அதிரைநிருபர் பதிப்பகத்தின் முதல் வெளியீடான "மனுநீதி மனிதகுலத்துக்கு நீதியா? என்ற நூல் நேற்று மாலை வெளியிடப்பட்டதை அறிவீர்கள்.
அழகிய மாலைப் பொழுதில் எளிமையாக நடந்த அந்த நிகழ்வின் காணொளித் தொகுப்பினை இங்கே பதிவதில் மகிழ்வடைகிறோம் !
நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு வருகைதந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும், கருத்தாடல்கள் வழியாக வாழ்த்துரையும் துஆவும் வழங்கிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அதிரைநிருபர் பதிப்பகம் இனிவரும் காலங்களில் அடுத்தடுத்த புத்தங்களை வெளியிட ஆயத்தமாகிறது அந்த வரிசையில், ஏற்கனவே சகோதரர் S.அலாவுதீன் அவர்களால் எழுதி தொடராக வெளிவந்து அனைவரின் பெரும் பாராட்டைப் பெற்ற 'கடன் வாங்கலாம் வாங்க'
அடுத்து சகோதரர் ஜாஹிர் ஹுசைன் அவர்களால் எழுதி தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் உறங்கும் உணர்க்வுகளைத் தட்டி எழுப்பும் 'படிக்கட்டுகள்' தொடர்.
மேலும் அதிரை நிருபரின் ஆஸ்தான கவி சபீர் அபுஷாருக் அவர்கள் எழுதி அதிரை நிருபரில் வெளிவந்த கவிதைத் தொகுப்பு.
விரைவில் நூல் வடிவம் பெற இருக்கிறது இன்ஷா அல்லாஹ் !
நேற்றைய நூல் வெளியீட்டு நிகழ்வின் புகைப்படங்கள் மேலும் இதோ உஙகளின் பார்வைக்கு.
அதிரைநிருபர் பதிப்பகம்
24 Responses So Far:
பதிவுகளை முந்தி தருவதில் அதிரை நிருபர் ஒரு அதிவேக எக்ஸ்பிரஸ்
அ.நி-யின் முதல் குழந்தை அநியாயத்தை தட்டிக்கேட்கும் குழந்தையாக பிறந்திருப்பது மிகவும் சந்தோஷமே....கவிக்காக்கா/சகோ.அலாவூதீன்/ஜாஹிர் காக்கா அவர்களின் தனித்தன்மை வாய்ந்த தொடர்களும் புத்தமாக வெளிவந்து மக்களுக்கு வழிகாட்ட எல்லா வல்ல அல்லாஹ் அருள வேண்டும்
அஸ்ஸலாமு அலைக்கும் வாழ்த்துகள்!!!! வாழ்த்துகள் !!!!! வாழ்த்துகள்!!!!!!!!!!!!!!!!!!!!!
பதிவுக்கு நன்றி, நல்லதொரு தொடக்கமாக அமையட்டும். இத்தகைய திறமையும் வாய்ப்பும் நம் அனைவருக்கும் வல்ல ரஹ்மான் வழங்க வேண்டி தூஆ செய்வோம்,,,,,,வாழ்த்துகளுடன்
---------------------
இம்ரான்.M.யூஸுப்
வெளிநாட்டில் வாழும் சகோதரர்கள் தங்களால் இயன்ற பிரதிகளை வாங்கி அதிரையில் வாழும் மாற்று மத சகோதரர்களுக்கு இலவசமாய் வழங்கலாம்.நீதியை நிலைநாட்டும் மார்க்கத்தை வாழ்க்கை நெறியாய் ஏற்றுக்கொண்ட நாம் அனைவரும் செய்ய வேண்டிய விஷயம்.அதிரை நிருபர் பதிப்பகம் இதன் நூல் விலையை தெரிவித்தால் நான் பங்களிப்பு செய்ய தயாராகவுள்ளேன்.பதிப்பகத்தார் விநியோகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டால் நலம்
------------------------
இம்ரான்.M.யூஸுப்
imran2mik@gmail.com
அன்புச் சகோதரர் இம்ரான் கரீம்:
இன்னும் ஒருவாரத்தில் தேவையான விபரங்களை பகிர்ந்து கொள்கிறோம் இன்ஷா அல்லாஹ் !
மேலதிக விபரங்களுக்கு நெறியாளரின் மின்னஞ்சலுக்கு தனிமடலில் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம் இன்ஷா அல்லாஹ் !
அல்ஹம்துலில்லாஹ்! வரவேற்புரை முதல் நன்றியுரை வரை அத்தனையும் மிகவும் அருமையாகக் கேட்பதற்கு இதமாக அமைந்தன. என் கவிதையை என் ஆசான் அவ்ர்களின் குரலில் கேட்க எனக்குள் ஓர் ஆனந்தம்; ஜஸாக்கல்லாஹ் கைரன் ஆசான் அவர்களே!
அடுத்த வெளியீடாக, மார்க்கப் போதகர் அன்பர் அலாவுதீன் அவர்களின் சகோதரியை வெளியிட்டு நம் பெண்கள் கைகளில் போய்ச் சேரும் வண்ணம் விரைவாகச் செயல்படுத்த வேண்டுகிறேன். காரணம், இன்றுள்ள பெண்கள்-மாணவிகளாய் அதிகம் இருப்பதால் அவர்களிடம் “சகோதரியே” என்னும் தொடர் நூலுருவில் போய்ச் சேர வேண்டும்.
அன்பு நெறியாளர் அபூ இப்றாஹிம்: அஸ்ஸலாமு அலைக்கும்,
ஒரு நூலின் விலை யு.ஏ.இ.திர்ஹம் எவ்வளவு? இன்ஷா அல்லாஹ் உங்களின் மறுமொழிக் கிட்டியதும், எனக்கு எத்தனை பிரதிகள் தேவை என்று அறிவிக்கின்றேன்; அன்பின் ஜெமீல் காக்கா அவர்கள் சொன்னதை நிறைவேற்றச் சூளுரைத்துள்ளேன்; அதன்படி, என்னுடன் தொடர்பில் இருக்கும் தமிழ்ச்சங்கங்கள், சங்கமம் தொலைக்காட்சி உறுப்பினர்கள்-பங்களிப்பாளர்கள் மற்றும் அனைத்து (மாற்றுமத) நண்பர்கட்கும் விநியோகிப்பேன்.
அன்சாரி காக்காவின் கை வண்ணத்தில்
இன்னும் பல நூற்கள் வெளியாக வேண்டும்
வாழ்த்துக்கள் காக்கா ..
எளிமையான எழிலான நிகழ்வு !
கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியுடன் கூடிய துஆவும் இன்ஷா அல்லாஹ் !
அருமை அருமை/
வாழ்க வாழ்க
(ஜமீல் காக்காவின் பேச்சு ஹைலைட் என்று நான் சொல்லவில்லை)
அருமையான ஆக்கம் மாஷா அல்லாஹ் அன்சாரிகாக்க வாழ்த்துக்கள்!!! இன்னும் பல நூற்கள் வெளியாக வேண்டும்
மாஷா அல்லாஹ்!
ஒளிப்பதிவு அருமை.
தம்பி தாஜுத்தீன் அவர்களே, அடுத்தமுறை
ஒலிப்பதிவிலும் சற்று கவனம் செலுத்தவும்.
கரகரப்பில் சில இடங்களில் பேசுவது சரியாக கேட்க இயலவில்லை!
இதன்மூலம் நிறைய மனிதர்கள் நேர்வழிபெற நாம் துஆச் செய்வோம் இன்ஷா அல்லாஹ்!
Pearl on the crown!!!
மகிழ்ச்சியான ஒலி ,ஒளி!
இது மாதிரி நிகழ்வுகள் அடிக்கடி தொடரட்டும் இன்சா அல்லாஹ்.
அஸ்ஸலாமு அலைக்கும்!
காலதிர்க்கு எற்ற மிக அருமையான ஆக்கம் மாஷா அல்லாஹ், மேலும் இந்திய வரலாற்று நிகழ்வுகலை மிக எழிதாக விலக்கிய என் மரியாதைகுரிய மாமா ஜெமீல் அவர்களுக்கும் அன்பு நெறியாளர் இப்றாஹிம் அன்சாரி காக்கா மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு வருகைதந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றியுடன் கூடிய துஆவும் வாழ்த்துக்கள்ளும் இன்ஷா அல்லாஹ்!
வாழ்த்திய இன்னும் வாழ்த்துகின்ற நல்ல உள்ளங்களுக்கு நன்றி.
இந்த நிகழ்ச்சி நடை பெற்றுக் கொண்டிருந்த வேளையில் எங்க உள்ளங்களில் இருந்த ஒரு ஏக்கத்தைப் பகிர்வதற்கு விரும்புகிறேன். அச்சிலிருந்து நூல்கள் வந்து சேர்வதற்கு ஏற்பட்ட தாமதத்தால் நிகழ்ச்சி நடைபெறும் நாளை முன் கூட்டியே குறிக்க இயலவில்லை. நிகழ்ச்சி நடைபெற்ற தேதிக்கு அண்மையான நாள் வரை எங்களுடன் ஊரில் இருந்த தம்பி நூர் முகமது அவர்கள், ஒரு ஐந்து தினங்களுக்கு முன்புதான் சவூதிக்குப் புறப்பட்டுச்சென்றார்கள். நிகழ்ச்சி நடைபெற்ற அன்று நூர் முகமது எங்களுடன் இல்லையே என்ற கவலை எனக்கு அதிகமாக உணர்ந்தேன். இதன் மூலம் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க ஆள் இல்லாமல் விடப்பட்டது. ஆனாலும் அன்றைய தினம் ஐந்து அல்லது ஆறு முறைகள் அலைபேசியில் அழைத்து நிகழ்வுகளை விசாரித்து அறிந்து கொண்ட அவர்களின் அக்கறை, என்னை வியப்படைய வைத்தது.
அதே போல் தம்பி நெய்னா அவர்களையும் இந்த நிகழ்ச்சியில் நாங்கள் பெற்று இருந்தால் மிகவும் மகிழ்ந்து இருப்போம்.
தம்பி கிரவுன் அவர்கள் நிகழ்ச்சிக்கு முன் தினம் எழுபது நிமிடங்களும், நேற்று தொன்னூற்றி இரண்டு நிமிடங்களும் அலைபேசியில் பேசி நிகழ்வுகளைக் கேட்டறிந்த பண்புக்கும் அன்புக்கும் பெரிதும் கடமைப் பட்டு இருக்கிறோம்.
நிகழ்ச்சி நிறைவுற்ற இரவு கவியன்பன் அவர்கள் அலைபேசியில் அழைத்துப் பேசியது அவரின் அன்பை வெளிப்படுத்தியது.
இந்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் அவர்கள் அதிரை நிருபர் பதிப்பகத்தின் மேல காட்டும் கரிசனத்துக்கும் மிக்க நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும்.
மாஷா அல்லாஹ்.முத்த சகோ: இ.அ காக்கா அவர்கள் தீட்டிய மனு நீதி மனித குலத்துக்கு நீதியா? சித்திரம் இறைவனின் நாட்டத்தால் 09.12.12.அன்று மாலை பொழுதில் அறிஞர்கள் , கல்வியாளர்கள்,சட்ட வல்லுனர்கள் முன்னிலையில் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். நூல் ஆசிரியர் அவர்களுக்கு அல்லாஹ் பூரண சுகத்தை கொடுத்து இன்னும் பல நூல்களை எழுதுவதற்கு அருள் புரிவானாக! ஆமீன்.
சகோ: ஜமீல் காக்கா அவர்கள் சொன்னது போல். கடிதத்தை எழுதி கவருக்குள் வைத்து அட்ரஸ் எழுதாமல் வைத்து விடாமல். அருமையான சித்தரத்தை சீர்தூக்கி பார்த்த அனைவரும் சரியான முகவரியை எழுதி கொண்டு சேர்ப்பது நம் மீது கடமை.
அனைவரும் உறுதி கொள்வோமாக.
அன்சாரி காக்காவின் கை வண்ணத்தில்
இன்னும் பல நூற்கள் வெளியாக வேண்டும்
வாழ்த்துக்கள் காக்கா ..
அஸ்ஸலாமு அலைக்கும்.
