நானும் ஆஃப்ரிக்காவும்...!

குறுந்தொடர் : 1

ஆஃப்ரிக்கா என்றதும் பலரின் நினைவிற்கு வருவது, வறுமை, ஏழ்மை, யானை, எய்ட்ஸ், கருப்பு கலர், கரடு முரடான தோற்றமுள்ள மக்கள், இயற்கை வளங்கள் மேலாக, ஆம்! ஆஃப்ரிக்காவின் அவல நிலையைச் சொல்லி மாளாது. இதில் ஆறுதலாக முஸ்லிம்களுக்கு கிடைத்த கருப்பு தங்கம் ஹஜரத் பிலால்(ரலி) அவர்கள்.

அந்த கண்டத்தின் வளங்களைக் கொள்ளையடித்து தம் மக்களையும், நாடுகளையும் ஜொலிக்க வைக்கும் அருவருப்பு குணம் படைத்த மேலைநாடுகள், அவர்கள் பயன்படுத்தியது போக மிச்சமிருக்கும் எச்சங்களையும், தொழில்நுட்ப, அணுக்கழிவுகளையும் இன்னபிற இழிவுகளையும் கண்டெய்னர் கண்டெய்னராக ஏற்றி அவர்களுக்கு விலையின்றித் தருவதாகக் கூறி அவர்களை மெதுவாகக் கொல்லுகின்றன.

காலனி ஆதிக்கங்கள் முடிவுக்கு வந்திருந்தாலும், சில கட்டுப்பாடுகளை விதித்து இன்னும் நவீன அடிமைத்தனம் ஒழியவில்லை என்பதைக் கண்கூடாகக் காணும் வாய்ப்பை அல்லாஹ் எனக்குத் தந்தான்.

“என்ன இது, பயணக்கட்டுரை இவ்வளவு சிரியஸாகவா ஆரம்பிப்பது?” என்று யோசிக்கின்றீர்களா? கண்ட காட்சிகள் மனதிலிருந்து மறையாததால் வார்த்தைகளில் வெளிப்படுத்தி இருக்கின்றேன். மற்றபடி எல்லாம் நல்லாத்தான் போனது, இந்த மக்களையும் நாடுகளையும் கண்ட பிறகு அல்லாஹ் நம்மை எந்த அளவிற்கு மேம்படுத்தி வைத்து இருக்கின்றான் என்று அல்லாஹ்விற்கு நன்றி நவின்றவனாக! 

ஆஃப்ரிக்க பயணத்தின் பயங்கரங்களையும், சுகங்களையும், வேடிக்கைகளையும் உங்களுடன் நீண்ட தொடராக பகிரலாம் என்று வந்திருக்கின்றேன். பயணத்தின் நடுநடுவே அந்த நாடுகளைப்பற்றி சில முக்கிய குறிப்புகளையும் காண்போம்.

ஆஃப்ரிக்கா நாடுகளை எங்கள் வியாபார பாஷையில் “கன்னி மார்க்கெட்” virgin market என்று சொல்லுவோம், அதிக வியாபார போட்டி இல்லாததாலும், லாபம் ஒரளவிற்கு பல்லிப்பதாலும் இவ்வாறு அழைக்கின்றோம். ஆனால், வளைகுடா / ஐரோப்பா நாடுகளை “முதிர்ச்சி அடைந்த மார்க்கெட்”matured market  என்று அழைப்போம், அங்கேப் போய் பொருள் விற்றால் ஒரு வேலை காலை சாப்பாட்டுக்கு தேவையான காசு சம்பாதிப்பதே பெரும்பாடாகிவிடும்,முதலில் நாங்க என்ன பிசினஸ் செய்கின்றோம் என்பதைச் சொல்லி ஆரம்பிக்கின்றேன் அது “ தொழில் நுட்ப தொடர்பு சாதனங்கள் (Information Technology Goods Exports) ஏற்றுமதி.. தமிழாக்கம் சரியா ?? :)

கானா, ஐவரி கோஸ்ட் போன்ற நாடுகளில் பயணம் செய்திருந்தாலும், பயணக்கட்டுரை எழுதும் நோக்கம் அப்போ இல்லாததால் ஃபோட்டோவும் இல்லை, மண்டையில் டேட்டாவும் இல்லை. நிறைய எழுதினா உங்களுக்கும் போர் அடிக்கும் என்பதால் ஒரு சில நாடுகளை மட்டும் காண்போம்.

முதலில் நைஜீரியா


நார்த் ஆஃப்ரிக்காவில் துபாய்காரவங்க ஈ போல மொய்ப்பதால் அப்படி கொஞ்சம் தள்ளி இருக்கும் வெஸ்ட் ஆஃப்ரிக்காவைப் போய் கொஞ்சம் சீண்டி பார்ப்போமே என்று நானும் எங்க தலையும் முடிவு செய்து ஆஃப்ரிக்க கண்டத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட (175+ மில்லியன்) நைஜீரியாவைத் தேர்ந்தெடுத்தோம். சரி எங்கே இருந்து தொடங்குவது என் ஆராய்ந்தபோது முதலிம் ஊசி போடணுமாம் பயப்படாதீங்க அங்கே உள்ள நிலைமை அப்படி, கண்டிப்பாக இரண்டு (யெல்லோ ஃபிவர், மஞ்சள் காமாலை) அறிவுறுத்துவது ஏழு,  அப்புறம் பார்த்தா அட!!! அவங்களும் இன்விடேஷன், லட்டர் பேங்க் பேலண்ஸ் இருந்தால்தான் விசா கொடுப்பாய்ங்களாம் என்று கூற இங்கிலாந்து போய் வந்தது எனக்கு ஈஸியாக தெரிந்தது.

ஒரு வழியாக எல்லாம் ஏற்பாடு செய்து கொண்டு அபுதாபியில் இருக்கும்  அந்நாட்டின் தூதரகத்திற்கு வந்து சேர்ந்தாச்சு, (படம் : எங்கூடு இல்ல சத்தியமா நைஜீரிய எம்பஸிதான்) டோக்கன் கொடுத்து வரிசையில் உட்கார வைச்சாங்க… நான் பிறப்பாலேயே பொறுமைசாலி, ஆனால் எங்க தலை கொஞ்சம் கிர் கிர்…. மூல வியாதி உள்ளவன் கூட ஓர் இடத்தில் கம்முண்டு உட்கார்ந்து இருப்பான் போல ஆனா நம்ம ஆளு இரு செகண்ட் கூட..’ம்ம்ம்’. ஆக, ஒரு வழியாக எங்கள் நம்பர் வந்தது, இவ்வளவு நேரம் கழித்து வந்தாலும், சற்று சந்தோஷத்துடன் சென்ற எங்களுக்கு அசிஸ்டண்ட் கான்செலர் எங்கள் பேப்பர்களைப் பார்த்த பிறகு ஒரு குண்டைப் போட்டார். (”திகில்” courtesy  : சகோ.அ.ர.அல.)
பயணங்கள் விரிவடையும்…
முகமது யாசிர்

34 கருத்துகள்

Shameed சொன்னது…

நைஜீரியா எம்பாசி முகத்தை பார்த்தாலே முயல் பிடிப்பதாக தெரியவில்லையோ

Shameed சொன்னது…

கட்டுரையை படிப்பவர்களுக்கு யெல்லோ ஃபிவர் ஊசி இல்லை என்பதை கவி அவர்கள் ஊர்ஜிதபடுத்தவும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//நான் பிறப்பாலேயே பொறுமைசாலி, //

அதில் எள்ளலவும் சந்தேகமில்லை ! மிகச் சரியே !

//சற்று சந்தோஷத்துடன் சென்ற எங்களுக்கு அசிஸ்டண்ட் கான்செலர் எங்கள் பேப்பர்களைப் பார்த்த பிறகு ஒரு குண்டைப் போட்டார். (”திகில்” courtesy : சகோ.அ.ர.அல.) //

ஆஹா ! AR AL நிறைய (அப்பொவே அதாவது பிளாகுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு முன்பே) எழுதுவார்னு எனக்குத் தெரியும் ! ஆனால் இப்போ எடுத்திருக்கும் திகில் எ.கா. சூப்பர் ! (ஆஃப்ரிக்கா தொடராச்சே!)

sabeer.abushahruk சொன்னது…

நைஜீரியா?

"என் பெயர் மேஜர் ஜெனெரல் கேப்டன் திம்தியு. போன கம்யூனல் வயலன்ஸில் கொல்லப்பட்ட செனெட்டர் சக்யூ பில்லிஒன்டின் 10,00,00,000 மில்லியன் டாலர்ஸ் பணம் அவர் கணக்கிலேயே அப்படியே கிடக்கிறது. அந்தப் பணத்தை இங்கிருந்து வெளியேற்றி உன் கணக்கில் சேர்க்க உதவினால் உனக்கு 50% தருகிறேன். உடனே தொடர்பு கொள் என்று டகால்ட்டி வேலை காட்டுறவங்க ஊராச்சே...

அங்கேயா போனிய? நெம்ப தெகிரியம்தான் உங்களுக்கு யாசிர்.

crown சொன்னது…

அஸ்ஸலாமுஅலைக்கும். என் அபிமான எழுத்தரின் பயண அனுபவம்.ஆரம்பமே அமர்களம்.அவரின் மார்க்க பற்றும் அறிந்தவன் ஆனால் கையாளப்பட்ட உரை நடையில் சில இட மாற்றுப்பிழை தவறாக வந்துள்ளது.அதை சற்று மாற்றி கீழ் கண்டவாறு அமைத்தால் நல்லது.
ஆஃப்ரிக்கா என்றதும் பலரின் நினைவிற்கு வருவது, வறுமை, ஏழ்மை, யானை, எய்ட்ஸ், கருப்பு கலர், கரடு முரடான தோற்றமுள்ள மக்கள், இயற்கை வளங்கள் ஆம் ஆஃப்ரிக்காவின் அவல நிலையைச் சொல்லி மாளாது.ஆனால் ஆறுதல் முஸ்லிம்களுக்கு பிலால்(ரலி) அவர்கள்.

crown சொன்னது…

மேற்கண்ட விடயம் ஆப்ரிக்கா என்றாலே அவலம் ஆப்பரிக்கும் தேசம்!இதில் பிலால் (ரலி) நம் பொக்கிசம் அதனாலேயே அவலத்துடன் சேர்த்து வார்தை தவறாக வந்துவிட்டதை சுட்டிகாட்டினேன். தவறாக இருப்பின் மன்னிக்கவும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

குண்டைப் போட்டதன் விளைவு என்ன? அதையும் காண ஆசை!

Ebrahim Ansari சொன்னது…

மரியாதைக்குரிய மருமகனாரின் புதிய தொடர் அவர் தம் இயல்பினைப் போலவே அன்பாக, மென்மையாக, அறிவுபூர்வமானதாக, ஆக்கபூர்வமானதாக அமைந்திடும் என எனக்கு உறுதி உண்டு.

அவ்வாறே அமைய து ஆச் செய்கிறேன்.

Iqbal M. Salih சொன்னது…

மாஷா அல்லாஹ்!

ஒரு தேர்ந்த எழுத்தாளனின் நடையை தம்பி யாசிரிடம் காணமுடிகின்றது!

ஆஃப்ரிக்கப் பயண அனுபவம், நார்வே சம்பவத்தைவிடவும் நன்றாக மிளிறும் என்றே எனக்குத் தெரிகின்றது! வாழ்த்துக்கள் யாசிர்!

sabeer.abushahruk சொன்னது…

யாசிரிடம் ரெண்டு கேள்விகள்:

1)எங்கள் மரியாதைக்குறிய ஈனா ஆனா காக்காவே உங்களை " மரியாதைக்குறிய மருமகனார்" என்று சொல்கிறார்களே அப்ப நாங்கள் உங்களை "ட்டூமச் மரியாதைக்குறிய யாசிர்" என்றா கூப்பிடுவது?

2) அதென்ன இக்பாலுக்கு மட்டும் சொல்லிக்காட்டிய நார்வே சம்பவம்? அது எது? :-) / .-) / :-( இந்த மூன்றில் எது?

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

சகோ. யாசிரின் நல்லதொரு பயணக்கட்டுரை.

உலக ஏகாதிபத்திய வல்லரசு நாடுகள் தங்களின் அணுக்கழிவுகளை ஆப்பிரிக்க கண்டத்தின் கடற்கரையோரம் கொட்டிச்செல்வதால் பல சொல்லாத்துயரையும், உயிர் இழப்புக்களையும், உடல் ஊன‍ங்களையும் ஆப்பிரிக்க கடற்கரையோர நாட்டு மக்கள் அடைய வேண்டியுள்ளதால் அதற்கு பழிக்குப்பழி தீர்க்கவே அந்நாடுகளின் கடல் எல்லையைக்கடந்து செல்லும் வணிகக்கப்பல்கள் சோமாலியக்கடற்கொள்ளையர்களால் பெரும் பிணைத்தொகைக்காக கடத்தப்படுகின்றன என்ற வாதம் உள்ளதே அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அமெரிக்க அதிபராக உள்ள பராக் ஹுசைன் ஒபாமாவின் பூர்வீகமும் ஆப்பிரிக்க நாடான கென்யா தானே. அவர் ஆப்பிரிக்க கண்டத்தின் மக்கள்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த நிறைய நலத்திட்டங்களையும், உதவிகளையும் தாராளமாக செய்யலாமே? இல்லை ந‌ம் த‌மிழ்நாட்டு த‌லைவ‌ர்க‌ள் போல் அவ‌ரும் அக்க‌ண்ட‌ம் அழிந்த‌ பின் தான் அது ப‌ற்றி தீர்மான‌ம் கொண்டு வ‌ந்து ஐ.நா.வில் நிறைவேற்ற‌ முன்வ‌ருவாரோ?

உண்மையில் க‌ருப்பின‌ ம‌க்க‌ள் ம‌ற்ற‌ நாட்டு ம‌க்க‌ளுட‌ன் ஒப்பிடும் பொழுது ந‌ல்ல‌வ‌ர்க‌ளா? கெட்ட‌வ‌ர்க‌ளா? கொள்ளைக்காரர்களா? ஏமாற்றுப்பேர்வழிகளா? எல்லா நாட்டு ம‌னித‌ர்க‌ள் போல் அவ‌ர்க‌ளும் அனைத்து சுபாவ‌ங்க‌ளும் கொண்ட‌ ம‌க்க‌ளா? யாசிருக்கு தெரிந்தால் விள‌க்க‌லாம்.

அர‌பு நாடுக‌ள் போல் அப‌ரிமித‌மாக‌ த‌ன் ம‌ண்ணில் ப‌ல‌ க‌னிம‌ப்பொருட்களையும், பெட்ரோலிய கச்சாப்பொருட்களையும் பெற்றுள்ள‌ ஆப்பிரிக்க‌ நாடுக‌ளின் ம‌ண்ணை ஐரோப்பிய‌ நாடுக‌ளின் எண்ணெய் நிறுவ‌ன‌‍ங்க‌ள் வ‌ந்து துளையிட்டு உரிஞ்சி அத‌ன் ஸ்ட்ராவை ம‌ட்டும் அப்ப‌டியே விட்டு விட்டு சென்று விடுகின்ற‌ன‌ என‌ நினைக்கிறேன்.

Yasir சொன்னது…

அன்பின் நெறியாளர் அவர்களே கிரவுனாரின் அறிவுரை ஏற்று இப்படி மாற்றி விடுங்களேன்

"ஆம் ஆஃப்ரிக்காவின் அவல நிலையைச் சொல்லி மாளாது.இதில் ஆறுதலாக முஸ்லிம்களுக்கு கிடைத்த கருப்பு தங்கம் ஹஜரத் பிலால்(ரலி) அவர்கள் “

என்று

Iqbal M. Salih சொன்னது…

சபீர் அறிக: யாசிர் எழுதிய 'நார்வே சம்பவமும் உலக நாடுகள் நரித்தனமும்' என்ற கட்டுரையைத்தான் அப்படிக் குறிப்பிட்டேன்!

Yasir சொன்னது…

சாவன்னா காக்கா...உஙகளுக்கு ஏற்ற இடம் நைஜீரியா முயல் இல்லை எல்லா விலங்கினங்களும் ஒரு சில மனிதர்களும் உண்டு நீங்க சூட (கவிக்காக்கா சாவன்னா காக்கா நல்ல சுடுவாங்கதானே கேமராவால :))

என் ஊக்க மருந்து அன்பின் அபூ இபுராஹிம் காக்கா உங்களுக்கு நன்றி

கவிக்காக்கா..இது மட்டுமா இன்னும் பயங்கரங்களும் வேடிக்கைகளும் இருக்கு நன்றி உங்க கவிக்கு சாரி கருத்துக்கு..காக்கா சின்ன வேண்டுகோள் “அமீரகத்தில் மழையாமே” என்ற தலைப்பில் எனக்கு ஒரு கவி வேண்டும்

Yasir சொன்னது…

கிரவுனாரே உங்கள் வருகை எனக்கு உலகின் விலையுயர்ந்த வைரம் பரிசாக கிடைத்தாப்ல..அதுலயும் ஒரு உங்க தங்க கையால ஒரு குட்டு வாங்குவது நான் செய்த பாக்கியம்,தங்களின் மாணவன் நான், கற்றுக்கொடுங்கள் இந்த கத்துக்குட்டிக்கு

அன்பின் சிகரம் நண்பர் ஹகபர் சாதிக் நன்றி காத்திருங்கள்

இதுவரை எந்த இடத்திலும் என்னை பெயர் மட்டும் சொல்லி அழைக்காமல் அன்பான வார்த்தையை போட்டு அழைக்கும் அன்சாரி மாமா உங்களின் மீதான மரியாதை என்றுமே என்னில் நிலைத்திருக்கும்

Yasir சொன்னது…

வசீகர எழுத்துநடைக்கொண்டு அருமை நபி(ஸல்) அவர்களைப்பற்றி மேன்மையாக எழுதி கொண்டு இருக்கும் தங்களின் கருத்து என்னை நிச்சயம் ஊக்கப்படுத்தும் தங்களின் பெருதன்மையான கருத்துக்கு நன்றி காக்கா..உங்களின் எழுத்திலிருந்து நிறையக்கற்றுகொண்டு இருக்கின்றேன்

crown சொன்னது…

Yasir சொன்னது…

கிரவுனாரே உங்கள் வருகை எனக்கு உலகின் விலையுயர்ந்த வைரம் பரிசாக கிடைத்தாப்ல..அதுலயும் ஒரு உங்க தங்க கையால ஒரு குட்டு வாங்குவது நான் செய்த பாக்கியம்,தங்களின் மாணவன் நான், கற்றுக்கொடுங்கள் இந்த கத்துக்குட்டிக்கு.
-----------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.மிகை,மிகை காரணம் என்மேல் வைத்த அன்பின் ' கணம் அப்படி. என் பெயருள்ள இடத்தில் தம்முடைய பெயரை போட்டு அப்படியே உங்களிடம் திருப்பி விடுகிறேன்.அந்த தகுதிக்கும் போற்றுதலுக்கும் உரியவர் நீங்களே!

Yasir சொன்னது…

//யாசிரிடம் ரெண்டு கேள்விகள்://
அன்பின்/பண்பின் வெளிப்பாடு அது காக்கா
டூமச் மரியாதைகுரிய வெகு சிலரில் நீங்க தான் டாப் கவிக்காக்கா...உங்களின் எளிமையையும் / பண்பும் / எதையும் வெளிப்படையாக பேசும் மாண்பும் / நேர்மையும் என்னை ஆட்கொண்டு விட்டது என்றே கூற வேண்டும்

இரண்டாவதுக்கு இக்பால் காக்கா பதிலளித்துவிட்டார்கள்

Yasir சொன்னது…

//crown சொன்னது…// கிரவுனாரே மனதிருலிருந்து வந்த வார்த்தைகள் அவை..தங்களின் அன்புக்கு நன்றி

Yasir சொன்னது…

கருத்து சொல்வதோடு மட்டுமல்லாமல் ஒரு சில கொசுறு தகவல்களையும் மற்றும் அக்கிரமங்களையும் சாடும் சகோ.மு.செ.மு. நெய்னா முஹம்மது அவர்களுக்கு நன்றி
//எல்லா நாட்டு ம‌னித‌ர்க‌ள் போல் அவ‌ர்க‌ளும் அனைத்து சுபாவ‌ங்க‌ளும் கொண்ட‌ ம‌க்க‌ளா? // ஆமாம் நான் கண்டதை வரும் தொடர்களில் பதிகின்றென்

Unknown சொன்னது…

Assalamu Alaikkum

Dear brother Yasir,

Exploring a nice series of travel insights of dark nation Africa from your experience. Hope you virtually guide us through your vivid writings.

//“ தொழிநுட்ப தொடர்பு சாதனங்கள் (Information Technology Goods Exports) ஏற்றுமதி.. தமிழாக்கம் சரியா ?? :)//

"'தகவல்' தொழிநுட்ப தொடர்பு சாதனங்கள் ஏற்றுமதி"

Among the people who don't want to get corrected(for pronunciation or spellings), your humbleness for asking readers and correcting your translation is appreciated and great.

அப்துல்மாலிக் சொன்னது…

ஆகா யாஸிர்பாய் ஆரம்பிச்சாச்சா? மிக்க நலம், ஆஃப்ரிக்கா மார்கெட் பற்றி நாமும் தெரிந்துக்கலாம், இன்ஷா அல்லாஹ் தொடருங்க

எனக்கு தெரிஞ்சு நைஜீரியாவுலே நம் நாட்டு மக்கள் (நாம் வளைகுடா வந்தாமாதிரி) நிறைய இருக்காங்கனு கேள்விப்பட்டிருக்கேன்..

sabeer.abushahruk சொன்னது…

அமீரகத்தில் மழையாமே!

திருட வருவதுபோல் -  வானம்
இருள வந்தது மழை
விடிந்து வருவதற்குள்
முடிந்து போனது

பெய்த மழையை அளவிட
மழைமானி தேவையில்லை
விழுந்த துளிகளை
எடுத்து
எண்ணியே சொல்லிவிடலாம்
இத்தனை மழையென்று

இருப்பினும்

சம்பள நாளைவிட
சந்தோஷமானது
அமீரகத்தில் மழை

இடி மின்னல் என்னும்
வன்முறை அற்ற
அகிம்சையானது
அமீரகத்தில் மழை

சபுராளிகளுக்கு
வயிறார உண்டசுகம்
சற்றுநேரமேயெனினும்
அமீரகத்தில் மழை!

Yasir சொன்னது…

வாங்க சகோ.அப்துல் மாலிக் தங்கள் கருத்துக்கு நன்றி...குஜ்ஜூகள் நிறைய இருக்காங்க ஆனால் எலி போல வாழ்க்கை....பகிருவோம் தொடர்ந்து

Yasir சொன்னது…

கவிக்காக்கா உங்க கவிதையை படித்தப்பிறகுதான் எனக்கு மழையை முழுமையாக ரசித்த உணர்வு வந்திருக்கு..அழகுக்கவிதை நன்றி காக்கா
//சம்பள நாளைவிட
சந்தோஷமானது
அமீரகத்தில் மழை/// உள்ளமும் உடலையும் குளிரவைப்பது மழை மட்டுமே

Yasir சொன்னது…

Bro Ameen..thanks for your encouraging comment....there is a saying "Our knowledge is a little island in a great ocean of non knowledge. " so we will keep learning until our last breath

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

அட இங்கப் பாருங்கப்பா !

யாசிருண்டவொடனே... கவிதை மழை ! அதெப்படி... எந்த கிரேனும் உங்க கண்ணு முன்னாடி வரவேயில்லையா ?

Ebrahim Ansari சொன்னது…

//சம்பள நாளைவிட
சந்தோஷமானது
அமீரகத்தில் மழை// There you are Thambi Sabeer.

// ஈனா ஆனா காக்காவே உங்களை " மரியாதைக்குறிய மருமகனார்" என்று சொல்கிறார்களே// பண்புடையார் பட்டுண்டு உலகம்.

தவிரவும் மருமகனாச்சே! அந்த மரியாதை கொடுத்தே ஆகவேண்டும். ஆக இந்த மரியாதை இருவழிகளில் நான் கொடுப்பது. ஒன்று கொடுப்பது மற்றது கொடுக்க வேண்டியது. அன்பே இன்ப ஊற்று.

அதிரை தென்றல் (Irfan Cmp) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்

யாசிர் காக்காவின் சுவாரஸ்யமான ஆஃபிரிக்கா பயண அனுபவத்தை எங்களுடன் பகிர தொடராக தருவதற்கு ஜசக்கல்லாஹ் ஹைர்

அதிரை சித்திக் சொன்னது…

சுவாரஸ்யமான ஆஃபிரிக்கா பயண அனுபவத்தை எங்களுடன் பகிர தொடராக தருவதற்கு ஜசக்கல்லாஹ் ஹைர்

ZAKIR HUSSAIN சொன்னது…

மணியணின் [ இதயம் பேசுகிறது ] பயணக்கட்டுரை படித்த அனுபவம் . அதில் இட்லி தோசைக்கு அழைவதை ஒரு அத்யாயமாக எழுதியிருப்பார். வேண்டுமானால் நாம் இடியப்பம் / எரச்சானத்துக்கு அழைவதை எழுதலாம்.

இங்கு நைஜீரியரகளை அனுமதித்ததில் நிதம் பிரச்சினைகள். இது போன்ற நாடுகள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டதின் காரணம் அந்த நாட்டு மக்களுக்கு [ அதிகம் பேர் ] உழைத்து சம்பாதிப்பதை விட ஏமாற்றி சம்பாதிப்பதில் ஈசியாக பணம் கிடைக்கும் என்ற இயற்கைக்கு மாறான விதியை பின்பற்றுவதுதான்.

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

மாஷா அல்லாஹ்
அழகான நடை
மனம் வருடும் வார்த்தைகள்
சகோ யாசிர் வாழ்த்துக்கள்
பயணக்கட்டுரையை உடனே முடித்துவிடாமல் இன்னும் விரிவாக அலசுங்கள்,அந்த குண்டு என்னாச்சு ?
I am very sorry for the delay and expecting more thrill

mohamedali jinnah சொன்னது…

நானும் ஆஃப்ரிக்காவும்...!
குறுந்தொடர் : 1 அடுத்த பகுதியை(குறுந்தொடர் : 2) ஆவலோடு வந்து பார்த்து பார்க்க முடியாமல் திரும்புகிறேன் .தொடருங்கள் ..தெரிவியுங்கள்

mohamedali jinnah சொன்னது…

அமீரகத்தில் மழையாமே!
http://seasonsnidur.blogspot.in/2012/12/blog-post_26.html