அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்ஹம்துலில்லாஹ் !
இன்று (09-டிசம்பர்-2012) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் நூல் வெளியீட்டு நிகழ்வு சிறப்புடனும் எளிமையாகவும் நிறைவுற்றது.
எங்கள் அன்பான அழைப்பிற்கு ஆதரவு தந்து வருகை தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.
நிகழ்வு சிறப்புடன் துவங்கியது, அதிரை தாரூத் தவ்ஹீத் அமீர் அதிரை அஹ்மது B.A., அவர்கள் தலைமை தாங்கினார்கள் அதனைத் தொடர்ந்து, வரவேற்புரை சகோதரர் M. தாஜுதீன் M.B.A., நூல் அறிமுக உரை சகோதரர் தீன்முகமது B.Sc .B.G.L., நிகழ்த்தினார்கள்.
அதிரை தாருத் தவ்ஹீத் செயலாளர் சகோதரர் ஜமீல் M.ஸாலிஹ் அவர்கள் முதல் பிரதியை வெளியிட அதனை சகோதரர் எஸ். முகமது பாரூக் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்
வாழ்த்துரையை சகோதரர்கள் M.L. அஷ்ரப் அலி M.A.B.L மற்றும் அப்துல் முனாஃப் B.A.B.L., வழங்கினார்கள்
நிகழ்வின் நிறைவாக நூல் ஆசிரியர் சகோதரர் இப்ராஹீம் அன்சாரி M.Com., அவர்கள் தனது ஏற்புரையுடன் நன்றியுரை வழங்கினார்கள், இது ஒரு நெகிழ்வான நிகழ்வாக அமைந்தது.
மேலும் விபரங்கள் விரைவில்....
நூல் வெளியீட்டு நிகழ்வு புகைப்படங்கள் உங்களின் பார்வைக்காக.
அதிரைநிருபர் பதிப்பகம்
29 Responses So Far:
அல்ஹம்துலில்லாஹ்!
இதன் பதிப்பு பலவாகி சேரவேண்டியவர்களுக்கு சென்றடைந்து முழுப் பலனும் கிடைக்கட்டுமாக! ஆமீன்.
ஆசிரியர் இப்ராஹிம் அன்சாரி காக்கா அவர்களுக்கும் நிருபருக்கும் கலந்து கொண்டவர்களுக்கும் இதன் முயற்சியில் அங்கம் வகித்தவர்களுக்கும் வாழ்த்துக்களும் துஆவும்.
அல்ஹம்துலில்லாஹ். டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்காவின் வாழ்வில் இந்நாள் மறக்க முடியாத நாள்! அவர்களின் அழகிய உள்ளம் போல் அழகாய் இருக்கும் இல்லத்தில் எளிமையாகவும்; ஆன்றோர்கள்- தமிழறிஞர்கள்-கல்வியாளர்கள் வருகைப் பதிவுடனும் மிகச் சிறப்பாக விழா நடந்திருப்பதைக் காணும் பொழுதே நம் கண்கட்கு இதமாக இருகின்றது. அதிரை நிருபர் பதிப்பதகத்தின் முதற் பிரசுரம் ஒரு முதல் பிரசவம் போல் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்கிறேன். அவர்களின் இனிவரும் முயற்சிகளும் இதுபோல் வெற்றி காண என் அவாவும்; துஆவும்.
ஆசிரியர் இப்ராஹிம் அன்சாரி காக்கா அவர்களுக்கும் நிருபருக்கும் கலந்து கொண்டவர்களுக்கும் இதன் முயற்சியில் அங்கம் வகித்தவர்களுக்கும் வாழ்த்துக்களும் துஆவும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
தங்களின் நல்ல முயற்சியும் உலைப்பும் வெற்றி பெற
மனமார்ந்த வாழ்த்துக்களும் துவாவும்
அல்ஹம்துலில்லாஹ்.,, இப்ராஹீம் அன்சாரி காக்கா,பன்னூலாசிரியர் அதிரை அஹ்மத் காக்கா,எனது அன்புக்குரிய சிறிய தந்தை கணினி தமிழறிஞர் ஜமீல் M.ஸாலிஹ் மற்றும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு சிறப்பித்த அறிஞர் பெருமக்கள்,சன்மார்க்க சான்றோர்கள்,அதிரை நிருபர் நெறியாளர்கள்,பங்களிப்பாளர்கள்,ஊடகவியாளர்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.இறைவனின் அருளுடன் இன்னும் அதிகமான பங்களிப்பு செய்து அதிரை நிருபரின் அடுத்த நூல் வெளியீடு பல பதிப்புகள் பெற வேண்டும். இன்ஷா அல்லாஹ்,
அடுத்த தலைமுறையை படித்த தலைமுறையாக்கிடுவோம்
------------------------
இம்ரான்.M.யூஸுப்
இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு சிறப்பித்த அறிஞர் பெருமக்கள்,சன்மார்க்க சான்றோர்கள்,அதிரை நிருபர் நெறியாளர்கள்,பங்களிப்பாளர்கள்,ஊடகவியாளர்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.இறைவனின் அருளுடன் இன்னும் அதிகமான பங்களிப்பு செய்து அதிரை நிருபரின் அடுத்த நூல் வெளியீடு பல பதிப்புகள் பெற வேண்டும். இன்ஷா அல்லாஹ்,
அடுத்த தலைமுறையை படித்த தலைமுறையாக்கிடுவோம்
எல்லாப்புகழும் இறைவனுக்கே.
அதிரைநிருபர் வலைதளம் இன்னொரு பரிணாமம் கண்டிருக்கிறது. நமது எண்ணம் எதைப்பற்றியும் சிந்திக்காமல் முன்னேற்றம் பற்றி மட்டும் சிந்தித்தால் நம்மை சார்ந்தவரக்ளுக்கு ஏதாவது பாசிடிவ் ஆக செய்யமுடியும் என்பதற்கு சகோதரர் இப்ராஹிம் அன்சாரி அவர்கள் எழுதி அதிரை நிருபர் வெளியீட்டு வேலைகளை செய்திருக்கும் இந்நிகழ்வு ஒரு உதாரணம்.
இந்த நூலின் ஆசிரியர், டாக்டர் இபுறாஹிம் அன்சாரி காக்கா அவர்களுக்கும், அதை சிறப்புடன் சிரத்தை எடுத்து வெளியிட உதவியாக இருந்த அதிரை நிருபர் குழுவிற்கும், எளிமையான வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சான்றோர்கள், அறிஞர்கள், துடிப்புடன் இருக்கும் ஊர் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் எல்லோருக்கும் எம் மனமார்ந்த வாழ்த்துக்களும், து'ஆவும் சென்றடையட்டுமாக.....
இந்த நூலின் பிரதிகள் உலகப்புகழ் பெற்ற சென்னை அண்ணா நூலகத்திலும், பெரியார் நூலகத்திலும் இன்னும் மாநிலத்தின் முக்கிய நகரங்களிலுள்ள நூலகங்களில் கொஞ்சம் சிரத்தை எடுத்தேனும் அவ்விடங்களில் இப்புத்தகம் காணக்கிடைக்க ஏற்பாடு செய்தால் நம்முடைய நோக்கம் வெற்றிடைய இலகுவாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.....
இந்த நூலை அப்படியே .PDF FORMAT ஆக்கி எங்கோ இருக்கும் எம் கண்களுக்கு கணிப்பொறியினூடே நல்லதோர் விருந்து படைக்க அ.நி. முயற்சிக்குமா? ஏதேனும் சிரமம் உண்டா?
அல்ஹம்துலில்லாஹ் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பெருமையை பெற்றவனாகவும் அதற்க்கு வாய்ப்பளித்த சகோ இப்ராஹிம் காக்கா அவர்களுக்கும், சிறப்புடன் அமைந்த இந்த வெளியிட்டு விழாவிற்க்கு அனைவரையும் / அனைத்து பதிவரையும் ஒன்றினைத்த சகோ தாஜுதீன் காக்கா அவர்களுக்கும் ஜசக்கல்லாஹ் ஹைர்
இறைவனின் அருளுடன் இன்னும் அதிகமான பங்களிப்பு செய்து அதிரை நிருபரின் அடுத்த நூல் வெளியீடு பல பதிப்புகள் பெற வேண்டும், அதன்மூலம் அனைவரும் பயனடைய வேண்டும். இன்ஷா அல்லாஹ்,
ஒன்றுக்கு மேல் வேண்டாம் என்ற கருத்தோடு நிற்காமல், பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்...!!
ஒன்றுக்கு மேல் வேண்டாம் என்ற கருத்தோடு நிற்காமல், பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்...!!
அல்ஹம்துலில்லாஹ்!
இதன் பதிப்பு பலவாகி சேரவேண்டியவர்களுக்கு சென்றடைந்து முழுப் பலனும் கிடைக்கட்டுமாக! ஆமீன்.
ஆசிரியர் இப்ராஹிம் அன்சாரி காக்கா அவர்களுக்கும் நிருபருக்கும் கலந்து கொண்டவர்களுக்கும் இதன் முயற்சியில் அங்கம் வகித்தவர்களுக்கும் வாழ்த்துக்களும் துஆவும்.
மாஷா அல்லாஹ்..பார்கவே சந்தோசமாக உள்ளது.. இனி வரும் காலங்களில் தொடர் கட்டுரைகள் எழுத பலரை ஊக்குவிக்கும்..
வாழ்த்தும் அளவுக்கு வயது இல்லை என்றாலும் என் துஆ என்றென்றும் உண்டு
மனதை நெகிழ வைத்த நிகழ்வு..., ஒரு கட்டுரையாக அதிரை நிருபரில் கருவுற்று, அந்த கரு தொடராக வளர்ந்து இப்போது கைகளில் தவழும் குழந்தையாக நூல் வடிவில் நீதி கேட்டு வெளிவவந்திருக்கிறது.... மாஷா அல்லாஹ் !
இதனைப் போல் இன்னும் மென்மேலும் தொடர்ந்து நூல் வெளியிடுகள் அதிரைநிருபர் பதிப்பகம் தொடர்ந்து வெளியிட வேண்டும் அதில் என் பங்கும் இருக்க ஆசைப்படுகிறேன் இன்ஷா அல்லாஹ் !
Expected one. Must reach all sort of people. Keenly awaiting to reading it once.
Abdul Razik
Dubai
அதிரை நிருபரின் ஒரு மகத்தான நிகழ்வு.அல்ஹம்துலில்லாஹ்.டாக்டர் இபுராஹீம் அன்சாரி காக்காவிற்கு துவாவும் வாழ்த்துக்களும்......
அ.நி நெறியாளருக்கு ஒரு விண்ணப்பம்.
இதுபோல சகோ.ஜாகிர் ஹுசைன் எழுதி வரும் படிக்கட்டுகளையும் தொகுத்து
வெளியிட வேண்டுமென்பது எனது அவா.அவசியம் வளருகின்ற சந்ததியர்க்கு
ரொம்பவும் வழிகாட்டியாகும் என நினைக்கிறேன்..
அன்புத் தம்பி நெய்னா அவர்களுக்கு,
ஒரு மாவட்ட நூல் நிலைய அதிகாரியை அணுகி இருக்கிறோம். அவர் மூலமாக மாநில நூலகங்களில் இடம்பெறச் செய்ய தொடர்ந்து முயற்சிக்கிறோம்.
PDF - ல் வெளியிடுவது தொடர்பாக நெறியாளர் அவர்கள் விரைவில் நீங்கள் விரும்பும் அறிவிப்பை வெளியிடுவார்கள். உங்களுடைய அருமையான ஆலோசனை மற்றும் ஒத்துழைப்புகளுக்கு மிக்க நன்றி உடையவனாவேன்.
ZEISA சொன்னது
//அ.நி நெறியாளருக்கு ஒரு விண்ணப்பம்.
இதுபோல சகோ.ஜாகிர் ஹுசைன் எழுதி வரும் படிக்கட்டுகளையும் தொகுத்து
வெளியிட வேண்டுமென்பது எனது அவா.அவசியம் வளருகின்ற சந்ததியர்க்கு
ரொம்பவும் வழிகாட்டியாகும் என நினைக்கிறேன்..//
இது எனது ஆசையும் கூட. முதலில் தொடர் நிறைவடையட்டும். அதன்பின் ஆகவேண்டியவைகளைச் செய்யலாம். முதல் நூல் வெளியிடுவதில் பல அனுபவங்கள் கண்டோம். வழி பிறந்துள்ளது. இனி அந்தப் பாதை தொடரும். சகோ. அலாவுதீன் அவர்களின் தொடர்களும் வரவேண்டுமென்பது என் அவா.
//மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…
இந்த நூலை அப்படியே .PDF FORMAT//
ஏற்கனவே தயார் நிலையில் உள்ளது வெகுவிரைவில் தரவிறக்கம் செய்ய வசதிகள் ஏற்படுத்தபப்டும் இன்ஷா அல்லாஹ் !
//Ebrahim Ansari சொன்னது…
//ZAEISA சொன்னது…
அ.நி நெறியாளருக்கு ஒரு விண்ணப்பம்.//
விரைவில் அடுத்த அறிவிப்பும் வரும் இன்ஷா அல்லாஹ் !
மனு நீதி ...புத்தக வெளியீட்டு விழா
காணொளி மூலம் கண்டு மகிழ்ந்தேன்
நேரில் கலந்து கொண்ட உணர்வு
அன்சாரி காக்காவின் கை வண்ணத்தில்
இன்னும் பல நூற்கள் வெளியாக வேண்டும்
வாழ்த்துக்கள் காக்கா ..
www.muthuppettai.com
அஸ்ஸாலமு அலைக்கும் www.muthuppettai.com சார்பகா நான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.
தம்பி முகமது பைசல் அவர்களுக்கு,
முத்துப் பேட்டையில் இருந்து வந்து தாங்கள் கலந்து கொண்டதற்கு மிக்க நன்றி.
உண்மையிலேயே நேற்றைய நிகழ்ச்சி அதிரை, முத்துப் பேட்டை, நாச்சி குளம் போன்ற அண்மையில் உள்ள ஊர்களைச் சேர்ந்த நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தது ஒரு சிறப்பான சிறப்பு.
அதிரை போன்ற ஊர்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அருகாமையில் இருக்கும் ஊர்களில் இருந்தும் வந்து கலந்து கொள்வது நமது சமுதாய வாழ்வையும் ஒற்றுமையையும் மேம்படுத்தும்.
இதே போல் முத்துப் பெட்டியில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அதிரை மற்றும் அண்மை ஊர்களைச் சேர்ந்தோரையும் அழைத்து நடத்துவது நன்மை பயக்கும்.
வாழ்த்தும் து ஆவும் நல்கிய கவிஞர் சபீர், தம்பி இக்பால், நெய்னா, சித்தீக், அப்துல் மாலிக், அப்துல் ராசிக், Zeisa, இம்ரான், மீராஷா , இர்பான், மருமகனார் யாசிர், சாகுல் மற்றும் தம்பி ஜாகிர் நெய்னா உட்பட்ட அனைவருக்கும் எங்களது நன்றி.
நீங்கள் தொடர்ந்து ஊட்டிய ஊக்கத்தின் வெளிச்சப்பாடே இந்த கன்னி முயற்சியும் அதன் வெற்றியும். இந்தப் பாதை திறந்து இருக்கிறது இனி இதில் பலர் வர இருககிரார்கள். தொடர்ந்து இந்த ஆதரவையும் அன்பையும் து ஆக்களையும் வேண்டி நிற்கிறோம்.
நண்பர் அதிரை முஜீப் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
இந்த புத்தக பொக்கிஷம் நம் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளின் கைகளில் அதிகம் தவழ்வதை விட மாற்று மத அன்பர்களின் கைகளில் அதிகம் தவழப்பட வேண்டியவை. குறிப்பாக ஆரிய, பிராமண சமூகத்தின் திறந்த மனம்படைத்த அன்பர்களுக்கு கட்டாயம் இது சென்றடையப்பட வேண்டும் என்பதே என் கருத்து.
தம்பி நெய்னா அவர்களுக்கு,
இந்தக் கருத்தை நீங்கள் ஏற்கனவே அறிவுறுத்தி இருக்கிறீர்கள். அதை மனதில் வைத்து செயல்படுகிறோம். இன்ஷா அல்லாஹ்.
Post a Comment