நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மனுநீதி மனித குலத்துக்கு நீதியா !? - நூல் வெளியிடு 32

அதிரைநிருபர் பதிப்பகம் | சனி, டிசம்பர் 08, 2012 | ,அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

மறுக்கப்படும் நீதிக்கு எதிராகவும், நீதியை நிலைநாட்டுவதிலும் ஓர் இறை நம்பிக்கையாளனின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்பதை இஸ்லாம் தெள்ளத் தெளிவாக வழிகாட்டியிருக்கிறது. அவ்வழியில் அதிரைநிருபர் வலைத்தளத்தில் எங்கள் மூத்த சகோதரர் இபுராஹீம் அன்சாரி M.Com., அவர்களால் ஆய்வு செய்து எழுதப்பட்ட "மனுநீதி மனித குலத்துக்கு நீதியா?" என்ற தொடர் வெற்றிகரமாக வெளியானதை அனைவரும் நன்கு அறிவீர்கள், அல்ஹம்துலில்லாஹ் !

ஏற்கனவே அறிவித்தபடி, நூல் வடிவம் பெற்ற தொடர் மிகவும் எளிமையாக நாளை (09-டிசம்பர்-2012) வெளியிட இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ் !


நாள்: 09-Dec-2012

நேரம் : மாலை 4:15 மணி முதல் 5:30 மணி வரை. 

இடம் : அதிரை இ. சி. ஆர் ரோடு , இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்களின் இல்லம்.

தலைமை : அதிரை அஹமது B.A., அதிரை தாருத் தவ்ஹீத் அமீர்

வரவேற்புரை :  M. தாஜுதீன் M.B.A., அதிரைநிருபர் அமீர்

நூல் அறிமுகம் : தீன் முகமது B.Sc .B.G.L,

வெளியீட்டு உரை   : ஜமீல் M.ஸாலிஹ், அதிரை தாருத் தவ்ஹீத் செயலாளர்

முதல் பிரதி பெறுபவர்: எஸ். முகமது பாரூக் 

வாழ்த்துரை : M.L. அஷ்ரப் அலி M.A.B.L

நன்றி மற்றும்  ஏற்புரை : இப்ராஹீம் அன்சாரி M.Com., நூல் ஆசிரியர்

விருந்தினர்களாக முன்னால் ஆசிரியர்கள், நண்பர்கள், அதிரை வலைப்பூக்களின் பங்களிப்பாளார்கள் மற்றும் உறவினர்கள்.

மிகக் குறுகிய காலக் கெடுவுக்குள் நடத்த வேண்டியிருப்பதாலும், புத்தக வெளியீடு மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்ற ஆலோசனையின் பேரிலும் இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இப்படிக்கு,

அதிரைநிருபர் பதிப்பகம்
ஷப்னம் காம்ப்ளெக்ஸ் - முதல்மாடி
கா.மு.கல்லூரி எதிர்புரம்
கிழக்கு கடற்கரைச் சாலை
அதிராம்பட்டினம் - 614701
தஞ்சாவூர் மாவட்டம்

32 Responses So Far:

அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் சொன்னது…

உங்கள் உள்ளத்தில் உதித்த கருத்துப் பெட்டகம்; அழகிய அச்சுருவில் புத்தகமாகி, இன்ஷா அல்லாஹ் இன்று உங்களின் இல்லத்திலிருந்து வெளியிடும் இத்தருணம் என் உளம்நிறந்த வாழ்த்துகள்; மேன்மேலும் நூற்கள் வெளியிடும் ஆற்றலும் ஆரோக்கியமு இறையருளால் கிட்டுமாக!

அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் சொன்னது…

உங்களின் நூல் வெளியீட்டு விழாவின் அறிவிப்பு இத்தளத்தில் வரும் முன்னரே, என் செவிகளில் அலைபேசியினூடே வந்து சேர்ந்து விட்டது.

அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் சொன்னது…

அன்புள்ள டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்கட்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்தஹு

தங்களின் நூல் வெளியீட்டு விழாவில் அடியேன் கலந்து கொள்ளாவிட்டாலும், என் கவிதையை என் சார்பாக மூத்த தமிழறிஞர் என் ஆசான் அதிரை அஹ்மத் காக்கா அவர்கள் வாசித்து அவ்விழாவில் என் பங்களிப்பை நிறைவு செய்ய வேண்டுகிறேன்.


தலைப்பு: மனிதனுக்கு நீதி வாழட்டும்!
வெடிக்கின்ற வென்னீரின் ஊற்று வெள்ளம்;
.....விரிந்துமணம் வீசுகின்ற மலரின் உள்ளம்;
துடிக்கின்ற தீக்கனலின் வெம்மை வீச்சு;
.....சொடுக்கிவிட்ட சிந்தனையின் சீறும் மூச்சு;
நடிக்கின்ற வொருசாரார்ச் செய்யும் கேட்டை
.....நயபுடைக்கு(ம்) இந்நூலில் சுழற்றும் சாட்டை
வடிக்கின்ற மறுசாரார்க் கண்ணீர் போக்க
......மறுபடியும் எழுதிடுவாய் நூலும் நீரே!

புதிய உலகமே செய்வோம் - இந்தப்
பூமியின் வளமெலாம் பொதுவாம்
எதிரிகள் எவருமில் லாமை - என்னும்
இனிய திசையில் செல்வோம்


சாதியினைச் சொல்லியே ஏய்ப்பார் - ஏதோ
சாதியுர்வு என்றுதான் மாய்ப்போர்
சதியினால் எளியரைத் தூற்றுவோர் - இங்கே
சகலமும் தமக்கெனச் சாற்றுவோர்

சிந்திக்க வைத்த தொடர் - மக்கள்
சேவைக்கு ஏற்றுஞ் சுடர்
நிந்திக்கா(த) வண்ண நூலாம்- அறிவுக்கு
ஞாயிற்றின் கீற்றைப் போலாம்

அறிவியல் சிந்தனை தழைக்கும் - கல்வி
அளித்தநற் புத்தியும் செழிக்கும்
நெறிமுறை தந்திடும் புத்தகம்-வாழ்வின்
நெடுகிலும் காட்டிடும் தத்துவம்

பேச்சிலும் மூச்சிலும் நாடு - மேன்மை
பெற்றிட என்றுமே நாடு
தீச்சுடர் போலவே கேடு - அழித்திட
திறமையாய்ச் சாற்றிடும் ஏடு

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

டாக்டர் இபுறாஹிம் அன்சாரி காக்கா, இது போல் இன்னும் பல நூல்கள் எழுதி சமூகம் போற்றும் நல்லதோர் பன்னூலாசிரியராகி இந்த பாருக்கு சன்மார்க்க மேற்கோளுடன் நல்ல முறையில் புத்திமதி சொல்ல என் வாழ்த்துக்கள்.

நம் தமிழகத்தில் ஒரு குரூப் சாதியை வைத்துத்தான் அரசியல் செய்வோம். கீழ்சாதியின் ஆண்கள் அவர்களுக்கு மேலுள்ள சாதியின் பெண்களை மயக்கி, கடத்தி, கட்டாய திருமணம் காதல் என்ற பேரில் செய்து கொள்கின்றனர். எல்லாம் அனுபவித்த பின் அப்பெண்களை வாழாவெட்டியாக்கி விடுகின்றனர். எனவே இது முற்றிலும் தடுக்கப்பட வெண்டும் என்று சொல்லி சாதிக்கட்சிகளை ஒன்றிணைத்து திராவிடக்கட்சிகளை தோற்கடிப்போம் என்றெல்லாம் சூளுரைக்கின்றன.

மற்றொரு குரூப் சாதிகள் ஒழிய வேண்டும். எனவே இன்றைய‌ இளைய‌ ச‌முதாய‌ம் காத‌ல் க‌ல‌ப்புத்திரும‌ண‌ங்க‌ளை அதிக‌ம் செய்து கொள்ள‌ வேண்டும் என‌ அத‌ற்கும், சாதிக்கலவரங்களுக்கும் சேர்த்து ப‌ச்சைக்கொடி காட்டி சிவ‌ப்புக்க‌ம்ப‌ள‌ம் விரிக்கின்ற‌ன‌.

இன்னொரு குரூப் காத‌ல் திரும‌ண‌ங்க‌ள் செய்து கொண்ட‌வ‌ர்க‌ள் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ளை ம‌க்க‌ள் தொகை க‌ண‌க்கெடுப்பு போல் எடுத்து அதில் 90 விழுக்காடு இறுதியில் தோல்வியில் முடிந்து ம‌ண‌ ஒப்ப‌ந்த‌ம் அறுந்து விட்ட‌தாக அத‌ன் புள்ளிய‌ல் க‌ண‌க்கெடுப்பு சொல்கிற‌து.

இறுதியில் ந‌ம்முடைய‌ கேள்வி என்ன‌வெனில், அவ‌ர‌வ‌ர் சாதி, ம‌த‌ங்க‌ளில் ஆயிர‌த்தெட்டு ஜோடிப்பொருத்த‌மான‌ பெண்க‌ளும், ஆண்க‌ளும் இருக்க‌ ஏன‌ய்யா க‌ண்ட‌ம் விட்டு க‌ண்ட‌ம் தாவி ந‌றும‌ண‌ம் வீச‌ வேண்டிய திருமண வாழ்வில் இப்ப‌டி க‌ல‌வ‌ர‌ப்பேய்க்கு ந‌ல்ல‌ க‌ள‌ரி வைத்து பெரும் ப‌ந்தி வைத்து விடுகின்ற‌ன‌ர்.

இவ‌ற்றையெல்லாம் நூல் விட்டு உய‌ர‌ப்ப‌ற‌க்கும் ப‌ட்ட‌மாய் பூநூல்க‌ள் உய‌ர‌த்தில் இருந்து கொண்டு ந‌ல்ல‌ வேடிக்கைப்பார்த்து ஆன‌ந்த‌ம‌டைகின்ற‌ன‌ என்பது மட்டும் எவ‌ருக்கும் தெரிவ‌தில்லை.

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

இருண்டு கிடக்கும் உள்ளங்கள் போல் ஆரஞ்சுக்குப்பதில் மனுநீதிக்கும் கருப்பு நிறமே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

Ebrahim Ansari சொன்னது…

அன்புத்தம்பி நெய்னா அவர்களுக்கு,

இந்தத் தொடரை நூல் வடிவில் வெளியிடவேண்டுமேன்று ஆணித்தரமாக அறிவுரை நல்கிய நல்லுள்ளங்களில் நீங்களும் ஒருவர். நீங்கள் எல்லாம் சொன்னது இன்று நடந்துள்ளது. நன்றி. நாளை நன்றி கூறும்போது உங்களுக்கும் தம்பி அர அல போன்றோருக்கும் கூறுவேன். இன்ஷா அல்லாஹ்.
மனு நீதி காவி முகாமிலிருந்து வந்ததால் காவி நிறம் தரப்பட்டுள்ளது.

sabeer.abushahruk சொன்னது…

கவியன்பனின் உணர்ச்சிகரமானக் கவிதையை அவர்தம் ஆசான் என்று அழைக்கும் அஹ்மது காக்காவால் வாசிக்கப்பட்டு, அதிரை நிருபர் பதிப்பகத்தின் முதற்புத்தகம், அ.நி.யின் மூத்த பங்களிப்பாளர் ஈனா ஆனா காக்கா அவர்கள் எழுதி வெளியிடவிருக்கும்

அந்நாள்
பொன்னாள்.

தொடர்புடைய அனைவருக்கும் வாழ்த்துகளும் துஆவும்.

Ebrahim Ansari சொன்னது…

தம்பி கவிஞர் சபீர் அவர்களே!


ஜசக்கல்லாஹ் . உங்களுடைய தொடர்ந்த அன்பும் ஆதரவும் இதை இவ்வளவு இலகுவாக செய்யத் தூண்டுகோலாக இருந்ததை எந்நாளும் மறக்க இயலாது.

ZAKIR HUSSAIN சொன்னது…

நினைத்துப்பார்க்கையில் மனதுக்குள் ஒரு குதூகலம். நேற்று ஆரம்பித்தது போல் இருக்கிறது உங்களின் இந்த தொடர் அதற்குள் முடிந்து புத்தகமாக வர இருப்பது கண்டு சந்தோசம். ஓவ்வொரு பதிவிலும் இவ்வளவு ஆதாரத்துடன் எடுத்தெழுத எடுத்துக்கொண்ட முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை.

புத்தக வெளியீட்டில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.


ZAKIR HUSSAIN சொன்னது…

சமீபத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகளையும் நினைத்துப்பார்க்கையில் என் மனதில் இருக்கும் பாரத்தை இறக்கிவைக்க இந்த எழுத்தை பயன்படுத்துகிறேன்.

1. சகோதரர் மஹ்பூப் அலியின் சமீபத்திய பதவிஏற்பு [ தலைமை ஆசிரியராக]
எத்தனையோ பேர் அந்த பள்ளியில் படித்ததாக சொல்லமுடியும். எத்தனை பேருக்கு அந்த பள்ளியில் தன் மகன் தலைமை ஆசிரியராக இருந்தான் என்று சொல்ல முடியும். சமது மாமா இருந்திருந்தால் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கும்.


2. நீங்கள் எழுதிய புத்தக வெளியீடு.

பெரும்பாலும் காலை 11 மணிக்கு சமது மாமாவின் Bahagia Book Store
க்கு வரும் நான் புத்தகங்களோடு தன் வாழ்க்கையை இணைத்துக்கொண்ட டிசிப்ளின் தவராத மனிதரைத்தான் நான் பார்த்திருக்கிறேன். என் தகப்பனாரே சில சமயங்களில் அன்போடு பயப்படும் அந்த கண்டிப்புகள் எனக்கும் கிடைத்தது. [ உங்களுக்கு கூட எனக்கு கிடைத்த அருகாமை கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் ]

ஒரு மிகப்பெரிய புத்த்க நிறுவனத்தை நடத்தியவரின் மகன் இன்று புத்தகம் எழுதி வெளியிடுவது....ஆச்சர்யமில்லை...ஆனால் மனது முழுக்க ஆதங்கம். வேருக்கு தண்ணீர் ஊற்றிய கைகள் இன்று நம்மோடு இல்லை. இயற்கையின் விதி அதுதான். ஆனால் கொடுத்த அறிவுரைகளை நாம் ஒழுங்காக எடுத்து வாழ்ந்து காண்பிப்போம்.

imran kareem சொன்னது…

மனுநீதி மனிதகுல நீதியா? நிருபரில் வெளிவந்த விழிப்புணர்வு தொடர் நூல் வடிவில்,,,,,,,,, மாஷா அல்லாஹ்,
அதிரையின் எழுத்தாளர்கள்,கவிஞர்கள்,அறிஞர் பெருமக்கள்,சமுதாய ஆர்வலர்கள் அனைவைரையும் நன்றியுடன் நினையுகூர்ந்து இப்ராஹீம் அன்சாரி காக்கவிற்கும் அதிரை நிருபர்,நூல் வெளியீட்டு விழாவில் பங்கு பெரும் அனைவருக்கும் வாழ்த்துகளுடன் இறைவனின் அருள் கிடைக்கட்டும்.
நாளைய சமுதாயத்திற்கு இந்நிகழ்வு நல்ல தொடக்கமாய் அமைய வல்ல ரஹ்மான் நாடட்டும்.
அதிரை நிருபரின் மற்றுமெறு மைல் கல் அதிரை நிருபர் பதிப்பகம்,,,,,
----------------------
இம்ரான்.M.யூஸுப்

Shameed சொன்னது…

அப்பாவை நான் கோலம்பூரில் பார்த்தபோது புஸ்தகங்களுக்கு நடுவே நின்று கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு எந்த புஸ்தகம் எங்கே உள்ளது என்று மிக துல்லியமாக சொல்லிக்கொண்டிருந்தார்கள் அவர்களின் வாழ்க்கையின் பெரும் பகுதி புஸ்தகங்களுடன் தான் கழிந்தது இதனால்தான் என்னமோ நமக்கும் புஸ் தகங்களுக்கும் ரொம்ப நெருக்கம். புஸ்தகம் கூடவே பிறந்து வழர்ந்த நாம் உங்கள் மூலமாக இன்னும் பல புஸ்தகங்களை அதிரைநிருபர் பதிப்பகம் மூலம் வெளி இட இறைவன் துணை இருப்பனாக

அதிரை சித்திக் சொன்னது…

அன்சாரி காக்கா வின்
நூல் வெளியீட்டு விழா
சிறப்பாக நடந்தேற என் வாழ்த்துக்கள்

Iqbal M. Salih சொன்னது…

மாஷா அல்லாஹ்!

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வு
இனிதே நடைபெற வாழ்த்துக்கள் மற்றும்
துஆக்களுடன்!

அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் சொன்னது…

\\ஒரு மிகப்பெரிய புத்த்க நிறுவனத்தை நடத்தியவரின் மகன் இன்று புத்தகம் எழுதி வெளியிடுவது....ஆச்சர்யமில்லை..\\

படிப்பாளிதான் படைப்பாளி யானார்
படிப்படியாய் முன்னேற்றம் கண்டார்
உலகத்தில் நூலகத்தைக் கண்டவர்
நூலகமே உலகமென இருந்தார்

B. Ahamed Ameen சொன்னது…

Assalamu Alaikkum

Wish you all the best brother Mr. Ibrahim Ansari, for publishing the book. We are proud of having such intellectual belonging to our place.

Best Regards,

B. Ahamed Ameen
from Dubai.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

வெளியீட்டு விழாவும், அதன் பின்னணியும் நினைத்ததை விட அதிக பலன் தர வாழ்த்துக்களும் துஆவும்.

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும். இது சமத்துவம் படைக்கவும் சரித்திரம் படைக்கவும் கூடிய நூல் என்றாலும் மாற்று மத சகோதர்களை நம் இயற்கை மார்க்கத்தில் நுழய அழைக்கும் வாயில் . இன்னூல் பலரால் வாசிக்கப்பட அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்.

Ebrahim Ansari சொன்னது…

அன்பான தம்பி ஜாகீர்,

கருத்துக்களை இன்று காலையில்தான் படிக்க முடிந்தது. விடியும்போதே விழிகளில் நீர். கடந்த பத்து தினங்களாக என் மனதில் கசிந்து கொண்டிருந்த உணர்வுகளை வெளியிட்டு இருக்கிறாய்.

உனது பட்டியலில் இன்னொன்றும் சேர்க்க வேண்டும். எனது பேத்திக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. எனக்குப் பேத்தி- உன் சமது மாமாவுக்கு?

எங்கள் தந்தையின் நெருக்கம் எங்களைவிட உனக்குக் கிடைத்தது முக்காலும் உண்மையே.

அர அல சொன்னது…

டாக்டர் இபுறாஹிம் அன்சாரி காக்கா, இது போல் இன்னும் பல நூல்கள் எழுதி சமூகம் போற்றும் நல்லதோர் பன்னூலாசிரியராகி இந்த பாருக்கு சன்மார்க்க மேற்கோளுடன் நல்ல முறையில் புத்திமதி சொல்ல என் வாழ்த்துக்கள்.அதிரை தென்றல் (Irfan Cmp) சொன்னது…

மாஷா அல்லாஹ்

இபுறாஹிம் அன்சாரி காக்கா, இது போல் இன்னும் பல நூல்கள் எழுதி சமூகம் போற்றும் நல்லதோர் ஆசியர்களாக சிறக்க வாழ்த்துக்களும் துஆவும்.

அல்ஹம்துலில்லாஹ் அதிரை நிருபரின் மற்றுமொறு மைல் கல் "அதிரை நிருபர் பதிப்பகம்" இன்னும் பல நூல்கள் இப்பதிப்பகத்திளிருந்து வெளிவர மேலும் சிறப்புடன் செயல்பட ஏக இறைவன் உதவி செய்வானாக.....ஆமீன்

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

//இந்த வார நட்சத்திர கருத்து// என்று தலைப்பில் குறிப்பிட்டுள்ளீர்களே எது அது? நானும் நட்சத்திரம் போல் கண்ணை சிமிட்டி, சிமிட்டி பார்க்கிறேன் தென்படவில்லையே?

ABC பிரிண்டர்ஸ் ஆரம்பித்த குடும்பமாதலால் அதிரை நிருபர் பதிப்பகம் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்த உங்களுக்கு சிரமம் ஒன்றும் இருக்காது என்பதே என் கருத்து.

m.nainathambi.அபுஇபுறாஹிம் சொன்னது…

//மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…
//இந்த வார நட்சத்திர கருத்து// என்று தலைப்பில் குறிப்பிட்டுள்ளீர்களே எது அது? நானும் நட்சத்திரம் போல் கண்ணை சிமிட்டி, சிமிட்டி பார்க்கிறேன் தென்படவில்லையே?//

அங்கே ஒரு சொடுக்கு போடுங்களேன்... !

Yasir சொன்னது…

மனுநீதி புத்தகம் பலர் நம்பிருக்கும் மடமைகளை உடைத்தெறிந்து மக்கள் மடை திறந்த வெள்ளம் போல உண்மையை மார்க்கத்தை நோக்கி வர உதவி செய்யவும் ,அதற்க்காக அயராது உழைத்த ஆசிரியருக்கும் அதிரை நிருபர் குழுவிற்க்கும் வாழ்த்துக்களும் துவாக்களும்

அதிரை தென்றல் (Irfan Cmp) சொன்னது…

m.nainathambi.அபுஇபுறாஹிம் சொன்னது…

\\அங்கே ஒரு சொடுக்கு போடுங்களேன்... !//

எத்தனை தடவ தான் சொடுக்குறது இதே பேஜ்தானே ஓபன் திரும்ப திரும்ப வருது

எங்கள வச்சி காமெடி ஒன்னும் பண்ணலையே?

m.nainathambi.அபுஇபுறாஹிம் சொன்னது…

தம்பி இர்ஃபான், அங்கே கிளிக்கினால் நேராக இதே பதிவின் ஒரு குறிப்பிட்ட கருத்துப் பெட்டியில் வந்து நிற்பதை கவனித்தீர்களா ?

அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் சொன்னது…

டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்களிடம் சற்று முன் அலைபேசியில் பேசிக் கொண்டேன்; விழா மிகவும் சிறப்பாக அமைந்ததாக மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள். அவர்களின் இம்மகிழ்ச்சிக்குக் காரணமான அ.நி. குழுவுக்கு வாழ்த்தும் நன்றியும் , ஜஸாக்கல்லாஹ் கைரன்

Ebrahim Ansari சொன்னது…

அன்புள்ள சகோதரர் கவியன்பன் அவர்கள் நேற்றிரவு அலைபேசியில் அழைத்து வெளியீட்டு விழா நல்ல முறையில் நடந்த விபரங்களைக் கேட்டு அறிந்து கொண்டார்கள் . நேற்றுக் காலை முதல் மாலை வரை நான்கு முறைகள் சவூதியில் இருந்து அலை பேசி மூலம் அழைத்து நடப்புகளை, நிகழ்ச்சிகளை விசாரித்தவர் எனது அன்பின் தம்பி நூர் முகமது அவர்கள்.

மிகவும் உணர்ச்சி பூர்வமாக நடைபெற்ற வெளியீடு விழா செய்திகள் விரைவில் அன்பு நெஞ்சங்களுக்குக் காண்த்தரப்படும். இன்ஷா அல்லாஹ்.

அதிரை தென்றல் (Irfan Cmp) சொன்னது…

\\தம்பி இர்ஃபான், அங்கே கிளிக்கினால் நேராக இதே பதிவின் ஒரு குறிப்பிட்ட கருத்துப் பெட்டியில் வந்து நிற்பதை கவனித்தீர்களா ?//

கவனித்தேன் காக்கா ஜசக்கல்லாஹ் ஹைர்,

இணைய வட்டம் ஒரு சுழற்று சுழற்றி ஜாஹிர் காக்கா கருத்துப் பெட்டியில் வந்து நின்றது. பரிசு பொருட்கள் அவர் முகவரிக்கு அனுப்பியுள்ளீர்களா??...எடிராக்கா

Shafi Ahamed சொன்னது…

Mashallah! May Allah shower all the righteous things in both the world!

This is one of the Successful and remarkable positive outcome of the bloggers effort to bringing up the Talented in different field.

Mabrook!!!

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு