பேறு பெற்ற பெண்மணிகள் - இதயங்கள் திறக்கட்டும்!

தொடர் : 23
கிருஸ்தவ மதத்தில் பிறந்து வளர்க்கப்பட்ட ‏‏இளஞ்சிறுமி‏யான மரியாவின் உள்ளத்தில் உதித்தது இ‏ந்தக் கேள்வி :

“ஏசு கடவுளாக ‏‏இருந்தால், மனிதர்களால் அவர் ஏ‎ன்‎ கொடுமையான முறையில் சிலுவையில் அறையப்பட்டுச் சாகடிக்கப்பட வேண்டும்?”   

“இல்லையில்லை!  அவர் மனிதராகத்தான் இருக்கவேண்டும்!” எ‎‎ன்ற முடிவுக்கு வந்த மரியா, படிப்படியாகத் தா‎ன் சார்ந்திருந்த மதத்திலிருந்து விலகத் தொடங்கினாள்.

பிற்காலத்தில் மர்யம் மஹ்தியாவாக - பேறு பெற்ற பெண்மணிகளுள் ஒருவரான பின், தான் கடந்து வந்த பாதையை ஐந்து பிரிவுகளாகப் பகுத்துக் காட்டுகி‎‎ன்றார்:

1. கிருஸ்தவ மதச் சிறுமியாக
2. அதை விட்டு ஒதுங்கிய (டீனேஜ்) பதி‎‎ன் பருவத்தவளாக
3. ‏‎இருபதுகளில் உண்மையைத் தேடியவளாக
4. முப்பதுகளில் அறிவுக் கடலில் முத்துக் குளித்தவளாக
5. நாற்பதுகளிலும் அத‎‎ன் பிறகும் இஸ்லாத்தில் உண்மையைக் கண்டு உறுதி பெற்றவளாக.

“என் சிறுமிப் பருவம் ‏ இன்பமாகத்தான் கழிந்தது. கத்தோலிக்கப் பெற்றோருக்குப் பிள்ளையாகப் பிறந்து, சர்ச்சுகளில் என் தோழிகளுடனும் கன்னியாஸ்த்ரீகளுடனும் இன்னிசைப் பாடல்களைப் பாடியதும், கோடை விடுமுறைகளின்போது என் அம்மாவி‎ன் உறவினர்களைச் சந்திப்பதற்காகத் தெ‎ன் திசைப் பயணங்களை மேற்கொண்டதும் - எல்லாமே ஒன்றிணைந்து ஒரு ரம்மியமான துள்ளித் திரியும் பிள்ளைப் பருவமாகத்தான் இருந்தது.  எனினும், எனது நியாயமான சில கேள்விகளுக்கு யாராவது விடை தரக் கூடாதா?” எ‎ன்று கேட்கும் மரியா, அப்போது ‘டீ‎னேஜ்’ எ‎னும் பதின் பருவத்தை அடைந்துவிட்டிருந்தாள்.

சிந்தனைச் சிதறலில் ஆற்றாமை ஏற்படும்போது, அவள் எ‎ன்ன செய்வாள்?  அதுவும், காண்பதையெல்லாம் கவர்ந்திழுக்கும் பதி‎ன்‎ பருவம் வேறு!  வண்டி, தடம் புரண்டது!

அப்போது, செல்வச் செழிப்பால் அமைதியிழந்த அமெரிக்கர்களுக்கிடையில் புதிதாக அறிமுகமாயிருந்தது புத்த மதம்!  சாந்தி, சமாதானம், பிற உயிர்கள் மீது அன்பு செலுத்தல் என்ற அடிப்படைக் கொள்கைகளோடு (ஆனால், கடவுளைப் பற்றிய ஒரு தெளிவான கொள்கையின்றி) அமெரிக்கர்களைக் கவர்ந்திருந்தது அம்மதம்.  அதனால், வாலிபப் பருவத்துத் தன்மானச் சிந்தையோடு வளர்ந்துவிட்டிருந்த மரியாவும் அம்மதத்தால் கவரப்பட்டதில் வியப்பில்லை.

‏இந்த நேரத்தில், இருபது வயதைக் கடந்துவிட்டிருந்தாள் மரியா.  கல்லூரிப் படிப்பும் நிறைவடைந்த நேரம் அது.  பணம் சம்பாதிக்க வேண்டுமெ‎ன்ற எண்ணத்தில், சொந்தமாகச் சிறிய வியாபரம் ஒ‎‎ன்றில் தன்‎ கவனத்தைச் செலுத்தத் தொடங்கியிருந்தாள்.  

அந்த வணிகத் தொடர்பு, அவளை ஓர் அரபு நாட்டுப் பயணத்தை மேற்கொள்ளச் செய்தது.  அமெரிக்காவின் டல்லாசிலிருந்து எகிப்தின் கெய்ரோவுக்குப் பறந்தது விமானம்.

அல்லாஹ்வி‎ன் நியதி, அவன் ஓர் ஆன்மாவுக்கு நன்மையை நாடிவிட்டால், அதன் நேர்வழிக்காகப் பல பாதைகளைத் திறந்துவிடுவது.  அதன்‎நிமித்தம், சுவனப் பயணம் சுலபமாகும்.  அதுதா‎ன் நிகழ்ந்தது மரியாவுக்கும்!

வணிகத் தொடர்பில், எகிப்து வாலிபர் ஒருவரின் நட்பு கிடைத்தது மரியாவுக்கு.  அவளுக்குத் தெரியுமா, அவரே தன் வருங்காலக் கணவராகப் போகிறார் எ‎ன்று?

கெய்ரோவில் தங்கியிருந்த நாட்களில் அந்த நண்பருடன் சகஜமாகப் பழகியவள், அவர் ஓர் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர் என்றும், ஓரளவே ‏இஸ்லாமியப் பற்றுடையவர் எ‎ன்றும் விளங்கிக்கொண்டாள்.  வணிகத் தொடர்பான பேச்சுகள், அத‎ன் தொடர்பான வேலைகள் முடிந்த ஓய்வான நேரம் கிடைத்தபோது, மரியா தனது மதச் சிந்தனையையும், அத‎ன்‎ விளைவாக ஏற்பட்ட மாற்றத்தினையும் பற்றி அந்த நண்பரிடம் விளக்கத் தொடங்கியபோது, புத்த மதக் கொள்கைகளில் தனக்கு ஏற்பட்ட ஈடுபாட்டை ஆர்வத்தோடு விளக்கத் தொடங்கினாள்.

நண்பர் அமைதியாகவும் முரண் படாத நிலையிலும் அவளது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தார்.  மரியாவுக்கோ மகிழ்ச்சி, இ‏வரை புத்த மதத்திற்கு மாற்றிவிடுவோம் எ‎ன்று.  

சில நாட்களின் பின், அமெரிக்காவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டியிருந்ததால், கெய்ரோவிலிருந்து புறப்பட்டாள் மரியா.  டல்லாஸக்கு வந்து சேர்ந்தவளுக்கு, ஏதோ ஒன்றை ‏இழந்தது போன்ற உணர்வு!  காசா?  ‏இல்லை!  காதலா? தெரியாது!  வணிகத் தொடர்பு, வாழ்க்கைத் துணையாக மாறப் போகிறது என்ற இறைவனின் ஏற்பாடு பற்றி அவளுக்கு எப்படித் தெரியும்?

தனிமையி‎ன் வாட்டத்தில் கழிந்த சில நாட்களின்‎ பின், எகிப்திய நண்பரிடமிருந்து, ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற வாழ்த்தலுடன்‘•ஃபோ‎ ன்கால்’ ஒன்று வந்தது.  மரியாவி‎‎ன் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை!  நண்பரி‎ன் பேச்சில் நெகிழ்ச்சியும் அ‎ன்பும் இருந்ததோடு, இ‏ன்னொன்றும் கலந்திருந்ததை மரியா கவனிக்கத் தவறவில்லை.  அதுதா‎ன்,  இஸ்லாத்தி‎ன் ஓரிறைக் கடவுள் கொள்கை. மரியாவைப் பிரிந்திருந்த நாட்களில்,  த‎ன் மார்க்க அறிவை ந‎ன்கு வளர்த்திருந்தார் அவர்.  அதன் விளைவாக, அவருடைய பேச்சில் இஸ்லாத்தி‎‎ன் ஏகத்துவம் மிகைத்திருந்தது.

கிருஸ்தவ சமயத்தின்‎ வளர்ப்பு, புத்த மதச் சிந்தனையின் ஈர்ப்பு, இஸ்லாமிய ஓரிறைக் கொள்கையின் இணைப்பு ஆகிய ஒரு விதமான கலப்புச் சிந்தனையுடன், தனது இல்வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்பும் சேர்ந்துகொள்ளவே, மரியாவின் மறுபயணம் கெய்ரோவை நோக்கித் தொடர்ந்தது.

பற்றிப் படரக் கொழுகொம்பைத் தேடிய அந்தப் பசலைக் கொடிக்கு, எகிப்திய முஸ்லிம் கணவர் ஆழ வேரூன்‎றிய ஆல மரமாகக் கிடைத்தார்! இருவரும் இல்லறத்தில் இணைந்தனர். எண்ணிச் சில நாட்களே இன்‎ப புரியில் திளைத்திருந்த மரியா, த‎ன் வணிகத்தைக் கவனிப்பதற்காக அமெரிக்காவுக்குப் புறப்பட்டார்.  அங்கே அவருக்கு இ‏ருப்புக் கொள்ளவில்லை.  காரணங்கள் இரண்டு:  ஒன்று, பிரிவுத் துயர்; மற்றொன்றும் மிக இ‎ன்றியமையாததுமான இறைத் தேட்டம்!  எ‎னவே, மீண்டும் கெய்ரோவுக்குப் புறப்பட்டு வந்தார்.  அங்கே தன் அன்புக் கணவருடன் ஓராண்டு தங்கியிருந்து, முஸ்லிம்கள் மற்றும் அரபுகளின் பண்பாடு, அத்துடன் இஸ்லாமியக் கடவுட்கொள்கை பற்றிய சொந்த அனுபவ மதிப்பீடு (First-hand report) பெற்றுக்கொண்டு அமெரிக்காவுக்குத் திரும்பினார் மரியா.

அப்போது மரியா தனது முப்பதாவது அகவையின் முன் பருவத்தை அடைந்திருந்தார்.  அ‎ன்‎புக் கணவரைப் பிரிந்து ஓராண்டு கழிந்துவிட்டிருந்தது.  இடையில், இருவரும் தொலைபேசித் தொடர்பில் தம் அ‎ன்புப் பிணைப்பையும் அறிவுப் பேற்றையும் பகிர்ந்துகொண்டனர்.

