நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை - 7 17

அதிரைநிருபர் பதிப்பகம் | புதன், டிசம்பர் 05, 2012 | , ,


அதுதான் 'தயம்மும் கல்' என்று ஒரு சிறு பாறை போன்ற கல், வருபவர்கள் அதில் தயம்மும் செய்கிறார்கள். தூய மண்ணில் தயம்மும் செய்ய நாம் இறைத் தூதர் அவர்களால் ஏவப்பட்டுள்ளோம். நிர்பந்த அடிப்படையில் சுவர், தாரை போன்றவற்றில் தயம்மும் செய்யலாம் என மார்க்க அறிஞர்கள் rulings எடுக்கிறார்கள்.

ஆனால், இதற்காக வேண்டி ஒரு கல்லையே பள்ளி வாசலில் அமைத்தால், அல்லது வீடுகளில் வைத்துக் கொண்டால், அது சிலை வணக்கத்திற்கு மறைமுகமாக, தூண்டுகோலாக அமையாதா? சுப்ஹானல்லாஹ்! இதைப் பற்றி லண்டனில் வசிக்கும் நமது ஊர்ச் சகோதரர்கள், அங்குள்ள இஸ்லாமிய அமைப்புகளைத் தொடர்பு கொண்டு ஹீத்ரோ விமான நிலைய அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லி, அதை அகற்ற ஆவண செய்யும்படி வேண்டுகிறேன்.


இதே போன்று, வேறு எங்கு இருந்தாலும், அவைகளை அப்புறப்படுத்த நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சில ஆன்லைன் சாப்பிங் இணைய தளங்கள் (முஸ்லிம்களால் நடத்தப்டுபவைகள்) தயம்மும் கல், தயம்மும் மண் என்று விற்கின்றன. அவைகளையும் அவ்வாறு விற்கக் கூடாது என நாம் அறிவுறுத்த வேண்டும்.

லண்டன் ஹீத்ரு விமான நிலையத்திலிருந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் டல்லாஸ் நோக்கிப் புறப்பட மீண்டும் 10:30 மணிநேரப் பயணத்தால் உடல் அயர்ந்து போனேன்.

டல்லாஸ் (Dallas) ஏர்போர்ட் டெக்சாஸ் இமிகிரேஷன் முடிந்து, கஸ்டம்ஸ் வந்தேன், எல்லாவற்றையும் பிரித்துப் போட்டு விட்டார்கள், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொண்டு வந்த மசாலா வகைகள், அல்வா, பனியாரம், ஊறுகாய் வகைகள் சிதறிக் கிடக்க சிலவற்றை கழிவு கூடைக்கும் (Garbage) போக, ஊரிலிருந்து கூடுதல் லக்கேஜுக்கு என்று ருபாய் 8,000 கட்டி எடுத்து வந்ததை (152/- டாலர்) இங்கு வந்ததும் தூக்கி எறிகிறானே என்ற ஆதங்கம் ஒருபக்கம், மறுபுறம் நான் வேறு டெர்மினல் மாறி டிரெயின் மூலம் சான்பிரான்சிஸ்கோ செல்லும் விமானத்தை பிடிக்க வேண்டும்.

என்ன செய்வது !? கஸ்டம்ஸ் அதிகாரி சொன்னான் "உனக்கு உன் கவலை எனக்கு என் டூட்டி" என்று, அதுவும் சரிதானே ! இதற்கு கவலைப்பட்டு என்ன ஆகப் போகிறது.

உண்மையான வலிமையான இமிகிரேஷன், கஸ்டம்ஸ் ஆபிசர்கள் என்று நம்மை விசாரிக்க இருக்கும் மலக்குகளை விடவா ? இது முக்கியம் ! அந்த விசாரிப்புகளில்தான் உண்மையான பாஸ் / ஃபெயில் இருக்கிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அந்த மலக்குகளின் விசாரிப்புக்களில் பாஸாகி ஏக இறைவனின் மன்னிப்புக்கும், அருளுக்கும் உரித்தானவர்களாக நம்மை ஆக்குவானாக ஆமீன் !

அடுத்த டெர்மினல் சென்றடைந்ததும், பிளைட் புறப்பட 1/2 மணி நேரமே இருந்தது. ஏறி அமர்ந்தவுடன், ஆசுவாசப்படுத்திக் கொள்ள சான்பிரான்சிஸ்கோ நோக்கிய பயணம் துவங்கியது.

சுமார் 3 1/2 மணி நேரப் பயணத்தில் சான்பிரான்சிஸ்கோ விமான நிலையம் அடைந்து வெளியே வந்தேன். அல்லாஹ்வின் உதவியால், அழைத்துச் செல்ல மச்சானும், மகனும் வந்திருந்தார்கள்.

மீண்டும் அமெரிக்க மண்ணை மிதித்தவுடன் என் மகள் ஒருவாரமாக புலம்பிக் கொண்டிருந்தது இதயத்தில் அழுத்த சோகம் என்னை ஆட்கொண்டது, "வாப்பா உங்களை தேடுவேன்" இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.
நிறைவுற்றது.
A.R.அப்துல் லத்தீஃப்

17 Responses So Far:

அலாவுதீன்.S. சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

////மீண்டும் அமெரிக்க மண்ணை மிதித்தவுடன் என் மகள் ஒருவாரமாக புலம்பிக் கொண்டிருந்தது இதயத்தில் அழுத்த சோகம் என்னை ஆட்கொண்டதுஇ 'வாப்பா உங்களை தேடுவேன்' இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.////

தங்களின் கட்டுரையில் எதை மறந்தாலும், தங்களின் மகள் சொன்னதை மட்டும் மறக்க முடியாது.

வல்ல அல்லாஹ் நம் அனைவரையும், குடும்பத்தோடு சேர்ந்து வாழ்வதற்கு நல்லருள் புரியட்டும். வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்போம்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

மார்க்க நெறி சுட்டலுடன் கூடிய சுவையான பயணக்கட்டுரை.
தயம்மும் கல் பற்றி விசாரிப்போம். இன்சா அல்லாஹ்.

Yasir சொன்னது…

பயணக்கட்டுரை பல இடங்களில் ஜொலித்தாலும்...நிறைவுப்பகுதியில் ஒரு “பளுவை” வைத்து சென்றுவிட்டது...அது தற்காலிகம் தானே ?? சிறப்பான தொடரை தந்த உங்களின் அடுத்த எழுத்தை முதல் ஆளாக அனுபவிக்க காத்திருப்பேன்....

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//என் மகள் ஒருவாரமாக புலம்பிக் கொண்டிருந்தது இதயத்தில் அழுத்த சோகம் என்னை ஆட்கொண்டது, "வாப்பா உங்களை தேடுவேன்" இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.//

தொடர் ஆரம்பிக்கும்போதும் மகள் விமானம் ஏற மறுத்தது... தொடர் நிறைவுக்கு வந்ததும் மகள் மனதை விட்டு இறங்க மறுப்பது ! :) !

கிரவ்ன்(னு) சொன்னது போல் அவனுக்கு முந்திதான் நீதான் தம்பி உரைநடை பயின்றாய் ! :)

Unknown சொன்னது…

//உண்மையான வலிமையான இமிகிரேஷன், கஸ்டம்ஸ் ஆபிசர்கள் என்று நம்மை விசாரிக்க இருக்கும் மலக்குகளை விடவா ? இது முக்கியம் ! அந்த விசாரிப்புகளில்தான் உண்மையான பாஸ் / ஃபெயில் இருக்கிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அந்த மலக்குகளின் விசாரிப்புக்களில் பாஸாகி ஏக இறைவனின் மன்னிப்புக்கும், அருளுக்கும் உரித்தானவர்களாக நம்மை ஆக்குவானாக ஆமீன் !//

மாற்றமில்லா மறுமைச் சிந்தனை!

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

சகோ. அப்துல் லத்தீஃபின் கட்டுரை அருமையாக ஆரம்பித்து உள்ளத்தின் ஓரத்தில் ஒரு பாரத்தை இறக்கி வைத்து விட்டு அமைதியாய் இங்கு முடிவடைகிறது.

நாம் பயணம் புறப்படும் தருவாயில் நம் சின்னஞ்சிறு பாசப்பிள்ளைகள் "வாப்பா உன்னைத்தேடுவேன்" என்று சந்தோசத்திலோ அல்லது வெளிக்காட்ட முடியாத வேதனையிலோ அதுகள் நம்மைப்பார்த்து சொல்வது எளிதில் உடையக்கூடிய நீர்க்குமிழி போல் இலகுவாக ஆக்கப்பட்டிருக்கும் நம் இதயங்களை பெரும் பாறாங்கல் கொண்டு உடைத்து தூள்தூளாக்குவது போல் இருக்கும். என்ன செய்வது? ஆசைப்பிஞ்சுகளை விட்டு விட்டு வேசமணிந்து எங்கோ பயணிக்க வேண்டி இருக்கிறதே?

பயணம் புறப்படும் ஓரிரு நாட்கள் முன் ஏதோ ஒரு சேட்டைக்காக இலேசாக மகனைத்தட்டி விட்டேன் கொஞ்சம் ஆத்திரத்தில். அதற்கு உட‌னே அவ‌ன் சொன்ன‌ வார்த்தை நான் த‌ட்டிய‌தால் அவ‌னுக்கு வ‌லித்த‌தை விட‌ என‌க்கு அதை நினைக்கும் பொழுதெல்லாம் வ‌லித்துக்கொண்டே இருக்கும். "போ, உன்னைத்தேட‌ மாடேன்".............

ZAKIR HUSSAIN சொன்னது…

To Bro Ara Ala,

Nice take off---beautiful journey - Fair landing

Shameed சொன்னது…

கட்டுரை நிறைவுற்றது ஆனால் உங்களின் பயணங்கள் அல்லாஹுவின் வழியில் தொடரும் என்பதில் ஐயமில்லை

Ebrahim Ansari சொன்னது…

அருமையான - மென்மையான - சுகமான தொடர் நிறைவுற்றது மட்டுமல்லாமல் நிறைவில் குறிப்பிட்டுள்ள மகளார் விஷயமும் மனதை கனக்கச் செய்தவை.

தொடர்ந்து எழுதவேண்டுமென்று மற்றப் பலருடன் நானும் விரும்புகிறேன்.

sabeer.abushahruk சொன்னது…

To Bro Ara Ala,

Nice take off---beautiful journey - Fair landing

sabeer.abushahruk சொன்னது…

தேடுவேன் வாப்பா

இனி நீங்களோ
என்
கண்விழித்திரை வராது
கணினித்திரையில் தெரிவீர்கள்

உங்கள்
நிழலில் வாழ்ந்துவந்த நான்
உங்கள்
நினைவோடு வாடவேண்டும்

அலுவல் முடிந்து நீங்கள்
வீடு திரும்பும் முன்னிரவில்
கதவு திறந்ததும்
என்
காலடிச்சப்தம் கேட்காதெனினும்
என்
மனசெல்லாம்
அங்கேயே
உங்களைச் சுற்றியே...!

Take me back soon Dad.

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

//காலடிச்சப்தம் கேட்காதெனினும்
என்
மனசெல்லாம்
அங்கேயே
உங்களைச் சுற்றியே...!

Take me back soon Dad.//

மீண்டும் உருக வைத்துவிட்டீர்க் கவிவேந்தே!

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

அன்புள்ளம் கொண்ட அனைத்து என் சகோதரர்களுக்கும் என் முகமன் அஸ்ஸலாமு அலைக்கும் .அல்லாஹ்வின் அருளால் பயணக் கட்டுரை நிறைவு பெற்றது,அல்ஹம்துலில்லாஹ் .உங்கள் எல்லாரது கமென்ட்டுக்களும் எனக்கு உற்சாகத்தை தந்தது ,உங்கள் துவாவையும் அல்லாஹ் ஏற்று
நம் எல்லாரது இரு உலகையும் வெற்றி பெற செய்வானாக ஆமீன்
உங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி
இன்ஷா அல்லாஹ் மீண்டும் எழுதுவேன்
உங்கள் அன்பையும்
துவாவையும்
அல்லாஹ்வின் மன்னிப்பையும்
வேண்டியவனாக
உங்கள் சகோதரன்
அர அல

அப்துல்மாலிக் சொன்னது…

take off ன் போது இருந்த சந்தோஷம்
landing போது ஒரு வித துக்கம் தொண்டைய அடைப்பது இயல்புதான்.

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும். குறுந்தொடர் என்றாலும் தன் நின்றாளும் தமிழால் நல்ல தொரு இறைச்சிந்தனை தொடராக அளித்த என் சகோதரனுக்கு அல்லாஹ் எல்லா நலனையும் நல்குவானாக நீங்களும் தூஆசெய்யுங்கள்.

அதிரை சித்திக் சொன்னது…

பயணக்கட்டுரை பல இடங்களில் ஜொலித்தாலும்...நிறைவுப்பகுதியில் ஒரு “பளுவை” வைத்து சென்றுவிட்டது...அது தற்காலிகம் தானே ?? சிறப்பான தொடரை தந்த உங்களின் அடுத்த எழுத்தை முதல் ஆளாக அனுபவிக்க காத்திருப்பேன்....

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு