Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இசை - ஓர் இஸ்லாமியப் பார்வை ! 208

அதிரைநிருபர் பதிப்பகம் | July 01, 2012 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும்,

அதிரைநிருபர் தளத்தில், ‘அதிரையில் சுழற்றியடித்த காற்றும் இசை இரைச்சலும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானதும், இதன் தொடர்ச்சியாக வந்த பின்னூட்டங்களில், இஸ்லாத்தில் இசை கூடும் என்று அன்பு சகோதரர் ஒருவரால் ஒரு சில வாதங்கள் எடுத்துவைக்கப்பட்டன.  இருப்பினும், அறிவைத் தேடும் முயற்சியில், இசை வெறுக்கப்பட வேண்டியதா? என்ற கேள்வியுடன் மீண்டும் ஒரு முறை என்னுடைய முயற்சியை ஆரம்பித்தேன். கடந்த ஓரு மாதமாக எனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படியில், முடிந்தவரை திருக்குர்ஆன் மற்றும் நபிகளாரின் பொன்மொழிகள், மற்றும் குர்ஆன் சுன்னாவைப் போதிக்கும் மார்க்க அறிஞர்களின் தொகுப்புகளை ஆய்வு செய்து, இந்தக் கட்டுரையை எழுதியுள்ளேன். மனிதன் என்ற முறையில் இந்தப் பதிவில் தவறு இருப்பின், அதற்குப் பொறுப்பு நானே. இந்த ஆய்வு சரியாக இருந்தால், அதற்குப் போதுமானவன் அல்லாஹ் ஒருவனே.

இக்கட்டுரை, திருகுர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையிலும், குர்ஆன் சுன்னாவை 1400 ஆண்டுகள் முதல் இன்று வரை எடுத்துரைக்கும் பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் விளக்கங்களின் அடைப்படையிலும் தொகுப்பட்டது என்பதை இதை வாசிக்கும் அன்பு நேசங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். குர்ஆன் மற்றும் ஆதரப் பூர்வமான ஹதீஸ்கள் அல்லாமல் சொந்தக் கருத்தாக ஒரு பெரியார் சொன்னார், ஒரு அறிஞர் சொன்னார், அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று எடுத்துவைக்கும் எந்த வாதமும் இஸ்லாமிய சட்டமாகாது என்பதையும் இங்கு நினைவூட்டுகிறேன்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் எதைப் பேசினாலும், அது அவர்களின் சொந்த கருத்தன்று; அவர்கள் ‘வஹி’யின் அடிப்படையிலே பேசுகிறார்கள் என்ற நம்பிக்கை நம்மில் மீண்டும் வரவேண்டும் என்பதை ஞாபகமூட்டும் விதமாகப் பின்வரும் குர்ஆன் வசனங்களைத் தொகுத்தளிக்கிறேன் .

53:1. விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!
53:2. உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை; அவர் தவறான வழியில் செல்லவுமில்லை.
53:3. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.
53:4. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.
திருக்குர் ஆன் ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்)

சரி, தலைப்பு வருகிறேன்.  மனிதப் படைப்பில் அல்லாஹ் கொடுத்த மிகப்பெரிய அருள்களுள் ஒன்று, குரல்.  மனிதக் குரலில் இருந்து எழும் ஓசையாக இருந்தாலும், வேறு எந்தச் சாதனத்தின் மூலம் எழுப்படும் ஓசையாக இருந்தாலும், அது மனிதர்களிடம்  முக்கிய இடம் பிடித்துள்ளது என்பது நம் எல்லோராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை. 

“அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்” என்று குர்ஆன் வசனத்தை சாதாரணமாக வாசிப்பதற்கும், அதனை ஒரு ‘கிராஅத்’ வடிவில் வாசிப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. இதுபோல், அமைதியாக எழும் ஊக்கத்தைவிட, உயர்ந்த குரலில் பேசும் தாக்கம் அதிகம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. மேலும் அமைதியாகப் பேசும்போது, கேட்பவருக்கு இரக்கம் ஏற்படும்; குரலை உயர்த்திப் பேசும்போது, அதனைக் கேட்பவருக்கு பயம் அல்லது கோபம் ஏற்படும். அமைதியாகப் பேசுவதை இஸ்லாம் அனுமதிக்கிறது.  மாறாக, தடித்த குரலில் பேசுவதை இஸ்லாம் தடை செய்கிறது. இன்னும் தகவலுக்காகச் சொல்லுவதென்றால், பெண்கள் பொதுவில் சாதாரணமாகப் பேசுவதற்கு இஸ்லாம் அனுமதித்திருந்தாலும், குழைந்து குழைந்து பேசுவதைத் தடை செய்துள்ளது. இரண்டும் ஓசைகள்தான். ஆனால் இவ்விரண்டிற்கும் உள்ள தாக்கம் ஏராளம். இப்படி ஓசைகள் தொடர்பாக இஸ்லாம் அக்கு வேறாக ஆணி வேறாகப் பிரித்துச் சட்டம் சொல்லியுள்ளது. இது போல், உள்ளங்களில் எவை எல்லாம் தாக்கம் ஏற்படுத்தும் என்பதை (நல்லவை அல்லது தீயவை) இஸ்லாம் விரிவாக வகுத்தும் பிரித்தும் சொல்லியிருக்கிறது. இப்படி மனித ஓசை, மற்ற சாதனங்களின் ஓசைகளை நாம் எப்படிப் பயன்படுத்தக் கூடாது, அல்லது பயன்படுத்த வேண்டும் என்பதை இனிப் பார்ப்போம்.

மனிதனின் குரல் வளத்தின் பரிணாமம்தான் பாடல். மனிதக் குரலின் மூலம் நூற்றுக் கணக்கானவை ஓசையின் வாயிலாக வெளிப்படுவதைப் போல் ஒரு வெளிப்பாடுதான் பாடல் என்றும் சொல்லலாம். இருப்பினும், பாடல் என்றால், 99 சதவீதம் இசைக் கருவிகளின் தாக்கமில்லாமல் இல்லை. அப்படி இசைக் கருவிகளின் தாக்கமில்லாத பாடல்கள் வந்தாலும், ரசனை என்ற அடிப்படையில், அப்பாடல் படிப்பவனையும் கேட்பவனையும் கை தட்டியும் தலையை அசைய விட்டும் இருவரையும் ஆட வைத்துவிடுகிறது என்பது எதார்த்தமான உண்மை.  இவற்றில் ஓரிரு பாடல்கள் விதிவிலக்காக இருக்கலாம். இது நாம் கண்டுவரும் அன்றாட நிகழ்வு என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

முன்பு இஸ்லாமியப் பாடல்கள் இசையில்லாமல் வந்தன. EM ஹனீபா போன்றவர்களால் இசைக் கருவிகளின் ஓசைகள் சேர்க்கப்பட்டு வெளிவரத் தொடங்கின. பாடலுக்கு ஒரு குணமுண்டு; இசைக் கருவிகளைத் தன்னுடன் இணைத்துக்கொள்வது. இன்னும் சொல்லப்போனால், பெரும்பாலும் ராகம், லயம், தாளம் போன்ற ஓசை வடிவங்களில் பாடல்கள் பாடப்பட்டுகின்றன. இசைக் கருவிகள் இசைக்கப்படுகின்றன. நவீன கால இசைக் கலைஞர் இயக்கும் 90 சதவீத இசைக் கருவிகளின் தாக்கம், அவர்கள் தரும் பாடல் வரிகளை முக்கியத்துவமற்றதாகவே தள்ளிவிடுகிறது. இசைக் கருவிகளுடன் இணையாத பாடல்கள் இரண்டாம் தரமாகவே அண்மைக் காலங்களின் கருத்தப்படுகிறது என்பது எதார்த்தமான உண்மை.

இசை, பாடல் இரண்டும் இரண்டறக் கலந்த அம்சமாகும். சில இடங்களிலேயே அவை தனித்து நிற்கின்றன. பாடல் இசையின்றிப் பாடப்படுகின்ற பொழுது அனுமதிக்கின்ற இஸ்லாம், அவை இணைகின்றபோது இரண்டையும் வன்மையாகத் தடை செய்வதை அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவைக் கொண்டு தெளிவு படுத்துகிறது

1) “மனிதரில் அறிவின்றி அல்லாஹ்வின் வழியிலிருந்து வழிகெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குகின்றவர்களும் இருக்கின்றனர். அதனைப் பரிகாசமாகவும் எடுக்கின்றனர். இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனையுண்டு.” (லுக்மான்:06)

குர்ஆனில் நிறைய வசனங்களை ஆராய்ந்தால், வீணான வெட்டிப் பேச்சுக்கள் பேசுவதைத் தடை செய்கிறது என்று திருக்குர்ஆனைப் பொருள் உணர்ந்து படிக்கும் அனைவருக்கும் புரியும். ஆனால், மேலே குறிப்பிட்டுள்ள ‘வீணான செய்திகள்’ என்று குறிப்பிடுபவைகள் ஏராளமாக இருந்தாலும் அறிவின்றி அல்லாஹ்வின் வழியிலிருந்து வழிகெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்கல் என்ற வர்ணிப்பிற்கு ஒத்த அம்சம் என்ன என்பதை, இரண்டு நபித் தோழர்களின் விளக்கங்கள் தெளிவுபடுத்துகின்றன.

2) “எவனைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறெவரும் இல்லையோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக, ‘வீணான செய்திகள்’ என்பது  இசை கலந்த பாடலையே குறிக்கிறது.” என்று இப்னு மஸ்ஊத் (ரழி) கூறுகிறார். (இப்னு அபீஷைபா-21130)

3) “பாடல் போன்றவைகளைப் பற்றியே இவ்வசனம் இறங்கியது.” என்று இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார். (அதபுல் முஃப்ரத்-1265, பைஹகீ-10-221-223)

இசை மூலம் ஷைத்தான் ஒருவனது ஆன்மீகத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறான் என்பதையும், வழிகேட்டின்பால் இட்டுச் செல்கிறான் என்பதையும் மேலே குறிப்பிட்டுள்ள இறைவசனம் தெளிவாக விளக்கப்படுத்துகிறது.

நபி (ஸல்) அவர்களுடனும், திருக்குர்ஆனுடனும் அதிகத்  தொடர்புடைய நபிth தோழர்கள்தான் இப்னு  மஸ்வூத் (ரழி) அவர்களும், இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களும். இவர்களைவிட குர்ஆனுக்கு விளக்கம் சொல்லும் தகுதியானவர்கள் வேறு யாரும் அண்மைக் காலத்தில் இருக்க முடியாது. இங்குக் குறிப்பிட்டுள்ள குர்ஆன் வசனத்திற்கான விளக்கத்திற்கு முதலில் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விளக்கம் தருகிறார்கள் இப்னு மஸ்வூத் (ரழி). மேலும் இது போன்ற நபித்தோழர்களின் விளக்கங்களை வைத்தே நிறைய தப்ஸீர்கள் (குர்ஆன் விளக்க உரைகள்) வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. குர்ஆனில் நேரடியான வார்த்தை இசை என்று இல்லை என்று வாதிடுபவர்கள் திருக்குர்ஆனின் வசனங்களை நன்கு புரிந்துகொள்ள நபித்தோழர்களின் விளங்கங்களைப் புரம் தள்ளி, நவீன காலத்தின் அறிஞர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் வாதங்களை வைத்து, நேரடியாக குர்ஆனில் இசை தடை செய்யப்பட்டுள்ளதாக ஒரு வசனம்கூட இல்லை என்று கூறி, இசையை ஹலாலாக்க முற்படுகிறார்கள்,  இது அறிவுடமையா? என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும். 

நபித்தோழர்கள் இருவரின் கருத்தை மேலும் சிலரும் (நபி தோழர்களும்), கண்ணியமிக்க இமாம்கள், முஃபஸ்ஸிரீன்கள் (தப்ஸீர் ஆசிரியர்கள்) ஆகியோரும், ’வீணான பேச்சு’ என்பது பாடல், இசை, இசைக் கருவிகள் என்றே தங்களின் கருத்துகளை அவரவர்களின் நூல்களில் பதிந்துள்ளார்கள். ஒரு சிலர் தங்களை மார்க்க அறிஞர்கள் என்று சொல்லிக்கொண்டு, இசையை ’ஹலால்’ என்று தங்களின் மனோ இச்சையின் அடிப்படையில் விளக்கமளித்துள்ளார்கள், அவர்களைப் பின்பற்றி வருபவர்களே இசை கூடும் என்று சொல்லும் கூட்டத்தினர்.

மேல் கூறப்பட்ட வசனம் இசை ’ஹராம்’ என்பதற்குப் போதுமானதெனினும், நபிமொழி அறிவிப்புகள் பலவற்றின் மூலமும் இதனை வன்மையான வார்த்தைகளால் தடை செய்யப்பட்டுள்ளது.  அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்:

4) “விபச்சாரம், பட்டாடை, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை ஹலாலாகக் கருதக்கூடிய சில கூட்டத்தினர் எனது சமுதாயத்திலே தோன்றுவார்கள்…” என்று நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ மாலிக், ஆதாரம்: புகாரி – 5590)

விபச்சாரம், மது போன்றவை ஹராம் என்று தெள்ளத் தெளிவாக தெரிந்த நாம், இவைகளை ஹலாலாகக் கருதுவோருடன் இசையைக் ஹலாலாகக் கருதுபவர்களையும் நபியவர்கள் இணைத்துக் கூறுவதிலிருந்து இசையை அவர்கள் எவ்வளவு மோசமான ஒன்றாகக் கருதியுள்ளார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.  

5) “இரண்டு ஓசைகள் சபிக்கப்பட்டவையாகும். சந்தோசத்தின் போது கேட்கும் குழல் ஓசை, சோதனையின் போது கேட்கும் ஓலம்.” என்று நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரழி) ஆதாரம்: பஸ்ஸார் – 1:377-795 பார்க்க: தஹ்ரீமு ஆலாத்தித் தர்ப் – 52)

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் வந்த காலம் முதல் மரணிக்கும் காலம் வரை அவர்களோடே இருந்த அனஸ்(ரழி) அவர்களின் மூலம் அறிவிக்கப்படும் இந்தச் செய்தி நமக்குச் சொல்லுவது என்னவென்றால், சந்தோசத்தின் போதுகூட நபியவர்கள் குழல்கள் மூலம் எழுப்பப்படும் ஓசையைத் தடை செய்தது மட்டுமல்லாமல், ஓலமிடும் ஓசையையும் தடை செய்துள்ளார்கள்.  இந்த நபிமொழியின் மூலம் நாம் அறியும் விசயம் என்னவென்றால்,  Wind pipe (குழல்) வகை சார்ந்த அனைத்து இசைக் கருவிகளையும் தடை செய்கிறார்கள். பொதுவாக இசைக் கருவிகளைத் தடை செய்தது மாத்திரமின்றி, ஒரு சில கருவிகளின் பெயர்களைக் குறிப்பிட்டும் தடைசெய்தது, நபியவர்கள் இசையை எவ்வளவு வெறுக்கிறார்கள் என்பதை எமக்குத் தெளிவாக்குகிறது.

6) “மது, சூதாட்டம், மேளக் கருவிகளை அல்லாஹ் எனக்குத் தடை செய்துவிட்டான். போதை ஏற்படுத்தும் அனைத்தும் ஹராமாகும்.” என்று நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), ஆதாரம்: அபூதாவூத்-3696, பைஹகீ-10-221)

பொதுவாக இசைக் கருவிகளைத் தடை செய்தது போன்று, இந்த அறிவிப்பில்  மேளம் போன்ற அனைத்துக் கருவிகளையும் அல்லாஹ் தன்மீது ஹராமாக்கியதாகக் கூறுகிறார்கள். அல்லாஹ் எனக்குத் தடை செய்துள்ளான் என்று சொல்லுமளவுக்கு, இசைக் கருவிகளின் தரம் இஸ்லாத்தின் பார்வையில் தாழ்ந்துள்ளது என்பது தெள்ளத் தெளிவாக அறிவைத் தேடும் மக்களுக்கு நிச்சயம் புரியும்.

7) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு ஆட்டிடையனின் குழலோசை இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தம் இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு, அந்தப் பாதையை விட்டுவிட்டு (வேறொரு பாதையின் பக்கம்) வாகனத்தைத் திருப்பினார்கள். அவர்கள், ”(அந்தச் சப்தம்) உனக்குக் கேட்கிறதா?” என்று வினவினார்கள். அதற்கு நான், ”ஆம்” என்றேன். அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு, ”எனக்குக் கேட்கவில்லை” என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்து விட்டு மறுபடியும் அதே பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள். ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டிடையனின் குழலோசையைக் கேட்டபோது, அவர்கள் இதைப் போன்று செய்ததை நான் பார்த்தேன்” என்றும் கூறினார்கள். (நூல்: அஹ்மத் – 4307)

குழலோசையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

8) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ’புஆஸ்’ எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக்கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், ”இறைத் தூதரின் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?” என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”(அவ்விருவரையும் விட்டுவிடுங்கள்) அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்” என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம் – 1619)

மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் அந்தச் சிறுமியர் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் என வந்துள்ளது.

”ஷைத்தானின் இசைக் கருவிகளா?” என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அக்கருத்தை மறுக்கவில்லை. மாறாக, இன்றைக்குப் பெருநாளாக இருப்பதால், இன்றைக்கு மட்டும் விட்டுவிடுங்கள் என விதிவிலக்குத் தருகிறார்கள். இசைக் கருவிகள் ஷைத்தானுடையன என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியது தவறு என்றிருந்தால், ”நீர் சொல்வது தவறு; இசைக் கருவிகள் அனுமதியளிக்கப்பட்டவை தாம்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறியிருப்பார்கள்.

இன்றைக்கு மட்டும் விட்டுவிடு என்று அவர்கள் கூறுவதிலிருந்து மற்ற நாட்களில் இசைப்பது கூடாது என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே இந்த ஹதீஸும் இசையைக் கேட்பது கூடாது என்பதற்கு ஆதாரமாக உள்ளது.

9) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”அல்லாஹ் உங்களுக்கு மதுவையும் சூதாட்டத்தையும் மத்தளத்தையும் தடை செய்துள்ளான். போதையூட்டக்கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டவையாகும்.” (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரழி), ஆதாரம்: அஹ்மத்: 2494)

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் இந்த ஹதீஸில், இசைக் கருவிகளுள் ஒன்றான மத்தளத்தையும் தடை செய்துவிட்டு, போதையூட்டக்கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன என்று, இசைகருவியைப் போதையூட்டும் பொருளாகச் சொல்லப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. இப்படி இசைக்குத் தடை விதிக்கப்பட்ட ஏராளமான ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டிக்கொண்டே போகலாம். அறிவிப்பாளர் வரிசையில் குறைபாடுள்ள ஹதீஸ்களைக் கணக்கில் எடுத்தால், இசைக்கு எதிராக 80க்கும் மேற்பட்ட ஹதீஸ்கள் உள்ளன என்பதைத்  தகவலுக்காக இங்குப் பதிவு செய்கிறேன்.

மேற்கூறப்பட்ட அனைத்து ஆதாரங்களும் இசைக் கருவிகளை முழுமையான வடிவிலே தடை செய்வதை அறிவுள்ளவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.

நபிகளாருடைய காலத்தில் காணப்பட்ட எத்தனையோ கருவிகள் இன்று பல வடிவம் பெற்று வளர்ச்சி அடைந்து, ஒரு கலையம்சமாக மாறிவிட்டன. ஹதீஸ்களிலே இடம்பெறும் வார்த்தைகள்  நபிகளாருடைய காலத்திலே காணப்பட்ட கருவிகளைக் குறித்துப் பேசினாலும், அதே இசையை ஏற்படுத்தக் கூடிய ஏராளமான கருவிகள் இன்று உபயோகத்தில் உள்ளன. அதே நேரம், இசைக் கருவிகள் என்றுள்ள எல்லாமே அடங்கும் வண்ணம் இடம்பெற்றுள்ள வார்த்தை இவையனைத்தையும் முழுமையாகத் தடை செய்கின்றது என்பதை மேல் சொன்ன ஹதீஸ்களின் அரபி மூல வார்த்தைகளை வைத்துப் புரிந்துகொள்ளலாம். பின் வருபவை அவ்வார்த்தைகள்:

01-معازف அனைத்து இசைக் கருவிகளையும் இது குறிக்கும்.
02-الكوبة-الطبل பறை, பேரிகை, மத்தளம், தவுல், தப்பட்டை போன்ற (Drum) வகைகளை இது குறிக்கும்.
03-ارمزم புல்லாங்குழல் போன்ற காற்று வாத்தியங்கள் (Wind Pipe) வகை சார்ந்த அனைத்தையும் இது குறிக்கும்.
04-القنين வீணை போன்ற நரம்பு வாத்தியங்கள் (Daff) அனைத்தையும் இது குறிக்கிறது.

மேல் சொன்ன குர்ஆன் வசனத்தின் மூலமும் பின் சுட்டிக்காட்டப்பட்ட ஹதீஸ்களில் குறிப்பிட்டுள்ள இசைக் கருவிகளின் பெயர்களை வைத்து அனைத்து விதமான இசைக் கருவிகளும் எல்லா நாட்களிலும் வெறுக்கப்பட வேண்டியவையே என்பதையே அறிவுள்ள அனைவரும் புரிந்துகொள்வார்கள். 

நாம் மேலே குறிப்பிட்டுள்ள ஹதீஸை (இலக்கம் 8) இசைக்கு ஆதாரமாக ஒரு சிலர் எடுத்துக்காட்டுவார்கள். சிறுமிகள் பெண்கள் பாடிக்கொண்டு தப்ஸ் அடித்துகொண்டிருந்தார்கள்; அபூபக்ர் மட்டுமே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்; நபிகளார் அதனைத் தடுக்கவில்லை; மாறாக, ”அவர்களை விட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள்;  இங்கு அபூபக்ருடையை செயலை நாம் எடுப்பதா? நபிகளாருடைய செயலை எடுப்பதா? என்ற நியாமான கேள்வியை வைத்து, இசையை நபிகளார் தடை செய்யவில்லை என்று வாதிடுபவர்களின் வாதத்தின் அடிப்படையில் பார்த்தால், பெருநாள் தினத்தில் மட்டும் சிறுமியர் அல்லது பெண்கள் மட்டுமே அத்துஃப் (الدف) என அழைக்கப்படும் ஒரு பக்கம் தோலால் மூடப்பட்ட கருவியை உபயோகிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்று புரிந்துகொள்வதுதானே அறிவுடமை. இதுவல்லாமல் ஒவ்வொரு நாளும் இசைக் கருவிகளின் தாக்கமுடைய பாடல் ஓசையைக் கேட்பதற்கோ இசைப்பதற்கோ இஸ்லாத்தில் அனுமதியில்லை என்பதை அறிவுள்ள முஸ்லிம்  ஒவ்வொருவருக்கும் புரிந்திருக்கும்.

ஹிஜ்ரி 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் இப்னு ஹஸ்ம் (லாஹிரிய்யா மத்ஹப்வாதி), இமாம் கஸ்ஸாலீ, தற்காலத்தில் வாழும் அறிஞர் யூசுஃப் கர்ளாவீ,  இன்னும் சிலர் இசையைக் கேட்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம்தான் என்று தங்களுடை புத்தகங்களில் எழுதிவைத்ததன் மூலம், இவற்றைப் படித்தவர்கள், மற்றும் இவர்களைப் பின்பற்றுபவர்கள் இஸ்லாத்தில் இசைக்குத் தடையில்லை என்று ஒரு சில வாதங்களை எடுத்துவைக்கிறார்கள். இது போன்ற மார்க்க அறிஞர்களையும் சூஃபியாக்களையும் பின்பற்றும் கூட்டமே இசைக் கருவிகளை ஹலாலாக்கி வழிகேட்டின் உச்ச நிலைக்குச் சென்றுள்ளார்கள்.

இஸ்லாமியப் புத்தகங்கள் எழுதுபவர்கள் எல்லாம் முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் என்று சொல்லுவது அறிவுடைமையாகாது, இஸ்லாமியப் பார்வையில் உண்மையான அறிஞர் தன்னுடைய மனோ இச்சைக்கு இடமளிக்காமல், குர்ஆன் மற்றும் நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரம் இவைகளில் ஆதரப் பூர்வமானவைகளின் அடிப்படையில் ஆய்வு செய்து, இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் மாறு செய்யாத கருத்துகளைத் தெரிவித்தால் மட்டுமே அவர்களை அறிஞர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியுமே தவிர, சொந்தக் கருத்துகளை மார்க்கம் என்று சொல்லும் வேறு எவனையும் மார்க்க அறிஞராக எந்த ஒரு அறிவுடைய முஸ்லிமும் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதுதான் எதார்த்தமான உண்மை. 

ஒரே ஒரு தகவலைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறோன். தியாகங்கள் பல செய்து வளர்ந்த நம்முடைய மார்க்கத்திற்காக நாம் என்ன செய்கிறோம் என்று சித்தித்துப் பார்க்க வேண்டும். கடந்த 30 வருடங்களுக்கு முன்புவரை நம்முடைய பல சொந்தங்கள் திருக்குர்ஆனின் அர்த்தங்கள் தெரியாமலே இவ்வுலகைவிட்டுப் பிரிந்துவிட்டார்கள். நாம் இருக்கும் இக்காலம் அறிவுப் பொக்கிஷங்கள் நிறைந்த காலம். இக்காலத்தில் நம்முடைய அறிவைப் பயன்படுத்தி, தியாகத்தால் வளர்ந்த இந்த மார்க்கத்தைப் பாதுகாப்பதோடு, இதைப் பிற சமூகத்திற்கு எத்திவைக்கும் வேலை செய்யத் தவறுகிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க்க் கடமைப் பட்டிருக்கிறோம். இறைவன் நமக்குத் தந்துள்ள இந்தப் பொன்னான நேரத்தை நபிகளார் வெறுத்த அனைத்து இசைக் கருவிகளின் ஓசையிலிருந்தும் விடுபட்டு, நம்முடைய அறிவைக் கொண்டு இந்த்த் தூய மார்க்கத்தை அறியாத மக்களுக்கு எத்திவைக்க ஒவ்வொருவரும் இன்று முதல் முயற்சிக்கலாமே.

சைத்தானின் சூழ்ச்சியால் வந்த இசை என்ற ஒன்றுக்கு இன்று ஒவ்வொரு மனிதனும் அடிமையாகியுள்ளான் என்பதை நான் இங்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை. இசைக் கருவிகளை நாம் வெறுத்தால், தொடர்ந்து சினிமாப் பாடல்கள், நம் மொழி சினிமா, பிற மொழி சினிமா, சின்னத்திரை, நாடகங்கள் என்று  வீணானவற்றிலிருந்து விடுபடுவோம்; நேர்வழி பெறுவோம். இன்ஷா அல்லாஹ். 

எனவே அல்லாஹ்வுடையவும் அவன் தூதருடையவும் எச்சரிக்கைகளைத் தெளிவாக அறிந்த பின், இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் அறிந்து பின்பற்ற விரும்பும் ஒவ்வொருவரும் இசை கலந்த அனைத்து அம்சங்களையும் வெறுத்துத் தவிர்த்து, அல்லாஹ்விடத்திலே கூலியைப் பெற்றவர்களாக மாறுவோமாக.

இசைக் கருவிகளும் அதனைச் சார்ந்துள்ள பாடல்களும் வெறுக்கப்பட வேண்டுமா? இல்லையா? என்பதை இதைப் படிக்கும் அன்பு நேசங்களான நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். 

திணிக்கப்படும் இசையோசைகளை எப்படித் தவிர்ப்பது என்பது பற்றி வேறொரு பதிவில் மிகச் சுருக்கமாகத் தருகிறேன். இன்ஷா அல்லாஹ்.

-தாஜுதீன்

குறிப்பு: இங்கு இசையற்ற பாடல், அதாவது கவிதைகளைக் குறிப்பிடவில்லை. ’கவிதை - ஓர் இஸ்லாமியப் பார்வை’ என்ற தலைப்பில் அதிரை அஹ்மது அவர்களின் ஆய்வுத் தொடர் அதிரைநிருபரில் வெளிவருவதால், தீர்வு என்னவென்பதை அந்த ஆய்வின் இறுதியில் தெரியும் என்பதால், இங்கு நான் அதைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

என்னுடைய இந்தத் தொகுப்புக்கு உதவியவை: 


208 Responses So Far:

«Oldest   ‹Older   1 – 200 of 208   Newer›   Newest»
அதிரை சித்திக் said...

இதற்க்கு மேலும் ..ஆதாரங்களை கொண்டு

இசைக்கு வக்காலத்து வாங்கினால் ...

இசை மீதுள்ள மயக்கத்தால் மட்டுமே வாதிட முடியும் ..

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் வீண் ..

அன்பு சகோ தாஜுதீனின் ஆக்கம் ..அற்புதம் ..,

Adirai pasanga😎 said...

அஸ்ஸலமு அலைக்கும்

மாஷா அல்லாஹ் நல்ல முயற்சி...அல்லாஹ் அதற்கான கூலியை வழங்குவானாகவும்

///ஒரே ஒரு தகவலைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறோன். தியாகங்கள் பல செய்து வளர்ந்த நம்முடைய மார்க்கத்திற்காக நாம் என்ன செய்கிறோம் என்று சித்தித்துப் பார்க்க வேண்டும். கடந்த 30 வருடங்களுக்கு முன்புவரை நம்முடைய பல சொந்தங்கள் திருக்குர்ஆனின் அர்த்தங்கள் தெரியாமலே இவ்வுலகைவிட்டுப் பிரிந்துவிட்டார்கள். நாம் இருக்கும் இக்காலம் அறிவுப் பொக்கிஷங்கள் நிறைந்த காலம். இக்காலத்தில் நம்முடைய அறிவைப் பயன்படுத்தி, தியாகத்தால் வளர்ந்த இந்த மார்க்கத்தைப் பாதுகாப்பதோடு, இதைப் பிற சமூகத்திற்கு எத்திவைக்கும் வேலை செய்யத் தவறுகிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க்க் கடமைப் பட்டிருக்கிறோம். இறைவன் நமக்குத் தந்துள்ள இந்தப் பொன்னான நேரத்தை நபிகளார் வெறுத்த அனைத்து இசைக் கருவிகளின் ஓசையிலிருந்தும் விடுபட்டு, நம்முடைய அறிவைக் கொண்டு இந்த்த் தூய மார்க்கத்தை அறியாத மக்களுக்கு எத்திவைக்க ஒவ்வொருவரும் இன்று முதல் முயற்சிக்கலாமே.///

///இதற்க்கு மேலும் ..ஆதாரங்களை கொண்டு

இசைக்கு வக்காலத்து வாங்கினால் ...

இசை மீதுள்ள மயக்கத்தால் மட்டுமே வாதிட முடியும் ..

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் வீண் ..

அன்பு சகோ தாஜுதீனின் ஆக்கம் ..அற்புதம் ..,///

அருமையான முன்னூட்டமும் அதனை வழிமொழியும் பின்னூட்டமும்

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். ஆக்கம் உள்ளங்கை நெல்லிக்கனி! அல்ஹம்துலில்லாஹ். அல்குரான்,ஹதீசின் ஒளியில் இசையின் முகம் பளிச்சென எடுத்துகாட்டபட்டுள்ளது.இசையின் முகம் நாம் இசையும் படி இல்லாத கோரமுகம். பாவ முகம் எனவே அகத்தில் உள்ள ,பதிந்த இந்த கோரமுகம் அழிப்போம். இறைவழி நடப்போம் ஆமீன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சுருக்கமாக,
குடிக்கும் போதும், படிக்கும் போதும் நரம்பை முறுக்கேற்றி உடல் அசைவை ஏற்படுத்தும் செயல்கள் தடுக்கப்பட்டது என்பது ஆய்வு தெளிவு படுத்துகிறது.
பொதுவாக துருவித் துருவி ஆராயாமல் சந்தேகம் உள்ளதை தவிர்ப்பதே மேல்.

ZAKIR HUSSAIN said...

//குர்ஆனில் இசை தடை செய்யப்பட்டுள்ளதாக ஒரு வசனம்கூட இல்லை என்று கூறி, இசையை ஹலாலாக்க முற்படுகிறார்கள், இது அறிவுடமை என்பதை அவர்கள்தான் விளங்க வேண்டும். //

something contradicts ???..இது அறிவுடமை typing error?

அதிரைநிருபர் said...

//ZAKIR HUSSAIN சொன்னது… something contradicts ???..இது அறிவுடமை typing error? //

நீங்கள் குறிப்பிட்டுள்ள எழுத்துபிழை சரி செய்யப்பட்டுள்ளது.

மிக்க நன்றி சகோதரர் ஜாஹிர் ஹுசைன்.

Unknown said...

அன்புச்சகோ தாஜுதீன்,

முதலில் உங்களுக்கு என் பாராட்டு - ஒரு மாதம் எடுத்துக்கொண்டு அக்கறையாய் தகவல்களைச் சேகரித்து இப்படி ஒரு கட்டுரையை இங்கே இட்டதற்காக. இனி இங்கே நாம் தாராளமாகக் கருத்தாடலாம், தடையேதும் இல்லை. அப்படித்தானே?

இனி உங்கள் கட்டுரையில் நீங்கள் முன்வைத்திருக்கும் ஒவ்வொன்றையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம். ஒவ்வொன்றையும் முடித்துவிட்டு அடுத்ததற்குச் செல்வோம். ஏற்புடையதுதானே?

>>>>>அச்சகோதரரின் வாதத்தின் மூலம், அவர் சொல்லும் இசைக்கான வரைவிலக்கணம் எது என்று அவரிடமே கேட்டேன், சரியான பதில் வரவில்லை,<<<<<

என்ன இப்படி எடுத்ததுமே ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுட்டீங்க? இதோ நான் உங்களுக்கு இட்ட மறுமொழி, அந்த இசை இரைச்சல் இழையில் இட்டது. இங்கேயும் கொண்டுவந்து இடுகிறேன். இந்த பதில் உங்களுக்குப் பிடிக்கவில்லையா அல்லது நீங்கள் படிக்கவில்லையா?

==========================
தாஜுதீன்: இசை வெறுக்கப்படவேண்டுமா? என்ற தலைப்பில் விரைவில் அதிரைநிருபர் வலைத்தளத்தில் ஒரு தனி பதிவு ஒன்று எழுதுகிறேன், இசைக்காண வரைவிலக்கணம் தெரிந்தால் எனக்கு அந்த பதிவு சிறப்பாக எழுத பேருதவியாக இருக்கும்.

கட்டாயம் எழுதுங்கள். அப்படி ஒன்றை எழுதத் தொடங்கும்போதுதான் அதுபற்றி அதிகம் சிந்திக்கத் தோன்றும். நீங்கள் இசைக்கான வரைவிலக்கணம் உங்களுக்குத் தெரியாத நிலையில் என்னிடம் உதவி கேட்கிறீர்கள் என்பதை அறியாதவனாய் இருந்துவிட்டேன். இசை பற்றி ஏராளமான தகவல்கள் இணையத்தில் காணக்கிடைக்கும். ஆனால் இணையத்தில் சரியானதைத் தேடி எடுப்பது ஒரு கலை. ஏனெனில் வந்தவன் போனவனெல்லாம் அவனவன் விருப்பத்திற்கு எதையாவது எழுதிவைத்திருப்பான். அவற்றை நீங்கள் அப்படியே எடுத்துக்கொள்ள முடியாது. இணைய அகராதிகள் தரும் வரைவிலக்கணங்களைப் பார்ப்போம். இவை சற்றே நம்பத் தகுந்தவை:

1. http://www.merriam-webster.com/dictionary/music
-The science or art of ordering tones or sounds in succession, in combination, and in temporal relationships to produce a composition having unity and continuity.
-Vocal, instrumental, or mechanical sounds having rhythm, melody, or harmony

2. http://dictionary.reference.com/browse/music?s=t
-An art of sound in time that expresses ideas and emotions in significant forms through the elements of rhythm, melody, harmony, and color.
-The tones or sounds employed, occurring in single line (melody) or multiple lines (harmony), and sounded or to be sounded by one or more voices or instruments, or both.

3. http://www.thefreedictionary.com/music
-The art of arranging sounds in time so as to produce a continuous, unified, and evocative composition, as through melody, harmony, rhythm, and timbre.
-Vocal or instrumental sounds possessing a degree of melody, harmony, or rhythm.

இந்த என் மறுமொழியை வாசித்த நினைவிருக்கிறதா தாஜுதீன்? இது போதவில்லை என்றால் கேளுங்கள் மேலும் இடுகிறேன். ஒன்றுக்கு மூன்று வரைவிலக்கணம் இட்டேன். ஆனால் எதுவுமே இடவில்லை என்று சொன்னால் எப்படி?

அன்புடன் புகாரி

Unknown said...

அன்புச் சகோ தாஜுதீன் அவர்களே,

>>>>பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் விளக்கங்களின் அடைப்படையிலும் தொகுப்பட்டது<<<<

இப்படி நீங்கள் ”பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் விளக்கம்” என்று எழுதும்போது அதை நான் எப்படிப் பொருள் கொள்ள வேண்டும்?

1. எல்லா மார்க்க அறிஞர்களும் ஒரே கருத்தைச் சொல்வதில்லை
2. சிலர் ஒரு கருத்தையும் வேறு சிலர் அதற்கு மாற்றமாகவும் சொல்கிறார்கள்
3. ஏகோபித்த கருத்து என்பது மார்க்க அறிஞர்களிடம் கிடையாது
4. ஒரே கருத்தை அந்தக் கால மார்க்க அறிஞரும் இந்தக் கால மார்க்க அறிஞரும் கூறுவதில்லை
6. எந்த மார்க்க அறிஞர் நமக்குச் சாதகமாகச் சொல்கிறாரோ அதை மட்டும் நாம் எடுத்துக்கொண்டு, நமக்குச் சாதகமாகமில்லாததை ஓரங்கட்டிவிடவேண்டும்

அன்புடன் புகாரி

Unknown said...

அன்புச்சகோ தாஜுதீன் அவர்களுக்கு,

>>>>>>மேலும் நபி (ஸல்) அவர்கள் எதைப் பேசினாலும், அது அவர்களின் சொந்த கருத்தன்று; அவர்கள் ‘வஹி’யின் அடிப்படையிலே பேசுகிறார்கள் என்ற நம்பிக்கை நம்மில் மீண்டும் வரவேண்டும் என்பதை ஞாபகமூட்டும் விதமாகப் பின்வரும் குர்ஆன் வசனங்களைத் தொகுத்தளிக்கிறேன் .

53:1. விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!
53:2. உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை; அவர் தவறான வழியில் செல்லவுமில்லை.
53:3. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.
53:4. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.<<<<<

இதை நீங்கள் எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள். குர்-ஆன் வசனங்கள் முகமது நபியால் தானே உருவாக்கப்பட்டு சொல்லப்பட்டவை அல்ல. அவை இறைவனிமிருந்து வஹீ மூலம் வந்தவை. இதைத்தான் இந்த வசனங்கள் கூறுகின்றன. மற்றபடி முகமது சொன்ன எல்லாம் குர்-ஆன் வசனங்கள் இல்லை. அவ்வளவுதானே தவிர நபிகள் நாயகம் பேசும் எல்லாவற்றுக்கும் இறைவன் பொறுப்பாகமாட்டான். நபிகளுக்கு இறைவன் குர்-ஆன் என்பதைத்தவிர வேறு எதையும் தரவில்லை என்பதை நபியே கூறியிருக்கிறார். அதிரை நிருபரிலேயே அந்த குறிப்புகள் உண்டு.

நபி பேசியதெல்லாம் குர்-ஆன் என்பதுபோலவும், அவர் பேசிய எதுவுமே அவரின் கருத்தல்ல இறைவனின் கருத்துத்தான் என்பதுபோலவும் நீங்கள் எழுதி இருக்கிறீர்கள். இதில் ஒரு தெளிவுக்கு வருவோமா?

அன்புடன் புகாரி

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரர் புகாரி அவர்களுக்கும்,

தங்களின் மறுமொழிகளுக்கு மிக்க நன்றி.

>>>>> தாஜுதீன் சொன்னது... அச்சகோதரரின் வாதத்தின் மூலம், அவர் சொல்லும் இசைக்கான வரைவிலக்கணம் எது என்று அவரிடமே கேட்டேன், சரியான பதில் வரவில்லை,<<<<<

//அன்புடன் புகாரி சொன்னது... இந்த என் மறுமொழியை வாசித்த நினைவிருக்கிறதா தாஜுதீன்? இது போதவில்லை என்றால் கேளுங்கள் மேலும் இடுகிறேன். ஒன்றுக்கு மூன்று வரைவிலக்கணம் இட்டேன். ஆனால் எதுவுமே இடவில்லை என்று சொன்னால் எப்படி?//

உங்களுடைய வாதத்தின் மூலம் சரியான பதில் இல்லை என்று தான் நான் குறிபிட்டேனே தவிர எதுவும் இடவில்லை என்று குறிப்பிடவில்லை என்பதை நினைவூட்டுகிறேன். நீங்கள் விரிவாக மறுமொழியில் விளக்குவீர்கள் என்று எதிர்ப்பார்த்தேன், ஆனால் சுட்டிகளை மட்டும் குறிப்பீட்டீர்கள் அது எனக்கு திருப்திகரமாக இல்லை. பின்னூட்டங்கள் நீண்டது, தனிபதிவாக எழுதலாம் என்ற எண்ணத்தில் நம் தேடலில் தெளிவுபெறலாம் என்று அப்பதிவில் நீங்கள் குறிப்பிட்ட இசைவரைவிலக்கணத்திற்காக சுட்டிக்கு மறுமொழியிடுவதை நிறுத்திவிட்டேன்.. :-)

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//இப்படி நீங்கள் ”பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் விளக்கம்” என்று எழுதும்போது அதை நான் எப்படிப் பொருள் கொள்ள வேண்டும்?

1. எல்லா மார்க்க அறிஞர்களும் ஒரே கருத்தைச் சொல்வதில்லை
2. சிலர் ஒரு கருத்தையும் வேறு சிலர் அதற்கு மாற்றமாகவும் சொல்கிறார்கள்
3. ஏகோபித்த கருத்து என்பது மார்க்க அறிஞர்களிடம் கிடையாது
4. ஒரே கருத்தை அந்தக் கால மார்க்க அறிஞரும் இந்தக் கால மார்க்க அறிஞரும் கூறுவதில்லை
6. எந்த மார்க்க அறிஞர் நமக்குச் சாதகமாகச் சொல்கிறாரோ அதை மட்டும் நாம் எடுத்துக்கொண்டு, நமக்குச் சாதகமாகமில்லாததை ஓரங்கட்டிவிடவேண்டும்//

இங்கு நாம் விவாதிப்பது இசையை பற்றி மட்டுமே என்பதை நினைவில் வைத்துக்கொண்டு விவாதிப்போம். ப்ல விடையங்களில் மார்க்க அறிஞர்களின் எவைகளில் முரண்படுகிறார்கள் என்பதை பற்றி விவாதித்தால் நாம் தெளிவுபெறவேண்டிய இசை தொடர்பானவைகளிலிருந்து கவனமில்லாமல் போய்விடும் என்பதை மனத்தில் வைத்துக்கொள்வேமே...

விவாதிக்கும் கரு இசை என்பதால், நான் ஆய்வு செய்த வகையில் குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் தீர்ப்பு சொல்லும் பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் என்று குறிப்பிட்டுள்ளேன், தேவைபட்டால் அவர்களின் பெயர்களையும் தருவேன். இரண்டு முக்கிய நபிதோழர்களின் விளக்கங்களுக்கு ஆதர புத்தகங்கள், எண்களையும் குறிப்பிட்டுள்ளேன் என்பதை இங்கு நினைவூட்டுகிறேன்...

அதிரையில் கரண்ட் ஃபவர் அடிகடி கட்டாகிறது, பின்னூட்டமிடுவதில் தாமதம் ஏற்கிறேன். ஒவ்வொன்றாக தெளிவுபடுத்துகிறேன். இன்ஷா அல்லாஹ்...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//நபி பேசியதெல்லாம் குர்-ஆன் என்பதுபோலவும், அவர் பேசிய எதுவுமே அவரின் கருத்தல்ல இறைவனின் கருத்துத்தான் என்பதுபோலவும் நீங்கள் எழுதி இருக்கிறீர்கள். இதில் ஒரு தெளிவுக்கு வருவோமா?//

நபிகளார் பேசிதெல்லாம் குர்ஆன் என்பதுபோல நான் குறிப்பிட்டுள்ளதாக நீங்கள் எழுதியுள்ளது தவறு, நான் எங்கும் அப்படி குறிப்பிடவில்லை.

//53:1. விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!
53:2. உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை; அவர் தவறான வழியில் செல்லவுமில்லை.
53:3. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.
53:4. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை..//

அவர்கள் சொல்லும் மார்க்க தீர்ப்புகள் அனைத்தும் தன் இச்சைபடி எதுவும் பேசுவுவதிலை, அது நபிகளாருக்கு வஹீ மூலம் அறிவிக்கபடுகிறது என்பதாக புரிந்துக்கொள்ளலாமே...

சரி இந்த பதிவின் மூலம் இசை கூடாது என்று எடுத்துவைத்துள்ளேன். இசை இஸ்லாமிய பார்வையில் கூடும் என்பதற்கான ஆதாரங்களை நீங்கள் தாருங்களேன், என்னுடைய தேடலில் கிடைக்கவில்லை.

இப்னு அப்துல் ரஜாக் said...

அன்புக்குரிய சகோ அன்பின் புகாரி அவர்களுக்கு,சகோ தாஜுதீன் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் இசை பற்றி குரான்,ஹதீஸ் அடிப்படையில் அழகாக தொக்கு தந்துள்ளார்.

ஒரு முஸ்லிமுக்கு அல்லாஹ்வும்,அல்லாஹ்வுடைய தூதருடைய ஒரு சொல் போதும்,அதை - அந்த குரான்,ஹதீஸை வைத்து - ஆதாரப் பூர்வமாக அலசி இருக்கிறார்.

இதற்கு முஸ்லிம்களாகிய நாம் கட்டுப்பட வேண்டும்,ஏனெனில் அவர் தந்துள்ள ஆதாரம் நம் உயிரினும் மேலான திருக்குர்ஆன்,ஹதீஸ்.

அதை விட்டு விட்டு,இப்படி விதண்டாவாதம் செய்வது என்பது சரியில்லை.நீங்கள் கற்பனை செய்து வைத்திருக்கும் முடிவுதான் சரியென்று நீங்கள் வாதாடினால்,அவர் தந்த குரான்,ஹதீசுக்கு உங்கள் பதில் என்ன?

அல்லாஹ்வை எப்படி நம்ப வேண்டுமோ,குரானை நம்ப வேண்டுமோ,அதே போல அல்லாஹ்வின் தூதரையும் - அவர்கள் சொன்ன ஹதீசையும் நம்ப வேண்டும்,இல்லையென்றால் நாம் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

“அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தில் முடிவுசெய்து விட்டால் தமது காரியத்தில் சுய அபிப்பிராயம் கொள்வதற்கு முஃமினான எந்த ஆணுக்கும் முஃமினான எந்தப் பெண்ணுக்கும் உரிமை இல்லை. எவன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்கின்றானோ நிச்சயமாக அவன் மிகத் தெளிவான வழிகேட்டில் சென்றுவிட்டான்.” (33:36)

“இத்தூதர் உங்களுக்கு எதை வழங்கினாரோ அதை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதை உங்களுக்குத் தடுத்தாரோ (அதை விட்டும்) விலகிக் கொள்ளுங்கள். இன்னும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்.” (59:7)

“அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களை நேசிக்கமாட்டான்.” (3:32)

“நீங்கள் அருள் செய்யப்படும் பொருட்டு அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்” (3:132)

“நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள். இன்னும் இத் தூதருக்கும் உங்களில் அதிகாரமுடையோருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் ஏதேனும் ஒரு விடயத்தில் முரண்பட்டுக் கொண்டால், நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்வோராக இருந்தால், அதனை அல்லாஹ்விடமும் இத்தூதரிடமும் (தீர்வை வேண்டி) திருப்பிவிடுங்கள். இதுவே மிகச் சிறந்ததும் அழகான முடிவுமாகும்” (4:59)

“யார் அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் கட்டுப்படுகின்றார்களோ அவர்கள், அல்லாஹ் அருள் புரிந்த நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாகிகள், நல்லோர்கள் ஆகியோருடன் இருப்பார்கள். இவர்களே சிறந்த தோழர்களாவார்கள்” (4:69)

“யார் இத்தூதருக்குக் கட்டுப்படுகின்றாரோ அவர் நிச்சயமாக அல்லாஹ்வுக்கும் கட்டுப்பட்டுவிட்டார். எவர்கள் புறக்கணிக்கின்றார்களோ அவர்களைக் கண்காணிப்பவராக உம்மை நாம் அனுப்பவில்லை” (4:80)

“அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள். இத் தூதருக்கும் கட்டுப்படுங்கள். (அவர்களுக்கு மாறுசெய்வதில்) எச்சரிக்கையாகவும் இருந்து கொள்ளுங்கள். நீங்கள் புறக்கணித்தால், எமது தூதர்; மீதுள்ள பொறுப்பு தெளிவாக எடுத்துரைப்பதுதான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” (5:92)

“நீங்கள் அருள் செய்யப்படும் பொருட்டு தொழுகையை நிலைநாட்டுங்கள். ஸகாத்தையும் கொடுங்கள், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்” (24:56)

“நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான், இன்னும், உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் நிகரற்ற அன்புடையவனுமாவான் என்று (நபியே!) நீர் கூறுவீராக!” (3:31)

“அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள். இன்னும் இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள். மேலும், நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துரைப்பதே நமது தூதர் மீதுள்ள கடமையாகும்.” (64:12)



நபியவர்களின் சொல்லும் வஹியே!

“அவர் மனோ இச்சைப்படி பேசுவதில்லை.

“அது அவருக்கு அறிவிக்கப்படும் வஹியேயன்றி வேறில்லை”

“வலிமைமிக்க அழகிய தோற்றத்தையுடைய (ஜிப்ரீல் எனும் வான)வர் இவருக்குக் கற்றுக் கொடுத்தார். (தனது இயற்கை அமைப்பில் நபியின் முன்) நேராக நின்றார்” (53:3-5)

நபி(ஸல்) அவர்கள் தனது மனோ இச்சைப்படி பேசுவதில்லை என்றும், அவர் பேசும் பேச்சுக்கள் அனைத்தும் வஹி எனும் வேத வெளிப்பாடே என்றும் இந்த வசனங்கள் பேசுகின்றன.

“நான் வஹியைக் கொண்டே உங்களுக்கு எச்சரிக்கை செய்கின்றேன் என (நபியே) நீர் கூறுவீராக! செவிடர்கள் எச்சரிக்கப்படும் போது, இவ்வழைப்பை அவர்கள் செவியுறமாட்டார்கள்.” (21:45)

நபி(ஸல்) அவர்கள் வஹி மூலமாகத்தான் மக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்கள் என்பதை இந்த வசனம் உறுதி செய்கின்றது. இந்த அடிப்டையில் நபி(ஸல்) அவர்கள் கூறிய கூற்றுக்கள் வஹியாக அமைகின்றன. அவற்றை மறுப்பவர் வஹியை மறுப்பவராக கருதப்படுவார்.


“உமக்கு வஹியாக அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! இன்னும் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரை பொறுமையாக இருப்பீராக! அவனே தீர்ப்பளிப்போரில் மிகச் சிறந்தவனாவான்.” (10:109)

இப்னு அப்துல் ரஜாக் said...

ஹதீசும் வஹியே என்பதற்கான மேலும் தொடர்ந்த ஆதாரங்களை இதில் பார்க்கலாம்.


http://www.islamkalvi.com/portal/?p=6334

அல்லாஹ் போதுமானவன்

அதிரை சித்திக் said...

இசை ..தற்போதைய சூழலில் ..

எந்த வகையில் இஸ்லாத்திற்கு உதவுகிறது ..

வணக்க வழிபாடுகளில் ,,நபிகள் இசையை

அங்கீகரித்து இருகிறார்களா ? தங்களுக்கு பதில் தரும்

பின்னூட்டங்களில் அதிகமாக நான் குறிப்பிடும் வார்த்தை

அற்ப உலகம் சொற்ப வாழ்க்கை ..உலக வாழ்வு கண் இமைக்கும்

நேரத்தில் கரைந்து போக கூடியது ..அதில் இசை மழையில்

நனைந்து கொண்டே இருந்தால் நரக நெருப்பில் தான் குளிர் காயனும்

அல்லாஹ் பாது காப்பானாக ...

Yasir said...

நான் எங்கேயாவது போகும்போது காதில் விழும் இசையைத்தவிர.....அதற்க்காக உட்கார்ந்து நேரம் செலவழித்து,ஐபோட் வாங்கியெல்லாம் கேட்டதில்லை அதில் விருப்பமும் இல்லை.....நான் கற்றுக்கொண்ட/கற்றுக்கொடுக்கப்ட்ட மார்க்க அறிவுப்படி ”இசை” இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதுதான்

என்னைப்பொறுத்தவரை இசையை கேட்பதால் எந்தவித நன்மையும் வரப்போவதில்லை,அது கூடும்” என்று வலியுறுத்த வேண்டிய அவசியமும் இல்லை

இசை அனுமதிக்கபட்ட ஒன்றாக இருந்திருந்தால்,அதனை நம் மூதையர்கள் கடைப்பிடித்து இருந்தால் எதாவது ஒரு இடத்தில் அது நம் மார்க்கவிசயங்களின் வெளிப்பட்டு இருக்கும்..அதற்க்கான சான்றுகளே இல்லவே இல்லை

குர் ஆன் அல்லாஹ்விடமிருந்து இரக்கப்பட்டதுதான் ஆனால் அதன் ஒவ்வொரு வரிகளின் உட்பொருள் அல்லாஹ்வினால் நபி(ஸல்) அவர்களுக்கு விளக்கப்பட்டது..அதன் தொகுப்புதான் ஹதீஸ்

இசை தவிர்க்கபடவேண்டிய போதை

அல்லாஹ் நாம் யாவரையும் இஸ்லாம் அனுமதிக்காத ஒன்றின் பக்கம் நாடிச்செல்லாதவர்களாக ஆக்கிவைப்பானாக !!! ஆமீன்

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பான சகோதரர்களே

///“அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தில் முடிவுசெய்து விட்டால் தமது காரியத்தில் சுய அபிப்பிராயம் கொள்வதற்கு முஃமினான எந்த ஆணுக்கும் முஃமினான எந்தப் பெண்ணுக்கும் உரிமை இல்லை. எவன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்கின்றானோ நிச்சயமாக அவன் மிகத் தெளிவான வழிகேட்டில் சென்றுவிட்டான்.” (33:36)///

///1) “மனிதரில் அறிவின்றி அல்லாஹ்வின் வழியிலிருந்து வழிகெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குகின்றவர்களும் இருக்கின்றனர். அதனைப் பரிகாசமாகவும் எடுக்கின்றனர். இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனையுண்டு.” (லுக்மான்:06)

குர்ஆனில் நிறைய வசனங்களை ஆராய்ந்தால், வீணான வெட்டிப் பேச்சுக்கள் பேசுவதைத் தடை செய்கிறது என்று திருக்குர்ஆனைப் பொருள் உணர்ந்து படிக்கும் அனைவருக்கும் புரியும். ஆனால், மேலே குறிப்பிட்டுள்ள ‘வீணான செய்திகள்’ என்று குறிப்பிடுபவைகள் ஏராளமாக இருந்தாலும் அறிவின்றி அல்லாஹ்வின் வழியிலிருந்து வழிகெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்கல் என்ற வர்ணிப்பிற்கு ஒத்த அம்சம் என்ன என்பதை, இரண்டு நபித் தோழர்களின் விளக்கங்கள் தெளிவுபடுத்துகின்றன.

2) “எவனைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறெவரும் இல்லையோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக, ‘வீணான செய்திகள்’ என்பது இசை கலந்த பாடலையே குறிக்கிறது.” என்று இப்னு மஸ்ஊத் (ரழி) கூறுகிறார். (இப்னு அபீஷைபா-21130)

3) “பாடல் போன்றவைகளைப் பற்றியே இவ்வசனம் இறங்கியது.” என்று இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார். (அதபுல் முஃப்ரத்-1265, பைஹகீ-10-221-223)

இசை மூலம் ஷைத்தான் ஒருவனது ஆன்மீகத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறான் என்பதையும், வழிகேட்டின்பால் இட்டுச் செல்கிறான் என்பதையும் மேலே குறிப்பிட்டுள்ள இறைவசனம் தெளிவாக விளக்கப்படுத்துகிறது.///

அல்லாஹ் அவனது மார்க்கத்தில் நமக்கு நல்ல விளக்கத்தையும் அதற்குரிய செயல்பாடுகளையும் தந்து சத்தியம் செழித்தோங்கிட நல்லருள் புரிவானாகவும் -

Unknown said...

அன்பின் சகோ தாஜுதீன்,

>>>>நீங்கள் விரிவாக மறுமொழியில் விளக்குவீர்கள் என்று எதிர்ப்பார்த்தேன், ஆனால் சுட்டிகளை மட்டும் குறிப்பீட்டீர்கள் அது எனக்கு திருப்திகரமாக இல்லை. பின்னூட்டங்கள் நீண்டது, தனிபதிவாக எழுதலாம் என்ற எண்ணத்தில் நம் தேடலில் தெளிவுபெறலாம் என்று அப்பதிவில் நீங்கள் குறிப்பிட்ட இசைவரைவிலக்கணத்திற்காக சுட்டிக்கு மறுமொழியிடுவதை நிறுத்திவிட்டேன்.. :-) <<<<<

இப்படி நீங்கள் பின்வாங்கிவிட்டு, நான் இடவில்லை என்று கூறியது தவறுதானே? நம் கருத்தாடல்களில் நமக்கு நேர்மை அவசியம் அல்லவா?

நீங்கள் திருப்தியடையும் மறுமொழிகளை நான் இடுவதில்லை. எது உண்மையோ அதை மட்டுமே இடுவேன். உங்களிடம் மேலும் ஐயங்கள் இருப்பின் நீங்கள்தான் என்னிடம் கேட்க வேண்டும். எத்தனை முறை கேட்டாலும் நான் பொறுமையாக பதில் இடக்கூடியவன். அதை இச்சபை நன்கறியும் என்று நம்புகின்றேன்.

நீங்கள் எதில் திருப்தியடைவீர்கள், எதில் திருப்தியடைய மாட்டீர்கள் என்பது உங்களுக்கே தெரியும். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. நீங்கள் நான் திருப்தியடையும்படியாகவா உங்கள் கட்டுரையை எழுதி இருக்கிறீர்கள் :-) அப்படி எழுதினால் அது கட்டுரையா? கட்டுக்கதையல்லவா?

உண்மையைச் சொல்கிறேன், ஆவலாக உங்கள் கட்டுரையை வாசிக்கத் தொடங்கினேன். எடுத்த முதல் பத்தியிலேயே இப்படி ஒரு அபாண்டத்தை வாசித்ததும் நெஞ்சு கொதித்துவிட்டது. இது மகா பிழை சகோதரா. இனி செய்யாதீர்கள். அந்தப் பொய்யை உங்கள் கட்டுரையிலிருந்து நீக்குங்கள். நாம் நம் கருத்தாடல்களை ஹலால் வழியில் செய்வோம்.

நான் இங்கே யாருடனும் சண்டையிடுவதற்காக மாங்கு மாங்கென்று எழுதிக்கொண்டிருக்கவில்லை. என்னை அறிவதற்காகவே நான் உங்களைப் படைத்தேன் என்று இறைவன் சொல்கிறான். அந்த அறிதலை வளர்ப்பது ஒன்றே என் நோக்கம். இறைவன் ஒவ்வொருவருக்கும் நல்ல அறிவைத் தந்து அனுப்பி இருக்கிறான். பயன்படுத்துவோம் அதை அறிவதற்காக.

அன்புடன் புகாரி

Unknown said...

அன்புச்சகோ தாஜுதீன் அவர்களுக்கு,

>>>இங்கு நாம் விவாதிப்பது இசையை பற்றி மட்டுமே என்பதை நினைவில் வைத்துக்கொண்டு விவாதிப்போம்.<<<<<

நாம் இசையைப்பற்றியே இங்கே விவாதிக்கிறோம். ஆனால் மேற்கோள்களாக மார்க்க அறிஞர்களை உள்ளிழுக்கும்போது, நாம் அவர்களைப்பற்றிய அறிவினையும் பெறுதல் முக்கியமான விசயம் அல்லவா? சிலரின் குரல்களை நீங்கள் சாட்சியாக எடுக்கும்போது, சாட்சிகளின் தன்மையை நாம் உணராமல் சாட்சிகளை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டுமா? ஏன்?

>>>>பல விடையங்களில் மார்க்க அறிஞர்களின் எவைகளில் முரண்படுகிறார்கள் என்பதை பற்றி விவாதித்தால் நாம் தெளிவுபெறவேண்டிய இசை தொடர்பானவைகளிலிருந்து கவனமில்லாமல் போய்விடும் என்பதை மனத்தில் வைத்துக்கொள்வேமே...<<<<

எவைகளிலெல்லாம் முரண்படுகிறார்கள் என்ற பட்டியலோ அதைபற்றிய கருத்தாடல்களோ நமக்குத் தேவையில்லையாது. ஆனால் ஒன்றே ஒன்றைமட்டும் இங்கே உறுதி செய்துவிடவேண்டும்.

***** இந்த உலகின் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் என்பவர்கள் அனைவருக்கும் ஒரே ஒருமித்த ஒற்றை கருத்து என்பது கிடையவே கிடையாது. ஒருவருக்கு ஒருவர் முரண்பாடுகளைக் கொண்ட கருத்துக்களைத்தான் மார்க்க அறிஞர்கள் முன்வைக்கிறார்கள்.*****

இது உறுதி செய்யப்படும்போதுதான் நம் கருத்தாடல் வலுவானதாய் அமையும். தண்ணீர் மீது மணல்வீடு கட்டமுடியுமா? மண்குதிரையில் ஏறி ஆற்றைக் கடக்கமுடியுமா?

அன்புடன் புகாரி

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//6. எந்த மார்க்க அறிஞர் நமக்குச் சாதகமாகச் சொல்கிறாரோ அதை மட்டும் நாம் எடுத்துக்கொண்டு, நமக்குச் சாதகமாகமில்லாததை ஓரங்கட்டிவிடவேண்டும்//

ஏற்றுக்கொள்ளமுடியாத வார்த்தை.நமக்கு விருப்பப்பட்டதை கூடுமாக்கிக் கொள்ள தவறான வழி.

இதன் படி பார்த்தால் மார்க்க அறிஞருக்கும் வரைவிலக்கணம் தேவை.

மார்க்க அறிஞர் சிலர் சில கருவில் தன்னிறைவு அடையாமல் தன் அறிவுக்கு புலப்பட்டதை சரியெனக் கொள்ளலாம். எனவே இதில் பொதுவான மார்க்க அறிஞரின் கருத்துக்களையே மையப் படுத்தி தீர்வுக்கு வரனும்.

Unknown said...

அன்பினிய சகோ தாஜுதீன்,

>>>>நபிகளார் பேசிதெல்லாம் குர்ஆன் என்பதுபோல நான் குறிப்பிட்டுள்ளதாக நீங்கள் எழுதியுள்ளது தவறு<<<<

என்றால் சரி. குர்-ஆனில் உள்ள வசனங்கள் மட்டுமே இறைவன் அருளியது மற்றவை அல்ல என்பதை ஏற்கிறீர்கள். இறைவன் அருளியதுதான் நமக்கு அடிப்படை.

“வஹீ வந்த குர்-ஆன் வசனங்களைத் தவிர, நான் கூறும் மற்ற விசயங்களுக்கு நானே பொறுப்பு. இறைவன் பொறுப்பாக மாட்டான். இறைவன் நபிமார்களுக்கு ஒவ்வொரு சிறப்பினைக் கொடுத்திருக்கிறான். எனக்குக் கொடுத்தது குர்-ஆன் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை” இப்படி நபிகளே சொன்னதாக நான் கேட்டிருக்கிறேன். அறிந்தவர்கள் இதனை விளக்கமாக இங்கே எழுதினால் நான் அறிந்துகொள்வேன். நான் அறிவுதேடும் ஒரு மகா சிறுவன்.

நபிகள் நாயகம் ஒருமுறை ஓர் உழவனிடம் இதை நடு இப்படி வரும் என்று சொல்லிச் சென்றாராம். அவனும் அப்படியே செய்தானாம். ஆனால் சில காரணங்களால் பலன் வேறுமாதிரி அமைந்ததாம். உழவன் நபிகளில் முறையிட்டானாம். அதற்கு நபிகளோ நான் இறைவன் இல்லை. நான் சொன்னது இறைவசனமும் இல்லை. என்று கூறியதாக ஒருவர் கூறக்கேட்டேன். இது சரியானதா என்பதையும் அறிந்தோர் அறியத்தாருங்கள், மகிழ்வேன்.

இரண்டாவதாக நாம் கருத்தாடுவதற்கு இது ஒரு முக்கியமான விசயம். இந்த அடித்தளங்களில்தான் நம் கருத்தாடல்கள் வலுவாக அமையமுடியும். இதோ அந்த இரண்டாவது முக்கியமான விசயம்:

****** குர்-ஆன் இறைவனின் வசனம், அதில் ஒரு சொல்லையும் யாருக்கும் எவருக்கும் மாற்றுவது இயலாது. அதுதான் இஸ்லாமியனின் மூலாதாரம். வஹீ தவிர நபிகள் சொன்னதெல்லாம் இறைவன் சொன்னவை அல்ல. அதற்கான பொறுப்பை இறைவன் ஏற்கமாட்டான். நபிகள்தான் ஏற்கிறார்கள்.*****

அன்புடன் புகாரி

Unknown said...

அன்பின் சகோ அர அல,

>>>>அதை விட்டு விட்டு,இப்படி விதண்டாவாதம் செய்வது என்பது சரியில்லை.நீங்கள் கற்பனை செய்து வைத்திருக்கும் முடிவுதான் சரியென்று நீங்கள் வாதாடினால்,அவர் தந்த குரான்,ஹதீசுக்கு உங்கள் பதில் என்ன?<<<<

இப்படிப் பேசுவதையே நீங்கள் வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறீர்கள். அன்போடு கூறுகிறேன். நீங்கள் மாறவேண்டும். ஒரு கருத்தாடலில் நாம் அறிவு தேடும் முகமாகத்தான் மறுமொழிகள் இடவேண்டும். ஆணையிடும் தோரணையில் மறுமொழிகள் இடக்கூடாது. அறிவான விசயங்களை எடுத்து முன் வையுங்கள். இயலாவிட்டால், அமைதியாக கருத்தாடலைக் கவனமாக வாசியுங்கள்.

குரான், ஹதீசுக்கு பதில் என்ன என்பதை நான் இன்னும் சொல்லத் தொடங்கவே இல்லையே. அதற்குள் ஏன் இந்த முந்திரிக்கொட்டை விளையாட்டு.

சகோ தாஜுதீனின் கட்டுரையின் ஒவ்வொரு விசயத்திற்கும் நான் பதில் சொல்லாமல் என் கருத்தாடல் நிறைவாகாது. அமைதியாக இருங்கள். யோசியுங்கள். கருத்துக்களைக் கிரகியுங்கள். மனதையும் அறிவையும் திறந்து வையுங்கள். கொஞ்சம் காற்று உள்ளே வரட்டும். பிடிவாதங்கள் மாறும். உண்மையான அறிவுக்குப் பிடிவாதங்களை மாற்றக்கூடிய மகத்தான சக்தி இருக்கிறது.

புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகின்றேன். இறைவன் அதற்கு அருள்புரிவானாக.

அன்புடன் புகாரி

Unknown said...

அன்பின் சகோ அர அல,
அஸ்ஸலாமு அலைக்கும்

>>>>>ஹதீசும் வஹியே என்பதற்கான மேலும் தொடர்ந்த ஆதாரங்களை இதில் பார்க்கலாம்.<<<<

அடிப்படையிலே உங்களுக்கு நிறைய ஆட்டம் தெரிகிறதே?

ஹதீஸ் என்றால் என்ன என்று உங்களால் கூறமுடியுமா? ஹதீஸ் என்றால் என்ன என்று நீங்கள் புரிந்து வைத்திருக்கிறீர்கள். சற்று விளக்கமாக எழுதுங்கள். அவர் சொன்னான் இவர் சொன்னான் என்று எதையாவது வெட்டி ஒட்டிக்கொண்டிருந்தால் கருத்தாடல் சரியான திசையில் செல்லாது. என்னால் ஒரு ஆயிரம் விசயங்களை இங்கே வெட்டி ஒட்டமுடியும். ஆனால் அது வெட்டி வேலையல்லவா?

நீங்கள் வெட்டி ஒட்டுவது குர்-ஆன் வசனமாக இருக்கட்டும். ஏற்புடைய ஹதீசாக மட்டும் இருக்கட்டும்.

அனைத்துக்கும் முதலில் ஹதீஸ் என்றால் என்ன? அதன் வரலாறு என்ன? யார் தொகுத்தார்? எப்போது தொகுத்தார்? என்ற அனைத்தையும் இங்கே எழுதுங்கள். அது இந்தக் கருத்தாடலுக்கு ஆக்கப்பூர்வமானதாய் இருக்கும்.

அன்புடன் புகாரி

Unknown said...

அன்பின் சகோ சித்திக்,
அஸ்ஸலாமு அலைக்கும்!

>>>>>இசை ..தற்போதைய சூழலில் .. எந்த வகையில் இஸ்லாத்திற்கு உதவுகிறது ..
வணக்க வழிபாடுகளில் ,,நபிகள் இசையை
அங்கீகரித்து இருகிறார்களா ? தங்களுக்கு பதில் தரும்
பின்னூட்டங்களில் அதிகமாக நான் குறிப்பிடும் வார்த்தை
அற்ப உலகம் சொற்ப வாழ்க்கை ..உலக வாழ்வு கண் இமைக்கும்
நேரத்தில் கரைந்து போக கூடியது ..அதில் இசை மழையில்
நனைந்து கொண்டே இருந்தால் நரக நெருப்பில் தான் குளிர் காயனும்
அல்லாஹ் பாது காப்பானாக ... <<<<<<

நாம் இங்கே குர்-ஆனையும் ஹதீசையும் அறிய முற்படுகிறோம். அதில் இசை தடைசெய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதை கண்டறிய முயல்கிறோம். அந்த திசையில் உங்களால் ஏதேனும் சொல்லமுடியுமா? அதைவிட்டுவிட்டு இப்படி பிடி சாபம் என்று சாபங்களை என்மீது ஏற்றி அடுக்குகிறீர்களே? இது நியாயமா? ஏன்?

கோபம் என்மீதா அல்லது உண்மையை அறிந்துகொள்ள முயல்பவர்களின் அறிவின் மீதா?

அன்புடன் புகாரி

Unknown said...

அன்பின் சகோ யாசிர்,
அஸ்ஸலாமு அலைக்கும்!

>>>>நான் எங்கேயாவது போகும்போது காதில் விழும் இசையைத்தவிர.....அதற்காக உட்கார்ந்து நேரம் செலவழித்து, ஐபேட் வாங்கியெல்லாம் கேட்டதில்லை அதில் விருப்பமும் இல்லை.....நான் கற்றுக்கொண்ட/கற்றுக்கொடுக்கப்பட்ட மார்க்க அறிவுப்படி ”இசை” இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதுதான்<<<<

நேர்மையாக எழுதி இருக்கிறீர்கள். இசையைக் கேட்கிறீர்கள். ஆனால் அதன்பின் அலைவதில்லை. நிச்சயமாக சினிமா பார்ப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஓர் உணவகத்தில்கூட மெலிதாய்ப் பொழியும் வார்த்தைகள் இல்லா வாத்திய இசையோடு உணவு உண்டிருக்கும் வாய்ப்புகளும் அமைந்திருக்கும். இப்படியானவர்கள்தாம் 90 சதவிகிதத்தினர்.

”கற்றுக்கொடுக்கப்பட்ட மார்க்க அறிவுப்படி”

இதை நீங்கள் உங்கள் மறுமொழியில் கூறியிருப்பது சிறப்பு. கற்றுக்கொடுக்கப்பது எப்படியோ அப்படித்தான் நீங்கள் நினைத்திருக்கிறீர்கள். அதைத்தாண்டி எந்த ஆய்வும் செய்து முடிவுக்கு வரவில்லை.

கவிதை ஹராம் என்றுதான் நமக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது. ஆனால் இங்கே ஓர் அறிஞர் அதை அற்புதமாய் உடைக்கிறார்.

நான் யாரிடமிருந்து கற்கிறோமோ, அவரின் அறிவுக்கும் எல்லை உண்டு. அவருக்கு யார் சொல்லித் தந்தாரோ அவரின் அறிவுக்கும் எல்லை உண்டு. எல்லையில்லா அறிவினைப் பெற்றவர் எவரும் இல்லை. நபிகள் நாயகமும் இல்லை. எல்லை இல்லா அறிவினைப் பெற்றவன் இறைவன் ஒருவனே. அதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். பின் கருத்தாடலை ஊன்றிப் படியுங்கள். பின் உங்கள் மனமும் அறிவும் செல்லும் திசையில் செல்லுங்கள்.

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

அன்புச்சகோ தாகா,
அஸ்ஸலாமு அலைக்கும்!

>>>>>அல்லாஹ் அவனது மார்க்கத்தில் நமக்கு நல்ல விளக்கத்தையும் அதற்குரிய செயல்பாடுகளையும் தந்து சத்தியம் செழித்தோங்கிட நல்லருள் புரிவானாகவும் <<<<

மிக அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். நல்ல விளக்கத்தைப் பெறுவோம். அந்த ஏக இறைவன் நமக்குத் தந்த அறிவினைக் கொஞ்சம் நாம் செலவு செய்தால் போதும். நல்ல விளக்கத்தை இறைவன் நிச்சயமாக நமக்குத் தருவான்.

என்னை அறிவதற்கேயன்றி வேறு எதற்காகவும் நான் உங்களைப் படைக்கவில்லை என்று இறைவன் கூறுகிறானல்லவா? அதன் பொருள் என்ன? நாம் ஒவ்வொருவரும் அவனை அறிவதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும்.

எனக்குச் சில மார்க்க அறிஞர்கள் சொல்லிட்டாங்க, இனியொரு மாற்றுக்கருத்தில்லை என்று எண்ணி நாம் இறைவனை அறியும் முயற்சியை நிறுத்திவிடுதல் கூடாது.

உலகம் தட்டை என்று சொன்னவர்கள் மார்க்க அறிஞர்கள்தாம்.
கவிதை ஹராம் என்று கூறியவர்கள் மார்க்க அறிஞர்கள்தாம்.
பெண்கள் கல்வி கற்கக்கூடாது என்று கூறியவர்கள் மார்க்க அறிஞர்கள்தாம்
பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது என்று கூறியவர்கள் மார்க்க அறிஞர்கள்தாம்
இறைவனுக்கு உருவம் உண்டு
இறைவன் ஓர் ஆண்மகன்

இப்படியாய் நிறைய உண்டு.

குர்-ஆனின் கருத்துப்படி, இறைவன் எவற்றை உறுதியாகக் கூறி தடை செய்யவில்லையோ அவற்றை மனிதன் தடைசெய்வது கூடவே கூடாது

Say: “Who has forbidden the nice things that God has brought forth for His servants and the good provisions?” Say: “They are meant for those who believe during this worldly life, and they will be exclusive for them on the Day of Resurrection.” It is such that We explain the revelations for those who know. [7:32]

You shall not invent lies about God by attributing lies with your tongues, saying: "This is lawful and that is forbidden." Those who invent lies about God will not succeed. [16:116]

அன்புடன் புகாரி

Unknown said...

அன்பினிய சகோ சாதிக்,
அஸ்ஸலாமு அலைக்கும்!

>>>>>>>>>>//6. எந்த மார்க்க அறிஞர் நமக்குச் சாதகமாகச் சொல்கிறாரோ அதை மட்டும் நாம் எடுத்துக்கொண்டு, நமக்குச் சாதகமாகமில்லாததை ஓரங்கட்டிவிடவேண்டும்//

ஏற்றுக்கொள்ளமுடியாத வார்த்தை. நமக்கு விருப்பப்பட்டதை கூடுமாக்கிக் கொள்ள தவறான வழி. இதன் படி பார்த்தால் மார்க்க அறிஞருக்கும் வரைவிலக்கணம் தேவை. மார்க்க அறிஞர் சிலர் சில கருவில் தன்னிறைவு அடையாமல் தன் அறிவுக்கு புலப்பட்டதை சரியெனக் கொள்ளலாம். எனவே இதில் பொதுவான மார்க்க அறிஞரின் கருத்துக்களையே மையப் படுத்தி தீர்வுக்கு வரனும். <<<<<<<<<

அருமை அருமை. இதைத்தான் நான் மீண்டும் மீண்டும் முன் வைக்கிறேன்.

ஆகவே சகோதரர்களே, மார்க்க அறிஞர்கள் என்போர் எதனைக் கூறினாலும் அதனையும் ஆய்வுக்கு உட்படுத்துதலே ஓர் இஸ்லாமியனின் அறிவுடைமை. அதற்காகவே இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அறிவினைத் தந்திருக்கிறான். நம்மை ஆட்டு மந்தைகளாய் அவன் படைக்கவே இல்லை. அவனை அறிவதற்காகவும் தெளிவதற்காகவும் உண்மையான முஸ்லிமாக வாழ்வதற்காகவுமே படைத்திருக்கிறான்.

அன்புடன் புகாரி

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வ- அலைக்குமுஸ்ஸலாம்

தங்களின் பதிலுக்கு நன்றி!

// நமக்கு விருப்பப்பட்டதை கூடுமாக்கிக் கொள்ள தவறான வழி. //

மேற்கண்ட எனது வார்த்தையை கவனத்தில் கொள்ளவில்லையா?

99 சதவீத தெளிவான மார்க்க அறிஞர்கள் இசையை கூடாது என்று சொல்கிறார்களெனில் ஒரு சதவீத மார்க்க அறிஞர்
(அறிஞராகிய {இன்சா அல்லாஹ்} ஒரு வேளை நீங்கள்)
சொல்வதை எப்படி ஏற்க முடியும்?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//இப்படி நீங்கள் பின்வாங்கிவிட்டு, நான் இடவில்லை என்று கூறியது தவறுதானே? நம் கருத்தாடல்களில் நமக்கு நேர்மை அவசியம் அல்லவா?//

நான் மிகத்தெளிவாக சொல்லிவிட்டேன், மீண்டும் இந்த கட்டுரையில் உள்ள வாசகத்தை பதிகிறேன்

அச்சகோதரரின் வாதத்தின் மூலம், அவர் சொல்லும் இசைக்கான வரைவிலக்கணம் எது என்று அவரிடமே கேட்டேன், சரியான பதில் வரவில்லை

நீங்கள் பதிலே தரவில்லை, சுட்டி இடவில்லை என்று எங்கு குறிப்பிட்டுள்ளேன்? நீங்கள் விரிவாக மறுமொழியில் விளக்குவீர்கள் என்று எதிர்ப்பார்த்தேன், ஆனால் சுட்டிகளை மட்டும் குறிப்பீட்டீர்கள் அது எனக்கு திருப்திகரமாக இல்லை. பின்னூட்டங்கள் நீண்டது, தனிபதிவாக எழுதலாம் என்ற எண்ணத்தில் நம் தேடலில் தெளிவுபெறலாம் என்று அப்பதிவில் நீங்கள் குறிப்பிட்ட இசைவரைவிலக்கணத்திற்கான சுட்டிக்கு மறுமொழியிடுவதை நிறுத்திவிட்டேன்.. :-) இதில் தவறேதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

பின் வாங்கிவிட்டேன் என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் அதற்காக நான் கோபம்கொள்ள மாட்டேன்..இருப்பினும் நீங்கள் குறிப்பிட்ட வரிகள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தினால் அவ்வரிகளை நீக்க நெறியாளர் அவர்களிடம் மின்னஞ்சலில் தெரிவித்து நீக்க சொல்லுகிறேன்.

எந்த ஒரு விடையத்தை ஆய்வு செய்வதாக இருந்தாலும் ஒரு அடிப்படையுடனே ஆய்வு செய்யவேண்டும், இல்லையென்றால் அந்த ஆய்வு அர்த்தமற்றதாகவே போகும்.

இசைக்காக நான் எடுத்துக்கொண்ட அடிப்படையை இந்த கட்டுரையின் முதல் பகுதியில் மிகத்தெளிவாக சொல்லிவிட்டேன்..

இக்கட்டுரை, திருகுர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையிலும், குர்ஆன் சுன்னாவை 1400 ஆண்டுகள் முதல் இன்று வரை எடுத்துரைக்கும் பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் விளக்கங்களின் அடைப்படையிலும் தொகுப்பட்டது என்பதை இதை வாசிக்கும் அன்பு நேசங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். குர்ஆன் மற்றும் ஆதரப் பூர்வமான ஹதீஸ்கள் அல்லாமல் சொந்தக் கருத்தாக ஒரு பெரியார் சொன்னார், ஒரு அறிஞர் சொன்னார், அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று எடுத்துவைக்கும் எந்த வாதமும் இஸ்லாமிய சட்டமாகாது என்பதையும் இங்கு நினைவூட்டுகிறேன்.

மேல் சொன்னவைகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது, இதிலே உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், இனி உங்களுக்கு தெளிவுபடுத்துவது கடினமே..

// நீங்கள் நான் திருப்தியடையும்படியாகவா உங்கள் கட்டுரையை எழுதி இருக்கிறீர்கள் :-) அப்படி எழுதினால் அது கட்டுரையா? கட்டுக்கதையல்லவா?//

நீங்கள் திருப்தியடைவதற்காக எழுதவில்லை... இது அல்லாஹ்வுக்காக எழுதியதை...

குர்ஆன் வசனங்கள் ஹதீஸ்களை வைத்து எழுதியிருப்பதை.. கட்டுரையா அல்லது கட்டுக்கதையா என்று கிண்டலாக சொல்லியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்..

மீண்டும் சொல்லுகிறேன்..

இந்த பதிவின் குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் இசை கூடாது என்று எடுத்துவைத்துள்ளேன்.நீங்களும் குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் இசை கூடும் என்று வாதிட்டால் நலம். இதை தவிர்த்து திசை திருப்பும் வேறு எந்த சொந்த விளக்கங்கள், ஆதாரமற்ற செய்திகளை வைத்து விவாத்திப்பது.. நேர விரையமே .... நேர விரையமே... நேர விரையமே.....

அல்லாஹ் நம் எல்லோருக்கும் நேர்வழி காட்டுவானாக....

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

M.S. சபீர் அகமது (மு.செ.மு) சொன்னது…
பயனுல்ல கட்டுரைகளும் நல்ல கருத்துக்களும் எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே ! //

வாங்க ! (MSM)-சபீர் காக்கா ! நல்வரவு !
அதிரை சித்தீக் (காக்கா)win mirror இவங்க ! :)

Unknown said...

அன்பின் சகோ சாதிக்,
அஸ்ஸலாமு அலைக்கும்!

>>>>99 சதவீத தெளிவான மார்க்க அறிஞர்கள் இசையை கூடாது என்று சொல்கிறார்களெனில் ஒரு சதவீத மார்க்க அறிஞர்
(அறிஞராகிய {இன்சா அல்லாஹ்} ஒரு வேளை நீங்கள்) சொல்வதை எப்படி ஏற்க முடியும்?<<<<

1. நான் இன்னும் சொல்லவே தொடங்கவில்லையே!

2. 99 விழுக்காடு தெளிவான மார்க்க அறிஞர்கள் கவிதைகளை ஹராம் என்கிறார்கள். ஆய்வாளர் மூத்தசகோ அகமது அவர்கள் இங்கே எழுதவில்லையா?

என்னை ஏன் எழுதவிடாமல் செய்கிறீர்கள்? என்னை எழுத விடுங்களேன். எழுதி முடித்ததும், நானே இஸ்லாமில் இசை கூடாது என்று சொல்லலாம் இல்லையா? ஏன் ஆய்வுகளிலிருந்து விடுபட எண்ணவேண்டும் நாம்?

அன்புடன் புகாரி

Unknown said...

அன்பின் சகோ தாஜுதீன்,
அஸ்ஸலாமு அலைக்கும்!

>>>>நீங்கள் குறிப்பிட்ட வரிகள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தினால் அவ்வரிகளை நீக்க நெறியாளர் அவர்களிடம் மின்னஞ்சலில் தெரிவித்து நீக்க சொல்லுகிறேன்.<<<<

பிழையானதைக் கேட்கும்போது எல்லோருக்கும் வருமே அதே சங்கடம்தான் எனக்கும். ஆகவே அந்த வரிகளை நீக்குவது உங்கள் மனதுக்கும் ஏற்புடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

>>>>எந்த ஒரு விடையத்தை ஆய்வு செய்வதாக இருந்தாலும் ஒரு அடிப்படையுடனே ஆய்வு செய்யவேண்டும், இல்லையென்றால் அந்த ஆய்வு அர்த்தமற்றதாகவே போகும்.<<<<

நான் இன்னும் என் ஆய்வையே தொடங்கவில்லையே? உங்கள் ஆய்வைத் தானே அலசிக்கொண்டிருக்கிறேன்.

>>>>இசைக்காக நான் எடுத்துக்கொண்ட அடிப்படையை இந்த கட்டுரையின் முதல் பகுதியில் மிகத்தெளிவாக சொல்லிவிட்டேன்..<<<<

உங்கள் தெளிவு என்பது எவ்வளவு தூரம் சரி என்று ஆய்ந்து தெளிந்துகொள்ள விருப்பம் இல்லையா உங்களுக்கு. இறைவனே பேசுவதுப்போல் பேசுவது இஸ்லாமில் நல்லதா? நாம் இங்கே கருத்தாடுகிறோம். அப்படிக் கருத்தாடும்போது, நான் சொல்லிவிட்டேன், அதற்கு மறுப்பா என்பதுபோல் உரையாடுதல் பலன் தராது.

என்னை ஏன் எழுதவிடாமல் முடக்கப் பார்க்கிறீர்கள்? என்னை எழுத விடுங்களேன். எழுதி முடித்ததும், நானே இஸ்லாமில் இசை கூடாது என்று சொல்லலாம் இல்லையா?

>>>>>இக்கட்டுரை, திருகுர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையிலும், குர்ஆன் சுன்னாவை 1400 ஆண்டுகள் முதல் இன்று வரை எடுத்துரைக்கும் பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் விளக்கங்களின் அடைப்படையிலும் தொகுப்பட்டது என்பதை இதை வாசிக்கும் அன்பு நேசங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். <<<<<

கவிதைகள் ஹராம் என்று எத்தனை விழுக்காடு அறிஞர்கள் எத்தனை ஆண்டுகளாகச் சொல்லி வருகிறார்கள்? அதற்கான புள்ளிவிபரத்தையும் தாருங்களேன்.

>>>>>குர்ஆன் மற்றும் ஆதரப் பூர்வமான ஹதீஸ்கள் அல்லாமல் சொந்தக் கருத்தாக ஒரு பெரியார் சொன்னார், ஒரு அறிஞர் சொன்னார், அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று எடுத்துவைக்கும் எந்த வாதமும் இஸ்லாமிய சட்டமாகாது என்பதையும் இங்கு நினைவூட்டுகிறேன்.<<<<

இங்கு அப்படி யாரும் எதையும் எடுத்துவைத்தார்களா? நீங்களாகவே ஏதேதோ கற்பனை செய்துகொள்கிறீர்கள் சகோ தாஜுதீன்!

>>>>குர்ஆன் வசனங்கள் ஹதீஸ்களை வைத்து எழுதியிருப்பதை.. கட்டுரையா அல்லது கட்டுக்கதையா என்று கிண்டலாக சொல்லியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்..<<<<

என்னாச்சு உங்களுக்கு? அப்படி நான் எங்கே எழுதி இருக்கிறேன். நீங்கள் சினம் கொண்டுள்ளீர்கள். சினத்தோடு காணும்போது எந்த விசயமும் வேறு முகம்தான் காட்டும். இப்போது அதே வரிகளை வெட்டி இங்கே இடுகிறேன். சினத்தைத் தணித்துக்கொண்டு பிறகு வாசியுங்கள்:

*************நீங்கள் எதில் திருப்தியடைவீர்கள், எதில் திருப்தியடைய மாட்டீர்கள் என்பது உங்களுக்கே தெரியும். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. நீங்கள் நான் திருப்தியடையும்படியாகவா உங்கள் கட்டுரையை எழுதி இருக்கிறீர்கள். அப்படி எழுதினால் அது கட்டுரையா? கட்டுக்கதையல்லவா?************


>>>>மீண்டும் சொல்லுகிறேன்..

இந்த பதிவின் குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் இசை கூடாது என்று எடுத்துவைத்துள்ளேன். நீங்களும் குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் இசை கூடும் என்று வாதிட்டால் நலம். இதை தவிர்த்து திசை திருப்பும் வேறு எந்த சொந்த விளக்கங்கள், ஆதாரமற்ற செய்திகளை வைத்து விவாத்திப்பது.. நேர விரையமே .... நேர விரையமே... நேர விரையமே.....<<<<

நான் இன்னும் எதையும் கூறத் தொடங்கவே இல்லையே. அந்த முதல் குர்-ஆன் வசனத்தைக்கூட இன்னும் நான் ஆய்வுக்குள் கொண்டுவரவில்லையே? ஏன் இப்படி அங்கலாக்கிறீர்கள். அமைதியடையுங்கள்.

நான் ஏதேனும் இப்போது ஆதாரமற்ற விசயத்தை எடுத்து முன்வைத்தேனா? எதையேனும் திசை திருப்பினேனா? உங்களின் கட்டுரையில் ஒவ்வொரு பத்தியாக அலசி வருகிறேன். இன்னும் முக்கியப் பகுதிக்கே வரவில்லை. எழுத விடமாட்டேன் என்று குறுக்கே நின்று ஏன் வம்படிக்கிறிர்கள். உங்களுக்க்கு எதன் மீது அச்சம்?

மனதையும் அறிவையும் திறந்து வையுங்கள், நாம் அலசி ஆராய்வோம்! ஏற்புடையதை ஏற்போம் ஏற்க இயலாததை ஏற்காமல் விடுவோம். இக் கண்ணோட்டத்தில் ஏதும் குறையுள்ளதா?

நான் இட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லப் பாருங்கள். அதைவிட்டுவிட்டு “நான் சொல்லிவிட்டேன்”. “நான் சொல்லிவிட்டேன்” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். எல்லோரும் வாசித்துக்கொண்டிருக்கிறார்கள் இங்கே!

அன்புடன் புகாரி

Unknown said...

>>>>M.S. சபீர் அகமது (மு.செ.மு) சொன்னது…
பயனுல்ல கட்டுரைகளும் நல்ல கருத்துக்களும் எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே ! //

வாங்க ! (MSM)-சபீர் காக்கா ! நல்வரவு !
அதிரை சித்தீக் (காக்கா)win mirror இவங்க ! :)<<<

நன்றி. இங்கே இரண்டு சபீர் அகமது இருக்கிறார்களா?

எனக்கு அனைவரின் அறிமுகமும் வேண்டும்.

அதிரை நிருபர் அறிமுகம் என்று ஓர் இழை தொடங்கினால் என்ன?

அன்புடன் புகாரி

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

//m.nainathambi.அபுஇபுறாஹிம் சொன்னது…

M.S. சபீர் அகமது (மு.செ.மு) சொன்னது…
பயனுல்ல கட்டுரைகளும் நல்ல கருத்துக்களும் எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே ! //

வாங்க ! (MSM)-சபீர் காக்கா ! நல்வரவு !
அதிரை சித்தீக் (காக்கா)win mirror இவங்க ! ://சித்தீக்கின் மூக்குகன்னாடியா முகம்பார்க்கும்கன்னாடியா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அதிரை நிருபர் அறிமுகம் என்று ஓர் இழை தொடங்கினால் என்ன?

அன்புடன் புகாரி//

http://adirainirubar.blogspot.com/2011/02/blog-post_9382.html

http://adirainirubar.blogspot.com/2012/03/blog-post_6220.html

இந்த இரண்டு பதிவுகளில் பிரதிபலிக்கும் தங்களின் கேள்விக்கான பதில் ! :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//சித்தீக்கின் மூக்குகன்னாடியா முகம்பார்க்கும்கன்னாடியா//

அவரின் 'கண்'முன்னாடி(தான்) நீங்க !

sabeer.abushahruk said...

//வாங்க ! (MSM)-சபீர் காக்கா ! நல்வரவு !
அதிரை சித்தீக் (காக்கா)win mirror இவங்க ! //

://சித்தீக்கின் மூக்குகன்னாடியா முகம்பார்க்கும்கன்னாடியா//

சபீர் பாய், mirror மூக்குக்கண்ணாடியாகவே முடியாது :)

Meerashah Rafia said...

மாஷா அல்லாஹ்..இந்த ஆய்வறிக்கையை எழுதி முடிக்க பல நாள் ஆகிருக்கக்கூடும்.
இதை பற்றி நானும் பலமுறை மண்டையை பிய்துக்கொண்டதுண்டு.. இன்று வரை..
ஆய்வுகள் தொடரட்டும்..மனம் தளராமல்..

Unknown said...

அருமையான தொகுப்பு. அதுவும் ஆஸ்தான கவிஞர் தொகுத்த அழகான தொகுப்பு. அறிவுரையோரின் பட்டியல் கண்டு அன்புடையோனின் உள்ளம் வட்டில் அப்பத்தில் விழுந்தது. நன்றி நெய்னா தம்பி. தம்பி என்று சொல்லிக்கொள்வதைவிட தகப்பன் என்று சொல்லிக்கொள்வதைத்தான் விரும்புகிறீர்களோ?

அன்புடன் புகாரி

sabeer.abushahruk said...

ஏறத்தாழ தம்பி யாசிரின் நிலைப்பாடுதான் எனதும்.

இருந்தாலும் இன்னும் சற்று கூடுதலாக இசைப்பாடல்களை, இளையராஜாவின் நத்திங் பட் வின்ட் எனும் ஆல்பத்தை, ஜாகிர் ஹுசேனின் தபேலாவை, ஏ ஆர் ரஹ்மானின் பல திரை இசைப் பாடல்களை மிகவும் விரும்பிக் கேட்பவன் நான்.

கூடாதே, முறையாக கீ போர்ட் கற்றுக்கொண்டு சொந்தமாக மெட்டுகள் அமைத்தும் ரசித்ததுண்டு.

இருந்தாலும், இசை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல/அனுமதிக்கப்பட்டது என்ற தீர்மாணங்கள் இங்கொன்றும் அங்கொன்றும் காதில் விழத் துவங்கிய பின்னும் என் ரசனையை நான் விட்டுக்கொடுத்ததில்லை. தொடர்ந்து பாடல்களை ரசனையின் அடிப்படையில் சேகரிப்பது, கேட்டு ரசிப்பது என்று என் இசை கேட்கும் பழக்கத்தைத் தொடர்ந்து கொண்டுதான் இருந்தேன்.

ஆயினும், ஒரே ஒரு விடயத்தை உணர்ந்தபின் தற்போது இசைமீதான இச்சையைக் குறைத்துக்கொண்டு வருகிறேன்.

அது... சர்ச்சைக்குறிய ஹதீஸ்களோ ஆளாளுக்கு விளக்கம் தரும் குர் ஆன் மொழிபெயர்புகளோ அல்ல. மாறாக, இஸ்லாத்தில் போதை தடுக்கப்பட்டது என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வர். அதனடிப்படையில்

எனக்கு
இசையில்
போதை கிடைக்கிறது

எனவே, தவிர்க்க முயன்று வருகிறேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோதரர் அன்புடன் புகாரி அவர்களுக்கு,

//பிழையானதைக் கேட்கும்போது எல்லோருக்கும் வருமே அதே சங்கடம்தான் எனக்கும். ஆகவே அந்த வரிகளை நீக்குவது உங்கள் மனதுக்கும் ஏற்புடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.//

புரிதல் ஏற்பட்ட குழப்பமே தவிர வேறுதுவுமில்லை நெறியாளர் நீக்கவேண்டியவைகளை நீக்கிவிட்டார். சந்தோசம் தானே...

நான் இதற்கு முன் இட்ட மறுமொழியில் பின் வருபவைகள் ஒரு கருத்தே சார்ந்ததாகவே உள்ளது, அவைகளை பிரித்து வெவ்வெறு விதமாக பதிலிப்பது ஏற்புடையதாக இல்லை... தயவு செய்து மீண்டும் அவைகளை வாசியுங்கள் தடித்த எழுத்தில் உள்ளவை கட்டுரையில் கூறப்பட்டுள்ளவையே, மறுமொழியாக புதிதாக சொல்லவில்லை, கற்பனையல்ல...

////// எந்த ஒரு விடையத்தை ஆய்வு செய்வதாக இருந்தாலும் ஒரு அடிப்படையுடனே ஆய்வு செய்யவேண்டும், இல்லையென்றால் அந்த ஆய்வு அர்த்தமற்றதாகவே போகும்.

இசைக்காக நான் எடுத்துக்கொண்ட அடிப்படையை இந்த கட்டுரையின் முதல் பகுதியில் மிகத்தெளிவாக சொல்லிவிட்டேன்..

இக்கட்டுரை, திருகுர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையிலும், குர்ஆன் சுன்னாவை 1400 ஆண்டுகள் முதல் இன்று வரை எடுத்துரைக்கும் பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் விளக்கங்களின் அடைப்படையிலும் தொகுப்பட்டது என்பதை இதை வாசிக்கும் அன்பு நேசங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். குர்ஆன் மற்றும் ஆதரப் பூர்வமான ஹதீஸ்கள் அல்லாமல் சொந்தக் கருத்தாக ஒரு பெரியார் சொன்னார், ஒரு அறிஞர் சொன்னார், அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று எடுத்துவைக்கும் எந்த வாதமும் இஸ்லாமிய சட்டமாகாது என்பதையும் இங்கு நினைவூட்டுகிறேன். I wrote this paragraph in the article///////////

தயவு செய்து கருத்தை ஒட்டியே உள்ளவைகளை ஒட்டியே கருத்திடவும், இங்கொன்றும் அங்கொன்றும் வெட்டி எடுத்து கருத்திட வேண்டாம். கருத்தாடும் திசை மாறிப்போக வாய்ப்பாகிவிடும் அல்லவா?


நான் கேட்பது ரொம்ப சிம்பிலான விசயம். நினைவூட்டலுக்காக.

குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் இசை கூடாது என்று எடுத்துக்காட்டப்பட்டுள்ளது, இது தவறு உள்ளது என்பதை குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையிலே தெளிவாக்க வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பம்.


//////நான் இன்னும் என் ஆய்வையே தொடங்கவில்லையே? உங்கள் ஆய்வைத் தானே அலசிக்கொண்டிருக்கிறேன்.///

எந்த அடிபடையை வைத்து என்னுடைய ஆய்வை அலசுகிறீர்கள் என்று தெரிந்துக்கொள்ளலாமா?

//கவிதைகள் ஹராம் என்று எத்தனை விழுக்காடு அறிஞர்கள் எத்தனை ஆண்டுகளாகச் சொல்லி வருகிறார்கள்? அதற்கான புள்ளிவிபரத்தையும் தாருங்களேன்.//

இங்கு நாம் விவாதிக்கொண்டிருப்பது இசையை பற்றியே, கவிதைகளை அல்ல... இதற்கான புள்ளிவிபரம் தருவதற்கு தகுதியான நபர் நீங்கள் தான்..

இறைவனை தவிர வேறு யாருக்கும் எந்த சக்திக்கும் நான் அஞ்சவில்லை.. :)

அதிரை சித்திக் said...

அன்பு நண்பர் சபீர் அஹமது ..,

என் முகம் பார்க்கும் கண்ணாடி அல்ல

என் அகம் பார்க்கும் கண்ணாடி ..,

சபீரின் அறிமுகமே அமர்க்களம் தான்

இனி பின்னூட்டங்கள் கலை கட்டும் பாருங்கள் ..

நாங்கள் சிறு வயது முதலே நண்பர்கள் ..

தெருவில் அதிகமானோற்கு..சபீர் சித்திக்

என்றே சொல்வார்கள் செயல் ஒன்று ...

படித்தது முதல் பஹ்ரைன் வரை ..

ஒரு ஆசை தள்ளாத வயதில் பள்ளி வாசலில்

சந்தித்து பேசிக்கொண்டு ..அப்படியே காலாற

நடந்து வர வேண்டும் .என்ன சபீர் ..நான் சொல்வது சரி தானே ..

அதிரை சித்திக் said...

கோபம் என்மீதா அல்லது உண்மையை

அறிந்துகொள்ள முயல்பவர்களின் அறிவின் மீதா>>>>>>

அன்பு கவி மீது கோபம் கொள்ள நான் கல்நெஞ்சம் படைத்தவனா

ஒருபோதும் இல்லை ..பாட்டில் குற்றமில்லை

பொருளில் தான் குற்றம் ..என்பது போல ,இசை இஸ்லாத்தில்

அனுமதி உண்டு என்ற உங்கள் ஆழமான கொள்கைக்கு

இஸ்லாம் மார்க்க சார்ந்த எச்சரிக்கை ..அவ்வளவு தான் சாபமல்ல

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் ..அதுதான் இசை

எவ்வளவு நல்ல விஷயம் இருந்தாலும் ..

தன்னை மறக்கடிக்கும் இசை ...

.நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல ..

இசையில் மூழ்கியவன்தான் மற்ற மத பாடலில்

இசை நயம் இருந்தால்கூட .கேட்டு ரசிப்பவன் .ஆனால் .கருத்தை

காரி துப்பி விடுவேன் ..இப்படி எத்தனை பேர் இசையையும் கவியையும்

பிரித்து பார்ப்பார்கள் ..பல தர்கா களின் வர்த்தக விளம்பரமே

இந்த இஸ்லாமிய பாடல்கள் தான் ...,இசை மீது வசை பாடுவதில் தப்பில்லை

Adirai pasanga😎 said...

IN THE NAME OF ALLAH...

///என்னை ஏன் எழுதவிடாமல் முடக்கப் பார்க்கிறீர்கள்? என்னை எழுத விடுங்களேன். எழுதி முடித்ததும், நானே இஸ்லாமில் இசை கூடாது என்று சொல்லலாம் இல்லையா? ///

///“அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தில் முடிவுசெய்து விட்டால் தமது காரியத்தில் சுய அபிப்பிராயம் கொள்வதற்கு முஃமினான எந்த ஆணுக்கும் முஃமினான எந்தப் பெண்ணுக்கும் உரிமை இல்லை. எவன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்கின்றானோ நிச்சயமாக அவன் மிகத் தெளிவான வழிகேட்டில் சென்றுவிட்டான்.” (33:36)///

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//என் முகம் பார்க்கும் கண்ணாடி அல்ல

என் அகம் பார்க்கும் கண்ணாடி //

கோல்டன் நட்பு இங்கும் இணையட்டும். உங்கள்கள் ஆயுள் ஆழமாகி ஆரோக்கியத்துடன் ஆசையும் நிறைவேறட்டும்

Unknown said...

அன்புச் சகோ கவி சபீர்,

>>>>எனக்கு இசையில் போதை கிடைக்கிறது எனவே, தவிர்க்க முயன்று வருகிறேன். <<<

கண்டிப்பாக. ஆனால் அது இசையில் மட்டும் இல்லை, கவிதையில், கலைகளில், சினிமாவில், காமத்தில், வேலையில், கல்வியில், பக்தியில் என்று எதிலுமே போதை என்பது அழிவினையே தரும்.

கண்டிப்பாக போதை என்ற நிலைக்குச் சென்றுவிடாமல் மனதைக் கட்டுப்படுத்திக்கொள்ளத்தான் வேண்டும்.

இதைத்தான் தமிழில் அளவுக்கு மீறினால் அமுதும் நஞ்சு என்பார்கள்.

வரம்பு மீறினால் இறைவன் மன்னிக்கமாட்டான் என்று நபிமொழி சொல்கிறது.

அன்புடன் புகாரி

Unknown said...

அன்பின் சகோ தாஜுதீன்,

>>>>குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் இசை கூடாது என்று எடுத்துக்காட்டப்பட்டுள்ளது, இது தவறு உள்ளது என்பதை குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையிலே தெளிவாக்க வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பம்.<<<<<

நிச்சயமாக அந்த முயற்சியில்தான் நான் ஈடுபட்டிருக்கிறேன். சில அடிப்படை விசயங்களை நேர் படுத்திக்கொண்டுவிட்டால், இப்பணி எளிதாக இருக்கும். ஆகவே நான் கேட்ட இரு முக்கியமான கேள்விகளுக்கு உங்களின் தெளிவான பதிலைக் கொடுத்துவிடுங்கள். அவை முன்னுரையாக நீங்கள் முன் வைத்தவைதான். அவற்றை நான் ஊர்ஜிதப்படுத்தவே நான் விழைகிறேன். தவறொன்றும் இல்லையே? அதுதானே கருத்தாடல் தர்மம்!

அன்புடன் புகாரி

Unknown said...

அன்புச் சகோ தாஜுதீன் அவர்களே,

நாம் தெளிவுபெற வேண்டிய அடிப்படை விசயங்கள் இதோ மீண்டும் உங்கள் பார்வைக்கு. இதில் சரியான தெளிவினை ஒவ்வொரு முஸ்லிமும் பெற்றிருத்தல் அவசியம். இந்த அடிப்படை இல்லாவிட்டால் நாம் எந்தக் கண்டு இஸ்லாமைக் காணவியலும்?

1. இந்த உலகின் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் என்பவர்கள் அனைவருக்கும் ஒருமித்த ஒற்றைக் கருத்து என்பது கிடையவே கிடையாது. ஒருவருக்கு ஒருவர் முரண்பாடுகளைக் கொண்ட கருத்துக்களைத்தான் முன்வைக்கிறார்கள். ஏகோபித்த கருத்து என்பது மார்க்க அறிஞர்களிடம் கிடையவே கிடையாது.

2. குர்-ஆன் வசனங்கள் முகமது நபியால் தானே உருவாக்கப்பட்டு சொல்லப்பட்டவை அல்ல. அவை இறைவனிமிருந்து வஹீ மூலம் வந்தவை. மற்றபடி முகமது நபி சொன்ன எல்லாம் குர்-ஆன் வசனங்கள் அல்ல. முகமது நபி பேசிய எல்லாவற்றுக்கும் இறைவன் பொறுப்பாகமாட்டான். முகமது நபிக்கு இறைவன் குர்-ஆன் என்பதைத்தவிர, நபி என்பதற்கான அடையாளமாக வேறு எந்தத் தனிச் சிறப்பையும் தரவில்லை. முகம்மது நபி ஓர் உம்மத்து நபி.

3. ஹதீஸ் என்றால் என்ன? அதன் வரலாறு என்ன? யார் தொகுத்தார்? எப்போது தொகுத்தார்? ஏன் தொகுத்தார்? என்ற கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம்தான் நாம் குர்-ஆனை எப்படி அணுக வேண்டும் ஹதீசுகளை எப்படி அணுகவேண்டும் என்று தெளிய முடியும்.

4. நாம் யாரிடமிருந்து கற்கிறோமோ, அவரின் அறிவுக்கும் எல்லை உண்டு. அவருக்கு யார் சொல்லித் தந்தாரோ அவரின் அறிவுக்கும் எல்லை உண்டு. எல்லையில்லா அறிவினைப் பெற்றவர் எவரும் இல்லை. நபிகள் நாயகமும் இல்லை. எல்லை இல்லா அறிவினைப் பெற்றவன் இறைவன் ஒருவனே.

5. எனக்குச் சில மார்க்க அறிஞர்கள் சொல்லிவிட்டார்கள், இனியொரு மாற்றுக்கருத்தில்லை என்று எண்ணி நாம் இறைவனை அறியும் முயற்சியை நிறுத்திவிடுதல் கூடாது. இஸ்லாமியன் என்பவன் எப்போதும் அறிவினைத் தேடும் அறிவுடையோன்.

6. குர்-ஆனின் கருத்துப்படி, இறைவன் எவற்றை உறுதியாகக் கூறி தடை செய்யவில்லையோ அவற்றை மனிதன் தடைசெய்வது ஹராமான செயல். இதை இறைவனே கூறியிருக்கிறான்.

அன்புடன் புகாரி

இப்னு அப்துல் ரஜாக் said...

அன்புள்ள புகாரி காக்கா அவர்களே,கதவை திறந்து - காற்று வருவது இருக்கட்டும்,முதலில் இதயம் திறந்து - ஈமானை பெறுவோம் என்பதை (எனக்கும் சேர்த்தே)சொல்லிக் கொள்கிறேன்.

அவரவர் எண்ணத்தில் என்ன உள்ளது என்பதை அறிந்தவன் அல்லாஹ்,எனவே குரான்,ஹதீஸ் சிந்தனையுடன் எதையும் சீர்தூக்கி பாருங்கள்.அவன் சொன்னான்,இவன் சொன்னான் என்றால் - அந்த அவனும்,இவனும் நம்மைக் காப்பாற்ற முடியாது.எந்தவொரு விஷயமும் முடிவில் குரான்,ஹதீஸ் சொல்வது படியே இருக்க வேண்டும்,இல்லை இல்லை ஏன் மூளை சொல்வதுதான் சரியென்றால்,அந்த மூலையில் something wrong என்றுதான் பொருள்.

Shameed said...

பள்ளிவாசலில் ஐந்து வேலை பாங்கு சொல்லவும் மரண அறிவிப்பு சொல்லவும் பயன்படும் ஸ்பீக்கர் மற்ற நேரங்களில் சும்மா தான் இருக்கின்றது இசை கூடும் என்றால் உலகில் உள்ள
கோடிக்கணக்கான பள்ளிவாசல்களில் ஏதாவது ஒன்றில் இசை கூடும் என்று இசையை இசைத்துக்கொண்டு இருக்கலாமே அப்படி எங்குமே இல்லை அப்படி இல்லாததற்கு காரணம் அவர்கள் எல்லாம் அறிவை அறியாதவர்களா ?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோதரர் அன்புடன் புகாரி அவர்களுக்கு,

நீங்கள் இட்ட கடைசி மறுமொழிக்கான பதில் இதே எண்கள் இட்டு பதியப்பட்டுள்ளது.

1. இஸ்லாமிய அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு என்பது ஒன்றைப் பற்றிய ஆய்வில் அவரவர்களின் அறிவுக்குத் தக்கவாறு பெறப்படும் அவர்களது சொந்தக் கருத்துகளாகும். அவை எல்லாவற்றிலும் ஒத்திருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது; அது தேவையுமில்லை. ஏனெனில், மார்க்கத்தின் அடிப்படையான விஷயங்களில் குர்ஆனும் ஹதீஸும் எல்லாரும் விளங்கிக்கொள்ளும் வகையில் தெளிவாகவே இருக்கின்றன. மிகச் சில தொன்மைச் சொல்லாட்சிகளுக்கு விளக்கம் பெறுவதற்கு மட்டும் அரபு மொழிப் புலமை பெற்றவர்கள் தேவைப்படுவர். காட்டாக 'முத்' 'ஸாஉ' எனும் அளவுகள் பற்றி நமக்கெல்லாம் தெரியாது. அதைப் பற்றி அறிந்தவர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்கிறோம். இதனால் ஈமானுக்கு எவ்வித இழப்புமில்லை.

2. நபி (ஸல்) அவர்களின் சொந்தப் பேச்சுகள் அனைத்தும் மார்க்கமாகாது என்பது சரியே. ஆனால், அவர்களது ஒவ்வொரு சொல்லையும் அசைவையும் அல்லாஹ் கண்காணித்து, அவர்கள் பிழை செய்தபோது திருத்தியதும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அபஸ, அஹ்ஸாப் ஆகிய இறைமறையின் அத்தியாயங்கள் சான்றாகத் திகழ்கின்றன. நபிகளாரின் வீட்டில் உண்ண உணவில்லை எனும் தகவல் மார்க்க விஷயமா? ஆனால் அதுவும் பதிவில் இருக்கிறது.'லா இலாஹ இல்லல்லாஹ்' எனும் நம்பிக்கை முழுமையானதன்று - முஹம்மதுர் ரஸூல்லாஹ் இணைந்த நம்பிக்கையே முழுமையானதாகும். வமா ஆத்தாகுமுர் ரஸுலு ஃபஹுதூஹூ எனும் இறை வசனம் "அவர் கொடுப்பதை எடுத்துக்கொள்ளுங்கள்; அவர் தடுப்பதைத் தடுத்துக்கொள்ளுங்கள்" எனக் கூறுகிறது. அவர் கொடுப்பதும் தடுப்பதும் ஹதீஸ்கள் வாயிலாகவே!

3. இன்ஷா அல்லாஹ் இந்த சுட்டிகளளில் உள்ளவைகள் அனைத்தையும் படித்தால் உங்களுக்கு ஹதீஸ்கள் தொடர்பாக நல்ல தெளிவு கிடைக்கும்.

http://albaqavi.com/home/?p=69

http://albaqavi.com/home/?p=1122

http://dharulathar.com/2007/12/17/190/

http://tamilislam-qa.blogspot.in/2008/11/blog-post_08.html

http://onlinepj.com/books/sariyana_hatheeskalum/

வாசிப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை என்றால், இந்த காணொளி விளக்கத்தையாவது பார்த்து கேளுங்கள். ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்ட வரலாறு

4. எல்லை இல்லா அறிவினைப் பெற்றவன் இறைவன் ஒருவனே. அவன்தான் கூறுகிறான்: அல்லாஹ்வை இறைவனாக ஏற்றுக் கட்டுப்பட்டு, அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுபவரே பெருவெற்றியாளர். (வ மன் யுதியில்லாஹ வரஸூலஹூ ஃபகத் ஃபாஸ ஃபவ்ஸன் அழீமா"

5. ஒரு முஸ்லிம் என்பவன்/என்பவள் எப்போதும் அறிவினைத் தேடக் கடமைப்பட்டவராவார். அதையும் நபி(ஸல்)தான் கூறினார்: அறிவு தேடுதல் ஒவ்வொரு முஸ்லிம் ஆண்/பெண்ணுக்கும் கடமையாகும்.

6. குர்-ஆனின் கருத்துப்படி, இறைவன் தன் தூதர் வழியாக எவற்றை உறுதியாகக் கூறி தடை செய்யவில்லையோ அவற்றை மனிதன் தடைசெய்வது ஹராமான செயல். இதை இறைவனே கூறியிருக்கிறான். இறைவனின் தூதர் வழியாகவே இறைமறை அருளப்பட்டது. இறைமறையில், "மனித மாமிசம் தின்பது முஸ்லிம்களுக்கு விலக்கப்பட்டது" என்ற உறுதியான தடையேதுமில்லை. எனில், முஸ்லிம்களுக்கு மனித மாமிசம் ஹலாலா? இது ஒரு சாம்பிள் கேள்வி மட்டுமே. இதுபோன்று ஆயிரக் கணக்கில் உண்டு. அத்தனைக்கும் ஹதீஸில் விடைகள் உள்ளன.


***

இறைவன், தன்னை அறியவே மனிதனைப் படைத்தான் என்ற ஆயத் எந்தக் குர்ஆனில் உள்ளது?

Meerashah Rafia said...

sabeer.abushahruk சொன்னது…
//ஆயினும், ஒரே ஒரு விடயத்தை உணர்ந்தபின் தற்போது இசைமீதான இச்சையைக் குறைத்துக்கொண்டு வருகிறேன்.

அது... சர்ச்சைக்குறிய ஹதீஸ்களோ ஆளாளுக்கு விளக்கம் தரும் குர் ஆன் மொழிபெயர்புகளோ அல்ல. மாறாக, இஸ்லாத்தில் போதை தடுக்கப்பட்டது என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வர். அதனடிப்படையில்

எனக்கு
இசையில்
போதை கிடைக்கிறது

எனவே, தவிர்க்க முயன்று வருகிறேன்.//


இந்த நான்கு வரிகள் போதும்..
40 பின்னூட்டத்திற்கு சமம் செய்ய..

பால்வாடி பள்ளி மாணவர்களுக்கு நடத்தும் பாடம் போல் மிகாத மிக எளிய விளக்கம்.

அல்லாஹ் உங்களையும் , நம் அனைவரையும் இ'ச்'சையிளிருந்து கிடைக்கும் போதையை விட்டு பாதுகாக்கட்டும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

// Shameed சொன்னது… பள்ளிவாசலில் ஐந்து வேலை பாங்கு சொல்லவும் மரண அறிவிப்பு சொல்லவும் பயன்படும் ஸ்பீக்கர் மற்ற நேரங்களில் சும்மா தான் இருக்கின்றது இசை கூடும் என்றால் உலகில் உள்ள
கோடிக்கணக்கான பள்ளிவாசல்களில் ஏதாவது ஒன்றில் இசை கூடும் என்று இசையை இசைத்துக்கொண்டு இருக்கலாமே அப்படி எங்குமே இல்லை அப்படி இல்லாததற்கு காரணம் அவர்கள் எல்லாம் அறிவை அறியாதவர்களா ?///

ஹமீத் காக்கா,

இந்த கட்டுரைக்கு மேலும் வலுவூட்டும் கருத்தை பதிந்தமைக்கு மிக்க நன்றி.

Anonymous said...

தம்பி கவி சபீர் அவர்கள் சொன்னது.

//இருந்தாலும் இன்னும் சற்று கூடுதலாக இசைப்பாடல்களை, இளையராஜாவின் நத்திங் பட் வின்ட் எனும் ஆல்பத்தை, ஜாகிர் ஹுசேனின் தபேலாவை, ஏ ஆர் ரஹ்மானின் பல திரை இசைப் பாடல்களை மிகவும் விரும்பிக் கேட்பவன் நான்.//

நானும் கிட்டத்தட்ட இதே வரிசையில் உள்ளவன்தான். கதிரி கோபால்நாத்தின் சக்ஸோ போன் இசையிலும், வலயப்பட்டியின் தவிளிலும் லயிப்பவன். இரவில் தூங்கும் முன்பு மெல்லிய இசையில் யாரேனும் ஒரு பெண் பாடகியின் பாடல்களை ஒலிநாடாவில் போட்டுவிட்டுத் தூங்குவேன். ஏ. எம் ராஜா, பி. பி. சீனிவாஸ், ஜேசுதாஸ் ஆகியோரின் மெல்லிசைப்பாடல்களில் மனம் லயித்தவன். மனப்பாடம் செய்தவன்.

ஆனால் மனதில் ஏதோ ஒரு தன்னை அறியாத மாற்றம். சமீப காலமாக இரவில் ஸி டி போடும் பழக்கம் விடவில்லை. ஆனால் ஸி.டிகளில் டாக்டர் கே.வி .எஸ் , பி.ஜெ, கோவை அயூப், மற்றும் சில மார்க்க அறிஞர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டே தூங்கும் பழக்கம் என்று மாறிவிட்டது.

என் மக்களிடம் சொல்லி அலைபேசியில் நினைவுத் தகட்டில் பதிந்து வைத்திருந்த வாராய் நீ வாராய்- காற்றினிலே வரும் கீதம் உட்பட அழித்துவிடச்சொல்லிவிட்டேன்.

பழைய பாடல்களின் தொகுப்புகளை பரண்மேல் கட்டிப்போட்டுவிட்டேன்.

ஒவ்வொரு காலத்திலும் வரவேண்டிய பக்குவமும் மனமாற்றமும் இறைவன் தானாகவே உருவாக்கிவிட்டதாக உணர்கிறேன். அதுபோல் எல்லோருக்கும் வரும் என்று நம்புகிறேன். நீர்க்குமிழிகள் நிரந்தரம் அல்ல என உணருகிறேன்.

இசையைப் பற்றி இங்கு விவாதம் சூடாக நடைபெற்று வருகிறது. இவ்வளவு ஆணித்தரமாக இரு வல்லவர்கள் வாதிடும்போது எனது மனதில் இசையோடு பொருந்தும் ஒரு கமெண்ட் தான் அடிக்கத்தோன்றுகிறது. அது

புல்லாங்குழல்கள் அடுப்பு ஊதுகின்றன. – என்பதே.

இவ்வளவு வல்லமை படித்தவர்கள் ஒரு பயன்பாடான பிரச்னையில் வாதிட்டு தங்களின் ஆற்றலை வெளிப்படுத்துவார்களானால் அதனால் பெரும் பயன்கள் விளையலாம். எல்லோருடைய வாழ்விலும் என்றும் நிரந்தரமாக இருக்கக்கூடிய ஒரு உணர்வை வளர்க்கும் விதத்தில் இப்படி வளைத்து வளைத்து வாதிட்டால் நமக்கெல்லாம் அவர்களை சிந்தனையைக் கொண்டு ஏதாவது பயன் விளையலாம். அதைவிட்டு விட்டு சீரிய சிந்தனை உடையவர்கள் தங்களின் சிந்தனை வளத்தை சமுதாயப் பயன்தராத நீர்க்குமிழி விஷயத்துக்காக செலவிடுவது எனக்கு – ஆமாம் எனக்கு ஒரு தேவையற்றதாக தெரிகிறது.

இதற்கு பதிலாக ஆற்றல் பெற்ற நீங்கள் மனங்களை மல்லாத்தும் கவிதைகளைப் படைப்பதில் – சமுதாயம் இன்று இருக்கும் நிலையில் வாழும் முறைகளைப்பற்றி- வளரும் வழிகளைப்பற்றி எழுதி உங்களின் சக்திகளை செலவிடுங்கள் என அன்புடன் கோருகிறேன்.

மீண்டும் கேட்கிறேன் புல்லாங்குழல்கள் அடுப்பூதவேண்டாம். அதற்கு ஊதாங்குழல்கள் இருக்கின்றன.

அங்கோலா போகும் முன் சொல்லிவிட்டுப்போக ஆசை. வந்து பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ்.

Thanks & Regards,

Ebrahim Ansari

ஜமாலுத்தீன் புஹாரி said...

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அன்பின் சகோதரர் புஹாரி அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
முதலில் தாங்கள் தெளிவு பெற வேண்டி கேட்டுள்ளவைகள்.......

//1. இந்த உலகின் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் என்பவர்கள் அனைவருக்கும் ஒருமித்த ஒற்றைக் கருத்து என்பது கிடையவே கிடையாது. ஒருவருக்கு ஒருவர் முரண்பாடுகளைக் கொண்ட கருத்துக்களைத்தான் முன்வைக்கிறார்கள். ஏகோபித்த கருத்து என்பது மார்க்க அறிஞர்களிடம் கிடையவே கிடையாது.

2. குர்-ஆன் வசனங்கள் முகமது நபியால் தானே உருவாக்கப்பட்டு சொல்லப்பட்டவை அல்ல. அவை இறைவனிமிருந்து வஹீ மூலம் வந்தவை. மற்றபடி முகமது நபி சொன்ன எல்லாம் குர்-ஆன் வசனங்கள் அல்ல. முகமது நபி பேசிய எல்லாவற்றுக்கும் இறைவன் பொறுப்பாகமாட்டான். முகமது நபிக்கு இறைவன் குர்-ஆன் என்பதைத்தவிர, நபி என்பதற்கான அடையாளமாக வேறு எந்தத் தனிச் சிறப்பையும் தரவில்லை. முகம்மது நபி ஓர் உம்மத்து நபி.

3. ஹதீஸ் என்றால் என்ன? அதன் வரலாறு என்ன? யார் தொகுத்தார்? எப்போது தொகுத்தார்? ஏன் தொகுத்தார்? என்ற கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம்தான் நாம் குர்-ஆனை எப்படி அணுக வேண்டும் ஹதீசுகளை எப்படி அணுகவேண்டும் என்று தெளிய முடியும்.

4. நாம் யாரிடமிருந்து கற்கிறோமோ, அவரின் அறிவுக்கும் எல்லை உண்டு. அவருக்கு யார் சொல்லித் தந்தாரோ அவரின் அறிவுக்கும் எல்லை உண்டு. எல்லையில்லா அறிவினைப் பெற்றவர் எவரும் இல்லை. நபிகள் நாயகமும் இல்லை. எல்லை இல்லா அறிவினைப் பெற்றவன் இறைவன் ஒருவனே.

5. எனக்குச் சில மார்க்க அறிஞர்கள் சொல்லிவிட்டார்கள், இனியொரு மாற்றுக்கருத்தில்லை என்று எண்ணி நாம் இறைவனை அறியும் முயற்சியை நிறுத்திவிடுதல் கூடாது. இஸ்லாமியன் என்பவன் எப்போதும் அறிவினைத் தேடும் அறிவுடையோன்.

6. குர்-ஆனின் கருத்துப்படி, இறைவன் எவற்றை உறுதியாகக் கூறி தடை செய்யவில்லையோ அவற்றை மனிதன் தடைசெய்வது ஹராமான செயல். இதை இறைவனே கூறியிருக்கிறான்.//

இவைகளை பற்றி தங்களுடைய புரிதல் என்ன என்பதை முதலில் தயவுசெய்து பதியுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அதன்பிறகு ‘’இசை இஸ்லாத்தில் கூடாது’’ என்பது குறித்து திருக்குர்ஆன் வசனங்கள் மற்றும் ஆதராப்பூர்வமான நபி மொழிகளை முன்வைத்து சகோதரர் தாஜுத்தீன் பதிவு செய்துள்ளது போல், இசை இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது அல்ல என்பதற்கான தங்களுடைய ஆய்வறிவை பதிவு செய்தால் நாம் அனைவரும் தெளிவான முடிவுக்கு வர மிகவும் எளிதாகிவிடும் என்று நினைக்கிறேன். ஏனெனில் இசை பற்றி சகோதரர் தாஜுத்தீனின் பதிவை படித்ததற்கு ஆன நேரத்தைவிட, இசை பற்றி தங்களுடைய நிலையை அறிய மிகவும் விரும்பி, தங்கள் பின்னூட்டங்களை படிப்பதற்கு ஆன நேரம் அதிகம். ஆனால் இதுவரை தாங்கள் தங்கள் நிலையை அறிய வாய்ப்பு தரவில்லையே ஏன்? வாய்பை தருவீர்கள் என நினைக்கிறேன். யாரும் தங்களை கருத்திடுவதற்கு தடையேதும் இதுவரை செய்யவில்லை. ஆனால் தாங்கள் இடை இடையே……

//நான் இன்னும் சொல்லவே தொடங்கவில்லையே!
என்னை ஏன் எழுதவிடாமல் செய்கிறீர்கள்? என்னை எழுத விடுங்களேன். எழுதி முடித்ததும்,
நான் இன்னும் எதையும் கூறத் தொடங்கவே இல்லையே.// என்று பதிகிறீர்கள்.....

தயவு செய்து தொடங்குங்களேன்......எழுதுங்களேன்....... சொல்லுங்களேன்.... மிகவும் திறந்த மனதுடன் அறிய ஆவளாய் உள்ளேன். வஸ்ஸலாம்.

அன்புடன்,
B ஜமாலுத்தீன்
050-2855125

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இக்கட்டுரையையும் அதை பின் தொடர்ந்து வந்த பின்னூட்டங்களையும் நோட்டமிட நேரமில்லாமையால் எனக்கு அறிந்த ஒரு கருத்தை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எம்பெருமானார் ரசூலேக்கரீம் நபி (ஸல்.) அவர்கள் காலத்தில் இசைக்கருவிகள் என விலங்குகளின் தோலால் செய்யப்பட்ட கருவிகளே இருந்திருக்க வாய்ப்புண்டு. அதை எல்லாம் தாண்டி பல நூற்றாண்டுகளுக்குப்பின் வகை, வகையான மதியை மயங்க/மழுங்கச்செய்யும் இசைக்கருவிகளும் அதன் உபகரணங்களும் வரும் என முன்பே தெளிவாக தெரிந்து அதை இஸ்லாமியர்கள் பயன்படுத்த தடை விதித்திருக்கிறார்கள்.

"எல்லாப்புகழும் இறைவனுக்கே" என ஆஸ்கார் அரங்கில் ஒரு தமிழ் இஸ்லாமியன் முழங்கி விட்டானே என‌ அக‌ம் ம‌கிழ்ந்து உச்சி குளிர்ந்து இசைக்க‌ருவிகள் எல்லாம் பயன்படுத்த‌ இஸ்லாத்தில் அனும‌தியுண்டு என‌ நாம் எளிதில் சொல்லிவிட‌ முடியாது.

ந‌ல்ல‌ ந‌வீன‌ இசைக்க‌ருவிக‌ளுட‌ன் இசைக்கப்படும் ந‌ல்ல‌ க‌ருத்துள்ள‌ எந்த‌ பாட‌ல் தான் கேட்கும் காதுகளுக்கு இனிமை தராமல் இல்லை?

உதார‌ண‌த்திற்கு ஒரு பாட‌லை சொல்கிறேன். சில‌ ஆண்டுக‌ளுக்கு முன் ஹாலிவுட்டில் வெளியாகி உல‌கில் பெரும் ப‌ர‌ப‌ர‌ப்பையும், வ‌சூல் வேட்டையையும் குவித்த‌ "டைட்டானிக்" ப‌ட‌த்தில் வ‌ரும் ஒரு பாட‌ல் அதை கேட்கும் எவ‌ரையும் ம‌திம‌ய‌க்க‌ வைத்து ஸ்தம்பிக்க வைத்து விடும். (எனக்கு அது போல் ஏற்பட்டிருக்கிறது) அந்த‌ பாட‌லின் க‌ரு என்ன‌வென‌ தெரிய‌வில்லை. இசையின் தாக்க‌ம் அந்த‌ பாட‌லுட‌ன் வ‌ரும் இசையே நல்ல சாட்சி.

"கால‌த்திற்கேற்ப‌ உல‌க‌ம் மாற‌லாம்; இஸ்லாம் மாறாது. அதில் சொல்ல‌ப்ப‌ட்ட‌ க‌ருத்துக்க‌ள் என்றோ ஒரு கால‌த்தில் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாக‌ இருந்தாலும் அது யுக‌ முடிவு கால‌ம் வ‌ரை வ‌ரும் கால‌ம் முழுவ‌த‌ற்கும் சொல்ல‌ப்ப‌ட்ட‌தே".

"உதார‌ண‌த்திற்கு சில நண்பர்களுடன் நாமே நீண்ட‌ தூர‌ ப‌ய‌ண‌ம் காரில் ப‌ய‌ணிக்கும் பொழுது ப‌ய‌ணிக்கும் அனைவ‌ரும் முஸ்லிம்க‌ளாக‌ இருந்தாலும் ப‌ய‌ண‌ம் முடியும் வ‌ரை நல்ல குரல் வளம் கொண்ட குர்'ஆன் திலாவ‌த் கேஸ‌ட்க‌ளை கேட்ப‌தில்லை. அப்ப‌டியே கேட்க‌ முற்ப‌ட்டாலும் வாக‌ன‌ம் ஓட்டுப‌வ‌ரை த‌விர்த்து அனைவ‌ரும் தூங்கி விடுவோம். ஏதேனும் புதுப்பாட‌ல்க‌ள் அல்ல‌து எல்லோரும் விரும்பும் பாட‌ல் கேஸ‌ட்டை செருகி விட்டால் போதும் எல்லோருக்கும் தூக்க‌ம் எங்கே தான் ஓடி ஒளியுமென்று? இங்கு சைத்தான் எளிதில் எம்மை வென்று விடுகிறான்.........

"வை திஸ் கொல‌ வெறி" பாட்டை இதுவ‌ரை கேட்ட‌வ‌ர்க‌ளில் ந‌ம்ம‌வ‌ர்க‌ளின் ச‌த‌விகித‌ம் எத்த‌னை ப்ர‌ஸ‌ன்ட் என‌ தெரிய‌வில்லை????????

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

"விபச்சாரம், பட்டாடை, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை ஹலாலாகக் கருதக்கூடிய சில கூட்டத்தினர் எனது சமுதாயத்திலே தோன்றுவார்கள் ..." என்று நபியவர்கள் கூறினார்கள்" எனும் (புகாரீ 5590) ஹதீஸ் நான்கு ஹராமானவை பற்றி அறிவிக்கின்றன. அவற்றுள் ஒன்று இசைக்கருவிகள். இந்த ஹதீஸ் பற்றி எந்த மார்க்க அறிஞருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

"மது, சூதாட்டம், மேளக் கருவிகளை அல்லாஹ் எனக்குத் தடை செய்துவிட்டான்" எனும் முதல் பகுதியோடு "போதை ஏற்படுத்தும் அனைத்தும் ஹராமாகும்" என்று அம்மூன்றையும் போதையோடு உவமித்துக் கூறும் இரண்டாம் பகுதி(அபூதாவூத்-3696, பைஹகீ-10-221)ஹதீஸ் ஈண்டு நோக்கத் தக்கது. இந்த ஹதீஸ் பற்றியும் எந்த மார்க்க அறிஞருக்கும் மாற்றுக் கருத்திருப்பதாகத் தெரியவில்லை.

முஸ்லிம்களுக்கு எவற்றை அனுமதிப்பது எவற்றை விலக்குவது என்பதில் நபி (ஸல்) அவர்களுக்கு முழு உரிமை உண்டு. சான்று:
உங்களிலிருந்தே ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு ஓதியுணர்த்துவதற்காகவும் உங்கள் வாழ்வைத் தூய்மைப் படுத்துவதற்காகவும் இறைமறையையும் மார்க்க அறிவையும் இன்னும் நீங்கள் அறியாத அறிவியல்களையும் உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பி(நபித்துவத்தை முழுமைப் படுத்தி)யதுபோல் 002:151; 062:002.

அன்பின் புகாரீ,
முஸ்லிம்களுக்கு ஒரு நாளில் ஐவேளை தொழுகைகள் கடமையாகும். இந்தக் கடமையை நேரடியாக இறைமறையிலிருந்து எடுத்துத் தருவீர்களா? அல்லது அல்லாஹ் தன் தூதர் மூலம் ஐவேளைத் தொழுகையை முஸ்லிம்களுக்குக் கடமையாக்கினான் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பீர்களா?

You have either option only!

Unknown said...

அன்பிற்கினிய சகோக்களே,

கொஞ்சம் பணிச்சுமையில் அல்லாடிவிட்டேன். அலுவலக பணிச்சுமையல்ல, சொந்தப் பணிச்சுமை. மகளுக்கு மகன் பிறந்திருக்கிறான். அது ஒன்று. அடுத்து அமெரிக்கத் தமிழ்ப்பேரவையின் வெள்ளிவிழா கவியரங்கில் கலந்துகொள்ள வாசிங்டன் செல்கிறேன். அதற்கான கவிதை யாப்பு. ஆகவே முன்புபோல் சடசடவென்று மடல்கள் பொழிய முடியாமல் போனது இன்று.

*

சகோதர்கள் யாசிர், சபீர், சித்திக், இப்றாஹிம் அன்சாரி, மு.செ.மு. நெய்னா முஹம்மது, இன்னும் கிட்டத்தட்ட எல்லோருமே இசையை வெகுவாக ரசித்திருக்கிறார்கள் என்று அறியும்போது எதார்த்தம் என்பது எது என்பதும் அதன் நிஜமுகத்தின் அற்புத அழகு எது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

இன்றெல்லாம் வயிற்றுக்குள் உள்ள பிள்ளைகூட இசை கேட்கிறது. அது போகட்டும்.

இங்கே எவரேனும் ஒருவர் ஒரே ஒருவர் தான் பிறந்ததிலிருந்தே எந்த இசையையும் கேட்டதே இல்லை என்று இருக்கிறாரா?

பிறந்ததிலிருந்து இன்றுவரை எந்த ஒரு திரைப்படமும் கண்டதே இல்லை என்று எவரேனும் இருக்கிறாரா?

பிறந்ததிலிருந்து இன்றுவரை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் கண்டதே இல்லை என்று எவரேனும் இருக்கிறாரா?

அறிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு இருக்கிறது. அப்படி எவரேனும் ஒரு கின்னஸ் சாதனையாளர் நம் அதிரை நிருபரில் இருந்தால் அவரின் விபரங்கள் அறியும் ஆவலோடு நான் காத்திருக்கிறேன். தகவல் தாருங்கள்.

நானும் முன்புபோல் இல்லாமல் இப்போது இசையார்வம் குறைந்தவனாகத்தான் இருக்கிறேன் என்றாலும் சில இசைமட்டும் நதியிழுத்தோடும் படகைப்போல என்னை ஆக்கிவிடத்தான் செய்கிறது. இதில் மாற்றுக்கருத்து இங்கே எவருக்கும் இருக்கும் என்று நாம் நம்பவில்லை.

வெகு காலங்கள் கழித்து கண்ணதாசனின் பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ என்ற பாடலைக் கேட்டேன். எழுந்த புத்துணர்ச்சி, நட்சத்திர வானில் வெளிச்சச் சிறகசைத்துப் பறக்கும் உணர்வினைத் தந்தது.

விரைவில் இசையை தன் வாழ்நாளில் ஒரு முறையும் கேட்டே இருக்காத சகோ தாஜுதீனுக்கு என் மறுமொழிகள் வரும்.

அன்புடன் புகாரி

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்பு புகாரீ,

க்ராண்ட்பா ப்ரமோஷனுக்கு வாழ்த்துகள்!

குழந்தையாக நான் கண்ட குழந்தைக்குக் குழைந்தை பிறத்திருப்பதறிந்து மகிழ்ந்தேன்! ஸுஹைலை நினைவிருக்கிறது. உங்கள் மகளின் பெயர் மறந்துவிட்டது. எனினும் அவருக்கு லைஸென்ஸ் கிடைத்து கனடா சாலைகளில் கனவேகமாகக் காரோட்டிச் செல்கிறார் என்ற தகவல், தங்களைப் பற்றிக் கேட்டபோது தங்கள் தம்பி ஹாஜா அலாவுத்தீன் வழியாகக் கிடைத்தது. அவருடன் பேசியும் நீண்ட காலமாகிவிட்டது.

இது ப்பர்ஸனல் இடுகை மட்டுமே என்பதால் பிற பின்னர்.

எனினும், உங்களது Tuesday, July 03, 2012 8:15:00 AM பின்னூட்டத்தைப் படித்தபோது இறைவன் மனிதனுக்குக் கொடுத்திருக்கும் அறிவு எத்துணை அற்பம் எனும் சிந்தனை எனக்கு எழுந்ததை இங்கு எழுதாமல் இருக்க முடியவில்லை.

மீண்டும், இன்ஷா அல்லாஹ்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"சைத்தானிய உலகச்சூழ்நிலையால் தடைகளை மீறி நாமெல்லாம் ஏதேனும் ஒரு வகையில், வழியில் இசையை கேட்டு ரசித்து மெய்மறந்து கொண்டிருப்பதற்கு இஸ்லாம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அது அன்றே அறிவித்து பிரகடணப்படுத்திய அதற்குரிய தண்டணைகளை கேள்வி கணக்கு நாளில் அனுபவித்தே தீர வேண்டும் அவன் ஏதேனும் ஒரு காரணம் கொண்டு நம்மை மன்னிக்காத வரை"

அல்லாஹ்வையும், அவனுடைய தண்டணைகளையும் நாமெல்லாம் இது வரை பார்த்தில்லை. உலகில் சிலவற்றை பார்த்து விட்டதால், சில இன்னிசை/மெல்லிசைகளை கேட்டு விட்டதால் மெய் மறந்து திரிகிறோம். எல்லோரும் விரும்புகிறோம் என்பதற்காக "எதோ கொஞ்சம் பார்த்து போடுங்கள்" என்ற சலுகைகள் இஸ்லாத்தில் நிச்சயம் இல்லை என்பதை நாமெல்லாம் நன்கு அறிவோம். காலச்சூழ்நிலைக்கேற்ப நெளிந்து கொடுக்க இஸ்லாம் ஒன்றும் மனிதன் இயற்றிய மார்க்கமல்ல.......

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோதரர் அன்புடன் புகாரி,

அஸ்ஸலாமு அலைக்கும்,

மப்ரூக்... க்ராண்ட்பா ப்ரமோஷனுக்கு வாழ்த்துகள்!

:-)


நிற்க...

வாழ்நாளில் இசையை கேட்காதவன், தொலைகாட்சி பார்க்காதவன், திரைப்படம் காணதவன் என்ற புள்ளிவிபரமெல்லாம் இந்த பதிவுக்கு அவசியமற்றது என்று கருதிகிறேன்.

சகோதர்கள் யாசிர், சபீர், சித்திக், இப்றாஹிம் அன்சாரி, மு.செ.மு. நெய்னா முஹம்மது மற்றும் பலரை போல் தான் நானும் ஒருவன் ஒரு காலத்தில். நம்முடைய உயிரினும் மேலான நபி (ஸல்) அவர்கள் இசையை வன்மையாக கண்டித்து தடுத்துள்ளார்கள் என்ற ஆதாரப்பூர்வமான செய்தி என்று என் காதில் விழுந்து மனதை உருத்தியதோ அன்றே இசையை வெறுக்க ஆரம்பித்தேன். இது போல் தான் மற்றவர்களும் என்று நம்புகிறேன். என்னை பற்றி நீங்களாக ஒரு முடிவு செய்து இந்த கருத்துரையாடலை திசை திருப்ப வேண்டாம்.

//நானும் முன்புபோல் இல்லாமல் இப்போது இசையார்வம் குறைந்தவனாகத்தான் இருக்கிறேன்//

இறைவனுக்கே எல்லா புகழும். அல்லாஹ் நம் எல்லோரையும் மேலும் நேர்வழிகாட்டி நல்லருள் புரிவானாக.

ஞாபகமூட்டலுக்காக...

இறைவன், தன்னை அறியவே மனிதனைப் படைத்தான் என்ற ஆயத் எந்தக் குர்ஆனில் உள்ளது? என்பதை ஆதரத்துடன் தெரிவிக்கவும்.

தங்களுடைய பதில் மறுமொழிக்காக காத்திருக்கிறேன்..

Yasir said...

ஆயிரம் வாழ்துக்கள் உங்கள் “தாத்தா” புரோமோஷனுக்கு...இனிமேல் பேரனின் சத்தமும்,சிரிப்பும்,அழுகையும் தான் உங்கள் காதுகளுக்கு இனிமையாக இருக்கபோகிறது

உங்களின் வாஷிங்டன் நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்

நான் என் வாழ்நாளில் இதுவரை 15 படங்கள் கண்டு இருக்கின்றேன் என் வயது 33 ....கடந்த 14வருடங்களின் நான் பார்த்த படங்கள் 4 மட்டுமே....படம்,இசை,நாடகம் போன்றவை எனக்கும்,என் துணைவியாருக்கும் பிடிக்காது,என் குழந்தைகளுக்கு சினிமா பாடல்கள் ஒன்றுகூட தெரியாது...இது உண்மை

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தாத்தா அன்புடன் புஹாரி அவர்களுக்கு,
வாழ்த்துக்கள்.
பேரன், இஸ்லாம் போற்றும் உன்னத தலைமுறையாக திகழ வாழ்த்துக்களும்,துஆவும்.

//இன்றெல்லாம் வயிற்றுக்குள் உள்ள பிள்ளைகூட இசை கேட்கிறது. அது போகட்டும்.
இங்கே எவரேனும் ஒருவர் ஒரே ஒருவர் தான் பிறந்ததிலிருந்தே எந்த இசையையும் கேட்டதே இல்லை என்று இருக்கிறாரா?
பிறந்ததிலிருந்து இன்றுவரை எந்த ஒரு திரைப்படமும் கண்டதே இல்லை என்று எவரேனும் இருக்கிறாரா?
பிறந்ததிலிருந்து இன்றுவரை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் கண்டதே இல்லை என்று எவரேனும் இருக்கிறாரா?
அறிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு இருக்கிறது.//

இதெல்லாம் இவ்வுலக தீர்ப்புக்கு தான் உதவுமே தவிர, இஸ்லாத்தில் இசை ஏற்பா அல்லது கூடாதா என்ற தீர்ப்புக்கு ஆவாதே! ஆய்வாளரே!

Yasir said...

//எவரேனும் ஒருவர் ஒரே ஒருவர் தான் பிறந்ததிலிருந்தே எந்த இசையையும் கேட்டதே இல்லை என்று இருக்கிறாரா//
சகோ அன்புடன் புகாரி அவர்களே... நாம் இங்கு மனிதர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்ற விவாதத்திற்க்கு வரவில்லை...இசையை இஸ்லாத்தின் பார்வையில்தான் அலசிப்பார்க்கிறோம்.....அப்படிப்பார்த்தால் சிலர் குடித்தல்,விபச்சாரம் மற்றும் இன்ன பிற இஸ்லாம் தடுத்த ஹராமான விசயங்களை இஸ்லாம் மதத்தில் இருந்து கொண்டு செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள்...அதற்க்கான சன்மானம் அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வினால் மறுமையில் வழங்கபடும்..அதற்க்காக இஸ்லாம் இவைகளை அனுமதித்து(அஸ்தகுபிருல்லாஹ்) உள்ளது என்று கூறமுடியாது
இஸ்லாமியர்கள் செய்வது எல்லாம் “இஸ்லாம்” கிடையாது...குர் ஆனும் ,ஹதீஸூம், நபிவழியும்தான் இஸ்லாம்

Unknown said...

ஜமீல் நாணா,

>>>>குழந்தையாக நான் கண்ட குழந்தைக்குக் குழைந்தை பிறத்திருப்பதறிந்து மகிழ்ந்தேன்!<<<<<

அன்றைய நாட்களின் நினைவுகள் அத்தனையும் வைரங்கள். நம் பாசமும் நட்பும் மிக உயர்வானது. அப்போதே இப்படியான கருத்தாடல்களில் எழுந்து நிற்போம். இலக்கணம் இலக்கியம் பற்றி நாம் கடுமையாகக் கருத்தாடிக்கொண்டிருந்தோம். நாம் என்ன பேசுகிறோம் என்பதைக்கூட அறியாதவர்களாகத்தான் இருந்தார்கள் நம்மோடு இருந்த மற்றவர்கள்.

>>>ஸுஹைலை நினைவிருக்கிறது. உங்கள் மகளின் பெயர் மறந்துவிட்டது. எனினும் அவருக்கு லைஸென்ஸ் கிடைத்து கனடா சாலைகளில் கனவேகமாகக் காரோட்டிச் செல்கிறார் என்ற தகவல்<<<<<

மகள், மகன் இருவரும் ஒரே அட்டெம்ட்டில் லைசன்ஸ் எடுத்துவிட்டார்கள். இருவருமே கனடிய சாலைகளில் கலக்கலாக ஓட்டுவார்கள். மனைவி மட்டும் தோல்விதான் தனக்கான வெற்றியென்று நான்குமுறை தோற்றதும் முடிவுக்கு வந்து மகாராணியாய் மட்டும் காரில் அமர்வது என்ற கவுரவ நிலையிலேயே நின்றுவிட்டார்.

>>>>எனினும், உங்களது Tuesday, July 03, 2012 8:15:00 AM பின்னூட்டத்தைப் படித்தபோது இறைவன் மனிதனுக்குக் கொடுத்திருக்கும் அறிவு எத்துணை அற்பம் எனும் சிந்தனை எனக்கு எழுந்ததை இங்கு எழுதாமல் இருக்க முடியவில்லை.<<<<

இது அப்பட்டமான உண்மையல்லவா? இறைவன் மனிதனுக்குக் கொடுத்த அறிவு அற்பமே அற்பம். இதை நான் இங்கே தெளிவாக எடுத்துரைக்கத்தானே இத்தனை எழுதிக்கொண்டிருக்கிறேன். இறைவன் சொன்னதை விட்டுவிட்டு அற்பமே அற்பமான மனிதன் சொன்னதைத்தானே பலரும் எடுத்துக்கொண்டு அவர்களும் அற்பமே அற்பமான அறிவினை அடையாளம் காட்டிவிடுகிறார்கள்.

”பெரும்பாலான” என்ற சொல் என்னை அடிக்கடி கிச்சுக்கிச்சு மூட்டுகிறது. இந்தப் ”பெரும்பாலான” என்ற சொல்லால் விழைந்த நன்மைகள் எத்தனை கோடி? அரசியல், சினிமா, சடங்கு, சம்பிரதாயம் என்று எல்லா தளங்களிலும் இந்தப் பெரும்பாலான என்பது எப்படியெல்லாம் ஆட்சி செய்கிறது.

அன்று பெரும்பாலானவர்கள் உலகம் தட்டை என்று அடித்துச் சொன்னார்கள். இன்று பெரும்பாலானவர்கள் உலகில் முஸ்லிம் என்பவன் தீவிரவாதி என்று உறுதியாகச் சொல்கிறார்கள்.

அன்புடன் புகாரி

KALAM SHAICK ABDUL KADER said...

கவிதைகளைக் குழந்தையாய்ப் போற்றும்
கவிஞரின் குழந்தைக்குக் கவிதையாய்
இனிக்கும் குழந்தை பிறந்த நற்செய்தி
எனக்கும் மகிழ்ச்சி எனும் ராகத்தை
என் மனக்கருவி இசைத்தது..


பனித்துளி பூத்தப் பசுமை எழிலாய்,
கனிதருஞ் சுவையாய்க், கன்னற் சாறாய்ச்,
சுனைமலைச் சாரல் செறிவாய், உன்றன்
நினைவின் நிழலில் நெகிழ்திடும் கவியாய்த்

தனித்தமிழ் போற்றுந் தமிழின் பேரன்,
உனையே உயர்த்தும் உண்மை உருவாய்த்,
தனையே தருமுயர் தாயின் பரிசாய்,
வனைந்த மழலை வடிவே; வாழியவே

அமெரிக்க கவியரங்கம் தொடர்பாக நீங்கள் கேட்டிருந்தவற்றிற்கான என் மறுமொழிக் கிடைத்திருக்கலாம்; அக்கவியரங்கில் உங்களின் பங்களிப்பால் பாராட்டும் புகழும் பெற வாழ்த்துகள்!!

Unknown said...

அன்புச் சகோ தாஜுதீன் அவர்களே,

நீங்களும் ஒத்துக்கொண்டதின் பேரில் இவற்றை நாம் உறுதி செய்கிறோம்:

1. மார்க்க அறிஞர்கள் அனைவருக்கும் ஒருமித்த ஒற்றைக் கருத்து என்பது கிடையாது.

2. முகமது நபி சொன்ன எல்லாம் குர்-ஆன் வசனங்கள் அல்ல.

3. நபிகள் நாயகம், நபித் தோழர்கள், நபியின் உறவினர்கள், மார்க்க அறிஞர்கள், ஆய்வாளர்கள் என்ற அனைவரின் அறிவிற்கும் எல்லை உண்டு. எல்லை இல்லா அறிவினைப் பெற்றவன் இறைவன் ஒருவனே.

4. 1400 ஆண்டுகளாக பல மார்க்க அறிஞர்கள் சொல்லிவிட்டார்கள், அவற்றுக்கு மாற்றுக்கருத்தில்லை என்று இறைவனையும் அவன் நூலையும் அறியும் முயற்சியை நிறுத்திவிடுதல் கூடாது. இஸ்லாமியன் என்பவன் எப்போதும் அறிவினைத் தேடும் அறிவுடையோன்.

5. இறைவன் எவற்றை தடை செய்யவில்லையோ அவற்றை மனிதன் தடைசெய்வது ஹராமான செயல்.

6. ஹதீஸ்கள் பற்றி உங்களிடமிருந்து ஏராளமான சுட்டிகளே வந்துள்ளன. நறுக்கென்று உங்கள் கருத்துக்கள் வரவில்லை. பரவாயில்லை. நானே தொகுத்து இடுகிறேன். நீங்கள் ஒப்புதல் தந்தால் போதும்.

அன்புடன் புகாரி

Unknown said...

அன்பு நண்ப அபுல் கலாம்,

உங்கள் சட்டென்று பொழிந்த உங்கள் கவி வாழ்த்துக்கு நன்றி

அதிரை சித்திக் said...

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். ((திருகுர்ஆன் 33:36

Unknown said...

அன்புச் சோதர்களே,

உங்களில் ஒருவர் கூட இசையே கேட்டதில்லை என்றும், திரைப்படமே கண்டதில்லை என்றும் கூறவில்லை.

ஒவ்வொருவருக்கும் கேட்கும் காணும் அளவில் மட்டுமே வித்தியாசம் இருக்கிறது. மற்றபடி யாரும் இங்கே விதிவிலக்கானவர்கள் அல்லர்..

நான் சவுதி அரேபியா செல்லும்போது தமாம் / ரியாத் தொலைக்காட்சியில் ஒரே ஒரு நிகழ்ச்சிமட்டும்தான் இருக்கும். ஒரு முத்தவா, குர்-ஆன் ஓதிக்கொண்டே இருப்பார். இது 1981.

சில ஆண்டுகளுக்குப் பின் இந்தத் தொலைக்காட்சி மெல்ல மெல்ல மாறியது. நோம்பு நாட்களிலும், நகைச்சுவை படங்களை வெளியிட்டது.

பின் மேலும் மாறி இந்திப்படம், ஆங்கிலப்படம் என்று முழு வீச்சில் இறங்கிவிட்டது.

இதேபோல நான் முதன் முதலில் உம்ரா சென்ற போது மெக்கா மெதினாவில் பள்ளிவாசல்களையும் பக்தர்களையும்தான் பார்த்தேன். இரண்டாம் முறை செல்லும் போது நான் அதிகம் கண்டது தொலைக்காட்சிகளுக்கான ஏராளமான டிஷ்கள்.

இசை மறுப்பு என்பது எங்காவது அமலில் உள்ளதா? எந்த இஸ்லாமிய நாடும் அப்படி ஒரு சட்டத்தை ஏன் இயற்றவில்லை?

இசை கேட்டால் கசையடி என்று ஏன் சொல்லவில்லை?

உலகில் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் இசை கேட்கிறார்கள். என்றால் இவர்களெல்லாம் இஸ்லாமியர்கள் இல்லையா? எல்லோருமே குற்றவாளிகளா? இப்படி எல்லோரையும் குற்றவாளியாக்கிக் காண இறைவன் விரும்புவானா?

அன்புடன் புகாரி

Unknown said...

அன்புச் சகோதரர்களே,
அஸ்ஸலாமு அலைக்கும்!

>>>>>>>>>>>>>>>
ஜமீல்: முஸ்லிம்களுக்கு ஒரு நாளில் ஐவேளை தொழுகைகள் கடமையாகும். இந்தக் கடமையை நேரடியாக இறைமறையிலிருந்து எடுத்துத் தருவீர்களா?

தாஜுதீன்: இறைமறையில், "மனித மாமிசம் தின்பது முஸ்லிம்களுக்கு விலக்கப்பட்டது" என்ற உறுதியான தடையேதுமில்லை. எனில், முஸ்லிம்களுக்கு மனித மாமிசம் ஹலாலா?
>>>>>>>>>>>>>>>

இப்படியாய் வந்த கருத்துக்கள் என் பணிகளில் ஒன்றை இலகுவாக்கிவிட்டது. அது யாதெனில்....

குர்-ஆன் வசனம் இசையைத் தடை செய்யவில்லை.

இனி காண வேண்டியது ஹதீசுகள் பற்றித்தான். அதைக் காணும்முன், நாம் ஹதீசுகளைப் பற்றிய தெளிவுகளைப் பெறவேண்டும். இன்சால்லா பெறுவோம்.

அன்புடன் புகாரி

Unknown said...

அன்புச்சகோ தாஜுதீன், அ2

>>>>>இறைவன், தன்னை அறியவே மனிதனைப் படைத்தான் என்ற ஆயத் எந்தக் குர்ஆனில் உள்ளது? என்பதை ஆதரத்துடன் தெரிவிக்கவும்.<<<<<

அதிரை நிருபரில் வந்து யாரும் மறுக்காத கருத்துக்கள் இதோ:
http://adirainirubar.blogspot.ca/2012/03/1_31.html
ஆய்வாளர் அஹ்மது ஆரிஃப் , எம்.ஃபில் , எம்.காம்

மனிதனை மட்டுமல்ல, வானம், பூமி இன்னும் நம் அறிவுக்குத் தெரிந்த, தெரியாத எந்தப் படைப்புகளையும் உண்டாக்க வேண்டுமென்ற தேவை அல்லாஹ்வுக்கு இல்லை. எனினும், அவன் படைப்புகளைப் படைப்பதன் நோக்கம், அவனது வல்லமையைப் படைப்புகள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்.

وما خلقت الجن والإنس الا ليعبدون
ஜின்களையும், மனிதர்களையும் படைத்தன் நோக்கம் அவர்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி வேறில்லை. (அல்குர்ஆன்51:56)

மேற்கண்ட ஆயத்தில் லியஃபுதூன் என்னை வணங்குவதற்காக அன்றி என்பதை என்னை அறிந்து கொள்வதற்காகவே அன்றி என்றும் பொருள் உள்ளது என முஜாஹிது, இப்னு ஜுரைஜ் போன்ற அறிஞர்கள் கூறுகின்றார்கள்.(தஃப்ஸீர் இப்னு கஃதீர், தஃப்ஸீருல் பஃகவீ) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் லியஃரிஃபூனி – (என்னை அறிந்து கொள்வதற்காகவே அன்றி) என்று ஓதிக்காட்டினார்கள் என்றும் பல விரிவுரை நூல்களில் வந்துள்ளன. இன்னும்,

كنت كنزاً مخفياً فأحببت أن أعرف فخلقت الخلق لأعرف
நான் மறைக்கப்பட்ட புதையலாக இருந்தேன். நான் அறியப்பட வேண்டும் என்று விரும்பினேன். எனவே, நான் அறியப்படவேண்டும் என்பதற்காகப் படைப்புகளைப் படைத்தேன் என்று அல்லாஹ் கூறினான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் குத்ஸீ ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஹதீதின் கருத்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிய விளக்கத்திற்கு ஒத்திருப்பதாகவும் அறிஞர்கள் பலர் கூறுகின்றனர். (தஃப்ஸீர் கபீர், தஃப்ஸீர் ஆலூஸி.)
والله الغني وانتم الفقراء
இன்னும் அல்லாஹ் எந்தத் தேவையுமற்றவன். நீங்களே அவனிடத்தில் தேவையுற்றவர்கள். (அல்குர்ஆன் 47:38)

Unknown said...

அன்பின் சகோ தாஜ்தீன்,

>>>>வாழ்நாளில் இசையை கேட்காதவன், தொலைகாட்சி பார்க்காதவன், திரைப்படம் காணதவன் என்ற புள்ளிவிபரமெல்லாம் இந்த பதிவுக்கு அவசியமற்றது என்று கருதிகிறேன்.<<<<

ஏன்?

எதற்காக?

எதனால்?

அன்புடன் புகாரி

அதிரை சித்திக் said...

'என்னிடம் ஒரு பெண் அமர்ந்திருக்குகிபோது நபி(ஸல்) அவர்கள் அங்கே வந்தார்கள். 'யார் இந்தப் பெண்மணி?' என்று கூறிவிட்டு அவள் (அதிகமாக) தொழுவது பற்றிப் புகழ்ந்து கூறினேன். அப்போது நபி(ஸல்) 'போதும் நிறுத்து! நற்செயல்களில் உங்களால் முடிந்தவற்றைச் செய்து வாருங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் சலிப்படையும் வரை அல்லாஹ் சலிப்படைவதில்லை! மேலும் மார்க்கத்தின் நல்லறங்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது, நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள் தாம்' என்று கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்-
( ஸஹீஹுல் புகாரி ஹதீஸ்-43

அதிரை சித்திக் said...

அன்பு கவி ..புகாரி அவர்களுக்கு ..

இசை ,கவி ,இரண்டும் தங்களின் இரத்தோடு கலந்து விட்டதாகவே நம்புகிறேன் ...

மொழி பற்று மூலையில் உறைந்து விட்டது ..என் அறிவுக்கு உள்பட்ட கருத்துக்களை

இட்டு விட்டேன் இனி இல்லை ..ஏன் என்றால் தங்களின் வலை தளத்தில் நடிகர் சிவாஜி

கணேசன் மறைவுக்கு ஒரு இரங்கல் பா வடித்து இருந்தீர்கள் ..*சிவாஜியை படைத்த பிரம்மன்"

என்ற சொல்லினை உபயோகித்து இருந்தீர்கள் ..அது கவிக்காகவா ..நம்பிக்கையா ..தாங்கள்

குர் ஆண் சொன்னதா ..என்று இன்றைய நவீனத்தை மேற்கோள் காட்டுவது தங்களின் சமத்தான

பதில் ..உங்கள் வழிஉங்களுக்கு எண்கள் வழி எங்களுக்கு .அஸ்ஸலாமு அலைக்கும்

KALAM SHAICK ABDUL KADER said...

//அன்பு நண்ப அபுல் கலாம்,

உங்கள் சட்டென்று பொழிந்த உங்கள் கவி வாழ்த்துக்கு நன்றி//

நெஞ்சம் படர்ந்த நன்றி

இசைப் பற்றிய என் நிலைப்பாடு:
“கவிதையும் இசையும் இரட்டைக் குழந்தைகள்”
கவிதைக்கு ஓசை நயம்
இசைக்கு தாள லயம்

“ஆதியருள் கனிந்திலங்கி
...அமரர் ஜிப்ரயில் வழியாக
நீதிநபி மாமணிக்கு
... நிறைவளித்த குர் ஆனாம்”

என்ற பாடலை அதிரை செக்கடிப்பள்ளியில் அரங்கேற்றம் செய்யும் பொழுது “இறையருட் கவிமணி” என்ற பட்டம் சூட்டப்பட்ட மர்ஹூம் பேராசிரியர் அப்துல் கஃபூர் அவர்கள் அப்பாடலை இசைமுரசு இ.எம் ஹனீஃபா அவர்களின் “இசையில்” வெளியிட அனுமதியும் அங்கு வழங்கினார்கள்(கவிதையும் இசையும் பிரிக்கவியலாத இரட்டைக் குழந்தைகள்)
அப்பேராசிரியர் பெருமகனார் மற்றும் “இறைவனிடம் கையேந்துங்கள்” பாடற்புகழ் கிளியனூர் கவிஞர் அப்துஸ்ஸலாம் போன்றோர் செய்த வண்ணம் தேரிழந்தூர் தாஜூதீன் (அமீரகப் பாடகர்) வேண்டிக் கொண்டதற்கிணங்க “ரமலான்” பற்றிய பாடலை அடியேன் எழுதிக் கொடுத்தேன். இந்த அமீரகப்பாடகர் தேரிழந்தூர் தாஜூதீன் உடைய”பாடலுக்கு மிகவும் இரசிகராக உள்ளதாக |மூன் டிவி”யில் ”ஷரி அத் சட்டங்கள்” நடத்தும் அப்ஸலுல் உலமா, முனைவர் அஹமத் பாஷா ஆலிம் அவர்கள் அய்மான் கூட்டத்தில் அபுதபியில் சொன்னதன் பிறகும். அவர்களுடைய “ஷரி அத் சட்டங்கள்” பற்றிய அடக்கமான-ஆர்ப்பாட்டம் இல்லாத-குழப்பம் அற்ற விளக்கங்கள் கேட்ட பிறகு நான் இசைக்கு ஏற்ப பாடல் எழுதுவதில் தவறில்லை என்று முடிவு செய்தாலும்.

திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்களிடமிருந்து ”நான்” எனும் திரைப்படத்திற்கு பாடல் எழுத அவர்கள் அனுப்பிய இசைக் கோப்பு இன்னும் என் கோப்பில் உறங்கிக் கொண்டிருக்கின்றது;காரணம், சினிமாத் துறைக்குப் பாடல் எழுதக் கூடாது என்பதால் நான் மறுத்து விட்டேன்!

Unknown said...

//3. ஹதீஸ் என்றால் என்ன? அதன் வரலாறு என்ன? யார் தொகுத்தார்? எப்போது தொகுத்தார்? ஏன் தொகுத்தார்? என்ற கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம்தான் நாம் குர்-ஆனை எப்படி அணுக வேண்டும் ஹதீசுகளை எப்படி அணுகவேண்டும் என்று தெளிய முடியும்.// - அன்புடன் புகாரி

இன்னும் வேணுமா?

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்பின் புகாரீ,

உங்கள் ஊரில் வடக்கு வாணியத் தெரு எனும் பெயரில் ஒரு தெரு உண்டு. உள்ளே சென்று பார்த்தால் மல்லாக்கொட்டை (நிலக்கடலை) தெருவில் காயும். பக்கத்தில் செக்கு மாடுகள் சுற்றிச் சுற்றி வரும்.

"அ.நி.யில் எழுதுபவர்களுள் எவராவது இசை கேட்காதவர்கள் இருக்கின்றனரா?" எனும் கருத்தில் திரும்பத் திரும்ப வினா எழுப்பிக் கொண்டிருப்பதைப் படிக்கும்போது செக்கு மாடுகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.

இசையை விரும்பிக் கேட்பது வேறு; அது திணிக்கப்படுவது வேறு என்பதைக்கூட புரியாமலா "மாங்கு மாங்கென்று" எழுதுகின்றீர்கள்? பேருந்தில் நான் நேற்றுப் பயணிக்கும்போது தமிழிசையை வளர்ப்பதற்காக "இரண்டக்கா இரண்டு அக்கா" பாட்டுப் போட்டான். அதை நான் விரும்பவில்லையே? என் மீது அது திணிக்கப்பட்டதன்றோ?

"ச்சின்னப் புள்ளயிலே நீ அம்மணமா திரிஞ்சியா இல்லியா?" போன்ற தொனியில் எழுதுவதை விடுத்து, அறிவுபூர்வமாக எழுதுங்கள்.

என் கேள்விக்கு (either option) நீங்கள் இன்னும் பதில் சொல்லவில்லை என்பதை நினைவூட்டுகிறேன்.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்புத் தம்பி அபுல் கலாம்,

இங்கு இஸ்லாத்தில் இசை கூடுமா? என்பது பற்றிய கருத்தாடல் நடந்து கொண்டிருக்கிறது. "கூடாது" என்பது இஸ்லாத்தின் அடிப்படைச் சான்றுகளுடன் தம்பி தாஜுத்தீனுடைய இந்தப் பதிவில் நிறுவப்பட்டுள்ளது. "கூடும்" என்பதற்கு இஸ்லாமியச் சான்றுகள் ஏதும் தங்களிடமிருப்பின் தருக!
அதை விடுத்து, அல்லாமா குல்லாப் போட்டக் கதையோ செக்கடி மேட்டு அங்கீகாரமோ வேண்டாம்.

Noor Mohamed said...

அபுல் கலாம் (த/ பெ. ஷைக் அப்துல் காதிர் )) சொன்னது…
//இசைப் பற்றிய என் நிலைப்பாடு:
“கவிதையும் இசையும் இரட்டைக் குழந்தைகள்”//

தவறான கருத்து.

இசையின்றி கவிபாடினாலும் அர்த்தம் அறியலாம்.
ஆனால்! கவியின்றி இசை இசைத்தால் அதில் அர்த்தமே இல்லை.
எனவே, அர்த்தம் அறிய கவிதை தேவை. இசை தேவையில்லை.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்பின் புகாரீ,

சகோ. அஹ்மது ஆரிஃப் அவர்களின் ஆய்வை இங்கு நான் கேள்விக்குள்ளாக்குகிறேன்.

//மேற்கண்ட ஆயத்தில் லியஃபுதூன் என்னை வணங்குவதற்காக அன்றி என்பதை என்னை அறிந்து கொள்வதற்காகவே அன்றி என்றும் பொருள் உள்ளது என முஜாஹிது, இப்னு ஜுரைஜ் போன்ற அறிஞர்கள் கூறுகின்றார்கள்.(தஃப்ஸீர் இப்னு கஃதீர், தஃப்ஸீருல் பஃகவீ)// அப்படி ஒரு பொருள் இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்திருந்தால் மட்டுமே அது அனைத்து முஸ்லிம்களாளும் ஏற்கப்படும். இல்லையேல் அது இபுனு அப்பாஸ் (ரலி) அவர்களின் மாணவர்களுள் ஒருவரான முஜாஹிதுடைய சொந்தக் கருத்து; இப்னு ஜுரைஜ் என்பாரின் சொந்தக் கருத்து என்றே கருதப்படும்; .

//இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் லியஃரிஃபூனி – (என்னை அறிந்து கொள்வதற்காகவே அன்றி) என்று ஓதிக்காட்டினார்கள் என்றும் பல விரிவுரை நூல்களில் வந்துள்ளன// இபுனு அப்பாஸ் அவர்களின் பெயரால் இவ்வாறு நிறைய 'அடித்து' விடப்பட்டுள்ளன. அவரவர் இஷ்டத்துக்கு ஓதிக் காட்டுவதற்கு இதென்ன மனிதன் இயற்றிய மந்திரமா? இறைவசனத்தை இஷ்டத்துக்கு மாற்றி ஓதுவதற்கு அல்லாஹ்வின் தூதருக்கு இல்லாத சிறப்புத் தகுதி இபுனு அப்பாஸுக்கு எங்கிருந்து வந்தது? யார் கொடுத்தது? சிந்திக்க வேண்டாமா?

தஃப்ஸீர் இபுனு கதீரின் மூலவரிகள்:
{56} وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ

أَيْ إِنَّمَا خَلَقْتُهُمْ لِآمُرهُمْ بِعِبَادَتِي لَا لِاحْتِيَاجِي إِلَيْهِمْ وَقَالَ عَلِيّ بْن أَبِي طَلْحَة عَنْ اِبْن عَبَّاس " إِلَّا لِيَعْبُدُونِ" أَيْ إِلَّا لِيُقِرُّوا بِعِبَادَتِي طَوْعًا أَوْ كَرْهًا وَهَذَا اِخْتِيَار اِبْن جَرِير . وَقَالَ اِبْن جُرَيْج إِلَّا لِيَعْرِفُونِ وَقَالَ الرَّبِيع بْن أَنَس " إِلَّا لِيَعْبُدُونِ " أَيْ إِلَّا لِلْعِبَادَةِ وَقَالَ السُّدِّيّ مِنْ الْعِبَادَة مَا يَنْفَع وَمِنْهَا مَا لَا يَنْفَع " وَلَئِنْ سَأَلْتهمْ مَنْ خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّه " هَذَا مِنْهُمْ عِبَادَة وَلَيْسَ يَنْفَعهُمْ مَعَ الشِّرْك . وَقَالَ الضَّحَّاك : الْمُرَاد بِذَلِكَ الْمُؤْمِنُونَ.

http://quran.al-islam.com/Page.aspx?pageid=221&BookID=11&Page=1

இதில் இபுனு அப்பாஸ் (ரலி) அவர்களின் கருத்து என்ன? ஆய்வாளர் ஆரிஃபு பதில் தரவேண்டும்.

***

புகாரீ,
உங்களுக்காக
ஆங்கிலத்தில்
:
Allah the Exalted and Most Honored said,

(And I created not the Jinn and mankind except that they should worship Me.) meaning, `I, Allah, only created them so that I order them to worship Me, not that I need them.' `Ali bin Abi Talhah reported that Ibn `Abbas commented on the Ayah,

(...except that they should worship Me.) meaning, "So that they worship Me, willingly or unwillingly.

http://www.abdurrahman.org/qurantafseer/ibnkathir/ibnkathir_web/51.50575.html

***
இறைமறையின் தெளிவான சொற்களையுடைய வசனங்களுக்குத் தஃப்ஸீர் தேவையில்லை என்பதும் இறைமறையில் முதல் முஃபஸ்ஸிர் (விரிவுரையாளர்) முஹம்மது (ஸல்) அவர்களே என்பதும் நமது நிலைப்பாடாக இருக்கவேண்டும்.

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தெளிவான குர் ஆன் ஹதீஸ் அறிவிக்கப்பட்டிருக்கும் போது தேவையில்லாமல் நேரங்காலத்தை விரயக்காமல் ஆகுமான வேறு கருத்துக்களை அலசுவது பயனுள்ளதாக இருக்கும் என்பது என் கருத்து.

Unknown said...

அன்பினிய மூத்தசகோ ஆய்வாளர் அதிரை அஹ்மது அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.

>>>>>>>>>>>>>Adirai Ahmad சொன்னது…
//3. ஹதீஸ் என்றால் என்ன? அதன் வரலாறு என்ன? யார் தொகுத்தார்? எப்போது தொகுத்தார்? ஏன் தொகுத்தார்? என்ற கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம்தான் நாம் குர்-ஆனை எப்படி அணுக வேண்டும் ஹதீசுகளை எப்படி அணுகவேண்டும் என்று தெளிய முடியும்.// - அன்புடன் புகாரி

இன்னும் வேணுமா?
>>>>>>>>>>>>>>>>

உங்கள் கேள்வி எதுவாக இருக்கும் என்று யோசிக்கிறேன். சகோ தாஜுதீன் இட்ட சுட்டிகள் போதாதா என்பதாக உங்கள் கேள்வி இருப்பின், என் பதில் இதோ.

நான் அவற்றை வாசித்துக்கொண்டுதான் இருக்கிறேன். அவர் சற்றே தொகுத்து இங்கே எளிமையாக இட்டிருக்கலாமே ஏன் இப்படி பல சுட்டிகளை இட்டார் என்று நினைத்தேன். அவர் தொகுத்து இட்டிருந்தால் பலரும்கூட அக்கறையாய் வாசித்திருப்பார்கள். சுட்டிகளை இட்டால் அதைச் சொடுக்குவோர் என் அனுபவத்தில் மிகக்குறைவு.

ஆகவே நான் வழியில் தொக்க முயல்கிறேன். பார்க்கலாம் இன்சால்லா.

அன்புடன் புகாரி

Unknown said...

அன்பின் ஜமீல் நாணா!

”ஓ நீ சத்தரமா? எங்க ஊரு காத்து தானே உங்க ஊருக்கு வருது. எங்ககிட்டதானே கடலு ஈக்கிது. இல்லாட்டி காத்துல்லாம மூச்சு வுட ஏலாம செத்துப் போயிடுவியடா”

என்று உங்கள் ஊர் பேருந்து நிலையத்தில் கேட்டதும் எனக்கு நினைவிருக்கிறது நாணா :)

>>>>"அ.நி.யில் எழுதுபவர்களுள் எவராவது இசை கேட்காதவர்கள் இருக்கின்றனரா?" எனும் கருத்தில் திரும்பத் திரும்ப வினா எழுப்பிக் கொண்டிருப்பதைப் படிக்கும்போது செக்கு மாடுகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.<<<<

அது நீங்கள் கொண்ட சினத்தில் வந்த தவறு. என் கருத்தை மறுக்க இயலாமல் போகும்போது சட்டென சினம்தான் தொற்றிக்கொள்ளும். அது பின் தானே சரியாகும்.

திரைப்படமோ தொலைக்காட்சியோ எவர்மீதும் திணிக்கப்படுவதில்லை. இதில் தரமில்லாத தமிழகத் தெருக்களின் ஒலிபெருக்கிகள், பேருந்துகள் செய்யும் அட்டகாசம் தாங்க முடிவதில்லை. அப்படியான ஏதும் நான் 18 ஆண்டுகள் வாழ்ந்த சவுதியிலோ, 12 ஆண்டுகள் வாழும் கனடாவிலோ கிடையாது.

திணிக்கப்படுவதை எவராலும் ரசிக்கமுடியாது, ஆனால் ரசித்ததை எவறாலும் மறுக்க முடியாது. மறுக்கும் நபர்களைப் பற்றி எனக்கு அக்கறையும் கிடையாது. இங்கே அப்படி மறுப்பவர்களை நான் காணவில்லை என்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. தரமான வாசகர்கள் அதிரை நிருபருக்கு.

கவிஞர் சபீர் தன் நிலைப்பாட்டை வெகு அழகாக எடுத்து வைத்தார். இந்த இழையின் மொத்த சாராம்சமே அதுதான். இசை கூடுமா கூடாத என்பதற்கான நேரடி பதிலே அதுதான். வரம்பு மீறுபவர்களை இறைவன் மன்னிக்கமாட்டான்.

எல்லோரும் ரசிக்கும் இன்றைய ஊடக ஒலி ஒளிகள் இல்லாத ஓர் நாடு உண்டா ஓர் ஊர் உண்டா ஓர் வீடுதான் உண்டா? உண்மையை ஏற்பதில் ஏன் சினம்?

எல்லோரையும் குற்றவாளியாய் இறைவன் ஆக்கமாட்டான் என்று நான் நம்புகிறேன். என் ஏக இறைவனின் மீதான நம்பிக்கை அது. அதற்குச் சான்றாக குர்-ஆன் வசனங்களும் உண்டு. அவற்றை நான் இங்கு நிச்சயம் இடுவேன்.

அதோடு இன்னொன்று, இந்த ”ரெண்டக்க ரெண்டக்க” கேட்டது இருக்கட்டும், இசை என்றால் ஏன் சினிமாப்பாட்டு அல்லது பக்திப் பாட்டு என்பதுபோலவே நினைக்கிறீர்கள்?

இசையின் புரிதல் அடிபட்டுத் துடிக்கிறதே?

மிக மெலிதாக எந்த மனிதக்குரலும் இல்லாமல், உணர்வுகளை மழையாய்ப் பொழியும் அற்புத இசைவெள்ளங்களை நீங்கள் கேட்டதே இல்லையா? கவிஞர் சபீர் அதையும் அழகாகச் சொல்லி இருந்தார்.

திரைப்படத்தை விடுங்கள், அருமையான காடுகளையும் விலங்குகளையும் மீன் இனங்களையும் டாக்குமெண்டரியாக படம் எடுக்கிறார்கள், அதன் பின்னணி இசையைக் கேட்டால் ரசிக்காதவர்கள் இருக்கமுடியாது, அப்படிச் சொல்வதைவிட அப்படியான பின்னணி இசையில்லாமல் அந்த டாக்குமெண்டரிகள் டாக்குமெண்டரிகளாகவே இருக்காது.

அலைகளின் தாளங்களையும் குயில்களின் கீதங்களையும் நேசிக்கும் செவிகளுக்கு இறைவன் நிச்சயமாகத் தடை விதிக்கவே மாட்டான்.

தன்னை மறக்கும் நிலைப்பாடே இஸ்லாமில் தடுக்கப்பட்டது. வரம்பு மீறுவதே இறைவனின் மன்னிப்பைப் பெறத் தகுதியற்றது.

அன்புடன் புகாரி

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோ. அன்புடன் புகாரி அவர்களுக்கும்

///
>>>>>>>>>>>>>>>
ஜமீல்: முஸ்லிம்களுக்கு ஒரு நாளில் ஐவேளை தொழுகைகள் கடமையாகும். இந்தக் கடமையை நேரடியாக இறைமறையிலிருந்து எடுத்துத் தருவீர்களா?

தாஜுதீன்: இறைமறையில், "மனித மாமிசம் தின்பது முஸ்லிம்களுக்கு விலக்கப்பட்டது" என்ற உறுதியான தடையேதுமில்லை. எனில், முஸ்லிம்களுக்கு மனித மாமிசம் ஹலாலா?
>>>>>>>>>>>>>>>

அன்புடன் புகாரி சொன்னது: இப்படியாய் வந்த கருத்துக்கள் என் பணிகளில் ஒன்றை இலகுவாக்கிவிட்டது. அது யாதெனில்....

குர்-ஆன் வசனம் இசையைத் தடை செய்யவில்லை.///

அப்படியானால் மேல் சொன்ன உங்கள் கூற்றுப்படி....

1) ஐந்து வேலை தொழுகை கடமை இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?
2) மனித மாமிசம் சாப்பிடலாம் என்று எடுத்துக்கொள்ளலாமா?

இது என்னுடைய கேள்விகள்...

ஜமீல் காக்காவுக்கு அவர்கள் கேட்ட கேள்விக்கு தனி பதிலிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அன்புடன் புகாரி சொன்னது

ஏன்?

எதற்காக?

எதனால்?
//


நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய அளவுக்கு என்ன அவசியம் என்பது தெரியவில்லை. தகவலுக்காக தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் தவறில்லை.தகவல் தெரிந்தவர்கள் தரட்டும்.

மனிதர்கள் இசையை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதல்ல இங்கு விவாதிப்பது, இஸ்லாம் இசையை பற்றி என்ன சொல்லுகிறது என்பதே நாம் இங்கு விவாதிப்பது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அன்புடன் புகாரி சொன்னது…
அன்புச் சகோ தாஜுதீன் அவர்களே,

நீங்களும் ஒத்துக்கொண்டதின் பேரில் இவற்றை நாம் உறுதி செய்கிறோம்:

1. மார்க்க அறிஞர்கள் அனைவருக்கும் ஒருமித்த ஒற்றைக் கருத்து என்பது கிடையாது.

2. முகமது நபி சொன்ன எல்லாம் குர்-ஆன் வசனங்கள் அல்ல.

3. நபிகள் நாயகம், நபித் தோழர்கள், நபியின் உறவினர்கள், மார்க்க அறிஞர்கள், ஆய்வாளர்கள் என்ற அனைவரின் அறிவிற்கும் எல்லை உண்டு. எல்லை இல்லா அறிவினைப் பெற்றவன் இறைவன் ஒருவனே.

4. 1400 ஆண்டுகளாக பல மார்க்க அறிஞர்கள் சொல்லிவிட்டார்கள், அவற்றுக்கு மாற்றுக்கருத்தில்லை என்று இறைவனையும் அவன் நூலையும் அறியும் முயற்சியை நிறுத்திவிடுதல் கூடாது. இஸ்லாமியன் என்பவன் எப்போதும் அறிவினைத் தேடும் அறிவுடையோன்.

5. இறைவன் எவற்றை தடை செய்யவில்லையோ அவற்றை மனிதன் தடைசெய்வது ஹராமான செயல்.

6. ஹதீஸ்கள் பற்றி உங்களிடமிருந்து ஏராளமான சுட்டிகளே வந்துள்ளன. நறுக்கென்று உங்கள் கருத்துக்கள் வரவில்லை. பரவாயில்லை. நானே தொகுத்து இடுகிறேன். நீங்கள் ஒப்புதல் தந்தால் போதும். ///

ஹதீஸ்களை பற்றி அறிந்து, தெரிந்து தெளிவு பெற்று வாருங்கள், நாம் ஒத்துக்கொள்ளப்போகும் விடையங்கள் பற்றி பின்னர் பேசுவோம்.

நான் குறிப்பிட்ட ஆறு விடையங்கள் இதோ உங்கள் பார்வைக்கும், நான் உங்களுக்கு அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளவைகள் அனைத்தும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை சார்ந்தே உள்ளது, உங்களுக்கு ஹதீஸ்களை பற்றிய தெளிவு வந்ததும் மற்றவைகள் பேசலாம்..

ஞாபகமூட்டலுக்காக...

//1. இஸ்லாமிய அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு என்பது ஒன்றைப் பற்றிய ஆய்வில் அவரவர்களின் அறிவுக்குத் தக்கவாறு பெறப்படும் அவர்களது சொந்தக் கருத்துகளாகும். அவை எல்லாவற்றிலும் ஒத்திருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது; அது தேவையுமில்லை. ஏனெனில், மார்க்கத்தின் அடிப்படையான விஷயங்களில் குர்ஆனும் ஹதீஸும் எல்லாரும் விளங்கிக்கொள்ளும் வகையில் தெளிவாகவே இருக்கின்றன. மிகச் சில தொன்மைச் சொல்லாட்சிகளுக்கு விளக்கம் பெறுவதற்கு மட்டும் அரபு மொழிப் புலமை பெற்றவர்கள் தேவைப்படுவர். காட்டாக 'முத்' 'ஸாஉ' எனும் அளவுகள் பற்றி நமக்கெல்லாம் தெரியாது. அதைப் பற்றி அறிந்தவர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்கிறோம். இதனால் ஈமானுக்கு எவ்வித இழப்புமில்லை.

2. நபி (ஸல்) அவர்களின் சொந்தப் பேச்சுகள் அனைத்தும் மார்க்கமாகாது என்பது சரியே. ஆனால், அவர்களது ஒவ்வொரு சொல்லையும் அசைவையும் அல்லாஹ் கண்காணித்து, அவர்கள் பிழை செய்தபோது திருத்தியதும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அபஸ, அஹ்ஸாப் ஆகிய இறைமறையின் அத்தியாயங்கள் சான்றாகத் திகழ்கின்றன. நபிகளாரின் வீட்டில் உண்ண உணவில்லை எனும் தகவல் மார்க்க விஷயமா? ஆனால் அதுவும் பதிவில் இருக்கிறது.'லா இலாஹ இல்லல்லாஹ்' எனும் நம்பிக்கை முழுமையானதன்று - முஹம்மதுர் ரஸூல்லாஹ் இணைந்த நம்பிக்கையே முழுமையானதாகும். வமா ஆத்தாகுமுர் ரஸுலு ஃபஹுதூஹூ எனும் இறை வசனம் "அவர் கொடுப்பதை எடுத்துக்கொள்ளுங்கள்; அவர் தடுப்பதைத் தடுத்துக்கொள்ளுங்கள்" எனக் கூறுகிறது. அவர் கொடுப்பதும் தடுப்பதும் ஹதீஸ்கள் வாயிலாகவே!

3. இன்ஷா அல்லாஹ் இந்த சுட்டிகளளில் உள்ளவைகள் அனைத்தையும் படித்தால் உங்களுக்கு ஹதீஸ்கள் தொடர்பாக நல்ல தெளிவு கிடைக்கும்.

http://albaqavi.com/home/?p=69

http://albaqavi.com/home/?p=1122

http://dharulathar.com/2007/12/17/190/

http://tamilislam-qa.blogspot.in/2008/11/blog-post_08.html

http://onlinepj.com/books/sariyana_hatheeskalum/

வாசிப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை என்றால், இந்த காணொளி விளக்கத்தையாவது பார்த்து கேளுங்கள். ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்ட வரலாறு

4. எல்லை இல்லா அறிவினைப் பெற்றவன் இறைவன் ஒருவனே. அவன்தான் கூறுகிறான்: அல்லாஹ்வை இறைவனாக ஏற்றுக் கட்டுப்பட்டு, அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுபவரே பெருவெற்றியாளர். (வ மன் யுதியில்லாஹ வரஸூலஹூ ஃபகத் ஃபாஸ ஃபவ்ஸன் அழீமா"

5. ஒரு முஸ்லிம் என்பவன்/என்பவள் எப்போதும் அறிவினைத் தேடக் கடமைப்பட்டவராவார். அதையும் நபி(ஸல்)தான் கூறினார்: அறிவு தேடுதல் ஒவ்வொரு முஸ்லிம் ஆண்/பெண்ணுக்கும் கடமையாகும்.

6. குர்-ஆனின் கருத்துப்படி, இறைவன் தன் தூதர் வழியாக எவற்றை உறுதியாகக் கூறி தடை செய்யவில்லையோ அவற்றை மனிதன் தடைசெய்வது ஹராமான செயல். இதை இறைவனே கூறியிருக்கிறான். இறைவனின் தூதர் வழியாகவே இறைமறை அருளப்பட்டது. இறைமறையில், "மனித மாமிசம் தின்பது முஸ்லிம்களுக்கு விலக்கப்பட்டது" என்ற உறுதியான தடையேதுமில்லை. எனில், முஸ்லிம்களுக்கு மனித மாமிசம் ஹலாலா? இது ஒரு சாம்பிள் கேள்வி மட்டுமே. இதுபோன்று ஆயிரக் கணக்கில் உண்டு. அத்தனைக்கும் ஹதீஸில் விடைகள் உள்ளன.//

Unknown said...

அன்பின் சகோ தாஜுதீன்,

>>>ஐந்து வேலை தொழுகை கடமை இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?
மனித மாமிசம் சாப்பிடலாம் என்று எடுத்துக்கொள்ளலாமா?
<<<<

இசைக்குத் தொடர்பில்லாத இவற்றை நீங்கள் புதிய பதிவுகள் தொடங்கினால் கருத்தாடுவோம்

அன்புடன் புகாரி

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அன்புடன் புகாரி சொன்னது…

அன்புச்சகோ தாஜுதீன், அ2

>>>>>இறைவன், தன்னை அறியவே மனிதனைப் படைத்தான் என்ற ஆயத் எந்தக் குர்ஆனில் உள்ளது? என்பதை ஆதரத்துடன் தெரிவிக்கவும்.<<<<<

அதிரை நிருபரில் வந்து யாரும் மறுக்காத கருத்துக்கள் இதோ:
http://adirainirubar.blogspot.ca/2012/03/1_31.html
ஆய்வாளர் அஹ்மது ஆரிஃப் , எம்.ஃபில் , எம்.காம்

மனிதனை மட்டுமல்ல, வானம், பூமி இன்னும் நம் அறிவுக்குத் தெரிந்த, தெரியாத எந்தப் படைப்புகளையும் உண்டாக்க வேண்டுமென்ற தேவை அல்லாஹ்வுக்கு இல்லை. எனினும், அவன் படைப்புகளைப் படைப்பதன் நோக்கம், அவனது வல்லமையைப் படைப்புகள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்.

وما خلقت الجن والإنس الا ليعبدون
ஜின்களையும், மனிதர்களையும் படைத்தன் நோக்கம் அவர்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி வேறில்லை. (அல்குர்ஆன்51:56)

மேற்கண்ட ஆயத்தில் லியஃபுதூன் என்னை வணங்குவதற்காக அன்றி என்பதை என்னை அறிந்து கொள்வதற்காகவே அன்றி என்றும் பொருள் உள்ளது என முஜாஹிது, இப்னு ஜுரைஜ் போன்ற அறிஞர்கள் கூறுகின்றார்கள்.(தஃப்ஸீர் இப்னு கஃதீர், தஃப்ஸீருல் பஃகவீ) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் லியஃரிஃபூனி – (என்னை அறிந்து கொள்வதற்காகவே அன்றி) என்று ஓதிக்காட்டினார்கள் என்றும் பல விரிவுரை நூல்களில் வந்துள்ளன. இன்னும்,

كنت كنزاً مخفياً فأحببت أن أعرف فخلقت الخلق لأعرف
நான் மறைக்கப்பட்ட புதையலாக இருந்தேன். நான் அறியப்பட வேண்டும் என்று விரும்பினேன். எனவே, நான் அறியப்படவேண்டும் என்பதற்காகப் படைப்புகளைப் படைத்தேன் என்று அல்லாஹ் கூறினான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் குத்ஸீ ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஹதீதின் கருத்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிய விளக்கத்திற்கு ஒத்திருப்பதாகவும் அறிஞர்கள் பலர் கூறுகின்றனர். (தஃப்ஸீர் கபீர், தஃப்ஸீர் ஆலூஸி.)
والله الغني وانتم الفقراء
இன்னும் அல்லாஹ் எந்தத் தேவையுமற்றவன். நீங்களே அவனிடத்தில் தேவையுற்றவர்கள். (அல்குர்ஆன் 47:38)///

மேல் சொன்ன விளக்கத்தை ஜமீல் காக்கா ஆதரத்துடன் மறுத்திருக்கிறார்கள்.

இருப்பினும்....

இறைவன், தன்னை அறியவே மனிதனைப் படைத்தான் வசனம் நேரடியாக குர்ஆனில் இல்லாத போது தப்ஸீர் அதாவது ஹதீஸ்களின் விளக்கங்களை தானே தேடியுள்ளீர்கள். ஆகையால் நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் தன்னை அறியவே மனிதனை இறைவன் படைத்தான் என்ற வசனத்திற்கு ஹதீஸின் மூலம் தெளிபெறப்போய்தானே நீங்கள் அவ்வசனத்தை அடிகடி சொல்லி வருகிறீர்கள் என்பது நிரூபனமாகிவிட்டது.

இனி...

1)ஜமீல் காக்கா சொல்லுவது சரி என்று சொன்னால், நீங்கள் குறிப்பிடும் ஆயத் தன்னை அறியவே மனிதனைப் படைத்தான் குர்ஆனில் எங்கு உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும்.

அல்லது

2)குர் ஆன் வசனத்திற்கு தப்ஸீர்கள்,ஹதீஸ்களின் விளக்கங்கள் அவசியம் தேவை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அன்புடன் புகாரி சொன்னது…
அன்பின் சகோ தாஜுதீன்,

>>>ஐந்து வேலை தொழுகை கடமை இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?
மனித மாமிசம் சாப்பிடலாம் என்று எடுத்துக்கொள்ளலாமா?
<<<<

இசைக்குத் தொடர்பில்லாத இவற்றை நீங்கள் புதிய பதிவுகள் தொடங்கினால் கருத்தாடுவோம்//

நம்முடைய கருத்தாடலுடன் தொடர்புடையது தானே..

நானும் ஜமீல் காக்காவும் கேட்டது இதோ

ஜமீல்: முஸ்லிம்களுக்கு ஒரு நாளில் ஐவேளை தொழுகைகள் கடமையாகும். இந்தக் கடமையை நேரடியாக இறைமறையிலிருந்து எடுத்துத் தருவீர்களா?

தாஜுதீன்: இறைமறையில், "மனித மாமிசம் தின்பது முஸ்லிம்களுக்கு விலக்கப்பட்டது" என்ற உறுதியான தடையேதுமில்லை. எனில், முஸ்லிம்களுக்கு மனித மாமிசம் ஹலாலா?

அதற்கு உங்கள் பதில் இதோ..

அன்புடன் புகாரி சொன்னது: இப்படியாய் வந்த கருத்துக்கள் என் பணிகளில் ஒன்றை இலகுவாக்கிவிட்டது. அது யாதெனில்....

குர்-ஆன் வசனம் இசையைத் தடை செய்யவில்லை.

இப்படி நீங்கள் பதில் கூறியதன் மூலமே நான் பின் வருமாறு கேட்டுள்ளேன்.

1) ஐந்து வேலை தொழுகை கடமை இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?
2) மனித மாமிசம் சாப்பிடலாம் என்று எடுத்துக்கொள்ளலாமா?

கட்டாயம் இவைகளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்

Unknown said...

அன்பின் சகோ தாஜுதீன்

>>>>>குர் ஆன் வசனத்திற்கு தப்ஸீர்கள்,ஹதீஸ்களின் விளக்கங்கள் அவசியம் தேவை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.<<<<

அரபு மொழி என்னுடையதல்ல. அது என்னுடைய மொழியே ஆனாலும் நான் பல அகராதிகளைப் பார்த்துத்தான் தெளிவு பெறுவேன். இப்படிச் செய்வதில் ஏதோ தவறு உள்ளது என்பதுபோல் எழுதி இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

ஒரே கவிதையை காலத்துக்குக் காலம் ஆளுக்கு ஆள் மாற்றிப் பொருள் கொள்ளும் நிலையை நீங்கள் என்னவென்று கூறுவீர்கள்?

குர்-ஆன் அப்படியான ஓர் இலக்கியத்தரத்தில் இருக்கிறது. அது ஏதோ அந்தக் காலத்தில் ஒருவர் விளக்கம் சொன்னார் என்பதோடு நின்றுவிடாது. ஒவ்வொரு காலமும் சரியான விளக்கம்தேடிச் செல்லும்.

அப்படி விளங்கிக்கொள்ளும்போது, இஸ்லாமின் அடிப்படையை மனதில் கொண்டு பார்த்தால் விடை தெரியும்.

அப்படியான விடை ஓர் வெளிச்சத்தைப் பாய்ச்சவல்லவதாய் அமையும். அதுவரை இருளில் இருந்த மனம் வெளிச்சமாகும். அது சில ஆயிரம் வருடங்களைக் கடந்ததாகவும் இருக்கலாம்.

குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்

என்று ஒரு குறள் அறிவீர்கள். இதற்கு இந்தக் குழல் யாழ் என்பதற்கு ஒருவர் இப்படி விளக்கம் கொடுக்கிறார்.

குழல் என்பது ஆண்களால் இசைக்கப்படுவது. யாழ் என்பது பெண்களால் இசைக்கப்படுவது. அதையே வள்ளுவர் கூறியிருக்கக்கூடும் என்று.

அமெரிக்கப் பயணம் மேற்கொள்ளப் போகிறேன் என்பதால், இனி மறுமொழிகளின் இடைவெளி மேலும் நீளக்கூடும். ஆனால் இவ்விழையில் நான் நிறைய எழுதுவேன். எழுதி முடித்து நிறைவு காணும்போது ஓர் முடிவுக்கு வந்திருப்பேன். அந்த முடிவை இழை முடியும்போது சொல்கிறேன். அனைவருக்கும் நன்றி.

அன்புடன் புகாரி

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அன்பின் சகோ தாஜுதீன்

>>>>>குர்ஆன் வசனத்திற்கு தப்ஸீர்கள்,ஹதீஸ்களின் விளக்கங்கள் அவசியம் தேவை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.<<<<

அரபு மொழி என்னுடையதல்ல. அது என்னுடைய மொழியே ஆனாலும் நான் பல அகராதிகளைப் பார்த்துத்தான் தெளிவு பெறுவேன். இப்படிச் செய்வதில் ஏதோ தவறு உள்ளது என்பதுபோல் எழுதி இருப்பது ஆச்சரியமளிக்கிறது.//

மேல் சொன்ன மறுமொழியின் மூலம் தப்ஸீர் மற்றும் ஆதரப்பூர்வமான நபிமொழிகளின் மூலம் குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் எடுத்துக்கொள்ளுவதில் தவறேதுமில்லை என்பதை ஒத்துக்கொண்டுள்ளீர்கள்.

பின் ஏன் சுற்றி வளைத்து பேசவேண்டும்?

மற்ற பதில்களுக்காக காத்திருக்கிறேன்.

Noor Mohamed said...

அன்பு சகோதரர்களே,

அஸ்ஸலாமு அலைக்கும்.



//மானுக்கு ஆபத்து...//

என்ற கவிதை+கட்டுரை பின்னூட்டத்தில்;



அன்புடன் புகாரி சொன்னது…

//ஈமான்என்பது
நம்பிக்கையா மூடநம்பிக்கையா?//



என்ற ஆபத்தான வினாவை எழுப்பியுள்ளார். எல்லாம் வல்ல அல்லாஹ், நம் அனைவர்களையும் பாதுகாப்பானாக!



இந்த வினாவிலிருந்து அன்புடன் புகாரி அவர்கள் ஈமானில் நம்பிக்கை இல்லாதவர் எனத் தெளிவு படுத்துகிறார்.



எவர் ஈமானின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவரிடத்தில் இஸ்லாம் பற்றி ஏன்? எதற்காக? எப்படி? எப்போது? என்று விளக்குவதால் எவ்வித பயனுமில்லை.





அன்புடன் புகாரி அவர்கள் முதலில் ஈமானின் மீது உறுதியான நம்பிக்கை வைத்து, அதன்பின் இஸ்லாம் பற்றி நாம் அவருக்கு போதித்தால் நாமும் நன்மை அடைவோம். அவரும் நன்மை அடைவார்.



இன்றேல் இங்கு கொடுக்கும் விளக்கமெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.



“அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன்மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.” (2 : 26)

sabeer.abushahruk said...

சிறுவனாய் வாலிபனாய்
கணவனாய் தந்தையாய்க்
களித்துக் கழிந்தது வாழ்க்கை

எஞ்சிய நாட்கள் உபரியோவென
அஞ்சிய வாழ்க்கையில்
மகளின் மகனை
மடியினில் இடுகையில்
இன்னொரு வாழ்க்கைக்கு மனம்
இசையும்

மழலையின் சிரிப்பு
மெல்லிசை யெனில்
அழுகுரல்தன்னை
செவியுறுகையில்
ஒழுங்குபடுத்தினால்
அதனிலும் ஒழுகும்
அனுமதிக்கப்பட்ட
இசை!

தாத்தா புகாரி
தாதா வியாக்கியானம் 
குறையும்...
தடைகள்பற்றி
மூத்தவர் விளக்கத்தில்
இசையும்!

பேரன் உறக்கம் கலைவதற்குள்
கவி யரங்கம் நிறைவுறட்டும்
இல்லையேல்
தவற விடுவீர்
மகளின் தாலாட்டு
இசையும்!

வாழ்த்துகள் தாத்தா!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

//இஸ்லாம் வெறுத்தொதிக்கிய இசைக்காக மக்களின் இசைவைப்பெற இவ்வளவு மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறீரே? இஸ்லாத்தில் கலந்தாலோசிக்கப்பட்டு சிந்திக்கப்பட‌ வேண்டிய எத்தனையோ பல அத்தியாவசிய விடயங்களில் ஏதேனும் ஒன்றில் இப்படி மல்லுக்கட்டியதுண்டா?//

மறுமை என்பது உண்மையா? கப்ரு வாழ்க்கை நெசமா? இறைவனை எவர் பார்த்திருக்கிறார்? என்ற இஸ்லாத்திற்கே வேட்டு வைக்கும் கேள்விகளை விளையாட்டாய் கூட கேட்டு விடாமல் அல்லாஹ் நம்மை எல்லாம் பாதுகாப்பானாக......

கேட்பதற்கோ அல்லது பார்ப்பதற்கோ நன்றாகவும், நேர்த்தியாகவும், இதமாகவும், அழகாகவும் இருக்கின்றது என்பதற்காக எதையும் இஸ்லாத்தில் புதிதாக புகுத்தவோ அல்லது அதற்கு சலுகையையோ எதிர்பார்க்க‌ வேண்டாம்.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்பு புகாரீ,

//எல்லோரும் ரசிக்கும் இன்றைய ஊடக ஒலி ஒளிகள் இல்லாத ஓர் நாடு உண்டா ஓர் ஊர் உண்டா ஓர் வீடுதான் உண்டா?//

உங்களுக்குத் தெரியவில்லையெனில் அது இல்லை என ஆகாது. அன்று முதல் - சவூதியில்/அமீரகத்தில் நான் தங்கியிருந்த அறைகளில் - இன்றுவரை என் இல்லத்தில் ஊடக ஒலி ஒளிகள் இல்லை.

கின்னஸுக்கு என்னைப் பரிந்துரைக்க உத்தேசம் உண்டா?

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்பு புகாரீ,

//இசைக்குத் தொடர்பில்லாத இவற்றை நீங்கள் புதிய பதிவுகள் தொடங்கினால் கருத்தாடுவோம்//

'இறைமறையில் இசைக்குத் தடையில்லை; இறைமறையில் இல்லாத தடையை விதிக்க எவருக்கும் உரிமையில்லை' எனும் கருத்தில் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்டுக் கருத்தளித்திருந்தீர்கள்.

அல்லாஹ்வின் தூதருக்கு அந்த உரிமை உண்டு என்று இறைமறை வசனங்களிலிருந்து நிறுவியிருக்கிறேன். பார்க்க: எனது பின்னூட்டம் Tuesday, July 03, 2012 12:03:00 AM.

இதற்கு மறுப்பு/மாற்றுக் கருத்து உங்களிடம் உண்டா?

இப்னு அப்துல் ரஜாக் said...

ஒரு முஸ்லிமுக்கு அல்லாஹ்வும்,அவனது தூதரும் ஒரு கட்டளையிட்டால் - செவியுற்றோம்,கட்டுப்பட்டோம் என்று அதை முழுமையாக ஏற்றுக்கொள்வார்கள்.இங்கு இசையை வீண் விதண்டாவாதமாக நம்பிக்கையில்லாமல் வாதாடும் அன்புள்ள புகாரி காக்கா அவர்களின் ஒப்பாரிக்கு பதில் சொல்வதை விட -

"இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.""THE QURAN இப்படி சொல்லி ஒதுங்கி விடுவது நல்லது.லகும் தீனுக்கும் வலியதீன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

//அன்பு சகோதரர்களே,

அஸ்ஸலாமு அலைக்கும்.



//மானுக்கு ஆபத்து...//

என்ற கவிதை+கட்டுரை பின்னூட்டத்தில்;



அன்புடன் புகாரி சொன்னது…

//ஈமான்என்பது
நம்பிக்கையா மூடநம்பிக்கையா?//



என்ற ஆபத்தான வினாவை எழுப்பியுள்ளார். எல்லாம் வல்ல அல்லாஹ், நம் அனைவர்களையும் பாதுகாப்பானாக!



இந்த வினாவிலிருந்து அன்புடன் புகாரி அவர்கள் ஈமானில் நம்பிக்கை இல்லாதவர் எனத் தெளிவு படுத்துகிறார்.



எவர் ஈமானின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவரிடத்தில் இஸ்லாம் பற்றி ஏன்? எதற்காக? எப்படி? எப்போது? என்று விளக்குவதால் எவ்வித பயனுமில்லை.





அன்புடன் புகாரி அவர்கள் முதலில் ஈமானின் மீது உறுதியான நம்பிக்கை வைத்து, அதன்பின் இஸ்லாம் பற்றி நாம் அவருக்கு போதித்தால் நாமும் நன்மை அடைவோம். அவரும் நன்மை அடைவார்.



இன்றேல் இங்கு கொடுக்கும் விளக்கமெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.



“அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன்மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.” (2 : 26)//


சரியாக சொன்னீர்கள் நூர் முஹம்மத் காக்கா.

Shameed said...

Noor Mohamed சொன்னது…

அன்பு சகோதரர்களே,

அஸ்ஸலாமு அலைக்கும்.



//மானுக்கு ஆபத்து...//

என்ற கவிதை+கட்டுரை பின்னூட்டத்தில்;



அன்புடன் புகாரி சொன்னது…

//ஈமான்என்பது
நம்பிக்கையா மூடநம்பிக்கையா?//



//என்ற ஆபத்தான வினாவை எழுப்பியுள்ளார். எல்லாம் வல்ல அல்லாஹ், நம் அனைவர்களையும் பாதுகாப்பானாக!



இந்த வினாவிலிருந்து அன்புடன் புகாரி அவர்கள் ஈமானில் நம்பிக்கை இல்லாதவர் எனத் தெளிவு படுத்துகிறார்.



எவர் ஈமானின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவரிடத்தில் இஸ்லாம் பற்றி ஏன்? எதற்காக? எப்படி? எப்போது? என்று விளக்குவதால் எவ்வித பயனுமில்லை.





அன்புடன் புகாரி அவர்கள் முதலில் ஈமானின் மீது உறுதியான நம்பிக்கை வைத்து, அதன்பின் இஸ்லாம் பற்றி நாம் அவருக்கு போதித்தால் நாமும் நன்மை அடைவோம். அவரும் நன்மை அடைவார்.



இன்றேல் இங்கு கொடுக்கும் விளக்கமெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.



“அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன்மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.” (2 : 26) //

அதிரை சித்திக் சொன்னது…


// இட்டு விட்டேன் இனி இல்லை ..ஏன் என்றால் தங்களின் வலை தளத்தில் நடிகர் சிவாஜி
கணேசன் மறைவுக்கு ஒரு இரங்கல் பா வடித்து இருந்தீர்கள் ..*சிவாஜியை படைத்த பிரம்மன்"
என்ற சொல்லினை உபயோகித்து இருந்தீர்கள் ..அது கவிக்காகவா ..நம்பிக்கையா ..தாங்கள் //


இவர்களின் கருத்துடன் நான் உடன் படுகின்றேன் மேலும் அவரின் கவிதையில் சிருக்கான வார்த்தைகளுக்கு பஞ்சம் இல்லை என்பதும் தெளிவாகின்றது உதாரணமாக

சமிபத்தில் எழுது ஒரு கடுதாசியில் இப்படி ஒரு வாக்கியம்

தேர இழுத்தும் இப்போ
தெருவசந்தங் காணலியே
பூவப் பரிச்சும் இப்போ
புதுவாசம் வீசலியே

இதன் அர்த்தம் என்ன தேர் இழுத்தால் தெருக்கள் எல்லாம் வசந்தம் வந்து விடுமா ?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அன்புடன் புகாரி சொன்னது....

ஒரே கவிதையை காலத்துக்குக் காலம் ஆளுக்கு ஆள் மாற்றிப் பொருள் கொள்ளும் நிலையை நீங்கள் என்னவென்று கூறுவீர்கள்?

குர்-ஆன் அப்படியான ஓர் இலக்கியத்தரத்தில் இருக்கிறது. அது ஏதோ அந்தக் காலத்தில் ஒருவர் விளக்கம் சொன்னார் என்பதோடு நின்றுவிடாது. ஒவ்வொரு காலமும் சரியான விளக்கம்தேடிச் செல்லும்.//

அற்ப மனிதன் எழுதும் கற்பனை கவிதைகளுக்கு ஆயிரமென்ன கோடி அர்த்தங்களை கவிதை விளக்கமளிக்கும் நபர்கள் இருக்கலாம்.

குர்ஆன் இறைவசனம் அவைகள் நபி (ஸல்) அவர்கள் மூலம் நமக்கு வந்துள்ளது என்பதை ஒத்துக்கொண்டுள்ள நாம், நபி (ஸல்) அவர்களுடைய விளக்கமும், குர்ஆன் வசனங்களோடு தொடர்புடைய அவர்களோடு வாழ்ந்த நபி தோழர்களின் விளக்கமும், நபி (ஸல்) சொன்ன சொல், செய்த செயல், அங்கீகாரம் (ஹதீஸ்கள்) இவற்றில் ஆதாரப்பூர்வமானவைகளை பின்பற்றும் மார்க்க அறிஞர்களின் விளக்கங்களே போதும் குர்ஆன் வசனங்களை விளங்கிக்கொள்ள.இவை தவிர்த்து தற்காலத்தில் இருக்கும் வேறு எவருடைய விளக்கங்களும், அனுமானங்களும் அவசியமில்லை.

குர்ஆன் இலக்கியத் தரத்தில் உள்ளது என்பது தவறான வாதம். இதற்கு ஆதராமாக ஒரு குர்ஆன் வசனத்தை காட்டவேண்டும். குர் ஆன் வசனத்தை காட்டிவிட்டு இப்படி எழுதுங்கள். தனி நபர்களின் சுய அனுமானங்களை, கருத்துக்களை ஆதாரமாக காட்டக்கூடாது.

பொரும்பால இலக்கியங்களும் இதிகாசங்களும் பொய்களையும் கற்பனை கட்டுக்கதைகளையுமே கொண்டது. குர்ஆன் இறைவனின் வார்த்தை, அது உண்மை. உண்மை குர்ஆனை அறிவை தேடுகிறோம் என்று சொல்லி கற்பனை பொய்யை மூலதனமாக கொண்டுள்ள இலக்கிய தரங்களோடு ஒப்பிடுவது கண்டிக்கதக்கது.

sabeer.abushahruk said...

//குர்-ஆன் அப்படியான ஓர் இலக்கியத்தரத்தில் இருக்கிறது//.

குர் ஆன் இறைவேதம், தனித்தன்மையது!!!UNIQUE!!!

இதை எதோடும் ஒப்பிடுவதற்கு என் எதிர்ப்பைப் பதிவு செய்கிறேன்.

வாதியோ பிரதிவாதியோ இந்த வாசகத்தை திருப்பிப் பெறாவிடில் இந்தப் பதிவையும் பின்னூட்டடங்களையும் நான் புறக்கணிப்பேன்.

சகோ. நூர் காக்கா / சகோ அர அல்;

"லக்கும் தீனுக்கும் வலிய தீன்" என்று விட்டுவிட்டால் நண்மையை ஏவி தீமையைத் தடுப்பது எங்ஙனம்?

தனிமனிதனை விமரிசிக்காமல் அவர்தம் கருத்துகளை மட்டும் விமரிசியுங்கள். ஜமீல் காக்கா ஹ்மது காக்கா போன்றோர் வாதிடும் இவ்விழையின் இறுதியில் சகோ புகாரியின் உளமாற்றம் நிகழுமாயின் அதைத் தடுக்க நம் யாருக்கும் உரிமையில்லை

sabeer.abushahruk said...

இசை தடைசெய்யப்பட்டதென்று விளங்குகிறது. ஒரே பதில்களைத் திரும்பத் திரும்ப பதியும் வாதங்களும் சற்றே போரடிக்கத் துவங்குகின்றன.

மேற்கொண்டு விவாதிக்க எனக்குக் கீழ்கண்டவற்றிற்கு விடை வேண்டும்; அனுமதிக்கப்பட்ட இசைக்கு வரையறை வேண்டும்.

இன்னிசை யொன்று
என்னை மயக்கியது
தென்னையின் கீற்றோடு
தென்றல் மீட்டிய சரசர

கொத்துக் கொத்தாய்
குருவிகள் கத்தின
பித்துப் பிடித்து நான்

சொட்டுச் சொட்டாய்
மெட்டுக் கட்டின
வீட்டுக் குழாயினினின்றும்
விட்டுவிட்டு
வீழும் துளிகள்

மிதிவண்டி யோட்டும்
மகனின் மிதியில்
ரிதமொன்று கேட்கிறது
இதமாக இருக்கிறது

நீட்டி முழக்கிய
அம்மாவின் அழைப்பில்
சீட்டி அடிக்கின்ற
சிறுவனின் விளிப்பில்

கோர்வையாய் எழுப்பும்
எந்த ஒலியிலும்
இசையொன்று இருக்குதே
அது
சிந்தை மயக்குதே
விந்தையாய் இருக்குதே

என்ன செய்ய நான்?

Noor Mohamed said...

அருமை தம்பி கவி சபீர் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்

இக்கட்டுரையில் நான் இரண்டு பின்னூட்டங்கள் மட்டுமே கொடுத்துள்ளேன்.

இருப்பினும், தாங்கள் என்னை விழித்து எழுப்பும் வினாவை என்னால் முழுமையாக அறிய முடியவில்லை. சற்று விளக்கமாக கூறுங்களேன்.

sabeer.abushahruk said...

//எவர் ஈமானின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவரிடத்தில் இஸ்லாம் பற்றி ஏன்? எதற்காக? எப்படி? எப்போது? என்று விளக்குவதால் எவ்வித பயனுமில்லை//.

நூர் காக்கா,

நாம் இவருக்கு விளக்குவது கடமையல்லவா?

sabeer.abushahruk said...

மன்னிக்கவும்.
வ அலைக்குமுஸ்ஸலாம் காக்கா

Meerashah Rafia said...

//"ச்சின்னப் புள்ளயிலே நீ அம்மணமா திரிஞ்சியா இல்லியா?" போன்ற தொனியில் எழுதுவதை விடுத்து, அறிவுபூர்வமாக எழுதுங்கள்.//

//உங்களுக்குத் தெரியவில்லையெனில் அது இல்லை என ஆகாது. அன்று முதல் - சவூதியில்/அமீரகத்தில் நான் தங்கியிருந்த அறைகளில் - இன்றுவரை என் இல்லத்தில் ஊடக ஒலி ஒளிகள் இல்லை.

கின்னஸுக்கு என்னைப் பரிந்துரைக்க உத்தேசம் உண்டா?//

பதில் எங்கே!

Meerashah Rafia said...

//அருமையான காடுகளையும் விலங்குகளையும் மீன் இனங்களையும் டாக்குமெண்டரியாக படம் எடுக்கிறார்கள், அதன் பின்னணி இசையைக் கேட்டால் ரசிக்காதவர்கள் இருக்கமுடியாது, அப்படிச் சொல்வதைவிட அப்படியான பின்னணி இசையில்லாமல் அந்த டாக்குமெண்டரிகள் டாக்குமெண்டரிகளாகவே இருக்காது.//

இது எங்க டிபார்ட்மன்ட் ஆச்சே.நான் பதில் சொல்லியே ஆகவேண்டும்!?!
நான் கல்லூரியில் படித்த தருணம் குறும்படங்கள் எடுத்து சத்யம் திரையரங்கில் வெளியிட்டு பரிசுபெற்ற காலமும் உண்டு.
நீங்கள் இசையில்லாமல் எடுக்கமுடியுமாவென்று கேட்கிறீர்கள்.. நாங்கள் மனிதரும் இல்லாமல் எடுத்து இந்த பரிசை தட்டிச்சென்றோம்.
இறைவனின் நாட்டத்தால் இசையும், மனிதரும் இல்லாமல் நூறு ஆவணம் எடுத்துத்தரமுடியும்.. இசை இல்லாமலும் முடியும்.. ஆனால் இக்காலத்தில் அது முடியாதென்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்..அதுதான் உண்மை. இசையுடனும், இசை இல்லாமலும் உலக சினிமாக்களை பார்த்திருக்கின்றேன்(அஸ்தக்பிர்லா..பல வருடங்களாக உள்ளூர் சினிமாவைகூட பார்ககூடாதேன்று விட்டாச்சு).

ஒலி, ஒளி, காணொளி, கணினி, மற்றும் அனைத்து ஊடகத்திலும் தேர்ச்சி பெற்று அதன் நன்மைகளைகும் தீமைகளையும், எப்படி திணிக்கப்படுகின்றது, தூண்டுவதற்கே கூட்டங்கள் இருக்கின்றதென்பதெல்லாம் நன்கு அறிந்தவன் நான்.. (இசையை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்டுவிடக்கூடாதல்லவா அதான் இவ்வளவு விளக்கம்)..

குறிப்பு:
உங்கள் பெயரில் உள்ள புத்தகத்தை (புஹாரி) நன்கு படித்து உணர்ந்தால் சிறப்பு..

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…


மேற்கொண்டு விவாதிக்க எனக்குக் கீழ்கண்டவற்றிற்கு விடை வேண்டும்; அனுமதிக்கப்பட்ட இசைக்கு வரையறை வேண்டும்.

இன்னிசை யொன்று
என்னை மயக்கியது
தென்னையின் கீற்றோடு
தென்றல் மீட்டிய சரசர

கொத்துக் கொத்தாய்
குருவிகள் கத்தின
பித்துப் பிடித்து நான்

சொட்டுச் சொட்டாய்
மெட்டுக் கட்டின
வீட்டுக் குழாயினினின்றும்
விட்டுவிட்டு
வீழும் துளிகள்

மிதிவண்டி யோட்டும்
மகனின் மிதியில்
ரிதமொன்று கேட்கிறது
இதமாக இருக்கிறது

நீட்டி முழக்கிய
அம்மாவின் அழைப்பில்
சீட்டி அடிக்கின்ற
சிறுவனின் விளிப்பில்

கோர்வையாய் எழுப்பும்
எந்த ஒலியிலும்
இசையொன்று இருக்குதே
அது
சிந்தை மயக்குதே
விந்தையாய் இருக்குதே

என்ன செய்ய நான்? //

தண்ணீர் குடிக்க தடை ஏதும் இல்லை இஸ்லாத்தில்

தண்ணீ அடிக்க தடை உண்டு இஸ்லாத்தில்

இயற்கையாய் வரும் சப்த்தங்களை தண்ணீர் என கொள்ளலாம்

கருவிகளால் வரும் சப்தங்கள் ஆல்கஹால் கலந்த தண்ணீர் என கொள்ளலாம்

ஆக இரண்டுமே தண்ணீர்தான் நாம் தான் எதை அருந்துவது எதை அருந்த கூடாது என பிரித்து அறிந்துகொள்ள வேண்டும்

Unknown said...

சகோ சமீத்,

>>>>>பள்ளிவாசலில் ஐந்து வேலை பாங்கு சொல்லவும் மரண அறிவிப்பு சொல்லவும் பயன்படும் ஸ்பீக்கர் மற்ற நேரங்களில் சும்மா தான் இருக்கின்றது இசை கூடும் என்றால் உலகில் உள்ள
கோடிக்கணக்கான பள்ளிவாசல்களில் ஏதாவது ஒன்றில் இசை கூடும் என்று இசையை இசைத்துக்கொண்டு இருக்கலாமே அப்படி எங்குமே இல்லை அப்படி இல்லாததற்கு காரணம் அவர்கள் எல்லாம் அறிவை அறியாதவர்களா ?<<<<<

உங்கள் வீட்டில் கழிப்பறை உண்டா?
சமையல் அறை உண்டா?
படுக்கை அறை உண்டா?
தொழுகை அறை உண்டா?
விருந்தினர் அறை உண்டா?

தயவு செய்து இதுபோன்ற கேள்வி(????) களைத் தவிருங்கள். இங்கே தரமான கருத்தாடல் நடக்கட்டும் என்று அமைதி காத்துக்கொள்ளுங்கள்.

அன்புடன் புகாரி

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்பு புகாரீ,

//அது நீங்கள் கொண்ட சினத்தில் வந்த தவறு. என் கருத்தை மறுக்க இயலாமல் போகும்போது சட்டென சினம்தான் தொற்றிக்கொள்ளும்//

சட்டெனச் சிரித்துவிட்டேன்.

என்னால்எதிர்கொள்ள இயலாத கருத்தாடல் ஏதேனும் நீங்கள் இங்கு வைத்து, நான் பதில் சொல்லவியலாமல் தோற்றுப் போனேனா?

பரவாயில்லை; இதை நான் ஜோக்காவே எடுத்துக் கொண்டேன்.

"இசை கேட்காதவர்கள் எவரும் இங்கு உளரோ?" எனும் தட்டையான கேள்வி மட்டுமே திரும்பத் திரும்ப தங்களது கருத்தாடலின் கருவாக இருந்தது.

செக்குமாடு உவமை சலிப்பின் வெளிப்பாடு; சினத்தின் வயப்பாடன்று. உங்கள் புரிதலில் பிழை இருக்கிறது.

உங்களது தட்டையான கேள்வியைச் சற்றே கூராக்கி, இங்கு வைக்கட்டுமா?
"இசையை விரும்பி, அதற்கு நேரம் ஒதுக்கி, அதை இரசித்து, அதில் இலயித்துக் கேட்காதவர் எவரேனும் இங்கு உளரோ?"

பதில்-1 : உள்ளேன் ஐயா - ஜமீல்
பதில்-2 : .....

என்னைப்போல் இன்னும் சிலர் இங்கு இருக்கக்கூடும். அவர்கள் இதே இழையில் "உள்ளேன் ஐயா" கூறட்டும்.

Unknown said...

சகோ அர அல,

>>>>கதவை திறந்து - காற்று வருவது இருக்கட்டும்,முதலில் இதயம் திறந்து - ஈமானை பெறுவோம்<<<<

இங்கே ஈமானை வேண்டாம் என்று நான் சொன்னேனா? ஏன் வேண்டாததை சற்றும் யோசிக்காமல் எழுதுகிறீர்க்

தயவு செய்து இதுபோன்ற அறிவுரைகளை(????) தவிருங்கள். இங்கே தரமான கருத்தாடல் நடக்கட்டும் என்று அமைதி காத்துக்கொள்ளுங்கள்.

>>>>குரான்,ஹதீஸ் சிந்தனையுடன் எதையும் சீர்தூக்கி பாருங்கள்.அவன் சொன்னான்,இவன் சொன்னான் என்றால் - அந்த அவனும்,இவனும் நம்மைக் காப்பாற்ற முடியாது.<<<<<

எவன் சொன்னான் என்று எதை இங்கே நான் முன்வைத்தேன். நீங்கள் ஏன் சற்று யோசித்து பண்போடு மறுமொழிகள் இடக்கூடாது?

>>>>மூளை சொல்வதுதான் சரியென்றால்,அந்த மூலையில் something wrong என்றுதான் பொருள்.<<<<<

நீங்கள் மூளையைப் பயன்படுத்தாவிட்டால், அலுங்காமல் குலுங்காமல் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு இறைவன் தந்த மூளை இருக்கிறது. நான் அவனை அறிய நிச்சயம் அதைப் பயன்படுத்துவேன். இல்லாவிட்டால் நான் ஓர் இஸ்லாமியனே அல்ல.

”சம்திங் ராங்” என்று அடுத்தவரைப் பற்றி கூசாமல் எழுதுகிறீர்கள். இவை பண்பற்ற சொற்கள் என்று உங்களுக்குத் தெரியவே இல்லை என்றால், நீங்கள் இஸ்லாமியனாய் இருந்து என்ன பிரயோசனம்?

ஒரு முஸ்லிமின் அடிப்படையே உங்களிடம் ஆட்டம் காண்கிறது. மற்றவை இருந்தென்ன போயென்ன? பலமுறை நான் அன்போடு உங்களுக்கு உரைத்துவிட்டேன். ஆனால் உங்கள் ஆட்டம் மட்டும் நிற்பதே இல்லை. இறைவன் உங்களை மன்னிக்கட்டும்!

அன்புடன் புகாரி

Unknown said...

அன்பின் சகோ நெய்நா முகம்மது,
அஸ்ஸலாமு அலைக்கும்

செரிவான கருத்துக்களை எழுதி இருக்கிறீர்கள்.

>>>>"வை திஸ் கொல‌ வெறி" பாட்டை இதுவ‌ரை கேட்ட‌வ‌ர்க‌ளில் ந‌ம்ம‌வ‌ர்க‌ளின் ச‌த‌விகித‌ம் எத்த‌னை ப்ர‌ஸ‌ன்ட் என‌ தெரிய‌வில்லை????????<<<<<

அப்படி அந்தப் பாடலைக் கேட்டுவிட்டதால் எவரின் ஈமானாவது பறிபோய் இருந்தால் அவர் கொண்டிருந்தது உண்மையிலேயே ஈமான் தானா?????

அதென்ன, அவ்வளவு பலகீனமானதா ஈமான் என்பது?

அன்புடன் புகாரி

Unknown said...

>>>>>>>>>>>>>>>>
இசையைப் பற்றி இங்கு விவாதம் சூடாக நடைபெற்று வருகிறது. இவ்வளவு ஆணித்தரமாக இரு வல்லவர்கள் வாதிடும்போது எனது மனதில் இசையோடு பொருந்தும் ஒரு கமெண்ட் தான் அடிக்கத்தோன்றுகிறது. அது

புல்லாங்குழல்கள் அடுப்பு ஊதுகின்றன. – என்பதே.

இவ்வளவு வல்லமை படித்தவர்கள் ஒரு பயன்பாடான பிரச்னையில் வாதிட்டு தங்களின் ஆற்றலை வெளிப்படுத்துவார்களானால் அதனால் பெரும் பயன்கள் விளையலாம்.

அதைவிட்டு விட்டு சீரிய சிந்தனை உடையவர்கள் தங்களின் சிந்தனை வளத்தை சமுதாயப் பயன்தராத நீர்க்குமிழி விஷயத்துக்காக செலவிடுவது எனக்கு – ஆமாம் எனக்கு ஒரு தேவையற்றதாக தெரிகிறது.

இதற்கு பதிலாக ஆற்றல் பெற்ற நீங்கள் மனங்களை மல்லாத்தும் கவிதைகளைப் படைப்பதில் – சமுதாயம் இன்று இருக்கும் நிலையில் வாழும் முறைகளைப்பற்றி- வளரும் வழிகளைப்பற்றி எழுதி உங்களின் சக்திகளை செலவிடுங்கள் என அன்புடன் கோருகிறேன்.

மீண்டும் கேட்கிறேன் புல்லாங்குழல்கள் அடுப்பூதவேண்டாம். அதற்கு ஊதாங்குழல்கள் இருக்கின்றன.

Ebrahim Ansari
>>>>>>>>>>>>>>>

அன்பின் சகோ இப்றாகிம் அன்சாரி அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்!

உங்கள் எண்ணங்களை நிச்சயமாக நான் மதிக்கிறேன். நான் ஏற்றிருக்கும் இஸ்லாம், இசை பற்றி என்னதான் உண்மையாகக் கூறுகிறது என்பதை அலசவேண்டிய கட்டாயம் இருக்கிறது. தொட்டதற்கெல்லாம் தடை தடை என்றே சொல்கிறார்கள் சிலர். அதனால் உடைந்துவிட முடியாது.

போதை எதிலும் கூடாது. ஆனால் நல்ல ரசனை தடுக்கப்படமாட்டது. ஒரு விசயம் நல்லதும் கெட்டதும் ஆவது அதன் தாக்கத்தால் மட்டுமே. கெட்ட தாக்கத்தை அடையும் எதையும் நாம் விட்டுவிடவேண்டும். நல்ல தாக்கத்தைத் தரும் நிலைவரை நாம் அவற்றை ஏற்றுக்கொள்ளவேண்டும். இதைத்தான் நான் இஸ்லாம் எங்கெங்கும் கூறுவதாய்க் காண்கிறேன். நீ துறவியாய் வாழ்ந்துமடி என்று நிச்சயமாக இறைவன் நமக்குச் சொல்லவில்லை.

புல்லாங்குழலை நாம் அடுப்பூதுகுழல் என்று காண்பது கூடாது. அறிய முயல்வோம். அறிவதால் வரும் தெளிவு எவரையும் ஆட்கொள்ளலாம். என்னையும், உங்களையும் மற்ற எல்லோரையும்.

அன்புடன் புகாரி

Unknown said...

அன்பின் சகோ நெய்நா முகமது,

>>>>எல்லோரும் விரும்புகிறோம் என்பதற்காக "எதோ கொஞ்சம் பார்த்து போடுங்கள்" என்ற சலுகைகள் இஸ்லாத்தில் நிச்சயம் இல்லை<<<<

சட்டெனெ இந்த நகைச்சுவையில் சிரித்துவிட்டேன். நன்றி.

>>>>காலச்சூழ்நிலைக்கேற்ப நெளிந்து கொடுக்க இஸ்லாம் ஒன்றும் மனிதன் இயற்றிய மார்க்கமல்ல....... <<<<<

அதனால்தான் அதைத் துருவிப் பார்க்கிறோம். இறைவன் எதையும் தவறாகக் கூறியிருக்க மாட்டான். நாம் தான் தவறாகப் புரிந்துகொண்டிருப்போம். அதை அறிய முயல்வதே அறிவுடைமை. அத்தக அறிவுடையோனே இஸ்லாமியன். வாருங்கள் சேர்ந்து செயல்படுவோம்.

வயிற்றுப் பிள்ளையும் இசையை ரசிக்கிறது. என்றால் எங்கோ தவறிருக்கிறது. கண்டுபிடிக்கவேண்டாமா?

அன்புடன் புகாரி

Unknown said...

அன்பு ஜமீல் நாணா,
அஸ்ஸலாமு அலைக்கும்!

>>>>உங்கள் ஊரில் வடக்கு வாணியத் தெரு எனும் பெயரில் ஒரு தெரு உண்டு. உள்ளே சென்று பார்த்தால் மல்லாக்கொட்டை (நிலக்கடலை) தெருவில் காயும். பக்கத்தில் செக்கு மாடுகள் சுற்றிச் சுற்றி வரும்.

"அ.நி.யில் எழுதுபவர்களுள் எவராவது இசை கேட்காதவர்கள் இருக்கின்றனரா?" எனும் கருத்தில் திரும்பத் திரும்ப வினா எழுப்பிக் கொண்டிருப்பதைப் படிக்கும்போது செக்கு மாடுகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.<<<<

உங்கள் அறிவை மதித்தேன் அன்று. மதிக்கிறேன் இன்றும். ஆனால் இந்த தலைக்கணத்தையும் தவறான நக்கலையும் அன்றும் ஏற்றதில்லை இன்றும் ஏற்க இயலாது. அன்றாவது நான் சற்று வேறு விதமாக எடுத்துக்கோண்டேன். இன்று இந்த வயதிலும் நீங்கள் இப்படியா என்று மனம் வாடுகிறது.

மரியாதை நிமித்தமாக இதை ஒன்றும் சொல்லாமல் விட்டுவிடவே விரும்பினேன். ஆனால், இது தொடரக் கூடாது என்பதில் தெளிவாக நான் இருப்பதால், சொல்வதே சரி என்று இப்போது எழுதுகிறேன்.

கருத்தாடல்களில் தனிமனித தாக்குதல்கள் அநாகரிகமானவை. நாம் நாகரிகமாக கருத்தாடுவோமே. இதை நான் நான் மதிக்கும் உங்களிடம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துக்கள் மட்டும் மோதட்டும் நாம் அதே அன்பு அதே பாசம் அதே நட்பு அதே உறவு அதே மரியாதையோடு இருப்போம்.

இந்தக் கருத்தாடல் போனால் இன்னொரு கருத்தாடல் வரும், ஆனால்.... நாம் அப்படியா?????

அன்புடன் புகாரி

Unknown said...

சகோ நூர் முகம்மது அவர்களுக்கு,

>>>>கவியின்றி இசை இசைத்தால் அதில் அர்த்தமே இல்லை.
எனவே, அர்த்தம் அறிய கவிதை தேவை. இசை தேவையில்லை.<<<<

மனிதக் குரல் இல்லாத, வார்த்தைகள் சேராத இசையில் அர்த்தம் இல்லையா? அர்த்தம் என்பதற்கு நீங்கள் கொண்டுள்ள அர்த்தம் விளங்கவில்லை. இதயத்தின் மெல்லிய பகுதிகளில் சன்னமாய் ஒலிக்கும் அவ்வகை இசையை ரசிப்பது ஆனந்தம். அதுதான் அதற்கான அர்த்தம்.

வெறுமனே தொடுதலில் கிடைக்கும் அர்த்தங்களையும், விழிகள் பேசும் அர்த்தங்களையும்கூட நீங்கள் அறிய முற்படவேண்டும். நம் புலன்களின் சக்தியை அறிந்துகொள்ளுங்கள். அவை இறைவன் நமக்குத் தந்த கொடை.

யாழில் இசை, புல்லாங்குழனின் இசை, வயலின் இசை இவைபோல் பலவும் இதய வருடல்கள். இது ரசனையின் பாற்பட்டது. அவ்வகை ரசனையற்றவர்களுக்கு விளங்க வைப்பது கடினம் என்றாலும்,, என்னால் இயன்றதைக் கூறிவைக்கிறேன் இங்கே.

அன்புடன் புகாரி

Unknown said...

அன்பு ஜமீல் நாணா,

>>>சகோ. அஹ்மது ஆரிஃப் அவர்களின் ஆய்வை இங்கு நான் கேள்விக்குள்ளாக்குகிறேன்.<<<

இதற்கு அவரின் பதிலை அறிய விழைகிறேன்.

நான் அச்சொல்லுக்கு மூவகை மொழிபெயர்ப்பை கண்டேன்.

1. வணங்குவதற்கே
2. சேவை செய்யவே
3. அறிவதற்கே

அன்புடன் புகாரி

Unknown said...

சகோ தாகா,

>>>>தேவையில்லாமல் நேரங்காலத்தை விரயக்காமல் ஆகுமான வேறு கருத்துக்களை அலசுவது பயனுள்ளதாக இருக்கும் என்பது என் கருத்து.<<<<

உங்கள் கருத்தைச் சில காலத்துக்கு ஒத்திவையுங்கள்.

நாங்கள் எங்கள் அறிவுப்பூர்வமான கருத்தாடலால் இறைவனின் வசனங்களையும் ஹதீசுகளையும் இசைபற்றி இயன்றவரை ஓர் அலசல் செய்துகொண்டிருக்கிறோம். இது ஓர் இறைத் தொண்டு. அவமதிக்காதீர்கள்.

அன்புடன் புகாரி

Unknown said...

சகோ தாஜுதீன்,

>>>>மனிதர்கள் இசையை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதல்ல இங்கு விவாதிப்பது, இஸ்லாம் இசையை பற்றி என்ன சொல்லுகிறது என்பதே நாம் இங்கு விவாதிப்பது.<<<<

நான் விவாதம் செய்யவில்லை. கருத்துக்களை முன்வைக்கிறேன். இதைக் கருத்தாடல் என்று நான் சொல்வேன். விவாதம் என்றால் நான் பிடித்த முயலுக்கு மூணு கால் எனபது. கருத்தாடல் என்றால், அறிவது, சரி சரியில்லை எனபவற்றை உணர்வது, ஏற்றுக்கொள்வது.

அன்புடன் புகாரி

Noor Mohamed said...

அன்பு சகோ. அன்புடன் புகாரி அவர்களுக்கு,

//அன்புடன் புகாரி சொன்னது…

ஈமான் என்பது
நம்பிக்கையா மூடநம்பிக்கையா?//

இதை சொன்னது நீங்கள்தானே?

Unknown said...

சகோ நூர்முகம்மது,

>>>>புகாரி அவர்கள் ஈமானில் நம்பிக்கை இல்லாதவர் எனத் தெளிவு படுத்துகிறார். எவர் ஈமானின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவரிடத்தில் இஸ்லாம் பற்றி ஏன்? எதற்காக? எப்படி? எப்போது? என்று விளக்குவதால் எவ்வித பயனுமில்லை.<<<<<

எனக்கு ஈமான் இருக்கிறதா இல்லையா என்று தெளிவாக யோசித்துவிட்டீர்கள், வாழ்க வளர்க்க.

சரி இப்படி வைத்துக்கொள்வோம்.

1. எனக்கு ஈமான் இல்லவே இல்லை
2. எனக்கு ஈமான் அரையும் குறையுமாக இருக்கிறது

நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள். ஈமான் இல்லாதவனுக்கு ஈமானை ஊட்டப் போகிறீர்களா அல்லது அவனை முஸ்லிமாய் ஆகவிடாமல் துரத்தியடிக்கப் போகிறீர்களா?

அரைகுறை ஈமான் உள்ளவனிடமிருந்து அந்த அரைகுறையையும் துடைத்து எறியப்போகிறார்களா அலல்து அதை வளர்க்கப் பாடுபடப் போகிறீர்களா?

நீங்கள் முழு ஈமான் உள்ளவர்தானே? ஈமாம் முழுமை பெற்றிருந்தால் அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு அமைதி சமாதானம் பொறுமை என்பனவெல்லாம் எங்கே? உங்களிடம் இல்லையே? உங்களுக்கு ஈமான் இருக்கிறதா? இருந்தால் இப்படிப் பேசி இருக்கவே மாட்டீர்களே? இறைவன் மன்னிப்பானாக.

>>>>இங்கு கொடுக்கும் விளக்கமெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.<<<<<<<<<<<<

செவிடன் நீங்களாகவும் இருக்கலாம் இல்லையா? சங்கூதுபவன் நானாகவும் இருக்கலாம் இல்லையா?

அன்புடன் புகாரி

Shameed said...

அன்புடன் புகாரி சொன்னது…

உங்கள் வீட்டில் கழிப்பறை உண்டா?
சமையல் அறை உண்டா?
படுக்கை அறை உண்டா?
தொழுகை அறை உண்டா?
விருந்தினர் அறை உண்டா?


//தயவு செய்து இதுபோன்ற கேள்வி(????) களைத் தவிருங்கள். இங்கே தரமான கருத்தாடல் நடக்கட்டும் என்று அமைதி காத்துக்கொள்ளுங்கள்//

நீங்கள் ஏதும் கட்டிடம் கட்டும் தெழில் செய்ய உத்தேசமா முதலில் உங்கள் பதிலில் தரம் உண்டா என்று ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்துப்பாருங்கள் ? ஊரில் கட்டிடம் கட்டும் தொளிலாளிபோல் பதில் சொல்கிறீர்களே!

Unknown said...

சகோ சமீத்,

>>>>>
தேர இழுத்தும் இப்போ
தெருவசந்தங் காணலியே
பூவப் பரிச்சும் இப்போ
புதுவாசம் வீசலியே
இதன் அர்த்தம் என்ன தேர் இழுத்தால் தெருக்கள் எல்லாம் வசந்தம் வந்து விடுமா ? <<<<<

இதைத்தான் சம்பந்தம் இல்லாமல் பேசுவது என்பது. நாம் ஏன் இசைக் கருத்தாடலை விட்டு விலகுகிறோம். இந்தக் கேள்வியை நீங்கள் அந்த இழையிலேயே கேட்டிருந்தால் பதில் சொல்லி இருப்பேனே? இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை ஆங்கே சென்று இந்த வினாவைப் பதிவு செய்யுங்கள். நான் விரும்பினால் பதில் இடுகிறேன்.

இப்போது உங்கள் பெயரை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்கிறேன்.

அன்புடன் புகாரி

Unknown said...

சகோ மீராசா,

>>>>அன்று முதல் - சவூதியில்/அமீரகத்தில் நான் தங்கியிருந்த அறைகளில் - இன்றுவரை என் இல்லத்தில் ஊடக ஒலி ஒளிகள் இல்லை.<<<

கின்னஸுக்கு என்னைப் பரிந்துரைக்க உத்தேசம் உண்டா

பதில் எங்கே!<<<<<<

லட்சத்தில் ஒருவனெல்லாம் கின்னசில் பதியும் போது இப்படி ஒரு பில்லியனுக்கு ஒருவர் என்னும் போது பதிவதே சரி.

நாம் (இரண்டு பில்லியன் - 2) மக்களைப் பற்றியும் கொஞ்சம் பேசலாமல்லவா?

அன்புடன் புகாரி

Unknown said...

சகோ மீராசா,

>>>>நீங்கள் இசையில்லாமல் எடுக்கமுடியுமாவென்று கேட்கிறீர்கள்.. நாங்கள் மனிதரும் இல்லாமல் எடுத்து இந்த பரிசை தட்டிச்சென்றோம்.><<<<

பரிசு பெற்ற அந்த ஆவனப்படத்தை நாங்கள் காணலாமா?

அன்புடன் புகாரி

Unknown said...

அன்புக் கவி சபீர்,

>>>>
மழலையின் சிரிப்பு
மெல்லிசை யெனில்
அழுகுரல்தன்னை
செவியுறுகையில்
ஒழுங்குபடுத்தினால்
அதனிலும் ஒழுகும்
அனுமதிக்கப்பட்ட
இசை!
>>>>

அருமை. ஆமாம் எல்லாம் இசைமயம்தான். நம்மோடு சேர்ந்து நாமாய் வாழும் இசை. கேடு தராமல் வாழ்வு தரும் இசை. மனதுக்கு நிம்மதி தரும் இசை. உணர்வுகளுக்கு ஒத்தடம் தரும் இசை. இறைவன் தராமல் இதெல்லாம் எப்படி கிடைக்கமுடியும். இசைப்பவனே இறைவன்தானே?

>>>>
தாத்தா புகாரி
தாதா வியாக்கியானம்
குறையும்...
தடைகள்பற்றி
மூத்தவர் விளக்கத்தில்
இசையும்!
>>>>

நான் எனக்குள் எழும் கருத்துக்களை மட்டுமே முன் வைப்பேன். வியாக்கியானம் எனக்கு வராத கலை.

காலங்கள்தோறும் மூத்தோர் இருந்துகொண்டேதான் இருக்கிறார்கள். செத்தோரில் மட்டுமே மூத்தோர் இல்லை என்று நம்புகின்றவன் நான்.

அன்புடன் புகாரி

Noor Mohamed said...

சகோ. அன்புடன் புகாரி,

//உங்களுக்கு ஈமான் இருக்கிறதா? இருந்தால் இப்படிப் பேசி இருக்கவே மாட்டீர்களே? இறைவன் மன்னிப்பானாக.//

நீங்களாகவே கொடுத்த வாக்குமூலம்;

//அன்புடன் புகாரி சொன்னது…
ஈமான்என்பது
நம்பிக்கையா மூடநம்பிக்கையா?//

இதன் அடிப்படையிலேதான் இந்த வினாவிலிருந்து அன்புடன் புகாரி அவர்கள் ஈமானில் நம்பிக்கை இல்லாதவர் எனத் தெளிவு படுத்துகிறார் என நான் கூறினேன். மாறாக, இதை என் சொந்தக் கருத்தாகவோ அல்லது கற்பனையாகவோ நான் கூறவில்லை.

எனவே மீண்டும் அன்புடன் புகாரி அவர்கள் வாக்குமூலத்தை வைத்தே அந்த அன்புடன் புகாரி அவர்களுக்கு கூறிக் கொள்வது, நீங்கள் ஈமானின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ உங்களுக்கு இஸ்லாம் பற்றி ஏன்? எதற்காக? எப்படி? எப்போது? என்று விளக்குவதால் எவ்வித பயனுமில்லை.

அன்புடன் புகாரி அவர்களே, கனடாவில் இஸ்லாமிய மதரசாவை அணுகுங்கள்! அல்லது இஸ்லாமிய மார்க்க அறிஞர்களை அணுகுங்கள்!! ஈமானின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்!!! பிறகு இஸ்லாம் பற்றி கருத்து கலந்துரையாடல் செய்தால் நாம் அனைவரும் பயன் பெறலாம்.

Unknown said...

சகோ நூர் முகம்மது அவர்களே,

அன்பும் அமைதியும் சத்தியமும் சமாதானமும் போற்றப்படட்டும்!

//அன்புடன் புகாரி சொன்னது…
ஈமான்என்பது
நம்பிக்கையா மூடநம்பிக்கையா?//

இதை நீங்கள் எப்படிப் புரிந்துகொண்டீர்கள். இது வரும் என் மறுமொழி முழுவதையும் வாசித்தீர்களா? என்ன புரிந்துகொண்டீர்கள்? நான் என்ன சொல்கிறேன்? ஏன் எனக்கு ஈமான் இல்லை என்ற முடிவுக்கு வந்தீர்கள்? எனக்கு ஒன்றுமே விளங்கவில்லையே? சற்று விளக்கமாகக் கூறுங்களேன், நான் பயனடைவேன்!

>>>>கனடாவில் இஸ்லாமிய மதரசாவை அணுகுங்கள்! அல்லது இஸ்லாமிய மார்க்க அறிஞர்களை அணுகுங்கள்!! ஈமானின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்!!! <<<<<

ஏன் உங்களை அணுகினால் என்ன? நீங்கள் ஈமான் உள்ளவர்தானே? அதிரை நிருபர்களை அணுகினால் என்ன? எல்லோரும் ஈமான் உள்ளவர்கள்தானே?

அதென்ன ”ஈமான் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்?”

நம்பிக்கை மீது நம்பிக்கை கொள்ளவேண்டுமா? இது ஒருவகை கவிநயமா?

ஈமான் என்றால் என்ன என்று இப்போது கேட்க வைத்துவிட்டீர்கள். விளக்கம் தாருங்கள். என்னதான் நீங்கள் புரிந்துவைத்திருக்கிறீர்கள் நான் எதைத்தான் புரிந்துகொள்ளவில்லை என்று நானும் அறிந்துகொள்கிறேன்.

அன்புடன் புகாரி

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்பு புகாரீ,

//நான் அச்சொல்லுக்கு மூவகை மொழிபெயர்ப்பை கண்டேன்.

1. வணங்குவதற்கே
2. சேவை செய்யவே
3. அறிவதற்கே//

முதலாவதைத் தவிர இரண்டும் மூன்றும் மொழிபெயர்ப்பாக இருக்கமுடியாது. மாறாக, யாராவது ஒருவரின் சுய கருத்தாக இருக்கும்.

உறுதி செய்யுங்கள்.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்பு புகாரீ,

//இந்த தலைக்கணத்தையும் தவறான நக்கலையும் அன்றும் ஏற்றதில்லை இன்றும் ஏற்க இயலாது//

இந்தப் பதிவு, இஸ்லாத்தில் இசை, இசைக் கருவிகள், இசைமோகம் கூடாது என்பது பற்றிப் பேசுகிறது. மறுப்பவர்கள் "இஸ்லாத்தில் இசைக்கு அனுமதி இருக்கிறது" என்பதற்கான சான்றுகளை அடுக்க வேண்டும்.

நீங்கள் என்ன செய்தீர்கள்?

"அ.நி.யில் எழுதுபவர்களுள் எவராவது இசை கேட்காதவர்கள் இருக்கின்றனரா?" என்ற ஒற்றைக் கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தீர்கள்.

எனவே, 'செக்குமாடு' உவமையைச் சொன்னேன். அந்த உவமை செயலுக்குரியது; உங்களுக்குரியதன்று. அங்கதமும் உவமைகளும் தமிழ்க் கருத்தாடல்களின் அங்கமன்றோ? இதில் தனிமனிதத் தாக்குதல் எங்கிருந்து வந்தது? 'ப்பாயிண்டுக்கு வாங்க!' என்று அழைப்பது தனிமனிதத் தாகுதலா?

செக்குமாடு உவமை உங்களைப் புண்படுத்தியிருந்தால் அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டு "அரைத்த மாவை அரைக்கும்" உவமையாக மாற்றிக்கொள்கிறேன்.

இப்பவாவது ப்பாயிண்டுக்கு வாங்க!

அதிரை தாருத் தவ்ஹீத் said...

//"இசையை விரும்பி, அதற்கு நேரம் ஒதுக்கி, அதை இரசித்து, அதில் இலயித்துக் கேட்காதவர் எவரேனும் இங்கு உளரோ?"

பதில்-1 : உள்ளேன் ஐயா - ஜமீல்
பதில்-2 : .....

என்னைப்போல் இன்னும் சிலர் இங்கு இருக்கக்கூடும். அவர்கள் இதே இழையில் "உள்ளேன் ஐயா" கூறட்டும்.//

இரண்டாமவர் அஹ்மது காக்காவா? தாஜுத்தீனா?

Noor Mohamed said...

அன்பு சகோ. அன்புடன் புகாரி அவர்களுக்கு,

//அன்புடன் புகாரி சொன்னது…

ஈமான் என்பது
நம்பிக்கையா மூடநம்பிக்கையா?//

இதை சொன்னது நீங்கள்தானே?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//ஜமீல் சொன்னது…
//"இசையை விரும்பி, அதற்கு நேரம் ஒதுக்கி, அதை இரசித்து, அதில் இலயித்துக் கேட்காதவர் எவரேனும் இங்கு உளரோ?"

பதில்-1 : உள்ளேன் ஐயா - ஜமீல்
பதில்-2 : .....

என்னைப்போல் இன்னும் சிலர் இங்கு இருக்கக்கூடும். அவர்கள் இதே இழையில் "உள்ளேன் ஐயா" கூறட்டும்.//

இரண்டாமவர் அஹ்மது காக்காவா? தாஜுத்தீனா?//

நானும் தான், நிச்சயம் அஹ்மது மாமாவும் இருப்பார்கள்..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் அன்புடன் புகாரி அவர்களுக்கு,

நான் இட்ட பின்னூட்டங்களுக்கு பதிலளிப்பதற்கு முன்பாக அதற்கு பின் வந்த பின்னூட்டங்களுக்கு பதிலளித்திருப்பது இந்த கட்டுரையின் நோக்கத்தை திசை திருப்பும் போக்காகவே கருத்த என்னுகிறது.

மீண்டும் அந்த பின்னூட்டங்களை ஞாபகமூட்டுகிறேன்.

//////////////
தாஜுதீன் சொன்னது…
//அன்புடன் புகாரி சொன்னது…
அன்பின் சகோ தாஜுதீன்,

>>>ஐந்து வேலை தொழுகை கடமை இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?
மனித மாமிசம் சாப்பிடலாம் என்று எடுத்துக்கொள்ளலாமா?
<<<<

இசைக்குத் தொடர்பில்லாத இவற்றை நீங்கள் புதிய பதிவுகள் தொடங்கினால் கருத்தாடுவோம்//

நம்முடைய கருத்தாடலுடன் தொடர்புடையது தானே..

நானும் ஜமீல் காக்காவும் கேட்டது இதோ

ஜமீல்: முஸ்லிம்களுக்கு ஒரு நாளில் ஐவேளை தொழுகைகள் கடமையாகும். இந்தக் கடமையை நேரடியாக இறைமறையிலிருந்து எடுத்துத் தருவீர்களா?

தாஜுதீன்: இறைமறையில், "மனித மாமிசம் தின்பது முஸ்லிம்களுக்கு விலக்கப்பட்டது" என்ற உறுதியான தடையேதுமில்லை. எனில், முஸ்லிம்களுக்கு மனித மாமிசம் ஹலாலா?

அதற்கு உங்கள் பதில் இதோ..

அன்புடன் புகாரி சொன்னது: இப்படியாய் வந்த கருத்துக்கள் என் பணிகளில் ஒன்றை இலகுவாக்கிவிட்டது. அது யாதெனில்....

குர்-ஆன் வசனம் இசையைத் தடை செய்யவில்லை.

இப்படி நீங்கள் பதில் கூறியதன் மூலமே நான் பின் வருமாறு கேட்டுள்ளேன்.

1) ஐந்து வேலை தொழுகை கடமை இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?
2) மனித மாமிசம் சாப்பிடலாம் என்று எடுத்துக்கொள்ளலாமா?

கட்டாயம் இவைகளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.

Reply Wednesday, July 04, 2012 2:01:00 AM




comment 1, next continue

தாஜுதீன் (THAJUDEEN ) said...

comment 2 continue here...

சகோ. அன்புடன் புகாரி அவர்களுக்கு,

//அன்பின் சகோ தாஜுதீன்

>>>>>குர்ஆன் வசனத்திற்கு தப்ஸீர்கள்,ஹதீஸ்களின் விளக்கங்கள் அவசியம் தேவை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.<<<<

அரபு மொழி என்னுடையதல்ல. அது என்னுடைய மொழியே ஆனாலும் நான் பல அகராதிகளைப் பார்த்துத்தான் தெளிவு பெறுவேன். இப்படிச் செய்வதில் ஏதோ தவறு உள்ளது என்பதுபோல் எழுதி இருப்பது ஆச்சரியமளிக்கிறது.//

மேல் சொன்ன மறுமொழியின் மூலம் தப்ஸீர் மற்றும் ஆதரப்பூர்வமான நபிமொழிகளின் மூலம் குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் எடுத்துக்கொள்ளுவதில் தவறேதுமில்லை என்பதை ஒத்துக்கொண்டுள்ளீர்கள்.

பின் ஏன் சுற்றி வளைத்து பேசவேண்டும்?

மற்ற பதில்களுக்காக காத்திருக்கிறேன்.

Reply Wednesday, July 04, 2012 5:40:00 AM


மேல் சொன்ன என்னுடைய பின்னூட்டத்திற்கான தெளிவான பதிலை அளிக்க வேண்டும். ஹதீஸ்கள், தப்ஸீர்களை அகராதி என்று சொல்லி மலுப்பிவிடக்கூடாது. இது தொடர்பாக ஜமீல் காக்கா கேட்ட கேள்விக்கு நீங்கள் தனி பதில் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

comment 2, next comment contiue.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இப்படி இசையைப்பற்றி அரைகுறை அறிவு இருப்பதனால் தான் என்னவோ? தமிழகத்திலிருந்து இயங்கும் ஒரு ஹஜ்/உம்ரா சர்வீஸ் தன் நிறுவனத்தை தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரப்படுத்தும் பொழுது அதற்கு பிண்னணியாக ஒரு மேலோடி எனும் மெல்லிசையை இணைத்து விளம்பரப்படுத்திக்கொண்டிருந்ததை நான் நன்கறிவேன்.

அன்புடன் புகாரி காக்காவுக்கு, ஈமான் என்பது ஏதோ எடுப்பார் கைப்பிள்ளையல்ல. ஆழ்ந்த அறிவுடன் ரொம்ப கேர்ஃபுல்லா டீல் பண்ண வேண்டிய விசயம் என்பதை மறந்து விடாதீர்.........

நாமெல்லாம் அதில் போதிய‌ அறிவும், விள‌க்க‌மும் பெற்றிருக்காமல் இருப்ப‌தால் க‌ன‌டாவில் உள்ள‌ ம‌த‌ர‌ஸாவையோ அல்ல‌து அங்குள்ள போதிய மார்க்க‌ அறிவு பெற்ற‌ உல‌மாக்க‌ளை தாம் நாடிச்சென்று விள‌க்க‌ம் பெற‌ச்சொல்லும் நூர் முஹ‌ம்ம‌து காக்காவின் உப‌தேச‌த்தில் என்ன‌ குறை இருக்க‌க்க‌ண்டீர்????

உட‌ம்பு ச‌ரியில்லாத‌ ஒருவ‌ரிட‌ம் உட‌னே அந்த மருத்துவரிடம் சென்று ஒரு த‌டுப்பூசி போட்டுக்கொள் என்று சொல்லுப‌வ‌ரிட‌மே "ஏன் அதை நீயே போட்டு விட்டால் என்ன‌?" என்று கேட்ப‌து போல் இருக்கிற‌து உங்க‌ள் கேள்வி.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

comment 3 continue here...

சகோ. அன்புடன் புகாரி அவர்களுக்கு,

என்னுடைய கட்டுரை எந்த அடிப்படையை கொண்டு தொகுக்கப்பட்டுள்ளதை மிகதெளிவாக குறிப்பிட்டேன், மீண்டும் குறிப்பிட்டேன். நான் எடுத்துக்கொண்ட அடிப்படைகளில் ஹதீஸ்கள் (நபி (ஸல்) அவர்களில் சொல் செயல் அங்கீகாரம்) ஒரு முக்கிய பகுதியாக உள்ளது, இவற்றில் நீங்கள் நம்பிக்கை கொண்டால் தான் கருத்தாடல் பயனுல்லதாக இருக்கும்.

இந்த பின்னூட்டத்திற்கு பதில் அளிப்பதற்கு முன்பு, மேல் சொன்ன இரண்டு பின்னூட்டத்திற்கு தயவு செய்து பதிலளிக்குமாறு அன்புடன் உங்கள் கேட்டுக்கொள்கிறேன்.

இதற்கு மேலும் நாம் யாருடைய நேரத்தை வீணடிக்க வேண்டாமே..

Meerashah Rafia said...
This comment has been removed by the author.
Meerashah Rafia said...

அன்புடன் புகாரி சொன்னது…
//சகோ மீராசா,

>>>>நீங்கள் இசையில்லாமல் எடுக்கமுடியுமாவென்று கேட்கிறீர்கள்.. நாங்கள் மனிதரும் இல்லாமல் எடுத்து இந்த பரிசை தட்டிச்சென்றோம்.><<<<

பரிசு பெற்ற அந்த ஆவனப்படத்தை நாங்கள் காணலாமா?
//

சபாஸ்! உங்களுக்கு கேள்வி ஞானம் அதிகமிருக்கின்ற்றது.
Im Sorry.. பதில் மற்றும் புரிதல் ஞானம் குறைவாக தெரிகின்றது என்பது நீங்கள் இட்ட பல்வேறு பதில்(?!)களில் நான் அறிந்தது.


அந்த ஆவணத்தோடு சேர்த்து மேலும் பல்வேறு ஆவணங்கள் நான் சமர்பிப்பேன்..இன்ஷா அல்லாஹ்.
ஆனால் அதன்பின் நீங்கள் இசை பித்தை விட்டு விளகுவீராயின். !
காரணம்: மாறவே மாட்டேன் என்று அடம்பிடிப்ப்பவர்களிடம் நானும் அடம்பிடிக்கத்தானே வேண்டும்..
அதுமட்டுமின்றி உங்களுடைய பின்னூட்டத்தை வைத்து புரிந்துகொண்டேன், நான் மேலும் நூறு ஆவணத்தை சமர்பித்தாலும் உங்களுடைய அடுத்த கேள்வி இதுவாக இருக்கும் "100 பேர்தானே இப்படி எடுத்திருக்கிறார்கள். ஆனால் மீதமிருக்கும் 600 கோடி பேருக்கு இசையுடன் பிடித்திருக்க்கின்றதே!!' என்று.

சரி எனக்கு நேரமாகிவிட்டது. 'இசையே இல்லாமல்' குழந்தைகளுக்கு ஒரு 'musical chair' போட்டி ஜித்தாவில் எங்கள் கட்டிடத்தில் இருக்கும் சுமார் 30 இசுலாமிய தமிழ் குடும்பங்களை சேர்த்து நடத்த நான் தயாற்படுத்திக்கொண்டிருக்கின்றேன். முடிந்தால் குடும்பத்திற்கு 35 ரியாலும், தனி நபருக்கு 15 ரியாலும் வாங்குவதை உங்களுக்கு தள்ளுபடி செய்கின்றேன். வந்து பாருங்கள், இசை இன்றி 4 மணி நேரம் அனைத்து நிகழ்சிகளும்(different game shows) எப்படி போகுதென்று.

Unknown said...

அன்பு ஜமீல் நாணா,
அன்பும் அமைதியும் அருளாகட்டும்!

>>>>>>>>>>>>>>
//நான் அச்சொல்லுக்கு மூவகை மொழிபெயர்ப்பை கண்டேன்.

1. வணங்குவதற்கே
2. சேவை செய்யவே
3. அறிவதற்கே//

முதலாவதைத் தவிர இரண்டும் மூன்றும் மொழிபெயர்ப்பாக இருக்கமுடியாது. மாறாக, யாராவது ஒருவரின் சுய கருத்தாக இருக்கும்.

உறுதி செய்யுங்கள்.
<<<<<<<<<<<<<<<<

என்னிடம் எப்போதும் தேடுதல் இருக்கும் என்பதால், நிச்சயம் உறுதி செய்வேன். எப்போது என்பதை இறைவனே அறிவான்!

இதோ இந்தக் காலையில் நான் அமெரிக்கா கிளம்பிவிட்டேன். திரும்பி வந்ததும் என் மறுமொழிகள் வரும், பின் இந்தக் கட்டுரையின் அடுத்த கட்டத்திற்கும் நகர்வேன். அதுவரை யாரெல்லாம் என் ஈமானோடு விளையாட விரும்புகிறார்களோ எல்லோரும் அவரவர் விருப்பம்போல் விளையாடிக்கொள்ளட்டும். நான் அவர்களுக்கு மறுமொழிகள் இடப்போவதில்லை. இந்த செக்குமாடு, அரைத்தமாவு எல்லாம் வேண்டாம்தானே?

ஈமான் என்று தலைப்பிட்டு ஓர் இழை தொடங்களாம். நிறைய பிரச்சினைகள் அதில் இங்கே தெரிகிறது. ஈமான் என்ற அரபுச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் என்னவென்று அறியவேண்டும். மதவெறியைச் சிலர் ஈமான் என்கிறார்களோ என்ற ஐயமும் எனக்கு வருகிறது. அனைத்தையும் இறைவன் அறியத் தருவானாக!

அன்பு கொண்டும் அறிவு கொண்டும் அனுபவம் கொண்டும் கருத்தாடுவது மட்டுமே சபைக்கு அழகு.

அன்புடன் புகாரி

Meerashah Rafia said...
This comment has been removed by the author.
Meerashah Rafia said...

continued..

கவலைப்படாதீங்க..புல்வெளி அரங்கில் பசிக்கேற்ற ருசியான சாப்பாடும் உண்டு.
(அரங்குகள் மற்றும் வில்லாக்களுக்கு உணவிற்கு மட்டும் பணம் வசூலித்து இடத்திற்கு பணம் வசூலிக்காத நமக்கு தெரிந்த தமிழ், மலையாள உணவகங்கள் வாழ்க!!அந்த பாக்கியங்களை கொடுத்த இறைவனுக்கே எல்லா புகழும்)
இத சொன்னா ஏன் அமீரக சகோக்களுக்கு முகம் சிவக்குதுன்னு தெரியலயே!!!!ஓஹோ.. அங்கு ஒவ்வொரு சதுர அடிக்கும் பாக்கெட்டை நீட்டனுமோ!!

Shameed said...

அன்புடன் புகாரி சொன்னது…

சகோ சமீத்,

>>>>>
தேர இழுத்தும் இப்போ
தெருவசந்தங் காணலியே
பூவப் பரிச்சும் இப்போ
புதுவாசம் வீசலியே
இதன் அர்த்தம் என்ன தேர் இழுத்தால் தெருக்கள் எல்லாம் வசந்தம் வந்து விடுமா ? <<<<<

// இதைத்தான் சம்பந்தம் இல்லாமல் பேசுவது என்பது//

//இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை ஆங்கே சென்று இந்த வினாவைப் பதிவு செய்யுங்கள். நான் விரும்பினால் பதில் இடுகிறேன்.//

உங்கள் கவிதைக்கு உங்களிடம் விளக்கம் கேட்டால் சம்பந்தம் இல்லாமல் பேசுவது என்று சொல்கின்றீர்கள் ஆங்கே சென்று இந்த வினாவைப் பதிவு செய்யுங்கள் நான் விருப்பப்பட்டால் பதில் இடுவேன் என்றும் சம்பந்தப்பட்ட விசயங்களுக்கு நீங்கள் நழுவலாக சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பதில் பேசுகின்றீர்கள் மற்றவர்களை பார்த்து நீங்கள் என்ன சொல்கின்றீர்களோ அது நூற்றுக்கு நூறு உங்களுக்குத்தான் பொருந்துகின்றது

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வீனானவற்றிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடியவனாக...

நான் மிகுந்த பனிச்சுமைக்கிடையில் நேரம் ஒதுக்கி பின்னூட்டங்களை வாசித்ததில்..

அன்புச் சகோதரர் புகாரி அவர்கள் கட்டுரைக்குத் தொடர்பில்லாத கேள்விகளை கேட்டிருப்பதையும், இசை கூடும் என்பதற்கான எந்த ஆதாரங்களையும் முன் வைக்காமல் ஆய்வு செய்யப் போகிறேன் ஏன் விடமாட்டேங்கிறீர்கள் என்பதையும், இன்னும் நான் ஆய்வு செய்யவே இல்லையே என்பதையும் பார்க்கும்போது சகோதரர் இசை சம்மந்தமாக இஸ்லாத்த்தின் நிலை என்ன என்பது பற்றிய எந்த தகவலையும் பெற்றிருக்கவில்லை என்பதை உணரமுடிகிறது.

இன்னிலையில் கருத்தாடுவது எவ்வித ஆரோக்கியமான முடிவையும் கொன்டுவறாது. தவிர்த்து மனவருத்தங்களை ஏராளம் ஏற்படுத்தும். இதற்கு ஆதாரமாக மேலுள்ள கருத்தாடல்களைக் கொள்ளலாம்.

எனவே அன்புச் சகோதரர்கள் அனைவரும் பின்னூட்டமிவதைத் தவிர்து சகோ புகாரி அவர்களை ஆய்வு செய்ய விடுங்கள். அவர் ஆய்வு செய்துவிட்டு வரட்டும்.

ஆய்வுக்குப் பின் கட்டுரையோடு தொடர்புள்ள ஆரோக்கியமான கேள்விகளுக்கு கட்டுரையாளர் பதில் தரட்டும்.

(எழுத்தில் பிழை இருக்கிறது என்று தயவு செய்து யரும் கெளம்பிடாதிய)

***பொதுவாக அனைத்து அதிரை நிருபர்களுக்கும் என் அன்பு வேண்டுகோள் என்னெவெனில் தங்களுடைய பதிவிற்குச் சம்மந்தமில்லாத எந்த கேள்விக்கும் எப்பொதும் பதிலளிக்க வேண்டாம்***

அன்புடன்
அபு ஈசா

Yasir said...

யாருப்பா இதனை தெளிவாக சொல்லமுடியும் என்ற ஏக்கத்தில் இருந்தேன்....சகோதரர் அபு ஈசா கருத்தை நான் 10000% வழிமொழிகிறேன்....
//தவிர்த்து மனவருத்தங்களை ஏராளம் ஏற்படுத்தும்// நமக்கு இது அழகல்ல

Shameed said...

Abu Easa சொன்னது…

//நான் மிகுந்த பனிச்சுமைக்கிடையில் நேரம் ஒதுக்கி பின்னூட்டங்களை வாசித்ததில்//

//அன்புச் சகோதரர் புகாரி அவர்கள் கட்டுரைக்குத் தொடர்பில்லாத கேள்விகளை கேட்டிருப்பதையும், இசை கூடும் என்பதற்கான எந்த ஆதாரங்களையும் முன் வைக்காமல் ஆய்வு செய்யப் போகிறேன் ஏன் விடமாட்டேங்கிறீர்கள் என்பதையும், இன்னும் நான் ஆய்வு செய்யவே இல்லையே என்பதையும் பார்க்கும்போது சகோதரர் இசை சம்மந்தமாக இஸ்லாத்த்தின் நிலை என்ன என்பது பற்றிய எந்த தகவலையும் பெற்றிருக்கவில்லை என்பதை உணரமுடிகிறது.//



//எனவே அன்புச் சகோதரர்கள் அனைவரும் பின்னூட்டமிவதைத் தவிர்து சகோ புகாரி அவர்களை ஆய்வு செய்ய விடுங்கள். அவர் ஆய்வு செய்துவிட்டு வரட்டும்.//

வலைக்கும் முஸ்ஸலாம்

"குரலி வித்தைகாரன் கீரிக்கும் பாம்புக்கும் சண்டை விட போகின்றேன் என்று கூட்டத்தை கூட்டி கடைசி வரை கிரீயையும் காட்டமாட்டார் பாம்பையும் காட்டமாட்டார் அது போல் உள்ளது சகோ புகாரி அவர்களின் கருத்தாடல்"

அபு EASA அவர்களே தங்களின் நியாயமான கோரிக்கையும் அழகிய தீர்ப்பையும் ஏற்று என் பின்னுட்டத்தை இந்த பதிவிற்கு நிறுத்தி விடுவதா முடிவு செய்துள்ளேன்.

Meerashah Rafia said...

நன்றி சகோ.அபு ஈசா அவர்கே.. நல்லவேலை இரட்டை சதம்(பின்னூட்டம்) அடிக்கவிடாமல் தக்க சமத்தில் வந்து எங்களை காப்பாற்றுநீர்கள்.

இனி சகோ. புஹாரிக்கு பதில் எழுதப்போவதில்லை.. குர் ஆன் அல்லது ஹதீஸில் சான்றுகள் காண்பிக்கும் வரை..மாசலாமா..

Noor Mohamed said...

அன்பு தம்பி அபு ஈசா
அஸ்ஸலாமு அலைக்கும்.

தங்களின் ஆலோசனையை நான் நன்மை என அறிகிறேன்.

இங்கு இதில் தொடர்ந்து பின்னூட்டம் கொடுப்பதை நிறுத்திக் கொள்கிறேன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எல்லோரும் பொட்டியை கட்டியாச்சா...

அட ! நாந்தான் லேட்டோ !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

comment 4

சகோதரர் அன்புடன் புகாரீ அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

நான் இறுதியாக ஞாபகமூட்டியிருக்கும் comment 1, 2, 3 என்று குறிப்பிட்டு கேட்டுள்ளவைகளுக்கு பதில் அளிப்பதோடு, ஜமீல் காக்கா அவர்கள் கேட்டு இன்னும் பதில் அளிக்காமல் இருக்கும் பின் வரும் பின்னூட்டத்திற்கு பதிலளிக்கவும்..

***********
ஜமீல் சொன்னது…
அன்பு புகாரீ,

//இசைக்குத் தொடர்பில்லாத இவற்றை நீங்கள் புதிய பதிவுகள் தொடங்கினால் கருத்தாடுவோம்//

'இறைமறையில் இசைக்குத் தடையில்லை; இறைமறையில் இல்லாத தடையை விதிக்க எவருக்கும் உரிமையில்லை' எனும் கருத்தில் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்டுக் கருத்தளித்திருந்தீர்கள்.

அல்லாஹ்வின் தூதருக்கு அந்த உரிமை உண்டு என்று இறைமறை வசனங்களிலிருந்து நிறுவியிருக்கிறேன். பார்க்க: எனது பின்னூட்டம் Tuesday, July 03, 2012 12:03:00 AM.

இதற்கு மறுப்பு/மாற்றுக் கருத்து உங்களிடம் உண்டா?

Reply Wednesday, July 04, 2012 11:06:00 AM///

**********

கருத்திட்ட comment 1 2 3 4 ஆகியவைகளுக்கு தங்களின் பதிலை விரைவில் எதிர்பார்கிறேன்.

அன்புடன் புகாரி said...

அன்பினிய சகோதர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்!

வட அமெரிக்கத் தழிச்சங்கப் பேரவையின் கவியரங்கத்தில் கலந்துகொண்டுவிட்டு இன்றுதான் திரும்பி வந்தேன். மகிழ்வான நிகழ்வாக அது இருந்தது. இந்த நான்கு நாட்களும் சென்றதே தெரியாமல் சென்றுவிட்டன. இயல் இசை நாடகம் என்ற முத்தமிழும் வெகு சிறப்பாக அரங்கேற்றப்பட்டன. தமிழ் தமிழன் பண்பாடு கலாச்சாரம் அறம் என்று அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய பெட்னா விழா ஒரு திருவிழாவாகவே அமைந்திருந்தது.

இனி நான் இந்த இழையில் விட்ட இடத்திலிருந்து தொடர்வேன். இறைவன் அதற்கான அனைத்து ஆய்ந்தறியும் அறிவையும் ஊக்கத்தையும் மிகுந்த பொறுமையையும் அருள்வானாக.

அன்புடன் புகாரி

Unknown said...

அன்பிற்கினிய சகோதரர்களே,

அஸ்ஸலாமு அலைக்கும். இதுவரை நாம் கண்டதில் மிக முக்கியமான விசயம் இதுதான்.

*****குர்-ஆனின் எந்த வசனமும் இசையைத் தடை செய்யவில்லை****

இதில் எவருக்கேனும் இங்கே மாற்றுக்கருத்து இருந்தால் அக்கருத்தை விளக்கமாகத் தெரிவிக்கவும். அதற்கான கருத்தாடலை நாம் பண்போடு மேற்கொள்ளலாம்.

இனி நாம் அடுத்ததாகக் காணப் போவது ஹதீசுகளைப் பற்றியும் ஹதீசுகள் இசையைப் பற்றி என்ன கூறுகின்றன என்பதைப் பற்றியும்தான்.

முதலில் ஹதீசுகளின் வரலாறு அதன் நம்பகத் தன்மை அதை குர்-ஆனோடு ஒப்பிட முடியுமா? குர்-ஆனை எப்படி அணுகவேண்டும் ஹதீசுகளை எப்படி அணுகவேண்டும் என்பதைப்பற்றியெல்லாம் இயன்றவரை விரிவாகக் காண்போம்.

அறிவைத் தேடுபவனே இஸ்லாமியன். நாம் அனைவரும் இஸ்லாமியர்களாக இருப்போம்.

அன்புடன் புகாரி

Unknown said...

அன்புச் சகோ சமீம்,
அன்பும் அமைதியும் அருளப்படட்டும்!

இஸ்லாமியர்களாகிய நாம் இறைவனிடம் ஈமான் கொண்டிருக்க வேண்டும். நாம் இறைவனிடம் ஈமான் கொண்டிருக்கிறோம் என்றால், நாம் அவனது இயல்புகளின்பால் அதிக நாட்டமுடையவர்களாக, அவற்றைப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நம்முடைய ஈமான் போலியானது என்று பொருளாகிவிடும்.

இறைவன் நிகரற்ற அன்புடையோன்
இறைவன் அளவற்ற அருளுடையோன்
இறைவன் மிகுந்த கருணையுடையோன்
இறைவன் எவரையும்விட பேரறிவாளன்

அன்பு, அமைதி, சாந்தம், சமாதானம் இவற்றைப் பேணாவிட்டால் நாம் அவன் வழியில் செல்லவில்லை என்று பொருள். அவன் வழியில் செல்லாவிட்டால். அவன் மீது ஈமான் கொள்ளவில்லை என்று பொருள்.

இப்போது நீங்கள் என்ன எழுதி இருக்கிறீர்கள் என்பதை நீங்களே மீண்டும் ஒருமுறை வாசித்து, நீங்கள் இறைவனின் மீது எத்துணை ஈமான் கொண்டுள்ளீர்கள் என்பதை இப்போதாவது உணர்ந்துகொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன்.

>>>>>"குரலி வித்தைகாரன் கீரிக்கும் பாம்புக்கும் சண்டை விட போகின்றேன் என்று கூட்டத்தை கூட்டி கடைசி வரை கிரீயையும் காட்டமாட்டார் பாம்பையும் காட்டமாட்டார் அது போல் உள்ளது சகோ புகாரி அவர்களின் கருத்தாடல்"<<<<<

அதோடு, கீழே சகோ தாஜுதீன் தன் கட்டுரையின் தொடக்கத்திலிலேயே கூறி இருப்பதைக் கேளுங்கள்.

>>>>>கடந்த ஓரு மாதமாக எனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படியில், முடிந்தவரை திருக்குர்ஆன் மற்றும் நபிகளாரின் பொன்மொழிகள், மற்றும் குர்ஆன் சுன்னாவைப் போதிக்கும் மார்க்க அறிஞர்களின் தொகுப்புகளை ஆய்வு செய்து, இந்தக் கட்டுரையை எழுதியுள்ளேன்<<<<<<

1400 வருடங்களாக குர்-ஆன் ஹதீசுகள் சொன்னதை அப்படியே வெட்டி இங்கே ஒட்டுவதற்கே அவருக்கு ஒருமாதம் ஆகி இருக்கிறது. நானோ தொடர்ந்து பல மடல்களைப் பொழிந்தவண்ணம் இருக்கிறேன். ஒவ்வொரு வினாக்களுக்க்கும் பதிலிட்டவண்ணமாய் இருக்கிறேன். ஆனால் நீங்கள் என்னைக் குரலிவித்தைக்காரன் என்கிறீர்கள். சகோ தாஜுதீனின் கட்டுரைக்காக நான் ஒரு மாத காலம் காத்திருந்தேன், அவரைக் குரலிவித்தைக்காரன் என்று கூறி இறைவன் வழியிலிருந்து நிச்சயம் நான் விலகிவிடவில்லை.

இதைத்தான் வெறுப்புடன் உரையாடுதல் என்பார்கள். நான் இங்கே உங்களுக்கு எதிரி இல்லையே? நான் இஸ்லாமிய வழியில் இஸ்லாமிய நெறியில் அறிவுதேடும் இஸ்லாமியனாக இருக்கிறேன். என்னுடன் பயணப்படுங்கள், அறிவைத் தேடுங்கள். விருப்பமில்லாவிட்டால் அமைதியாக இருந்து இங்கே இடப்படுவதை வாசியுங்கள். அதுவும் இயலா நிலையில், இவ்விழையில் இழைவதைக் கைவிட்டுவிட்டு விலகுங்கள். அது தவிர்த்து பண்பற்ற முறையில் தவறான சொற்பிரயோகங்களுடன் வெறுப்புடன் உரையாடுவது இறைவனின் மீது ஈமான் கொண்ட ஓர் இஸ்லாமியனுக்கு அழகல்ல.

அன்புடன் புகாரி

Unknown said...

அன்பிற்கினிய சகோ அபு ஈசா அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்!

உங்களை நான் இங்கு முதன் முறையாகக் காண்கிறேன் என்று நினைக்கிறேன். இங்கே இடப்பட்ட உங்கள் மடலுக்கு நன்றி.

>>>>அன்புச் சகோதரர் புகாரி அவர்கள் கட்டுரைக்குத் தொடர்பில்லாத கேள்விகளை கேட்டிருப்பதை<<<<

இசைக்குத் தொடர்பில்லா எக்கேள்வியை நான் இங்கே கேட்டிருக்கிறேன் என்று சுட்டிக்காட்டினீர்கள் என்றால் நான் அவற்றை மாற்றிக்கொள்ள முயல்வேன். அப்படிச் சுட்டிக்காட்டாத நிலையில், அது காரணமற்ற வெறுப்பின் காரணமாக என்மீது வெறுமனே இடப்பட்ட குற்றச்சாட்டாகும் என்பதையும் இங்கே வலியுறுத்த விழைகிறேன்.

இங்கே மறுமொழி இட்டவர்களின் கருத்துக்கள் யாவற்றையும் வாசித்துவிட்டதாகவே நீங்கள் கூறியிருக்கிறீர்கள். அவற்றுள்ளும் எவையெல்லாம் கட்டுரைக்குத் தொடர்புடையவை எவையெல்லாம் தொடர்பற்றவை என்பதையும் நீங்கள் சுட்டிக்காட்டினால், அது நீதிபோற்றும் அறவழியாய் அமையும்.

அன்புடன் புகாரி

Unknown said...

அன்புச் சகோ மீராசா,

>>>>பரிசு பெற்ற அந்த ஆவனப்படத்தை நாங்கள் காணலாமா?<<<<

இது என் கேள்வி

>>>>>சபாஸ்! உங்களுக்கு கேள்வி ஞானம் அதிகமிருக்கின்ற்றது.
Im Sorry.. பதில் மற்றும் புரிதல் ஞானம் குறைவாக தெரிகின்றது என்பது நீங்கள் இட்ட பல்வேறு பதில்(?!)களில் நான் அறிந்தது.<<<<<

இது என்ன ஈமான் இல்லாத பதில்? இறைவனிடம் ஈமான் கொள்ளுங்கள். அவன் வழி செல்லுங்கள் என்று உங்களை அன்போடு அழைக்கிறேன்.

>>>>அந்த ஆவணத்தோடு சேர்த்து மேலும் பல்வேறு ஆவணங்கள் நான் சமர்பிப்பேன்..இன்ஷா அல்லாஹ்.
ஆனால் அதன்பின் நீங்கள் இசை பித்தை விட்டு விளகுவீராயின். !<<<<<<<

இங்கே நாம் கருத்தாடுவது இஸ்லாமில் இசை அனுமதிக்கப்பட்டதா இல்லையா என்பது பற்றியது. எனக்கு இசைப்பித்து இருக்கிறதா இல்லையா என்பதுபற்றியல்ல.

பித்து என்பது இசையில் மட்டுமல்ல எதில் இருந்தாலும் கூடாது என்பதே இஸ்லாம் கூறும் வழி. வரம்புமீறுபவர்களை இஸ்லாம் மன்னிப்பதில்லை. வரம்பு மீறாதீர்கள்

>>>>>'இசையே இல்லாமல்' குழந்தைகளுக்கு ஒரு 'musical chair' போட்டி ஜித்தாவில்<<<<

இசையே இல்லாமல் என்று கூறிவிட்டு அதை ”மியூசிகள் சேர்” என்கிறீர்கள். இசையற்றதை எவரேனும் இசை என்பார்களா? முதலில் அதன் பெயரை மாற்றுங்கள்.

உலகில் 23 விழுக்காடு இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள்.
அதாவது 1.6 பில்லியன் இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள்
இதில் ஒரு விழுக்காடு என்பது 16 மில்லியன்
அதாவது ஒன்றரைக் கோடிக்கும் அதிகம்.

இசை வாடையே வேண்டாம் என்று செவியடைப்புச் செய்தவர்கள் ****ஒன்றரைக் கோடியாவது**** இருப்பார்களா?

நீங்கள் ஜித்தாவில் வாழ்கிறேன் என்கிறீர்கள்.
மெக்காவிற்கு மிக அருகில் இருக்கிறீர்கள்.
நீங்கள் வாழும் சவுதி ஓர் இஸ்லாமிய நாடு
அங்கே இசை தடைசெய்யப்பட்டுள்ளதா?
அல்லது வேறு எங்கேனும் தடைசெய்யப்பட்டுள்ளதா?

இறைவன் தடைசெய்யாததை யாரும் தடை செய்யமாட்டார்கள்.

சவுதி அரேபியாவின் தேசிய கீதத்தைக் கேடிருக்கிறீர்களா?
இசையோடு கூடிய அந்த அற்புதமான கீதம்
மிகவும் கம்பீரமாய் இருக்குமே, கேட்டதுண்டா?

இஸ்லாமிய மத குருமார்கள் எவரும் சவுதியில்
இசையைத் தடை செய்யவே இல்லையே
ஏன் என்று கூறமுடியுமா?

நாம் திறந்த விழிகளோடு இருப்பது அவசியம்.
தெளிவாக இஸ்லாமைக் காண்பது அவசியம்
அயராமல் அறிவைத் தேடுவது அவசியம்

அன்புடன் புகாரி

Unknown said...

சகோ சமீத்,

>>>>உங்கள் கவிதைக்கு உங்களிடம் விளக்கம் கேட்டால் சம்பந்தம் இல்லாமல் பேசுவது என்று சொல்கின்றீர்கள்<<<<<

மீண்டும் ஒருமுறைக்கு இருமுறை கூறுகிறேன்.

இங்கே இசைக்குத் தொடர்புடையவற்றை மட்டும் பேசுங்கள்.
இங்கே இசைக்குத் தொடர்புடையவற்றை மட்டும் பேசுங்கள்.

அன்புடன் புகாரி

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோ. அன்புடன் புகாரி,

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

//1400 வருடங்களாக குர்-ஆன் ஹதீசுகள் சொன்னதை அப்படியே வெட்டி இங்கே ஒட்டுவதற்கே அவருக்கு ஒருமாதம் ஆகி இருக்கிறது.//

குர் ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் தேவையானவைகளை வெட்டி ஒட்ட ஒரு மாதம் தேவையில்லை. தகுந்த சான்றுகளுடன் சொல்லியவிடையங்களை இன்னும் படிக்காமலே வெட்டல் ஒட்டல் என்பது இங்கு சிறுபிள்ளைதனமான வாதம் என்பது இந்த பதிவை முதலிருந்து படித்து வரும் சகோதர சகோதரிகளுக்கு தெரியும் என்று நம்புகிறேன்.

இந்த பதிவை தொகுத்து எழுத நான் பட்ட கஷ்டங்களை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.. நாம் பட்ட கஷ்டத்தை எவனுக்கும் எடுத்துசொல்லி சான்றிதழ் பெறவேண்டிய கட்டாயம் எனக்கில்லை. அல்லாஹ் ஒருவனுடைய பொருத்தம் மட்டுமே போது. இந்த பதிவு எந்த ஒரு தனிமனிதனுக்கு மட்டுமல்ல என்பதை மீண்டும் ஒரு முறை ஞாபகமூட்டுகிறேன்.

பதிவோடு சம்பந்தமில்லாத வெட்டல் ஒட்டல் என்ற வார்த்தை என்பதால் இந்த மறுமொழி என்பதையும் எல்லோருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோ. அன்புடன் புகாரி,

//*****குர்-ஆனின் எந்த வசனமும் இசையைத் தடை செய்யவில்லை****

இதில் எவருக்கேனும் இங்கே மாற்றுக்கருத்து இருந்தால் அக்கருத்தை விளக்கமாகத் தெரிவிக்கவும். அதற்கான கருத்தாடலை நாம் பண்போடு மேற்கொள்ளலாம்.//

ஹதீஸ்கள் பற்றிய வு உங்களுக்கு இன்னும் இல்லாத நிலையில் இது பற்றி ஒரு தலைபட்சமாக குர் ஆனில் இசைக்கு தடையில்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஹதீஸ்கள் பற்றி உங்கள் நிலைபாட்டை அறிந்துவிட்டு இந்த கருத்தை தெரிவியுங்கள் அதில் மாற்றுக்கருத்து இருக்கிறதா இல்லை என்பதை பற்றி கருத்தாடலாம்.

குர் ஆனில் நேரடியாக தடையில்லாத இரு விடையங்கள் தொடர்பாக நான் கேட்ட இரண்டு கேள்விகளுக்கும் மற்ற பிற கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நீங்கள் வேறு விடையங்களை பற்றி பேசுவது அர்த்தமற்றது.

அவைகளுக்கு உங்கள் தெளிவான பதிலை அளித்துவிட்டு மற்றவிடையங்கள் பற்றி கருத்திடுங்கள்.

தேவைபட்டால் மீண்டும் அந்த கேள்விகளை வைக்கிறேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோ. அன்புடன் புகாரி,

///இதோ இந்தக் காலையில் நான் அமெரிக்கா கிளம்பிவிட்டேன். திரும்பி வந்ததும் என் மறுமொழிகள் வரும், பின் இந்தக் கட்டுரையின் அடுத்த கட்டத்திற்கும் நகர்வேன். அதுவரை யாரெல்லாம் என் ஈமானோடு விளையாட விரும்புகிறார்களோ எல்லோரும் அவரவர் விருப்பம்போல் விளையாடிக்கொள்ளட்டும். நான் அவர்களுக்கு மறுமொழிகள் இடப்போவதில்லை. இந்த செக்குமாடு, அரைத்தமாவு எல்லாம் வேண்டாம்தானே?///

இப்படி மறுமொழியிட்ட பிறகு நீங்கள் குறிப்பிட்டுள்ள பழமொழிகளுக்கு ஏற்ப மீண்டும் மற்றவர்களுக்கு மறுமொழிகள் இடுவது எவ்வகையானது என்பது இந்த பதிவை படித்துவரும் அனைவருக்கும் எரிச்சலுடன் புரிந்திருக்கும்.

மீண்டும் சகோ. அன்புடன் புகாரி அவர்களுக்கும் இந்த பதிவை படிக்கும் அன்பு நேசங்கள் அனைவருக்கும் ஞாபகமூட்டுக்றேன். நான் இந்த பதிவுக்கு தொடர்புடையை comment 1,2,3,4 என்று இட்ட இட்ட மறுமொழிகளுக்கு சகோதரர் அன்புடன் புகாரி தெளிவான பதில் அளிக்காதவரை வரை நான் வேறு எந்த விடையத்தை பற்றி கருத்திடவிரும்பவில்லை.

மீண்டும் சகோ. அன்புடன் புகாரி அவர்களுக்கும் இந்த பதிவை படிக்கும் அன்பு நேசங்கள் அனைவருக்கும் ஞாபகமூட்டுக்றேன். நான் இந்த பதிவுக்கு தொடர்புடையை comment 1,2,3,4 என்று இட்ட இட்ட மறுமொழிகளுக்கு சகோதரர் அன்புடன் புகாரி தெளிவான பதில் அளிக்காதவரை வரை நான் வேறு எந்த விடையத்தை பற்றி கருத்திடவிரும்பவில்லை.

மீண்டும் சகோ. அன்புடன் புகாரி அவர்களுக்கும் இந்த பதிவை படிக்கும் அன்பு நேசங்கள் அனைவருக்கும் ஞாபகமூட்டுக்றேன். நான் இந்த பதிவுக்கு தொடர்புடையை comment 1,2,3,4 என்று இட்ட இட்ட மறுமொழிகளுக்கு சகோதரர் அன்புடன் புகாரி தெளிவான பதில் அளிக்காதவரை வரை நான் வேறு எந்த விடையத்தை பற்றி கருத்திடவிரும்பவில்லை.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

//வயிற்றுப் பிள்ளையும் இசையை ரசிக்கிறது. என்றால் எங்கோ தவறிருக்கிறது. கண்டுபிடிக்கவேண்டாமா?//

அப்ப‌டீண்டு திருக்குர்'ஆன் சொல்கிற‌தா? எந்த‌ இட‌த்தில் சொல்கிற‌து? ம‌னித‌னுக்கு போதை ஏற்ப‌டுத்தும் இசைக்க‌ருவிக‌ளை உடைத்தெறியுங்க‌ள் என்று உர‌க்க‌ச்சொன்ன‌ எம்பெருமானார் ந‌பிக‌ளார் த‌வ‌றாக‌ புரிந்து கொண்டு இதை ம‌க்க‌ளுக்கு உரைத்தார்க‌ளா? அமெரிக்க தமிழர்கள் நடத்திய இய‌ல், இசை, நாட‌க‌ விழாவிற்கு சென்று வ‌ந்து விட்டு எதோ இஸ்லாமிய‌ மார்க்க‌ விழிப்புண‌ர்வு மாநாட்டிற்கு சென்று வ‌ந்த‌து போல் பேசுகிறீர்க‌ளே?

இப்ப‌டி இசை ப‌ற்றி த‌வ‌றாக‌ புரிந்து கொண்ட‌த‌னால் தான் என்ன‌வோ? ந‌ம்மூரில் ஒரு நேர‌த்தில் நடந்தேறிய // அஸ்ஸ...அலை....ஹஜ்ரத் சே...ந.....ன்...ஒலி..ஹ் அவர்களின் 987வது ஆண்டு(சும்மா ஒரு குத்துமதிப்பா) கந்தூரி விழாவை முன்னிட்டு 6வது இரவை சிறப்பிக்கும் வண்ணம் மதுரை அபிநயா நீக்ரோபாஸ் வழங்கும் திரைப்படப்புகழ் கலைஞர்கள் கலந்து கொள்ளும் நடன நாட்டிய நிகழ்ச்சி இன்றிரவு நடக்கவிருக்கின்றது. எனவே பொதுமக்கள் அலைகடலென திரண்டு கா.ப. தர்ஹாவை நோக்கி வாரீர், வாரீர் என அன்புடன் அழைக்கின்றோம். பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.....இப்படிக்கு தர்ஹா கமிட்டி. என்ற அந்த அயோக்கியர்களின் அழைப்பை ஏற்று இரவில் குளிர் தலையை தாக்காமல் இருக்க மஃப்லர் எடுத்துக்கொண்டு ஆவலுடன் அங்கு சென்று வந்ததை இன்று எண்ணினால் கூட‌ வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கின்றது.//

தாஜுதீன் (THAJUDEEN ) said...

பதிவுக்கு தொடர்புடைய உரையாடல்... அன்புடன் புகாரி அவர்களின் பதில் எதிர்ப்பார்க்கப்படுகிறது. part 1

ஜமீல்: முஸ்லிம்களுக்கு ஒரு நாளில் ஐவேளை தொழுகைகள் கடமையாகும். இந்தக் கடமையை நேரடியாக இறைமறையிலிருந்து எடுத்துத் தருவீர்களா? Tuesday, July 03, 2012 12:03:00 AM

தாஜுதீன்: இறைமறையில், "மனித மாமிசம் தின்பது முஸ்லிம்களுக்கு விலக்கப்பட்டது" என்ற உறுதியான தடையேதுமில்லை. எனில், முஸ்லிம்களுக்கு மனித மாமிசம் ஹலாலா? Monday, July 02, 2012 12:16:00 PM

அன்புடன் புகாரி : இப்படியாய் வந்த கருத்துக்கள் என் பணிகளில் ஒன்றை இலகுவாக்கிவிட்டது. அது யாதெனில்.... குர்-ஆன் வசனம் இசையைத் தடை செய்யவில்லை. Tuesday, July 03, 2012 8:09:00 PM

தாஜுதீன்: இப்படி நீங்கள் பதில் கூறியதன் மூலமே நான் பின் வருமாறு கேட்டுள்ளேன்.
1) ஐந்து வேலை தொழுகை கடமை இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?
2) மனித மாமிசம் சாப்பிடலாம் என்று எடுத்துக்கொள்ளலாமா?
கட்டாயம் இவைகளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். Wednesday, July 04, 2012 1:04:00 AM

அன்புடன் புகாரி : இசைக்குத் தொடர்பில்லாத இவற்றை நீங்கள் புதிய பதிவுகள் தொடங்கினால் கருத்தாடுவோம். Wednesday, July 04, 2012 1:50:00 AM

தாஜுதீன்: நம்முடைய கருத்தாடலுடன் தொடர்புடையது தானே.. நானும் ஜமீல் காக்காவும் கேட்டது இதோ.... ஜமீல் சொன்னது: முஸ்லிம்களுக்கு ஒரு நாளில் ஐவேளை தொழுகைகள் கடமையாகும். இந்தக் கடமையை நேரடியாக இறைமறையிலிருந்து எடுத்துத் தருவீர்களா? தாஜுதீன் சொன்னது: இறைமறையில், "மனித மாமிசம் தின்பது முஸ்லிம்களுக்கு விலக்கப்பட்டது" என்ற உறுதியான தடையேதுமில்லை. எனில், முஸ்லிம்களுக்கு மனித மாமிசம் ஹலாலா?
அதற்கு உங்கள் பதில் இதோ.. அன்புடன் புகாரி சொன்னது: இப்படியாய் வந்த கருத்துக்கள் என் பணிகளில் ஒன்றை இலகுவாக்கிவிட்டது. அது யாதெனில்.... குர்-ஆன் வசனம் இசையைத் தடை செய்யவில்லை.
இப்படி நீங்கள் பதில் கூறியதன் மூலமே நான் பின் வருமாறு கேட்டுள்ளேன்.

1) ஐந்து வேலை தொழுகை கடமை இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?
2) மனித மாமிசம் சாப்பிடலாம் என்று எடுத்துக்கொள்ளலாமா?

கட்டாயம் இவைகளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் Wednesday, July 04, 2012 2:01:00 AM

அன்புடன் புகாரி : No Answer so far

தாஜுதீன் (THAJUDEEN ) said...

பதிவுக்கு தொடர்புடைய உரையாடல்... அன்புடன் புகாரி அவர்களின் பதில் எதிர்ப்பார்க்கப்படுகிறது. part 2

தாஜுதீன்: இறைவன், தன்னை அறியவே மனிதனைப் படைத்தான் என்ற ஆயத் எந்தக் குர்ஆனில் உள்ளது? Monday, July 02, 2012 12:16:00 PM

அன்புடன் புகாரி : அதிரை நிருபரில் வந்து யாரும் மறுக்காத கருத்துக்கள் இதோ:
http://adirainirubar.blogspot.ca/2012/03/1_31.html
ஆய்வாளர் அஹ்மது ஆரிஃப் , எம்.ஃபில் , எம்.காம்

மனிதனை மட்டுமல்ல, வானம், பூமி இன்னும் நம் அறிவுக்குத் தெரிந்த, தெரியாத எந்தப் படைப்புகளையும் உண்டாக்க வேண்டுமென்ற தேவை அல்லாஹ்வுக்கு இல்லை. எனினும், அவன் படைப்புகளைப் படைப்பதன் நோக்கம், அவனது வல்லமையைப் படைப்புகள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்.

وما خلقت الجن والإنس الا ليعبدون
ஜின்களையும், மனிதர்களையும் படைத்தன் நோக்கம் அவர்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி வேறில்லை. (அல்குர்ஆன்51:56)

மேற்கண்ட ஆயத்தில் லியஃபுதூன் என்னை வணங்குவதற்காக அன்றி என்பதை என்னை அறிந்து கொள்வதற்காகவே அன்றி என்றும் பொருள் உள்ளது என முஜாஹிது, இப்னு ஜுரைஜ் போன்ற அறிஞர்கள் கூறுகின்றார்கள்.(தஃப்ஸீர் இப்னு கஃதீர், தஃப்ஸீருல் பஃகவீ) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் லியஃரிஃபூனி – (என்னை அறிந்து கொள்வதற்காகவே அன்றி) என்று ஓதிக்காட்டினார்கள் என்றும் பல விரிவுரை நூல்களில் வந்துள்ளன. இன்னும்,

كنت كنزاً مخفياً فأحببت أن أعرف فخلقت الخلق لأعرف
நான் மறைக்கப்பட்ட புதையலாக இருந்தேன். நான் அறியப்பட வேண்டும் என்று விரும்பினேன். எனவே, நான் அறியப்படவேண்டும் என்பதற்காகப் படைப்புகளைப் படைத்தேன் என்று அல்லாஹ் கூறினான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் குத்ஸீ ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஹதீதின் கருத்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிய விளக்கத்திற்கு ஒத்திருப்பதாகவும் அறிஞர்கள் பலர் கூறுகின்றனர். (தஃப்ஸீர் கபீர், தஃப்ஸீர் ஆலூஸி.)
والله الغني وانتم الفقراء
இன்னும் அல்லாஹ் எந்தத் தேவையுமற்றவன். நீங்களே அவனிடத்தில் தேவையுற்றவர்கள். (அல்குர்ஆன் 47:38) Tuesday, July 03, 2012 8:18:00 PM


தாஜுதீன்: மேல் சொன்ன விளக்கத்தை ஜமீல் காக்கா ஆதரத்துடன் மறுத்திருக்கிறார்கள்.

இருப்பினும்....

இறைவன், தன்னை அறியவே மனிதனைப் படைத்தான் வசனம் நேரடியாக குர்ஆனில் இல்லாத போது தப்ஸீர் அதாவது ஹதீஸ்களின் விளக்கங்களை தானே தேடியுள்ளீர்கள். ஆகையால் நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் தன்னை அறியவே மனிதனை இறைவன் படைத்தான் என்ற வசனத்திற்கு ஹதீஸின் மூலம் தெளிபெறப்போய்தானே நீங்கள் அவ்வசனத்தை அடிகடி சொல்லி வருகிறீர்கள் என்பது நிரூபனமாகிவிட்டது.

இனி...

1)ஜமீல் காக்கா சொல்லுவது சரி என்று சொன்னால், நீங்கள் குறிப்பிடும் ஆயத்தன்னை அறியவே மனிதனைப் படைத்தான் குர்ஆனில் எங்கு உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும்.

அல்லது

2)குர் ஆன் வசனத்திற்கு தப்ஸீர்கள்,ஹதீஸ்களின் விளக்கங்கள் அவசியம் தேவை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். Wednesday, July 04, 2012 1:53:00 AM

அன்புடன் புகாரி : அரபு மொழி என்னுடையதல்ல. அது என்னுடைய மொழியே ஆனாலும் நான் பல அகராதிகளைப் பார்த்துத்தான் தெளிவு பெறுவேன். இப்படிச் செய்வதில் ஏதோ தவறு உள்ளது என்பதுபோல் எழுதி இருப்பது ஆச்சரியமளிக்கிறது. Wednesday, July 04, 2012 2:35:00 AM

தாஜுதீன்: மேல் சொன்ன மறுமொழியின் மூலம் தப்ஸீர் மற்றும் ஆதரப்பூர்வமான நபிமொழிகளின் மூலம் குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் எடுத்துக்கொள்ளுவதில் தவறேதுமில்லை என்பதை ஒத்துக்கொண்டுள்ளீர்கள்.

பின் ஏன் சுற்றி வளைத்து பேசவேண்டும்? Wednesday, July 04, 2012 5:40:00 AM


அன்புடன் புகாரி : No answer so far

தாஜுதீன்: மேல் சொன்ன என்னுடைய பின்னூட்டத்திற்கான தெளிவான பதிலை அளிக்க வேண்டும். ஹதீஸ்கள், தப்ஸீர்களை அகராதி என்று சொல்லி மலுப்பிவிடக்கூடாது. இது தொடர்பாக ஜமீல் காக்கா கேட்ட கேள்விக்கு நீங்கள் தனி பதில் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். Thursday, July 05, 2012 12:52:00 PM

அன்புடன் புகாரி : No answer so far

தாஜுதீன் (THAJUDEEN ) said...

பதிவுக்கு தொடர்புடைய உரையாடல்... அன்புடன் புகாரி அவர்களின் பதில் எதிர்ப்பார்க்கப்படுகிறது. part 3

ஜமீல்: உங்களிலிருந்தே ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு ஓதியுணர்த்துவதற்காகவும் உங்கள் வாழ்வைத் தூய்மைப் படுத்துவதற்காகவும் இறைமறையையும் மார்க்க அறிவையும் இன்னும் நீங்கள் அறியாத அறிவியல்களையும் உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பி(நபித்துவத்தை முழுமைப் படுத்தி)யதுபோல் 002:151; 062:002.

அன்பின் புகாரீ,
முஸ்லிம்களுக்கு ஒரு நாளில் ஐவேளை தொழுகைகள் கடமையாகும். இந்தக் கடமையை நேரடியாக இறைமறையிலிருந்து எடுத்துத் தருவீர்களா? அல்லது அல்லாஹ் தன் தூதர் மூலம் ஐவேளைத் தொழுகையை முஸ்லிம்களுக்குக் கடமையாக்கினான் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பீர்களா?
You have either option only! Tuesday, July 03, 2012 12:03:00 AM

அன்புடன் புகாரி : No Answer so far

ஜமீல்:என் கேள்விக்கு (either option) நீங்கள் இன்னும் பதில் சொல்லவில்லை என்பதை நினைவூட்டுகிறேன். Tuesday, July 03, 2012 10:43:00 PM

அன்புடன் புகாரி : No Answer so far

ஜமீல்: 'இறைமறையில் இசைக்குத் தடையில்லை; இறைமறையில் இல்லாத தடையை விதிக்க எவருக்கும் உரிமையில்லை' எனும் கருத்தில் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்டுக் கருத்தளித்திருந்தீர்கள்.

அல்லாஹ்வின் தூதருக்கு அந்த உரிமை உண்டு என்று இறைமறை வசனங்களிலிருந்து நிறுவியிருக்கிறேன். பார்க்க: எனது பின்னூட்டம் Tuesday, July 03, 2012 12:03:00 AM.

இதற்கு மறுப்பு/மாற்றுக் கருத்து உங்களிடம் உண்டா?

அன்புடன் புகாரி : No Answer so far

தாஜுதீன் (THAJUDEEN ) said...

பதிவுக்கு தொடர்புடைய உரையாடல்... அன்புடன் புகாரி அவர்களின் பதில் எதிர்ப்பார்க்கப்படுகிறது. part 4

ஜின்களையும், மனிதர்களையும் படைத்தன் நோக்கம் அவர்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி வேறில்லை. (அல்குர்ஆன்51:56) வசனத்தில் உள்ள வணங்குவதற்கு தொடர்பான உரையாடலில்


அன்புடன் புகாரி : நான் அச்சொல்லுக்கு மூவகை மொழிபெயர்ப்பை கண்டேன்.
1. வணங்குவதற்கே
2. சேவை செய்யவே
3. அறிவதற்கே Thursday, July 05, 2012 12:46:00 AM

ஜமீல் :முதலாவதைத் தவிர இரண்டும் மூன்றும் மொழிபெயர்ப்பாக இருக்கமுடியாது. மாறாக, யாராவது ஒருவரின் சுய கருத்தாக இருக்கும். உறுதி செய்யுங்கள். Thursday, July 05, 2012 8:50:00 AM

அன்புடன் புகாரி : என்னிடம் எப்போதும் தேடுதல் இருக்கும் என்பதால், நிச்சயம் உறுதி செய்வேன். எப்போது என்பதை இறைவனே அறிவான்! Thursday, July 05, 2012 2:54:00 PM

அன்புடன் புகாரி : no answer so far

பதிவுக்கு தொடர்புடைய மேலும் பல கேள்விகள் உண்டு. part1, part2, part3, part4 இவைகளுக்கு தெளிவான பதிலளித்துவிட்டு மற்ற விடையங்களை பற்றி கருத்திடுமாறு அன்புடன் அன்புடன் புகாரி அவர்களை கேட்டுக்கொள்கிறேன்...

Abu Easa said...

அஸ்ஸாலாமு அலைக்கும் வரஹ்...

என் வேண்டுகோளை ஏற்று கருத்திடாமல் தவிர்ந்திருக்கும் அனைவருக்கும் அல்லாஹ்வின் அருள் வேண்டிப் பிராத்தித்தவனாக!

அன்புடன் தாஜுதீனுக்கு...

அல்லாஹ்வின் மிகப் பெரும் கருனையின் காரனமாக இக்கட்டுரை குர்ஆன் சுன்னா அடிப்படையில் நிறைவாக இறுக்கிறது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

மேலும், இங்கே எந்த விவாதமும் நடைபெற வில்லை என்றே நான் நம்புகிறேன். அதையே தாஜுதீன் மற்றும் அனைத்து அதிரை நிருபர்களுக்கும் நினைவூட்டியவனாக...

36:17 وَمَا عَلَيْنَا إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ

“இன்னும், எங்கள் கடமை (இறைவனின் தூதுச் செய்தியை) விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை” (என்றும் கூறினார்).

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன் தூதர்களுக்கு வளங்கிய பனி தெளிவாக எடுத்துச் சொல்வதே. இறுதித் தூதரின் உம்மத்தாகிய நாமும் அப்பனியை செய்ய வேண்டியவர்களாக உள்ளோம். அந்த அடிப்படையில் இக்கட்டுரையின் மூலம் தங்களுடைய பனியை நிரைவாகவே செய்துள்ளேர். அதற்கான கூலியை நிறைவாகத்தற அல்லாஹ் போதுமானவன்.

எனவே மேற்கொன்டு கேள்விகளைத் தொடுத்துக் கொண்டிராமல் இத்தோடு விட்டுவிடுவதே சிறந்தது. சகோ புகாரி நபி மொழிகளை நம்புகிறாரா இல்லையா என்பது நமக்குத் தேவையில்லாத விடயம். நம் அனைவரின் நம்பிக்கைக்கும், செயலுக்குமுரியா கூலியைக் கொடுப்பவன் அல்லாஹ். அவன் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன். உள்ளத்தில் மறைத்து வைப்பதையும், வெளிப்படுத்தியதையும் நன்கு அறிபவன்.

மீண்டும் நினவூட்டுகிறேன் இங்கே விவாதம் நடைபெறவில்லை. எனவே பிறருடைய நிலைபாடு நமக்கு அவசியமன்று.

ஆகவே, சகோதரர் தாஜுதீனுக்கு என் அன்பு வேண்டுகோள் என்னவெனில் தயவு செய்து இத்துடன் இங்கே பின்னூட்டமிடுவதைத் தவிர்த்துக்கொள்ளவும் கட்டுரையின் விளக்கத்தின் மீது வினா தொடுக்காத வரை

அன்புடன்
அபு ஈசா

Unknown said...

அன்பிற்கினிய சகோ தாஜுதீன்,
அஸ்ஸலாமு அலைக்கும்

>>>>இந்த பதிவை தொகுத்து எழுத நான் பட்ட கஷ்டங்களை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே<<<<<

நீங்கள் எடுத்துக்கொண்டு நிறைவேற்றிய பணியை
குறைத்து மதிப்பிடுவதல்ல என் நோக்கம்,
****குரலிவித்தை காட்டுகிறான்**** என்ற
தரமற்ற, பண்பற்ற, ஈமானற்ற கொடுஞ்சொற்களுக்கு
உதாரணமாய் எடுத்துக்கொள்வதுதான் என் நோக்கம்.
புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

நான் அன்றும் வாழ்த்துச் சொன்னேன்
இன்றும் உங்களின் பணிக்காகப் போற்றுகிறேன்.

ஆய்வுகளில் இறங்கும்போதுதான் அறிதல் அதிகமாகும்,
தொடர்ந்த தேடுதல்கள் தரும் அறிவு நம்மை இறைவனுக்கு
மிக மிக நெருக்கமாக அழைத்துச் செல்லும்.

உங்கள் உழைப்பு உன்னதமானது
அதை அவமரியாதை செய்ததாக அன்புடன் எண்ணாதீர்கள்
அது நிச்சயமாக என் நோக்கம் அல்ல
இதனால் நீங்கள் புண்பட்டிருப்பதால் நான் உங்களுக்கு
என் நெஞ்சார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்

நான் உங்கள் சொற்களால் புண்பட்டபோது
நீங்கள் ஏற்றிய சில வரிகளை
கட்டுரையிலிருந்து இறக்கிய பண்பாளர் நீங்கள்

நான் கண்ட நற்பண்புகளை நிச்சயமாக
என் இதயம் பதிவு செய்து வைத்துக்கொள்ளும்

நீங்களும் உங்கள் நிலையிலிருந்து இறங்கி
சிறுபிள்ளைத்தனம் என்பதுபோன்ற சொற்களையும் பயன்படுத்தாதீர்கள்.

நாம் இறைவனின் அன்பு, அமைதி, அறிவு, சாந்தம், சமாதானம், கருணை
ஆகியவற்றைப் பெற்றவர்களாக நடந்துகொள்வோம்.

இறைவன் நிகரற்று அருள்பவனாகவே இருக்கிறான்!
அறிவினைத் தேடும் அறிவுடையோனே இஸ்லாமியன்!

அன்புடன் புகாரி

Unknown said...

அன்புச்சகோ தாஜுதீன்,
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பும் அமைதியும் அருளாகட்டும்!

>>>ஹதீஸ்கள் பற்றிய தெளிவு உங்களுக்கு இன்னும் இல்லாத நிலையில் இது பற்றி ஒரு தலைபட்சமாக குர் ஆனில் இசைக்கு தடையில்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஹதீஸ்கள் பற்றி உங்கள் நிலைபாட்டை அறிந்துவிட்டு இந்த கருத்தை தெரிவியுங்கள் அதில் மாற்றுக்கருத்து இருக்கிறதா இல்லை என்பதை பற்றி கருத்தாடலாம்.<<<<<

நாம் ஒவ்வொன்றாகப் பார்க்கிறோம்.
முதலில் நம் முதன்மை வேத நூலான திருக்குர்ஆன்.
ஒன்றை முடித்து அடுத்ததற்குச் செல்வதே
அறிவின் வழி தெளிவின் வழி கருத்தாடலின் சிறப்பு வழி.

நாம் நிச்சயமாக ஹதீசுகளைப் பார்ப்போம்.
குர்-ஆன் என்ற முதல்படியிலேயே நாம் தடுக்கிக்கொண்டு நின்றால்
எப்படி அடுத்த படிக்கு ஏறவியலும்?

======================================================
குர்-ஆன் இசையைத் தடுப்பதாய்க் கூறி
எந்த ஒரு வசனத்தையும் கொண்டிருக்கவில்லை
======================================================

இது உண்மை.

நான் அறிவதில் ஆனந்தம் கொள்பவன்
நான் அறியாமல் ஏதேனும் இசையைத் தடுக்கும்
வசனம் குர்-ஆனில் இருந்தால் கூறுங்கள்.
அவற்றை அலசிப்பார்த்து நானும் ஏற்றுக்கொள்கிறேன்.
எந்நாளும் ஏற்பதை நான் உயர்வாகக் கருதுபவன்
இழிவென்று கருதும் சிறுமனம் கொண்டவனல்ல

நீ யார் எனக்குச் சொல்ல என்ற நிலைப்பாடு
என்னிடம் எப்போதும் கிடையாது.
இந்த ஆய்வின் முடிவில் இசை கூடவே கூடாது என்று
நானே ஒப்புதல் உறுதியினைத் தரலாம்
இதையும் நான் தொடக்கத்திலேயே கூறிவிட்டேன்

அதுதான் திறந்த மனது. திறந்த அறிவு. இறைவன் கூறும் வழி

அறிவைத் தேடும் அறிவுடையோனே இஸ்லாமியன்!

அன்புடன் புகாரி

Unknown said...

அன்புச்சகோ தாஜுதீன் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்

>>>>>>>>>>>>>>>>>>>
//யாரெல்லாம் என் ஈமானோடு விளையாட விரும்புகிறார்களோ எல்லோரும் அவரவர் விருப்பம்போல் விளையாடிக்கொள்ளட்டும். நான் அவர்களுக்கு மறுமொழிகள் இடப்போவதில்லை. இந்த செக்குமாடு, அரைத்தமாவு எல்லாம் வேண்டாம்தானே?///

இப்படி மறுமொழியிட்ட பிறகு நீங்கள் குறிப்பிட்டுள்ள பழமொழிகளுக்கு ஏற்ப மீண்டும் மற்றவர்களுக்கு மறுமொழிகள் இடுவது எவ்வகையானது என்பது இந்த பதிவை படித்துவரும் அனைவருக்கும் எரிச்சலுடன் புரிந்திருக்கும்.
>>>>>>>>>>>>

அந்த செக்குமாடு, அரைத்தமாவு என்ற பழமொழிகளை நான் குறிப்பிடவில்லை. அப்படியான வார்த்தைகளை நான் எப்போதுமே துவங்கி வைக்க மாட்டேன்.

நான் கருத்தாடல்களில் நல்ல பண்புகளைத் திணிப்பவனே தவிர வம்புகளைத் திணிப்பவன் அல்லன். அந்த பழமொழிகளை யார் இந்த இழையில் இட்டார்கள் என்று உங்களுக்கே தெரியும் என்பதால் நான் இங்கே அன்பு கருதி அப்படியே சொல்லாமல் விடுகிறேன்.

நான் சுமார் 13 வருடங்களாக ஆரோக்கியமான கருத்தாடல்களில் அங்கமாக இருக்கிறேன். முதன் முதலில் யுனிகோடில் குழுமம் தொடங்கியவனும் நான் தான். யுனிகோடில் தமிழ் என்பதை ”யுனித்தமிழ்” என்று அனைவருக்கும் பழக்கிக்கொடுத்தவனும் நான் தான்.

என் ஈமானோடு விளையாடுபவர்களுக்குத்தான் மீண்டும் மறுமொழி இடமாட்டேன் என்று கூறினேன். வரும் வினாக்களுக்கு நிச்சயம் மறுமொழி இட்டால்தான் அது கருத்தாடல். இல்லாவிட்டால் அது எப்படி கருத்தாடல் ஆகும்?

நான் இங்கே கட்டுரை எழுதிக்கொண்டிருக்கவில்லை. இறைவனை அறியும் பொருட்டு, அவன் சொல்லுவதை அறியும் பொருட்டு ஆய்வுக் கருத்தாடல்தான் செய்துகொண்டிருக்கிறேன். வேண்டுமானால், இந்தக் கருத்தாடல் நிறைவு பெற்றதன்பின் நான் கட்டுரை எழுதத் தலைப்படலாம். அது இக்கருத்தாடல் செல்லும் திசையையும் தொடும் உயரத்தையும் பொருத்தது.

மீண்டும் மீண்டும் ஒரே கேள்வி, ஈமான் என்ற பெயரில் வந்ததற்குத்தான் நான் மறுமொழி இட இனி விரும்பவில்லை என்று கூறினேன். மீண்டும் என் மடலை வாசித்துப் பாருங்கள். தெளிவாகும்.

அறிவினைத் தேடும் அறிவுடையவனே இஸ்லாமியன்
அப்படியானவனே ஈமான் உடையவன்.

அன்புடன் புகாரி

Unknown said...

அன்பிற்கினிய மு.செ.மு நெய்னா முஹம்மது அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்!

>>>>>ம‌னித‌னுக்கு போதை ஏற்ப‌டுத்தும் இசைக்க‌ருவிக‌ளை உடைத்தெறியுங்க‌ள் என்று உர‌க்க‌ச்சொன்ன‌ எம்பெருமானார் ந‌பிக‌ளார் த‌வ‌றாக‌ புரிந்து கொண்டு இதை ம‌க்க‌ளுக்கு உரைத்தார்க‌ளா?<<<<<<

அவற்றையெல்லாம் நாம் காணப்போகிறோம். நான் இன்னமும் ஹதீசுக்குள் நுழையவே இல்லை. இப்போது நாம் நிற்பது முதல்படி.

****குர்-ஆனில் இசை தடை செய்யப்படவில்லை****

அவ்வளவுதான். அடுத்த நிலைக்குச் செல்லும்வரை பொறுமை காப்போமே!

****உம் இரட்சகனின் பாதைக்கு மக்களை நுண்ணறிவைக் கொண்டும்

அழகிய நல்லுரையைக் கொண்டும் அழைப்பீராக! (அல்குர்ஆன்-16:125) *****

இதைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன். இறை வழியில் அழகாகப் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறேன். நீங்கள் ஏன் கோபப்படுகிறீர்கள்? நான் இறைவழியில் செல்வது உங்களுக்குப் பிடிக்கவில்லையா?

இறைவழியில் ஒருவன் செல்வதை அதிரை நிருபர்கள் விரும்பவில்லையா? ஏன்? எனக்கு இதுதான் துவக்கத்திலிருந்தே புரியவில்லை. ஏன் இவர்கள் வெறுப்போடு உரையாடுகிறார்கள். இங்கே என்ன தவறு நடக்கிறது. இறைவனை அறியவும் அவன் வசனங்களை ஆயவும் இறைவன் நமக்குப் போதிய அறிவைக்கொடுத்துள்ளான். அதைத் தடுப்பது எதனால்? தடுப்பதால் நன்மையா? அல்லது ஆய்வதால் நன்மையா? விடையை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

>>>>>அமெரிக்க தமிழர்கள் நடத்திய இய‌ல், இசை, நாட‌க‌ விழாவிற்கு சென்று வ‌ந்து விட்டு எதோ இஸ்லாமிய‌ மார்க்க‌ விழிப்புண‌ர்வு மாநாட்டிற்கு சென்று வ‌ந்த‌து போல் பேசுகிறீர்க‌ளே?<<<<<

நான் அமெரிக்கப் பேரவை சென்று கவிதை வாசித்து வந்ததை ஏன் தூற்றுகிறீர்கள்? இதற்கு ஏதேனும் விசேட காரணம் உண்டா?

மார்க்க விழிப்புணர்வைத்தான் நாம் இங்கே இந்த இழையில் நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம். நமக்கு எல்லாமும் வேண்டும். வரம்புமீறாமல் நாம் இறைவன் அருளிய அனைத்தையும் அனுபவிக்கப் பிறந்தவர்கள்.

>>>>>கந்தூரி விழாவை முன்னிட்டு 6வது இரவை சிறப்பிக்கும் வண்ணம் மதுரை அபிநயா நீக்ரோபாஸ் வழங்கும் திரைப்படப்புகழ் கலைஞர்கள் கலந்து கொள்ளும் நடன நாட்டிய நிகழ்ச்சி இன்றிரவு நடக்கவிருக்கின்றது. எனவே பொதுமக்கள் அலைகடலென திரண்டு கா.ப. தர்ஹாவை நோக்கி வாரீர், வாரீர் என அன்புடன் அழைக்கின்றோம்<<<<<

இதைக் கண்டியுங்கள் நான் முழுவதும் உங்களோடு நிற்பேன். அதை விட்டுவிட்டு வெறுமனே கூடாததற்கெல்லாம் கோபப்பட்டு என்ன செய்யப் போகிறீர்கள்?

****உம் இரட்சகனின் பாதைக்கு மக்களை நுண்ணறிவைக் கொண்டும்

அழகிய நல்லுரையைக் கொண்டும் அழைப்பீராக! (அல்குர்ஆன்-16:125) *****

இந்த இறை வசனத்தை நாம் அனைவரும் மதிப்போமாக.

அறிவைத் தேடும் அறிவுடையோனே இஸ்லாமியன்
அவனே ஈமான் கொண்டவன்!

அன்புடன் புகாரி

Unknown said...

அன்புச் சகோ தாஜுதீன்,
அஸ்ஸலாமு அலைக்கும்!

பலமுறை கூறிவிட்டேன் என்றாலும் மீண்டும் மீண்டும் இதையே வாசிப்பது அலுப்பைத் தருகிறது

என்றாலும் உங்களுக்காக மீண்டும் என் பதில் இதோ.

>>>>>>>>>>>>
முஸ்லிம்களுக்கு ஒரு நாளில் ஐவேளை தொழுகைகள் கடமையாகும். இந்தக் கடமையை நேரடியாக

இறைமறையிலிருந்து எடுத்துத் தருவீர்களா? இறைமறையில், "மனித மாமிசம் தின்பது முஸ்லிம்களுக்கு விலக்கப்பட்டது" என்ற உறுதியான தடையேதுமில்லை. எனில், முஸ்லிம்களுக்கு மனித மாமிசம் ஹலாலா?
>>>>>>>>>>>

”இஸ்லாமில் தொழுகை - ஓர் ஆய்வு” என்று ஓர் இழையும் “ஹலால் உணவு - ஓர் இஸ்லாமியப் பார்வை” என்று ஓர் இழையும் தொடங்குங்கள், இறைவன் நமக்குத் தந்திருக்கும் அறிவினை முழுவதுமாய்ப் பயன்படுத்தி, கருத்தாடுவோம்!

>>>>>
இறைவன், தன்னை அறியவே மனிதனைப் படைத்தான் வசனம் நேரடியாக குர்ஆனில் இல்லாத போது

தப்ஸீர் அதாவது ஹதீஸ்களின் விளக்கங்களை தானே தேடியுள்ளீர்கள்.
<<<<<<<<

அகராதிகளையோ விளக்கங்களையோ நாம் தேடக்கூடாது என்று எங்குமே நான் சொன்னதில்லை.

ஹதீசுகளைப் பற்றி நாம் இன்னும் கருத்தாடவே தொடங்கவில்லை.

ஆய்வு செய்யும் அறிவினை நம் இறைவன் நம் எல்லோருக்கும் கொடுத்திருக்கிறான். எதை எவர் வாய்

வழி கேட்டாலும் அதன் மெய்ப் பொருளைக் காணும் அறிவினை இறைவன் நமக்கு விசாலமாகத்

தந்திருக்கிறான். முயற்சி செய்ய வேண்டியது மட்டுமே நம் செயல். அவன் திசையில்

பயணப்படும்போது அனைத்தும் கைகூடும். முயல்வோம் வாருங்கள்.

என் அறிவு ஓர் எல்லைக்குட்பட்டது
உங்கள் அறிவு ஓர் எல்லைக்குட்பட்டது
மத அறிஞர்களின் அறிவு ஓர் எல்லைக்குட்பட்டது
நபித்தோழர்களின் அறிவு ஓர் எல்லைக்குட்பட்டது
நபிகள் நாயகத்தின் அறிவு ஓர் எல்லைக்குட்பட்டது
எல்லைகளே இன்றி குறைவற்ற பேரறிவாளன் ஒருவனே
அவன் யாரென்று நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை

எனக்குச் சில மார்க்க அறிஞர்கள் சொல்லிட்டாங்க,
இனியொரு மாற்றுக்கருத்தில்லை என்று எண்ணி

நாம் இறைவனை அறியும் முயற்சியை நிறுத்திவிடுதல் கூடாது.
அது நம் ஈமானைக் கேள்விக்குரியதாக ஆக்கிவிடும்

உலகம் தட்டை என்று சொன்னவர்கள் மார்க்க அறிஞர்கள்தாம்.
கவிதை ஹராம் என்று கூறியவர்கள் மார்க்க அறிஞர்கள்தாம்.
பெண்கல்வி கூடாது என்று கூறியவர்கள் மார்க்க அறிஞர்கள்தாம்
பெண் வேலைக்குச் செல்லக்கூடாது என்று கூறியவர்கள் மார்க்க அறிஞர்கள்தாம்
இறைவனுக்கு உருவம் உண்டு என்றவர்கள் மார்க்க அறிஞர்கள்தாம்
இறைவன் ஓர் ஆண்மகன் என்றவர்கள் மார்க்க அறிஞர்கள்தாம்
இப்படியாய் நிறைய உண்டு.

குர்-ஆனின் கருத்துப்படி, இறைவன் எவற்றை உறுதியாகக் கூறி தடை செய்யவில்லையோ அவற்றை

மனிதன் தடைசெய்வது கூடாது.

“Who has forbidden the nice things that God has brought forth for His servants and the good provisions? They are meant for

those who believe during this worldly life, and they will be exclusive for them on the Day of Resurrection. It is such that We

explain the revelations for those who know. [7:32]

You shall not invent lies about God by attributing lies with your tongues, saying: "This is lawful and that is forbidden." Those

who invent lies about God will not succeed. [16:116]

>>>>>>>>>>>>>>>>
உங்களிலிருந்தே ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு ஓதியுணர்த்துவதற்காகவும் உங்கள் வாழ்வைத் தூய்மைப் படுத்துவதற்காகவும் இறைமறையையும் மார்க்க அறிவையும் இன்னும் நீங்கள் அறியாத அறிவியல்களையும் உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பி(நபித்துவத்தை முழுமைப் படுத்தியதுபோல் 002:151; 062:002.
<<<<<<<<<<<<<

ஹதீசுகளைப் பற்றி அலசும்போது நாம் இதையும் பார்ப்போம். அதுவரை பொறுமை காத்துக் கொள்ளுங்கள்.

இப்போது நாம் தெளிவடைந்திருப்பது ஒன்றே ஒன்றுதான்:

============================================================
குர்-ஆனில் இசையைத் தடுக்கும் வசனங்கள் இல்லை
============================================================

அறிவைத் தேடும் அறிவுடையோனே இஸ்லாமியன்
அவனே ஈமான் கொண்டவன்!

அன்புடன் புகாரி

Unknown said...

அன்பினிய சகோ அபு ஈசா அவர்களுக்கு
அஸ்ஸாலாமு அலைக்கும்.

>>>>>>என் வேண்டுகோளை ஏற்று கருத்திடாமல் தவிர்ந்திருக்கும் அனைவருக்கும் அல்லாஹ்வின்

அருள் வேண்டிப் பிராத்தித்தவனாக!<<<<<<<

எனக்கு இது விளங்கவில்லை. எதனால் எவரும் கருத்திடலாகாது என்று விளக்கினால் நலமாக

இருக்கும்.

இழைக்கு ஏற்ற கருத்திடுங்கள், இழைக்குச் சம்பந்தம் இல்லாத கருத்திடாதீர்கள் என்று நீங்கள்

சொன்னால் அதில் பொருள் இருக்கிறது.

ஆய்வுகளுக்கும் கருத்தாடல்களுக்கும் இஸ்லாமியர்கள் ஏன் பின் வாங்க வேண்டும்? அவைதானே

ஈமானை உறுதியாக்குவது?

மூட நம்பிக்கைகளிலிருந்து முஸ்லிம்கள் வெளிவருதல் அல்லவா இஸ்லாமின் பெருவளர்ச்சி.

இஸ்லாம் என்ற இனிய மார்க்கத்தை உயர்த்திப் பிடிக்க அனைவரும் மார்க்க அறிவு பெற்றிருத்தல்

அவசியம் அல்லவா? அதைத்தானே இஸ்லாம் துவக்கம் முதலே அறிவுறுத்துகிறது. அதற்கு மாறாக

நீங்கள் இப்படி எழுதினால் அதன் பொருள் என்ன?

அதோடு நீங்கள் எழுத விருப்பம் இன்றி விலகினால் அது உங்கள் போக்கு, அதில் தலையிட

யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் எவரும் மறுமொழி இடுதல் கூடாதென்று இறைவனுக்கு எதிராக

நீங்கள் எப்படிக் கூறலாம்? எனக்குச் சற்றும் விளங்கவில்லை.

**** திருக்குர்ஆன் 16:125
நுட்பமான அறிவினைக் கொண்டும்
அழகிய அறிவுரையைக் கொண்டும்
உம் இரட்சகனின் பாதையை நோக்கி
மக்களை அழைப்பீராக
அவர்களிடம் அழகிய முறையில்
கருத்தாடல் செய்வீராக
உமது இறைவன்
தனது பாதையை விட்டு
விலகியோரை அறிந்தவன்
நேர் வழி பெற்றோரையும்
அவன் அறிந்தவன்

அனைத்தும் அறிந்தவன் இறைவனாக மாத்திரமே இருத்தல் சாத்தியம். இங்கு யாரும் எதனைக்

கொண்டும் முன்முடிபுகளுக்கு வருவதும் அதனை நிறைவேற்றும் முகமாக தவறான கட்டளைகளை

இடுவதும் இறைவனின் வழியிலிருந்து திசை திருப்புவதாகும். அந்தப் பாவத்தை நீங்கள் செய்வது சரியில்லை என்று பரிந்துரைக்கிறேன்.

அறிவைத் தேடும் அறிவுடையோனே இஸ்லாமியன்
அவனே ஈமான் கொண்டவன்!

அன்புடன் புகாரி

Unknown said...

அன்பினிய சகோ அபு ஈசா அவர்களுக்கு
அஸ்ஸாலாமு அலைக்கும்.

>>>>>>
அல்லாஹ்வின் மிகப் பெரும் கருனையின் காரனமாக இக்கட்டுரை குர்ஆன் சுன்னா அடிப்படையில் நிறைவாக இறுக்கிறது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
<<<<<<

சரியாப்போச்சு, இறைவனே கீழே இறங்கி வந்து நேரடியாகக் கூறுவதுபோல் கூறுகிறீர்களே, இது மிகப் பெரும் பிழையில்லையா?

அனைத்தும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே என்பதை நீங்கள் மறுக்கிறீர்களா?

இக்கட்டுரையில் கருத்தாடுவதற்கு ஏதுமில்லை என்ற தீர்ப்பை நீங்கள் எப்படி ஆய்வின் தொடக்கத்திலேயே கூறவியலும்?

அப்படியே முழுமைபெற்றது என்று நீங்கள் நம்பினால், ஐயங்கொண்டோருக்கு விளக்கம் கூறுவதல்லவா இனிய இஸ்லாமின் அருமை வழி. அதைவிட்டுவிட்டு, நான் வைத்ததே சட்டம் என்பதுபோல் கருத்தறிவிப்பது சரியா? சற்றே யோசித்தீர்களா? இது தவறென்று தோன்றவில்லையா உங்களுக்கு?

>>>>மேலும், இங்கே எந்த விவாதமும் நடைபெற வில்லை என்றே நான் நம்புகிறேன். அதையே தாஜுதீன் மற்றும் அனைத்து அதிரை நிருபர்களுக்கும் நினைவூட்டியவனாக...<<<<<

யப்பா.... என்னங்க இது? மேலும் மேலும் இப்படியே அனைத்தும் அறிந்தவன் நானே என்ற ரீதியில் மொழிகிறீர்கள்? இது முற்றிலும் இஸ்லாமிய பண்புக்கு முரண்பாடான விசயம் என்பதை நீங்கள் அறியவில்லையா? அதை இறைவன் உங்கள் இதயத்தில் அழுத்தமாய் ஏற்றிவைக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

>>>>>>>>>>>>>
36:17 وَمَا عَلَيْنَا إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ
“இன்னும், எங்கள் கடமை (இறைவனின் தூதுச் செய்தியை) விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர

வேறில்லை” (என்றும் கூறினார்).
<<<<<<<<<<<<<<

அருமையான குர்-ஆன் வசனத்தை எடுத்து இட்டுள்ளீர்கள். விளக்கம் தேவையானவர்களுக்கு மறுப்பினைத் தெரிவியுங்கள் என்று இறைவன் கூறவில்லை பார்த்தீர்களா? நாம் சொல்ல வேண்டியதை எல்லோரும் அறியும் வண்ணம் தெளிவாகவும் விளக்கமாகவும் நாம் எடுத்துரைக்க வேண்டும். அது தொடர்பான ஐயங்களைப் போக்குதல் வேண்டும். அதுவே இறைவனின் ஆணை.

>>>>>சகோ புகாரி நபி மொழிகளை நம்புகிறாரா இல்லையா என்பது நமக்குத் தேவையில்லாத விடயம்.<<<<<

நான் இன்னமும் அது பற்றிய கருத்துக்களை இடாத நிலையில் நீங்கள் இப்படிக்கூறுவது ஏற்புடையதாகுமா?

உங்களிடமிருந்து வரும் சொற்கள் எல்லாம் முன்முடிவுகள். நானே அனைத்தும், எனக்கு விஞ்சியது என்று ஏதும் இல்லை என்ற நிலைப்பாடு. இது கூடுமா?

>>>>>>>>>>>>
மீண்டும் நினவூட்டுகிறேன் இங்கே விவாதம் நடைபெறவில்லை. எனவே பிறருடைய நிலைபாடு

நமக்கு அவசியமன்று.
>>>>>>>>>>>

இங்கே விவாதம் நடைபெறவில்லைதான். ஆனால் அழகிய வழியில் கருத்தாடல் நடைபெறுகிறது. அதனைத் தடுக்கும் உரிமை உங்களுக்கு உண்டா? இறைவன் தந்தானா?

கருத்தாடலுக்கும் விவாதத்திற்கும் வித்தியாசம் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

அறிவைத் தேடும் அறிவுடையோனே இஸ்லாமியன்
அவனே ஈமான் கொண்டவன்!

அன்புடன் புகாரி

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்பு புகாரீ

செக்குமாடு, அரைத்தமாவு உவமைகளை உறுதிப்படுத்தும் முகமாக,
//====================================================
குர்-ஆன் இசையைத் தடுப்பதாய்க் கூறி
எந்த ஒரு வசனத்தையும் கொண்டிருக்கவில்லை
====================================================//

என்பதைப் புதிய கண்டுபிடிப்பைப்போல் இத்தனை நாட்களாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள். "முஸ்லிம்களுக்கு இசை தடை செய்யப்பட்டதாகும்" என நேரடியாக இறைவசனம் இல்லை; எனவே, இறைவன் தடை செய்யாத இசையைத் தடை செய்வதற்கு எவருக்கும் அதிகாரமில்லை என்பது உங்களது வாதம்.

இறைவன் தன் மறையில் நேரடியாகத் தடை செய்யாதவற்றைத் தடை செய்வதற்குத் தன் தூதருக்கு அதிகாரம் வழங்கியிருக்கிறான் என்பது எனது எதிர் வாதம். அதற்காகவே ஒருநாளில் ஐவேளைத் தொழுகை முஸ்லிம்களுக்கு இறைமறையில் நேரடியாகக் கடமையாக்கப்படவில்லை; அதைத் தன் தூதர் மூலம் இறைவன் கடமையாக்கினான் என நிறுவியிருந்தேன். கூடவே,
"இதற்கு மறுப்பு/மாற்றுக் கருத்து உங்களிடம் உண்டா?
Wednesday, July 04, 2012 11:06:00 AM" எனும் ஒரு வினாவை வைத்திருந்தேன். இதுவரையில் உங்களிடமிருந்து பதிலில்லை. மாறாக எல்லாருக்கும் பதில் சொல்வதாகப் பெருமை பொங்கப் பேசுகின்றீர்கள். ப்பாயிண்டுக்கு வாங்க என்று அழைத்துப் பார்த்தேன். வர மறுக்கின்றீகள்.

அந்த இயற்போக்கு வினா உங்களுக்குப் புரியவில்லையாயின், எதிர்ப்போக்கான ஓர் உவமையுடன் கூடிய வினா:

"ப்ளூ ஃபிலிம் பார்க்கக் கூடாது என்று குர் ஆனில் எந்த வசனத்திலும் நேரடித் தடை இல்லை; இறைவன் தடுக்காததை எவனாலும் தடுக்க முடியாது" என்று வாதிக்கும் ஒருவர் "அறிவைத் தேடும் அறிவுடையோனே இஸ்லாமியன்" என்றும் கூறிக் கொள்வாராயின், அவரைப் பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்? விடை தாருங்கள்.

'புது வீட்டில் எலி புகுந்த' கதைகள் கேட்டுச் சலித்துவிட்டது.

இப்பவாவது ப்பாயிண்டுக்கு வாங்க!

Unknown said...

அன்பு நாணா (ஜமீல்),

>>>>>>>>>>>>>
செக்குமாடு, அரைத்தமாவு உவமைகளை உறுதிப்படுத்தும் முகமாக,
====================================================
குர்-ஆன் இசையைத் தடுப்பதாய்க் கூறி
எந்த ஒரு வசனத்தையும் கொண்டிருக்கவில்லை
====================================================
என்பதைப் புதிய கண்டுபிடிப்பைப்போல் இத்தனை நாட்களாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள். "முஸ்லிம்களுக்கு இசை தடை செய்யப்பட்டதாகும்" என நேரடியாக இறைவசனம் இல்லை; எனவே, இறைவன் தடை செய்யாத இசையைத் தடை செய்வதற்கு எவருக்கும் அதிகாரமில்லை என்பது உங்களது வாதம்.
>>>>>>>>>>>>>>>>

என்னுடையதை நான் வாதம் என்று சொல்லமாட்டேன்.
என் கருத்து என்றுதான் கூறுவேன்.
ஏனெனில் அதுதான் உண்மை.
நான் இங்கே விவாதிக்கவில்லை, கருத்தாடுகிறேன்.
வரும் கருத்தை ஆய்ந்தறிந்து ஏற்பேன்
என் கருத்தை பலரும் ஏற்கும் முகமாக
விளக்கங்களோடு சகோக்களின் முன் நிறுத்துவேன்.
மழுப்புவோர்முன் மீண்டும் அழுத்தமாக
அக்கருத்தை முன் நிறுத்துவேன்.

நீங்கள் நான் முன்வைக்கும் கருத்தெனச் சொல்வது சரி
அதை நீங்கள் இப்போது நேரடியாய் ஏற்கிறீர்கள் என்று கொள்கிறேன்
ஏனெனில் இதொன்றும் புதிய கண்டுபிடிப்பு இல்லை என்று நீங்களே கூறிவிட்டீர்கள்
அதாவது நீங்கள் ஏற்கனவே கண்டுபிடித்த உண்மையைத்தான்
இப்போது நான் உறுதி செய்ய விழைகிறேன் என்ற உண்மையை
இப்போது முழுதுமாக ஏற்றுக்கொண்டீர்கள்
இதை முன்பே செய்திருக்கலாமே நாணா?

சரி, நான் செக்குமாடுபோல, அரைத்தமாவையே அரைக்கும்
அலும்பனாக இருந்தேன் என்பதை நீங்கள் அனைவரும்
அறிந்துகொள்ள வேண்டும்.

அதற்கு சகோ தாஜுதீன் தொகுத்து இட்ட இந்தக் கட்டுரையின்
துவக்கத்தைச் சற்று காணவேண்டும். இதோ அது உங்கள் பார்வைக்காக:

>>>>>>>>>>>>>>>>>>>
1) “மனிதரில் அறிவின்றி அல்லாஹ்வின் வழியிலிருந்து வழிகெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குகின்றவர்களும் இருக்கின்றனர். அதனைப் பரிகாசமாகவும் எடுக்கின்றனர். இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனையுண்டு.” (லுக்மான்:06)

குர்ஆனில் நிறைய வசனங்களை ஆராய்ந்தால், வீணான வெட்டிப் பேச்சுக்கள் பேசுவதைத் தடை செய்கிறது என்று திருக்குர்ஆனைப் பொருள் உணர்ந்து படிக்கும் அனைவருக்கும் புரியும். ஆனால், மேலே குறிப்பிட்டுள்ள ‘வீணான செய்திகள்’ என்று குறிப்பிடுபவைகள் ஏராளமாக இருந்தாலும் அறிவின்றி அல்லாஹ்வின் வழியிலிருந்து வழிகெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்கல் என்ற வர்ணிப்பிற்கு ஒத்த அம்சம் என்ன என்பதை, இரண்டு நபித் தோழர்களின் விளக்கங்கள் தெளிவுபடுத்துகின்றன.

2) “எவனைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறெவரும் இல்லையோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக, ‘வீணான செய்திகள்’ என்பது இசை கலந்த பாடலையே குறிக்கிறது.” என்று இப்னு மஸ்ஊத் (ரழி) கூறுகிறார். (இப்னு அபீஷைபா-21130)

3) “பாடல் போன்றவைகளைப் பற்றியே இவ்வசனம் இறங்கியது.” என்று இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார். (அதபுல் முஃப்ரத்-1265, பைஹகீ-10-221-223)

இசை மூலம் ஷைத்தான் ஒருவனது ஆன்மீகத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறான் என்பதையும், வழிகேட்டின்பால் இட்டுச் செல்கிறான் என்பதையும் மேலே குறிப்பிட்டுள்ள இறைவசனம் தெளிவாக விளக்கப்படுத்துகிறது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இந்த வசனங்களுக்கான விளக்கங்களைக் கூறிக்கொண்டிருக்க வேண்டிய
அவசியமில்லாமல் என் பணியைச் சுலபமாக்கிவிட்டீர்கள் என்றுதான்
என் துவக்க மடலில் நான் மகிழ்ந்து கூறினேன்.

எப்படியோ இப்போது நாம் ஓர் உடன்பாட்டுக்கு வந்துவிட்டோம்.
இனி நீங்கள் முன் வைக்கும் வாதத்தைப் பார்க்கலாம்

(வளரும்)

அன்புடன் புகாரி

Unknown said...

அன்பு நாணா (ஜமீல்),
அன்பும் அமைதியும் அருளப்படட்டும்!

>>>>>>>>>>
இறைவன் தன் மறையில் நேரடியாகத் தடை செய்யாதவற்றைத் தடை செய்வதற்குத் தன் தூதருக்கு அதிகாரம் வழங்கியிருக்கிறான் என்பது எனது எதிர் வாதம். (ஜமீல் நாணா)
>>>>>>>>>>

உங்கள் எதிர் வாதத்தை நான் மறுக்கவே இல்லை.
ஆனால் நான் இன்னமும் அந்தத் தளத்துக்குள் நுழையவே இல்லையே.
நுழையும்போது நாம் அங்கே கருத்தாடலாம்.
அதற்காக அனைவரும் சற்று பொறுமை காக்க வேண்டும்.
அப்போது என் தெளிவான விளக்காம கருத்துக்கள்
இது தொடர்பாக நிச்சயம் வரும்.

இறைவனின் வசனங்களையும், தொகுக்கப்பட்ட ஹதீசுகளையும்
நாம் கையாளும்போது அவசரம் காட்டுவது சரியல்ல என்று நான் நம்புகின்றேன்.

சகோ தாஜுதீன், இவற்றைத் தொகுக்க ஒரு மாத காலம் எடுத்துக்கொண்டுள்ளார்.
அவரை நான் அதற்காகப் பாராட்டுகிறேன்.

என் பணியையும் நான் அக்கறையாகச் செய்யாவிட்டால்
அறிஞர்களும் ஈமான் உடையவர்களும்
அறியவிழையும் அறிவுடையோரும் உள்ள இச்சபையில்
நேர விரயமும் பகடியும் நிகழக்கூடும் இல்லையா?

>>>>>>>>>>>>>>
அதற்காகவே ஒருநாளில் ஐவேளைத் தொழுகை முஸ்லிம்களுக்கு இறைமறையில் நேரடியாகக் கடமையாக்கப்படவில்லை; அதைத் தன் தூதர் மூலம் இறைவன் கடமையாக்கினான் என நிறுவியிருந்தேன். கூடவே, "இதற்கு மறுப்பு/மாற்றுக் கருத்து உங்களிடம் உண்டா?
>>>>>>>>>>>>>>

உண்டு......
அது நான் ஹதீசுகளின் பக்கம் செல்லும்போதே நிகழும்.
நான் இக்கட்டுரையின் முதல் பகுதியான
இறைவசனத்தை இன்னும் முடிக்கவில்லை.
எனக்கும் சில இறை வசனங்களை இது தொடர்பாக
கோடிட்டுக் காட்டவேண்டிய தேவை இருக்கிறது

இடையில் நான்கு தினங்கள் அமெரிக்கப் பயணம்
கவிதை இயற்றும் தொடர்பாக சில பல பொழுதுகள்
அதனால் குர்-ஆன் வசனங்கள் மற்றும் ஹதீசுகளின்பால்
கவனம் செலுத்தமுடியாத பணிச்சுமை...

இதோ இப்போது வந்துவிட்டேன் மீண்டும்
என் மடல்மழை பொழியும் - பொருத்தருள்க!

>>>>>மாறாக எல்லாருக்கும் பதில் சொல்வதாகப் பெருமை பொங்கப் பேசுகின்றீர்கள்.<<<<<<<

எனக்கு இதில் பெருமையெல்லாம் கிடையாது.
ஆனால் நான் ஒரு பக்கமும் நாலாயிரம் கோடி
அதிரை நிருபர்கள் மறுபக்கமும் என்பது உண்மைதானே?
ஒவ்வொருவருக்கும் ஓயாமல் பதிலிடுகிறேன் என்பதும் உண்மைதானே?
மீண்டும் மீண்டும் கேட்கப்படும் ஒரே கேள்விக்கும்
மீண்டும் மீண்டும் பதில் இடுகிறேன் என்பதும் உண்மைதானே?

ஒவ்வொருவருக்கும் அது ஒருநாளுக்கு ஒரு மடல்
ஆனால் அதே நாளில் எனக்கு எத்தனை மடல்?
ஆனால் அதை நான் மகிழ்ச்சியாகவே செய்கிறேன்
இறைவன் அதற்கான அனைத்துத் தகுதிகளையும்
எனக்கு நிறைவாய்த் தந்துள்ளான்
பெருமை பேசுவதென்றால் இதை எனக்குத் தந்த
இறைவனின் பெருமை பேசுவோமே!

>>>>>ப்பாயிண்டுக்கு வாங்க என்று அழைத்துப் பார்த்தேன். வர மறுக்கின்றீகள்.<<<<<

நான் புல்லட் இட்டு மட்டுமே எழுதக்கூடியவன் என் அலுவலகப் பணிகளில்.
இங்கே கொஞ்சம் விளக்கமாக எழுதுகிறேன் என்பது உண்மை
ஆனால் நான் மையப் புள்ளியைப் பிடித்துக்கொண்டு
விளக்கக் கோலம் போட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்.

இப்போது ”குர்-ஆன் இசையைத் தடுப்பதாய்க் கூறி
எந்த ஒரு வசனத்தையும் கொண்டிருக்கவில்லை”
என்பதை ஏற்றுக்கொண்டீர்கள் நாணா
இனியென்ன அடுத்த நிலைப் பயணம்தான்.
இதோ விரைந்து வருகிறது.....

>>>>>>>>>>>>>>>>>
"ப்ளூ ஃபிலிம் பார்க்கக் கூடாது என்று குர் ஆனில் எந்த வசனத்திலும் நேரடித் தடை இல்லை; இறைவன் தடுக்காததை எவனாலும் தடுக்க முடியாது" என்று வாதிக்கும் ஒருவர் "அறிவைத் தேடும் அறிவுடையோனே இஸ்லாமியன்" என்றும் கூறிக் கொள்வாராயின், அவரைப் பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்? விடை தாருங்கள்.
>>>>>>>>>>>>>

இதற்கு என்னால் மிக அழகாகப் பதில் சொல்ல முடியும்.
ஆனால் இந்தக் கேள்வியே அரைத்தமாவை அரைப்பது என்பதால்
செக்குமாட்டுச் சுற்றல் என்பதால் விட்டு நடக்கிறேன் எட்டி!

அறிவைத் தேடும் அறிவுடையோனே இஸ்லாமியன்
அவனே ஈமான் உடையவன்.

அன்புடன் புகாரி

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்புடன் புகாரி அவர்களுக்கு,

பதிவுக்கு தொடர்புடைய நம்முடைய உரையாடல்களை தொகுத்து part 1,2,3,4 என்று நான் கருத்துத்திட்டவைக்களுக்கு தெளிவான பதில் அளிக்காமல் மலுபல் பதிலுடன் தப்பித்துக்கொண்டிருப்பது உங்களுடைய கருத்தாடல் யுக்தியை வெட்ட வெளிச்சமாக ஒரு தலைபட்சமானது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளீர்கள்..

இதோ உங்களுடைய அப்பட்டமான இரட்டை நிலைபாடுகள்.

நீங்கள் சொல்லுவது குர்ஆனில் இசைக்கு தடையாக ஒரு வசனம் கூட இல்லை என்பது.

நானும் ஜமீல் காக்காவும் சொல்லுவது குர் ஆனில் நேரடி தடையில்லாதவைகளுக்கு தடைவிதிக்கும் அதிகாரம் இறைத்தூதரர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு உண்டு என்பது குர் ஆன் வசனத்துடன் எடுத்துக்காட்டப்பட்டது, அதுதான் நபிகளாருடைய வழிகாட்டல்.

மேலும் நீங்கள் குர் ஆனில் இசைக்கு தடையில்லை என்று ஒரு வசனமும் இல்லை என்று சொல்லி குர் ஆன் இசையை தடை செய்யவில்லை என்ற உங்கள் கருத்தாடலில் அடிக்கடி கோடியிட்டுக்காட்டுவதன் அடிப்படையில் நான் கேட்டது குர் ஆனில் ஐவேளை தொழுகைக்கு நேரடி வழிகாட்டல் இல்லை, மனிதமாமிசம் சாப்பிடுவதை தடை செய்வதாக எந்த ஒரு வசனமுமில்லை, so ஐந்து வேலை தொழுகை கடமை இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா? மனித மாமிசம் சாப்பிடலாம் என்று எடுத்துக்கொள்ளலாமா? கட்டாயம் இவைகளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.

ஆனால் உங்களுடைய மலுப்பல் பதில் இவைகள் வேவ்வேறு தலைப்புகளில் விவாதிக்கலாம் என்று தப்பித்துக்கொள்ளும் கருத்தை பதிந்துவிட்டு,

ஜமீல் காக்கா கேட்ட இந்த கேள்விக்கு >>>>>>>>>>>>>>
அதற்காகவே ஒருநாளில் ஐவேளைத் தொழுகை முஸ்லிம்களுக்கு இறைமறையில் நேரடியாகக் கடமையாக்கப்படவில்லை; அதைத் தன் தூதர் மூலம் இறைவன் கடமையாக்கினான் என நிறுவியிருந்தேன். கூடவே, "இதற்கு மறுப்பு/மாற்றுக் கருத்து உங்களிடம் உண்டா?
>>>>>>>>>>>>>>


உங்களுடைய இந்த பதிலை தெரிவித்துள்ளீர்கள், உண்டு...... அது நான் ஹதீசுகளின் பக்கம் செல்லும்போதே நிகழும். நான் இக்கட்டுரையின் முதல் பகுதியான இறைவசனத்தை இன்னும் முடிக்கவில்லை.எனக்கும் சில இறை வசனங்களை இது தொடர்பாக கோடிட்டுக் காட்டவேண்டிய தேவை இருக்கிறது Thursday, July 12, 2012 1:34:00 AM என்று சொல்லியிருக்கிறீர்கள்.


இசைக்கு குர் ஆனில் நேரடி தடையில்லை ஆனால் ஹதீஸ் அதாவது நபிகளாரின் வழிகாட்டலில் தடை உள்ளது, அல்லாஹ் அந்த அதிகாரத்தை நபி (ஸல்) அவர்களுக்கு கொடுத்துள்ளான் என்று ஜமீல் காக்கா எடுத்துவைத்த இறை வசனத்திற்கு மறுப்பு தெரிவிக்காமல், ஒருதலை பட்சமாக குர் ஆனில் இசைக்கு தடையில்லை தடையில்லை என்று சொல்லுவது ஒரு நிலை,

இந்த நிலையை சார்ந்துள்ள ஐவேளை தொழுகை கடமையில்லை, மனித மாமிசம் தடையில்லை தொடர்பான கேள்விகளுக்கு மட்டும் ஹதீஸ்களின் பக்கம் நான் இன்னும் சொல்லவில்லை என்று சொல்லி ஹதீஸ்களை இதுக்கு மாட்டும் எடுத்துக்கொள்ளுவது ஒரு நிலை... இது அப்பட்டமான இரட்டை நிலைபாடு என்பது தெள்ளத்தெளிவாகிவிட்டது.

this comment continue in next comment

தாஜுதீன் (THAJUDEEN ) said...

continue here..

இறைவன் தன்னை அறியவே மனிதனை படைத்தான் என்பதற்கு ஒரு குர் ஆன் வசனத்தை காட்டுங்கள் என்று கேட்டதற்கு, ஜின்களையும், மனிதர்களையும் படைத்தன் நோக்கம் அவர்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி வேறில்லை. (அல்குர்ஆன்51:56)
இந்த குர் ஆன் வசனத்திற்கு தப்ஸீர் விளக்கத்தை இதற்கு ஆதாரமாக எடுத்துக்காட்டினீர்கள்... நீங்கள் எடுத்துவைத்த குர் ஆன் விளக்கம் ஆதரப்பூர்வமானாத இல்லை என்பதல்ல இங்கு நான் சுட்டிக்காட்டுவது, நேரடியான வாசகம் குர் ஆனில் இல்லாத போது, நீங்கள் நாடியது குர் ஆன் விளக்கவுரை என்ற தொகுப்புகளை அதாவது உங்கள் பாசையில் சொல்லுவதென்றால் அகராதி.

இங்கு உங்களுடைய இரட்டை நிலைபாடை சுட்டிக்காட்டுகிறேன்...

இசைக்கு தடை குர் ஆனில் நேரடி வசனமில்லை என்ற ஒரு நிலை,

நீங்கள் அடிக்கடி சொல்லும் இறைவனை அறியவே மனிதனை படைத்தான் என்ற வசனத்திற்கு உங்களுக்கு தேவை தப்ஸீர்களும், ஹதீஸ்களும் என்ற ஒரு நிலை... அப்பட்டமான இரட்டை நிலைபாடு என்பது தெள்ளத்தெளிவாகிவிட்டது.
--------------------------

சும்மா சுற்றி வலைத்து பேசாமல், பதிவுக்கு தொடர்புடைய நான் உங்களிடம் கேட்ட part 1,2,3, 4 இவைகளுக்கு தெளிவான பதிலை சொல்லிவிட்டு அடுத்த கட்டத்துக்கு செல்லுங்கள்.... அரைத்தமாவு செக்குவண்டி என்ற மலுப்பலுடன் தெளிவான பதில் சொல்லவில்லை என்றால் நீங்கள் இரட்டை நிலைபாட்டில் உள்ளீர்கள் என்பது தான் உண்மை..

நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் அறிவை தேடுபவனே இஸ்லாமியன்... இதன் அடிப்படையில் ஹதீஸ்களை பற்றிய அறிவை தேடி, இரட்டை நிலைபாடு இல்லாமல் உங்கள் நிலையை உறுதி செய்துவிட்டு பின் கருத்தாடுங்கள் இதுவே நியாயமான ஒரு தலைபட்சமில்லாத கருத்தாடலாக இருக்கும்..

எல்லோருக்கும் ஞாபகமூட்டுகிறேன், நான் பதிவை ஒட்டியே என்னுடைய கருத்தை பதிந்துள்ளேன்..

வெளியூரில் உள்ளேன், நேரம் கிடைத்தால் இன்ஷா அல்லாஹ் மேலும் தொடருவேன்...

Unknown said...

அன்பிற்கினிய ஜமீல் நாணா,

நான் உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன். கருத்தாடலைச் செரிவாக ஒரு திசையில் எடுத்துச் செல்ல அது உதவும் என்று நம்புகின்றேன். ****புரிதல் இல்லாமல்**** திரும்பத் திரும்ப ஒரே புள்ளியில் சுற்றித் திரிவது அலுப்பைத் தருகிறது. நாம் அடுத்த நிலைக்குச் செல்லலாமே.

நான் குர்-ஆன் வசனங்கள் சில வற்றையும் ஹதீசுகள் சிலவற்றையும் தொகுத்துள்ளேன். விரைவில் இடுகிறேன். வேலை நாட்களில் எனக்குக் கிடைப்பது மிகக் குறுகிய நேரம்தான். உங்களைப்போல் ஓய்வுபெறும்போது நிறைய எழுத ஆசை.

அன்புடன் புகாரி

Unknown said...

அன்புச் சகோ தாஜுதீன்,
அஸ்ஸலாமு அலைக்கும்!

உங்கள் மறுமொழிகளுக்கு நன்றி.
அன்புடன் அடுத்த கட்டத்திற்கு வாருங்கள்.
நீங்கள் நிற்கும் இடத்தில் இரத்தம் கசிகிறது.

>>>>நானும் ஜமீல் காக்காவும் சொல்லுவது<<<<<

உங்கள் கருத்தை மட்டும் முன்வையுங்கள்.
ஜமீல் நாணாவுடன் நான் தனியே உரையாடுகிறேன்.
அவரால் தனித்து இயங்க முடியும் என்று அறிவேன்.

>>>>இசைக்கு தடை குர் ஆனில் நேரடி வசனமில்லை என்ற ஒரு நிலை,<<<<<<

உங்களிடம் நேரடித் தடை உள்ள குர்-ஆன் வசனங்கள் இருந்தால்
சட்டென்று இங்கே இட்டுவிடுங்கள்.
வெட்டி மடல்களை அன்புடன் தவிறுங்கள்.

அன்புடன் புகாரி

Unknown said...

>>>>>>****புரிதல் இல்லாமல்**** திரும்பத் திரும்ப ஒரே புள்ளியில் சுற்றித் திரிவது அலுப்பைத் தருகிறது. நாம் அடுத்த நிலைக்குச் செல்லலாமே.<<<<<<

நாணா (ஜமீல்), இதை நான் உங்களை நோக்கிச் சொல்லவில்லை. இங்கே வந்து விழும் மடல்களுக்காகச் சொன்னேன். உங்கள் மடல் கனகச்சிதம். அப்படியே தொடருங்கள் அன்புடன்.

அன்புடன் புகாரி

தாஜுதீன் (THAJUDEEN ) said...

To br Anbudan Buhari...

ஜமீல் காக்கா கேட்ட விடையமும் நான் கேட்ட விடையமும் ஒன்றாக இருந்த்தால் நான் ஜமீல் காக்காவை குறிப்பிட்டேன். நான் ஜமீல் காக்கா ஒன்றிணைத்து குறிப்பிட்டத்தற்கு ஏன் பயப்படுகிறீர்கள் என்பது புரியவில்லை. நீங்கள் தாராலமாக அவர்களுக்கு பதிலளியுங்களேன், நான் தடுக்கவில்லையே.

பதிவுக்கும் அதனை தொடர்ந்து வந்த கருத்துகளுக்கும் தொடர்புடைய என் கேள்விகளுக்கு தெளிவான பதிலளிக்க மறுத்து மலுப்பல் பதில்களுடன் இரட்டை நிலைப்பாடுடன் கருத்தாடி கேள்வி கேட்கும் நான் வெட்டி மடலிடுகிறேன் என்று சொல்லுவது தான் நீங்கள் சொல்லும் அறிவை தேடும் இஸ்லாமியனின் போக்கு என்று இந்த பதிவின் கருத்துக்களை அவதானித்துவரும் அனைவருக்கும் தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

நல்ல அனுபவமுள்ளவர் என்ற எண்ணத்தில் கருத்தாடிய எனக்கு ஏமாற்றமே.

நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் தெளிவான பதிலளிக்காமல் வேறு எந்த கேள்விகள் நீங்கள் கேட்டாலும் நான் இனி எந்த பதிலும் தரப்போவதில்லை.

இதுவரை என்னுடைய இந்த கட்டுரைக்கு கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.

அல்லாஹ் நம் எல்லோருக்கும் நேர்வழி காட்டுவானாக.

Unknown said...

சகோ தாஜுதீன் அவர்களுக்கு ஒரு மடல் இட்டேன் காணவில்லையே?

Anonymous said...

அன்புச் சகோதரர்களுக்கு:

கருத்தாடல்கள் பதிவையொட்டி என்பதை தாண்டி பாதை மாறிச் செல்வதை உணர்வதால், இதுவரை பதிந்த கருத்துக்களுக்கு மதிப்பளித்து இனிமேலும் தனிமனித விமர்சனம் தொடர்வதை தவிர்க்கவே தாங்கள் பதிந்த கருத்தை நெறியாடலுக்கு உட்படுத்தியிருக்கிறோம்.

இதையும் மீறி தனிமனித விமர்சனம் தொடருமேயானால் !

கருத்தாடல் பெட்டி முடக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.

Unknown said...

அன்புச் சகோதரர்களே,
அஸ்ஸலாமு அலைக்கும்!

நான் ஒவ்வொன்றையும் தொகுத்துக்கொண்டிருக்கிறேன். என் பணிச்சுமை காரணமாக துரிதமாகச் செயல்பட இயலவில்லை. ஆகையால் கிடைக்கும் நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இடுகிறேன்.

ஹதீசுகளைப் பற்றிய கருத்தாய்வுகள் பின் வரும்.
குர்-ஆன் வசனங்கள் சில பின் வரும்.

அதற்கு முன்பாக நான் இந்த ஹதீசை உங்கள் முன் இடுகிறேன். இதனை ஆழமாக வாசித்து உங்கள் மறுமொழிகளை இடுங்கள். இது இசையையும் இசைக்கருவிகளையும் அனுமதிக்கும் ஓர் ஹதீஸ். இமாம் புகாரி தொகுந்தது.

===============================================
949. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
'புஆஸ்' (எனும் போர்) பற்றிய பாடல்களை இரண்டு சிறுமிகள் என்னிடம் பாடிக் காட்டிக் கொண்டிருந்தபோது என்னிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். படுக்கையில் சாய்ந்து தம் முகத்தை (வேறு புறமாகத்) திருப்பினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து 'நபி(ஸல்) அவர்களின் அருகில் ஷைத்தானின் இசைக்கருவிகளா?' என்று கூறி என்னைக் கடிந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ரை நோக்கி 'அவ்விருவரையும்விட்டு விடுங்கள்" என்றனர். அபூ பக்ர்(ரலி) அவர்களின் கவனம் வேறு புறம் திரும்பியபோது, அவ்விரு சிறுமிகளையும் விரல்களால் குத்தி (வெளியேறி விடுமாறு கூறி)னேன். அவ்விருவரும வெளியேறிவிட்டனர்.
===============================================

அறிவினைத் தேடும் அறிவுடையோனே இஸ்லாமியன்.
அவனே ஈமான் உடையவன்

அன்புடன் புகாரி

Unknown said...

குர்-ஆனில் இசை தடைசெய்யப்படவில்லை என்று முதலில் கண்டோம். அடுத்ததாக, இசைக்கருவிகளைக் கொண்டு இசைத்த இசையை நபிகள் நாயகம் அனுமதித்ததாகக் கூறும் ஹதீஸ் எண் 949 ஐக் கண்டோம். அந்த ஹதீஸ் இமாம் புகாரி அவர்களால் அறிவிக்கப்பட்ட ஹதீஸ்.
இஸ்லாம் இசையைத் தடைசெய்யவில்லை. இசை கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் வரம்புமீறுவது கூடாது. இசையில் மட்டும் அல்ல, எதிலுமே வரம்பு மீறுதல் கூடாது.
தவறான செய்திகளைக்கொண்ட அல்லது தீய வழியில் உணர்வுகளைத் தூண்டக்கூடிய இசை கூடாது, கலை கூடாது, கவிதை கூடாது, ஏன் எதுவுமே கூடாது.
தவறான கவிதைகள் உண்டு, அதற்காக கவிதைகளே வேண்டாம் என்று நாம் சொல்வதில்லை.
தவறான ஓசைகள் உண்டு. அதற்காக ஓசைகளே கூடாது என்றால் நாம் பாங்கு சொல்லமுடியாது, குர்-ஆனை அழகுற ஓதுதல் இயலாது.
தவறான சொற்பொழிவுகள் உண்டு, அதற்காக சொற்பொழிவுகளே வேண்டாம் என்றால் நம்மால் இஸ்லாமியச் சொற்பொழிவுகளைக் கேட்க முடியாது.
தவறான உணவு வகைகள் உண்டு, அதற்காக உணவே உண்ணக்கூடாது என்றால் நாம் உயிர் வாழ முடியாது.
எது சரி எது தவறு என்பதை இஸ்லாமிய அடிப்படையில் நாம் தேர்வு செய்தல் வேண்டும். சொன்ன சிலவற்றைக் கொண்டு சொல்லாத பலவற்றையும் அதனோடு ஒப்பிட்டு ஏற்கவோ விலக்கவோ வேண்டும்.
திராட்சையைக் கொண்டு குளிர்பானமும் உருவாக்கலாம் சாராயமும் உருவாக்கலாம். பிரச்சினை திராட்சையில் இல்லை. அதைப் பயன்படுத்தும் நம்மிடம்தான் இருக்கிறது.
இறைவழியில் நல்லவற்றை எடுத்து கெட்டவற்றை நீக்குதலே இஸ்லாம். அதற்கான அத்தனை அறிவையும் கொடுத்தே இறைவன் நம்மை படைத்துவிட்டிருக்கிறான்.
இன்று கணினி தரும் போதை எத்தனை பெரியது?
செல்போன் தரும் போதை எத்தனை பெரியது?
வீடியோ விளையாட்டுக்கள் தரும் போதை எத்தனை பெரியது?
சிலரின் சொற்பொழிவுகளைக் கேட்டு அப்படியே மெய்மறப்பதில்லையா?
கார் பணம் பங்களா குழந்தைகள் என்று எல்லாமும் நம்மை ஈர்க்கின்றன. நாம் மயங்குகின்றோம். நம் மயக்கத்தை எங்கே நிறுத்திக்கொள்ளவேண்டும் என்பதை இறைவனுக்குப் பயந்து செய்யும்போது இறைவன் மகிழ்வான் என்று நம்புகின்றேன்.
இசைகூடாது என்று இறைவனுக்குச் சொல்ல வேண்டுமென்றால், அவனுக்குக் கண்சிமிட்டும் நேரம் போதாதா? குர்-ஆன் வசனங்கள் தெளிவாக வந்திருக்காதா?
இறைவனின் நூல் முழுமையானதல்ல என்று ஈமான் உள்ள எவராலும் கூறிவிடமுடியுமா? இறைவன் தன் நூல் முழுமையானது என்று கூறுவதை மனிதன் மறுத்துவிடுவானா?
ஹதீஸ் எண் 949 த் தொடர்ந்து இமாம் புகாரி அவர்கள் தொகுத்த இன்னொரு ஹதீஸ் இதோ:

================================================================
952. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
புஆஸ்(எனும் பழமையான போர்) பற்றி அன்ஸார்கள் புனைந்துள்ளவற்றை அன்ஸாரிகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் என்முன்னே பாடிக் கொண்டிருந்தபோது அபூ பக்ர்(ரலி) வந்தார்கள். அவ்விரு சிறுமியரும் பாடகிகள் அல்லர். 'அல்லாஹ்வின் தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா?' என்று அபூ பக்ர்(ரலி) கேட்டார்கள். இது நடந்தது ஒரு பெருநாளின் போதாகும். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அபூ பக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நம்முடைய பெருநாளாகும்" என்று கூறினார்கள்.
================================================================
அன்புடன் புகாரி

Unknown said...

>>>>>>முன்பு இஸ்லாமியப் பாடல்கள் இசையில்லாமல் வந்தன. EM ஹனீபா போன்றவர்களால் இசைக் கருவிகளின் ஓசைகள் சேர்க்கப்பட்டு வெளிவரத் தொடங்கின.- தாஜுதீன்<<<<<<

இன்று இசைக்கருவிகளோடு வரும் பாடல்கள் இசைக்கருவிகள் இல்லாமல் வந்தால் அவை ஏற்றுக்கொள்ளப்படுமா? அவை தவறான கருத்துக்களை முன்வைத்தால் ஏற்றுக்கொள்ளலாமா?

இசை எந்தக் கேடையும் செய்வதில்லை, இசையைப் பயன்படுத்தி சிலர் செய்யும் சில்மிசங்கள்தாம் ஆபத்தானவை. சில்மிசம் செய்பவர்களுக்கு இசை என்று மட்டும் இல்லை, அவர்களால் ஒரு கதை எழுதி, ஒரு கட்டுரை எழுதி, ஒரு துணுக்கு எழுதி, ஒரு கவிதை எழுதி, அல்லது சில ஓசைகளை எழுப்பி, அல்லது மௌனமாக தன் செய்கையால் காட்டி என்று என்னென்ன சில்மிசம் செய்யமுடியுமோ அத்தனையும் செய்வார்கள்.

இசை இசைப்பவனின் கைகளில் இருக்கிறது. இசைப்பவன் வக்கிர மனம் கொண்டவன் என்றால் இசை கெட்டதைச் செய்யப் போகிறது. இசைப்பவன் மனித நேயம் கொண்டவனென்றால் அது அற்புதமான உணர்வுகளைப் பொழிந்து மனிதர்களின் நற்குணங்களை வளர்க்கப் போகிறது.

இசையால் மருத்துவமே நிகழும் இந்தக் காலத்தில், இசையைப் புரிந்துகொள்ளாத நிலைப்பாட்டை என்னவென்று சொல்ல?

>>>>>>இசை, பாடல் இரண்டும் இரண்டறக் கலந்த அம்சமாகும். சில இடங்களிலேயே அவை தனித்து நிற்கின்றன. பாடல் இசையின்றிப் பாடப்படுகின்ற பொழுது அனுமதிக்கின்ற இஸ்லாம், அவை இணைகின்றபோது இரண்டையும் வன்மையாகத் தடை செய்வதை அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவைக் கொண்டு தெளிவு படுத்துகிறது<<<<<<<

இஸ்லாம் இசையைத் தடுக்கவே இல்லை, பிறகு எப்படி அதனுள் வன்மை வரக்கூடும்?

எந்த ஒரு குர்-ஆன் வசனமும் இசையைத் தடை செய்யவில்லை. இசைக்கருவிகளைக் கொண்டு இசைக்கப்பட்ட பாடலை நபிகள் தடுக்கவேண்டாம் என்று கூறும் ஹதீஸ்கள் இமாம் புகாரியால் தொகுக்கப்பட்டு அங்கீகாரம் பெற்றாதாய் ஒன்று இரண்டல்ல நான்கு உண்டு. அவற்றை நான் இங்கே ஒவ்வொன்றாக இட்டுவருகிறேன்.

இதோ இன்னும் ஒன்று:

==========================================================
2906. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
என் முன்னால் (அன்சாரிச்) சிறுமிகள் இருவர் புஆஸ் போரைப் பற்றிய பாடலைப் பாடிக் காட்டிக் கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். படுக்கையில் சாய்ந்து தம் முகத்தை (வேறு திசையில்) திருப்பினார்கள். (பாட வேண்டாம் என்று அவர்களைத் தடுக்கவில்லை.) அப்போது, (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) வந்து என்னை அதட்டி, 'அல்லாஹ்வின் தூதருக்கு முன்பாக ஷைத்தானின் இசைச் கருவியா?' என்று கடிந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களை நோக்கி, 'அவர்களை (பாட) விடுங்கள்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களின் கவனம் திசை திரும்பிவிட்டபோது, நான் அவ்விரு சிறுமிகளுக்கும் கண்ணால் சாடை செய்தேன். உடனே, அவர்கள் வெளியேறிவிட்டார்கள்.
==========================================================

அன்புடன் புகாரி

Unknown said...

>>>>>>>>>>>>>>>>>>>>
6:114. (நபியே! கூறும்:) “அல்லாஹ் அல்லாதவனையா (தீர்ப்பளிக்கும்) நீதிபதியாக நான் தேடுவேன்? ********அவன்தான் உங்களுக்கு (விரிவான) விளக்கமான வேதத்தை இறக்கியுள்ளான்********* எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்திருக்கின்றோமோ அவர்கள் நிச்சயமாக இது (குர்ஆன்) உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையாக இறக்கப்பட்டுள்ளது என்பதை நன்கு அறிவார்கள். எனவே நீர் சந்தேகம் கொள்பவர்களில் ஒருவராகி விடாதீர்.
>>>>>>>>>>>>>>>

இந்த வசனத்தில், இறைவன் தெளிவாகச் சொல்லுகிறான். நான் விரிவான தெளிவான விளக்கமாக வேதத்தை இறக்கியுள்ளேன் என்று. ஆனால் சிலரோ ஒரு நபித்தோழர் இதற்கு இப்படி விளக்கம் கொடுத்தார் அப்படி விளக்கம் கொடுத்தார் என்று இறைவனின் சொற்களையே மாற்றிச் சொல்வது ஏற்புடையதா என்பதை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இறைவனின் சொல் கேட்பதா அல்லது மனிதரின் சொல் கேட்பதா? இறைவன் விரிவாகவும் தெளிவாகவும் சொன்னவற்றையே மாற்றிச் சொல்லுவது, இஸ்லாமை அழிக்கும் முயற்சியல்லவா? அவற்றை இஸ்லாமைக் காக்க நினைக்கும் எந்த ஒரு முஸ்லிமும் ஏற்கலாமா?

இறைவன் ஒவ்வொருவருக்கும் அறிவினைக் கொடுத்து படைத்திருக்கிறான். எவரையும் முட்டாளாய்ப் படைக்கவில்லை. அவரவர் அவரின் அறிவினை முறையாகப் பயன்படுத்தினால் போதும் யாவும் தெளிவடையும். தவறான நம்பிக்கைகள் நம்மை விட்டு ஒழியும்.

அறிவைத் தேடும் அறிவுடையோனே இஸ்லாமியன்
அவனே உண்மையான ஈமான் உள்ளவன்.

அன்புடன் புகாரி

Unknown said...

நான்கு முறை இமாம் புகாரி அவர்களால் அறிவிக்கப்பட்டு நான்கும் அங்கீகரிக்கப்பட்ட இசைக்கருவிகள் கூடும் என்று சாட்சியம் கூறும் ஹதீசுகளை அப்படியே இங்கே இடுகிறேன். இவற்றின் ஹதீச் எண்களைக் கவனியுங்கள்.

இதில் உள்ள முதல் மூன்றையும் இங்கே முன்பே இட்டுவிட்டேன். நான்காவதை மட்டும் தனியே இடலாம் என்றுதான் இந்த மறுமொழியைத் தொடங்கினேன். ஆனால், அனைத்தையும் ஒன்றாகக் காணும் கண்கள் சற்றே வியந்து விரியக்கூடும் என்பதால் இப்போது நான்கையும் ஒன்றாக இடுகிறேன்.

குர்-ஆன் எந்த ஒரு இசையையும் தடை செய்யவில்லை. இசைக்கருவிகளுடனான இசையை ஏற்கும் ஹதீசுகள் நான்கினையும் நான் இங்கே இடுகிறேன். இதைவிட வேறு என்ன வேண்டும் நாம் இசையையும் இசைக்கருவிகளையும் ஏற்பதற்கு.

வயிற்றில் இருக்கும் மழலைகூட இசையில் இன்புறுகிறது. பூமியில் மகிழ்ச்சியாக இருக்கக்கூடாது என்று இறைவன் எங்குமே கூறவில்லை. மாறாக அனுபவிப்பதையே கூறுகிறான் என்பதையும் நாம் அறிந்துகொள்ளுதல் அவசியம்.

949. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
'புஆஸ்' (எனும் போர்) பற்றிய பாடல்களை இரண்டு சிறுமிகள் என்னிடம் பாடிக் காட்டிக் கொண்டிருந்தபோது என்னிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். படுக்கையில் சாய்ந்து தம் முகத்தை (வேறு புறமாகத்) திருப்பினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து 'நபி(ஸல்) அவர்களின் அருகில் ஷைத்தானின் இசைக்கருவிகளா?' என்று கூறி என்னைக் கடிந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ரை நோக்கி 'அவ்விருவரையும்விட்டு விடுங்கள்" என்றனர். அபூ பக்ர்(ரலி) அவர்களின் கவனம் வேறு புறம் திரும்பியபோது, அவ்விரு சிறுமிகளையும் விரல்களால் குத்தி (வெளியேறி விடுமாறு கூறி)னேன். அவ்விருவரும வெளியேறிவிட்டனர்.

952. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
புஆஸ்(எனும் பழமையான போர்) பற்றி அன்ஸார்கள் புனைந்துள்ளவற்றை அன்ஸாரிகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் என்முன்னே பாடிக் கொண்டிருந்தபோது அபூ பக்ர்(ரலி) வந்தார்கள். அவ்விரு சிறுமியரும் பாடகிகள் அல்லர். 'அல்லாஹ்வின் தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா?' என்று அபூ பக்ர்(ரலி) கேட்டார்கள். இது நடந்தது ஒரு பெருநாளின் போதாகும். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அபூ பக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நம்முடைய பெருநாளாகும்" என்று கூறினார்கள்.

2906. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
என் முன்னால் (அன்சாரிச்) சிறுமிகள் இருவர் புஆஸ் போரைப் பற்றிய பாடலைப் பாடிக் காட்டிக் கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். படுக்கையில் சாய்ந்து தம் முகத்தை (வேறு திசையில்) திருப்பினார்கள். (பாட வேண்டாம் என்று அவர்களைத் தடுக்கவில்லை.) அப்போது, (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) வந்து என்னை அதட்டி, 'அல்லாஹ்வின் தூதருக்கு முன்பாக ஷைத்தானின் இசைச் கருவியா?' என்று கடிந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களை நோக்கி, 'அவர்களை (பாட) விடுங்கள்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களின் கவனம் திசை திரும்பிவிட்டபோது, நான் அவ்விரு சிறுமிகளுக்கும் கண்ணால் சாடை செய்தேன். உடனே, அவர்கள் வெளியேறிவிட்டார்கள்.

3931. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஈதுல் பித்ர்... அல்லது ஈதுல் அள்ஹா... (பெரு) நாளில் நபி(ஸல்) அவர்கள் என்னிடம் அமர்ந்திருந்தபோது அபூ பக்ர்(ரலி) என்னிடம் வந்தார்கள். அப்போது 'புஆஸ்' போர் நாளில் அன்சாரிகள் பாடிய பாடல்களை (சலங்கையில்லா கஞ்சிராவை அடித்துக் கொண்டு) பாடியபடி இரண்டு பாடகிகள் என்னருகே இருந்தனர். அபூ பக்ர்(ரலி), 'ஷைத்தானின் (இசைக்) கருவி" என்று இருமுறை கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவ்விருவரையும்விட்டுவிடுங்கள், அபூ பக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பண்டிகை (நாள்) ஒன்று உண்டு. நம்முடைய பண்டிகை (நாள்) இந்த நாள் தான்" என்று கூறினார்கள்.

அன்புடன் புகாரி

Unknown said...

>>>>>>>>>>>>>>>>>>
5590. அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்கி அல்அஷ்அரீ(ரஹ்) கூறினார்
'அபூ ஆமிர்(ரலி)' அல்லது 'அபூ மாலிக் அல்அஷ்அரீ(ரலி)' என்னிடம் கூறினார்கள் - அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறினார்)

நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்:
என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள்.

இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்களின் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான்.
<<<<<<<<<<<<<<<<<<<<<

இந்த ஹதீசைப் பாருங்கள். இது இசைக்கருவி கூடாது என்று சொல்வதுபோல் அமைந்திருக்கிறது. ஆனால் சற்றே ஆய்ந்து இந்த ஹதீசை நோக்க வேண்டும். முதல் பத்தியில், இது நம்ப முடியாத விசயம் ஆனால் நான் சத்தியமாகக் கூறுகிறேன் என்று அப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோன்ற நிலைப்பாட்டில் சொல்லப்படுகிறது. இதனால் துவக்கத்திலேயே ஐயம் தோன்றிவிடுகிறது.

இந்த ஹதீசின் மூன்றாவது பத்தியைப் பாருங்கள். இப்படி குரங்காக பன்றிகளாக உருமாற்றிவிடுவான் என்பதுபோன்ற அறிவுக்கு ஒவ்வாத சாபங்களை ரசூலுல்லாஹ் கூறுவதில்லை. மலையைக் கவிழ்த்து என்பதுபோன்றெல்லாம் சொல்லுவதில்லை. குர்-ஆன் வசங்களின்படி கியாமத் நாளைப்பற்றிக் கூறுவதும், நரகங்கள் பற்றி கூறுவதும், அவர்கள் தண்டனைக்குரியவர்கள் என்பதுபோல் கூறுவதும் பாவத்தாளிகள் என்பதுபோல் கூறுவதுமே பெரும்பாலும் வரும். இது சற்று வித்தியாசமாக இருப்பதை உணரலாம்.

இனி இரண்டாவது பத்திக்கு வருவோம். இந்த ஹதீஸ் உண்மையிலேயே ஏற்புடையது எனும் பட்சத்திலும், இது இன்றைய பார், பப், இரவு விடுதிகளையே வர்ணிக்கிறது. வருங்காலத்தில் இப்படி ஒரு கூட்டத்தார் வருவார்கள். அவர்கள் (விபச்சாரம் + பகட்டு உடை + மது + காமம் தூண்டும் இசை) ஆகிய நான்கும் இருக்கும் Night Club கலாச்சாரத்தை ஹலால் என்று கூறுவர் எனபது போலத்தான் வருகிறது.

தரமான, மனதை வருடக்கூடிய, மனதுக்கு அமைதியைத் தரக்கூடிய, மருத்துவமாகப் பயன்படுகிற, அருவி பொழிவதைப் போல் பொழிகின்ற, கால்களை வருடம் கடலலைகள் காதுகளை வருடுவதைப்போன்ற, இனிமையான, இதமான, இன்பம் தரக்கூடிய இசையையோ இசைக்கருவிகளையோ தவறென்று கூறவில்லை.

அன்புடன் புகாரி

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்பு புகாரீ,

குர்ஆனைப் புரிதல் பற்றிய உங்களது பிழைகளை நீக்கிக்கொண்டு, ஹதீஸ்களைப் பற்றிப் பேசுவோம்.

"இறைநம்பிக்கை கொண்ட பின்னர் தம் நம்பிக்கையை அநீதியால் களங்கப்படுத்தாதோரே அபயம் பெற்றவராவர்; அவர்களே நேர்வழி அடைந்தோர்" அல்குர்ஆன் 6:82.

இறைநம்பிக்கையை அநீதியோடு கலத்தல் என்றால் என்ன? இது உங்களுக்குரிய கேள்வி (இதுபோல் இன்னும் உண்டு).

குறிப்பு:
மேற்காணும் கேள்வியை, அரபியைத் தாய் மொழியாகக் கொண்டிருந்த நபித் தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டனர்.

இறைமறையில் நபியின் கடமை என்பது யாதெனில் இறை வசங்களை வெறுமனே எடுத்துச் சொல்வதன்று; மாறாக, அவற்றை விளக்கிச் சொல்வதாகும். பார்க்க: 005:092; 016:035; 016:082; 024:054; 029:018; 036:017; 064:012.

"ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கும்போது, இறையச்சம் ஏற்பட்டுத் திருந்திக் கொண்டவர்களுக்கு அச்சமில்லை; அவர்கள் துயருறார்" 007:035.

முன்னர் நான் சுட்டியிருந்த 002:151; 062:002 வசனங்களை மீண்டும் படித்துப் பார்த்துக்கொண்டு பதிலிடுங்கள்.

Unknown said...

அன்பினிய நாணா (ஜமீல்),

அப்பாடா, ரத்தினச் சுருக்கமான உங்கள் மடலுக்கு நன்றி.
இதைத்தான் நாங்கள் right to the point என்று
அலுவலக கலந்துரையாடல் சந்திப்புகளில் சொல்லுவோம்.

இப்படியே நாலு மடல்கள் வந்தால்கூட போதும்
ஐயங்கள் தவிடுபொடியாகி தெளிவுகள் தேன் துளிகளாய்ச் சொட்டும்.

>>>>>>>>>>>>>
"இறைநம்பிக்கை கொண்ட பின்னர் தம் நம்பிக்கையை அநீதியால் களங்கப்படுத்தாதோரே அபயம் பெற்றவராவர்; அவர்களே நேர்வழி அடைந்தோர்" அல்குர்ஆன் 6:82.

இறைநம்பிக்கையை அநீதியோடு கலத்தல் என்றால் என்ன? இது உங்களுக்குரிய கேள்வி (இதுபோல் இன்னும் உண்டு).

குறிப்பு:
மேற்காணும் கேள்வியை, அரபியைத் தாய் மொழியாகக் கொண்டிருந்த நபித் தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டனர்.
>>>>>>>>>>>>>>

இறைவனே கூறுகிறான், நபியே அவர்களுக்கு எடுத்து ஓதும் என்று.
நபிகள் நாயகம் மக்களுக்கு விளக்கம் கூறி தெளிவுபடுத்துவதை
நான் கூடாத செயல் என்று சொல்லவில்லையே நாணா.
அது மிக மிக அவசியமான ஒன்று என்றே சொல்கிறேன்.

நான் ரசூல் காலத்தில் வாழ்ந்திருந்தால்
கேள்விக் கணைகளைத் தொடுத்த வண்ணமாய் இருந்திருப்பேன்
என் வாலிபம் தொடங்கி இன்றுவரை அதைத்தானே
செய்துகொண்டிருக்கிறேன். பதில் சொல்லத்தான் நபிகள் இன்றில்லை!

இதோ நீங்கள் இட்ட இறைவசனத்தின் எளிமையான தமிழாக்கம்:

6:82. எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர்
தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்)
அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ,
அவர்களுக்கே அபயமுண்டு;
இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.

இதில் சந்தேகமே இல்லாமல் தெளிவாக இருக்கின்றதல்லவா?

நபிகள் நாயகம் நம்மோடு வாழ்ந்திருந்தால், இந்த வசனத்திற்கு
நாம் விளக்கம் கேட்போம்தான். அதில் மாற்றுக்கருத்தில்லை.
இந்த வசனத்திற்கு மட்டுமில்லை. குர்-ஆன் முழுமையையும்
அவரின் குரலில், அவரின் தெளிவுபடுத்துதலில், அவரின்
உவமைகளில் கேட்பதைவிட வேறு கொடுப்பினை இருக்க முடியுமா?

வள்ளுவன் இருந்தாலே நாம் விட்டுவைக்கமாட்டோம்.
இதுவோ எல்லாம் வல்ல இறைவனின் வசனங்கள்.
அந்த வல்ல இறைவனே கூறுகிறான் தன் தூதரை
எடுத்து விளக்கமாக இயம்பச்சொல்லி. எப்படி விடுவோம்?

ஆனால், சுமார் பத்துத் தலைமுறைகளுக்குப்பின்
முரணான பல கருத்துக்கள் தொகுக்கப்பட்டு
ஓர் இறைவசனத்திற்கு அர்த்தம் இதுதான் என்று
முன்வைக்கப்படுகிறது என்றால் அதை ஏற்கச் சொல்லி
என் இறைவன் சொன்னானா? இல்லையே?

நமக்கெல்லாம் அறிவைத் தந்தல்லவா அவன் ஆட்சியை நடத்துகிறான்.
நமக்கும் அவனுக்கும் இடையில் நபிகளுக்குப்பின் யார் வேண்டும்?

எறும்பைப் பிடித்துக்கொண்டு யானை என்றால் எப்படி?
அல்லாஹ் நமக்குத் தந்த அறிவு ஏன்? எதற்கு?

அன்புடன் புகாரி

Unknown said...

அன்பினிய நாணா (ஜமீல்)
அஸ்ஸலாமு அலைக்கும்!

கீழே உள்ள லுக்மான் இறை வசனங்களை
அப்படியே ஓதிக்கொண்டே வாருங்கள்.
அப்படியே ஓர் தெளிந்த நீரோடையைப்போல
ஓடிக்கொண்டிருப்பதைக் காணவில்லையா?

திடீரென்று இதனுள் இசையை நுழைத்தால்
தலைகால் புரியாமல் போய்விடுகிறதல்லவா?
தெளிந்த நீரோடை கலங்கப்படுகிறதல்லவா?

மிக எளிமையாக ஆனால் அழகாக அற்புதமாக
இறைவசனங்கள் இருக்கின்றனவே?

>>>>>>>>>>>>>>>>>>>>

31:2. இவை ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்களாகும்.

31:3. (இது) நன்மை செய்வோருக்கு நேர் வழி காட்டியாகவும் ரஹ்மத்தாகவும் இருக்கிறது.

31:4. அவர்கள் (எத்தகையோரென்றால்) தொழுகையை நிலை நாட்டுவார்கள்;
ஜகாத்தும் கொடுத்து வருவார்கள்;
இன்னும் அவர்கள் ஆகிரத்தை (மறுமையை)
உறுதியாக நம்புவார்கள்.

31:5. இவர்கள் தாம் தம் இறைவனின் நேர் வழியில் இருப்பவர்கள்;
மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.

31:6. (இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் - அவர்கள்
அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி,
(அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும்,
அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்)
இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு.

31:7. அ(த்தகைய)வனுக்கு நம்முடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால்,
அவன் அவற்றைக் கேட்காதவனைப் போல் - அவன் இரு காதுகளிலும்
செவிட்டுத் தனம் இருப்பது போல்,
பெருமை கொண்டவனாகத் திரும்பி விடுகிறான்;
ஆகவே அவனுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டென்று
(நபியே!) நீர் நற் செய்தி கூறுவீராக.
>>>>>>>>>>>>>

இஸ்லாமிற்கு கேடு விளைவிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட விளக்கவுரைகளை நாம் விலக்கி நிற்போம்.

அறிவைத் தேடும் அறிவுடையோராய் எழுவோம்
இஸ்லாம் காப்போம்!

இஸ்லாம் செழிக்க
இஸ்லாமியன் அறிவுடையோனாய் இருத்தல்
மிக மிக அவசியம்.

அன்புடன் புகாரி

Unknown said...

http://tamilislam-qa.blogspot.ca/2008/11/blog-post_08.html
ஹதீஸ் கலை "அறிவோம்"

இஸ்லாமியப் பிரச்சாரம் தீவிரமடையத் துவங்கிய காலத்திலிருந்து குர்ஆனும், ஹதீஸ்களுமே இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்று மக்களிடம் வைக்கும் போது நபிமொழிகளில் பலவீனமும் உண்டா? இது என்ன கொள்கை என்று பலர் குரல் எழுப்பியுள்ளனர். பலர் நம்மை கேலியும் கிண்டலும் செய்தனர். எதை கண்டும் துவளாமல் ஏராளமான தூய இஸ்லாமிய சிந்தனைவாதிகள் உருவாகி களத்தில் நிற்கும் வேளையில் அவர்களுக்குப் பயன்படும் நோக்கில் சுருக்கமாக பலவீனமான ஹதீஸ்கள் உருவாவது எப்படி? என்று தெரிந்து கொள்ள இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.

ஹதீஸ் கலை என்பது ஆழ்ந்த, அகன்ற அறிவுத்திறன் கொண்டதாகும். ஒரு சில பக்கங்களில் முடியக்கூடிய விஷயமல்ல அது. இருப்பினும் புரிந்து கொள்வதற்கு ஏற்ற அடிப்படை விஷயம் இதுதான்.

1. ஒரு ஹதீஸை நபித்தோழர்கள் நேரடியாக அறிவிக்காமல் அதற்கு அடுத்தத் தலைமுறையினர் (தாபிஈ) நேரடியாக அறிவித்தால், அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துப் பழகும் வாய்ப்பில்லை என்பதால் அத்தகைய ஹதீஸ்கள் பலவீனமாகி விடும்.

2. அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் தொடர்பின்மை இருந்தால் அவைகளும் பலவீனமாகும்.

3. நபித்தோழர் ஒரு ஹதீஸை அறிவித்து அதன்பிறகு வரும் அறிவிப்பாளர்களிடையே தொடர் விடுபட்டிருந்தால் அதுவும் தொடர் அறுந்த பலவீனமான ஹதீஸாகும்.

4. எனக்கு இவர் இந்த ஹதீஸை அறிவித்தார் என்று ஒரு அறிவிப்பாளர் கூறும் போது அவர்கள் இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவராகவும் இருவரும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றவராகவும் இருக்க வேண்டும். அதில் ஏதாவது குறை இருந்தால் அதுவும் பலவீனமாகும்.

5. நபித்தோழர்களைத் தவிர்த்து இதர அறிவிப்பாளர்களில் எவராவது பொய்யர் என்று பரவலாக இனங்காட்டப்பட்டால் அதுவும் பலவீனமாகும்.

6. மார்க்கத்திற்கு முரணான பித்அத் போன்ற காரியங்களைச் செய்யக் கூடியவர்கள் அவர்களது செயல்களை நியாயப்படுத்தி ஹதீஸ்கள் அறிவித்தால் அதுவும் பலவீனமாகும்.

7. ஒரு அறிவிப்பாளர் இளமையில் நல்ல ஞாபக சக்தியுடன் இருந்து பிற்காலத்தில் ஞாபக சக்தியில் தடுமாற்றம் ஏற்பட்டால், தடுமாற்றம் ஏற்பட்ட பின்பு அறிவித்தவை பலவீனமாகும். அவருக்கு எப்போது தடுமாற்றம் ஏற்பட்டது என்ற தகவல் தெரியாவிட்டால் அவர் அறிவித்த முழு செய்திகளும் பலவீனமாகும்.

8. ஒரு செய்தியை அறிவிக்கும் போது ஒருமுறை ஒருவர் பெயரையும் அடுத்த முறை அறிவிக்கும் போது பெயரை மாற்றியும் அறிவித்தால் தடுமாற்றத்தின் காரணத்தால் அதுவும் பலவீனமாகும்.

9. மொழி, இனம், பாரம்பரியம,; மார்க்கத்தில் பிரிவினை இவைகளை அனுமதித்து அல்லது புகழ்ந்து அறிவிக்கப்படும் அறிவிப்புகள் மொத்தமாக குர்ஆனுக்கு முரண்படுவதால் அவைகளும் பலவீனமாகும்.

10. ஹதீஸ் கலை வல்லுனர்கள் அனைவர்களிடமும் அறிமுகமில்லாத, தகவல் கிடைக்காத ஆட்கள் மூலம் ஒரு செய்தி வந்தால் அதுவும் பலவீனமாகும்.

11. தந்தை வழியாக மகன் அறிவிக்கும் செய்தியில் மகனுடைய சிறு வயதிலேயே தந்தை இறந்திருந்தால், தந்தையிடமிருந்து செவியுறும் வாய்ப்பை இழந்திருந்தால் அதுவும் பலவீனம்.

12. ஒரு தந்தைக்கு பல மகன்கள் இருந்து மகன்களுடைய பெயர் குறிப்பிடாமல் இன்னாரின் மகன் அறிவித்தார் என்று கூறினால் அதுவும் பலவீனமாகும்.

13. இறைவன் கருணையாளன் என்பதால் எத்தகைய பொய்யும் பேசலாம், தவறில்லை என்ற கொள்கை வாதிகள் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமாகும்.

இப்படி ஏராளமான மொழிகளில் ஹதீஸ்கள் தரம் பிரிக்கப்படுகின்றன. لاَ تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ

சந்தேகமானவற்றை பின்பற்ற வேண்டாம் (அல் குர்ஆன் 17:36). என்ற இறை கட்டளைக்கிணங்க, சந்தேகம் ஏற்படும் எல்லா செய்திகளையும் ஹதீஸ் கலை மேதைகள் ஒதுக்கி தள்ளிவிட்டார்கள்

குறிப்பு 1: இக்கட்டுரை தஹ்தீப், தர்கீப், தல்கீஸ், மீஸூன், தத்ரீப் இன்னும் பல ஹதீஸ் நூல்களைத் தழுவி எழுதப்பட்டது.

குறிப்பு 2: குர்ஆனுடன் எந்த வகையிலும் ஒத்துப் போகாத - முரண்பட்டே நிற்கும் ஹதீஸ்கள் ஏதாவது இருந்தால் அப்போது நாம் குர்ஆனுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஹதீஸ்கள் விஷயத்தில் மெளனம் காத்து விட வேண்டும். ஹதீஸ்கள் முக்கியம் என்று குர்ஆனை அலட்சியப்படுத்தி விடக் கூடாது.

--
ஜி என்

«Oldest ‹Older   1 – 200 of 208   Newer› Newest»

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு