Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது.... 20

அதிரைநிருபர் பதிப்பகம் | December 30, 2012 | ,

குறுந்தொடர் : 2

அவர் போட்ட “குண்டு” வேற ஒன்னுமில்லை “நீங்க அப்ளிகேஷனை கையில் எழுதி இருந்தா மட்டும் பத்தாது, ஆன் லைனில் டைப்செய்துவிட்டு அந்த பிரிண்ட் அவுட்டை எடுத்து கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்” என்பதே…, ‘இவ்வளவு நேரம் காத்திருக்கும்போதே இந்த விபரத்தைச் சொல்லியிருந்தா நல்லாயிருந்திருக்குமே என்ன செய்வது’. வேறு வழியே இல்லை அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தால் அந்த ஏரியாவில் இன்டர்நெட் சென்டர் ஏதுமில்லை, டைப்பிங் செண்டர்கூட அருகில் இல்லை. 

அலுவலகத்திற்கு போன் செய்து உதவியாளரிடம் படிவத்தைப் பூர்த்திச் செய்யச் சொல்லி, இமெயில் அனுப்பச் சொன்னோம் அதற்குள் மணி 11.30 ஆகிவிட்டது. ஆனால் அப்பிளிகேஷனில் பல ஐந்து மார்க், பத்துமார்க் கேள்விகள் இருந்ததால் உதவியாளர் கிட்டதட்ட ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டு இமெயில் செய்து விட்டதாக சொன்னார், 

மணி மதியம் 12.30, ‘ஆஹா! இன்னும் அரைமணி நேரத்தில கடையை ஸாரி எம்பஸியை பூட்டிடுவாங்களே திரும்ப அபுதாபிக்கு வருவது சிரமம் என்று முணுமுணுத்த என்னோட பாஸ்’, “நான் போய் பிரிண்ட் அவுட்டை எடுத்து வருகின்றேன், நீ இங்கேயே இரு அப்பதான் எம்பஸியை பூட்ட மாட்டானுங்க” என்று சொன்னவரைப் பார்த்து நானும் தலையசைத்து அங்கேயே காவல் காத்தேன். கிட்டத்தட்ட 45 நிமிடம் கழித்து வெளியில் ‘ஒரே சப்தம்’ அந்த திசையை நோக்கிப் பார்த்தால் ‘அட நம்ம தல!’ “நேரம் முடிந்துவிட்டது” என்று துண்டை உதறிய கான்செலரிடம் சண்டை போட்டுக் கொண்டு இருந்தார். அவரை செக்கியூரிட்டி என்று நினைத்ததுதான் அந்தச் சத்தத்திற்கான காரணம்.

ஒரு வழியாக சமாளித்து அங்குள்ள உதவியாளருக்கு 15$ அன்பளிப்பாக கொடுத்து விசாவும் வாங்கியாச்சு, அப்போது என்னோட ‘தல’ என்னடான்னா ஏதோ ஒருசில வார்த்தைகளைச் சொல்லி “இனிமே இங்கே வரவேமாட்டேன்” என்றார். அதற்கு அங்கிருந்த வரும் “சும்மாவா நைஜீரியா போறீங்க பணம் உண்டாக்கதானே” என்று நக்கலாக வாரினார். ஆனாலும், சும்மா சொல்லக்கூடாது இந்திய பிரஜைக்குத்தான் காஸ்ட்லி (ஸ்டாம்பிங்க்). எனக்குரிய விஷா கட்டணம் 253$ , என்னோட ‘தல’ சிரியாக் காரர் அவருக்குரிய கட்டணம் 38$ மட்டுமே.


எல்லாம் முடிந்து பயணம் ஏற்பாடானது, நைஜீரியா விமான பாதுகாப்பு அறிக்கை ரொம்ப வீக் ஆனதால் எமிரேட்ஸ் ஏர்லனை தேர்ந்தெடுத்து, பயண நாளும் நெருங்கியது. ஆஃப்பிரிக்கா நாடுகளில் முக்கியமாக நைஜீரியாவில் ஆட்கடத்தல், துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தல் போன்றவை கடலைமிட்டாய் சாப்பிடற மாதிரி நடப்பதால் (இங்கே மட்டும் என்ன வாழுதாம் என்று சில மேலைநாடுகளில் வசிப்பவர்கள் முணு முணுப்பது கேட்கின்றது) கொஞ்சம் வயிற்றைக் கலக்கியது.

வீட்டிலயும் கொஞ்சம் எதிர்ப்புதான் இருந்தாலும் ‘தவக்கல்த்து அலல்லாஹ்’ (அல்லாஹ்வின் பாதுகாவல்) என்று இறைவனின் பெயரைச் சொல்லி விமானத்தில் அமர்ந்த்தாச்சு. ‘தல’ விமானப் பயணம் செய்யும்போது எப்பவுமே (Exit) எக்ஸிட்டுக்கு பக்கத்தில் உள்ள சீட்டில் தான் உட்காருவார் உயிர் பயத்தால் அல்ல, பயணத்தின் போது சில்வஸ்டார் ரேஞ்சுக்கு கை/கால்களை ஆட்டியசைத்து உடற்பயிற்சி செய்துகொண்டே வருவார். ஒவ்வொரு மனிதனுக்கும் வருகிற வரத்து அப்படி ( நடுக்குறிப்பு : பயணத்தின் போது கை/கால்களை அடிக்கடி ஆடிக் கொண்டே இருக்கனும் என்பது விமானம் கிளம்பும்போது சொல்லப்படும் அறிவுரை. ஆனால், நம்ம ஆட்கள் அதனை தப்பா புரிஞ்சிக்கிட்டு தண்ணியப் போட்டுவிட்டு தலை, கால் எதுவென்று புரியாமல் ஆடுவாங்க).

என் பக்கத்தில் ஒரு நைஜீரியப் பெண் அதனைப் பார்த்துவிட்டு என்னோட ‘தல’ சொன்னார் நிச்சயம் “இந்தப் பயணத்தை நீ என்ஜாய் பண்ணப்போறே” என்று போகப் போகத்தான் தெரிந்தது எந்த மாதிரி என்ஜாய். அந்த பெரிய உருவம் கொண்ட பெண்ணின் கால்கள் சில சமயம் என் இருக்கையின் கைப்பிடிமேலும், பல சமயங்களில் என் இருக்கையின் மேலும் மாறி மாறி இருந்தது. எழரைமணி நேரப்பயணம் இடையில் இரண்டு தடவை உணவு, நான் சாப்பிடும்போதெல்லாம் அந்த பெண் அவர் சாப்பாட்டை சீக்கிரம் முடித்து விட்டு என்னைப் பார்ப்பார் நான் சிறிது சாப்பிட்டு விட்டு மீதம் உள்ள தொடாத உணவுகளை அப்படியே கொடுத்தால் மகிழ்ச்சியுடன் வாங்கி கொள்வார். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பது போல் இவரின் நடவடிக்கை அந்நாட்டில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி பார்க்காமல் புரிய வைத்தது. உணவு வேஸ்ட் ஆகாமல் அது பிறர் வயிற்றை நிரப்பியது சந்தோஷமே.



ஒரு வழியாக ‘முர்தலா முகமது ஏர்போர்ட் வந்தடைந்தோம் (எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பைலட்களை பாராட்டியே ஆகவேண்டும் விமானம் மேலே ஏறுவதும் அது அப்படியே தரையிறங்குவதும் பஞ்சு மெத்தையில் நடப்பது போன்ற உணர்வு)      பயணம் சொகுசா இருந்தாலும் ஏர்போர்ட் ரொம்ப கரடு முரடாக தெரிந்தது. இமிக்கிரேஷன் ஆபீஸ்ல ஒருவருக்குகூட கம்யூட்டர், ஸ்கேனர் என்று ஏதும் கிடையாது (பொலப்பு அந்த நெனப்புலே இருந்த்தால் கவனிக்க நேர்ந்தது). ஆகா நல்ல இடத்தை தேர்ந்தெடுத்துதான் வந்திருக்கோம். இங்க ஒன்னு இல்லாட்டிதானே நாமே நிறைய வியாபரம் செய்ய முடியும் என்று மகிழ்ச்சியில் மூழ்கியவனாக வரிசையில் காத்திருந்தோம்.

ஒவ்வொருவாக கூப்பிட்டு எண்ட்ரி ஸ்டாம்ப் அடித்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். வெளியில் வருவதற்கு முன் நமக்கு தெரிந்த நைஜீரியன் அருகில் வந்து நீங்க இப்ப வெளியே வரவேண்டாம் உங்கள் எல்லோ ஃபிவர் கார்டே மட்டும் கொடுங்க இல்லையென்றால் லொட்டு லொசுக்கு என்று சொல்லி 100$ பிடிங்கிடுவானுங்க என்று கூறி எங்களை பாதுகாப்பாக வெளியே கொண்டுவந்தார். அந்த நேரத்தில் இரண்டு பேர் ஏகே-47 துப்பாக்கிகளுடன் எங்களை நெருங்கினார்கள்.

அதிர்ச்சியின் விளிம்பிலிருந்து நான் விடுபடுவதற்கு முன்… அது என்னவென்று தெரிய காத்திருப்பீர்களா ??

சற்றே டைட்டான வேலை ஷெட்யூல் அதனால்தான் இழுத்து இழுத்து குறைவாகவே பதிவைத் தருகிறேன்... மேலும் உங்களின் மனம் திறந்த கருத்துகள் நிச்சயம் இத்தொடரின் நீளத்தை நிர்ணயிக்கும் என்று உள்மனசு சொல்லிடுச்சு !
பயணங்கள் விரிவடையும்…
முகமது யாசிர்

20 Responses So Far:

Ebrahim Ansari said...

மருமகனார் யாசிர் அவர்களின் தொடர் ஒரு பயணக் கட்டுரைக்குரிய அத்தனை அம்சங்களுடனும் ஜொலிக்கத்தொடங்கி இருக்கிறது. விரைவில் ஜொலி ஜொலிக்கப் போகிறது. இன்ஷா அல்லாஹ். பாராட்டுக்கள்.

இப்னு அப்துல் ரஜாக் said...

சகோ யாசிர் உங்களோடு கூட நாங்களும் நைஜீரியாவுக்குல நுழைஞ்ச பீலிங் ,ரொம்ப அருமை ,அடுத்து என்ன என்று ஆவல்

Shameed said...

//என் பக்கத்தில் ஒரு நைஜீரியப் பெண் அதனைப் பார்த்துவிட்டு என்னோட ‘தல’ சொன்னார் நிச்சயம் “இந்தப் பயணத்தை நீ என்ஜாய் பண்ணப்போறே”//

சம்பவம் வீட்டுக்கு தெரியுமா!!

Iqbal M. Salih said...

//அதிர்ச்சியின் விளிம்பிலிருந்து நான் விடுபடுவதற்கு முன்… அது என்னவென்று தெரிய காத்திருப்பீர்களா ??//

இருவிதமான தொனிகளில், ஒரு வித்தியாசமான கேள்வி! நிச்சயம் காத்திருப்போம் தம்பி யாசிர்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கருப்பு பயணம் ரொம்ப சுவராஸ்யம்!

//15$ அன்பளிப்பாக கொடுத்து விசாவும் வாங்கியாச்சு,//
அது என்ன, ரொம்ப டீசன்ட்டா அன்பளிப்பு 'ன்னு எழுதி இருக்கியலே?

கடைசியா சஸ்பெண்ஸ் என்னா?
// இரண்டு பேர் ஏகே 47 துப்பாக்கிகளுடன் எங்களை நெருங்கினார்கள்.//
துப்பாக்கியை விலைக்கு வாங்குனியலா, இல்லே அன்பளிப்பு கொடுத்து பின் வாங்குனியலா?

sabeer.abushahruk said...

நான் எதிர்பார்த்தமாதிரி பயமாவ்லாம் இல்லயே...! 'சம்பவங்கள'ப் பார்த்தால் ஜாலியாவ்ல இருக்கிற மாதிரி தெரியுது!

ZAKIR HUSSAIN said...

நைஜீரியாவுக்கு 253 டாலர் கொஞ்சம் அதிகம்தான் [ "பேரம் பேச முடியாதுடா' என்று இக்பால் / சபீர் இருவரும் சொல்வது காதில் விழுகிறது ] .

சில சமயங்களில் சில நாடுகள் ஏன் இப்படி இருக்கிறது என்பதன் காரணம் அந்த நாட்டு மக்களின் நடத்தைதான். இதைத்தான் Collective belief என்பது

sabeer.abushahruk said...

//இதைத்தான் Collective belief என்பது//

ஸார்,

படிக்கட்டுகள் முடிஞ்சிடுச்சி. இனிமேலாவது கொஞ்சம் நார்மலாப் பேசுங்க ஸார்.

சந்தனம் பூசுறது கலெக்ட்டிவ் பிலீவா இன்டிவிஜுவல் பிலீவா?

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

//சந்தனம் பூசுறது கலெக்ட்டிவ் பிலீவா இன்டிவிஜுவல் பிலீவா? //

எங்கே உங்களை அந்தப்பக்கம் (சந்தன சமாச்சாரம்)காணோம்

ZAKIR HUSSAIN said...

//சந்தனம் பூசுறது கலெக்ட்டிவ் பிலீவா இன்டிவிஜுவல் பிலீவா? //

தர்கா பார்ட்டிகளின் collective belief

ZAKIR HUSSAIN said...

//படிக்கட்டுகள் முடிஞ்சிடுச்சி. இனிமேலாவது கொஞ்சம் நார்மலாப் பேசுங்க ஸார்.//


படிக்கட்டுகள்...சினிமா மாதிரி திரையில் ரசிப்பதற்கு மட்டுமல்ல..நடைமுறை வாழ்க்கையின் எப்போதும் எதிர்கொள்ளும் விசயம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//சற்றே டைட்டான வேலை ஷெட்யூல் அதனால்தான்//

லேட்டு, இருந்தாலும் நீங்க அடுத்த பதிவுக்குள் டைட் ஷெட்யூல் சரியாகிடும் தானே !?

sabeer.abushahruk said...


//தர்கா பார்ட்டிகளின் சொல்லெச்டிவெ பெலிஎ//

கொண்ணுபோட்டதுதான் கலெக்ட்டிவ் பிலீஃப்; சந்தனம் பூசுனது இன்டிவிஜுவல் பிலீஃப்.

ஹமீது,

வருடக் கடைசியின் வேலையில் சோலியாகிப்போனேன். அதான் கந்தூரிக்கு வரல. அப்படி அங்கே வந்திருந்தா பாஸ் எனக்கு மண்டகப்படி எடுத்திருப்பான்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். ஜனரஞ்சக எழுத்தாளர் யாசிர் ஒவ்வொரு பாலிலும் சிக்ஸர் அடித்திருக்கிறார். இப்படியே போனால் அதிரை நிருபர் எழுத்தாளரெல்ல்லாம் பயண கட்டுரை எழுத ஆரம்பித்துவிடுவார்கள் பின் அது அ. நி பதிப்பகத்தில் புத்தகமா வரும் ஆஹா! ஜாலிதான்.ஒரு அழகிய பயணானுபவம் புத்தகவடியில் எதிர்பார்க்கலாம். இன்சா அல்லாஹ்.

அப்துல்மாலிக் said...

படத்துலே உள்ள நைஜீரியா நம்ம ஊரு/தெரு மாதிரிதான் இருக்கு ஆனால் மனிதர்கள் தான் வெவ்வேறு.. சுவராஸ்யமான தொடர்...

அப்துல்மாலிக் said...

//படிக்கட்டுகள்...சினிமா மாதிரி திரையில் ரசிப்பதற்கு மட்டுமல்ல..நடைமுறை வாழ்க்கையின் எப்போதும் எதிர்கொள்ளும் விசயம்.//

100% கரெக்ட்

Yasir said...

நன்றி சகோதரர்கள் ஹார்மி,அர.அல,நண்பர்கள் ஜஹபர் சாதிக்,அப்துல் மாலிக் தங்களின் வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும்,
அன்பின் அன்சாரிமாமா, சாவன்னா காக்கா,ஜாஹிர் உசேன் காக்கா, செதுக்கிய சிற்பிகள் கவிக்காக்கா, அபூ இபுராஹீம் காக்கா,நான் ஃபலோ செய்யும் ரோல் மாடல் இக்பால் காக்கா போன்ற ஜாம்பவான்களின் கருத்துக்களால் என் எழுத்து சிறப்பு பெற்றுள்ளது..மேலாக கிரவுனாரின் வருகை என்னை தலைகால் புரியாமல் ஓட வைத்துள்ளது மற்றும் மவுனமாக வாசித்த நெஞ்சங்களுக்கும் ,அ.நி-க்கும்நன்றி

Yasir said...

//அதிரை நிருபர் எழுத்தாளரெல்ல்லாம் பயண கட்டுரை எழுத ஆரம்பித்துவிடுவார்கள்// ஆமாம் வெட்டிக்கொளத்துக்கு வீட்டிலிருந்து குளிக்கபோனதை ,ராஜாமடம் ஆத்துக்கு போனதை எல்லாம் எழுதலாம் என்று உள்ளோம்,யாரும் அடிக்க வந்துடுடாதீங்க,ஆனா அ.நி.பப்ளிஸ் செய்யுமா என்பது தெரியாது ...ச்ச்சும்ம்மா விளையாட்டுக்குதான்

Yasir said...

//சம்பவம் வீட்டுக்கு தெரியுமா!!// காக்கா இது உங்களுக்கே நியாமா இருக்கா...நாளைக்கு லீவு வெற....

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு