கணினித் தமிழ் வரலாற்றில் முத்திரை பதிக்க அடிக்கல் நாட்டிய மிக முக்கியமானவர்களில் ஒருவர்தான், அதிரையின் மைந்தன் தேனீ உமர்தம்பி அவர்கள்!
வாழும் நாட்களில் வீசிய வசந்தம் அவரின் இறப்புக்குப் பின்னர்தான் பாரில் பரவி வியாபித்தது.
சிறு வயதிலிருந்தே அதிகமதிகம் அவர்களோடு நெருக்கமாகவும் பிரியமாகவும் பழகியவர்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்களின் ஒவ்வொரு முயற்சியும் அதற்கான சிரத்தையும் சிலிர்க்க வைக்கும் என்பதே. அதோடு, அதன் பின்னர் கிடைக்கும் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வதோடு இருக்காமல் எப்படி அதனை எட்டிப் பிடித்தார்கள் என்று விளக்கவும் செய்வார்கள்.
1994ம் வருடம் அமீரகத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் இணையம் பரவ ஆரம்பித்த காலங்களில் தனது வீட்டில் இணணயத் தொடர்பைப் பெற்று அங்கிருந்து கொண்டு அவரது சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் அவரவர்களின் அலுவலக கணினிக்கு ஏற்படும் பிணிகளுக்கு மருத்துவம் செய்வார்கள்.
இன்றைய கால கட்டத்தின் அசுர வளர்ச்சியின் பலனாய் கணினிக்குள் ஊடுருவ எத்தனையோ மென்பொருள்கள் வந்து விட்டன, ஆனால் அப்போது இருந்தச் சூழல் முற்றிலும் வேறுமட்டுல்ல தொழில்நுட்பத்தில் எல்லாமே புதிது.
2002 வருடம் துபாயிலிருந்து விடைபெற்று ஊருக்குச் சென்ற இரண்டொரு மாதங்களிலேயே அதிரையில் இணையத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு இங்கிருக்கும் (துபாய், மஸ்கட்) கணினிகளுக்கு அவ்வப்போது ஏற்படும் காய்ச்சலை சரிபார்க்கவும் செய்தார்கள் அதோடு அதன் மேம்பாட்டையும் சீரமைத்து தந்தார்கள்.
அதிரைச் சகோதரர்களின் கணினி (தமிழ்) தொழில் நுட்ப வளர்ச்சியில் மட்டுமல்ல இணைய கணினித் தமிழ் வளர்ச்சியில் அவர்களின் பங்கும் போற்றத்தக்கதாக அமைந்திருப்பது சந்தோஷப்படக் கூடிய விஷயம்.
இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் நேற்று முன் தினம் பெங்களூருவில் நடந்தது, அப்போது சட்டென்று ஞாபகத்திற்கு வந்தது தேனீ உமர்தம்பி அவர்கள் 17 வருடங்களுக்கு முன்னால் இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் இங்கு சார்ஜாவில் நடந்து கொண்டிருக்கும்போது அவர்களின் (துபாய்) வீட்டுக் கணினியில் போட்டுக் காட்டிய புள்ளி விபரங்களும் கிராஃபிக்ஸும் இன்றும் அப்படியே பசுமையாக நினைவுக்கு வந்ததை மறைக்க முடியவில்லை.
இப்போதைய வளர்ச்சியில் இருக்கும் மென்பொருள்களின் உதவியால் அப்படியே மைதானத்தில் பார்க்கும் வீரர்களின் செயல்களை செயற்கையாக காணொளி போன்று செய்ய முடியும் ஆனால் அன்றே அவர்கள் ஒற்றை வரிக் கோட்டில் (single line draw) வண்ணங்களில் செய்து காட்டினார்கள்.
அதன் தொடர்ச்சியாக அவர்களை நினைவுகூறலாமே என்று மனதுக்குள் எண்ணம் தோன்றியது அதன் விளைவே இந்த ஒலிப்பேழை காணொளிப் பதிவு உங்களனைவரின் பார்வைக்காகவும் நினைவில் நிழலாடவும்.
அதிரைநிருபர் பதிப்பகம்
16 Responses So Far:
//2002 வருடம் துபாயிலிருந்து விடைபெற்று ஊருக்குச் சென்ற இரண்டொரு மாதங்களிலேயே அதிரையில் இணையத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு//
நான்தான் அதிரைக்கு முதலில் இன்டெர் நெட் எடுத்தேன் என்று சொல்லாலாம் என்று இருந்தேன்!! (ஆளாலு அப்படித்தானே சொல்லிக்கிட்டு இருக்காங்க)
உமர்த்தம்பிக் காக்கா அவர்கள் பிறந்த ஊரில் அடியேனும் பிறந்திருக்கின்றேன் என்பதும்; அவர்கள் என் உடன்பிறப்புக் காக்கா அவர்களின் வகுப்புத் தோழர் என்பதும்; எங்கள் தெருவுக்குப் பக்கத்துத் தெருக்காரர்கள் என்பதும்; பட்டுக்கோட்டையில் கண்ணப்பாவில் பணியாற்றிய போது அவர்களின் அறிவியல் அறிவை அறிந்தவர்களில் ஒருவனாக இருந்திருக்கின்றேன் என்பதும் இன்றும் என் நினைவுகளில் நின்றாலும்,
எனக்கு அண்மையில் ஏற்பட்ட அனுபவங்கள் இரண்டு:
1) இணையத்தொடர்பில் இருந்த போது, “சத்யமார்க்கம்” தளத்தில் பின்னூட்டங்களைத் தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்தேன்; அப்பொழுது ,”அதிரை உமர்த்தம்பி அவர்கள் பிறந்த ஊரில் பிறந்தவரா நீங்கள்; உங்கட்குத் தமிழில் தட்டச்சுச் செய்யத் தெரியாதா? இதோ ஒருங்குறி என்னும் உமர்த்தம்பித் தட்டச்சில் பழகிக் கொள்ளுங்கள்” என்று பதில் வந்தது; அன்று தான் உமர்த்தம்பிக் காக்கா அவர்களின் திறன் வியந்தேன்! இன்று தமிழில் கவிதைகள் எழுதும் பணியில் ஈடுபட்டுள்ள எனக்கு அவர்களின் மறக்க முடியாத அப்பேருழைப்பே பெரிதும் உதவியாக உள்ளது.
2)இணையம் வழியாக எனக்கு யாப்பிலக்கணம் கற்றுத்தரும் புதுச்சேரி ஆசான் இராஜ. தியாகராஜனார் அவர்கள் ஒரு முறை மின்மடலில் எழுதினார்கள்:” அதிரை உமர்த்தம்பி அவர்கள் பிறந்த மண்ணில் பிறந்ததனாற்றானோ உங்கட்கும் தமிழார்வம் பொங்குகின்றது என்று கணிக்கின்றேன்” உண்மையில் தமிழ் கூறும் நல்லுலகம் உமர்த்தம்பிக் காக்கா அவர்களை மறக்கவே முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.
உமர்த்தம்பிக் காக்கா அவர்களின் மறுமை வாழ்வை அல்லாஹ் சிறப்பாக்கித் தருவானாக (ஆமீன்)
//உண்மையில் தமிழ் கூறும் நல்லுலகம் உமர்த்தம்பிக் காக்கா அவர்களை மறக்கவே முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.
உமர்த்தம்பிக் காக்கா அவர்களின் மறுமை வாழ்வை அல்லாஹ் சிறப்பாக்கித் தருவானாக (ஆமீன்)//
முற்றிலும் உண்மை! நானும் நீங்களும் மட்டுமல்ல
கவியன்பன்! தமிழ்கூறும் நல்லுலகத்தின் எந்தவொரு நல்லவரும் சகோ. அவர்களின் நற்பணியை மறக்கவே முடியாது! அவர்களுக்காக அவர்கள் நினவு வரும்போதெல்லாம் நாம் துஆச்செய்வோமாக!
கையில் ஃபிலிம் சுருளுடன் அவர்கள் நிற்பதுபோலவே தோன்றும் எனக்கு! கா.மு.கல்லூரியில் சிறுவனாக இருக்கையில் பலமுறை அவர்கள் திரையிடும் படங்கள் ஓஸியில் பார்த்த ஞாபகம் மறக்காது!
ஒரு வேண்டுகோள்: உமர் என்ற மாமேதை எல்லோருக்கும் அண்ணனா அல்லது தம்பியா என்று வெளியூர்க்காரர்கள் குழம்ப வாய்ப்பு உண்டு!
எனவே, எதிர்வரும் காலங்களில் "சகோ.உமர்தம்பி அவர்கள்" என்று நாம் எழுதிப் பழகுவோம்! இன்ஷா அல்லாஹ்.
அவர்களின் மறுமை வாழ்வை அல்லாஹ் சிறப்பாக்கித் தருவானாக (ஆமீன்)
தமிழ்கூறும் நல்லுலகத்தின் எந்தவொரு நல்லவரும் சகோ. அவர்களின் நற்பணியை மறக்கவே முடியாது! அவர்களுக்காக அவர்கள் நினவு வரும்போதெல்லாம் நாம் துஆச்செய்வோமாக!அவர்களின் மறுமை வாழ்வை அல்லாஹ் சிறப்பாக்கித் தருவானாக (ஆமீன்)
தம்பி உமர்த் தம்பி அவர்களை இறைவன் தன்னோடு சீக்கிரமாக அழைத்துக் கொண்ட செய்தியை முதலில் அறிந்த அன்று இன்று போல் இருக்கிறது ஏற்பட்ட அதிர்ச்சி. மரணிக்கும் வயதல்லவே என்ற கவலையும் சிந்தனையும் ஒரு பக்கம். குழந்தைத்தனமான இன்முகம் கொண்ட தம்பியை இழந்துவிட்டோமே என்ற எண்ணம மறு புறம. அன்பும் மரியாதையும் அறிவும் நிறைந்து இருந்த ஒரு தம்பி மிக விரைவில் தனது உலகவாழ்விலிருந்து விடைபெற்றது இன்னும் இதயத்தை கனக்கவே செய்கிறது. அல்லாஹ் அவருக்கு சுவனத்தில் நற்பதவி தருவானாக.
அவரை நினைவு படுத்திய அ.நி. ஆசிரியர் குழுவுக்கு நன்றி.
அவர்களின் மறுமை வாழ்வை அல்லாஹ் சிறப்பாக்கித் தருவானாக (ஆமீன்)
அஸ்ஸலாமுஅலைக்கும்.
அவர்களின் மறுமை வாழ்வை அல்லாஹ் சிறப்பாக்கித் தருவானாக (ஆமீன்)
நீங்கள் இங்கு வெளியிட்டுள்ள விழிமத்தின் செய்தித் தொகுப்பாளரின் குரலும், தமிழ் உச்சரிப்பும் மிகவும் அருமையாக உள்ளன. இவர்களின் பிறந்த ஊரின் பெயர் என்ன? இவ்வாசிப்பாளரின் ஏற்ற இறக்கமான முறையில் சோகமான இடங்களில் சொற்களை உச்சரிக்கும் வேளையில் ”சகோ.உமர்தம்பி அவர்களை இவ்வளவு விரைவாக அல்லாஹ் அழைத்துக் கொண்டானே” என்ற ஓர் ஏக்கம் என் உள்ளத்தில் உருவாகித் தானாகவே உடம்பில் ஒரு நடுக்கம் ஏற்பட்டுக் கண்கள் நீரைப் பொழிந்தன. அதிகமாகப் புன்னகைப் பூத்த முகத்துடனே காணப்பட்ட அவர்களின் இன்முகம் இன்றும் நினைவில் நிற்பதும் அவர்களின் சாதனைத் தான்!
அவர்கட்கு உலகத்தமிழ் மாநாட்டில் “நான்காம் தமிழ்- இணையத் தமிழறிஞர்” என்னும் பட்டம் வழங்கப்பெற உழைத்த மரியாதைக்குரிய சகோதரி- கவிதாயினி மலிக்கா ஃபாருக் அவர்களுடைய ஆலோசனையின்படி இணையத் தளங்களில் சகோ.உமர்தம்பி அவர்கட்கு இப்பட்டம் வழங்கப்பெற ஆதரவுகளைத் திரட்டியவர்களில் அடியேனும் ஒருவன் என்பதை ஈண்டுப் பதிவதில் மகிழ்கிறேன்.
அகரம் கற்பித்த ஆசானுக்கு அடுத்தபடியாக இன்றும் இப்பொழுதும் கணினியில் நான் தட்டச்சுச் செய்யும் ஒவ்வொரு எழுத்தின் மீதும் என் விரல்கள் கொண்டு விசைகளை அழுத்தும் வேளையில் சகோ. உமர்தம்பி அவர்களை மறக்கவே முடியாத வண்ணம் தமிழுக்கான அப்பேருழைப்பின் பலனைத் தந்து விட்டுச் சென்று விட்டார்கள் என்றே சொல்லிக் கொண்டே தட்டச்சுச் செய்கிறேன்.
நிரந்தரமான பலனை நமக்கு வழங்கி விட்டு மறைந்துள்ள அவர்களின் மறுமை வாழ்வும் நிரந்தரமான - உயர்வான ஒன்றாகவே அமையும், இன்ஷா அல்லாஹ்!
நிரந்தரமான பலனை நமக்கு வழங்கி விட்டு மறைந்துள்ள அவர்களின் மறுமை வாழ்வும் நிரந்தரமான - உயர்வான ஒன்றாகவே அமைய துஆ செய்வோம். இன்ஷா அல்லாஹ்!
உம்மா கற்றுத் தந்த தமிழை
உமர் தம்பி அவர்களின் தட்டச்சு மூலம் தழைக்கச் செய்வோம்.
உமர்த்தம்பிக் காக்கா அவர்களின் மறுமை வாழ்வை அல்லாஹ் சிறப்பாக்கித் தருவானாக (ஆமீன்)
வா.. வரையும் சரித்திரச் சித்திரம் என்ற தொடர் நான் அதிரை நிருபருக்கு அறிமுகமாவதற்கு முன்பு எனது மரியாதைக்குரிய வாவன்னா சார் அவர்களால் எழுதி வெளிவந்த தொடர். இதை ஒய்வு நேரத்தில் படித்து மகிழ்ந்தேன். இப்போது தம்பி உமர்த்தம்பியின் நினைவாக மீள் பதிவு செய்தால் என்னைப் போல் அன்று வாய்ப்பிழந்தோர் படித்து பாடம் பெறலாமென்ற கருத்தை முன் வைக்க விரும்புகிறேன்.
உமர்த்தம்பிக் காக்கா அவர்களின் மறுமை வாழ்வை அல்லாஹ் சிறப்பாக்கித் தருவானாக (ஆமீன்)
இன்னும் நினைவில் நிற்கும் அவரது வேகமான நடை. ஏரியில் குளித்துவிட்டு [ அப்போது பைப் இல்லாத காலம் ] எங்களை முந்திச்செல்லும் அவரது நடையை நினைக்கும்போது அவர் நம்மோடு இப்போது இல்லை என்ற எண்ணம் வர மறுக்கிறது.
உமர்த்தம்பிக் காக்கா அவர்களின் மறுமை வாழ்வை அல்லாஹ் சிறப்பாக்கித் தருவானாக (ஆமீன்)
உமர்த்தம்பிக் காக்கா அவர்களின் மறுமை வாழ்வை அல்லாஹ் சிறப்பாக்கித் தருவானாக (ஆமீன்)
Post a Comment