அஸ்ஸலாமு அலைக்கும்…
நீண்ட இடைவேளைக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 1977 பொற்கால நினைவுகளில் பல சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டோம் இப்பொழுது சொல்ல வரும் சம்பவங்கள் நான் குறிப்பிடும் பொற்காலத்தில் மட்டுமல்லாமல் தொடர்ந்து இருந்து வருகிறதா ? என்பதை வாசகர்களாகிய தங்களின் கருத்திற்கே விடுகிறேன்.
கல்வெட்டுக் குறிப்பு: இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் ஊர் பழக்க வழக்கங்கள் இன்றைய காலகட்டத்தில் ஏகத்துவ மீள் எழுச்சியின் விளைவாக விட்டொழிந்து விட்டாலும், ஒரு சில இடங்களில் இங்கொன்றும் அங்கொன்றும் நடக்கத்தான் செய்கிறது என்பதை மறுக்க இயலவில்லை. அவைகள் முற்றிலும் நம் சமுதாயத்திலிருந்து துடைத்தெரியப்பட வேண்டிய ஒன்றாகும்.
விராத்து:
பராஅத் என்றொரு நாளை விராத்து என்று நம் ஊரில் அழைப்பதுண்டு, அன்று இரவு குழந்தைகள் சிறுவர்கள் இறந்த வீட்டில் பாலில் வாழைப்பழத்தை சிறிது சிறிதாக வெட்டி ஒரு பாத்திரத்தில் கலந்து எடுத்து வாசல் முன் சிறுவர்கள் அமர்ந்து கொண்டு, வருவோர் போவோருக்கெல்லாம் வாழைப்பழம் கலந்த பாலை கொடுப்பார்கள். உங்களில் எத்தைனை பேர்கள் குடித்திருப்பீர்கள்?!?!
ஒடுக்கத்து புதன்:
பெண்கள் அனைவரும் (முக்கியமாக கல்யாணம் ஆகாத பெண்கள்) அன்றைய நாட்களில் கடலுக்குச் செல்வார்கள்(!!!) முசீபத்துகள்!! கழியும் நாள் என்று (ஒரு கதையைச்) சொல்வார்கள் ‘ஹத்’ எனும் ஓர் விஷயமுண்டு பனை ஓலையில் கருப்பு மையால் எழுதி தண்ணீரில் கரைத்து குடிப்பார்கள். அதில் ‘சலாமுன் கவ்முன் மின்ரப்பிர்ரஹீம் சலாமுன் அலானூஹின்’ (துவங்கி நீண்டு கொண்டு போகும்) என்று எழுதி இருக்கும். அதற்காக சொல்லப்படும் கதை நாயகம்(ஸல்)அவர்களின் மேல் கண்திருஸ்டி பட்ட நாளாம் அந்த புதன் ஆகையால் தான் முசீபத் கழிக்கிறார்களாம் கடலுக்கு சென்றவர்கள் கிதுர் நபி பெயரால் துஆ செய்வார்களாம் (!!!?).
வேறு ஒரு சம்பவம், இதற்கும் வாசகர்களாகிய உங்கள் அனைவரிடமிருந்து உண்மையான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். அதே காலத்தில் நமதூரின் மார்க்க மேதை, மிகத் தெளிவான அதோடு தைரியமான ஆலிம் அவர்கள் எந்த வீட்டில் ரேடியோ படினாலும் அந்த வீட்டாரை கண்டித்து விட்டு செல்வார்கள் (இஸ்லாமிய பாடலாக!!! இருந்தாலும் சரியே) சொந்தக்கார வீடாக இருந்தால் வீட்டிற்குள் அவ்வீட்டாரின் அனுமதியுடன் உள்ளே சென்று ரேடியோவை அகற்றச் சொல்வார்கள்.
தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்த காலம் ஊர் ஆலிம்கள் அனைவரும் ஒன்று கூடி கண்டித்தார்கள், எதிர்ப்புகளை தெரிவித்தார்கள். அவர்களுடைய அறிவுரையை கேட்டு 'இல்லத்தின் நடுவே உள்ளத்தை கெடுக்கும் டிவி' என்று நோட்டீஸ் அடித்து டிவிப் பெட்டிகள் வைத்திருந்த வீடுகளின் கதவில் ஒட்டிவிட்டு நிறைய பிரச்சனைகளையும் நாங்கள் சந்தித்தோம்.
இன்றய ஆலிம்களோ 'விளம்பர இடைவேளைக்குப்' பிறகு மீதமுள்ள ஹதீஸை பார்க்கலாம் என்று டிவிக்குள்ளேயே வந்து விட்டார்கள். ஏகத்துவ எழுச்சி வெகுண்ட காலங்களில் ஆலீம்கள், ஆடியோ கேசட்டில் பிரச்சாரம் தொடர்ந்த்து அதன் பின்னர் சீடி / டிவிடி வழியாக வீடியோவில் வந்து இஸ்லாமியர் வீடுகளுக்குள் டீவி ஓர் அவசியமானதாக மாறக் காரணமாகி விட்டார்கள்.
சரி இனி உங்கள் பங்கிற்கு என்ன சொல்ல வருகிறீர்கள்!? விஞ்ஞான மாற்றங்களினால் சீர்திருத்தமா அல்லது சிரழிவா ?
மு.செ.மு.சஃபீர் அஹமது
21 Responses So Far:
Assalamu Alaikkum,
Dear brothers and sisters,
Science and technologies are for enhancing the life of human beings.
But not to destroy the human, his morale, and spiritual activities.
For example a knife is an invention for human useful to cut vegetables, fruits, etc. A same knife can be used to kill some other human.
Facebook is a wonderful social networking tool. But people use it for bad purposes and simply wasting their valuable time on it.
There is no blame on technologies which is revolution must happen in the world for evolution of human. But we have to blame people when they use the science and technologies for evil purposes. Where is the evil? Its living in the mind of evil people(Saitan).
How to resolve this? We need to follow the religion and morale values based on truth in every movement and moment of life. No other way around.
Thanks and best regards,
அருமையான Article வெளியிட்ட நீங்கள் உங்கள் பதிவிற்கு முந்திய பதிவிற்கு பினூட்டம் எழுதினால் நன்றாக இருக்கும். முந்த்திய பதிவின் பின்னூட்டங்களை பார்க்கவும். விஞ்ஞான மாற்றங்கள் மனிதனை தவறான பாதையில் மெல்ல மெல்ல கொண்டு செல்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதே சமயம் விஞ்ஞான வளர்ச்சி இல்லாவிட்டால் நாம் இங்கு தகவல் பரிமாற்றம் செய்ய முடியாது.எனவே ந்ண்மையான வழிகளுக்கு பயன்படுத்துவதற்கு அல்லாஹ் அருள் செய்வானாக ஆமீன்
Abdul Razik
Dubai
There is no blame on technologies which is revolution must happen in the world for evolution of human. But we have to blame people when they use the science and technologies for evil purposes.
வளர்ச்சிகள் ஏற்ப்படுவது வரவேற்க்கதக்கது அதனை வக்கிர புத்தியுடன் பயன்படுத்துவதுதான் வெறுக்க்தக்கது..கண்டுபிடிப்புகளை வரவேற்போம் இறை பயத்தை மனதில் நிறுத்தி பயன்படுத்துவோம்
வளர்ச்சிகள் ஏற்படுவது வரவேற்கதக்கது, அதனை வஞ்சிக்கும் / வக்கிர புத்தியுடன் பயன்படுத்துவதுதான் வெறுக்தக்கது...!
புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை வரவேற்போம்! அங்கே மட்டுமல்ல எங்கும் இறையச்சத்தை மனதில் நிறுத்தி பயன்படுத்துவோம்...!
கல்வெட்டு குறிப்பினையும் நினைவில் கொள்ள வேண்டும் !
அஸ்ஸலாமு அலைக்கும் என் அன்பு வலைதள அன்பர்களே ஒடுக்கத்து புதனும் விராத்து விழாக்களும் இன்றைய தலை முறையாகிய நாம் மறுத்தும் மறந்தும் விட்டோம் இந்த மார்க்க அறிவை பெற்ற நம்மில் பலர் அடியோ அல்லது வீடியோ வழியாக விசயங்களை தெரிந்தவராகத்தான் இருப்போம். நாம் கல்லூரி மாணவராகவோ அல்லது வேளை கிடைக்கும் வரை ஓய்வில் இருக்கும் பொழுது ஓர் இயக்கத்தில் ஈடுபடுத்திக் கொண்டு பயான் கேட்க்கும் நோக்கோடு தொலைக்காட்சி பெட்டியை வீட்டிற்க்குள் நுழைய வைத்திருப்போம் பிறகு வேலை நிமித்தமாக நாமெல்லாம் ஆளுக்கு ஒரு நாட்டில்,ஊரில். நாம் வாங்கிவைத்த டீவி பெட்டியோ சீரியல் அடிமைகளை உருவாக்கி இருக்கிறது.
ஒருகாலத்தில் உம்மா ராத்தா சாச்சி அனைவரும் மகரிப்தொழுத முஸல்லாவில் அமர்ந்து இஷா பாங்கு சொல்லும் வரை ஓதிக்கொண்டிருப்பார்கள் மகரிபிற்க்கு செய்த ஒழு இஷா தொழுகைவரை பூர்த்தியாகும்.இப்பொழுதோ அந்த நேரத்தில் தொலைக்காட்சிமுன் தான் அவர்களை காணமுடிகிறது.
பி.ஜெ அவர்களின் வீடியோ சொற்பொழிவிற்க்கு இளைஞர்களிடையே நல்ல வறவேற்ப்பு இருந்த காலம் சுன்னத் ஜம்மாத்திற்க்கு எதிராக சிலவிசயங்களை பி.ஜே அவர்கள் கூறும் பொழுது அதர்க்கு பதில் அளிக்க சுன்னத் ஜமாத் ஆலிம்கள் முன்வரவில்லை காரணம் கேட்டால் வீடியோ பதிவெல்லாம் ஹராம் என்றார்கள்!!??
இன்றோ பி.ஜே.பித்னா .காம் என வெப்சைட் திறந்து இருக்கிறார்கள் இந்த விசயங்களுக்கும் வாசகர்களாகிய உங்களின் கருத்தை எதிர் நோக்கி இருக்கிறேன்
ஜவுளிக்கடை ஸ்பான்சரில் புர்க்காவின் மகிமையை சொல்லும் ஆலிம் ஹாதீசுக்கு இடையே இறன்டு பெண்கள் புடவையை காட்டிக்கொண்டு ஆடிப்பாடிவிட்டுச்செல்வார்கள் முறன்பாடுகளின் உலகம் டீவியை பொறுத்தவரை அனாச்சாரங்கள் 99 சதவிகிதம் செய்தி வாசிப்பவர்கூட கவர்ச்சி உடையோடுதான்
\\Science and technologies are for enhancing the life of human beings.
But not to destroy the human, his morale, and spiritual activities.
For example a knife is an invention for human useful to cut vegetables, fruits, etc. A same knife can be used to kill some other human.
Facebook is a wonderful social networking tool. But people use it for bad purposes and simply wasting their valuable time on it.
There is no blame on technologies which is revolution must happen in the world for evolution of human. But we have to blame people when they use the science and technologies for evil purposes. Where is the evil? Its living in the mind of evil people(Saitan).
How to resolve this? We need to follow the religion and morale values based on truth in every movement and moment of life. No other way around.\\
DITTO
வேதனை, வெந்த புண்ணில் சுடுதண்ணி ஊற்றி கழுவ எத்தனிக்கும் சுயநலக் காரர்களிடம் டெக்னாலஜியும் இருமாப்புடன் மாட்டிக் கொண்டது !
//வேதனை, வெந்த புண்ணில் சுடுதண்ணி ஊற்றி கழுவ எத்தனிக்கும் சுயநலக் காரர்களிடம் டெக்னாலஜியும் இருமாப்புடன் மாட்டிக் கொண்டது !\\
உண்மையிலும் உண்மை! இஸ்ரவேலர்களின் கையில் ஊடகங்களும் தொழில்நுட்பமும் அகப்பட்டுக் கொண்டதால் அகிலத்தையே ஆட்டிப் படைக்கும் ஆணவத்தில்- இதயமற்ற செயல்களில்- இளைஞர்களை வழிகெடுக்கின்றனர்!
தொழிலதிபர் மு.செ.மு.சபீர் அவர்கட்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
தொடக்கத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் யாவும் இற்றைப் பொழுதினில் மறந்து விட்டோம்; மன்னிப்பை நாடி மீண்டு விட்டோம்; மீண்டும் நினைவு படுத்த வேண்டா. அடுத்துள்ள நற்செயல்கள் உண்மையில் நிறுத்தப்பட்டுள்ளவைகளைக் கண்டு வேதனையடைவோம். உண்மையில் அப்பொற்காலத்தில் குர்-ஆன் ஓதும் ஒலியைக் கேட்டுத் தெருவில் செல்லும் நமக்கு மிகவும் இன்பமாக இருக்கும். அப்படி இனிமையாகக் குர்-ஆன் ஓதும் பெண்பிள்ளையைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் பலர் இருந்திருக்கின்றனர். உங்களின் ஆக்கம் என் நினைவு நாடாக்களைச் சுழற்றி விட்டது.
விஞ்ஞான வளர்ச்சியினால் இரண்டு பாதை உண்டு, ஒன்று கெட்டு சீரழிந்து சின்னாபின்னாமாவது, அடுத்த பாதை நேர்வழிக்கு பயன்படுத்திக் கொள்வது. இதில் எதை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பதுதான் மிக முக்கியம்
ஷஃபான் பிறை 13 ல் வாழப்பழம் பால் குடித்து, கொடுத்து அதோடு ஷஃபர் மாசம் கடைசி புதனில் ஹத்து எழுதி கரைத்து குடித்து, ஒஸ்தாருக்கு பிரதிநிதியாக ஹத்து யாபாரம் செஞ்சு கொடுத்தது கடந்து இப்ப அதெல்லாம் மார்க்கத்தில் இல்லாதது என்று விளங்கின காலமிது.
விஞ்ஞான வளர்ச்சியில் சீர்திருத்தமா சீரழிவா என்பது நம் கையில்!
ஏற்கனவே கத்தி / கொலை / வெங்காயம் என பெருசுகள் எழுதிவிட்டது. அதே ரூல்ஸ்தான் விஞ்ஞானத்துக்கும்.
அஹமது அமீன் சொன்னதை அபுல் கலாம் அவர்கள் ஆமோதித்துல்லார்கள்
கத்தி காய்கறிகள் வெட்டவும் உதவும் கொலை செய்யவும் உதவும் அதை பயன் படுத்துபவர்களை பொருத்ததுதான் என்று சொல்லி இருக்கிறீர்கள்
ஃபேஸ்புக் இணையதளம் டீவி இவைகளாகிய கத்தி கைபிடி இல்லாத கத்தி உபயோகிப்பவர்களையும் காயப்படுத்துகிறது அதில் வெங்காயம் வெட்டினாலும் சரியே
மற்றொரு விசயம் சுகர் கொலஸ்ட்றால் பிரஸ்ஸர் உள்ள மனிதருக்கு வாழை இலையில் சோறு பாகற்க்காய்கூட்டு மட்டன் இனிப்பு ரசம் கெட்டி தயிர் இவைகளை பரிமாரினால் அவன் எவைகளை ஒதுக்குவால் எவைகளை தின்பான் இதன் பதில் இணைய தளம் டிவிக்கு பொருந்தும்
என் வாப்பா டீவீ உள்ள வீட்டிற்குள் நுழையவே மாட்டார்கள் அது சொந்தக்கார வீடாக இருந்தாலும் சரியே.. அல்லாஹ்வின் உதவியால் இன்றுவரை எங்கள் வீட்டில் தொலைக்காட்சி இல்லை...
இப்போது டெக்னாலஜியின் வளர்ச்சியால் தொலைக்காட்சி நம் வாழ்வின் ஒன்றாகி தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டாது. தேவைக்கு தேவையான அளவு பயன்படுத்தினால் நாம் பயனுறலாம்
அம்மணமாய் இருக்கும் ஊரில்
கோமணத்துடன் செல்பவன் பைத்தியகாரன்
நவீன யுகம் ..தவிர்க்கமுடியாத சாதனங்கலாய்
டிவி போன்ற சாதனைகள் ஆகியது
கலாசார அழிவுக்கான அறிகுறி
இல்லத்தின் நடுவே உள்ளத்தை கெடுக்கும்
டிவி ...facbook இல்லத்திலிருந்து
பெண்களை வெளியே அழைத்து செல்கிறது
இயற்க்கை விவசாயம்
தொழில் நுட்பத்தால் விஷ
காய் கணிகளை தருகிறது
உடை விசயத்தில்
அங்கங்கள் தெரியும் அளவிற்க்கு
தொழில் நுட்பம் கவர்ச்சியை தருகிறது
சித்த மருத்துவங்கள் மாரி
அலோபதி மருத்துவம்
பக்கவிளைவுகளை தருகிறது
குறைந்த நாள் வாழ்ந்தாலும்
ஆரோக்கியத்துடன் வாழ்ந்த மனிதன்
நோய்களோடே வாழ்க்கையை நடத்துகிறான்
தொலை நுட்ப புறட்சி புதிய
நோய்களை உருவாக்கியுல்லது
ஆகிறத்தின் வெற்றிக்கு
விஞ்ஞானமாறம் தேவை?இல்லை
என்பதே எனது உருதியான முடிவு
ஆகிறத்தின் வெற்றிக்கு
விஞ்ஞானமாறம் தேவை?இல்லை
என்பதே எனது உருதியான முடிவு
நாகரீக உலகின் தொட்டிலாய் நாம் இன்றிருக்கும் இடம் அன்று இருந்திருக்கிறது ... நவீன நாகரீகம் , யுகம் , வேகம் என்ற பெயரால், நாம் நம் முன்னோர் விட்டுச் சென்ற வழித்தடங்களை - பாடங்களை , அவர்தம் பெருமைகளை... கவனிக்காமல் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.. காலடியில் கிடக்கும் புதையல்களை , சுரங்கங்களைக் கண்டுகொள்ளாமல்... மேல் நோக்கியப்பார்வையில் ...தொலைதூரம் தேடிச் சென்று பிறரின் பெருமைகளைப் பார்த்துப் போற்றிக் கொண்டிருக்கிறோம் .
நாகரீக உலகின் தொட்டிலாய் நாம் இன்றிருக்கும் இடம் அன்று இருந்திருக்கிறது ... நவீன நாகரீகம் , யுகம் , வேகம் என்ற பெயரால், நாம் நம் முன்னோர் விட்டுச் சென்ற வழித்தடங்களை - பாடங்களை , அவர்தம் பெருமைகளை... கவனிக்காமல் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.. காலடியில் கிடக்கும் புதையல்களை , சுரங்கங்களைக் கண்டுகொள்ளாமல்... மேல் நோக்கியப்பார்வையில் ...தொலைதூரம் தேடிச் சென்று பிறரின் பெருமைகளைப் பார்த்துப் போற்றிக் கொண்டிருக்கிறோம் .
sooooppppeeeerrrrr(super commend)
Thank you=Jazakkallah khairan Ya Sabeer(Tiruppoor)
Post a Comment