அகரம் முதலாம் தாய்மொழி அழகு
இகரம் துவக்கும் வார்த்தைகள் அழகு
சிகரம் உயர்ந்த இமயம் அழகு
இரக்கம் நிறைந்த இதயம் அழகு
முழுமதி யதற்கு முகில்கள் அழகு
முன்னிர வுக்கு மின்மினி அழகு
முதியவர் கட்கு முன்நரை அழகு
முதிர்கன்னி யற்கு மெளனம் அழகு
பிரிந்த தண்டவாளம் பயணிக்க அழகு
பிரியாத சொந்தபந்தம் பழகுதற்கு அழகு
புரிந்த நண்பர்கள் இளமைக்கு அழகு
புரியாத அன்பர்க்கு போதித்தல் அழகு
லாபமோ நட்டமோ நேர்மையே அழகு
கோபமோ தாபமோ பொறுமையே அழகு
பாவமோ பழியோ பரிகாரம் அழகு
சாபமோ சதியோ போராட்டம் அழகு
காதலோ காமமோ கல்யாணம் அழகு
கண்ணிலோ பெண்ணிலோ கண்ணியம் அழகு
காலிலோ கையிலோ கட்டுப்பாடு அழகு
கனவிலோ நினைவிலோ கற்புதான் அழகு
மரக்கிளை களுக்கு மலர்கள் அழகு
மழைமுகில் களுக்கு மின்னல் அழகு
மணமக் களுக்கு மென்னகை அழகு
மதபோத கர்க்கு வாய்மைதான் அழகு
தொழுகைக்கு விழிக்கும் விடிகாலை அழகு
தொழுதபின் அருந்தும் தேநீர் அழகு
திருமறையோதித் துவக்கும் நாள் அழகு
இருகரமேந்திக் கேட்கும் துஆ அழகு
உழுகின்ற போதிலே வயல்வெளி அழகு
விழுகின்ற இளவெயில் நடைக்கு அழகு
விழுதுகள் தொங்கிடும் ஆலும் அழகு
பழுதற்ற எண்ணத்தில் ஆளும் அழகு
அகமதி யர்க்கு அறமே அழகு
அகமதி லென்றும் அன்பே அழகு
முகமதில் தங்கும் புன்னகை அழகு
இகமது இகழா இல்லறம் அழகு
முகமதி யர்க்கு முகமன் அழகு
அகமது(ஸல்)வைத் தந்த அல்லாஹ் அழகு
சுகமிது நிலைக்க இஸ்லாம் அழகு
யுகமிது இழந்தால் மறுமையே அழகு!
சபீர்
57 Responses So Far:
இந்த கவிதை அழகு !
இதை எழுதிய கவியோ அழகு !
மீண்டும் வருகிறேன்...
அழகை ஆராதிக்க !
அழகை வடிக்கும் அழகுக் கவிதை
பழகும் குணம்போல் படிக்க இனிமை
மனதைக் கவர்கின்ற வர்ணணை கண்டேன்
இனிதாய்ச் சுவைதரும் இக்கவி என்பேன்
இதைவிட மெய்க்கவி எங்குநான் காண்பேன்
எதைவிட வேண்டும் எதைத்தொட வேண்டும்
அறியேன்; முடிவாய் அனைத்தும் அழகாய்
அறிவேன் மனம்போல் அழகு.
ஆக மொத்தத்தில் நீங்களோ இந்த அவைக்கு (எங்களுக்கு) அழகு!
முகமதி யர்க்கு முகமன் அழகு
அகமது(ஸல்)வைத் தந்த அல்லாஹ் அழகு
சுகமிது நிலைக்க இஸ்லாம் அழகு
யுகமிது இழந்தால் மறுமையே அழகு!
அழகான வர்ணனை
அல்லாஹ் உங்களுக்கு (எல்லாருக்கும்)
சொர்க்கம் தந்து
அழகு பார்க்கட்டும்
//முதியவர் கட்கு முன்நரை அழகு//
நன்றி. காரணம் தெரியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். புரிந்தது.
Ebrahim Ansari சொன்னது…
//முதியவர் கட்கு முன்நரை அழகு//
நன்றி. காரணம் தெரியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். புரிந்தது.
----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நான் முன்பு இது பற்றி கவிவேந்தரிடம் கூட எழுதியதை பகிர்ந்ததுண்டு அது"
நரை என்பது குறையல்ல!
