Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படிக்கட்டுகள்... ஏற்றம் - 24 [நிறைவு] 39

ZAKIR HUSSAIN | December 23, 2012 | , , ,

எப்படி இருக்க வேண்டும் உங்கள் வாழ்க்கை என்று உங்கள் மனது சொல்கிறதோ அப்படி இருக்க எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் ஒரு தியானம், ஒரு ட்ரான்க்வைல் நிலை. எப்போது உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையோ உங்களை யாராலும் மீட்டு வர முடியாது. அது ஏறக்குறைய ஒரு புதை மணலுக்கு சமம்.

நாம் செலவழிக்கும் நேரம் எதுவும் நமக்கு புதிதாக வருமான உயர்வைத் தராது என்ற எண்னம் எப்போது வருகிறதோ அப்போதே நீங்கள் முன்னேர சிந்திக்கிறீர்கள் என்று சத்தியமாய் சொல்ல முடியும். எப்போது நம் உழைப்பு அனைத்தும் நமக்கு வருமானமாக மாறும். அது சொந்த தொழிலில் மட்டும் தான்.


சொந்த தொழிலுக்கு சொந்தக்காரர்களின் உதவி , நண்பர்கள் உதவி, அறிவு. இதிலெல்லாம் கவனம் செலுத்துவதை விட நீங்கள் முடிவு எடுத்து விட்டீர்களா?.... தீர்க்கமாக,  என்று மட்டும் கவனம் செலுத்தினால் போதும். முடிவு தீர்க்கமில்லை என்றால் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் சொதப்பலாம்.  ஒரு கிளி,  கூண்டுக்குள் இருந்து தனக்கு சுதந்திரம் எப்போது கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டிருக்கும். கூண்டை திறந்து விட்டால் பறந்து போகும் கிளி வெளியில் என்ன கொடுமை நடந்தாலும் திரும்பி  கூண்டுக்குள் போய் பாதுகாப்பாக இருக்கலாமே என்று ஒருபோதும் யோசிப்பதில்லை. ஆனால் மனிதன் தான் வெளியில் ஏவப்படும் சவால்களை கண்டு மீண்டும் கூண்டுக்குள் போய் விடலாமா என்று நினைக்கும் பிறவி. ஆனால் யார் தனது சுகங்களை தியாகம் செய்து விட்டு கொஞ்சம் நாள் கஷ்டப்பட்டாலும் நாம் நன்றாக வருவோம் என்று நினைக்கிறார்களோ அவர்கள் மட்டுமே சவால்களை சமாளிக்கும் குணம் கொண்டவர்கள். If you burn your bridge…and there is NO WAY to return back….YOU WILL FIGHT & WIN THE BATTLE.

இறைவனின் கருணை மிகப்பெரியது, உங்கள் பிரச்சினைகளையும் , கஷ்டங்களையும் நினைத்து கவலைப்படும் நீங்கள் எப்போதாவது அந்த இறைவன் படைத்த உலகத்தின் விசாலம் கண்டு வியந்து இருக்கிறீர்களா?.

சொந்த தொழில் செய்ய எந்த தொழில் நல்லது என்று ஒன்றும் கிடையாது. எதையும் உருவாக்கலாம். எனக்கு தெரிந்து ஒருவர் ஏதாவது செய்ய வேண்டும் என்று கம்போடியா, லாவோஸ் போன்ற அதிகம் முன்னேராத நாட்டுக்கு சென்றவர் அங்கு அதிகம் பெண்கள் பதின்ம வயதில் இருப்பதையும் அவர்களுக்கு மேக்-அப் பொருட்கள், அலங்காரப்பொருட்கள் கிடைக்காமல் இருப்பதை கவனித்த அவர் ஒவ்வொரு கடையாக சென்று ஆர்டர் எடுத்து பிறகு இங்கு மலேசியா வந்து அது போன்ற பொருட்களை எடுத்து சென்று அங்கு விற்பனை செய்து நல்ல நிலையில் இருக்கிறார்.
 
இன்னொருவர் தொழிற்சாலைகளை பார்வையிட்டு அதில் எவ்விதமான மெசினை பயன்படுத்தினால் லாபம் கிடைக்கும் என்று எடுத்துச் சொல்லி அந்த தொழிற்சாலைக்கு தேவையான மெசினரியை ஜெர்மனி , கொரியா போன்ற நாடுகளில் வாங்கி கொடுத்து நல்ல நிலையில் சம்பாதித்து வாழ்கிறார்.

6 மாதத்துக்கு முன் ஒருவரை சந்தித்தேன். சின்ன மினிமார்க்கெட் ஆரம்பித்து அதை ஏன் இந்த நாடு முழுவதும் அதே கான்செப்ட்டில் செய்யக்கூடாது என நினைத்த ஒருவர் இதுவரை அதுபோல் ஆரம்பித்த கடைகள் இப்போது 100 ஐ நெருங்குகிறது. இதில் ஒன்றும் அப்படி ஆச்சர்யமில்லை என்று நினைப்பவர்களுக்கு, அவருக்கு இரண்டு கால்களும் செயல்படாது... சக்கர நாற்காலியில் இருந்து கொண்டே இவ்வளவு பெரிய சாதனை. ஒரு முறை நீங்கள் உட்கார்ந்திருக்கும் நாற்காலியை பார்த்த பிறகு அடுத்த வரியை படிக்கவும்.

Art Of Leverage 

உங்களுக்கு கிடைத்த 24 மணி நேரத்துக்குள்தான் நீங்கள் உழைக்க முடியும்... இருப்பினும் உங்கள் உழைப்பின் நேரத்தை எப்படி அதிகப்படுத்த முடியும்.??

உங்கள் வேலையை மற்றவர்கள் செய்தால் உங்களின் வேலைப்பலு குறையும்.ஆனால் நீங்கள் இருக்குமிடத்தில் இல்லாவிட்டால் எவனும் உங்கள் சொல் கேட்க மாட்டான். ஒரே பொசிசன் முதலாளி தான்.  சரியான முறையில் உங்களின் வேலையை பகிர்ந்தளிப்பதன் மூலம் உங்களுக்கான வருமானத்தை இன்னொருவரின் உழைப்பிலும் பெற முடியும். இது கம்யூனிஸ்ட் திட்டும் சுரண்டல் அல்ல. மற்றவர்கள் உழைக்கும்போது அவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் உங்களுக்கும் ஒரு பகுதி கிடைப்பதுதான் அது. இது ஏஜென்சி முறையில், மெர்ஜர் முறையில், ஃப்ரான்சைஸ் முறையில் சாத்தியம். அதுவெல்லாம் இங்கு சாத்தியமில்லை, ஆனால் நான் முன்னேர வேண்டும் , தொழிலை வளர்க்கவேன்டும் என்று என்று உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தால் கடைசியில் ஊரில் கிளி கூட வளர்க்க முடியாது.

நீங்கள் சார்ந்த தொழிலில் / வேலையில் மிக ஆர்வமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு கீழ் உள்ளவர்களும் ஆர்வத்துடன் செயல்பட முடியும். நீங்கள் நினைத்தால், நீங்கள் தொழில் செய்யும் இடத்துக்கு வருவது, பிறகு ஊர் சமாச்சாரங்களில் தலையிட்டு தீர்க்கும் தீர்க்க தரிசி வேசம் போட்டால் உங்களிடம் வேலை செய்பவர்களும் தனது ரோல் என்ன என்று தயாராகி  விடுவார்கள் நடிப்பதற்கு.

உங்களுடைய சந்தர்ப்ப சூழலை குறை சொல்வதை நிறுத்தி விட்டு சந்தர்ப்ப சூழலை உருவாக்க கற்றுக் கொள்ளுங்கள்.

கால ஓட்டத்தில் உங்கள் நிலை உயர வேண்டும். ஒரு நிலையில் நீங்கள் இல்லாமலும் உங்களுக்கு வருமானம் வரவேண்டும். நீங்கள் போய் உட்கார்ந்தால்தான் அந்த வியாபாரம் நடக்கும் என்று 20 / 25 வருடம் கழித்து நீங்கள் சொன்னால் அதில் பெருமை இல்லை. நீங்கள் சொல்லும் அந்த நிலை ஒரு டார்ச்சர், அல்லது நீங்கள் உருவாக்கிய சாபக்கேடு. அது நிச்சயம் உங்களுக்கு வரம் அல்ல.

உலகம் எதை நோக்கி நகர்கிறது என்ற தகவல் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். ஒரு தொழிலை ஆரம்பிக்கும் முன் யோசித்து , திட்டமிட்டு, செயல்பட வேண்டும். சிலர் செயல்பட்ட பிறகு யோசித்துக் கொண்டிருப்பதற்கு காரணம் வரிசை தவறி செயல்படுவதுதான்.
 
எனவே தோல்வியும் வெற்றியும் உங்களுக்குள்தான் இருக்கிறது." தோல்வி"யும் 'வெற்றி"தான் அதை வெற்றிபெற பயன்படுத்தும்போது.

நீங்கள் நீங்களாகவே இருக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களை இறைவன் எந்தக்குறையையும் வைத்து படைக்கவில்லை. நீங்கள் நினைக்கும் குறைகள் அனைத்தும் நீங்களே படைத்துக்கொண்டது.

ஒரு வெற்றியாளனுக்கும் , தோல்வியடைந்தவனுக்கும் உள்ள வித்தியாசம் அவர்களது அறிவிலோ, இனத்திலோ, கல்வியிலோ இல்லை. கடைசிவரை வெற்றியடைய வேண்டும் என்ற மன உறுதிதான் அந்த வித்தியாசம்.

என் நினைவில் உதித்தவை:
  • உங்கள் இமேஜை வீணடிக்க வேண்டுமென்றால் உங்கள் சொல்கேட்காதவர்களுக்கு அறிவுரை சொல்லுங்கள். இமேஜ் காலியாவது கியாரன்டி.
  • பணம் சம்பந்தமான அறிவுரைகளை உங்களைவிட வசதியில் உயர்ந்தவர்களுக்கு சொல்வதை தவிர்த்து விடுங்கள்.
  • அதிகம் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்த்தால் வரும் ஏமாற்றத்தை தாங்கிகொள்ள தயார் என்றால் பரவாயில்லை.
  • உங்கள் காலம் மட்டும்தான் வசந்தம் என்று உங்கள் மனைவியிடம் சொல்லலாம், பிள்ளைகளிடமும் சொல்லிக்கொண்டு அதற்கு முக்கியத்துவம் இருக்கும் என்று நம்பிக்கொண்டிருக்காதீர்கள்.
  • தர்மம் தலைகாக்கும்.
  • உங்களின் சூழ்நிலை சரியில்லை என்றால் இறைவன் உங்களுக்கு அதன் மூலம் ஏதோ கற்றுத்தருகிறான்.
  • சபை நாகரீகம் தெரியாதவனிடம் நட்புடன் இருக்காதீர்கள். அவன் ஒரு நாள் குலநாசம் செய்யத் தயங்கமாட்டான். 
  • மனிதர்களை மதம் / இனம் / மொழி போன்ற ஸ்கேனர் இல்லாமல் நெருங்க தெரிந்து கொள்ளுங்கள்
  • சம்பாதிப்பதில் மார்தட்டிப்பேச ஒன்றும் இல்லை, நீங்கள் எவ்வளவு சேமித்து வைத்து இருக்கிறீர்கள் என்பதில் கவனம் தேவை.
  • ஒரு துறையில் முன்னேர அதற்கு சம்பந்தமில்லாதவர்களிடம் போய் அறிவுரை கேட்காதீர்கள். [ பொதுவாக கேட்கலாம் இல்லையா? என்ற கேள்வி வரும். ரிசல்ட்டும் பொதுவாக இருக்கும் பரவாயில்லையா?]
  • விமர்சனங்களுக்கு பயப்படலாம்... விமர்சிப்பவர்களைப் பற்றிய பயம் தேவையற்றது. 
  • நம் பிவியின் முக்கிய அம்சங்களில் ஒன்று நம்மை சார்ந்தவர்களுக்கு பிரயோசனமாக இருப்பது.
  • பெருமானார் நபி முஹம்மது [ஸல்] அவர்களைத் தவிற யாரும் பின்பற்றக் கூடிய தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது. [இதை நான் முஸ்லீமாக இருப்பதற்காக எழுதவில்லை]
  • வாழ்க்கையில் உறவுகளுடன் அன்பு இருக்க வேண்டும், ஆனால் அதுவே உங்களை செயல்பட தடுக்கும் தடைக்கல்லாக நீங்கள் மாற்றி விடக்கூடாது. வாழ்க்கையே ஒரு தாமரை இலை மாதிரி... தண்ணீரில் நனையாது-தண்ணீரில்தான் இருக்கும்.
  • இறைவனின் வழிகாட்டுதலும், பாதுகாப்பும் எப்போதும் உங்களுக்கு இருக்கும்வரை வெற்றி என்றென்றும் நிச்சயம். அதற்கு உங்களின் ஈடுபாடு மிக முக்கியம்.
                                                                       [ நிறைவடைந்தது ]
ZAKIR HUSSAIN
…………………………………………………………………………………
இதுவரை பொறுமையுடன் படித்து வந்த அனைவருக்கும் நன்றி. படிக்கட்டுகள் எழுதும்போது ஏற்பட்ட அனுபவங்களை “Making Of படிக்கட்டுகள்  என்று எழுதலாம் என்று இருக்கிறேன்.


39 Responses So Far:

Abdul Razik said...

Could I know Brother Zakir Hussain’s existing circumstances? Is it an employing or own profession? Whatever it is, I hope you will run it in prompt manner. Your article ended with a cute advice for Entrepreneurs and employees. Expect eagerly your represent article “Making of Phases”.

Abdul Razik
Dubai

Yasir said...

எனக்கு உத்வேகத்தையும்,வழிகாட்டுதலையும்,பெரிய பெரிய பாலிஸி மாற்றங்களைங்களையும் வாழ்க்கையிலும் / வாணிபத்திலும் ஏற்படுத்த உற்சாகமூட்டிய தொடர் இன்னும் பல நன்மைகளையும் இலவசமாக அள்ளித்தந்த தொடர்..நிச்சயமாக என் துவாவில் நீங்கள் நிறையவே உண்டு..புத்தகவடிவில் வந்து பலருக்கும் புத்துணர்ச்சியையும்,புதிய சிந்தனைகளையும் பரப்ப எல்லா வல்லாஹ் நாயனை வேண்டுகின்றேன்

sabeer.abushahruk said...

மாஷா அல்லாஹ்!

அருமை... அருமை!

கட்டுரை முழுவதிலும் உன் கை கொடுத்துத் தூக்கிவிடும் முயற்சி தெரிந்தாலும் உச்சகட்டமாக நீ படீர் படீரென வெடித்திருக்கும் பஞ்ச்கள் ஒவ்வொன்றும் தோல்விக்கான காரணங்களின் முகத்தில் விட்ட குத்துகள்.

பழம் மட்டும் தந்து நிற்காமல் உரித்து வாயில் ஊட்டியும் விட்டுவிட்டாய். அதை உட்கொள்வோம்; உருப்படுவோம்!

முன்னேற்றத்திற்கான வழிகாட்டித்தந்த உனக்கு அல்லாஹ் ஆரோக்கியத்தையும் எல்லா நலன்களையும் நல்க என் து ஆ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

முன்னேற்றத்திற்கான வழிகாட்டித்தந்த உங்களுக்கு அல்லாஹ் ஆரோக்கியத்தையும் எல்லா நலன்களையும் நல்க எங்கள் து ஆ என்றும் இன்ஷா அல்லாஹ்!

நிற்க !

மீதம் (அதிரைநிருபர் பதிப்பகத்தின்) பதிப்புரையில் விரிவாக சொல்கிறேன் இன்ஷா அல்லாஹ் ! :)

Iqbal M. Salih said...


"உன் நினைவில் உதித்தது" என்பது அனுபவ மழையால் விளைந்த "அருமையான பழம்!"

பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய "வைர வரிகள்!"

அதிரை சித்திக் said...

தொடராய் படித்ததை
முழுமை பெற்ற புத்தகமாக
படிக்கச் ஆசை ..அதிரை நிருபர்
வழிவகை செய்யுமா ..?
வாழ்த்துக்கள் சகோ ஜாகிர் ஹுசைன் காக்கா

ZAEISA said...

படிக்கட்டுகள் புத்தகம் 9,10,வகுப்புகளில் படித்துவரும் இளைய தலைமுறையினருக்கு ஒரு துணைப் பாடமாக வைத்தால்.........
நிச்சயம்...அவர்களின் வாழ்வில் தோல்வி என்பதே இருக்காது.
24 தொடரில் பதித்த வைரமானதாக திகழ்கிறது நிறைவாக வந்த
"பன்ச்"கள்..........ஜசக்கல்லாஹ்..

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

எனக்கும் உத்வேகத்தையும்,வழிகாட்டுதலையும் ஏற்படுத்தி உற்சாகமூட்டிய தொடர்.
வழி தந்த உங்களுக்கு அல்லாஹ் ஆரோக்கியத்தையும் எல்லா நலன்களையும் நல்க எங்கள் துஆ என்றும் இன்ஷா அல்லாஹ்!
அடுத்து படிக்கட்டுகளின் அனுபவத்தையும் சீக்கினம் சொல்ல வாங்க!

Shameed said...

//இதுவரை பொறுமையுடன் படித்து வந்த அனைவருக்கும் நன்றி. //

இதை நான் பொறுமையுடன் படிக்கவில்லை
இதை நான் பெருமையுடன் படித்தேன் என்பதுதான் உண்மை

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

படிக்கட்டுகள் உச்சிவரை எங்களை மகிச்சியிடனும் ஆர்வத்துடனும் அழைத்து சென்று பின்பு நிறைவு என்று அறிவித்துள்ளீர் அல்ஹம்துலில்லாஹ்

நல்ல படிக்கட்டுகளை கா/கட்டித்தந்த உங்களுக்கு அல்லாஹ் ஆரோக்கியத்தையும் எல்லா நலன்களையும் உங்களுக்கு தந்தருள்வானாக ஆமீன்...

அற்புதம் தங்களின் படிகட்டுகள் தொடர் ஒவ்வொரு பதிவிலும் பல அனுபவங்களை பகிர்ந்து அனைவருக்கும் பயனளித்தீர் என்பது மறுக்க முடியாத உண்மை இன்னும் பல தொடர் பதிவின் மூலம் தாங்கள் அறிந்த இன்னும் பல தகவல்களை மேலும் எங்களுக்கு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் ...


ஜசக்கல்லாஹ் ஹைர்



sabeer.abushahruk said...

படிக்கட்டுகளுக்கு நன்றி

முதற்படி முதல்
முழுப்படிகளும்
நீ 
உயர்த்திச் சென்றவர்களில்
நானும் ஒருவன்

படிதோறும் படிப்பினைகள்
படித்தோரும் வியக்கும்
பாடங்கள்

இச்சையில் சீரழியும் 
மனிதர்களுக்கு
நீ
சொன்ன போதனைகள்
கசப்பு மருந்து
உன் எழுத்து நடையால்
தேனில் குழைத்தாய்
மன நோய் அழித்தாய்

இருபத்திநாலே படிகள்தான்
எனினும்
மன எழுச்சியோ 
இமயமலை உயரம்

நன்றி நண்பா
உன் படிக்கட்டுகளுக்கு.

Yasir said...

//படிக்கட்டுகளுக்கு நன்றி// கவிக்காக்கா என் மனதை எப்படி நீங்கள் படிக்கின்றீர்கள்...நான் வேண்டுகோள் விடுக்க நினைத்தேன் (ஆனாலும் அடக்கிக்கொண்டேன்) இதைப்பற்றிய ஒரு கவிதைக்கு ஆச்சரியம் நீங்களே எழுதிவிட்டீர்கள்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும், ஜாஹிர் காக்கா...

படிகட்டுகளுக்கு மிக்க நன்றி.. ஜஸக்கல்லாஹு ஹைரன்..

அனைத்து படிக்கட்டுகளும் நல்ல ஊட்டச் சத்துக்கள். இந்த ஊட்டச் சத்துக்களை உருவாக்க நிறைய சிரமப்பட்டிருப்பீர்கள் காக்கா. அல்லாஹ் தங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை தந்தருள்வானாக..

waiting for படிக்கட்டுகள் making..

அபு இஸ்மாயில் said...

அஸ்ஸலாமு அழைக்கும் இது நாள் வரை சைலண்ட் ரீடராக இருந்தேன் படிக்கட்டுகள் தொடரை விடாமல் படித்ததோடு எனது நண்பர்களிடமும் உறவினர்களிடமும் இந்த தொடரை படிக்க சொல்லியும் பிரிண்ட் செய்தும் கொடுத்தேன் மிகவும் பயனுள்ள தொடர்.
// “Making Of படிக்கட்டுகள்”//
உடனே தொடருங்கள் உங்கள் அனுபவ தொடரை ஆவலோடு இருக்கிறேன்(றோம்)

Unknown said...

Thanks Zakir Kaaka on behalf of thousands of thousands unknown readers of your useful articles.

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

இன்றைய இளய சமுதாயத்திற்கு பயனுள்ள படிக்கட்டுகள் உங்களின் சூழ்நிலை சரியில்லை என்றால் இறைவன் உங்களுக்கு அதன் மூலம் ஏதோ கற்றுத்தருகிறான்.ஒரு வெற்றியாளனுக்கும் , தோல்வியடைந்தவனுக்கும் உள்ள வித்தியாசம் அவர்களது அறிவிலோ, இனத்திலோ, கல்வியிலோ இல்லை. கடைசிவரை வெற்றியடைய வேண்டும் என்ற மன உறுதிதான் அந்த வித்தியாசம். போன்ற வரிகளெல்லாம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய "வைர வரிகள்'தங்களின் மலெசிய வாழ்க்கையின் அனுபவம் தான்
இந்த அருமையான படிக்கட்டுகள்.இது பலரின் வாழ்க்கையில் வழிகாட்டும் முன்னேற்ற படிக்கட்டுகளாக அமைய தம்பி ஜாகிருக்கு என் வாழ்த்துக்களும் துவாவும்

ZAKIR HUSSAIN said...

Thanks to brother[s] Abdul Wahid, Harmy Abd Rahman, AbuIsmail, Tajudeen, Irfan, MHJ , ZAEISA, Adirai siddik, Yasir , உங்கள் அனைவரின் அன்புதான் இப்படி ஒரு தொடர் எழுத உற்சாகம் தந்தது.

To Bro Abd Razik, ..I am in Islamic Finance industry includes Islamic Insurance [ Takaful ] , Islamic Investments , and Insurance Industry for the past 20 years.

sabeer.abushahruk said...

ண்ணா,

ஒண்ணுக்கு பத்துவாட்டி ச்செக் பண்ட்டேனுங்ண்ணா, மேலே ஏம்பேரு மட்டும் இல்லீங்ணா.

யாசிருக்கும் அபு அபு இபுறாகீமுக்கும் நடுவக்கவும்; அதிரைத் தென்றலுக்கும் யாசிருக்கும் குறுக்காலயும் கருத்து சொல்லிப்போட்டது நாந்தானுங்ணா.

ஆனா, என்னய உட்டீங்ணா. உங்களுக்கு 'ஐஸ் மறசலா தெரியோவேதிக்' நு ஏதும் டிஃபிஸியன்ஸி ஸின்ட்ரோமா, என்னய மட்டும் மறைக்குதே?

அட, ட்டாங்ஸ்லாம் வாணாங்ணா, போற போக்ல ஒரு ஸலாம் (அப்துல் ராஸிக் ஒதப்பாறு) ஒரு அஸ்ஸலாமு அலைக்கும் சொல்லிட்டு போலாம்ல?

போங்ணா நீங்க, எப்பவுமே இப்டித்தான்.

அ.நி./ யாசிர்: உங்கால ஒண்ணும் தாக்கல, கருத்தத் தூக்கிடாதிய.

Abdul Razik said...

thanks lot Brother Zakir for indicated your professional environments.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா:

நீங்கள் கவிதையிலேயே 'படி'கட்ட பார்த்தீங்கன்னா எப்படி கண்டுக்குவாங்க உங்களை...

உங்கள் கவிதைகள் பாடி கார்டாத்தான் படிக்கட்டு வருகிறது ! :)

ஏன் காக்கா கவிதையிலேயே கருத்து போடுறீங்க ? கவிதை அவ்வளவு ஈஸியாவா இருக்கு எழுத ?

எது எப்படியோ எங்களுக்கு வாசிக்க இனிப்பாக இருக்கு !

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

ண்ணா,

//ஒண்ணுக்கு பத்துவாட்டி ச்செக் பண்ட்டேனுங்ண்ணா, மேலே ஏம்பேரு மட்டும் இல்லீங்ணா.//

ஏனுங்க ஓங்க ஊட்டு கல்யாணத்துக்கு ஒங்களை கூபுடலன்னு கொவாச்சி கிட்டா எப்படி!! (எம்பெரும் அங்கே மிஸ்ஸிங்)

ZAKIR HUSSAIN said...

To Sabeer,

ஒரு ஒற்றுமையை கவனித்தாயா?. அங்கு உன்பெயருடன் சாகுல் / இக்பால் இரண்டு பேரையும் குறிப்பிட்டு எப்போதும் நான் எழுதுவதில்லை.

உங்கள் 3 பேரையும் குறிப்பிட்டு எழுதினால் இனிமேல் நானும் அதில் சேர்ந்து கொண்டு ' ஜாகிர், நீங்கள் நன்றாக எழுதியிருக்கிறீர்கள் / அல்லது இந்த கருத்தில் உடன்படவில்லை" என்று நானே எழுத வேண்டியதுதான்.

sabeer.abushahruk said...

//ஏனுங்க ஓங்க ஊட்டு கல்யாணத்துக்கு ஒங்களை கூபுடலன்னு கொவாச்சி கிட்டா எப்படி!!//

 (எம்பெரும் அங்கே மிஸ்ஸிங்)//

மறுபடியும் வன்ட்டார்யா பினாமி.

கூப்ட வாணாம்ங்க கோவிக்கலங்க. போற போக்குல ஒரு புன்னகையைக்கூட வீசாம அங்கே நான் இல்லவே இல்லேன்றமாதிரில போறான். மொதல்ல அவன வரச்சொல்லுங்க.

sabeer.abushahruk said...

அபு இபுறாகீம்,

கவிதை என்னும் வார்த்தைக்குள் ஒண்ணுமில்ல. உள்ளாற என்ன இருக்குன்றதான் மேட்டரே.

எனக்கு கவிதை என்று எதுவும் எழதத்தெரியாது. சொன்னா, கோணல் பார்வை பார்க்கிறான் என்பார்கள்.

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
/கூப்ட வாணாம்ங்க கோவிக்கலங்க. போற போக்குல ஒரு புன்னகையைக்கூட வீசாம அங்கே நான் இல்லவே இல்லேன்றமாதிரில போறான். மொதல்ல அவன வரச்சொல்லுங்க//

அவரு முகமே சிரித்தமுகம் தானே அப்புறமும் சிரிக்க சொன்னா எப்படி

KALAM SHAICK ABDUL KADER said...

முன்னேறத் துடிக்கும் எவரும் முதலில் படிக்கட்டும் உங்களின் “படிக்கட்டுகள்”; இவ்வாக்கத்தின் ஒரு பகுதியை என் முகநூல் நண்பர்கள்- குறிப்பாக நமதூர் மாணவர்கட்கு அனுப்பினேன்; மிகுந்த வரவேற்பு கிடைத்தது என்பதை இச்சபையில் பதிவு செய்கிறேன். அண்மை காலமாக BORN TO WIN என்னும் தலைப்பில் seminar சென்று வருகிறேன்; அதில் சேகரித்த குறிப்புகளில் பல உங்களின் படிக்கட்டுகளில் சொல்லப்பட்டவைகளாக இருப்பதால், அக்குறிப்புகளைச் சேகரித்து ஓர் ஆக்கம்-தொடராக அதிரையின் வேறொரு தளத்தில் எழுத அனுமதிப் பெற்றுள்ளேன். இடையில், சிறிது உடல்நலக் குறைவு ஏற்பட்டு விட்டதால், ஆக்கங்கள்- கவிதைகள் வரைவதை நிறுத்தி வைக்க முடிவு செய்து விட்டேன்; அதனால் born to win குறிப்புகளை ஆங்கிலத்தில் எழுதும் அப்பணியும் நிறைவுச் செய்யவில்லை; இன்ஷா அல்லாஹ் விரைவில் உடல்நிலை ஒத்துழைத்தால் அப்பணியைச் செய்து உங்களைப் போல் அடியேனும் நம் மக்களின் முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் இதுபோன்ற ஊக்கமூட்டும் ஆக்கங்கள் பதிவு செய்ய நாடுகிறேன்.

உங்களின் இவ்வாக்கம் நூலுருவில் வெளிவரும் நாளை எதிர்நோக்கியவனாகவும், உங்கட்காக” துஆ” செய்தவனாகவும் உள்ளேன்.
ஜாஹிர்-இக்பால்-சபீர் ஓர் அழகிய நட்பின் கூட்டணி!

அப்துல்மாலிக் said...

எந்த ஒரு செயல்பாட்டின் ஆரம்பம் தூண்டுதல்தான். எதையாவது சொல்லிக்கிட்டே/பேசிக்கிட்டே இருந்தா அதன்மீது நாட்டம் வரும். பிறகு செய்து பார்த்தால் என்ன என்ற துணிச்சல் வரும். அந்த துணிச்சலை நீங்க இந்த படிக்கட்டின்வழியே ஏறிவர செய்திருக்கீங்க. ஒருத்தன் சோர்ந்துப்போயிருக்கும்போது அந்த செயலின் நன்மை/தீமை பற்றி பேசும்போது மீண்டும் செயல்படுத்த தூண்டும். ஒருத்தன் ஜெயிச்சாலும் இந்த படிக்கட்டுக்கு ஒரு ஏற்றம்தான்........! முடித்தது வருத்தம்தான் ஆனாலும் இனிதான் ஆரம்பமே இருக்கிறது. 24 படிக்கட்டிலும் நிறைய கற்றுக்கொண்டேன். நிச்சயம் அ.நி இதை புத்தமாக வெளியிட என் வேண்டுதல், முதல் புத்தகம் எனக்குதான்.... ஜஜாக்கல்லாஹ் ஜாகிர் காக்கா

இப்னு அப்துல் ரஜாக் said...

முன்னேற்றத்திற்கான வழிகாட்டித்தந்த உங்களுக்கு அல்லாஹ் ஆரோக்கியத்தையும் எல்லா நலன்களையும் நல்க எங்கள் து ஆ என்றும் இன்ஷா அல்லாஹ்!

நிற்க !

Your valuable notable quotes will help us to improve our daily life insha Allah.Thanks bro zakir

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

படிகட்டுகள் ஏற்றம் ஆசிரியர் ஜாகிர் தங்களுக்கு எனது அஸ்ஸலாமு அலைக்கும் இதுவரை தங்களின் கட்டுரை தொடரை நான் படித்ததில்லை காரணம் சொல்லத்தெரியவில்லை எனது நண்பர் வாழ்க்கை பயணம் ஆசிரியர் சித்தீக் நேற்று தொலைபேசிச்சொன்னார் படிகட்டுகள் ஏற்றம் படித்தாயா என கேட்டா(ன்)ர் இல்லை என்றேன் நான் எனது குடும்பத்தோடு படித்து(காட்டி)கொண்டிருக்கிறேன் நீயும் படி என்றா(ன்)ர்
படித்த பிறகுதானே தெரி(புரி)கிறது அவன் ஏன் அப்படி தங்களை புகழ்ந்தானென்று மாஷா அல்லாஹ்.என்னுடைய கருத்தும் தங்களுடைய எழுத்தும்(கருத்தும்) நிறைய விஷயங்களில் ஒத்துப்போகிறது
நல்ல பல கருத்துக்களை மீண்டும் எழுதிக் கொண்டே இருங்கள்

ZAKIR HUSSAIN said...

Thank you brother [s] AbulKalam, Abdul Malik, AraAla, MSM SabeerAhamed[Thiruppur] for your valuable and encouraging comments. Insha Allah we will meet in future articles. Thanx once again

sabeer.abushahruk said...

//Thank you brother [s] AbulKalam, Abdul Malik, AraAla, MSM, SabeerAhamed for your valuable and encouraging comments. Insha Allah we will meet in future articles. Thanx once again//

SaMa SaMa ( no mention no mention )


ZAKIR HUSSAIN said...

Kepada Sabeer,

mana engkau datang sini....you memang bijak sangkat.

sabeer.abushahruk said...

இன்னா...டா... இங்க்கி பிங்க்கி பாங்க்கி?

ஒழுங்கு மருவாதியா தமிழ்ல சொல்லு.

Ebrahim Ansari said...

தம்பி! அதிரை நிருபரின் புகழை உயரத்தூக்கிய ஒரு அற்புதமான அறிவாற்றல் மிகுந்த தொடர் நிறைவுபெற்றது ஒரு வருத்தம். ஆனாலும் அதுவே விரைவில் நூலாக வெளியிடப் போகிறோம் என்று நினைத்து ஆனந்தம்.

யாரங்கே! ஆவன செய்யுங்கள்.
இன்ஷா அல்லாஹ். விரைவில் எதிர் பாருங்கள்.

Ebrahim Ansari said...

கிளி கூட வளர்க்க முடியாது?? ஹஹஹாஹ். முத்திரை.

ஆமாம் இந்தப் படத்தில் இருக்கும் கிளி நாம் வளர்க்க முடியாததுதான்.

Ebrahim Ansari said...

நூல் உருவாக்கம் பற்றிய எனது மின் அஞ்சல் விரைவில். இன்ஷா அல்லாஹ்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//Ebrahim Ansari சொன்னது…
நூல் உருவாக்கம் பற்றிய எனது மின் அஞ்சல் விரைவில். இன்ஷா அல்லாஹ்.//

காக்கா, நலம் எப்படி அங்கே !?

உங்களின் வரவு நல்வரவாகட்டும் !

எனக்கும் ஒரு மின்னஞ்சல் வரும்னு வழிமேல் விழிவைத்து... மின்னஞ்சல் பெட்டி காத்திருக்கிறது ! :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//Ebrahim Ansari சொன்னது…
(ஜாஹிர்:)தம்பி! அதிரை நிருபரின் புகழை உயரத்தூக்கிய ஒரு அற்புதமான அறிவாற்றல் மிகுந்த தொடர் //

ஆம் ! உண்மை !

//யாரங்கே! ஆவன செய்யுங்கள்.
இன்ஷா அல்லாஹ். விரைவில் எதிர் பாருங்கள்.//

அப்படியே ஆகட்டும் குருவே ! :)

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
பெருமானார் நபி முஹம்மது [ஸல்] அவர்களைத் தவிற யாரும் “பின்பற்றக் கூடிய” தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது. [இதை நான் முஸ்லீமாக இருப்பதற்காக எழுதவில்லை]

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு