Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அருள்மறையாம் அல்-குர்-ஆன் அகிலத்தின் பொதுமறை... 13

அதிரைநிருபர் பதிப்பகம் | December 09, 2012 | , , , , ,



ஒப்பில்லா உயர்மறையாய் விளங்கும்அல் குர்ஆன்
.. உலகத்து மாந்தரினம் உய்க்கவேவந் தவேதம்
செப்பிவைத்தான் திருமறையில் சிறப்பாக அல்லாஹ்
.. செழுமைபெறும் நல்வழியாயல் சிறக்கவொரு  வேதம்
இப்புவிக்குப் போதுமென ஏற்றவர்கள் உரைப்பார்
.. இம்மகிழ்ச்சி உலகத்தில் வேறெங்கு முண்டோ?
அப்பழுக்கே இலாவாழ்க்கை அமைந்திடவே அறங்கள்
.. அளிக்கின்ற திருமறையும் உலகமாந்தர்ச்  சொத்து!

அறமுரைக்கும் திருமறையை அறபுமொழி  யிலிருந்(து)
.. அகிலமொழி யனைத்திலுமே மொழிபெயர்ப்புச் செய்து
சிறப்புறவே அதிலுள்ள கருத்துரைகள் உணர்ந்து
.. செய்கின்ற நம்வாழ்க்கை முறையொழுக்க நெறியாம்
திறன்வியந்து போற்றுகிறார் உலகப்பேர் அறிஞர்
.. திக்கெல்லாம் இறைபெருமை திகழவைக்கும் குர்ஆன்
மறந்துவிடா வண்ணம்சொல் லடுக்குகளாய்க் கோக்கும்
.. மனனத்தில் ஏற்றிவைக்கும் ஓசைநயம் ஈர்க்கும்

ஒன்றுபட்டச்  சமுதாயம் உருவாக வேண்டி
.. ஓரிறையை வழிபடவே ஓர்மறையைத் தந்தான்
நன்றுபலக் காட்டுகளாய் வரலாறும் பேசும்
.. நாமின்று  காணுகின்ற அறிவியலும் வீசும்
குன்றுகளை மேகத்தை ஒட்டகத்தைப் பார்த்துக்
.. கூரறிவுச் சீராக்கச் சொல்லுமிந்த வேதம்
இன்றுவரை இவ்வேதம்  அழியாமல் காக்கும்
.. இறைவனவன் வாக்குறுதி மெய்யாகக் காணீர்!

அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

13 Responses So Far:

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.
----------------------------------------------------
இன்றுவரை இவ்வேதம் அழியாமல் காக்கும்
.. இறைவனவன் வாக்குறுதி மெய்யாகக் காணீர்!
காலம் சென்றாலும் அழியாத கோலம் திருக்குரான் எழுத்தும் அதில்
இறைவன் சொன்ன வார்தைகளும்.
அஃதாலேயே அது இறைவேதம் , இறுதி வேதம்!
முறைதவரும் பலர் இயற்றிய நூல்களேல்லாம்!வெறும் பதரே!
குறை தீர்க்கும் அருள் மருந்து இது திருகுரான் மட்டுமே!
புரையோடி போன பழக்கவழக்கம் களையும்
அழுக்கு நீக்கி இதுவல்லவோ?
மானிடத்தாரின் மன அழுக்கும் நீக்கும் அற்புதம்தான் இந்த இறைவேதம்.
அல்லாஹ்வின் பொற்பாதம் வணங்கி வாழ்வோம்
--------------------------------------------------
நற்கவிதை எழுதி அல்லாஹ்வின் நன்மை பெற்ற கவிஅன்பருக்கு வாழ்த்துக்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வீட்டு லைப்ரரியில் இருக்கும் பேராசிரியர் இறையருட் கவிமணிகா.அப்துல் கஃபூர் அவர்களின் கவிதையை வாசிக்கும் உணர்வு ஏற்படுத்தியிருந்தது இதனை வாசிக்கும் போது !

ஜஸாக்கலாஹ் ஹைர் அபுல்கலாம் காக்கா !

Iqbal M. Salih said...

"The teachings of Islam can fail under no circumstances. With all our systems of culture and civilization, we can not go beyond Islam and, as a matter of fact, no human mind can go beyond the Qur'an."

-GOETHE, The supreme genius of modern German literature.

sabeer.abushahruk said...

எவ்வளவு புகழ்ந்தாலும் தகும்
இறைவேதம் புரிந்தாலோ சுகம்
எள்ளளவு வசனத்தின் உள்ளும்
ஏட்டளவு கொள்ளாத போதம்

கவியன்பன் கவிதைக்குள் நன்மை சம்பாதிக்கிறார். வாசித்தவர் வாயெல்லாம் வாழ்த்த ஜெயிக்கிறார்.

வாழ்க!

sabeer.abushahruk said...

பலமுறை சொல்ல நினைத்து மறந்துபோன விஷயத்தை இப்போதாவது சொல்லிவிடுகிறேன்.

புதுக்கவிதைகளையும் நவீனக் கவிதைகளையும் எழுதியும் வாசித்தும் சிலாகித்தும் வந்த இந்தத் தளத்தில், கவியன்பனின் வரவால் மரபு செழிக்கிறது, மொழி கொழிக்கிறது.

அதற்காக கவியன்பனுக்கு முதற்கண் நன்றி.

மரபுக் கவிதைகளை ஏற்று ரசிப்பதற்கு இத்தளத்தின் வாசகர்களின் உயர்ந்த ரசனையும் அதை விமரிசிக்கும் அளவுக்கு திறமையும் இருப்பது ஒத்துக்கொள்ள வேண்டிய ஒன்று.

காத்திருக்கிறோம். கலக்குங்கள் கவியன்பன்.

தவிர, உங்கள் கவிதைகள் எங்கெல்லாம் வெளியிடுகிறீர்களோ அங்கெல்லாம் சென்று வாசித்து விடுவேன். நேரமின்மையால் கருத்திட வாய்ப்பதில்லை.

வாழ்த்துகள்.

Shameed said...

//ஓசைநயம் ஈர்க்கும்//

ஓசையில் உள்ள நயத்தையும் நயம்பட சொன்ன விதம் அழகு

அதிரை சித்திக் said...

மனித சமூகம் நேர்வழி பெற

இறை தந்த வான்மறை பற்றி

கவியன்பன் காக்கா கவி பாடியது

மனதிற்கு மகிழ்வை தந்தது ..

abu hamnah said...

கலாம் காகா உங்கள் கவி வரிகளுக்கு நன்றி!
எத்தனை காலங்கள் வந்தாலும் சென்றாலும் என்றும் அழியா வார்த்தைகள் பதிந்த இந்த இறைவேதத்தை ஓதி அதற்கேற்ற தமிழாக்கம் அறிந்து அதன்படி நமது வாழ்க்கை நெறியை அமைத்து கொள்ளவேண்டும்.
இதுவே நம்மைப்படைத்த அல்லாஹுக்கு அளிக்கின்ற நன்றி காணிக்கையாகும்.

Yasir said...

கண்ணியத்திற்க்குரிய சத்தியவேததத்திற்க்கு சத்திய வார்த்தைகள் கொண்டு புகழ்ந்துரைத்து பெருமை தேடிக்கொண்ட கலாம் காக்காவிற்க்கு வாழ்த்துக்கள்..கவியன்பனின் கவிதைகள் செவியின்பமும் கொடுக்கவல்லது என்பதை லண்டன் வனொலி பறைச்சாற்றிக்கொண்டுள்ளது..வாழ்த்துக்களும் துவாக்களும்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இறைமறை பற்றிய இனிக்கும் கவிதை!

Unknown said...

Assalamu Alaikkum

MashaAllah,An amazing poem about ultimate Holy Book Al-Quran.

KALAM SHAICK ABDUL KADER said...

அன்புச் சகோதரர்கட்கு அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்களின் வாழ்த்துகளை எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்குப் புகழுரையாகச் சமர்ப்பிக்கிறேன்.

உங்களின் வாழ்த்துரைகளை என் அன்பு ஆசான் அதிரை அஹ்மத் காக்கா அவர்கட்குச் சமர்ப்பிக்கிறேன்.

உங்களின் வாழ்த்துரைகளுக்குக் காரணமாக்கிய அதிரை நிருபர் நெறியாளர், பங்களிப்பாளர்கள், வாசகர்கள் ஊட்டிய ஊட்டம் என்பதால் அவர்கட்கும் சமர்ப்பிக்கிறேன்.

முதல் வாழ்த்தைப் பதிந்த ,”சொற்களின் சுந்தரன்; வார்த்தைகளின் வசீகரன்;அடுக்குமொழி அலைவீசும் அதிரைத் தென்றல் மகுடக் கவிஞர் க்ரவுனார் அவர்கட்கு ஜஸாக்கல்லாஹ் கைரன் என்னும் துஆவுடன் நன்றி

அன்பு நெறியாளர் அபூ இப்றாஹிம்: அல்லாஹ் நாடினால், என் கவிதைத் தொகுப்பு நூலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள பேராசான் இறையருட் கவிமணி அவர்களின் நூற்களிலிருக்கும் உங்கள் அலமாரியில் இடம் பெறும் காலம் வரும் என்று கலாம் காத்திருக்கிறேன். வாழ்த்துக்கு நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்.

Dear Brother Iqbal bin Mohamed Saleh,

Thanks (jazakkallah khairan) for quoting GOETHE's statement regarding miracles of Al-Quran.

கவிவேந்தர் சபீர்:

ஆஸ்தானக் கவிஞரின் ஆதரவு இல்லை என்றால், எனக்கும் நீங்கள் இருக்கும் சபையில் ஓர் இடம் கிட்டியிருக்குமா? இத்தளத்தின் பங்களிப்பாளர்கள்-வாசகர்களை மரபுப்பாக்களை வாசிக்கவும்-நேசிக்கவும் வைத்த பங்கும் உழைப்பும் என் ஆசான் அதிரை அஹ்மத் காக்கா அவர்களையே சாரும். அவர்கள் இத்தளத்தில் “கவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை” என்ற தொடர் எழுதியிருக்காவிட்டால்; என்னிடம், “மரபைப் பற்றிக் கொண்டால், தமிழறிஞர்கள் மதிப்பார்கள்” என்று ஊக்கம் அளிக்காமலிருந்தால், சத்யமாக, நீங்கள் கூறும் மதிப்புரைச் சாத்தியமாகியிருக்காது.உங்களின் வாழ்த்துரைக்கு நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்
சுட்டும் விழிச் சுடர் ஷா.ஹமீத்:

ஓசை நயம் பற்றிய உணர்வுக்கு நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்

தமிழூற்று,அதிரை சித்திக்:

உங்களை என் கவிதை மகிழ்வித்தது என்பதும் என் கவிதைக்குக் கிட்டிய அன்பளிப்பாய்க் கருதுகிறேன்; நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்

அன்புச் சகோதரர் அபூ ஹம்மா:

உங்களின் அவ்விருப்பம் நிறைவேறும் அவாவினைத் தான் என் பா வடிவில் வடித்தேன்; நன்றி= ஜஸக்கல்லாஹ் கைரன்

கல்வியாளர் யாசிர்:

இலண்டன் தமிழ் வானொலியின் ஒலிபரப்பிய மரியாதைக்குரிய சகோதரி ஷைபா மலிக் (இலங்கையைச் சார்ந்தவர்கள்) அவர்கள் எனக்கு அனுப்பியத் தகவலின்படி, என் கவிதைகள் அங்கு (இலண்டன் தமிழ் வானொலியில்) அலசி ஆராயப்பட்டும் வருவதாகவும் என் மீது மிகுந்த மதிப்பை அவ்வானொலியின் நேயர்கள் வைத்திருப்பதாகவும் மின்மடல் மூலம் தகவல் அனுப்பி, அதனைச் சரிபார்த்துக் கொள்ள எனக்கு அதன் இணைப்பையும் அனுப்பினார்கள். அவர்களிடம் நான் சொன்னேன்:”என் கவிதைகளின் வரிகள் உங்களின் குரல் வழியாக வானலையில் மிதந்துத் தமிழர்களின் செவிகளில் தேனாய்ப் பாய்கின்றது; எனவே, நீங்கள் செய்யும் இப்பேருதவிக்கு நான் மிகவும் நன்றி கடன் பட்டுள்ளேன்” என்றேன். அவர்கள் பதிலளித்தார்கள்,” நாங்கள் கொழும்பில் கேள்விப்பட்டோம் அதிராம்பட்டினம் வாழ் முஸ்லிம்கள் ஆன்மீகம் மற்றும் தமிழ்-அறபு மொழிகளில் தேர்ச்சிப்பெற்றவர்கள் என்பதாக- அதனை நிரூபிக்கும் உங்கள் கவிதைகளை நான் வாசிப்பது என் பேறு” என்று.

அன்புச் சகோதரர்-கல்வியாளர் யாசிர்க்கு நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்

இலண்டன் இளங்கவி மு.செ.மு.ஜெஹபர் சாதிக்:
இனிமையான உங்கள் வாழ்ததுக்கு நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன

Dear Brothe B.Ahamed Ameen,

Jazaakkallaah khairan. We are eagerly waiting for your English poems.










இப்னு அப்துல் ரஜாக் said...


இறைமறை பற்றிய இனிக்கும் கவிதை!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு