Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது... 23

அதிரைநிருபர் பதிப்பகம் | January 07, 2013 | , ,

குறுந்தொடர் : 3

அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் எங்களை வரவேற்க வந்திருந்த நைஜீரியன் சொன்னார் “இவர்கள்தான் உங்களுக்காக ஏற்ப்பாடுச் செய்யப்பட்டிருக்கும் செக்யூரிட்டிகள். இவர்கள் நீங்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் பாதுகாப்பாக வருவார்கள். இவர்களுக்கு பெயர்தான் “மொபோ”, தேவைப்பட்டால் ஆட்களைச் சுட்டுக் கொல்லவும் இவர்களுக்கு அனுமதி உண்டு” என்றார். 

ஆஹா !!! என்னடா இவ்வளவு ஆபத்துகள் நிறைந்த ஊருக்கா வந்திருக்கோம் என்று வயிற்றைச் சிறிது புரட்டிக்கொண்டு வந்தாலும், இரண்டு ஆட்கள் துப்பாக்கிகளோடு நம் அருகில் பாதுகாப்பிற்காக வரும்போது ஒருவிதமான கம்பீரமும், பந்தாவும் (ஆமா இதற்கான தமிழ் வார்த்தை என்ன ??) நடையில் மிடுக்கும், உடம்பில் தெம்பும் ஏற்பட்டது என்றால் அது மிகையல்ல (அப்பதான் புரிந்தது நம்மூர் அரசியல்வாதிகள் ஏன் ஆட்சிக் கட்டிலைத் தேய்ச்சிக்கிட்டே கிடக்கணும்டு விரும்புறாங்கன்னு).

"குட்மார்னிங்" என்று சொன்ன செக்யூரிட்டிகளின் உருவமும், ஏந்தியிருந்த துப்பாக்கிளும் ஒரு வித இடி, மின்னலை உடம்பிற்குள் ஒயாமல் செலுத்திக் கொண்டிருந்தது (இவனுங்களே கடத்தல்காரர்களாக மாறிவிட்டால் என்ன செய்வது என்று நினைத்துதான். ஏனென்றால் நம்மிடம் கை குலுக்கிவிட்டு எடுத்தால் மோதிரம், வாட்ச் எல்லாம் நம் கையிலயே பத்திரமாக இருக்கின்றதா என்று சோதித்துப் பார்க்குமளவிற்கு நம்பிக்கையானவர்கள்(!) நைஜீரியன்ஸ், 95% நைஜீரியன்ஸ் அப்படி இப்படித்தான், நம்பிக்கை வைப்பது கடினம். 

மேலும் “sir, without our permission you should not come out of the car, once we said ok you may come out from the car” நாங்களும் யாருபெத்த பிள்ளையோ உன் சொல்லையெல்லாம் கேட்டு நடக்கனும் என்ற தொனியுடன் “ஒகே” என்றோம்.

ஒரு வழியாக ஆயுதம் ஏந்திய கார்டுகள் துணைக்கு வர, இயற்கை அள்ளி வழங்கியிருக்கும் அருட்கொடைகளை ரசித்துகொண்டே தங்கும் ஹோட்டல் வந்து சேர்ந்தாகிவிட்டது. வளங்கள் வாரி வழங்கப்பட்டிருந்தாலும், சிந்திக்கும் அறிவும், மூளையென்று ஒன்று உள்ளது என்ற நினைப்பு மறந்திருப்பதும் அல்லது மறக்கடிக்கப்பட்டிருப்பதும் இம்மக்களை ஏழைகளாகவும், அடிமைகளாவும் ஆக்கி வைத்திருக்கின்றது. இந்தியாவில் காணப்படும் காட்சிகள் அப்படியே அங்கேயும் இருந்தன. சில மிக மோசமாகவும். திறந்த கழிப்பறை, தரைப்படை வாழ்க்கை, தூக்கணாங்குருவி போல அடுக்கு குருவிக்கூடுகள் ஸாரி வீடுகள், வீடுகளுக்கு, கீழே திறந்த அசுத்த சாக்கடை ஓட்டம், யெல்லோ ஃபிவர் இல்லை எல்லா ஃபிவரும் அந்த சூழ்நிலைக்கு வரும்.



போட்டோ எனக்குதானே நானே எடுத்துக் கொண்டது. யாரிடமும் போனைக் கொடுத்து போட்டா எடுங்க என்று சொல்ல தயக்கம், எடுத்துக்கிட்டு ஒடிடுவானுங்க என்ற பயம்தான், (நான் சத்தியமா உங்களை எல்லாம் பார்த்து முறைக்கல)

ஒரு வழியாக ரூமுக்கு வந்தடைந்தோம், நம்ம தல விடும் குறட்டை சத்தம் ஒரு நிலநடுக்க சத்தம்போல் இருக்குமாதலால் தனிரூம் எடுத்து தங்கினார். ஓயாத மழை, அந்த மழையும் அதீத ஆர்வத்தால் யார் புதுசா வந்திருக்கின்றார்கள் என்று பார்க்கவேண்டும் என என் அறைக்கு பக்கத்தில் வந்து பார்த்தது. நைஜீரியாவில் 4 ஸ்டார் ஹோட்டலின் லட்சணம் அப்படி, எனக்கென்னயோ இது போலி Ibis ஹோட்டலா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியது அந்தச் சூழல்.

ஒய்வெடுத்துவிட்டு அடுத்த நாள் காலையில் எங்கு செல்லவேண்டும் என்று மொபோக்களிடம் சொல்லி கிளம்பியாச்சு, வேற எங்கே கணினி மார்க்கெட்டுக்குதான். நாங்கள் சென்ற இடம் லாகோஸ் அங்குதான் மிகப்பெரிய கணினி மார்க்கெட் (IKEJA Computer Village ) உள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்புடன் சென்ற எங்களுக்கு பெரிய ஏமாற்றம் காத்திருந்தது, வில்லேஜ் என்ற பெயருக்கு என்றார்போல அந்த மார்க்கெட்டும் கிராமமாகவே தெரிந்தது. அதனைப் பார்த்தபிறகு நம்மூர் ”பர்மா பஜார்” யூரோப்பாக தெரிந்தது எனக்கு.


‘தல’யின் முன்னோக்கிய பயணம்,கார்டுகளை படமெடுக்க அனுமதியில்லை


செருப்புக்கடை காரின் மேல்


பயன்படுத்திய கணினி விற்கும் கடைகள்-மேல்நாடுகளின் எலக்ரானிக்ஸ் வேஸ்ட் டம்பிங் கிரவுண்ட்.


மடிக்கணினி பைகள்



மொத்த விற்பன்னர்கள் கட்டிடம்

ஒரு வகையாக அலைந்து திரிந்ததில் ஒரு சில தொடர்புகள் கிடைத்தன. தன்னை ஒரு உள்ளூர் இளவரசனாக அறிமுகப் படுத்திக்கொண்டு பெயர் சொல்லும் அளவிற்கு வியாபாரம் செய்துவரும் Nwokeji Anayo J–வை சந்தித்தோம். இப்படியுமா மனிதர்கள் இருப்பார்கள் என்பதற்கு அடையாளமே இவர்தான் நாங்கள் 1000 வார்த்தைகள் பேசினால் மனிதன் ஒரு வார்த்தையில் பதிலளிப்பார். கடைசியில் தான் தெரிந்தது இவர் ஒரு பேப்பர் இளவரசன்தான் நிஜமாகவல்ல என்று, இருந்தாலும் இதனை அனுபவமாக எடுத்துக்கொண்டு அவர் 4 மணி நேரம் பேசிய 10 வார்த்தைகளில் இருந்து சில விபரங்களை எடுத்துக் கொண்டு நடையைக் கட்டினோம்.

பாங்கு ஒலித்ததால் தொழவிரும்ப, மொபோக்கள் அனுமதி தந்தார்கள் (அஸ்தகுபிருல்லாஹ்), மாஷா அல்லாஹ் சமத்துவத்தை அங்கு மட்டுமே காண முடிந்தது. கருப்புக்கே உரிய கம்பீரக்குரலில் குர் ஆன் ஆயத்துக்கள் ஒலித்தன.


லாகோஸ்-ஐகேஜாவின் ஓஜிவோ பள்ளிவாசல்.

வெளியில் உள்ள உணவகங்களில் சாப்பிடுவது தற்கொலைக்கு சமம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்ததால் முடிந்த அளவிற்கு தண்ணீரை வயிற்றில் நிரப்பிக் கொண்டிருந்தோம். சில தோல் மூடிய பழங்களை வாங்கி சாப்பிட்டோம் (அதைத்தான் வைரஸ் தாக்காதாம்). ச்ச்சும்மா சொல்லக்கூடாது நைஜீரியாவின் அன்னாசியும், வாழைப்பழமும் ஒரு விதமான தனி ருசிதான். அந்த ருசியை இன்றுவரை நான் அனுபவித்தது இல்லை. நாம் காணாத ஒரு பெரிய வாழைப்பழமும் அங்குண்டு அவித்து சாப்பிடுகின்றார்கள். 

மாலையில் தலையின் தெரிந்த வீiட்டிற்கு மதிய உணவையும், இரவு உணவையும் ஓரே நேரத்தில்! முடிக்க எண்ணி கிளம்பினோம், வீட்டிற்கு நுழையுமுன் மூன்று செக்யூரிட்டி கேட்டுகள் ஆயுதம் தாங்கிய நபர்களுடன், நிறைய லெபனான் நாட்டுக்காரர்களும், சில சிரியக்காரகளும் வியாபாரம் செய்து நல்ல நிலையில்தான் உள்ளார்கள். ஆனால், வலையில் வசிக்கும் எலி போன்ற வாழ்க்கைதான் அவர்களுடையது. எங்குமே சுதந்திரமாக போகமுடியாது கடத்தப்பட்டுவிடுவோம் என்ற பயம்தான்.


‘தல’யின் உறவினர்களுடன்

நமது அடுத்த பயணம் லெக்கி பெனின்சுலாவில் உள்ள விக்டோரியா ஐலேண்டுக்கு (Vitoria Island-Lekki Peninsula). அதுதான் நீங்கள் அடிக்கடி பார்க்கும் “என் வாப்பா ஒரு முன்னாள் புறம்போக்கு, அவர் இறந்துட்டார், நான் அந்த புறம்போக்கின் மகன்/மகள் அவரின் பணம் 6 மில்லியன் டாலரை உங்களுக்கு அனுப்பி வைக்கின்றோம் சம்மதமா” என்று சம்பந்தம் இல்லாமல் வருகின்ற  அந்த இமெயில்களின் தலைநகரம். எங்களுக்கும் அப்படியொரு சம்பவம் நடந்த்து…
தொடரும்
முகமது யாசிர்

23 Responses So Far:

Abdul Razik said...

I am always inspiring to store this sort of information. With the help of Google map, I tried to find the Land Road route from Adiramapattinam to Victoria Island, Nigeria. Result appeared the travelling distance and duration 212 hours and 15099 kilo meters crossing with 12 countries. Excellent article. Nice pictures. Please share the remaining events.

Abdul Razik
Dubai

Iqbal M. Salih said...

தூக்கணாங்குருவி போல அடுக்கு குருவிக்கூடுகள் ஸாரி வீடுகள், வீடுகளுக்கு, கீழே திறந்த அசுத்த சாக்கடை ஓட்டம், யெல்லோ ஃபிவர் இல்லை எல்லா ஃபிவரும் அந்த சூழ்நிலைக்கு வரும்.//

ஒரு வழியாக ரூமுக்கு வந்தடைந்தோம், நம்ம தல விடும் குறட்டை சத்தம் ஒரு நிலநடுக்க சத்தம்போல் இருக்குமாதலால் தனிரூம் எடுத்து தங்கினார்.//

ஆஃப்ரிக்கப் பயணக்கட்டுரையில், ஒரு கரைகண்ட
எழுத்தாளன்போல் அசத்துகின்றார் தம்பி யாசிர்.

உண்மை. வெறும் புகழ்ச்சியல்ல!
அல்லாஹ் அவர்மீது அருள்வானாக!


Ebrahim Ansari said...

// வளங்கள் வாரி வழங்கப்பட்டிருந்தாலும், சிந்திக்கும் அறிவும், மூளையென்று ஒன்று உள்ளது என்ற நினைப்பு மறந்திருப்பதும் அல்லது மறக்கடிக்கப்பட்டிருப்பதும் இம்மக்களை ஏழைகளாகவும், அடிமைகளாவும் ஆக்கி வைத்திருக்கின்றது. இந்தியாவில் காணப்படும் காட்சிகள் அப்படியே அங்கேயும் இருந்தன. சில மிக மோசமாகவும். திறந்த கழிப்பறை, தரைப்படை வாழ்க்கை, தூக்கணாங்குருவி போல அடுக்கு குருவிக்கூடுகள் ஸாரி வீடுகள், வீடுகளுக்கு, கீழே திறந்த அசுத்த சாக்கடை ஓட்டம், யெல்லோ ஃபிவர் இல்லை எல்லா ஃபிவரும் அந்த சூழ்நிலைக்கு வரும்.//

நான் அங்கோலா போயிருந்த போது அதை வர்ணித்து இருந்தால் மேற்கண்டபடிதான் வர்ணித்து இருப்பேன். Same same.

தொடரின் ஒவ்வொரு அத்தியாயமும் மெருகேறி வருகிறது மருமகனே!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// ஓயாத மழை, அந்த மழையும் அதீத ஆர்வத்தால் யார் புதுசா வந்திருக்கின்றார்கள் என்று பார்க்கவேண்டும் என என் அறைக்கு பக்கத்தில் வந்து பார்த்தது. //

புதுசா வந்திருந்த விருந்தாளியை பார்க்க வந்த மழைக்கு சூப்பர் வரவேற்பு ! :)

அது சரி... மின்சாரம் அப்படியே இருந்துச்சா... !

Unknown said...

Assalamu Alaikkum

Africa's look(in the pictures) is similar to visiting Tanjore. But the depiction in your words gives the real experience on how it feels to be there.

ZAKIR HUSSAIN said...

ஆப்பிரிக்கா யாரும் அதிகம் விரும்பி போகாத இடம். இருப்பினும் [ வேறு வழியில்லாமல் போய் ] அழகான ஆக்கம் தந்திருப்பது சந்தோசம் யாசிர்.

படங்களை கொஞ்சம் வெளிச்சம் கொடுத்து அப்லோட் செய்திருக்களாம்.

KALAM SHAICK ABDUL KADER said...

உங்கள் |தல” க்குத் தம்பி போல ஒரே சாயலில் இருக்கின்றீர்கள்.
“கொசுக்கடி” இருந்ததா?
உணவு ஒத்துக் கொண்டதா?

sabeer.abushahruk said...

// ஓயாத மழை, அந்த மழையும் அதீத ஆர்வத்தால் யார் புதுசா வந்திருக்கின்றார்கள் என்று பார்க்கவேண்டும் என என் அறைக்கு பக்கத்தில் வந்து பார்த்தது. //

கட்டுரை எழுதுவதாகச் சொல்லிவிட்டுக் கவிதையாகவல்லவா எழுதுகிறீர்கள்.

மழை வந்து பார்த்தது
அப்புறம்...?
சாரல் வீச
சாரளக் கம்பிகள்
மழைத்துளிகளால் வேர்த்ததா?

காதுமடல்களில்
வீசிய காற்றில்
வீட்டு நினைவுகள் மீண்டதா?

தேக்கரண்டி இனிப்பிட்டத்
தேநீர் கோப்பையெடுத்து
நாக்குநுணியில் ருசித்தீரா
ஊடாக
நீர்க்கோர்வை ரசித்தீரா?

பகலில்
மழையைப் பார்க்கலாம்
இரவிலோ
அதன்
பேச்சுச் சப்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும்.

ஆப்ரிக்க மழையில்
அபரிதமாக
ஆக்ஸிஜன் இருந்ததா
ஆச்சரியம் இருந்ததா?

அங்கு
மழைத்துளியும்
பல் வரிசையும் மட்டுமே
வெள்ளை
இல்லையா?






sabeer.abushahruk said...

ட்டெக்னோ கம்ப்பெனியில் வேலை செய்யும் எல்லோர் பாக்கெட்டிலும் இங்க் ஒழுகும் பேனா இருக்கிறதோ? எவ்வளவு ஊதா!!!

sabeer.abushahruk said...

சாலையெல்லாம்
மஷ்ரூம் பதியம் போட்டிருக்கே...!!!
குடைகளின் கீழ்
கடைகள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//படங்களை கொஞ்சம் வெளிச்சம் கொடுத்து அப்லோட் செய்திருக்களாம்.//

மின்சாரம் தட்டுப்பாடுதான் காக்கா :)

லைட் போட்டா, ப்ரைட்டா தெரிவாங்களே :)

KALAM SHAICK ABDUL KADER said...

கார்மேகங்களாக ஆஃபிரிக்கக்
கருந்தேகங்களைக் கருவாக்கிக்
கருத்தானக் கவிதை உருவாக்கிப்
பொருத்தாமாய்ப் பொழிந்தார்
கவிமழையில் கவிவேந்தர்!

மழையென்றதும்
மனத்தினில்
பட்டாம்பூச்சி துடிப்பதும்
பாட்டாய்ச் சூழலை வடிப்பதும்
கவிவேந்தரின் கைவந்த கலை!

அதிரையில் மழையென்றாலும்
அமீரகத்தில் மழையென்றாலும்
ஆஃப்ரிக்காவில் மழையென்றாலும்
யாசிர் எனும் நண்பர்
யாசிக்காமலும்; யோசிக்காமலும்
வாசிக்க எங்கட்கு வாரி வழங்கும்
கவிவள்ளலே வாழ்க!!

அதிரை சித்திக் said...

தம்பி யாசிரின் பயண கட்டு ரை
நம்மை நைஜீரியாவிற்கே அழைத்து
செல்கிறது ...பதுகாவளுருடன்
கம்பீரமாக பவனி வந்தது ..
எனக்கு பெருமிதமாக இருந்தது
இனைய தளம் மூலம் இனிய நட்பு
கிடைத்த அன்பு தம்பி யாசிர்
என்றும் கம்பீரமாக வாழ வாழ்த்துக்கள்
மற்றும் து ஆ கள் ...மிக்க மகிழ்ச்சி ...!

இப்னு அப்துல் ரஜாக் said...

அருமை சகோ யாசிர்
உங்களுடன் கூட வருவதுபோல
பீலிங் .நன்றாக உள்ளது வர்ணனை .

இயற்கை என்ற இடத்தில் அல்லாஹ் என்று இருப்பதே சரி.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சொல்ல, கேட்பதற்கு மட்டும் சுவை நிறைந்த தேன் தமிழ்ப் பயணம்!

தொடர தொடர மெருகேரி வரும் மொழி நடை!

பயணத்தை நீட்டித்து கேட்டு, சுவைக்க ஆசை!
-------------------------------------------------------------------------------

ஸபர்/25/1434

ZAKIR HUSSAIN said...

//பகலில்
மழையைப் பார்க்கலாம்
இரவிலோ
அதன்
பேச்சுச் சப்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும்.//


70 களின் கடைசியில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனத்தின் தமிழ்சேவையில் இரவில் ஒலிக்கும் 'இரவின் மடியில்" நிகழ்ச்சியோடு கூடிய மழைக்குள் அழைத்துச்சென்று விட்டாய்...




Unknown said...

Thanks bro Yasir.........Expecting more from Adis Ababa and Asmara

அப்துல்மாலிக் said...

வடிவேலு கேட்பது போல் “இவ்வளவு மோசமாவா இருக்கு” வரும் ஒவ்வொரு வெளிநாட்டினருக்கு செக்க்யூரிட்டி காவல்..

பார்கிங்கில் உள்ள கார்மேலே செருப்புக்கடை

மொத்த விற்பன்னர்கள் கட்டிடம்

இது எல்லாமே குடிசைத்தொழிலாகவே இன்னும் இருக்கு என்பதை மறுக்கவியலாது...

இன்னும் நிறைய எழுதுங்க யாஸிர்பாய்..

Meerashah Rafia said...

உம்மாடி.. ஒரு ராஜேஸ்குமார் நாவல் படிப்பதுபோல் திக்..திக்..என்கின்றது ஒவ்வொரு தொடரும்..

கார் மேல் பூ மாலை பார்த்திருக்கின்றேன்..இப்பத்தான் செருப்பு மாலை பார்கின்றேன்.

Yasir said...

Dear Bro.Abdul Razik thanks for your valuable comment and i do have yours kinda inspiration in my life thats why i like & do travel lot so i get two birds in one shot - business & meeting different people with different cultures

இக்பால் காக்காவின் மனந்திறந்த வாழ்த்துக்கள் என்னை நிச்சயமாக பண்படுத்தும்

ஆமாம் மாமா,அங்கோலாவில் நீங்கள் கண்கூடாகக்கண்டதுதானே,தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி

என்னின் உற்சாக டானிக் அபூஇப்ராஹீம் காக்கா தங்களின் அனைத்து சேவைக்கும் என் நன்றி

Bro. B. Ahamed Ameen,yes there are places worse than Tanjore, believe me we are very lucky to live in a country like India and that too in Adirai, keep continue writing comments in your high standard English,its a booster for all and why don’t you write an article about “ the language power” , In it you may discuss the lack of foreign language skills our adiraiyans facing and give your valuable tips to improve it

Yasir said...

ஜாஹீர் காக்கா ஆப்பிரிக்காதான் வருங்கால மார்க்கெட் என்று கூறுகின்றார்கள்,still it is virgin markets,நான் வளைகுடாவிலும் பயணம் செய்து இருக்கின்றேன்,ஐரோப்பாவிலும் பயணம் செய்து இருக்கின்றேன் ஆனால் ஆப்பிரிக்காவில்தான் ஒரு வித வீட்டு உணர்வை காணமுடிந்தது, இந்தியாவைவிட பட்டினியிலும்,வறுமையிலும்வாடும் அம்மக்களை கண்டப்பிறகு அல்லாஹ்வை அச்சத்துடனும்,மிக நன்றியுடனும் வணங்குவதற்க்கு மனம் வலியுறுத்துகின்றது

அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் காக்கா தங்களின் வருக்கைக்கு நன்றி. அப்படியா தெரிகின்றது…கொசுக்கடி ஹோட்டலில் இல்லை ஆனா மீட்டிங்க போன இடத்தில்லெல்லாம் எங்க கூட காபி சாப்பிட்டுக்கொண்டே தொடர்ந்து வந்து கடித்தது

கவிக்காக்காவின் கவிமழை எனக்கு நைஜீரியாவில் கிடைத்த கண்டெய்னர் ஆர்டரைவிட பெருமகிழ்ச்சியை தந்தது

// காதுமடல்களில்
வீசிய காற்றில்
வீட்டு நினைவுகள் மீண்டதா?//

அப்படியே என் மன CCTV கேமராவை நோட்டம்விட்டதுபோல் எழுதியுள்ளீர்கள்

வாவ் இன்னொரு போனஸ் “கவியன்பன் காக்காவின் கவிதை

சித்திக் காக்கா தங்களின் கருத்தை படித்ததும் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் ஒரு சொந்த தம்பியை வாழ்த்துவதுபோல் உள்ளது உங்கள் வாழ்த்து,அல்லாஹூ அக்பர்

சகோ. அர அல நன்றி தங்கள் வாழ்த்துக்கு,நீங்கள் சொல்வது சரி,இறைவனால் படைக்பட்டதுதான் இயற்க்கை என்று நினைப்பில் எழுதினேன்,மாற்றிக்கொள்கின்றேன் இனிமேல் வரும் எழுத்துக்களில்

நண்பர்.ஜஹபர் சாதிக் தங்களின் மேலான கருத்துக்கள் என்னை மெருகேற்றுக்கின்றன.

Bro.Abdul Rahman ,thanks for your curiosity, in my upcoming Ethiopia episodes will give clear picture about that country, hope readers will not get bored :(

நண்பர் அப்துல்மாலிக் தேவைப்பட்டவங்க செக்கியூரிட்டு வச்சுக்கிடலாம் அதான் அறிவுரையும் கூட,எங்க “தல” கொஞ்சம் தொட்ட சிணுங்கி அதான் அரெஞ்ச் பண்ணிட்டார்

நன்றி சகோ.மீராஷா தங்களின் வருகைக்கும் - உற்சாகமூட்டும் கருத்துக்கும்

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

திருப்பூரில் என் பக்கத்து வீட்டுக்காரர் நைஜீரியர்தான் குடும்பத்தோடு 2 வருட காலமாக தங்கியுள்ளார் இது வரை அவரிடம் நான் பேசியது இல்லை[முன் எச்சரிக்கைதான்] தங்கள் கூற்றும் அதை நிருபிக்கின்றது நைஜீரியரை நேரில் பார்த்தது போல் நாட்டையும் நேரில் பார்த்த அனுபவம் புகை படமும் கட்டுரையும்

Yasir said...

மதிப்பிற்க்குரிய மு.செ.மு. சபீர் அஹமது அவர்களின் வருகையும்,வார்த்தைகளும் உற்சாகமளிக்க்கின்றன....”அஹமது”வை கேட்டதா சொல்லுங்க

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு