அழகு குறிப்புகள், அன்புக் குறிப்புகள் கண்ட அதிரைநிருபர் வாசகர்களுக்கு அன்று போல் என்றும் பேசும் படங்களோடு உறவாடத்தான் இந்தப் பதிவு !
சொட்டு நீர் பாசனம் கேள்விப் பட்டிருப்பீர்கள், இங்கே சுழலும் நிரை சுற்றிச் சுற்றி கிளிக்கியதில், காவேரிப் பிரச்சினையில் தவிக்கும் தமிழகத்திற்கு இந்த தூறல் நமது விவசாயிகளின் மனதை ஈரப்படுத்தட்டும்.
சொட்டு நீர் பாசனம் கேள்விப் பட்டிருப்பீர்கள், இங்கே சுழலும் நிரை சுற்றிச் சுற்றி கிளிக்கியதில், காவேரிப் பிரச்சினையில் தவிக்கும் தமிழகத்திற்கு இந்த தூறல் நமது விவசாயிகளின் மனதை ஈரப்படுத்தட்டும்.
சாலை ஓரம் மரம் இருந்தாலே ஒரு அழகுதான் நம்ம ஊர் முழுக்க இப்படி சாலை ஓரம் மரம் நட்டால் அழகுக்கு அழகு சேர்க்கும்.
நல்லா கண்ணு தெரிந்த ஆளா இருந்தாலும் கண்ணாடி போட்டுகிட்டுதான் பாலத்துல போவனும் இல்லை என்றால் நாம் போகுமிடம் வேறு இடமா இருக்கும்.
தஞ்சாவூர் மணிமண்டப பூங்கா மேலே இருந்து பார்த்தா நல்லாத்தான் இருக்கு கிட்டே போய் பார்த்தா வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் பேந்து போய் இருக்கும்.
மனுஷனுக்கு மட்டும்தான் தொந்தியா மலைகளுக்கும் தொந்தி உண்டு ஆமா !
ஒத்தையடி பாதை பார்த்திருக்கோம் கேள்வி பட்டு இருக்கோம் ஆனா இது ஒத்தையடி பாலம்.
இந்திய பயணத்தில் இரவு நேரத்தில் விமானம் டேக் ஆஃப் ஆனதும் கிளிக்கியது
புனிதமும் தூய்மையும் சேர்ந்த இடம் இதை காணும்போதேல்லாம் கண்ணில் நீர்த்துளி நம்மை அறியாது கொட்டுகின்றது.
பூ... எப்புடித்தான் ஒளிஞ்சிகிட்டு பூத்தாலும் மூன்றாம் கண்ணு பூந்து புறப்பட்டு விடும்
மஃக்ரிப் நேர மதினா மாநகரம், இங்கு இருந்து கிளம்பி வர மனதிருக்காது
ஊர் முழுக்க இப்படி ஒரு சாலை அமைத்தால் !!! பைக்கில் போறவங்க கண்ணை பொத்திக்கிட்டு போவாங்க .இப்போ மட்டும் என்ன வாழுதாம்
Sஹமீது
32 Responses So Far:
01) ஏலியன்:
ஐந்துகால்களூன்றி
அவதரித்திருக்கும்
அந்நிய கிரகவாசி
நீ
வாய்வழிப் பொழிவதென்ன
உங்கவூர் மழையா?
அனைத்துப் படங்களும் அருமைடா சாவண்ணா!
I appreciate your hard work!
02) காட்சி மயக்கம்:
இருப்பதை எடுப்பதே
புகைப்படக் கலை
இல்லாததையும் எடுத்திருக்கிறீரே
ஹமீது
உம் கையில்
என்ன
காமிராவா மந்திரக்கோலா?
03) விளையாட்டு தினம்:
வெள்ளைச் சப்பாத்து அணிந்து
தாவரம் யாவரும்
வரிசையாய் நிற்கவும்
வீதியில் இன்று
விளையாட்டு தினம்!
04) ஹெச் ஃபார் ஹமீது:
பாலக்கால்களாய்
உம் விலாசம் வைத்தீர்
இப்பாலத்திற்கு
அப்பாலும்
நதியொன்று
நின்று
சென்றது
நீர் புகைப்படம் எடுக்கவா?
05) நேர்த்தி:
மடித்து வைக்கப்பட்ட
உடைகளைப்போல
திருத்தி வைக்கப்பட்ட
பூங்கா
தோட்டக்காரன்கூட
ஆடாமல் அசையாமல்
சிலையாய் நிற்கிறார்!
கவிக்காக்கா “ அமீரக மழைக்கவிதை” நான் கேட்டேன் இங்கே நீங்க கவிமழை பொழிந்து கொண்டு இருக்கின்றீர்கள்
சாவன்னா காக்கா உங்களின் மூன்றாம் கண் இப்படி சுழற்றி அடித்து பாய்ச்சும் நீரைப்போல் எங்கள் கண்ணுக்குக் குளிர்ச்சியை தருக்கின்றது
பசுமைக்கும் மன ஓர்மைக்கும் அழகு படங்கள்!
06) தனிமை:
இந்த
வயிறுப்பிய
சோற்றுமுட்டிச் சமவெளியின்
முகடுகளுக்கிடையே
ஒற்றையாய் ஒரு சுவடு
ஓடையொன்று
ஓடிப்போகையில்
விட்டுச் சென்றதோ!
07) முப்பரிமாணம்:
ஒரே
புகைப்படத்தில்
குளிக்க ஒரு குளம்
குட்டியாய் அருவி
நலிந்த நதி
காமிராவைவிட
கலைஞனின் பார்வையே தரம்.
08) வானமா பூமியா
விண்மீன்களும்
விண்கற்களும்
எரிநட்சந்திரங்களும்
கோத்துவைத்தும்
சிதறியும்
இந்தப்படம்
நிமிர்ந்து எடுத்ததா
குனிந்தா?
உண்மை பேசும் படங்கள். உயர்வினைச் சொல்லும் கவிதைகள்.
09) க'பா:
ஒவ்வோர் ஆத்மாவும்
மையத்து ஆகுமுன்
கண்டுவிட வைக்கும்
நிய்யத்து!
10) மஞ்சட்பூ:
இரட்டை ரெட்டையான
இலைகளுக்குள்
சிக்கிக்கொண்டார்
கலைஞர்!
11) நபி(ஸல்)ப்பள்ளி:
தாஜ்மஹாலின் பிம்பம்
தண்ணீரில் தெரிய
நதியுண்டு துணைக்கு
நபவியினை
பிம்பத்தோடு காட்ட
ஹமீதுண்டு நமக்கு!
12) கோணம்:
சினந்துகொண்டது சிங்கமொன்று
தன்
காட்டுப்பாதைக்குள்
யார்
ரோட்டைப்போட்டு
நாசம் செய்ததென்று!
அவரவர் தேவை
அவரவர் கோணம்!
ஹமீது,
உங்களால், எனக்கு இன்னிகுத் தரும் சம்பளம் என் கம்ப்பெனிக்கு அட்டர் வேஸ்ட் :-)
அனைத்துப்படங்களுக்கு ஒற்றக்கருத்து என்னன்னா "காக்கா எப்படி இப்படியெல்லாம் கல(கிளு)க்குறிங்க"
அருமை அருமை அதிலும் ஒவ்வொரு பின்னுட்டமா இட்டு கவிதையினால் மேலும் இப்படங்களுக்கு மேருகு ஏற்றுகிறார் கவி காக்கா..
அதிகாலையிலேயிருந்து சார காத்தும், சர சர தூறலும் ! நல்லாத்தான் இருந்துச்சு வீட்டை விட்டு கிளம்பும்போது...
இந்த நாட்டில் பெட்ரோலில் ஓடும் அனைத்து வாகனங்களுக்கு அருமையான சாலை வசதிகள், நிறுத்தங்கள், நிலத்தடி போக்குவரத்து என்று அசத்தும் இவர்கள்... ஓடும் மழைநீருக்கென்று ஒரு வழிப்பாதை கூட அமைக்காமல் விட்டதை ஒவ்வொரு மழையும் ஞாபகப் படுத்தும்... ம்ம்ம்ஹும்... இன்னும் அப்படியேதான் இருக்கு !
அமீரகத்தில்தான், தூறல் கூட ஆங்காங்கே குட்டைகளை ஏற்படுத்துகின்றன... (கவனிக்க அதிரை குப்பைகளை அல்ல)!
படங்களுக்கு ஆங்காங்கே கவிதை மழை ! அழகோ அழகு... கிரவ்னு வருவா(ர்)ன்னு நினைக்கிறேன்... பார்ப்போம் !
அனைத்துப் படங்களும் அருமைன்னு சும்மாத்துக்கும் சொல்லிட்டு போக மனமில்லை !
அதனால... ஒவ்வொரு படமும் அருமை ! :) :)
//இரட்டை ரெட்டையான
இலைகளுக்குள்
சிக்கிக்கொண்டார்
கலைஞர்!//
ஹஹ்ஹா..
என்னையுமறியாமல் அறையில் சிரித்து விட்டேன் கவிவேந்தரே! நற்சுவைக்கூட்டும் வரிகளில் நகைச்சுவைக் கூட்டும் உங்கள் திறன் வியந்து மெய்மறந்துச் சிரித்து விட்டேன். இவ்வரிகளைக் கலைஞர்க்கு அனுப்பி வைக்கவா?
இப்போதான் கவிக் காக்காவின் ஒவ்வொரு கவிதையையும் வாசித்தேன்...
அனைத்தும் தேன் !
கவிதை மழையில்
நனைந்ததால்
கருத்துக்களின் தும்மல் !
கொட்டும் அருவிபோல்
காமிராக் கருவியால்
சுட்டும் விழிச்சுடர்ச்
சுட்டிய படங்களால்
கண்ணுக்கும் குளிர்ச்சி
கல்புக்கும் குளிர்ச்சி
மாலை நேர நீண்ட தூர நடைப்பயிற்சி
சாலை ஓரம் வேண்டும் வரை தரும் மகிழ்ச்சி
காலம் கடந்த
பாலம் செய்த
கோலம்!
சாந்தம் சூழும்
காந்தம்
கஃபா
அன்பும் அமைதியும்
பண்பும் பயனும்
என்றும் சூழும்
குன்றாப் புகழ்
மதினா
sabeer.abushahruk சொன்னது…
03) விளையாட்டு தினம்:
வெள்ளைச் சப்பாத்து அணிந்து
தாவரம் யாவரும்
வரிசையாய் நிற்கவும்
வீதியில் இன்று
விளையாட்டு தினம்!
---------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
வெள்ளை சப்"பாத்தி(து)கட்டி காத்திருக்கும் அழகை படம் பிடித்திருக்கும் உங்கள் திறமை வேறூன்றி இருக்கு!எதிலும் ஒரு பிடிமானம் வேண்டும் எண்ணும் அபிமானம் அப்பட்டமாய் இந்த படத்தில் பளிச்சிடுகிறது. அங்கேயே உங்கள் திறமைப் பட்டம் பறக்கிறது.
காலத்தின் கோலத்தால் அலங்கோலமாய் பாவம் இந்த பாலம்! இதில் கவனமில்லாமல் போனால் பாழும் கினற்றில் விழுந்தது போல் நம் வாழ்கைவீழும்! நில், கவனி, செல்....
சாந்தம் சூழும்
காந்தம்
கஃபா
அன்பும் அமைதியும்
பண்பும் பயனும்
என்றும் சூழும்
குன்றாப் புகழ்
மதினா
----------------------------------------------
சாந்தம் சூழும்
காந்தம்
கஃபா
-----------------------
அப்பாடா! இதைவிட எப்படி நாலுவரியில் எழுதமுடியும்? இந்த கவிதை என்னை ஈர்த்ததும், காட்சி கண்ணீர் வரவழைத்ததும் தழும்பும் என் " நாவில்" வார்தை வராமல் பரவசம்! மதினாவின் காட்சியும் கவி அன்பரின் கவிதை சொல்லாட்சியும்.அல்ஹம்துலில்லாஹ்!
நான் படித்த ஹைக்கூவிலேயே சிறந்த ஹைக்கூ இதுதான்.
"சாந்தம் சூழும்
காந்தம்
கஃபா!-
(அதனால்தான் உலகின் பல அச்சியிலிருந்து வந்தவர்கள் ஒரே கோட்டுபாதையில் இதன் மையத்தை நோக்கி நடைபோடுகிறோம். இதன் மையத்தை சுற்றி மையத்தாக போவதற்குள் ஒருதடவையாவது சுற்றி வரனும் என ஏங்காத இஸ்லாமியர் உண்டா?)
படம் எடுத்ததுலேயும் அதற்கு தகுந்தாற்போல யோசித்து கமெண்ட் போடுவதிலேயும் தனித்திறமை இருக்கு போங்கோ காக்கா, அருமை
இந்த பேசும் படத்துக்கு கவிதை மழை பொழிந்த மற்றும் பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்
முதல் இரண்டு படங்கள் எடுத்து கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஆகி விட்டது
அன்பின் மகுடக் கவிஞர் க்ரவுனார்க்கு அஸ்ஸலாமு அலைக்கும்,
சொற்களின் சுந்தரன் - வார்த்தைகளின் வசீகரன் - அடுக்குமொழியி அலைவீசும் அதிரைத் தென்றல்- என்னைப் போல் ஒருவன் என்றெல்லாம் உங்களை எத்தனை முறையில் புகழ்ந்தாலும் என் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளும்! இன்று என் “ஹைக்கூ” விற்கான பாராட்டை இருமுறை நீங்கள் இப்பின்னூட்டப் பகுதியில் இட்டமை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி. உண்மையில் அனுபவித்து எழுதும் எவ்வரிகளும் ஈர்க்கும் என்பதே உண்மை! அவ்வகையில் கஃபா என்னும் காந்தம் என்னைப் பலமுறை கவர்ந்திழுத்துள்ளது; அல்ஹம்துலில்லாஹ்! ஜித்தா மற்றும் ய்ன்பஃ ஆகிய இடங்களில் பணியாற்றும் பேறு பெற்ற பொழுது, அல்லாஹ் அருளால் வாரந்தோறும் உம்ரா செய்யும் அருள் கிடைத்தது. அன்றும் இன்றும் என்றும் ஈர்த்துக் கொண்டே இருக்கும் கஃபா என்பதை உளம்நிறைவுடன் உணர்ந்து எழுதினேன்; அது “ஹிட்” ஆகிவிட்டது!
க்ஃபாவை இதயத்துக்கு அருகில் வைத்த போட்டோ.
Post a Comment