அது நிறை! அனுபவத்தின் அடையாளம்.
சிகரம் உயர்ந்த இமயம் அழகு
இரக்கம் நிறைந்த இதயம் அழகு
---------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். எதையும் விட இரக்கம் கொண்ட இதயம் உயரம் , அது இறக்கம் இல்லாத உயர்வு மட்டுமே கொண்ட குணம்.
முதிர்கன்னி யற்கு மெளனம் அழகு
-------------------------------------------------------
ஊமை காயம் பல!, வாய்விட்டு அழாத ஊமையாக மெளனம் காப்பது என்பதை உவமையாக சொன்னவிதம் அழகோ,அழகு!இது இயல்பான இயலாமை கூட!
பிரிந்த தண்டவாளம் பயணிக்க அழகு
பிரியாத சொந்தபந்தம் பழகுதற்கு அழகு
புரிந்த நண்பர்கள் இளமைக்கு அழகு
புரியாத அன்பர்க்கு போதித்தல் அழகு
---------------------------------------------------------
பிரிந்தால் தான் தண்டவாளம் அதில் வண்டி ஓடும்!
பிரியாததுதான் உண்மை சொந்தம்!
புரிந்து நடப்பதே நட்பு! நண்பர்கள்,
புரியாதவர்களுக்கு போதிப்பது பேறுதவி!படிப்பின் பயனே அதில்தான் அடங்கி உள்ளது, மொத்தத்தில் உதாரணங்கள் எல்லாம் கொள்ளை அழகு!
லாபமோ நட்டமோ நேர்மையே அழகு
கோபமோ தாபமோ பொறுமையே அழகு
பாவமோ பழியோ பரிகாரம் அழகு
சாபமோ சதியோ போராட்டம் அழகு
-----------------------------------------------------
இதுதான் இஸ்லாம்!இதில் அடங்கிவிடுகிறதே எல்லாம்!
காதலோ காமமோ கல்யாணம் அழகு
கண்ணிலோ பெண்ணிலோ கண்ணியம் அழகு
காலிலோ கையிலோ கட்டுப்பாடு அழகு
கனவிலோ நினைவிலோ கற்புதான் அழகு
---------------------------------------------------
அழகு, அழகு, எல்லாம் அழகு!இதில் சொன்ன விதம் அழகு!செயல் படுத்தினால் வாழ்வே அழகு!அறிவுரை அழகு! முடிவுரையாக நல்லுரை அழகோ, அழகு!
மரக்கிளை களுக்கு மலர்கள் அழகு
மழைமுகிழ் களுக்கு மின்னல் அழகு
மணமக் களுக்கு மென்னகை அழகு
மதபோத கர்க்கு வாய்மைதான் அழகு
-------------------------------------------
கவியரசே! முகில் தானே? முகிழ் என்றால் பொழிவது!முகில் மேகம் !இதில் எது சரி என நீங்கள் சரிபார்க்கவும். மேலும் என் தனிப்பட்ட கருத்து போதகருக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் வாய்மை அழகு! ஆனால் கவியரசு சொல்லவிழைவது ' மார்கம் எடுத்துச்சொல்லும் அந்த போதகர்கள் நிச்சயம் உண்மைக்கு புரம்பானதை சொல்லக்கூடாது.அது உண்மையே!
தொழுகைக்கு விழிக்கும் விடிகாலை அழகு
தொழுதபின் அருந்தும் தேநீர் அழகு
திருமறையோதித் துவக்கும் நாள் அழகு
இருகரமேந்திக் கேட்கும் துஆ அழகு
-------------------------------------------------------
அழகின் உச்சம் , இறை அச்சம் ! என்பதை அழகாய் சொல்லிய விதம் அழகோ, அழகு!
உழுகின்ற போதிலே வயல்வெளி அழகு
விழுகின்ற இளவெயில் நடைக்கு அழகு
விழுதுகள் தொங்கிடும் ஆலும் அழகு
பழுதற்ற எண்ணத்தில் ஆளும் அழகு
------------------------------------------------------------
இங்கே கவியரசுவின் மொழிஆற்றலும், கவிஆளுதளும் அழகோ,அழகு!
அகமதி யர்க்கு அறமே அழகு
அகமதி லென்றும் அன்பே அழகு
முகமதில் தங்கும் புன்னகை அழகு
இகமது இகழா இல்லறம் அழகு
முகமதி யர்க்கு முகமன் அழகு
அகமது(ஸல்)வைத் தந்த அல்லாஹ் அழகு
சுகமிது நிலைக்க இஸ்லாம் அழகு
யுகமிது இழந்தால் மறுமையே அழகு!
------------------------------------------------------------
உண்மை, எதார்த்தம் , நிதர்சனம், இப்படி எந்த வார்தை வைத்து இதனை பாராட்ட?கொண்ட கொள்கையை விளக்கியவிதம் அழகு! அதை மொழி கொண்டு அழகு செய்தது அழகு!இப்படி அழகாய் , அடுக்காய் எழுத அல்லாஹ்வின் அருள் பெற்றதே பேரழகு!எல்லாப்புகழும் அல்லாஹுக்கே! கவிஞரே! வாழ்த்துக்கள்.
//உழுகின்ற போதிலே வயல்வெளி அழகு//
எப்படி பாஸ்?? உழுவும்போது சேற்றுவயல்தானே....எப்படி அழகாக இருக்கும். ?
//தொழுகைக்கு விழிக்கும் விடிகாலை அழகு
தொழுதபின் அருந்தும் தேநீர் அழகு//
இது எனக்கு அதிராம்பட்டினத்தில் நிகழ்ந்தால் இன்னும் அழகு. தேநீருக்கு மெயின்ரோட்டுக்கடைதான் அழகு.வீட்லெ தேநீர் குடிக்கனும்னா லேட் ஆவறதிலே மயக்கமே வந்துடும்
திருட அழைக்கும் அழகு - சொன்னவர் கவிக்கோ !
கவிதைக்கு பொய் அழகு - சொன்னவர் கவிப் பேரரசு !!
இடையில் காண்கின்ற அழகு - இடைக் கால கவிஞன்
ஆனால் !
எங்கும் திருடாத வார்த்த அழகு - உங்கள்
கவிதைக்கு மெய்யே அழகு ! - எழுத்து
நடையில் என்னே அழகு !!
கருத்தில்...
அவரவர்களுக்கு பிடித்ததை எடுத்து எழுதியதும் அழகு !
அனைத்து வரிகளும் அழகோ, அழகு!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அதிரை நிருபரின் சொந்தங்களுக்காக மேலும் சில அழகுக் குறிப்புகள்:
அபு இபுறாகீம் துவக்கிய இச்சபை அழகு
அன்புடன் அவரிணைத்த தேன்படம் அழகு
கவியன்பன் கருத்திட்டால் கவிதையாய் அழகு
கவிஞரிவர் கைபட்டால் தமிழ் கர்ப்பமுறும் அழகு
எம் ஹெச் ஜே எதிர்கொள்ளும் போட்டிகள் அழகு
இம்முறை "அன்புக் குறிப்புகள்" எழுதினால் அழகு
அர அல ஆமோதித்தால் அதுதான் கவிக்கு அழகு
ஆங்காங்கே அவர் சுழட்டும் சாட்டையும்தான் மிக அழகு
ஈனா ஆனா காக்காவின் இன்முகம்
அழகு
ஒற்றை வரியில் தட்டிக்கொடுத்த வித்தை மிக அழகு
வாய்வழிப் புன்னகை வாய்க்கும்போது அழகு
வாழ்வுசொல்லும் முன்நரையே நிரந்தர அழகு
கிரவுனார் தமிழுரை கவிதைக்கு அழகு
கிடைத்தால் பின்னூட்டம் நிறைவது அழகு
முகில் முகிழில் கிரவுனாரின் திருத்தங்கள் அழகு
முறைப்படி மாற்றுதல் அ.நி.க்கு அழகு
ஏனையோருக்கும் வாய்மை இயல்பானால் அழகு
மனம் மாற்றும் போதகர்க்கு மெய் மட்டுமே அழகு
//முகில் முகிழில் கிரவுனாரின் திருத்தங்கள் அழகு
முறைப்படி மாற்றுதல் அ.நி.க்கு அழகு//
கிரவுனுரைக்கு என்றுமே மதிப்புரை(கள்) உண்டு !
அதனை ஏற்று மாற்றிடச் சொன்னதும் அழகு !
தேனடையாய்த் தீஞ்சுவையால் தித்திக்கும் பாக்களில்
வானலையில் வந்த வலைத்தளப் பூக்களாய்க்
கானமழை ஓசைக் கவிதை மலர்ந்தன
தேனதனை மொய்த்தோம் தெளிந்து
\\வானலையில் வந்த வலைத்தளப் பூக்களாய்க்\\
பொழிப்புரை:
உன் இல்லத்திலிருந்து நீ பதித்த இக்கவிதைச் செடி, வான்வழியான அலைகளால் எங்களின் கணினிக் களத்தில் - அ.நி. வலைத்தளக் காணியில் கவிதைப் பூக்களாய் மலர்ந்தன; நீ கோத்தப் பாக்களாலான பூக்களை மோத்தலில் எங்கள் உளமெலாம் மகிழ்வால் மலர்ந்தன.
என்னடா கடையைமூடிவிட்டு வந்து கருத்திடுவதற்குள் ஏற்புரை எழுதிவிட்டாய்!
எல்லாம் 'அழகுதான்' போ!
anyhow Sabeer, You made me to recall the favourite lines from my memory about the poet John keats in his "ode to grecian urn":
Heard melodies are sweet, but those unheard Are sweeter; therefore, ye soft pipes, play on; Not to the sensual ear, but, more endear'd, Pipe to the spirit ditties of no tone:
//முழுமதி யதற்கு முகிழ்கள் அழகு//
அ.நி.: இங்கும் ஒரு ச்சின்ன "ல்" ப்ளீஸ்!
என் னுயிர் ஜாகிருக்குள் நான்தான் அழகு
விண் துணைக் கோள்களுக்குள் நிலாதான் அழகு
பசிகொண்ட வயிற்றுக்குச் சோற்றுப் பருக்கைகள் அழகு
ரசிக்கின்ற கண்களுக்குப் பசும் வயல்தான் அழகு
விளைக்கின்ற உழவனுக்கோ சேற்றுக் கழனிதான் அழகு
சேற்றுவயலாடி நாற்றுநடல் வைரமுத்துவுக்கு அழகு
அங்கே ஒரு 'ச்சின்ன "ல்" வச்சுட்டு அடுத்த வரிக்கு வந்தேனா !
இங்கெ என் முன்னால் நின்ற மின் மினி அழகோ அழகு !
தலைப்பை பார்த்ததும் புட்டமாவு பூசி மை இட போறாரோ என்று நினைத்தேன் ஆனால் இங்கு கொடுத்த குறிப்பு உண்மையில் அழகோ அழகு
ஏற்புரைக் குறிப்புகள் தொட்ர்கின்றன:
அபு இபுறாகீம் பட்டியலில் அத்தனையும் அழகு
அண்ணாவியார் கருத்திலுள்ள ரசனையும்தான் அழகு
இக்பாலின் இருமலிலும் இலக்கியத்தின் அழகு
இங்கிலீசு கவிதையிலே ஏகாந்தம் அழகு
அதிரைநிருபரின் திருவள்ளுவர் ஹமீது நக்கல் அழகு
இரு வரிகளில் எழுதிவைத்து கருத்தும் நல் அழகு
உங்கள் கவிதையை படித்து சுகம் காண்பதே தனியழகு...வார்த்தைகள் அழகு அதனை கோர்த்த அழகு அதன் அர்த்தங்கள் அழகு..மொத்தத்தில் எங்களையெல்லாம் உங்கள் கவிதையால் கட்டிப்போட்டு வைத்து இருக்கும் உங்கள் உள்ளம் அழகு...உருவமும் அழகுதான்..நன்றி காக்கா
//உருவமும் அழகுதான்..நன்றி காக்கா //
சொல்லவே இல்லே ! :) இருங்க இருங்க பார்க்கிறேன்...
//உருவமும் அழகுதான்//
அபு இபுறாகீம், பயப்படாதிய. இது மட்டும் யாசிரின் "தன்னிலை விளக்கம்"
Reflections of great many thirst of beauty and harmony.
//சொல்லவே இல்லே ! :) இருங்க இருங்க பார்க்கிறேன்...// யான் எங்க காக்காவிற்க்கு என்ன குறைச்சல் ...
அனைத்துமே அழகுதான்!
////முகமதி யர்க்கு முகமன் அழகு
அகமது(ஸல்)வைத் தந்த அல்லாஹ் அழகு
சுகமிது நிலைக்க இஸ்லாம் அழகு
யுகமிது இழந்தால் மறுமையே அழகு!/// ********
******* இதுதான் உலகத்தின் அனைத்து அழகிலும் அழகு!
வாழ்த்துக்கள்! சபீர்!
கவிக் காக்கா.... மற்றும் யாசிர் !
உள்ளம் உருக்கும் அழகிய கவிதை வடித்தவங்களை(யும்) அழகுன்னு சொன்னதைத்தான் சொல்லவேயில்லையே என்று சொன்னேன்...
நன் ஒன்னும் தப்பாச் சொல்லிட்டேனா !?
கவிதையதோ அழகு ! ஏற்புரையோ அறிவு!மாஷா அல்லாஹ்.
மொத்தத்தில் அழகு..எல்லா வரிகளும்..
Beauty is in the eyes of the beholder. The reason for different
opinions of seeing the same thing(either beauty or ugly) is because of the perceptions of the individuals. In general poets' view point of the world and things are superior and peculiar. That adds freshness and personal touch to the poetry.
இதோ மிச்சம் மீதி ஏற்புரை:
யாசிரின் கருத்திற்குள் உள்ளன்பு அழகு
அலாவுதீன் அறிவுறுத்தும் ஆன்மிகம் மிக அழகு
இர்ஷாதின் இயல்பு எப்போதும் அழகு
அஹ்மது அமீனின் ஆங்கிலம் அதி அழகு!
மற்றுமொரு பதிவுடன் சந்திப்போம், இன்ஷா அல்லாஹ்!
அஸ்ஸலாமு அலைக்கும்.
சபீர் காக்கா நலம் நமறிய ஆவல்.
----------------------------------------------------------------------
சபீர் என்ற மூன்றெழுத்து தாங்கள் பெயருக்கு அழகு
வார்த்தைகளின் வர்ணனைக்கு தாங்களின் திறமை அழகு
அதிக கருத்துகளை கவர்ந்திழுக்கும் தங்களின் கவிதைக்கு அழகு
எம்.ஹெச்.ஜெயை கவி போட்டிக்கு இழுப்பதில் தாங்களின் தில் அழகு
அஸ்ஸலாமு அலைக்கும்.
சபீர் காக்கா நலம் நமறிய ஆவல்.
----------------------------------------------------------------------
சபீர் என்ற மூன்றெழுத்து தாங்கள் பெயருக்கு அழகு
வார்த்தைகளின் வர்ணனைக்கு தாங்களின் திறமை அழகு
அதிக கருத்துகளை கவர்ந்திழுக்கும் தங்களின் கவிதைக்கு அழகு
எம்.ஹெச்.ஜெயை கவி போட்டிக்கு இழுப்பதில் தாங்களின் தில் அழகு
லெ.மு.செ.அபுபக்கர் சொன்னது…
எம்.ஹெச்.ஜெயை கவி போட்டிக்கு இழுப்பதில் தாங்களின் தில் அழகு .
-----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பு நண்பன் அபூபக்கர் நலமா? என் மனதில் தோன்றியதை எழுதுகிறேன். மேற்கண்ட வரி தாம் எதார்த்தமாய் எழுதி இருப்பதை அறிவேன். ஆனால் வயதிலும், கவிதையோ இன்னும்
பிற ஆக்கங்களோ இயற்றுவதில்
சகோ.எம்.ஹெச்.ஜெயை மூத்தவர்கள்,
விபரம் கூடியவர்கள். அதனால்
இளையவரை போட்டி கவிதைக்கு அழைப்பது அவர்களின் பெருந்தன்மையே தவிர "தில் என்பது சற்றே அதிகமான வார்த்தை பிரயோகமாக எனக்குப்பட்டதால் இதை எழுதுகிறேன். முடிந்தால் அந்த வரியை நீக்க சொல்லி நெறியாளரிடம் முறையிடலாமே!
சொற்களின் சுந்தரன்; வார்த்தைகளின் வசீகரன்; அடுக்கு மொழிகளின் அலைவீசும் அதிரைத் தென்றல் மகுடக் கவிஞர் க்ரவுனார் அவர்களின் கருத்தை அடியேனும் வழிமொழிகிறேன். தயவு செய்து நெறியாளர் அவர்கள் “தில்” என்ற சொல்லை நீக்க வேண்டுகிறேன். “தில் இருந்தா” என்று கேட்பது போல் ஒரு நெருடல் தோன்றுவதால் அச்சொல்லை நீக்குதல் நலம். கவிவேந்தர் அவர்களின் வேடிக்கையான-வாடிக்கையான வார்த்தையைத் தான் “போட்டிக் கவிஞர்” என்ற சொல்லை இலண்டன் இளங்கவிஞர் அவர்கட்கு அடைமொழியாய்ச் சொல்லி இருப்பது. என்னை அப்படிச் சொல்லவில்லை; என்னைச் சொல்லியிருந்தாலும் நான் வருத்தப்பட மாட்டேன்; ஒரு முறை “போட்டிக்காக” தானும் எழுதுவேன் என்று அவ்விளங்கவிஞர்ச் சொன்னதை வைத்து அவரைப் போட்டிக் கவிஞர் என்று அடைமொழியில் நம் கவிவேந்தர்-ஆஸ்தானக் கவிஞர் சபீர் அவர்கள் அழைத்திருக்கலாம். எனவே, அன்புச் சகோதரர் அபூபக்ரு அவர்களின் “தில்” என்ற ஒரு சொல் நம் மனதில் ஒரு நெருடலை உருவாக்கும் என்பதே க்ரவுனாரின் ஆதங்கம்; அஃதே என் பங்கும்!
A thing of beauty is a joy for ever:
Its lovliness increases; it will never
Pass into nothingness; but still will keep
A bower quiet for us, and a sleep
Full of sweet dreams, and health, and quiet breathing.
-John Keats
//கவி போட்டிக்கு இழுப்பதில் தாங்களின் தில் அழகு//
கவிப்போட்டிக்கு இழுப்பதில் தாங்கள் மன(தில்) அன்பு அழகு என்று நான் பொருள் கொள்கிறேன்
சகோ கவி சபீர் அவர்களின்
உள்ளம் அழகு ..
அதனாலே உதிக்கும்
கருத்தும் அழகு ..
இதற்கு மேல் அழகே
இல்லை என்றே சொல்லலாம்
Dear Brother Iqbal bin Mohammed Saleh,
As you are enriched with poetical literature in English language, my humble request is to write English :Poems and publish in this site.
Yours brother in Islam
Abu Al Kalam bin shaick abdul kader
//A thing of beauty is a joy for ever:
Its lovliness increases; it will never
Pass into nothingness; but still will keep
A bower quiet for us, and a sleep
Full of sweet dreams, and health, and quiet breathing. //
முதுகலை இலக்கிய இக்பாலே,
ஜான் கீட்ஸை இப்படி தமிழ் படுத்தலாமா? அதாவது, தமிழில் படுத்தலாமா?:-) (மொழி பெயர்ப்பதல்ல)
அழகின் பொருள்
நிரந்தர மகிழ்ச்சி;
அழகின்மீதான விருப்பம்
மிகைக்கும் தன்மையது; வெறுமையின்பால்
என்றைக்குமே செலுத்தாதது;
ஆனால்
நமக்குப் படிந்த
அமைதியை ஈந்து;
இனிய
கனவுகள் நிறைந்த
உறக்கத்தையும்
ஆரோக்கியத்தையும்
ஆரவாரமற்ற சுவாஸத்தையும்
தர வல்லது அழகு!
wow..amazing, Dear kavivender!
மரபுக் கவிதையோ, புதுக்கவிதையோ, ஹைக்கூக் கவிதையோ, ஆங்கிலக் கவிதையோ எதுவானாலும், கருக்கலைப்பின்றிக் கருவை ஒட்டியிருந்துக் “கவிதை” என்னும் குழந்தையைப் பிரசவித்தால், அக்குழந்தையின் கவியழகின் ஈர்ப்பு சக்தியின் தாக்கம் மட்டும் இருக்கும் என்பதே கவிதை என்றால் என்ன என்பதற்குத் தற்பொழுது நான் படித்த ஒரு விளக்கம். அதனை அப்படியே நீங்கள் செயலில் காட்டி விட்டீர்கள்!
//A thing of beauty is a joy for ever:
Its lovliness increases; it will never
Pass into nothingness; but still will keep
A bower quiet for us, and a sleep
Full of sweet dreams, and health, and quiet breathing. //
//முதுகலை இலக்கிய இக்பாலே,
ஜான் கீட்ஸை இப்படி தமிழ் படுத்தலாமா? அதாவது, தமிழில் படுத்தலாமா?:-) (மொழி பெயர்ப்பதல்ல)
அழகின் பொருள்
நிரந்தர மகிழ்ச்சி;
அழகின்மீதான விருப்பம்
மிகைக்கும் தன்மையது; வெறுமையின்பால்
என்றைக்குமே செலுத்தாதது;
ஆனால்
நமக்குப் படிந்த
அமைதியை ஈந்து;
இனிய
கனவுகள் நிறைந்த
உறக்கத்தையும்
ஆரோக்கியத்தையும்
ஆரவாரமற்ற சுவாஸத்தையும்
தர வல்லது அழகு!//
My humble interpretation of John Keats below in Tamil, for a review of brother Sabeer.
"அழகிய பொருள் என்றும்
இதந்தரும் மகிழ்ச்சி
அதன் கூடும் அழகு
ஒருபோதும் வெறுமையாகா
ஆனால் பிடிலிசைக்காரனுக்கு
கிட்டும் நிசப்தம்
ஆழ்ந்த இனிய கனவுகள்
நிறை உறக்கமும் நலமும்
அமைதியான சுவாசமும்
தருமே நமக்கு."
Thanks and regards,
Beauty will never lead to emptiness.
But stillness(a kind of emptiness) is the state set for violinist to bring out his amazing, beautiful music that fetches those aspects of beauty to us.
wonderful bro A.Ameen.
You have translated John Keat without harming the sense and scene of it.
you possess quality of writing poems. It does't have to have any rhythm or notes. All it has to have is a 'feel' in it and that particular feel has successfully to be passed into the reader.
Modern poems are written in such a way, which not to have any binds but to simply seed the thought into the readers that the poet intend to.
While writing poems, the language must be used as a tool to express the thoughts of a poet, not a conditional weapon to control the poet and threaten the audience.
I would suggest you to try an english poetry in this forum. The title I would recommend is:
"The edges".
(I started with few lines and could not complete it on time)
Give a try, would you?
//ஆழ்ந்த இனிய கனவுகள்
நிறை உறக்கமும் நலமும்
அமைதியான சுவாசமும்
தருமே நமக்கு."//
நேற்றிரவு எனக்குக் கிட்டியது நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட நாட்கட்குப் பின்னர்!
அதெப்படி? எங்களின் கவிதைக்குள் அடக்க முடியாத அப்படி ஓர் அழகான பெண் வருகின்றாள்?! என் வலைப்பூவில் முன்னரே நான் வடித்து விட்டேன்: “கனவில் கண்டப் பெண்ணே” என்று. நேற்று மீண்டும் அதைவிடப் பேரழகாய் வந்து எனக்கு ஆழ்ந்த உறக்கத்தையும் அமைதியான சுவாசத்தையும் தந்து விட்டுச் சென்றது எப்படி ஜான் கீட்ஸ், இக்பால், சபீர் மற்றும் அமீன் ஆகியோர்க்குத் தெரியும்!
//While writing poems, the language must be used as a tool to express the thoughts of a poet, not a conditional weapon to control the poet and threaten the audience.//
I have read as an English Poet has told,"Modern poems are like playing tennis without net and boundaries"
I like this quote. Would you?
\\I would suggest you to try an english poetry in this forum.\\
Really, I was thinking to say to Mr.Ameen. Our thoughts are same as usual. Insha Allaah, we will get English poems from brother Iqbal bin Mohammed Salesh and brother B.Ahmed Ameen very soon in this site.
Assalamu Alaikkum
Thanks a lot brother Sabeer. I just gave my deliberate attempt to interpret John Keat's lines. I have been kept reading your and brother Abul Kalam's poetic lines which are really having flow of feelings and soul touch in them.
Nowadays my thoughts have been to write some lines of poem. This "Azhagu Kurippugal" title set the stage for all those 55 commenters mashaAllah. 50th comment became my interpretation to John Keats.
Your appreciation is valuable and motivating to write more, and Mr. Abul Kalam's motivation and confidence on me also appreciated.
Inshaallah, I will give a try as you asked me to "The Edges".
Thanks and best regards
\\Inshaallah, I will give a try as you asked me to "The Edges".\\
In Sha Allah, "The Edges" will make a new bridge to our AN readers to enjoy your knowledge.
Post a Comment