இன்று உலக புகைப்பட நாள் (ஆகஸ்ட் 19) என்று எதேச்சையாக இன்றைய செய்தியில் படித்ததும் நாம் இந்த நாளைச் சிறப்பிக்க வேண்டும் என்ற நோக்கில் இதனை குறிப்பிடவில்லை, புகைப்படக் கலையில் அதீத ஆர்வம் கொண்ட நம் சகோதரர்கள் அதிகம் நிறைந்திருக்கும் சபை இது என்பதை அனைவரும் அறிவார்கள் !
கைவண்ணம் கொண்ட கலையுள்ளங்களின் ரசனையுடன் உங்களைக் கவர்ந்த புகைப்படங்களை மற்ற வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினால் editor@adirainirubar.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பித் தாருங்கள்.
வாய்ப்புகள் வசப்படும்போது வரிசைப்படி பதிக்கப்படும் இன்ஷா அல்லாஹ் !
மற்றுமொரு புதிய முயற்சியாக பல கலைகள் அடங்கிய படைப்புகள் விரைவில் இன்ஷா அல்லாஹ் !
புகைப்படங்கள் : Sஹமீது, ஷஃபி அஹ்மது
மற்றும் அபூஇப்ராஹீம்
அதிரைநிருபர் பதிப்பகம்
29 Responses So Far:
முதல் இரண்டு படங்கள் :
உப்பில்லாப்பண்டம் குப்பையிலே ( இது அதிரை கடற்கரை ஓரமா அல்லது வெளி ஊரா ? புகைப்படக்கலைஞர் தெரிவித்தால் நல்லது ) படம் மிக அருமை.
மூன்றாவது படம் :
சூரிய ஒளியில் மல்லிகை மொட்டு
வெட்கத்தால் மலர நாணப்படுகின்றதோ!
நான்காவது படம் :
உரு மாறும் கல் உளியின் உதவியால்
ஐந்தாவது படம் :
பெண்களின் கொண்டையின் இலக்கனப்பரவை
(இதற்குத்தான் தன் குஞ்சும் பொன் குஞ்சு என்பார்கள் )
ஆறாவது படம் :
இது மீன் பொரிக்க தெரியாதவர்கள் கலந்த மசாலாபோல் தெரிகின்றது.
கலர் ரொம்ப தூக்கல்.
ஏழாவது படம் :
நான் சிறு வயது பையனாக இருந்தபோது , இரட்டை மாட்டு வண்டியில் வெளியூர் பயணம் என்று முதன் முதலாக சென்றது ஞாபகத்திற்கு வரும் மல்லிப்பட்டினம் மனோரா.
அபு ஆசிப்.
மல்லிகை:
இத்தனை அருகில்
மொட்டென அரும்பில்
எத்துணை அழகு மல்லிகை!
கொடியிலே உதித்து
கூந்தலில் மலர்ந்து
நொடியிலே மனத்தை
பிடியிலே கொணரும் மல்லிகை!
ஒற்றையாய் ரசிக்க ரோசா
ஒற்றுமையாய்க் கோத்து
சரமென சிரிக்க மல்லிகை
வாடு வதற்குள்
சூடுவது நலம்
மலரும் தருணங்கள்
கூந்தலிலும்
உதிரவும் உலரவும்
சிலிர்ப்பான தருணங்களும்
உகந்தவை!
படம் 01 & 02
கடல்நீரை வடிகட்டியதால் உப்பா?
உடலுழைப்பால் தொழிலாளியின் கண்ணீரால் உப்பா?
படம் 03
மூடியிருக்கும் மல்லிகை மொட்டு
தேடிவந்து நுகர்ந்ததும் இதழ்விரிக்குமோ சுவாசம் பட்டு!
படம் 04)
உளிகொண்டு உழைக்கின்றாய்;
ஒளிமயமான எதிர்காலம்!
படம் 05)
காக்கையைப் பார்த்து ஒற்றுமைக்குக் குரல் கொடுப்போம்!
படம் 06)
வறுவல் மீன் சமைப்பதெப்படி என்று அடுத்த விரிவுரை எழுத வேண்டுமா?
முறுவல் இல்லா வறுவல்;
பொறுமையின்றிப்
பொறித்ததால்!
படம் 07)
இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்களின் இதயத்தில் இடம்பிடித்ததால், அவர்களின் முகநூலில் படம்பிடித்து வைக்கப்படிருக்கும், இக்காட்சி; அக்காலக் கட்டிடக் கலையின் சிறப்புக்கு ஒரு சாட்சி!
//மல்லிகை:
இத்தனை அருகில்
மொட்டென அரும்பில்
எத்துணை அழகு மல்லிகை!
கொடியிலே உதித்து
கூந்தலில் மலர்ந்து
நொடியிலே மனத்தை
பிடியிலே கொணரும் மல்லிகை!
ஒற்றையாய் ரசிக்க ரோசா
ஒற்றுமையாய்க் கோத்து
சரமென சிரிக்க மல்லிகை
வாடு வதற்குள்
சூடுவது நலம்
மலரும் தருணங்கள்
கூந்தலிலும்
உதிரவும் உலரவும்
சிலிர்ப்பான தருணங்களும்
உகந்தவை!\\
மல்லிகை
மன்னன் மயங்கும்
பொன்னான
மலரல்லவோ?
கவிவேந்தரின் நாசியைக் கவர்ந்திழுத்துக் ......................கொள்ளச் செய்திட்டதில் வியப்பில்லைதான்.
பகுத்து வைத்தப்
பாத்திகளுக்குள்
பச்சையெனில் பயிர் விளையும்
வெள்ளையெனில் வெள்ளி!
எங்கள் ஊர் மண்ணில்
உதிர்ந்து விழுந்த
வெள்ளிகள் உப்புக்கரிக்கும்
இந்த
உப்பை உரசிய
காற்றை சுவாசித்த
ஊர்க்காரர்களுக்கு
ரோஷம் அதிகம்
படப்பிடிப்பிற்காக
பிரத்யேகமாக விளைக்கப்பட்டதுபோல்
அழகாயிருக்கிறது உப்பளம்.
//மல்லிகை
மன்னன் மயங்கும்
பொன்னான
மலரல்லவோ?// கவியன்பன் அவர்கள் அண்மையில் மல்லிகையை அதிகம் முகர்ந்தவர் என்கிற பட்டத்துக்குத் தகுதியானவர் என்று கடந்த சில நாட்களாக அவர் கவிதையில்/ கருத்துக்களில் அடிக்கும் வாடையில் தெரிகிறது.
பிரமாதம்.
//உளிகொண்டு உழைக்கின்றாய்;
ஒளிமயமான எதிர்காலம்!//
கவியன்பன்,
நல்ல தீர்ப்பு.
தவிர,
இவன்
செதுக்குவதாகவே நம்புவோம்
சிதைப்பதுபோல் தோன்றினாலும்!
உளி
கல்லுடன்
கதைத்தால் கலை
சினுங்கினால் சிலை!
ஒரு பிடி பிடித்து உள்ளே போட்டாலும்
தூ என்று துப்பப்படுகிராயே உப்பே
நீ பிறந்ததே தப்பா ?
- சத்தியமாக நானல்ல யாரோ எப்போதோ எங்கோ.
/இந்த
உப்பை உரசிய
காற்றை சுவாசித்த
ஊர்க்காரர்களுக்கு
ரோஷம் அதிகம் /
இந்த வரி அருமை சபீர் காக்கா... :)
எல்லா ஃபோட்டோஸும் பிரமாதம்... மல்லிகை பூ மற்ற எல்லாத்தைவிட அற்புதமாக இருக்கிறது...
#HappyPhotographyDay
//இத்தனை அருகில்
மொட்டென அரும்பில்
எத்துணை அழகு மல்லிகை!
கொடியிலே உதித்து
கூந்தலில் மலர்ந்து
நொடியிலே மனத்தை
பிடியிலே கொணரும் மல்லிகை!
ஒற்றையாய் ரசிக்க ரோசா
ஒற்றுமையாய்க் கோத்து
சரமென சிரிக்க மல்லிகை
வாடு வதற்குள்
சூடுவது நலம்
மலரும் தருணங்கள்
கூந்தலிலும்
உதிரவும் உலரவும்
சிலிர்ப்பான தருணங்களும்
உகந்தவை!//
ஆஹா வார்த்தைகளிலே
மொட்டை மலரவைத்து
மலரை நுகரவைத்து அதில்
எங்களை மயங்க வைத்து
எத்தனை வாசனைகளைத்டான்
உன் வார்த்தைகளால்
நீ அள்ளித்தருவாய்!!!!!!!!!!!!!
நிஜ மல்லிகையைவிட இந்த
கவிதையில் வடித்த மல்லிகை
நுகர நுகர வாசனைகள் குறையவில்லை
இந்த மல்லிகை மலர்ந்த மல்லிகை
வாடா மல்லிகை
மனம் வீசும் மல்லிகையை
நீ எங்களுக்கு தந்திருக்கின்றாய்
இது காகிதப்பூவல்ல
சபீரின் கவிதை பூ
என்றும் வாசமிருக்கும்
வாடா மல்லிகை
படம் பார்த்து கவிதை
சொல்லும் உன் அழகே தனி
அபூ ஆசிப்
30 வருடம் பின்னால் சென்று
கவிதை நயத்துடன்
எழுதலாம் என்று ஒரு நாப்பாசை
ஆனால் முடியவில்லை
//மூடியிருக்கும் மல்லிகை மொட்டு
தேடிவந்து நுகர்ந்ததும் இதழ்விரிக்குமோ சுவாசம் பட்டு!//
கலாமோ மல்லிகையை
நுகரும்போது மலர வைக்கின்றார்
கலாமின் முதலிரவின்
வசந்தம் இப்பொழுது பேசுகின்றது
கலாமுக்கு இன்னும் முதலிரவு குறும்பு
போகவில்லை
//முறுவல் இல்லா வறுவல்;
பொறுமையின்றிப் பொறித்ததால்!//
மீன் பொறித்த அனுபவம் பேசுகின்றது
தண்ணீரிலே வளர்ந்து தண்ணீரிலே சாய்ந்த ஒரு மரத்தை தான் பிடித்துக் காட்டினீர்கள்!
பன்னீரிலே வளர்ந்து கண் நீரிலே சாய்ந்த எத்தனையோ மரங்கள் உண்டே!
அவைகளை காட்ட வில்லையே!// 'ஏன் பிடிக்கவில்லை யோ?'//
S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்
ஆற்றுத் தண்ணியில் விழுந்தது ஒரு மரம்தான்!.'
'அந்த' தண்ணி'யில் சாய்ந்ததோ பல மரங்கள்!
S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்
''வேராலே குடிக்க வேண்டிய தண்ணீரை இந்த மரம் ஏன் விழுந்து குடிக்கிறது?''
ச.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்
//ஒரு பிடி பிடித்து உள்ளே போட்டாலும்
தூ என்று துப்பப்படுகிராயே உப்பே
நீ பிறந்ததே தப்பா ?//
நான் உப்பாக பிறந்ததற்கு பெருமைப்படுகின்றேன்
நானில்லா பண்டம் குப்பை என்று தெரிந்துமா இந்தக்கேள்வி ?
அளவாக பயன்படுத்தினால்
என் அருமை தெரியும்
அளவுக்கு மீறாதே
மீறினால்
உணவு உன் உடம்பில் சேராதே!
அன்பின் நண்பா, அதிரை மன்சூர்
அஸ்ஸலாமு அலைக்கும்,
நீ நுகர்ந்தது கவிதையின் வாசனையா?
என்னப்பற்றியே மனத்தினில் யோசனையா?
மரியாதைக்குரிய ஃபாரூக் காக்கா அவர்களின் “புத்தம் பிறக்கின்றது” தொடரைப் படித்ததன் தாக்கம் தான் எனக்கும் இளமையின் புத்தகம் (புதிய அகம்) திறந்தது.!
மன்சூர்,
ஞாபகங்கள் தீமூட்டும்
ஞாபகங்கள் நீரூற்றும் ???
மல்லிகை பூவிற்கு இத்தனை வரவேற்ப்பு இருக்கும் என்று தெரிந்து இருந்தால் அதை இன்னும் கிளாமரா எடுத்திருப்பேன்
வண்ண படங்களும் அதை வர்ணிக்கும் தமிழ் வண்ணங்களும் மிகவும் இனிமை.
ஹமீதாக்கா, இனி மல்லிகையை இன்னும் கிளாமராக படமெடுக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கு!
நான் கவிதையை வாசிப்பதோடு சரி...இதற்கெல்லாம் வசனம் எழுதினால் அப்புறம் எடுத்த போட்டோவை சிறுமைப்படுத்தியதாக ஆகி விடும் என்பதால்......ஒரு சின்ன "பிரேக்"
யாராவது
இந்த ஒ.ப.க. தலைவனின்
கோரிக்கையை நிறைவேற்றுங்களேன்
காலகாலமாய்
எதிர்ப்பைக் காட்ட அணியும்
கருப்புச் சட்டையைக்
களைந்து
கலருக்கு மாறட்டும்
(ஒ.ப.க.: ஒற்றுமை பறவை கழகம்)
வறுத்த மீன்கள்
வருத்த மளிக்கின்றன -சரியாகத்
திருத்தப்படாத
விருத்தங்களென!
அறுத்துச் சமைத்தவர்
பருத்தத் துண்டங்களில் - தடவியக்
கருத்த மசாலா
சிறுத்தத் தட்டில்!
\\மல்லிகை பூவிற்கு இத்தனை வரவேற்ப்பு இருக்கும் என்று தெரிந்து இருந்தால் அதை இன்னும் கிளாமரா எடுத்திருப்பேன்\\
இலைமறையாய்
இருப்பதன்றோ
கலையெனச்
கருதினாரன்றே?!
மூடிய கரங்களைத் தான்
நாடிப் போய்த் திறக்கச்சொல்லும் மனம்!
மொட்டுக்குள் இருக்கும் பூவையும்
பட்டுக்குள் இருக்கும் பாவையையும்
கட்டுப்பாடின்றி கவிதையும் விதைக்கலாம்;
மெட்டுக்களின் சந்தத்தில்
மெய்மறக்கும் செய்யுளும் செய்யலாம்!
//கோபுரம்//
[1] கடலோர காற்றினிலே காலமெல்லாம் கால் கடுக்க காத்து நிற்கிறாயே! உன் காதலன் எங்கே போனான்? ஊடலா!
[2 ]எட்டு தட்டு கோபுரத்தை கட்டிவைத்த மன்னவனே! அதை விட்டு விட்டு எங்கே போனாய்?
[3] எட்டு தட்டு கோபுரமே! கட்டிவிட்ட மன்னவன் உன்னை தொட்டு தொட்டு கொஞ்சாமல் விட்டு விட்டு போனானோ? நீ எட்டி எட்டி பார்ப்பதேனடி?
[4] ஒ! கோபுரமே ! கடல் அலையில் கால் நனைத்து காலமெல்லாம் கால் கடுக்க காத்து காத்து நிற்கிறாயே! உன்னை கட்டிய மன்னவன் பேர் சொல்லு கூட்டி வருகிறேன்!.
.[5] எட்டு தட்டு கோபுரத்தை எட்டும் வரை கட்டி விட்டு, தொட்டு தொட்டு கொஞ்சாமல் விட்டு விட்டு எங்கே போனான்? அந்த துப்புகெட்ட மனுசனை தேடிப்பாத்து கொண்டாந்து கட்டிவைத்து அடி கட்டுமா? இல்லே உன்னக்கு கட்டி வைத்து பாக்கட்டுமா?
//பப்பாளி// கத்தி வைத்து வெட்டி வைத்த பப்பாளியே கொத்தி திங்க காக்கா இல்லையோ! வெட்டி வைத்த பப்பளியே தொட்டு பாக்க யாரும் இல்லையா?
S.முஹம்மதுபாரூக் அதிராம்பட்டினம்
//சிற்பி//
[1] ஒ! சிற்பியே! கல்லுக்குள் இருக்கும் ரதி தேவியே நீ வெளியே கொண்டு
வந்தால் பூலோக ரதி தேவிகள்கள் கோபம் கொள்வார்கள்! கல் உடைப்பதை நிறுத்து!
[2] ஓ கல் உடைப்பவனே கல்லுக்குள் துயில் கொள்ளும் மன்மதன்-ரதியே வெளியே கொண்டு வர கதவை தட்டுகிறாயா?
Don' t Disturb இது *********!.
//உப்பு//
உப்பே! நீ கூடிய பண்டமும் குப்பையிலே...
உப்பே! நீ கூடாத பண்டமும் குப்பையிலே..
உன்னை யார் தான் காதலிப்பார்?
[2] கடலில் பிறந்து திடலில் வளர்ந்தவளே!
உழைப்பவன் வியர்வையுளும் உண்டு உன்ருசி
உண்பவனுக்கு ருசி
உழைப்பவனுக்கு பசி.
[உப்புகுவியல்]
உழைப்பில் கட்டிய இந்திய பிரமிட்கள்
இந்த குவியல்.உள்ளே இருப்பது நன்றியும்-ருசியும்.
.[3] உப்பே நீ இல்லாத மனிதன்
அல்லாஹ்வின் இலக்கியத்தில் அச்சு பிழை.
நன்றி இல்லா மனிதன் உலகில் பிறந்தது தப்பு.
இதை நீ அவனிடம் செப்பு.
உடம்பை 'உப்ப' வைப்பதும் தப்பே!
S.முஹம்மதுபாரூக், அதிராம்பட்டினம்
//காக்கை//
[1] காக்கையே! இளங்காக்கையே! தண்ணீர் குழாய் மேல் தனித்திருந்து என்ன யோசனை!?
நிறம் கறுப்பு என்பதால் காதலிப்பார் யாரும்இல்லை என்ற ஏக்கமா?
நிறத்தில் நீயும் கருப்பு குயிலும் கருப்பு..
குயிலுக்கு குரல் கொடுத்த இறைவன்
உனக்கு கொடுக்க வில்லை என்ற ஏக்கமா?
உங்கள் கூட்டதிற்கு ஒற்றுமை எனும் பெரும் பரிசை இறைவன் தந்ததை மறந்தாயோ?
அதற்கு நீ நன்றி சொல்ல வேண்டாமா?
//மல்லிகைப்பூ//
[2] மல்லிகை பூவே ! மல்லிகை பூவே !
மயக்கு வேலைக்கு நீ ஒரு பிளஸ் பாயிண்ட்.
ஆனால்,
விடிந்தபின் உனக்கு அங்கே வேலைஇல்லை!.
வெளியேறு !
[3] மலர துடிக்கும் வெண் மல்லி மொட்டே!
மலர்ந்ததும் உன்னை கருங்கூந்தலில் சூடி விடிந்ததும்.
வீதில் வீசுவார்கள் சம்மதமா?
S.முஹம்மதுபாரூக். அதிராம்பட்டினம்
காக்கா
பாரூக் காக்கா
எங்கே போய்விட்டார்கள்
இபுராஹீம் அன்சாரி காக்கா
உங்கள் இதயத்தின் உதிக்கு
இலமை ததும்பும் வார்த்தைகளுக்கு எப்பொழுதுமே
வேளி போட வேண்டாம் என்று அவர்களுடன் வந்து
பாராட்டுக்கள் சொல்லத்தான் அவர்களை தேடுகின்றேன்.
எதை ரசிப்பது எதைப் பார்த்து
பூரிப்பது என்று குழப்பமில்லாமல் என்
இதயத்தை குளிர வைத்த பின்னூட்டங்கள்
தனையனின் தாகம் தீர்த்த தந்தையே உங்களை
எதை சொல்லி பாராட்டுவேன் என்பதில்தான்
எனக்கு குழப்பம்
ஆ...............ஹா..........
மல்லிகை பூவிற்கும்
மண் வாசனைக்கும்
காக்கைக்கும் காற்றிற்கும்
உப்பிற்கும் உணவிற்கும்
வார்த்தைகளால்
சிலைவடிக்கும் சிற்பி நீங்கள்
அன்புத் தம்பி அதிரை மன்சூர்!
அஸ்ஸலாமுஅலைக்கும்[வரஹ்]!
மல்லிகை மொட்டுக்கும் உப்புக்கும் நான் கொடுத்த பாராட்டுகளை விட
தாம் உள்ளன்புடன் எனக்கு தந்த பாராட்டுகள் ஆயிரம் கோடி மலர்களில்
தொகுத்த மாலை என் கழுத்தில் விழுந்தது போலும், குடம்-குடமாய்
மலைத்தேன் குடித்தது போலும் நினைத்தேன்!. பூவாசம் நாசியிலே பிடித்தேன்!.
உள்ளன்புடன் தாம் தந்த பாராட்டுக்கு நன்றி உடையவனாக இருப்பேன்.
இன்ஷா அல்லாஹ் மீண்டும் மீண்டும் சந்திப்போம்!.
S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்
Post a Comment