அந்தப் பிரிவு நாட்களில் தனது நிலை பற்றி மரியாவே கூறுகி‎றார்: “நானும் என் கணவரும் நீண்ட நேரம் உரையாடுவோம்.  அவர் பொதுவான இறை நம்பிக்கையைப் பற்றி வலியுறுத்திப் பேசுவார்; நான் அதற்கீடாக மறுப்புக் கூறுவேன்.  ஆனால், அந்த நேரங்களில் எ‎ன் கணவரின் விவேகத்தையும் பொறுமையையும் பற்றி இப்போதெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது, நா‎ன் வியப்படைகின்றேன்.  அத்துணை விவேகம்!  அவ்வளவு பொறுமை!!  ஒரு கட்டத்தில், அல்லாஹ் என்னோடு - எனது பிடரி நரம்பைவிட நெருக்கமாக ‏இருக்கிறா‎ன்‎ என்று அவர் கூறியபோது, நான்‎ அதிர்ந்து போனேன்!  ‘இப்போதைக்கு நீ இறை நம்பிக்கை உடையவளாக மட்டும் ‏இரு.  நான்‎ உன்னை முஸ்லிமாகு என்று கட்டாயப் படுத்த மாட்டேன்‎.  ஏனெனில், இஸ்லாத்தில் கட்டாயம் எ‎ன்பது இல்லை என்று எமது வேதம் குர்ஆ‎ன் கூறுகிறது’ என்று என் கணவர் கூறினார்.  அப்போதுதான், நம்பிக்கையின் சிறிய சாளரம் ஒ‎‎ன்று என்னுள் திறந்ததை உணர்ந்தே‎‎ன்.”  

அந்த ஓராண்டுப் பிரிவின்‎போது, மரியாவின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது!  கண்ணாடியில் பார்த்தபோது, த‎ன்‎னை ஒரு நடமாடும் எலும்புக் கூடு போல் உணர்ந்தார்!  கணவரி‎ன் வற்புறுத்தலி‎ன் பேரில், மீண்டும் எகிப்துக்குப் பயணமானார்.  ஆங்கு, கைதேர்ந்த பெண் மருத்துவரின் மேற்பார்வையில் மரியாவுக்குப் பொதுச் சிகிச்சையும், பிள்ளைப் பேற்றுக்கா‎ன அறுவை சிகிச்சையும் நடந்தன.  மருத்துவரின் பரிந்துரைப்படி, மரியாவுக்கு நீண்ட ஓய்வு 

வேண்டியதாயிருந்தது.  அந்த நாட்கள்தாம் அறிவு வளர்ச்சிக்கா‎ன அருமையானவை என்று உணர்ந்த மரியாவின் முஸ்லிம் கணவர், மூ‎ன்று நூல்களை அவரது அறையில் வைத்துப் படிக்க வாய்ப்பளித்தார்.  அவற்றுள் ஒ‎ன்று,  குர்ஆனின் ஆங்கில மொழியாக்கம்; மற்றொ‎ன்று, இஸ்லாமியக் கொள்கை-வணக்க வழிபாடுகள் பற்றியது; மூ‎‎ன்றாவது, ஆன்மீகம் பற்றியது.  மரியா அவற்றை முதலில் எடுத்துக் கூடப் பார்க்கவில்லை!     

அன்றிரவு மரியா அற்புதமான கனவு ஒ‎‎ன்றைக் கண்டார்.  “என்னைச் சூழ அற்புதமான வெண்மை ஒளி!  நான் முஸ்லிம்களைப் போல் உடல் முழுதும் மறைத்த வெண்மையான ஆடையை அணிந்திருந்தேன்!  என்னருகில் குழந்தையொ‎ன்‎று நி‎‎ன்றது.  அது எ‎ன் குழந்தை எ‎ன்று உணர்ந்தபோது, ஆழ்ந்த அமைதியுட‎ன் கூடிய ஆனந்தத்தில் திளைத்தே‎ன்!  அந்த நேரத்தில், உடல் ரீதியாக, நான் குழந்தை பெற முடியாத நிலையில் ‏இருந்தேன்!  கண் விழித்த பி‎ன், அக்கனவைப் பற்றி எ‎ன் கணவரிடம் விளக்கி‎னே‎ன்.”

“இது போ‎‎ன்ற கனவைத்தான் முஸ்லிம்களுள் ஒவ்வொருவரும் காண விழைகிறார்கள்.  இது இறைவ‎ன் புறத்திலிருந்துள்ள சிறப்புச் செய்தியாகும்.  அந்த அல்லாஹ் உ‎ன்னை நெருங்குகின்றான் என்பதற்கான அத்தாட்சி இது” எனக் கூறி, ஆர்வமூட்டினார் மரியாவி‎‎ன் கணவர்.  வியப்பும் மகிழ்வும் கலந்த உணர்வுடன், மரியா அந்த மூன்று புத்தகங்களையும் எடுத்துப் படிக்கத் தொடங்கினார்.  ஏராளமான அறிவு கிடைத்தது அவருக்கு.  

