வாலிப மகனுக்கு
வாழ்க்கைத் துணை வேண்டும்
அன்பாய் அரவனைக்க
அழகிய மனை வேண்டும்
சீர் சனத்தி ஒன்றும் வேண்டாம்
சீர் கல்வி மட்டும் போதும்
பொண் நகை ஏதும் வேண்டாம்
புன்னகை ஒன்றே போதும்
தேவை யறிந்து
சேவை செய்யவும்
துவளும் போது
துணை நிற்கவும்
இல்லம் சிறக்க
இன்பம் பெருக்க
வம்சம் செழிக்க
வாரிசு கொடுக்கவும்
முதுமை யடைந்து
மூச்சிரைக்கையில்
தன்னை சுமந்த
தாய் மடி கேட்கையில்
அன்போ டரவனைக்க
பன்போ டுபசரிக்க...
நிச்சமாக
நம் வீட்டுக் கதவும்
தட்டப்படும்!
இனி
முதிர் கன்னிகளுக்கு
முற்றுப்புள்ளி..
பெருமூச்சு விட்டாள்
பெண் ணொருத்தி!
துள்ளி எழுந்தவள்
தூக்கம் களைய
ஏக்கம் மட்டுமே
எஞ்சி நின்றது
அவள்
ஆசையின் அஸ்தமத்தில்
விடிந்த பொழுதில்...
வெந்த புண்ணில்
வேல் பாய்ச்ச
சொந்த பந்தம்
வந்து சென்றது!
உதவிக் கில்லாவிடினும்
உபத்திரத்திற் குண்டு
உறவுகள்!
உள்ளம் கனத் தவள்
உதடுகள் உரைத்தன
ஊமையாய்...
தங்கத்துக்கும் வெள்ளிக்கும்
தகுதியில்லே - வெள்ளி
தலையினிலே முளைக்குது
கவலையிலே - சொல்லி
அழக்கூட தரனியிலே
நாதியில்லே - எள்ளி
நகையாட மட்டுமிங்கே
பஞ்சமில்லே
யூகங்கள் பல பேசி
உள்ளுக்குள் மகிழ்ச்சி கொள்வர்
ஊனத்தில் அம்பேற்றி
உயிருக்குக் கொல்லி வைப்பர்
உண்ண உணவின்றி
பசியோடு இருக்கயிலே
பந்தி வைத்து பரிமாறி
உண்டகதை சொல்லி வைப்பர்
உற்றார் உறவினர்
சுற்றமும் நட்பும் எல்லாம்
சூனியமே!
இல்லாதோருக்கு
இறைவனே துனை!
-அபுஈசா
25 Responses So Far:
//ஊனத்தில் அம்பேற்றி
உயிருக்குக் கொல்லி வைப்பர்//
இது போன்ற வார்த்தைகள் நல்ல தமிழ் ஆளுமை உள்ளவர்களின் வரிகள்...
ஏன் நீங்கள் அடிக்கடி எழுதுவதில்லை??
//தங்கத்துக்கும் வெள்ளிக்கும்
தகுதியில்லே - வெள்ளி
தலையினிலே முளைக்குது
கவலையிலே -//
அத்தனையும் அதிக பொருள் தரும் கவித்துவ சிந்தனை வரிகள்!
அபு ஈசா காக்காவின் நச்சென்ற வரிகள்.
// உற்றார் உறவினர்
சுற்றமும் நட்பும் எல்லாம்
சூனியமே! //
பொன் எழுத்துக்களால் பதியப்பட்டு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தொங்க விடவேண்டும் .
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோதரர்கள் Zakir Hussain / ஜஹபர் சாதிக்
தாங்களின் ஆர்வமூட்டும் கருத்துகளுக்கு நன்றி!
இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து எழுதுகிறேன்
அன்புடன்
அபு ஈசா
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோ. அபூ ஈசா,
நல்ல சிந்தனை கவிதை.
//வெந்த புண்ணில்
வேல் பாய்ச்ச
சொந்த பந்தம்
வந்து சென்றது!
உதவிக் கில்லாவிடினும்
உபத்திரத்திற் குண்டு
உறவுகள்!//
ஒட்டுமொத்த சொந்தமும் இப்படி இல்லை, இதில் சிலர் விதிவிலக்கு. நீங்கள் சொல்லுவது போல் பலர் குறிப்பாக பெண் திருமண விசயத்தில் போலி சொந்தங்களாகவே உள்ளார்கள் என்பதை எல்லோரும் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். திருந்தனும் பிறகு திருத்தனும்.
கவிதையில் “கரு” அதனை வார்த்தைகளால் கையாண்ட விதம்...அருமை சகோ.அபு ஈசா...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தாங்களின் கருத்துக்கு நன்றி அபு பக்கர்
இரத்த பந்தங்கள் பற்றிய விசாரனை நாளை மறுமையில் அல்லாஹ்-விடத்தில் உண்டும். இருந்தும் பெரும்பாலும் அதை மறந்தவர்களாகவே நாம் வாழ்ந்து கொன்டிருக்கிறோம்.
பணமி ருந்தால் உறகள் ஒட்டுவதும், இல்லையேல் வெட்டி வாழ்வதும் வேதனையே!
எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை சத்தியத்தில் நிலைப்படுதுவானாக!
அன்புடன்
அபு ஈசா
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோ. அபு ஈசாவுக்கு, இது போல் நாம் எவ்வளவோ உணர்ச்சி பூர்வமாகவும், (அதிரையில் பிறந்த பாவத்திற்காக) அனுபவப்பூர்வமாகவும் எழுதி விட்டோம், இன்னும் எழுதிக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் எல்லாம் இறுதியில் 'பெருங்கடலில் கரைக்கப்பட்ட பெருங்காயம் போல்' ஆகிவிடுகிறது. படிக்கும் பத்து பேர் தங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்வதுடன் நின்று விடுகிறது.
பெரும்பாலும் எல்லாக்காதுகளும் செவிடாகி விட்டது போல் ஓர் உணர்வு. இனி வெடி வெடித்தாலும், பெரும் சப்தம் தரும் வேட்டு வைத்தாலும் செல்ல வேண்டிய காதுகளுக்கு செல்வதாக தெரியவில்லை. மலக்கல் மவுத் வரும் வரை மர மண்டைக்குள் புகுவதாக தெரியவில்லை.
"நல்லாயிருப்பிய!!! தயவு செஞ்சி யாரும் பெண் வீட்டுலெ எதையும் (நகை, பணம், வீடு....) கேட்டு வாங்காதியெ!! கப்ருக்குள்ளே பெரிய அதாப்களையும், சொல்லாத்துயரங்களையும் சந்திச்சிக்கிட்டு இருக்கிறோம். நீங்கள் எல்லாம் இங்கு வந்தால் தாங்க மாட்டியெ!!! தயவு செய்து வேணாம்....கண்டிப்பாக சொல்கிறேன்....என் கோலத்தை பார்த்தாவது நம்புங்கள்" என்று யாராவது கப்ரிலிருந்து எழுந்து வந்து சொன்னால் தான் நம்புவார்கள் போலும்.....
தன் நுரையீரலில் உயிர்க்கொல்லி புற்றுநோயை பரவவிட்டு வைத்துக்கொண்டு நல்ல கண் பார்வைக்கு சத்தான காய்கறிகளையும், பழவர்க்கங்களையும் புசித்து வருவது போல் தான் இருக்கிறது ஊரில் நம்மவர்களின் சங்கதி.
'பொம்புளப்புள்ள பொறந்தா பரக்கத்து' என்று யாரோ ஒரு தப்பான பிரச்சாரத்தை நமதூரில் தொடங்கி வைத்து விட்டு சென்று விட்டார்கள். இது நம்மூருக்கல்ல, மஹர் கொடுத்து மணம் முடித்து மணமகன் தன் வீட்டோடு அழைத்து செல்லும் மணப்பெண்ணுக்கு பிறக்கும் பெண் குழந்தைக்குத்தான் பொருந்தும்.
'நமதூரில் பொம்புளப்புள்ள பொறந்தா' தகப்பன் அதைக்கண்டு/கேட்டு வீடு கட்டணுமே? அதற்கு நகை நட்டு சேர்க்கணுமே? என்ற ஏக்கத்தில் அசந்து அப்படியே உட்கார்ந்து விடாமல் இருக்கச்செய்ய ஒரு ஆறுதல் வார்த்தையாக யாரோ ஆரம்பித்து வைத்திருக்கலாமோ? என்னவோ?
ஒரு காலத்துல அஞ்சி பொம்புளப்புள்ளையலுவோ பொறந்தா கூட அல்லாஹ் அவைகளை எப்படியோ கரை சேர்த்தான். ஆனால் இன்று ஒரு பொம்புளப்புள்ள பொறந்துட்டா கூட தாய், தந்தையை முகம் சுழித்து அசர வைத்து விடுகிறது (நமதூரில் தொன்றுதொட்டு பின்பற்றி வரும் பாழாய்ப்போன பழக்க வழக்கங்களால்) என்னவோ நமதூரில் பரவலாக காணப்படும் உண்மை.
அன்புள்ள சகோதரர் அபூ ஈசா அவர்கள்
அருமையான கவிதை. கருப்பொருள் கண்ணீரை வரவழைக்ககூடியது. உங்களின் வார்த்தை வரிகளால் கருவுக்கு உரமிட்டுள்ளீர்கள்.
வாழ்த்துக்களுக்கும் பாராட்டுதலுக்கும் உரிய பதிவு.
இபுராஹீம் அன்சாரி
அஸ்ஸலாமு அலைக்கும்
அருமையான கவிதை வாழ்த்துக்கள்
//வெந்த புண்ணில்
வேல் பாய்ச்ச
சொந்த பந்தம்
வந்து சென்றது!
உதவிக் கில்லாவிடினும்
உபத்திரத்திற் குண்டு
உறவுகள்!//
சொந்தபந்தங்கள் வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவிட்டு அதற்கு பகரமாக பாவத்தைச் சுமந்து செல்வதை அவர்கள் அறிவதில்லை இறைவன் காப்பாற்ற வேண்டும்
வஅலைக்குமுஸ்ஸலாம்
சகோ. தாஜுதீன்
நிச்சமாக வெகு சிலரே உறவுகளை அனுசறித்து வாழ்கின்றனர்.
வசதியான வீட்டில் பெண் ணெடுக்கும் போது மட்டும் எப்படித்தான் கண்டுபிடிக்கிறர்களோ உறவு முறையை அப்படி இப்படின்னு சுற்றி வளைத்து சொல்லி முடிப்பர் உறவு முறையை. ஆனால் அங்கே நேரடி உறவு நித்திரை யிழந்திருக்கும்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்புச் சகோதரர்கள் யாசிர் மற்றும் இபுறாஹீம் அன்சாரி அவர்களுக்கு
தாங்கள் கருத்துக்கு நன்றி!
இதன் மூலம் ஒருவரின் உள்ளம் உருகினாலும் வெற்றியே!
வஅலைக்கு முஸ்ஸலாம் வரஹ்...
சகோ.MSM Naina Mohamed,
"இறை நம்பிக்கையாளர்களே அல்லாஹ்வின் அருளில் நீங்கள் நிராசை யடைந்து விடாதீர்கள்" என்பது இறைவாக்கு
"எறும் பூர கல்லும் தேயும்" என்பது பழ மொழி!
நம்மால் ஆன முயற்சிகளை மேற்கொள்வோம்! முடிவை அல்லாஹ்-விடத்தில் விட்டுவிடுவோம்!
முன் பொரு பதிவில் சகோ.கலாம் அவர்கள் மேற்கோல் காட்டியதைப்போல் நம் முயற்சி ஒருவரின் உள்ளத்தை உலுக்கினாலும் வெற்றியே!
என்று மாப்பிள்ளை கேட்டுப் போகின்ற நிலை மாறி பெண் கேட்டுப்பொகின்ற நிலை வருகிறதோ அன்று இது போன்ற கவிதைகளுக்கு இறைவன் நாடினால் தேவை இருக்காது.
ஆணாயினும், பெண்ணாயினும் குழந்தை என்பதே அல்லாஹ்வின் மிகப் பெரும் அருட்கொடைதான்! ஆனால் நாம் தான் யா அல்லாஹ் நீ எங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளில் பரக்கத் செய்வாயாக! என்று பிராத்திக்க மறந்துவிடுகிறோம்
எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன்!
சிந்தனையைத் தூண்டும் ஆக்கம் தந்து கொண்டிருந்த அபுஈசாவை கவிஞராகவும் இங்கே களம் இறக்கியாச்சு... தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்...
//உற்றார் உறவினர்
சுற்றமும் நட்பும் எல்லாம்
சூனியமே!
இல்லாதோருக்கு
இறைவனே துனை!//
மெய்(யே) !
எம்.எஸ்.எம்.நெய்னா சொன்னது:
// நமதூரில் பொம்புளப்புள்ள பொறந்தா' தகப்பன் அதைக்கண்டு/கேட்டு வீடு கட்டணுமே? அதற்கு நகை நட்டு சேர்க்கணுமே? என்ற ஏக்கத்தில் அசந்து அப்படியே உட்கார்ந்து விடாமல் இருக்கச்செய்ய ஒரு ஆறுதல் வார்த்தையாக யாரோ ஆரம்பித்து வைத்திருக்கலாமோ? என்னவோ?//
உண்மைதான் அதுவும் பொம்பளைவோதான் ஆரம்பித்து இருப்பார்கள்.
"அந்தக்காலத்துலேர்ந்து இந்தக்காலம் வரை நம்மூர்லெ ஆலிம்சா மார்வொலே கலியாணத்துக்கப்புறம் பொண்டாட்டி ஊட்லெ தான் இருக்கிறாஹெ" என்ற ஒரு மோசமான உதாரணத்தை முன் மொழிந்து கலியாண சமயத்தில் தன் அநியாய, அட்டூழியங்களை ஊர் பெரிசுகள் (இதில் ஆண், பெண் அடங்குவர்) இன்னும் அரங்கேற்றி வருவது என்னவோ உண்மை தான்.
இவர்களெல்லாம் (அது என் வீட்டினர்/குடும்பத்தினர்களாக இருந்தாலும் சரி) கப்ரில் என்னா 'அலங்கமலங்க'ப்படப்போறாங்களோ? அந்த அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.
இந்த அநியாய அட்டூழியங்கள் தொடருமேயானால் பெண் பிள்ளைகள் கர்ப்ப காலத்தில் வயிற்றில் வளரும் பொழுதோ அல்லது பிரசவத்தில் வெளியேறிய பொழுதோ அவர்களை ஈன்றெடுத்தவர்களே யாருமறியா வண்ணம் கொன்று விட நேரிடலாம். அறியாமைக்காலத்திற்கே திருப்பப்பட்டு விடலாம்.
தெருவில் ஒரு வீட்டில் பெண் வீட்டினரிடமிருந்து வரதட்சிணை வாங்கி அதை அப்படியே மணமகனின் தந்தைக்கு 'பைப்பாஸ்' ஹார்ட் ஆப்பரேசனுக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கொண்டு போய் கொடுத்தார்கள். அதற்குப்பின் அந்த குடும்பத்தில் பல சூறாவளிகள் வீசியும் இன்னும் திருந்துவதாக தெரியவில்லை. ஆனால் இன்றும் முன் சஃபில் நின்று இமாம் ஜமாத்துடன் தொழுது கொண்டு தான் இருக்கிறார்கள். இது போன்ற ஜென்மங்களை என்னவென்று சொல்வது? யார் வந்து திருத்துவது?
சாட்டையடி அபு ஈஸா,
அடிமேல் அடி அடிப்போம் நிச்சயம் ஒரு நாள் கண்ணீர் உதிர்வது நிற்கும்.
வாழ்த்துகள்.
அன்புச் சகோதரர் அபூ ஈஸா அவர்கட்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.
கருகிவிட்ட முதிர் கன்னிகளின்
பெருகிவிட்டக் கண்ணீரையே
கருவாக்கிக் கோபத் தீயில்
உருக்கி எடுத்த உணர்வின்
கவிதாபரணம் படைத்து
புவியோர் படித்துத்
திருந்திட வைத்தீர்
வருந்திட வைத்தீர்
இந்தக் கருவினை வைத்து “வயசு வந்து போச்சு” என்ற தலைப்பில் யான் வனைந்து வாசித்த எனது கவியரங்கக் கவிதையினைச் சென்ற வியாழன் இரவு தமிழன் தொலைக்காட்சியில் ஒலிபரப்பினார்கள். அதனைப் பதிவு செய்த சங்கமம் தொலைக்காட்சியினரிடம் எனது தொடர்பு இலக்கத்தைக் கேட்டும்; அதுவேபோல், எஃப் எம் 89.5 யில் சென்ற மாதம் வெள்ளிக் கிழமை பகல் ஒலிபரப்பான அதே “வயசு வந்து போச்சு” கவிதையினைக் கேட்டும் என்னுடன் தொடர்பு கொண்டு வரதக்ஷணை வாங்குவதில்லை என்று முடிவு செய்து விட்டதாக என்னிடம் உறுதியளித்த இளைஞர்களின் “மனமாற்றம்” ஒன்றே போதும், “கவிதைகளின் தாக்கம்” எவ்வளவு ஆழமானது; அற்புதமானது என்பதை “இக்லாஸ்” எனும் உளத்தூய்மையுடன் உணர்வோமாக. அதைவிடுத்து,
அர ண்டுபோய்
அல றுவதை
எல்லாம் பொருட்படுத்தாமல் கவிதை யாத்து; சமுதாயம் காத்து வாழ்க! அல்லாஹ்வின் அருள் சூழ்க!
பொம்புள்ள புள்ள பொறந்தா பரக்கத்துதான்.வெறும் ஆம்புள்ளப் புள்ள பெத்த பெருமக்கள் தாங்கள் சாகும் தறுவாயில் ரொம்பவும் அவதிதான் படுகிறார்கள்.
தன்குடும்பத்திலேயே கண்ணியமாக,அழகனாதாககுமர் இருந்தும் பணம் பகட்டுக்காக வெளியில் தன்மகனை விற்று விடுகிறார்கள்.
சாகிற தருவாயில கூட மகளைப் போல உதவுவதும் இந்த ஏழைப்பெண்தான் ஆம்புளபுள்ள பெத்தவங்க இந்த ஏழ கொமருக்கு உதவிஇருந்தாகூட தன்மகன்களில் பொடுபோக்காக இருக்கும் ஒரு டோள்டக்டி மாப்பிள்ளையாகத்தான் இருக்கும்.
அபு ஈசா சகோதரே, உணர்ச்சி வசப்பட்டு விழுந்த வார்த்தைக்கோர்வை ஒவ்வொன்றும் ஒரு தனிக்கதை சொல்லும், வாழ்த்துக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோதரர் ஜாகிர் ஹுசைன், சகோதரர் அப்துல் மாலிக், சகோதரர் ZAEISA சகோதரர் கவியன்பன், எடிட்டராக்கா, கவிக்காக்கா இன்னும் படித்த, கருத்துமிட்ட அனைவருக்கும் நன்றி.
வெறுமனே எழுதினோம், படித்தோம், கருத்துமிட்டோம், இத்தோடு நம் கடமை முடிந்துவிட்டது என்று இருந்துவிடாமல் சமூகத்தில் புற்று நோயாய் படர்ந்திருக்கும் சீர்கேடுகளை, சடங்கு சம்பிரதாயங்களை துடை தெறிந்து ஆரோக்கியமான சமூகம் அமைய நம்மால் இயன்ற கரியங்களை தொடர்ந்து நாம் செய்து கொன்டிருக்க வேண்டும்.
சொல்லும், செயலும் ஒன்றாய் அதுவும் என்றும் நன்றாய் அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் போதுமானவன்.
மஅஸ்ஸலாம்
அன்புடன்
அபு ஈசா
Dear Abu Isa,
Assalaamu alaikkum,
I have withdrawn my funny words which may hurt the heart of a MUSLIM brother.
அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
அன்புச் சகோதரர் கலாம் காதிர்
//I have withdrawn my funny words which may hurt the heart of a MUSLIM brother//
உங்களின் இச்செயலால் உயர்ந்துவிட்டீர்கள்!
எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மைப் பொறுந்திக்கொள்வானாக!
ஈருலகிலும் நம்மை உயர்த்தி வைப்பானாக!
ம அஸ்ஸலாம்
அபு ஈசா
Post a Comment