இன்னொருவர், கருணை நபியின் கடும் உழைப்பைக் கண்டு,
உன்றன் தூதர் பணிசெய்ய
உற்றுப் பார்த்து நாங்களெலாம்
நின்றோ மாயின் எம்மைவிட
நீசர் யாரும் இலரன்றோ! //
நற்றமிழ் அழகு கவியாக்கம்
நற்கவி(ஞர்)களுக்கு அரிய ஊக்கம்!
// كلام فحسنه حسن و قبيحه قبيح
“நற்கருத்துடைய சொற்கள் கவிதைகளாகும். தீய கருத்துள்ளவை தீயவையாகும்.”//
நன்மையை நாடி சொல்லும் நல்ல கருத்துக்களனைத்தும் கவிதையே ! தெள்ளத் தெளிவு !
அப்படியிருக்க "
“(நம் தூதராகிய) அவருக்கு நாம் கவிதையைக் கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் இல்லை” (36:69)
இந்த இறைவசனத்தை சுட்டிக் காட்டி "இந்தக் கட்டுரையின் பகுதி - 6ல் நபி அவர்கள் கவிதையொன்று பாடினார்கள்" என்று வருகிறதே அது எப்படி என்று எனக்கு ஒருவர் அலைபேசியில் கேட்டார்... பதில் நேரடியாக எனக்குச் சொல்லத் தெரியவில்லை (அதுதான் உண்மை) ஆதலால் இதனை இங்கே பதிந்து விளக்கம் வேண்டி நிற்கிறேன் !
ஆச்சர்யப்படக்கூடிய தகவல்கள். தீர்க்கமான ஆய்வு!
தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்
"(நம் தூதராகிய) அவருக்கு நாம் கவிதையைக் கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் இல்லை” (36:69)"
நபி (ஸல்) அவர்கள் நபிதான் என மக்களுக்கு நிரூபிப்பதற்காக அவர்களுக்கு கவிதை பாடும் திறமை இருக்க வேண்டும், அக்கலையை அல்லாஹ் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும், இன்னும் நபி (ஸல்) அவர்கள் தமது நுபுவ்வத்தை நிரூபிப்பதற்காக அக்காலக் கவிஞர்கள் போல கவிதை பாடிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதெல்லாம் தேவையில்லை, என்பதே இந்த வசனத்தின் கருத்தாகும்.
எனினும், இவ்வசனம் அவர்கள் கவிதை பாடக்கூடாது என்றோ அல்லது நற்கருத்துள்ள கவிதைகளைக் கேட்கக்கூடாது என்றோ கூறவில்லை.
அது போன்றே, நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் வசனங்களை மக்கள் முன் ஓதிக் காட்டிய பொழுது நிராகரிப்பவர்கள், இது அவராக இட்டுக்கட்டிக் கூறுகின்ற கவிதைகள் என்று கூறினர். அதற்கு மறுப்பாகவே, "இறைவன், நபி (ஸல்) அவர்களுக்கு நாம் கவிதையைக் கொடுக்கவில்லை. கவிதையைக் கற்றுக் கொள்வதும், தான் நபி என நிரூபிப்பதற்காகக் கவிதை பாடுவதும் நமது தூதருக்குத் தேவையற்றது" எனும் இவ்வசனத்தை இறக்கி அருளினான்.
கற்பவர் வியக்கும் தெளிவாம் -அறிவுக்
******கண்களைத் திறக்கு மொளியாம்
அற்புத மறையின் உரையாம் - நபியின்
*****அழகிய வழியின் நெறியாம்
நற்குண மலர்கள் மணக்கும் -அவர்களின்
*****நட்பினை விரும்பும் மனமும்
சொற்களி லினிமை கலக்கும் - அந்தச்
*****சொல்வனச் சுவனம் நிலைக்கும்
//தமிழே என் பேச்சு; கவிதையே என் மூச்சு//
இந்தக் கட்டுரைக்கு தொடர்புள்ள ஒரு கேள்வி,ஒரு முஸ்லிம் சகோதரர் மேற்கண்டவாறு கூறி வருகிறார்.அவரின் அக்கூற்று நம் இஸ்லாமிய பார்வையில் சரியானதா?என் சந்தேகத்தை தீர்த்துவைக்கும் படி கட்டுரை ஆசிரியரைக் கேட்டுக்கொள்கிறேன்?
அருமை அருமை தொடருங்கள் இன்ஷா அல்லாஹ்....
தமிழக கவிஞர் மு. மேத்தா நபி (ஸல்) அவர்களின் வரலாற்றை கவிதையில் தொகுத்து “நாயகம் ஒரு காவியம்” என்ற பெயரில் ஓர் புத்தகம் வெளியிட்டுள்ளார். அந்தப் புத்தகத்தில் நபியவர்களைப் பற்றி அவர் வர்ணிக்கும் போது இப்படி எழுதுகிறார்.
காவிய நாயகர்.
மனிதர்களில் இவர் ஒரு மாதிரி....
அழகிய முன்மாதிரி!
......................................
உலக அதிசயங்களில் இது ஓர் ஒப்பற்ற அதிசயம் –
காலடியில் மகுடங்கள் காத்துக் கிடந்தன........
இவரோ ஓர் எழையாகவே இறுதி வரை வாழ்ந்தார்!
உலக அதிசயங்களில் இது ஓர் ஒப்பற்ற அதிசயம்!
...........................................
எல்லாரும் வாயிற் கதவுகளைத் தட்டிக்கொண்டிருந்தார்கள்.
இறுதி நபியாய் எழுந்தருளிய இவர்தான் தாழிட்ட மனக்கதவைத் தட்டினார்.
............................................
முழு நிலவே! வள்ளல் முஹம்மதே!
உங்களை நான் பிறை நிலாச் சொற்களால் பேசுகிறேன்.
..............................................
எழுதப் படிக்கத் தெரியாதவர்தான்...............
ஆனால் இவர் தான் புவியின் புத்தகம்!
................................................
சிம்மாசனங்களில் இவர் வீற்றிருந்ததில்லை......
அண்ணலார் அமர்ந்திருந்த இடமெல்லாம் அரியணையானது!
..................................
கிரீடங்களை இவர் சூட்டிக் கொண்டதில்லை........
பெருமானார் தலையில் தரித்ததெல்லாம் மணிமகுடம் என்றே மகத்துவம் பெற்றது.
.........................................
மக்கத்து மண்ணை இவர் போர் தொடுத்து வென்றார்.
அகில உலகத்தையும் போர் தொடுக்காமலே வெற்றி பெற்றார்.
.......................................
நடை பயிலும் கால்கள் எங்கேனும் நாட்காட்டி ஆனதுண்டோ?
மக்காவில் இருந்து மதீனாவுக்கு இவர் நடந்தார் – ஹிஜ்ரி என்னும் ஆண்டுக் கணக்கு ஆரம்பமானது.
...........................................
இவர் இறைவனின் துறைமுகம்! இங்கே தான் திருமறை இறக்குமதியானது!
இவர் – இறைவனின் துறைமுகம்! இங்கிருந்து தான் திருமறை எல்லா நாடுகளுக்கும் ஏற்றுமதியானது.
குறிப்பு : கவிஞர் மு. மேத்தாவின் கவிதைகளில் மார்க்க முரணான கருத்துக்களும் உள்ளடங்கியுள்ளன. வாசகர்கள் அவற்றை இணங்கண்டு படிக்கவும். – புத்கத்தை முழுமையாக நாம் உறுதி செய்யவில்லை. எடுத்துக் காட்டாக ஒரு பகுதியை குறிப்பிடபட்டுள்ளது.
B.இர்பான்
//தமிழே என் பேச்சு; கவிதையே என் மூச்சு//
இந்தக் கட்டுரைக்கு தொடர்புள்ள ஒரு கேள்வி,ஒரு முஸ்லிம் சகோதரர் மேற்கண்டவாறு கூறி வருகிறார்.அவரின் அக்கூற்று நம் இஸ்லாமிய பார்வையில் சரியானதா?என் சந்தேகத்தை தீர்த்துவைக்கும் படி கட்டுரை ஆசிரியரைக் கேட்டுக்கொள்கிறேன்?
Sindu mudiyum waylaiyo?
சரியானதல்ல!
//Sindu mudiyum waylaiyo?//
அல்லாஹ் போதுமானவன்
அர அல சொன்னது…
//தமிழே என் பேச்சு; கவிதையே என் மூச்சு//
இந்தக் கட்டுரைக்கு தொடர்புள்ள ஒரு கேள்வி,ஒரு முஸ்லிம் சகோதரர் மேற்கண்டவாறு கூறி வருகிறார்.அவரின் அக்கூற்று நம் இஸ்லாமிய பார்வையில் சரியானதா?என் சந்தேகத்தை தீர்த்துவைக்கும் படி கட்டுரை ஆசிரியரைக் கேட்டுக்கொள்கிறேன்?
//
தமிழே என் பேச்சு
இந்த வார்த்தை அதைக் கூறிய சகோதரர் அந்தத் துறையில் அவருக்கு இருக்கும் ஈடுபாட்டை உறுதியுடன் எடுத்துக் கூறுவதே அன்றி வேறில்லை. ஒவ்வொருவருக்கும் தமது தாய்மொழியில், அல்லது தான் விரும்பும் வேறுமொழிகளில் ஆர்வம் இருக்கும். ஆங்கிலத்தில அதிக ஈடுபாடு கொண்டவர்கள் அதிலேயே பேசுவதையும், எழுதுவதையும் விரும்புவார்கள். இஃதெல்லாம் ஒன்றும் தவறான விஷயங்களல்ல.
கவிதையே என் மூச்சு
இதுவும் அவருக்கு அவரது துறையில் இருக்கும் ஈடுபாட்டைக் கூறும் வார்த்தைதான்.
நம் அனைவருக்கும் நாம் உள்ளே சுவாசிக்கும் மூச்சு ஆக்ஸிஜன் என்றும் வெளியே விடும் மூச்சு கார்பன்டை ஆக்ஸைடு என்றும் தெரியும். ஆனால், மூச்சு என்பது மனிதன் இறக்கும் வரை நடைபெறும் ஒரு செயலாகும்.
ஒவ்வொரு மனிதருக்கும் தனது மூச்சு, உயிரின் மேல் மிகவும் ஆசை இருக்கும். இந்த மூச்சு மனிதனின் உடலில் உயிரின் தொடர்பால் உண்டாவதாகும்.
الّذِيَ أَحْسَنَ كُلّ شَيْءٍ خَلَقَهُ وَبَدَأَ خَلْقَ الإِنْسَانِ مِن طِينٍ * ثُمّ جَعَلَ نَسْلَهُ مِن سُلاَلَةٍ مّن مّآءٍ مّهِينٍ * ثُمّ سَوّاهُ وَنَفَخَ فِيهِ مِن رّوحِهِ وَجَعَلَ لَكُمُ السّمْعَ وَالأبْصَارَ وَالأفْئِدَةَ قَلِيلاً مّا تَشْكُرُونَ (الم سجدة:7-9)
அந்த அல்லாஹ் எத்தைகையவன் எனில் அவன் படைத்த ஒவ்வொன்றையும் முழுமையாக அழகுபடுத்தினான். மேலும், மனிதப் படைப்பை அவன் களிமண்ணில் தொடங்கினான். பின்னர், அவனது வம்சத்தை மிகவும் கேவலமான தண்ணீரில் இருந்து உருவாக்கினான். பின்னரும், அவன் அந்த மனிதனைச் செம்மையாக்கினான். இன்னும், அவனிலிருந்து உயிரை அதில் ஊதினான். இன்னும், உங்களுக்கு செவிப்புலனையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஆக்கி வைத்தான். எனினும், நீங்கள் (இவற்றையெல்லாம் அளித்த அவனுக்கு) நன்றி செலுத்துவது மிகவும் குறைவாகவே உள்ளது. (அலிஃப் லாம் மீம் சஜ்தா, 7-9)
ரூஹ் எனும் வார்த்தை குர்ஆனில் பல பொருட்களில் கூறப்படுகின்றது. அதில் உயிர் என்று ஒரு பொருள் உண்டு. அல்லாஹ் மனிதனில் ரூஹை ஊதும் பொழுது அந்த மனிதனுக்கென்று அவன் நிர்ணயித்த இயல்புகளையும் அதனுடன் சேர்த்தே வழங்குகின்றான். எனவே தான், ஒவ்வொரு மனிதரும் மாறுபாட்ட இயல்புகளையும், விருப்பு-வெறுப்புகளையும் கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு தாயும், தன் குழந்தையை “யேன்ஞ் செல்லம், யேன்வ்வுயிரு”, (என் செல்லம், என் உயிர்) என்று கொஞ்சுவாள். இன்னும், ஒருவர் இன்னொருவர் மேல் அதிகம் பிரியம் வைத்திருந்தால், “நான் அவம்மேலே மேல் உயிரையே வச்சிருக்கேன்” என்றெல்லாம் கூறுகிறோம். ஒரு குழந்தையின் முகத்தைப் பார்த்து, இந்தக் குழந்தைக்குப் பால் வடியும் முகம் என்று கூறினால், அது அக்குழந்தையின் முகம் அவ்வளவு தெளிவாக, அழகாக இருக்கின்றது என்பேத தவிர, அக்குழந்தையின் முகத்தில் நிஜமாக பால் வடிகின்றது என்பதில்லை. அதுபோலவே, ஒருவரைப் பார்த்து, இவன் சரியான பச்சோந்தி என்று கூறினால், அவர் நிஜத்தில் பச்சோந்தி அல்ல, பச்சோந்தி போன்று தன்னை இடத்திற்கேற்றவாறு மாற்றிக் கொள்பவர் என்று பொருள்.
அது போன்றே, கவிதை என் மூச்சு என்று சகோதரரது வார்த்தை, இயல்பாக மூச்சு விடுவதைப் போன்று அவருக்கு கவிதை இயல்பாக வருகிறது, அல்லது அவருக்குக் கவிதையில் ஈடுபாடு உள்ளது என்று பொருள் கொள்ள வேண்டும்.
எனவே, இவையெல்லாம், வார்த்தைகளே அன்றி வேறில்லை. இவ்வாறு சொல்வதல் குற்றமுமில்லை.
لاَّ يُؤَاخِذُكُمُ اللّهُ بِاللَّغْوِ فِيَ أَيْمَانِكُمْ وَلَكِن يُؤَاخِذُكُم بِمَا كَسَبَتْ قُلُوبُكُمْ وَاللّهُ غَفُورٌ حَلِيمٌ - البقرة: 225
நீங்கள் விளையாட்டாக் கூறும் சத்தியங்களைக் கொண்டு அல்லாஹ் உங்களைப் பிடிக்க மாட்டான். எனினும், உங்களது உள்ளங்கள் சம்பாதித்தவற்றைக் கொண்டு அவன் பிடிப்பான். நிச்சயமாக, அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பொறுத்தருள்பவனாகவும் இருக்கின்றான். (அல்பகரா-225)
அரபிகள் அடிக்கடி “வல்லாஹி, வல்லாஹி” “அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அல்லாஹ்வின் மீது சத்தியமாக” என வார்த்தைக்கு வார்த்தை கூறுவது வழக்கம். அரபுநாடுகளில் வேலைபார்ப்போர், அல்லது அவர்களுடன் பழகியோர் இதை இன்றும் காணலாம். அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுவிட்டால் அதை நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றாவிட்டால் அதற்குப் பதிலாக மிகவும் கடுமையான பரிகாரங்கள் நிறைவேற்ற வேண்டும். எனவே, விளையாட்டாக, பேச்சு வழக்கில் வரும் வார்த்தைப்பாடுகளுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான் என்பதை மேற்கண்ட குர்ஆன் வசனம் தெளிவு படுத்துகின்றது.
இதுபோன்று,
//தமிழே என் பேச்சு; கவிதையே என் மூச்சு//
என்று கூறிய சகோதரரின் வார்த்தையையும் எடுத்துக் கொள்ளலாம்.
ஜஸாக்கல்லாஹ் ஹைர் சகோதரர் அஹமது ஆரிஃப்...
நல்ல விளக்கமான பாடம் நடத்தியிருக்கிறீர்கள்....
புலியின் குட்டி பூனையாகுமா !?
புலியகத்தானே இருக்கும் !
மாஷா அல்லாஹ் !
பேனே...என்னமோ ஆக்குன கதையா...சின்ன சின்ன விசயங்களை உற்றுபார்த்துக்கொண்டு...உங்கள் அறிவை குறைத்து, மதிப்பிழந்து நிற்காதீர்கள்....சிங்கம் உறுமினால் பயம் வரும்...ஆனா கிணற்று தவளை கத்தினால் அதற்க்கு ஆபத்து வரும்..இஸ்லாம் இனிய & எளிய மார்க்கம் அதனை கடுமையாக்கிவிடாதீர்கள் நண்பர்களே
சகோ.Ahamed Arif அல்லாஹ் உங்களுக்கு ஞானத்தையும் ஆயுளையும் நீளமாக்கி வைக்கட்டும்...உங்களை போன்றவர்கள்தான் இன்றைய தேவை
சகோ.Ahamed Arif அவர்களின் விளக்கம் - மறை கூறும் மாமருந்து. சரியான நேரத்தில் முறையான தீர்வைத் தந்த தங்களின் ஆழ்ந்த அறிவுரைகள் என்றென்றும் எங்களுக்குத் தேவை.
தாங்கள் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் பெற்று சிறப்பான வாழ்வு பெற வல்ல இறைவனை வழுத்துகிறேன்.
சகோ அஹமது ஆரிப் காக்கா,கருத்து செறிவான உங்கள் விளக்கத்துக்கு நன்றி.கேட்ட கேள்வி பற்றி எதிர் வினையாக - மாத்தி யோசிக்காமல்,ஒரு ஆசிரியர் எப்படி விளக்குவாரோ அப்படி விளக்கியுள்ளீர்கள்.நீங்கள் ஆசிரியப் பணிக்கும்,கட்டுரைகள் எழுதவும் முழுத் தகுதி உங்களுக்கே உண்டு.அதிரை நிருபர் அவர்களை பயன்படுத்திக் கொண்டால்,எங்களுக்கு அறிவு விருந்து கிடைக்கும்,,இன்ஷா அல்லாஹ்.சகோ அவர்களே,இது சம்பந்தமான மேலும் சில விளக்கங்கள் அறிய ஆவல் உள்ளது.இங்கு நான் கேட்க விரும்பவில்லை.சிலரால் இங்கு மிஸ்யூஸ் பண்ணப்படுகிறது.எனவே உங்கள் ஈமெயிலுக்கு அனுப்பலாமா?
'நாம் நாடியோருக்குத் தகுதிகளை உயர்த்துவோம். ஒவ்வொரு அறிந்தவனுக்கு மேல் அறிந்தவன் இருக்கிறான்,'
-குர்ஆன் 12:76
அஸ்ஸ்லாமு அலைக்கும் வரஹ்...
//தமிழே என் பேச்சு; கவிதையே என் மூச்சு//
மேற் சொன்ன வாசகம் குற்றமாகாது எனுன் சகோ Ahamed Arif அவர்களின் விளக்கம் ஏற்புடையதே! இருப்பினும் இஸ்லாமிய ஒழுக்க மான்புகளின் அடிப்படையில் இது போன்ற வாக்கியங்களைத் தவிர்த்துக்கொள்வதே சிறந்தது.
மேலும் சகோ. அப்துல் லத்தீப் அவர்கள் கவிதைக்கு எதிரான கருத்தைக் கொன்டிருப்பது அவருடைய மனோ இச்சையினால் அல்ல என்பதையும் சில குர்ஆன் ஹதீஸ் அடிப்படை அதில் இருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
அதற்கான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுக் கொன்டிருக்கின்றன. அல்லாஹ்வின் நாட்டத்தின் அடிப்படையில் அனைவருக்கும் ஒரு தெளிவு பிறக்கும். அது வரை அனைவரும் அமைதியாய் இருப்பதே நன்மை பயக்கும். அதை தவிர்த்து "யாரும் கொதித்துவிட வேண்டாம்" "அரண்டவன்" "அலறுது" போன்ற சாடல்கள் ஆரோக்கிய மானதல்ல.
மேலும் சகோ. அப்துல் லத்தீபுடைய கேள்விக்கு கட்டுரை யாசிரியரின் பதில் கூடாது என்பதாகவே இருக்க வேண்டும், அதனால் தான் காக்காவின் பதில் அவ்வாறு அமைந்திருக்கிறது என்பது என் கருத்து.
நிச்சமாக அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.
தயவு செய்து யாரையும் குற்றம் காண வேண்டும் என்ற அடிப்படை யில்லமால் தவறுகள் சுட்டப்பட வேண்டும் என்பதே என் அன்பான வேண்டுகோள்.
அல்லாஹ் நம் பாவங்களைப் பொறுத்தருல்வானாக!
قُلْ كُلٌّ يَعْمَلُ عَلَىٰ شَاكِلَتِهِ فَرَبُّكُمْ أَعْلَمُ بِمَنْ هُوَ أَهْدَىٰ سَبِيلاً
(நபியே!) நீர் கூறுவீராக "ஒவ்வொருவனும் தன் வழியிலேயே செயல் படுகிறான்; ஆனால் நேரான வழியில் செல்பவர் யார் என்பதை உங்கள் இறைவன் நன்கு அறிவான்." (அல்இஸ்ரா-84)
எல்லாம் அறிந்தவரும் யாருமில்லை, ஏதும் அறியாதவரும் யாருமில்லை.
(வாப்பா வைத்திருந்த குடும்பசம்ரஷணி என்று ஒரு பழைய புத்தகத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் போது படித்தது)
அஸ்ஹாபுல் கஹ்ஃப் - குகைத் தோழர்கள் ஒவ்வொருவரும் முன்பின் தெரியாதிருந்தும், எவ்வாறு இறைவனைத் தேடி ஒரு மரத்தடியில் ஒதுங்கினார்களோ, அதுபோல நாமும் இங்கு கூடுகின்றோம். நேரில் தினம் தினம் பார்க்க முடியாத, பேசமுடியாத நாம் ஒருவருக்கொருவர் கருத்துகளைப் பரிமாறிக் கொள்கிறோம். நமது மார்க்க அறிவை வளர்த்துக் கொள்கிறோம். எனவே,நாம் ஒருவருக்கொருவர் கோபத்தைப் பரிமாறிக் கொள்ள வேண்டியதில்லை.
சரியானதல்ல’ என்று சொல்லிவிட்டு அதை ஞாயப்படுத்தாவிடில் நான் சொன்னதும் சரியானதல்ல என்றாகிவிடும். எனவே…
தமிழே என் பேச்சு – நோ கமென்ட்ஸ்!
கவிதையே என் மூச்சு – தம்பி முஹமது ஆரிஃபின் கருத்து மேலோட்டமாக பெரிதாக ஒன்றும் தவறில்லை என்று விளக்கினாலும் இன்னும் சற்று நுனுக்கமாக ஆராய்ந்தால் கீழ்கண்டவற்றை உணரலாம்.
- கவிதை யாருக்கும் மூச்சல்ல, எனவே, கவிதையை மூச்சு என்பது அநாவசியமான ஒரு பொய்.
-
- கவிதை என்னும் பொது தலைப்பின்கீழ் எல்லா கவிதைகளும், அதாவது வள்ளுவரின் காமத்துப்பால் உட்பட எல்லா கவிதைகளும், ஒழுக்கக்கேடான விஷயங்களைச் சொல்லும் கவிதைகளும்கூட அடங்குவதால் கவிதை மூச்சாகும் எனில் இஸ்லாம் அனுமதிக்காது.
-
- கவியன்பன் எழுதும் கவிதைகள் மட்டும்தான் அவர்களுக்கு மூச்சா (அல்லது) யார் எழுதினாலுமா என்ற கேள்வி எழும். மொத்தத்தில் கவிதை என்று முழங்கிவிடுதல் அபாயகரமானதாகும் என்பதற்கு நான் உதாரணங்கள் தரவேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக கவிஞர்கள் பொதுவாகவே உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். அதே சமயம், சுட்டிக்காட்டினால் சரிசெய்துகொள்ளும் பாங்கிலும் மிகைத்தவர்கள், அதிலும் கவியன்பன் திறந்த மனம் படைத்தவர் என்பதையும் சர்ச்சைகளுக்குள் சிக்க விரும்பாதவர்கள் என்பதையும் சமீத்திய பழக்கத்தில் கண்டறிந்தேன்.
எனவே, அன்பிற்குரிய கவியன்பன், தங்களின் புலமை சிறந்தது. உங்களால் கவிதைக்குத்தான் பெருமை. நீங்கள்தான் கவிதைக்கு மூச்சு. கவிதை உங்களுக்கல்ல என்பதை உணர்ந்து தங்களின் மேற்கோளை மாற்றியமைக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Dear Sabeer,
Assalaamu alaikkum,
Those problem creating words have been removed from my blogspot on the same day when brother AL.AR brought this case to ADIRAI NIRUBAR.
This is for your kind information.
Regards,
ABUL KALAM (S/o, Shaick Abdulkader)
wa alaikkumussalaam!
You won once again Kaviyanban, not the case yet, but the hearts for sure!
The blogspot was created by my friend who is in Singapore who was copying my poems from my Face Book notes and publishing in his own blogspot. Once, he found that my poems are related to God-faith, he then stopped copying my poems and sent me a message,"You are believer and I am an atheist; your poems can not be published in my site instead I can create a blogspot for you as you are my good friend and I don't want to loose your friendship" He is the one who made each and every thing in the blogspot. I never think these words will create this much problem. For the sake of Allah, I can sacrifice anything. For example, I have been invited from cinema music director Vijay Antony and he had sent me musical notes and asked me to write a love song for his forthcoming film. But, I REFUSED TO DO SO.
Allaah Alone Knows my feelings.
நடுநிலை நின்று நோக்கும் சிறந்த சிந்தனை வளம் கொண்டுள்ளார் அகமது ஆரிஃப் அவர்கள். நெஞ்சுநெகிழ் பாராட்டுக்கள்.
அன்புடன் புகாரி
Post a Comment