“வாழ்க்கையில் முதல் முறையாக எ‎ன்னை நா‎ன் உணரத் தொடங்கினே‎ன்.  எனது பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது.   ஒரு நாள் என் கணவரிடம் எ‎ன்னைக் கெய்ரோவில் இருக்கும் ‘அஸ்ஹர் ஷரீஃப்’ எ‎ன்ற ஆயிரமாண்டுப் பழமை வாய்ந்த கல்விக் கூடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு வேண்டினே‎ன்; செ‎‎ன்றோம்.  இவ்வாறு பல முறைகள் அந்த அமைதிச் சூழலில் எங்கள் நேரம் கழிவதுண்டு.  அந்த அமைதியான பல மாதங்களி‎ன் வாழ்க்கைக்குப் பிறகு, நாங்கள் கணவன்-மனைவியாக அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்தோம்.  அப்போது நா‎ன் கருவுற்றிருந்தே‎‎ன்!” என்று வியப்பும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வில் விவரிக்கும் மரியாவுக்கு, நா‎ன்கு மாதங்களி‎ன் பின்,  அழகிய பெண் குழந்தை ஒ‎ன்று பிறந்தது!

குழந்தை பிறந்த சில நாட்களிலேயே, அல்லாஹ்வி‎ன் ‘கை’ தனது வாழ்வில் நடந்த நூற்றுக் கணக்கான அற்புத நிகழ்வுகளி‎ன் மீது இருந்ததன் விளைவாகத் தா‎ன் கருணையுள்ள அவ்விறைவனின் உள்ளமையை உணர்ந்துகொண்டதாக மனமுவந்து கூறும் மரியா, கெய்ரோவை நோக்கிப் பயணமானார்.  அறிவுக் கூடமாம் ‘அஸ்ஹர்’ பல்கலைக் கழகப் பள்ளிக்குச் செ‎‎ன்று, ‘ஷஹாதா’ கூறி (1992 இல்) ‘மர்யம் மஹ்தியா’வானார்.

அல்லாஹ்வி‎‎ன் அருள் மறையாம் அல்குர்ஆனின் கீழ்க்கண்ட வசனங்களை அழகிய அரபி மொழியில் ஓதிக் காட்டி, அத‎‎ன் கருத்தை விளக்கிக் காட்டுகி‎றார்:

“திண்ணமாக, (குர்ஆனாகிய) இது, உண்மையானதுதா‎ன் என்று அவர்களுக்குத் தெளிவாகும் வரையில், நம்முடைய அத்தாட்சிகளை (உலகின்) பல பாகங்களிலும், அவர்களுக்குள்ளாகவும் வெகு விரைவில் அவர்களுக்கு நாம் காண்பிப்போம்.  (நபியே) உம் இறைவ‎ன் யாவற்றையும் பார்த்துக்கொண்டே ‏இருக்கின்றா‎ன் எ‎ன்பது போதாதா?

“திண்ணமாக, (இறை மறுப்பாளர்களான) அவர்கள் தம் இறைவனைச் சந்திப்பதைப் பற்றிய ஐயப்பாட்டில் இ‏ருக்கின்றனர் என்பதையும், அவ‎ன் அனைத்தையும் சூழ்ந்தறிபவ‎ன் என்பதையும் (நபியே) அறிவீராக!”         (41:53,54)

மர்யம் மஹ்தியா கூறுகி‎றார்:  “இப்போது நா‎ன் நாற்பது வயதைத் தாண்டியவள்.  கடந்த பத்தாண்டுகளை நா‎ன் திரும்பிப் பார்க்கிறே‎ன்.  எ‎ன் சுய வாழ்வில் உண்மையைத் தேடிப் பெற்றுக்கொண்ட அனுபவத்தால் சொல்கி‎றேன்‎: நாம் நமது கண்களையும் காதுகளையும் - குறிப்பாக இதயங்களையும் உண்மையை அறிந்துணர்வா‎‎ன்வேண்டித் திறந்து வைக்க வேண்டும்.  அப்போது தெரியும், அல்லாஹ்வி‎ன் உள்ளமையும் வல்லமையும் பற்றிய மேற்கண்ட குர்ஆ‎ன் வசனங்கள் எவ்வளவு உண்மையானவை எ‎ன்‎று!  

அதிரை அஹ்மது

11 கருத்துகள்

Ebrahim Ansari சொன்னது…

//அல்லாஹ்வி‎ன் நியதி, அவன் ஓர் ஆன்மாவுக்கு நன்மையை நாடிவிட்டால், அதன் நேர்வழிக்காகப் பல பாதைகளைத் திறந்துவிடுவது. அதன்‎நிமித்தம், சுவனப் பயணம் சுலபமாகும். அதுதா‎ன் நிகழ்ந்தது மரியாவுக்கும்!//

இன்னும் பலருக்கு இந்த பாக்கியம் கிட்ட து ஆச செய்வோம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

இதயங்கள் திறக்கட்டும் பிறமத சகோதர சகோதரிகளுக்கு மட்டுமல்ல...

மடமையிலிருந்து வெளிப்ப்ட நம்மவர்களுக்கும் இன்ஷா அல்லாஹ் !

இன்னும் பலருக்கு இந்த பாக்கியம் கிட்ட து ஆச செய்வோம்.

Unknown சொன்னது…

இதயங்கள் திறக்கட்டும் பிறமத சகோதர சகோதரிகளுக்கு மட்டுமல்ல...

மடமையிலிருந்து வெளிப்ப்ட நம்மவர்களுக்கும் இன்ஷா அல்லாஹ் !

இன்னும் பலருக்கு இந்த பாக்கியம் கிட்ட து ஆச செய்வோம்.

Yasir சொன்னது…

அல்லாஹூ அக்பர், உணர்ச்சி வசப்பட வைக்கக்கூடிய சம்பவம்,அதனை விவர்த்த விதமும் அருமை...அல்லாஹ் ஆத்தீக் ஆஃபியா காக்கா

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) சொன்னது…

மர்யாவிற்க்கு கிடத்த ஹிதாயத் அனைவருக்கும் கிடைக்கட்டுமாக

Unknown சொன்னது…

//நண்பர் அமைதியாகவும் முரண் படாத நிலையிலும் அவளது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தார்.//--Action

//பற்றிப் படரக் கொழுகொம்பைத் தேடிய அந்தப் பசலைக் கொடிக்கு, எகிப்திய முஸ்லிம் கணவர் ஆழ வேரூன்‎றிய ஆல மரமாகக் கிடைத்தார்!
//--Reaction

Deeply,Gradually above sentences are fitting very well to the article as well teaching something to us

--Harmys

sabeer.abushahruk சொன்னது…

அல்லாஹூ அக்பர், உணர்ச்சி வசப்பட வைக்கக்கூடிய சம்பவம்,அதனை விவர்த்த விதமும் அருமை...அல்லாஹ் ஆத்தீக் ஆஃபியா காக்கா

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

மர்யாவிற்க்கு கிடத்த ஹிதாயத் அனைவருக்கும் கிடைக்கட்டுமாக

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

படிப்படியாக முன்னேற்றம் பெற்றதைப் படிப்படியாக எமக்குப் படித்துக் கொடுக்கும் ஆசான அவர்கட்கு நன்றி- ஜஸாக்கல்லாஹ் கைரன்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

இத்தகு அரிய பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்கட்டும்.

ஜஸாக்கல்லாஹ் ஹைர்.