மாஷா அல்லாஹ்.சகோதரர். இப்ராஹீம் அன்சாரி காக்கா அவர்கள் எழுதி அதிரை நிருபர் பதிப்பகம் மூலம் வெளிவந்த மனு நீதி மனித குலத்துக்கு நீதியா? வெளியிடப்பட்டது 09.12.12.அன்று மாலை பொழுதில் அறிஞர்கள் , கல்வியாளர்கள்,சட்ட வல்லுனர்கள் முன்னிலையில் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
நூல் ஆசிரியர் அவர்களுக்கு அல்லாஹ் பூரண சுகத்தை கொடுத்து இன்னும் பல நூல்களை எழுதுவதற்கு அருள் புரிவானாக! ஆமீன்.
\\அடுத்து சகோதரர் ஜாஹிர் ஹுசைன் அவர்களால் எழுதி தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் உறங்கும் உணர்க்வுகளைத் தட்டி எழுப்பும் 'படிக்கட்டுகள்' தொடர்.
மேலும் அதிரை நிருபரின் ஆஸ்தான கவி சபீர் அபுஷாருக் அவர்கள் எழுதி அதிரை நிருபரில் வெளிவந்த கவிதைத் தொகுப்பு.//
ஆவலுடன் விரைவில் வெளியிட எதிர்பார்க்கிறோம் இன்ஷா அல்லாஹ்
மனித மனம் நரகித்த புத்திபேதலித்த மூடர்கள், சாதியும் மதமும் ஒரு மனிதனை மூடனாக வைத்திருக்கும் வரை இது போன்ற நரவாடை பிடித்த மனிதர்கள் நம்மிடையே உலவிக் கொண்டுதான் இருப்பார்கள்.. இதை ஞாயப்படுத்தவும் சில நரம் புரையோடுப்போன பதர்கள் வேறு இவர்களுக்கு துணையாக...
ஆசாமில்
ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக
போராடிய லக்ஷ்மி ஓரான் என்கிற
பெண்ணை அம்மணமாக்கி
அடித்து உதைத்து
விரட்டி அடித்தனர் சாதி வெறியர்கள்..!!"
"அடித்து உதைத்து"
இது வெறும் வார்த்தை அல்ல
"வலி" ..!!
அஸ்ஸலாமு அலைக்கும் ....
உங்கள் அதிரை நிருபர் தளத்தின் வாயிலாக தாங்கள் எழுதிய "மனுநீதி மனித குலத்துக்கு நீதியா?" நூலை வெளியிட்ட செய்தி மகிழ்வைத் தருகின்ற செய்தி. மனிதனுக்கு ஆடை மானம்...மானத்தை அவமதிக்கும் சட்டங்களை , போதனைகளை கடவுளின் பெயரால் கற்பித்து மனிதத்தை , அதன் புனிதத்தை அம்மணமாக்கி அவமானப் படுத்தும் அவலத்தை உங்கள் எழுதுகோல் குத்திக் கிழித்து மனித நீதிக்காக போராட்டம் நடத்தி இருக்கிறது..
வீரமும் விவேகமும் விளைந்த உங்கள் முயற்சிக்கு அறிவும் ஆற்றலும் உள்ள அதிராம்பட்டினம் அழகிய முறையில் ஆக்கமும் ஊக்கமும் தந்து வரலாற்றில் ஒரு கல்வெட்டை செதுக்கி இருக்கிறது....
வீரனின் வாள்முனையை விட
அறிஞனின் பேனா முனை வலிமை மிக்கது ...
என்பதை உங்கள் எழுத்தால் நிரூபித்துக் காட்டி இருக்கிறீர்கள்....
உங்கள் எழுத்துக்களின் அணிவகுப்பு தமிழக ராஜபாட்டைகளில் கம்பீரமாய் பவனி வரட்டும் ...
தீமைகள் தீய்ந்து போகட்டும்...
நன்மைகள் பூக்கும் பூங்காவனமாக தமிழுலகம் மலரட்டும்!
உங்களுக்கும் உங்கள் அருமை நண்பர்களுக்கும் உங்கள் ஊருக்கும் என் வாழ்த்துக்கள்....
அன்புடன்...அபூஹாஷிமா
Wishes and Congrats to the team..
Post a Comment