Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அல்லாஹ்வின் இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் !? 12

அதிரைநிருபர் பதிப்பகம் | May 01, 2013 | ,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )

2:114   وَمَنْ أَظْلَمُ مِمَّن مَّنَعَ مَسَاجِدَ اللَّهِ أَن يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَىٰ فِي خَرَابِهَا ۚ أُولَٰئِكَ مَا كَانَ لَهُمْ أَن يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ ۚ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ

2:114. அன்றி அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில் அவனுடைய பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவைகளைப் பாழாக்க முயற்சிப்பவனைவிட பெரிய அநியாயக்காரன் யார்? அச்சத்துடனன்றி அவைகளில் நுழைய அவர்களுக்கு உரிமையே இல்லை. (அவ்வாறிருக்க அதற்கு மாறாக நடக்கும்) அவர்களுக்கு இவ்வுலகில் இழிவுதான். மறுமையிலோ கொடிய வேதனை உண்டு.

நேற்று மாலை (30-04-2013) தக்வா பள்ளியில் இதற்கு முன்னர் நடந்திராத ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது.

பள்ளிவாசலின் மோதினாரையும் அவருடைய  மற்றொரு உதவியாளரையும் திடீரென்று பள்ளிவாசலின் மைக் வைத்திருக்கும் அலமாரியை பெட்டிச் சாவியுடன் மஃக்ரிப் நேரத்திற்கு சற்று முன்னிருந்து இஷா தொழுகை முடியும் வரை அங்கே காணவில்லை.  இதனால் இரண்டு தொழுகைகளுக்கும் குறித்த வக்திற்குள் பாங்கு சொல்லப்படவில்லை. மற்ற பள்ளிவாசல்களை விட பல நிமிடங்கள் கழித்து, பொறுப்பு யாரிடமும் ஒப்படைக்கப்படாத நிலையில் மோதினாருக்காக காத்திருந்து அவர் வராத நிலையில் அங்கிருந்த சகோதரர் ஒருவரால் சற்று கால தாமதத்திற்கு பின் பாங்கு சொல்லப்பட்டது. அதுவும் மைக் ஒலி பெருக்கி இல்லாமல் சொல்லப்பட்டது. இது ஒருவேளை எதேச்சையாக கூட நிகழந்திருக்கலாம் என்று விட்டுவிடவும் முடியவில்லை.

சில நாட்களுக்கு முன் ஹைதர் அலீ ஆலிம் அவர்கள் பயான் சம்பந்தமாக சுமூக முடிவு ஏற்பட்டு ஒலி பெருக்கியில் வழக்கம் போல் பயான் நடந்த நிலையில் நம்மில் சில சகோதரர்களால் ஒலிபெருக்கியில் பயான் நடை பெறுவதை தடை செய்யும் முகமாக தங்களின் பலத்தை பிரயோகித்து மோதினாரையும் அவர் உதவியாளரையும் ஒலிபெருக்கி இருக்கும் அலமாரியின் சாவியுடன்  அங்கிருந்து அகன்று கொள்ளும்படி வேண்டப்பட்டதா அல்லது எதேச்சையான நிகழ்வா? என்று சந்தேகிக்கும் முகாந்திரம் அதிகமுள்ளது. ஒருவேளை அவர்களுக்கு அவசியமான வேலைகள் இருக்கும் பட்சத்தில் அந்த பொறுப்பை தற்காலிகமாக யாரிடமும் ஒப்படைக்கப்படாமல் பயான் வழக்கமாக நடைபெறும் தினத்தன்று இவ்வாறு நடக்க என்ன காரணம்?

தங்களின் அதிகாரப் பெருமையை நிலை நிறுத்துவதற்காக, அல்லாஹ்வுக்கு எதிரான போரில் இறங்கியிருப்பவர்கள் யார்?

2:114   وَمَنْ أَظْلَمُ مِمَّن مَّنَعَ مَسَاجِدَ اللَّهِ أَن يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَىٰ فِي خَرَابِهَا ۚ أُولَٰئِكَ مَا كَانَ لَهُمْ أَن يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ ۚ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ

2:114. அன்றி அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில் அவனுடைய பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவைகளைப் பாழாக்க முயற்சிப்பவனைவிட பெரிய அநியாயக்காரன் யார்? அச்சத்துடனன்றி அவைகளில் நுழைய அவர்களுக்கு உரிமையே இல்லை. (அவ்வாறிருக்க அதற்கு மாறாக நடக்கும்) அவர்களுக்கு இவ்வுலகில் இழிவுதான். மறுமையிலோ கொடிய வேதனை உண்டு.

சில ஆண்டுகளுக்கு முன் அ.ஜ. பள்ளியில் ஒலிபெருக்கியில் பாங்கு சொல்வதை ஆர்.எஸ்.எஸ்.  காரர்கள் தடை செய்தபோது பொங்கியெழுந்த இளைஞர்களும், சமுதாய உணர்வு மிக்கவர்களும் இந்த விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

இப்படியே போனால் அல்லாஹ்வின் இறை இல்லத்தை இழுத்து மூட ஒத்திகை பார்க்கிறார்களா நம் சகோதரர்கள்?

அன்புக்குரிய இளைஞர்களே, சகோதரர்களே, உங்களுடைய உறவினர்களும் நண்பர்களும் உங்களைப் பற்றி பழிச்சொல் பேசுவார்கள் என்று அஞ்சி அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலை நிறுத்த தவறினால், அல்லாஹ்வுடைய தீனின் கண்ணியத்தை, அல்லாஹ்வுடைய இல்லத்தின் கண்ணியத்தை காக்க தவறினால், அல்லாஹ்வுடைய புனித அடையாலங்கலான அவன் மகத்துவம், அவனுடைய ஏவல், விலக்கல்கள் பற்றி பேசப்படுவதை, கண்ணியப்படுத்தி பாதுகாக்க தவறினால், அல்லாஹ்  நம்மை என்ன செய்வான் என்ற கீழ்காணும் எச்சரிக்கையை அஞ்சிக் கொள்ளுங்கள்.

5:54   يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا مَن يَرْتَدَّ مِنكُمْ عَن دِينِهِ فَسَوْفَ يَأْتِي اللَّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَائِمٍ ۚ ذَٰلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَن يَشَاءُ ۚ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ

5:54. நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரேனும் தங்கள் மார்க்கத்தில் இருந்து மாறிவிட்டால் (அதனால் அல்லாஹ்வுக்கு நஷ்டமொன்றுமில்லை. உங்களைப்போக்கி) வேறு மக்களை அல்லாஹ் கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அவனை நேசிப்பார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; நிராகரிப்பவர்களிடம் கண்டிப்புடையவர்களாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவார்கள். பழிப்பவனின் பழிப்பை அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். அவன் விரும்பியவர்களுக்குத்தான் இதனை அளிக்கின்றான். அல்லாஹ் மிக விசாலமானவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

9:24   قُلْ إِن كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُم مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّىٰ يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ

9:24. (நபியே! நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: உங்களுடைய தந்தைகளும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிகளும், உங்களுடைய குடும்பங்களும், நீங்கள் சம்பாதித்து வைத்திருக்கும் (உங்கள்) பொருள்களும், நஷ்டமாகிவிடுமோ என நீங்கள் பயந்து (மிக எச்சரிக்கையுடன்) செய்து வரும் வர்த்தகமும், உங்களுக்கு மிக்க விருப்பமுள்ள (உங்கள்) வீடுகளும் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விடவும், அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிவதைவிடவும் உங்களுக்கு மிக விருப்பமானவைகளாக இருந்தால் (நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களல்ல. நீங்கள் அடைய வேண்டிய தண்டனையைப் பற்றிய) அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரையில் நீங்கள் எதிர்ப்பார்த்திருங்கள். (உங்களைப் போன்ற) பாவிகளை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை.

உலகெங்கும் ஆங்காங்கே முஸ்லிம்கள் படும் வேதனை அதிரையையும் தொட வேண்டுமா? அந்தோ நாம் செயல்படாமல் இருந்து விட்டோமே என்று காலதாமதமாகி கதறும்முன் செயல்படுவோம் வாருங்கள்.

 அல்லாஹ் கூறுகிறான் :

7:3   اتَّبِعُوا مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوا مِن دُونِهِ أَوْلِيَاءَ ۗ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ

7:3. (மனிதர்களே!) உங்களுக்காக உங்கள் இறைவன் அருளியதையே பின்பற்றுங்கள். அவனையன்றி (மற்றெவரையும் உங்களுக்குக்) பொறுப்பாளர்(களாக ஆக்கி, அவர்)களை நீங்கள் பின்பற்றாதீர்கள். (எனினும், இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உங்களில் மிகக் குறைவு.

7:4   وَكَم مِّن قَرْيَةٍ أَهْلَكْنَاهَا فَجَاءَهَا بَأْسُنَا بَيَاتًا أَوْ هُمْ قَائِلُونَ

7:4. (பாவிகள் வசித்திருந்த) எத்தனையோ நகரங்களை நாம் அழித்திருக்கின்றோம். அவற்றில் இருந்தவர்கள் இரவிலோ, பகலிலோ நித்திரையில் இருக்கும்பொழுது நம்முடைய வேதனை அவர்களை வந்தடைந்தது.

7:5   فَمَا كَانَ دَعْوَاهُمْ إِذْ جَاءَهُم بَأْسُنَا إِلَّا أَن قَالُوا إِنَّا كُنَّا ظَالِمِينَ

7:5. அவர்களிடம் நம்முடைய வேதனை வந்த சமயத்தில் "நிச்சயமாக எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டவர்களாகி விட்டோம்" என்று கூறியதைத் தவிர வேறொன்றும் அவர்கள் கூறவில்லை.

7:6   فَلَنَسْأَلَنَّ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْأَلَنَّ الْمُرْسَلِينَ

7:6. ஆகவே (இதைப் பற்றி நம்முடைய) தூதர்களையும், அவர்களை எவர்களிடம் அனுப்பி வைத்தோமோ அவர்களையும் நிச்சயமாக நாம் விசாரணை செய்வோம்.

7:7   فَلَنَقُصَّنَّ عَلَيْهِم بِعِلْمٍ ۖ وَمَا كُنَّا غَائِبِينَ

7:7. (அப்போது அவர்களின் செயல்களை) நாம் நிச்சயமாக அவர்களுக்கு உறுதியுடன் விவரிப்போம். நாம் மறைவானவர்களாக இருக்கவில்லை.

நம்முடைய இரட்சகனாகிய அல்லாஹ் நமக்கு எல்லாவித எச்சரிக்கைகளையும் தெளிவாகவே சொல்லிவிட்டான். இனி நமது பொறுப்பு

கடைசியாக கிடைத்த தகவல்:

மோதினாரை அசருக்குப் பின் "ஒரு தரப்பினர் மைக் போட சொல்கிறார்கள், மற்றொரு தரப்பினர் மைக் போட வேண்டாம் என்று சொல்கிறார்கள், எனவே ராஜினாமா செய்கிறேன்" என்று சொல்லச் செய்து அவரை அங்கிருந்து போகும்படி செய்ததுடன், அவருடைய உதவியாளரையும் அங்கிருந்து செல்லும்படி செய்திருக்கிறார் பள்ளியின் தற்போதைய தலைவர். மஃக்ரிப் தொழுகைக்கு சிறிது நேரத்திற்கு முன் அவர் அங்கு வந்து மைக் இருக்கும் அலமாரியை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு போயிருக்கிறார். சாவி வைத்திருக்கும் நபரும் தொழுகைக்கு வராமல் மறைந்து கொண்டு பழியை சத்தியப் பிரச்சாரம் செய்பவர்களின் மீது சுமத்த சூழ்ச்சி செய்கிறார்களா?   

35:44   أَوَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِن قَبْلِهِمْ وَكَانُوا أَشَدَّ مِنْهُمْ قُوَّةً ۚ وَمَا كَانَ اللَّهُ لِيُعْجِزَهُ مِن شَيْءٍ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ ۚ إِنَّهُ كَانَ عَلِيمًا قَدِيرًا

35:44. இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? மேலும் அவர்கள் வலிமையில் இவர்களைவிட மிக்கவர்களாக இருந்தனர்; வானங்களிலோ, பூமியிலோ உள்ள எதுவும் அல்லாஹ்வை இயலாமல் ஆக்க முடியாது. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன்; பேராற்றலுடையவன்.

அபூ முஸ்அப்

சற்று நேரத்திற்கு முன்னர் கிடைக்கப்பெற்ற தகவலில், நேற்று மைக் ரிப்பேர் ஆனதால் அதனைச் சரி செய்யப்பட்டு இன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டதாக பள்ளியின் நிர்வாகச் செயலாளர் தெரிவித்திருக்கிறார். இன்றும் மஃப்ரிப் மற்றும் இஷா தொழுகைக்கு மைக்கில் பாங்கு சொல்லப்படவில்லை.

12 Responses So Far:

Shameed said...

அல்லாஹ்வின் இறை இல்லத்தில்பாங்கு சொல்லும் நேரத்தில் ( மைக் வைத்திருக்கும் அலமாரியை பெட்டிச்)சாவியை எடுத்துக்கொண்டு சிறு பிள்ளைத்தனமாக ஓடி ஒழிவது அடுக்காத அடாவடி செயல்

Unknown said...

சுருங்கச்சொன்னால்

அல்லாஹ்வின் தண்டனைக்கு அவசரப்படுகின்றார்கள் என்றுதான்
சொல்லத்தோன்றுகின்றது.

அல்லாஹ் அவர்களின் இதயங்களை இருளிலிருந்து வெளிச்சத்துக்கு
கொண்டு வரட்டும். அல்லது அவனின் தண்டனையை எதிர்பார்த்து காத்திருக்கட்டும்.

அல்லாஹ் அனைவரையும்
மன்னித்து அருள் புரிவானாக !


அபு ஆசிப்

Unknown said...

Sura:2, Ayah:206
وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ ۚ فَحَسْبُهُ جَهَنَّمُ ۚ وَلَبِئْسَ الْمِهَادُ

2:206. “அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்” என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது; அவனுக்கு நரகமே போதுமானது நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும்..

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அவ்வளவும் திட்டமிட்ட சதியாகவே தெரிகிறது!

பழி வாங்கும் செயலில் அரசியலே (சாக்கடை) தேவலாம் போலிருக்கு!

மைக் தானாக ரிப்பேர் ஆகி இருக்காது, மனிதனால் ரிப்பர் ஆக்கப்பட்டிருக்கும்!

நேருக்கு நேர் சுமூகப்படுத்த முயலாமல் குறுக்கு வழியில் விளையாட்டு பிள்ளைத்தனம் கையாளப்பட்டதாக தெரிகிறது!

உடனடியாக இந்த நிர்வாகம் பதவி விலகினால் மட்டுமே இனியும் மஸ்ஜிதின் புனிதம் காக்கப்படும்!

என்னெழுத்தில் தவறிருந்தால் யா அல்லாஹ் மன்னிப்பாயாக!

அப்துல்மாலிக் said...

இது இப்படியே தொடர்ந்தால் 2 மைக் செட் (ஒன்று ஹதீஸ் சொல்ல) வைக்க வேண்டிய நிலை வருமோ?

Unknown said...

இப்படியே போனால், இளைஞர்களும் பெரியவர்களும் தட்டிக் கேட்க தவறினால், ஏதாவது பொய் சூழ்ச்சிகளை செய்து பள்ளிவாசலை இழுத்து மூடவும் இவர்கள் தயங்க மாட்டார்கள்.

இப்படிப் பட்டவர்கள் தானே மேலெத் தெருவில் கோயிலைக் கட்ட அனுமதித்தார்கள்?

Unknown said...

இஷா வரையிலும் வேலை செய்யாத மைக் வெறும் ஃபஜ்ர் நேரத்திற்கு மட்டும் இரு நாட்களாக வேலை செய்கிறது. யாரும் சரிசெய்ய வரவும் இல்லை. இது பற்றி "சங்"க துணைத் தலைவரிடம் ஒருவர் பேசியதற்கு " பாங்கு சொன்னால் ஹைதர் அலீ ஆலிம் மைக்கை அப்பிக்கிடுராறேப்பா " (அதனால் தான் மைக்கிலே பாங்கு சொல்ல அனுமதிப்பதில்லை என்று சூசகமாக) கூரியிருக்கிரார்.

அப்பிக்கிடுறாரே என்று சிறுபிள்ளைத் தனமாக கூருகிறாரே, என்றைக்கு ஆலிம் அவர்கள் மைக் கேட்டார்கள்? மைக் வைக்க சொல்வது பெண்களும், மஹல்லாவில் உள்ள சகோதரர்களும் தான். அல்லாஹ்வைப் பற்றி ஒலிபெருக்கியில் பேசினால் இவருக்கு ஏன் வலிக்கிறது?

Unknown said...

ஹைதர் அலி ஆலிம் பயான் பண்ணுவதால் மைக்கில் பாங்கு சொல்வதை நிறுத்தியவர்கள், அவர் தக்வா பள்ளியில் தொழவந்தால் ஜமாத் தொழுகையையே நிறுத்தி விடுவார்கள். அந்த அளவுக்கு அல்லாஹ்வின் அச்சம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.மறுமையின் வேதனைக்கு பயந்தவர்களாக இருந்தால் இப்படி நடக்க மாட்டார்கள்.
நிர்வாகத்தினரை இயக்கும் அந்த செல்வந்தினரை முஹல்லவாசிகள் சிலர் கேட்டதற்கு,ஹைதர் ஆலிம் அவ்ர்களின் பயானை நிறுத்துவதற்காக தான் மைக் ஒளித்து வைக்கப்பட்டது என்ற உண்மையை சொல்லிவிட்டார்.

சகோதரர் அப்துல் காதர் சொல்வது போல,
//அல்லாஹ்வின் தண்டனைக்கு அவசரப்படுகின்றார்கள் என்றுதான்
சொல்லத்தோன்றுகின்றது.//

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

//mk Aboobacker சொன்னது…
ஹைதர் அலி ஆலிம் பயான் பண்ணுவதால் மைக்கில் பாங்கு சொல்வதை நிறுத்தியவர்கள், அவர் தக்வா பள்ளியில் தொழவந்தால் ஜமாத் தொழுகையையே நிறுத்தி விடுவார்கள். அந்த அளவுக்கு அல்லாஹ்வின் அச்சம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.மறுமையின் வேதனைக்கு பயந்தவர்களாக இருந்தால் இப்படி நடக்க மாட்டார்கள்.
நிர்வாகத்தினரை இயக்கும் அந்த செல்வந்தினரை முஹல்லவாசிகள் சிலர் கேட்டதற்கு,ஹைதர் ஆலிம் அவ்ர்களின் பயானை நிறுத்துவதற்காக தான் மைக் ஒளித்து வைக்கப்பட்டது என்ற உண்மையை சொல்லிவிட்டார்.//

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் வேறொரு கோணத்தில் நாம் சிந்திக்கும் போது அதிர்ச்சியளிக்கிறது.

2 வாரங்களுக்கு முன் ஹைதர் அலீ ஆலிம் பயான் செய்த அன்று( காவல் நிலையத்தில் புகார் செய்த அன்று) பள்ளியின் இமாம் இல்லாததால் ஹைதர் அலீ ஆலிம் அவர்களே இமாமாக தொழுகை வைத்தார்கள். பல சமயங்களில் தகுதியான ஆலிம் இல்லாத பட்சத்தில் எல்லோரும் கேட்டுக் கொல்வதர்கிணங்க அவர்கள் தொழுகை வைப்பவர்களாக இருப்பதால், அவர்கள் தொழுகை வைப்பதை தாங்கள் கூரும் செல்வந்தர் அறிந்தால் பள்ளிவாசலைப் பூட்ட பள்ளி நிர்வாகத்தை தூண்டி அல்லாஹ்வின் கோபத்துக்கு ஆளாவாரா?

adirami said...

ஒவ்வொருவருக்கும் அவருடைய பணியின் அவசியத்தை புரிய வைக்க வேண்டும். அதனை மார்க்கப் பணி என்று உணர்ந்து செய்கிறாரா அல்லது கூலிக்காக செய்கிறாரா என்று கேட்டு தெரிந்து கொண்டு அவருக்கு பதில் கொடுக்க வேண்டும். இதனை முதலில் கீழ்தட்டு பணியாளர்களிடம் இருந்து தொடங்கி அதாவது கழிப்பிடம் சுத்தம் செய்பவரிடமிருந்து மோதின் அவர்களை தொடர்ந்து இமாமத் (கூலிக்கு) செய்பவர் என்று கடந்து நிர்வாகிகளை அடைந்தால்.

இப்படிப்பட்ட நிர்வாகிகள் வெட்கித் தலை குனிந்து ஓடிவிடுவார்கள் இல்லை நான் தொடர்ந்து நீடிப்பேன் என்று இருப்பவர்களிடம் இவருக்கு கீழுள்ளவர்கள் ஓடிவிடுவார்கள் கடைசியாக இவர்களிடம் கூலிக்கும் கழிப்பிடம் சுத்தம் செய்யும் பணியை அல்லாஹ் வாங்கிவிடுவான் இன்ஷா அல்லாஹ்

adirami said...

ஒவ்வொருவருக்கும் அவருடைய பணியின் அவசியத்தை புரிய வைக்க வேண்டும். அதனை மார்க்கப் பணி என்று உணர்ந்து செய்கிறாரா அல்லது கூலிக்காக செய்கிறாரா என்று கேட்டு தெரிந்து கொண்டு அவருக்கு பதில் கொடுக்க வேண்டும். இதனை முதலில் கீழ்தட்டு பணியாளர்களிடம் இருந்து தொடங்கி அதாவது கழிப்பிடம் சுத்தம் செய்பவரிடமிருந்து மோதின் அவர்களை தொடர்ந்து இமாமத் (கூலிக்கு) செய்பவர் என்று கடந்து நிர்வாகிகளை அடைந்தால்.

இப்படிப்பட்ட நிர்வாகிகள் வெட்கித் தலை குனிந்து ஓடிவிடுவார்கள் இல்லை நான் தொடர்ந்து நீடிப்பேன் என்று இருப்பவர்களிடம் இவருக்கு கீழுள்ளவர்கள் ஓடிவிடுவார்கள் கடைசியாக இவர்களிடம் கூலிக்கும் கழிப்பிடம் சுத்தம் செய்யும் பணியை அல்லாஹ் வாங்கிவிடுவான் இன்ஷா அல்லாஹ்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு