Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அப்பா! பேரன் ஜாகிரு வந்திக்கிறான்..! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | February 18, 2012 | , , , , , ,


(அதிரை அப்பா, காலை ஸுபுஹு தொழுகைக்குப்பின் டீக்கடை வருவது வழக்கம்)

அப்பா: “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்”

டீக்கடைக்காரர்: “அலைக்குமுஸ்ஸலாம், வாங்கப்பா......”

(சிறிது நேரத்திற்குப் பின் பேரனும், அனுடைய நண்பனுடன் அங்கே வந்து டீ சொல்கிறான்)

டீக்கடைக்காரர்:  “அப்பா.. உங்க பேரன் ஜாகிரு வந்திக்கிறான்… !”

அப்பா: “அப்படியா, ஜாகிருசேண்டு சொல்லு. இல்லாட்டி கோவச்சிகிடுவான் உள்ளே கூப்புடு. கேக்கரதக்கொடு.”

அப்பா:  “வாங்க, என்ன இங்கிட்டாலே…”

பேரன்: “டியூசனுக்குப் போறோம் அப்படியே ‘டீ’ குடிச்சிட்டுப் போவலாமுன்னுதான்......”

அப்பா: “ரெண்டு இடியாப்பந்தின்ட்டு ‘டீ’ குடிச்சா என்னா....?”

பேரன்: “வேணாம்ப்பா... ‘டீ’ போதும்..!”

அப்பா: “சரி அதுயாரு ஆமாத்துமா மொவனா.....?”

பேரன்:  “இல்லை, பத்தரூட்டு சேகரு. சுபுஹு தொளுவிட்டு இவஞ் சைக்கிள்ளே போவோம்.”

அப்பா: “அப்ப சரி, நா ஜாவியா திக்ருக்குப் போயிட்டு கடைத்தெருக்கு வந்துர்றேன். ஒன்கூட்டாளிட்டே சொல்லி ஒன்ன அங்கே விட்டுட்டுப் போச்சொள்ளு. திக்ரு முடிஞ்சு நா வந்து நிக்கேன்.. நீ வந்துடு, சரியா...?”

பேரன்:  “சரிப்பா நா வர்றேன்”


(குறிப்பிட்ட நேரம் கழிந்ததும் இருவரும் மார்க்கெட்டில் சந்தித்துக் கொள்கிறார்கள்)

அப்பா:  “என்ன இன்னும் மீனு ஒன்னும் வரல. இல்லாட்டி எறச்சி ஏதும் பாக்கலாம் வா !”

(இறைச்சி கடையிக்கு இருவரும் வருகிறார்கள்.)

கடைக்காரர்: “ வாங்கப்பா, யாரு உங்கப்பேரனா.....?”

அப்பா: “ஆமா ! கிலோ எவ்வளவு.. ?”

கடைக்காரர்: “நானூருப்பா !”

அப்பா: “சுபஹானல்லாஹ்’.. தலையே சுத்துது...”

பேரன்: “என்னப்பா ? சுகர், ரெத்தக்கொதிப்பு அளவைச் சொல்லிட்டாரா...? தலசுத்துதுறீங்க விலயத்தான் சொன்னாருப்பா !”

அப்பா: “இல்லடாப்பா, முன்னே ‘75 ரூபாக்கி’ வித்துக்கிட்டு இரிக்கிம்போது, திடீரிண்டு ‘100 ரூபாண்டவுடன்’ ஹொத்வா முடிஞ்சு மரைக்கா கூட்டம்ல்லாம் கூட்டுனாஹ. அதான் ஞாபகம் வந்துச்சு. இப்ப வுவ்ளோ நெருப்பாக்கீது”

பேரன்: “நெருப்பெல்லாம் வராது, அதான் எல்லாருஞ் சட்டி நெறைய பக்கத்திலேய தண்ணி வச்சிக்கிராங்களே !”

அப்பா: “சரி வா இப்ப மீனு வந்திருக்கும் பாக்கலாம்...”

தொடர்ந்து…

அப்பா: “இந்தா இந்த கொடுவாக்கண்ணுக்கு எவ்ளவு...?”

மீன்காரி: “320 ருவா கொடுங்க !”

அப்பா: “சரி, அந்த வவ்வாலோட அந்த பண்ணாவையும் போட்டு சொல்லு”

மீன்காரி:  “430.. வரும்... 400… ருவா கொடுத்துடுங்க”

அப்பா:  “என்ன மொம்மாப்துல்லா, வெல கேட்டா 4oo ,500 ங்கிராளுவ... ?

மொம்மாப்துல்லா: “அவ கழுத்தில போட்டிக்கிறதுக்கு வெல சொல்லியிருப்பா, மறுபடியும் போய் மீனுக்கு எவ்ளோவுண்டு கேளுங்க.!”

அப்பா: “நா வந்து ஒன்னட்டே கேட்டேனே..., அங்கென்னா கூட்டம் கொரலி வித்தையா....நடக்குது. ஆட்களெல்லாம் சுத்தி நிக்கிறாங்க...!”

மொம்மப்துல்லா: “க்கே......க்கே..க்கே.. இல்ல கொடுவா வாங்கி கூறு போடுறாங்க நீங்களும் போய் சேந்துக்கிடுங்க போங்க”

அப்பா: தம்பி வா... நா வாங்கித்தறேன் வூட்டுல போய் கொஞ்சம் பொறிக்கச் சொல்லிட்டு மீதிய ஆனம ஆக்கா சொல்லிடு, லுஹருக்கு நேரமாச்சு நா போறேன் நீனும் வந்துடு”

(அப்பா,பேரனிடம் கொடுவாபிஸ்கு வாங்கி கொடுத்து விட்டு லுஹர் தொளுவ நடைய கட்டிட்டாங்க.)

-ZAEISA

15 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

அப்பா பேரன் ஜாகிர்சேனோடு ஜாவியா திக்ருயை முடித்ததிலேருந்து லுஹர் வஃத்து வரையுளும் மார்க்கெட்டிலா அப்போ ஜாஹிருக்கு பள்ளிக்கூடம் கட்டா?

// மொம்மாப்துல்லா: “அவ கழுத்தில போட்டிக்கிறதுக்கு வெல சொல்லியிருப்பா, மறுபடியும் போய் மீனுக்கு எவ்ளோவுண்டு கேளுங்க.!”//

மொம்மாப்துல்லா காக்காவினால் கலைக்கட்டும் தக்வா பள்ளி மீன்மார்க்கெட்

Muhammad abubacker ( LMS ) said...

//.அப்பா: “சரி அதுயாரு ஆமாத்துமா மொவனா.....?”//

அல்லாஹ் ஹிதாயத்தை கொடுக்க நாடிவிட்டால் ஆமாத்துமா மொவனாவும் மாறலாம்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சுபுஹுலேந்து டீ கடை ஜாவியா கடைத்தெரு கொடுவா எறச்சி என மொம்மாதுல்லா ஆமாத்துமா வரை வந்து லுகருக்கு பாங்கும் சொல்லி சாப்பாடும் கொடுவா ஆணத்தோடு களை கட்டும் அதிரையின் அரை நாள் வரலாறு நல்லாருக்கு!

KALAM SHAICK ABDUL KADER said...

//ா: “இல்லடாப்பா, முன்னே ‘75 ரூபாக்கி’ வித்துக்கிட்டு இரிக்கிம்போது, திடீரிண்டு ‘100 ரூபாண்டவுடன்’ ஹொத்வா முடிஞ்சு மரைக்கா கூட்டம்ல்லாம் கூட்டுனாஹ. அதான் ஞாபகம் வந்துச்சு. இப்ப வுவ்ளோ நெருப்பாக்கீது”//

உள்ளத்தைச் சுட்டது
உணர்வைத் தட்டியது

இஃதே போல், தற்பொழுதுள்ள பேரூராட்சித் தலைவர் மற்றும் அதிரை அனைத்து முஹல்லா கூடி ஆலோசனை செய்து விலைக்கட்டுப்பாடு செய்யலாம்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

30 வயதை தாண்டிய எல்லோருக்கு ஏற்பட்ட அனுபவம் இந்த உரையாடல்.

அன்றுள்ள அப்பாக்களை போல் போல் இன்றுள்ள அப்பாக்கள் மீன் மார்க்கெட்டிற்கு சொல்கிறார்களா என்பதை அப்துல் ஜப்பார் காக்கா தான் சொல்லனும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

என்னையும் தான் அப்பா கடைத் தெருவுக்கு கூடிகிட்டு போவாஹ, ஆனாலும் வானாண்டா வாப்பா இங்கே இரு என்று மொம்மானிபாக்கா கடையிலையோ அல்லது ராஜாக்காக்கா காற்கறி கடையிலையோ உட்கார வச்சுட்டுதான் அங்க மீன் வாங்க போவங்க...

பரீட்சைக்கு படிக்கிறதுக்கு லீவு விட்டிருப்பாங்க அதான் பேரனும் ஸ்ட்ரெய்ட்டா டியூசனுலேருந்து மீன்மார்க்கெட்டுக்கு போயிருக்காரு !

அப்பா கடைத்தெருவுக்கு மட்டும்தான் போவாங்களா ? வேற எங்கெல்லாம்னு அடுத்தடுத்து சொன்னா நாமு அசைபோடலாமே ! :)

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// பரீட்சைக்கு படிக்கிறதுக்கு லீவு விட்டிருப்பாங்க அதான் பேரனும் ஸ்ட்ரெய்ட்டா டியூசனுலேருந்து மீன்மார்க்கெட்டுக்கு போயிருக்காரு !//

படிப்புக்கான லீவை பயன்படுத்தி மீன் வாங்குவதற்கு நல்ல பாடமும் கூடவா?
நல்ல அப்பாத்தான்.அதற்காக எங்க அப்பாவை குறை சொல்ல மாட்டேன். பள்ளி விடுமுறையில் எங்களை ஜாவியாளுக்கு அழைத்து சென்று நல்லொழுக்கங்களை கற்று தருவார்கள்.

Anonymous said...

//அப்பா: “ஆமா ! கிலோ எவ்வளவு.. ?”

கடைக்காரர்: “நானூருப்பா !”//

மற்ற உணவுப்பொருள்களின் விலை ஏற்றத்தின் சதவீதத்தைவிட ஆட்டிறைச்சியின் விலையேற்றம் குறுகிய காலத்தில் மிக மிக அதிகம்.
தினமும் ஏறிக்கொண்டே போகிறது. ஆனால் என்ன விலை ஏறினாலும் நாம் வாங்குவதை நிறுத்துவதும் இல்லை குறைப்பதும் இல்லை.

எனக்கு ஒரு சந்தேகம். வெள்ளிக்கிழமைகளில் அவசியம் நாம் ஆட்டு இறைச்சிக்கறி ஆக்கி சாப்பிடத்தான் வேண்டும் என்று எதுவும் சட்டம் இருக்கிறதா?

அன்று பார்த்து ஆட்டிறைச்சி கடைகளில் கூட்டம்- டோக்கன் வரை வழங்கப்படுகிறது. (காட்டுப்பள்ளியில்)மருத்துவரீதியாக ஆட்டுக்கறி நலக்கேடு செய்யும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஊரில் வரலாறு காணாத அளவு புதுப்புது வியாதிகள்.

அன்று ஹொத்வா பள்ளியில் கூடியதுபோல் அன்பர் கவி அப்துல் கலாம் அவர்கள் கூறுவதுபோல் ஊர்கூடி இதில் ஒரு முடிவு எடுக்க முடியாதா?
தேவைகளை குறைத்துவிட்டால் விலை தானாக குறைய வாய்ப்புண்டு. குறைந்தபட்சம் இனி ஊரில் வெள்ளிக்கிழமைகளில் யாரும் ஆட்டுக்கறி வாங்கக்கூடாது அனைத்து முஹல்லா அமைப்பின் மூலம் அறிவிப்புத்தர இயலுமா என்று பரிசீலிக்க வேண்டும். எதிர்வரும் கீழத்தெரு முஹல்லாஹ் கூட்டத்தில் இதை முன்னெடுக்க பரிசீலிக்கலாம்.

அத்துடன் திருமண விருந்துகளை ஒழிக்கும் கருத்தாடல்களையும் , விருந்துகளில் ஆட்டுக்கறியை அறவே அகற்ற அல்லது குறைக்க யோசித்தால் என்ன?

குறைந்தபட்சம் மாமனார் வீட்டோடு இருக்கும் மாப்பிள்ளைமார்களுக்கு- தடையை ஆட்டுக்கறியில் இருந்து ஆரம்பிக்கலாமே.

ஆட்டுக்கறி பிரியர்கள் அடிக்க வந்துவிடாதீர்கள்.

-இபுராகிம் அன்சாரி.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// தேவைகளை குறைத்துவிட்டால் விலை தானாக குறைய வாய்ப்புண்டு. குறைந்தபட்சம் இனி ஊரில் வெள்ளிக்கிழமைகளில் யாரும் ஆட்டுக்கறி வாங்கக்கூடாது அனைத்து முஹல்லா அமைப்பின் மூலம் அறிவிப்புத்தர இயலுமா என்று பரிசீலிக்க வேண்டும். எதிர்வரும் கீழத்தெரு முஹல்லாஹ் கூட்டத்தில் இதை முன்னெடுக்க பரிசீலிக்கலாம். //

ஆட்டுக்கறி மட்டுமில்லை பறவைவகைகள் வந்தாலும்.ஒருவர் விலை பேசிக்கொண்டு இருக்கும்போது.மற்றவன் அதை தாம் அடைந்தே தீர வேண்டும் என்ற வெறித்தனத்தில் அந்த வியாபாரிக்கு கண்ணால் சைக்கினை
செய்து.வேறு இடத்துக்கு வரச்சொல்லி அதிக விலை கொடுத்து வாங்கி செல்வதை நம் ஊரில் பரவலாக பார்க்கின்றோம்.அப்படிப்பட்ட ஜென்மங்கள் திருந்தாதவரை எத்தை சட்டம் போட்டாலும் விலை குறைக்க முயச்சிப்பது கடினமே.

//அத்துடன் திருமண விருந்துகளை ஒழிக்கும் கருத்தாடல்களையும் , விருந்துகளில் ஆட்டுக்கறியை அறவே அகற்ற அல்லது குறைக்க யோசித்தால் என்ன?//

சமீபத்தில் cmp. லைனில் ஒரு திருமணத்தில் வலிமா விருந்தில் கோழிக்கறி தான் கொடுத்தார்கள்.அந்த கோழியை கூட நிறைய பேர் திங்காமல் அப்படியே வைத்து விட்டு போனார்களாம்.ஏன் என்று கேட்டதற்கு கோழி திங்காதவர்கள்
நிறையபேர் இருக்கிறார்களாம்.

அதே கோழியை பொரிச்சு வைத்தால் முல்லுகூட மிஞ்சாமல் பொய் இருக்கும் ..

சேக்கனா M. நிஜாம் said...

சகோ. ZAEISA அவர்களே,

அப்பாக் கால “உமல்” பையை சொல்ல மறந்திட்டியலே

sabeer.abushahruk said...

சகோ ஜப்பார்,

எப்ப ஊருக்கு போறியன்னு சொல்லுங்களேன் ப்ளீஸ். நானும் வரேன். உங்களை மாதிரி நகைச்சுவை உணர்வு உள்ள ஆட்களைப் பேசவிட்டு மணிக்கணக்கில வாயைப் பார்த்திருக்கிற கேஸு நானு.

இப்படித்தான் நான், அல்நூர் முஹமதலியெல்லாம் கூட்டமா மீன் மார்க்கெட் போய் பெரிய மீன் ஒன்ன வாங்கி வெட்டக்கொடுத்தோம். 

வெட்டப்போகிற சமயத்தில் முஹமதலிக்கு ஃபோன் வர, அதில் அவர் பேசி முடிப்பதற்குள் பாதி மீனுக்கு மேல துண்டு போடப்பட்டுவிட்டது. அலிக்கும் மீன் வெட்டுபவருக்கும் நடந்த சம்பாஷனையில் நான் விழுந்த்து விழுந்து சிரித்தேன்.

"மீன வெட்ட எவ்வளவு வேணு?"

"இருவது ரூவா காக்கா"

"இருவதுல்லாம் தரமுடியாது. பத்து ரூவாதான் தருவேன்"

"கட்டாது காக்கா"

"அப்ப ஏன் வெட்டுனே? வெட்டினதையெல்லாம் ஒட்டவச்சு தந்துடு"

"ஙே"

KALAM SHAICK ABDUL KADER said...

எனது ஆலோசனையினை முன்னெடுத்து வைத்த பொருளாதார வல்லுநர் இப்ராஹீம் அன்சாரி காக்கா அவர்கட்கு "ஜாக்கல்லாஹ் கைரன்"

விழிப்புணர்வு வித்தகர் சேககனா நிஜாம் அவர்கள் சொன்ன "உமல்" பை மட்டுமல்ல, புது மாப்பிள்ளை "புலால் விடுதல்" மீன் வாங்குவதில்லேயே ; அதற்கும் விவரம் அறிய அவா

அப்துல்மாலிக் said...

//மொம்மாப்துல்லா: “அவ கழுத்தில போட்டிக்கிறதுக்கு வெல சொல்லியிருப்பா, !”//

நம்மூருக்கேயுரிய நக்கல் நையாண்டி டைமிங்க் ஜோக்கு... :))

ZAKIR HUSSAIN said...

முஹம்மது அப்துல்லாஹ் காக்காவின் நகைச்சுவை எப்போதும் மறக்க முடியாத ஒன்று. எப்போது ஊருக்கு போனாலும் அன்புடன் உபசரிப்பவர். நன்றி மறக்காத மனிதர். 1978 ம் வருடம் என நினைக்கிறேன். அவருக்கு ஸ்கூல் ஸ்டோர் மேல் மாடியில் நாங்கள் ட்யூசன் படிக்கும்போது [ SKMH சாரிடம்] தனக்கு அந்த ரூம் வாடகைக்கு வேண்டும் பகலில் மட்டும் என கேட்டுவந்த போது நான் சாரிடம் சொல்லி அனுமதி பெற்றுக்கொடுத்தேன்...அதிலிருந்து என் மீது அவர் மிக அன்புடன் நடந்து கொள்வதுடன், என்னையும் சேர்த்து கிண்டலடிப்பார்.

Thanx for reminding our people in this article ..ZAEISA

Yasir said...

சகோ.ZAEISA..நக்கலான, நாசுக்கான,நச்சென்று அழகான அப்பா-பேரன் கலந்துரையாடலை எழுதி இருக்கின்றீர்கள்..ரொம்ம நாளைக்கு அப்புறம் ரசித்து சிரித்து படித்த பதிவு இது...வாழ்துக்கள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு