Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வேலை நேரமும் கல்வியும்..! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | August 30, 2013 | , , , , ,

இன்று முன்னேறிய நாடுகளை கவனித்தால் ஒரு முக்கியமான செய்தி நமக்கு புலப்படும். இந்த நாடுகளில் பள்ளி கூடங்கள் எல்லாம் அதிகாலை 7 மணிக்கு தொடங்கி விடும். அதுபோல் அரசு அலுவலகங்கள் 8 மணிக்கு தொடங்கி விடும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகூடம் அனுப்பிவிட்டு தாங்கள் வேளைக்கு செல்வதற்கும் வசதியாக இருக்கும் .

குழந்தைகளும் அதிகாலை படிப்பை தொடங்குவதால் படித்தவை அனைத்தும் மனதில் நிற்கும் நன்றாக படிக்கும் குழந்தைகள் பிற்காலத்தில் வாழ்கையில் நல்ல முன்னேற்றமும் தகுதியும் அடைவதால் வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்ல முன்னேற்றம் கிடைகின்றது .

அதை விட முக்கியமான விஷயம் அதிகாலையில் எழவேண்டும் என்பதால் இரவில் சீக்கிரம் தூங்கி விடுவார்கள். மானாட மயிலாட ஆட்டம் போன்ற மட்டமான TV நிகழ்ச்சிகள் பார்த்து மூளை மழுங்கடிக்கபடுவது தவிர்க்கப்படுகின்றன. அதிகாலையில் எழுந்து பள்ளிக்கூடம் செல்வதால் 7 மணிக்கு ஸ்கூல் என்றால் 6:30 க்கு வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும் இவர்கள் 5 மணிக்கு எல்லாம் எழுந்து ரெடியாக வேண்டும் 5 மணிக்கு எழுந்தால் இறை வணக்கமான சுபுஹு தொழுகை நிறைவேறிவிடும்.

குழந்தைகளுக்கு படிப்பு படிப்பு என்று படிப்பை மட்டும் சொல்லிக் கொடுக்காமல் படிப்பினுடன் சேர்ந்து வெளிப்பழக்க வழக்கங்களையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். உதரணத்திற்கு சாப்பாட்டு நேரத்தில் திடீர் விருந்தாளி வந்து வந்து விட்டால் மேலும் உடனே சமைக்க நேரமிருக்காது, இருக்கும் உணவை பகிர்ந்து உண்பதற்கு பழகி கொடுக்க வேண்டும் (யார் வந்தால் என்ன, எனக்குள்ள கொள்ளளவு என்னவோ அதை புல் செய்து கொள்வேன் என்ற சிந்தனையை இளைய வயதிலேயே எழாமல் இருக்க நல்ல புத்திமதிகளை புரியும்படி சொல்ல வேண்டும்).

நமது ஊரில் வங்கிகள்: 10 மணிக்கு வங்கிகள் திறக்கப்படுகிறது அங்கு வேலை செய்வோரின் முகத்தை பார்த்தால் தூங்கி வழிந்து கொண்டுதான் இருக்கும். போட்டிருக்கும் சட்டை காலர் அழுக்கு பிடித்தே இருக்கும் அல்லது காலர் பிய்ந்து போயிருக்கும் இந்த இரண்டில் ஒன்று இல்லை என்றால் இவர் பேங்க்கில் வேலை செய்பவர் இல்லை என்று அர்த்தம்.

நாம் போய் கவுண்டரில் ஏதாவது விபரம் கேட்டால் அண்ணார்ந்து பார்க்கவே ஐந்து நிமிடம் ஆகும் நாம் கேட்டதற்கு பதில் அந்த நாலாவது சீட்டில் போய் கேளுங்கள், இங்கே வந்து களுத்தை அறுக்குரியலே என்று சிடு சிடுப்பார். அந்த நாலாவது சீட்டுக்கு போன அங்கு ஆளே இருக்க மாட்டார், என்னவென்று கேட்டால் லீவுலே போயிருக்கார் என்பார்கள் சரி மனேஜரை பார்க்கலாமென்று போனால் லாக்கருக்கு போனவர் இன்னும் வரவில்லை என்று நம்மை மதிக்காமல் பியுன் சொல்லிவிட்டு போய்க்கொண்டு இருப்பான். லாக்கருக்குல போனவரு அவருடைய டூட்டி டைம் முடிஞ்சிதான் வெளியோ வருவாரு போல.

இதெல்லாத்தையும்விட கேஷ் கவுண்டரில் உள்ளவர் பணம் தரும்போது என்னவோ அவர் வீட்டு பணத்தை நமக்கு சும்மா எலக்சன் நன்கொடையா தருவது போல் பல அலப்பறை செய்து விட்டுதான் பணத்தை கையில் கொடுப்பார். இவர்களிடம் ஒரு சிரிப்பையோ அல்லது கனிவான வார்த்தையையோ நாம் எதிர்பார்த்தால் நாம் ஏமாந்து தான் போகணும். இங்கு கொடுமை என்னவென்றால், இவர்கள் வாங்கும் சம்பளம் நம் பணம் என்பது நமக்கே தெரியாது, அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது.

அடுத்து பத்திரப்பதிவு அலுவலகம்: அதே 10 மணி அதே அலுக்கு சட்டை தரையை சீய்க்கும் எட்டுமுழ வேஷ்டி. இவர்களுக்கு சம்பளத்தை விட கிம்பளம் ஜாஸ்தி அதிலும் அதிரைப்பட்டினம் என்றால் சொல்ல வேண்டியது இல்லை ஊரில் மழை பெய்கிறதோ இல்லையோ இங்கு பணமழைதான் தினமும் .

கை நாட்டு எடுத்து விட்டு கை விரல் துடைக்க ஒரு துணி ஒன்று கொடுப்பார்கள் அதில் விரல் துடைத்தால் அந்த விரலை அன்றே அறுத்து எரிந்து விடவேண்டியதுதான், அவ்வளவு துர்நாற்றம் அந்த துணியில்.

பத்திர பதிவு ஆபிசர்: ஓ அந்த இடமா வேலிவ் கூடுதல் ஆச்சே! எக்ஸ்ட்ரா இன்னும் பத்திரம் ஒரு 50 THOUSAND ஆகும் நீங்க ஒன்னு பண்ணுங்க பத்திர எழுதரிடம் 15000 கொடுத்திருங்க பாக்கியா நான் பாத்துக்கொள்கின்றேன் என்பார் நமக்கு இதே எல்லாம் கேட்டு தலைசுத்தும் பணத்தை கொடுத்தமா வேலைய முடிச்சமான்னு வீடு வந்து சேருவோம் . இவ்வளவு பணத்தை வாங்கும் அந்த பத்திர பதிவு ஆபிசர் கை நக அழுக்கை பார்தா முழுசா மூணு நாளைக்கு சோறு சாப்பிட மனசு வராது...

மேலே கண்ட அனைவரும் நன்கு படித்து பட்டம் வாங்கியவர்கள் தான் ஆனால் இவர்கள் நடை முறை கல்வியை பயில மறந்தவர்கள் .

நாம் என்ன செய்ய வேண்டும்
  • நாம் நம் பிள்ளைகளுக்கு ஐவேளை தொழுகையையும், நல்ல படிப்பையும், ஹராம் ஹலாலையும், சுத்தம், நேர்மையும், நல்ல பழக்க வழக்கங்களையும், எல்லோரையும் மதிக்கவும் கற்றுகொடுக்க வேண்டும் .
இங்கு வரும் நாம் சகோதரர்கள் அவரர்களுக்கு தெரிந்த நல்ல விசயங்களை நம் மாணவ செல்வங்களுக்கு கட்டுரை மற்றும் பின்னுட்டம் மூலம் அறியத்தரவும்.

மற்றும் ஒரு சுவாரஸ்யமான சிந்தனை தூண்டும் பதிவில் சந்திக்கலாம்.

Sஹமீது
இது ஒரு மீள்பதிவு

7 Responses So Far:

adiraimansoor said...

// இவ்வளவு பணத்தை வாங்கும் அந்த பத்திர பதிவு ஆபிசர் கை நக அழுக்கை பார்தா முழுசா மூணு நாளைக்கு சோறு சாப்பிட மனசு வராது...//

ஹமீது பாய் லஞ்சம் வாங்குகின்றவர்களை கை சுத்தமில்லாதவர்கள் என்று நாசூக்காக சொல்வதை நேரடியாகவே பார்த்துட்டு வந்திட்டியலா

இதுதான் இந்திய திரு நாடு
நமது தாய் நாடு எல்லாம் நம்ம தலைவிதி

Ebrahim Ansari said...

முன்பே ஊதப் பட சங்கு மீண்டும் ஊதப்பட்டு இருக்கிறது . இன்னும் ஓராயிரம் முறை ஊதினாலும் இவர்கள் காதுகள் செவிடாகிப் போய் பல வருடங்கள் ஆகிவிட்டன.

பத்திரப் பதிவு ஆபீஸ்- ஆபீசர்- துண்டு - உவ்வே......

நான் முன்பு பதிவாக வந்ததைப் படிக்க வில்லை.

வைரமுத்து சொல்கிறார்:

அரசு ஊழியன் என்பவன்
ஒன்றாம் தேதி மட்டும் உறங்காதவன்
மருத்துவன் என்பவன்
தும்மிக் கொண்டே ஜலதோஷத்துக்கு
மருந்து தருபவன்.

ZAKIR HUSSAIN said...

பேங்கில் நடக்கும் விசயம், நான் ஊர் போயிருந்த போது எனக்கு நடந்ததை அப்படியே வீடியோவில் மறு ஒலி & ஒளிபரப்பு

//யார் வந்தால் என்ன, எனக்குள்ள கொள்ளளவு என்னவோ அதை புல் செய்து கொள்வேன் //

சுற்றிலும் விருந்து / வாரத்துக்கு 2 , 3 கல்யாண விருந்து / மந்தி / தோப்பில் மீன் பிரியாணி விருந்து....இப்படியெல்லாம் செய்து கொடுத்து விட்டு அவனை "குறைவாக சாப்பிடுப்பா" என்று சொன்னால் ஏற்கனவே ரப்பர் பேண்ட் மாதிரி குடலை எலாஸ்டிக்காக வளர்த்தவனின் கதி???

OLD PROVERB : 5 ல் வளையாதது , 50 ல் வளையாது.

NEW PROVERB : 5ல் பெரிதாக்கிய குடல் 50 ல் சிறுசாக்க முடியாது.

Unknown said...

இன்றுள்ள சூழ்நிலையில் முதன் முதலில் பெற்றோர்களை மதிக்க நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்தல் தலையாய அவசியம். நாமும் பிற்காலத்தில் பெற்றோர்களே என்ற எண்ணம் அவர்கள் மனதில் இன்று ஒழுக்கத்துடன் விதைக்கப்படவேணும்.

மாறாக ஒழுக்கம் தவறி பேணுதல் தவறி வளர்க்கப்படும் பிள்ளைகள் நாளை மஹ்ஷரில் பெற்றோர்களுக்கு எதிராக சாட்சி சொல்லும் நிலை ஏற்படாமல் நாம் நம்மை தற்காத்துக்கொள்ள இன்றே முன் ஜாக்கிரதையோடு முனைப்புடன் செயல்பட வேணும்.

தாங்கள் குறிப்பிட்டதுபோல், வங்கிகள், பத்திரப்பதிவு அலுவலகங்கள் மற்றும் இதர அரசு அலுவலகங்களில் பணி புரியும் பெரும்பாலான அலுவலர்கள் வாழ்க்கை ஓட்டமே இப்படித்தான். இவர்கள் வாழ்வில், தர்ம சிந்தனை, ஏழைகளின் அவலநிலை, இரக்கம் காட்டுதல், அடுத்தவர் கஷ்ட்டம் இதெல்லாம் துளியும் மனதில் ஓடாத ஒரு இரும்பு நெஞ்சுடந்தான் காலையில் வந்து அலுவலக நாற்காலிகளில் அமர்வர்.

நான் ஏற்கனவே என்னுடைய முன் பின்னூட்டத்தில் சொன்ன அந்த பரகத் என்னும் இறைவனின் புலனுக்கெட்டாத அருள் என்பது இவர்கள் வாழ்வில் வெகு தூரத்தில் உள்ளதாகும். அது முஸ்லிமான அதிகாரியோ, அல்லது முஸ்லிம் அல்லாதவரோ எவருக்கும் இதேபோல் தேவை உள்ளோரையும், தன்னை நாடி வருவோரையும் தேவையின்றி அலைக்கழிக்கும் இரும்பு மனம் படைத்தவரின் வாழ்வில் , எவ்வளவு சம்பாத்தித்தாலும் அல்லாஹ் இவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே மாட்டான். மாறாக இவர்கள் அடுத்தவனை எதிர்பார்த்துதான் வாழ்க்கை ஓட்டம் இருக்கும். துளியளவு இவர்களிடம் தர்ம சிந்தனை மனதில் ஓடாது.

அபு ஆசிப்.


Unknown said...

Assalamu Alaikkum

Thanks for article of education and discipline.

Advanced big countries like UK, USA, Canada, China(where toilets are built in exhibitions without partitions) etc., are not having water to clean in the toilets. They have only tissues to clean after passing 1 and 2. Recently a friend from Pakistan who settled in UK recently finds very tough to follow cleanliness as per Islam.

We have sayings in Islam, that cleanliness is half of faith. A person should have basic good characters and habits which should be governed by ultimate moral frameworks like Islam.

May God Almighty Allah guide us to the right path.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.

adiraimansoor said...

ஆனாலும் ஹமீது பாய் சும்மா சொல்லக்கூடாது
அனுபவம் நல்லாத்தான் பேசுது.

மொத்தத்தில் சொல்லப்போனால் இப்படிபட்டவர்கள் மூஞ்சில் முழித்தால் நமக்கு அன்று கெட்ட நாள்தான் .இவர்கள் முகத்தில் உள்ள ஒளியை அல்லாஹ் எடுத்துவிடுகின்றான்.

அப்துல்மாலிக் said...

அமீரகத்துலே காலை 5.50 மணிக்கு பள்ளி பேருந்துவரும். இதற்காகவேண்டியாவது இரவு இஷாவுக்கு பிறகு தூங்கிவிடுவார்கள்... அதிகாலை படிப்பு மிக முக்கியம்

மேலும் பேங்க்/பத்திரப்பதிவு எல்லாமே நம்ம மக்களே எல்லாத்தையும் கொடுத்துவிட்டு குத்துதே குடையுதே என்றால் முடியுமா...

யாரோ ஓரிருவர் தன் வேலை ஆகவேனும்னு கொடுத்து காட்டிவிட்டு அடுத்தவன் போய் லாஜிக் பேசினால் எடுபடவா செய்யும்....

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு