Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சிந்திக்கத் தூண்டும் சித்திரம் ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | December 25, 2012 | ,


அதிரைக்கும் அமீரகத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்டால், எந்த உலகத்திலிருந்தார் இவர் என்று ஏலனமாக பார்க்கவே செய்வர்.

ஆம் !

அதிரை மக்களோடு அமீரகத்தின் ஆதிக்கம் எந்த அளவுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தில் ஒன்றி உறவாடிக் கொண்டிருக்கிறது என்பதை மூன்று தலைமுறைகளாக நாம் நன்கறிவோம்.

அதிரைநிருபரில் பேசும்படங்களின் அணிவகுப்பு ஒரு மாபெரும் வெற்றிப் பதிவாகவே மிளிர்ந்து வந்து கொண்டிருக்கிறது, அவ்வகையில் அதனைத் தொடர்ந்து அந்த பதிவுக்கு கருத்துக்களாக எழுத்துக்களாக மட்டுமல்ல, படங்களாவே கருத்துக்கள் வந்தன ! அந்த அளவுக்கு அதன் தாக்கமும் வாசர்களின் ரசனையின் உச்சத்தில் மின்னுகிறது என்றால் மிகையாகாது.

அவ்வரிசையில் மற்றொரு படைப்பாளி தனது பொழுதுபோக்காக மட்டும் செய்யாமல், கண்ணில் பட்டதையும், காமிராவில் சுட்டதையும் இங்கே பதிவாக அதிரைநிருபரில் தொடர சித்திரமெழுத இருக்கிறார் நம் சகோதரர் ஷஃபி அஹமது.

அதற்கான சாம்பிள்தான் இது ! அடுதடுத்து தொடராக மற்றுமொரு பாதையில் இன்ஷா அல்லாஹ் !


அதிரைநிருபர் பதிப்பகம்

16 Responses So Far:

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். so fun (பன்)னாக இருக்கும்.

sabeer.abushahruk said...

The full credit of creativity hidden in this clip must be given to Shafi without wasting a bite of it.

sabeer.abushahruk said...

இந்த
ரொட்டியைத் தாங்கும்
தேநீர் கோப்பை...

பட்டினிப் பிணியினை
விட்டினிப் பிழைக்க
ஒட்டிய வயிற்றினருக்குக்
கிட்டிய உணவு

கருப்பு வெள்ளையில்
காலம் தள்ளுவோரின்
ஒரேயொரு
கலர் கனவு

இந்த
ஜடப் பொருட்களின்
கூட்டணி போஜனத்தால்தான்
ஜீவனோடிருக்கின்றனர்
உடல் உழைப்போர்

இந்த உணவை
வறுமைக் கோடொன்று எடுத்து
வட்டமிட்டு வைக்கவும்
இல்லையேல்
தனிமனித உணவு
தனக்கில்லையே என்று
ஜகத்தினை அழித்திடுவர் 
இக்கால பாரதியர்.

பிட்டெடுத்து
தேநீரில்
தொட்டுண்டால்
சட்டென நினைவுக்கு வரும்
தேரா துபையின்
பிரம்மச்சாரி பிழைப்பு

ஷஃபி,
உணவைக் காட்டி
ஊடே
பசியைச் சொன்ன
உக்தியில்
ஒளிந்திருக்கிறான்
ஒரு கவிஞன்.

Unknown said...

Mashallah Mashallah... @Shabeer Kaka, you have such a magical words that has more value than those pictures!!! When is the due to release a book of yours?

Shameed said...

டீ சொல்கின்றது பன்னை பார்த்து இந்த குளிரில் என்னோட கதகதபில் நீ இருக்கின்றாய் என்று அதற்க்கு பன் சொல்கின்றது ம்ம் நீ என்ன கதகதப்பு நான் உருவான இடமே (ஓவன்)உன்னை விட அதிகமான கதகதப்பில்தான் என்று

ZAKIR HUSSAIN said...

தம்பி...டீ இன்னும் வரலெ...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தலையில் இருக்கும் வரை குப்பென்று இருக்கும் பன்...

உள்ளே விழுந்தால்...!

சொய்ங்க் !!! :)

எதுவானாலும் இருக்கும் இடத்தில் இருந்தால் கம்பீரம்தான் ! :)

Shameed said...

இந்த பிரட்டையும் டீயையும் பார்க்கும் போது கொழும்பில் இருந்து திருச்சி போகும் ஏற்லங்கா விமானத்தில் காலையில் பசியாரு கொடுப்பதை நினைவு காட்டுகின்றது

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…


//தம்பி...டீ இன்னும் வரலெ... //

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே !!

Anonymous said...

இனி தொடராக சகோதரர் ஷஃபி அஹமது அவர்களின் சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் வெளிவரும் இன்ஷா அல்லாஹ் !

Unknown said...

களம் தந்த அதிரை நிருபருக்கும் கருத்திட்ட அணைத்து சஹோதரர்களுகும் மிக்க நன்றி.

KALAM SHAICK ABDUL KADER said...

சுட்ட பன்னைச்
சுட்டக் கண்ணுக்குப்
பட்டென முத்தம்
பரவாயில்லை; சத்தம்

பன்னைத் தாங்கும்
பக்குவம் கோப்பைக்கு
பெண்னைத் தாங்கும்
பக்குவம் ஆண்மைக்கு

பாட்டாளியின் கூட்டாளி
பன்னும் தேத்தண்ணியும்
நோட்டமிட்டே சுட்டீரே
“நோபல்” பரிசைப் பெறுவீரே

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சிற்றுண்டி தந்தமைக்கு நன்றி,
பிரியாணியுடன் வருக சீக்கினமே!

Ebrahim Ansari said...

Welcome ! Welcome. இப்படி பசி தீர்க்கும் பதார்த்தத்துடன் வந்தால் எல்லோருமே வரவேற்போம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு