டிஜிட்டல் கேமரா இன்றைய காலகட்டத்தில் சாதாரணமாக அனைவரது கையிலும் இருக்கிறது முந்தைய காலங்களைப் போல் நிறைய செலவழித்து ஃபிலிம் வாங்கி, அதில் போட்டோ எடுக்கும்பொழுது இது சரியா வரவேண்டுமே என்ற புலம்பல்களெல்லாம் இன்றைய சூழலில் தேவை இல்லை. போட்டோ எடுத்ததும் உடணடியாக LCD / LED Screen-னில் பார்த்துவிட்டு சரி இல்லை என்றால் மறுபடியும் ஃபோட்டோ (இஷ்டத்துக்கு) எடுத்து தள்ளலாம் பெரும்பாலான செல்போன்களில் கூட இந்த வகை கேமரா வந்துவிட்டது.என்பதை சென்ற பதிவிலும் பார்த்தோம்.
இந்த டிஜிட்டல் கேமரா எந்த அடிப்படையில் இயங்குகிறது என்பதை பற்றி கொஞ்சம் விலா வாரியா பார்ப்போம் (அது என்னங்க விலாவாரியா ) பொதுவாக கேமராவில் இருக்கும் லென்ஸை எப்படி பயன்படுத்துவது ஜூம் செய்வது போன்ற விவரங்களை பிறகு நேரம் கிடைக்கும்போது தனிப் பதிவாக பார்த்துக்கொள்வோம் (இப்படியே சொல்லிகிட்டே கடத்திடுவோம் ஏன்ன இதுவும் ஒரு ட்ரென்டுதானுங்க) தற்போது டெக்னிக் விஷயத்தை மட்டும் தெளிவாக பார்ப்போம்.
ஒளியானது லென்ஸ் மூலம் காமிராவிற்குள் சென்றதும் அங்கு என்ன நடக்கிறது என்பதை முதலில் பார்ப்போம்.
பழைய ஃபிலிம் போடும் கேமராவில் (அண்ணன் NAS அவர்களிடம் முன்பு ஒரு கேமரா இருந்தது அதை நாங்கள் செல்லமா நீராவி இன்ஜின் என்று கிண்டல் அடிப்போம்) அங்கு ஒளி பிலிமில் பட்டதும் ரசாயன வினை நடக்கும். அதில் நாம் எடுக்கும் உருவம் பதிவாகும் என்ற தகவலை ஏற்கனவே சொல்லியிருந்தோம். இப்போது டிஜிட்டல் காமிராவில் உள்ளே என்ன உருமாற்றங்கள் நடக்கிறது என்பதை வெளியே இருந்து பார்ப்போம்.
டிஜிட்டல் கேமராவில் ஃபிலிம் இருக்கும் இடத்தில் ஒரு செவ்வக வடிவில் சில்லு அதாங்க "சிப்பு"(இந்த chip தாங்க பிலிமுக்கு வச்சது ஆப்பு) ஒன்று இருக்கும். அதில் நெருக்கமாக பல வித ஒளியை உணரும் லைட் சென்சிடிவ் புள்ளிகள் இருக்கும். இவற்றை ஆங்கிலத்தில் பிக்சல் (pixel) என்று சொல்வார்கள் இது கேமராவிற்கு கேமரா மாறுபடும்.
இவற்றில் ஒளி பட்டால் அதை மின்னூட்டமாக (charge) மாற்றும். இந்த புள்ளிகள், சி.சி.டி. என்ற மின்னூட்டமாக மாற்றும் சாதனங்கள் லென்ஸ் வழியே விழும் பிம்பம் ஃபிலிமில் விழுவது போலவே மேற்சொன்ன சிப்பிலும் விழும். இந்த புள்ளிகள் அருகருகே இருப்பதால், பிம்பம் ஏறக்குறைய பிலிமில் இருப்பது போலவே இருக்கும். 5 மெகா பிக்சல் என்றால் சுமார் 50 லட்சம் புள்ளிகள் என்று அர்த்தம் இதை மிகச் சிறிய அளவில் வைத்திருப்பதால் படம் நன்றாகவே வரும். 1 மெகா பிக்சல் அல்லது 2 மெகா பிக்சலில் 10 லட்சம் அல்லது 20 லட்சம் புள்ளிகள் இருப்பதால், கொஞ்சம் தெளிவில்லாமல் வரும். பிக்சல் அளவு அதிகரிப்பதைப் பொருத்தே படத்தின் நுணுக்கமும் தெளிவும் கூடிக்கொண்டே போகும் (கேமரா வாங்கும் போது பிக்சல் கூடுதல் உள்ள கேமரவா பார்த்து வாங்க வேண்டும் அதே நேரத்தில் அதற்குண்டான விலையையும் கொடுக்கனும் )
இறைவன் நமக்கு அளித்த கண்களில் மிக மிக நுணுக்கமான 80 லட்சம் புள்ளிகள் இருக்கும் சில்லை விட சிறிய கண் திரையில் ஆட்டோமேடிக் லென்ஸ், ஒளி அதிகமானால் அல்லது குறைந்தால் சமாளிக்கும் திறமை, நிறம் அறிதல் என பல வகை விஷயங்களை செய்கிறது. நம் உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளுமே சிறப்பானவை என்றாலும் மூளையும் கண்ணும் மிகவும் சிறப்பான அதேவேலை மிகவும் சிக்கலானவை. அதன் அருமை இம்மாதிரி நாம் செயற்கையாக செய்யும் பொருள்களின் விவரங்களைப் பற்றி யோசிக்கும் பொழுதும் வாசிக்கும் பொழுதும் புரிய வரும்!
ஒரு முறை போட்டோ எடுத்ததும் இந்த சில்லில் இருக்கும் மென்பொருள் அதில் இருக்கும் ஒவ்வொரு பிக்சலிலும் இருக்கும் மின்னூட்டத்தை குறித்துக் கொள்ளும் (பதிவு செய்து கொள்ளும் ) இதுதான் நமக்கு கிடைக்கும் படம். இதை மெமரி கார்டு என்ற பகுதியில் சேமித்துக் கொள்ளும். அடுத்தடுத்த போட்டோ எடுக்கும் முன்பே முதலில் எடுத்த போட்டோவை மெமொரி கார்டுக்கு அனுப்பிவிட்டு எல்லா பிக்சலிலும் மின்னூட்டத்தை பூஜ்யமாக்கி விடும். இது ஒரு ஃபோட்டோ எடுத்ததும் அடுத்த பிலிம் வருவது போல காலி சிலேட் என்ற நிலைக்கு வரும்.
வீடியோ modeல், ஒரு விநாடிக்குள்24 இருந்து 25 அல்லது 30 போட்டோக்கள் எடுக்கப்பட்டு அவை அனைத்தும் சேமிக்கப்படும். ஒரு போட்டோ எடுத்து உடனே சேமித்து எல்லா மின்னூட்டத்தையும் பூஜ்யம் ஆக்கும். உடனே அடுத்த போட்டோ, சேமிப்பு, காலி சிலேட் இப்படி ஒரு வினாடிக்கு 25 முறை இந்த செயல் நடக்கும் (கவனிக்கவும் வினாடிக்கு 25 முறை இந்த வேலை நடக்கும் )
இதுவரைக்கும் டிஜிட்டல் பத்தி கொஞ்சம் விளங்கி கொண்டோம் அப்படியோ கலர் எப்படி வருகின்றது என்பதையும் கொஞ்சம் கலர்ஃபுல்லா பார்த்து விடலாம்.
நம்ம கண்ணுக்கு தெரியும் நிறங்கள் அனைத்தையும் சிவப்பு, பச்சை, நீலம் என்ற மூன்று வகை நிறங்களை வெவ்வேறு அளவில் கலந்து 'உருவாக்க முடியும். இதை ஆங்கிலத்தில் Red, Green, Blue என்றும் இதை சுருக்கமா RGB என்றும் சுருக்கமா சொல்வார்கள். பொதுவாக காமிராவில் ஒரு பொருளை போட்டோ எடுக்கும் பொழுது அதன் ஒவ்வொரு பிக்சலிலும் இவ்வளவு சிவப்பு இவ்வளவு பச்சை இவ்வளவு நீலம் என்ற விவரம் முழுதும் பதிவாக வேண்டும். அதை எப்படி செய்வது?
இந்த புள்ளிகள் இருக்கும் சில்லில் ஒவ்வொரு புள்ளிக்கும் மேல் சிவப்பு அல்லது பச்சை அல்லது நீல நிறக் கண்ணாடி புள்ளியின் அளவே இருக்கும். ஒரு சிவப்பு கண்ணாடிக்கு ஒரு நீலக் கண்ணாடியும் இரண்டு பச்சை நிறக் கண்ணாடிகளும் இருக்கும்.
இதனால் நாம் ஒரு புள்ளி என்பது அங்கு நான்கு புள்ளிகளால் உணரப்படும் இவை அனைத்தையும் சேர்த்தால்தான் அந்தந்த புள்ளியில் இருக்கும் உண்மையான நிறம் வந்துவிடும் (இந்த புள்ளிகளுக்கும் அந்த மலையாள புள்ளிகளுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது )
கலர் என்றதும் நினைவுக்கு வருது நாம் காணும் கனவுகள் யாவும் கருப்பு வெள்ளைதானாம் யாருக்கும் கலர் கனவுகள் வராதாம்! அப்படி யாராவது சிவப்பு கலர் புடவை உடுத்திக்கொண்டு என் கனவில் "பிரியாமானவர்களைக்" கண்டேன் என்று சொன்னால் அது மூளையின் கற்பனை திறனே தவிர வேறெதுவும் கிடையாது அதுபோல் நாம் பார்க்கும் அனைத்து பொருட்களும் நம் விழித்திரையில் தலை கீழாகவே விழும் அதை நேராக சரி செய்து கொள்வது நமது மூளையின் வேலை கேமாராவில் நாம் பிடிக்கும் படங்களும் பிலிம் அல்லது டிஜிட்டல் சிப்பில் தலைகிழாகவே பதிவாகும்.
அடுத்த பதிவிலும் கலர் பார்க்கலாம் ! (1985-95 கலர் அல்ல)…
தொடரும்
Sஹமீது
16 Responses So Far:
//இந்த chip தாங்க பிலிமுக்கு வச்சது ஆப்பு//
கவிதெ...கவிதெ...
//கலர் என்றதும் நினைவுக்கு வருது நாம் காணும் கனவுகள் யாவும் கருப்பு வெள்ளைதானாம் யாருக்கும் கலர் கனவுகள் வராதாம்!//
இதை முன்பு சுஜாதா எழுதியிருந்தார். ஆனால் இது இப்போது விவாதத்திற்கு உள்ள விசயம் ஆகிவிட்டது.
கனவை ரெக்கார்டிங் செய்யாமல் இதை உண்மையாக்க முடியாது.
//இதை முன்பு சுஜாதா எழுதியிருந்தார். ஆனால் இது இப்போது விவாதத்திற்கு உள்ள விசயம் ஆகிவிட்டது.// ஜாகிர் சொன்னது
நான் முன்பே சொல்லி இருந்தேன் அடுத்த சுஜாதா எங்கள் சாகுல் அண்ணன் என்று ....... சாகுல் அண்ணன் காலேஜில் N A S அண்ணன் பிசிக்ஸ் லேபில் போரடித்தது தாங்க முடியாமல் தான் காலேஜை விட்டே ஓடியாந்துட்டேன் .ப்ராக்டிகல் அப்ப கூட அங்க வேலை பார்த்த இரண்டு உதவியாளர்களுக்கு கனரா வங்கியில் லோனுக்கு ஏற்பாடு செய்து அதை வாங்கி கொடுத்து அவர்களை அஜஸ் செய்து நமக்கு ஈஸியான ஒரு ப்ராக்டிகல் கேள்வித்தாளை இந்த வரிசையில் வைக்க செய்து அதை மற்ற மாணவர்கள் எடுத்து விடாமல் மிக வேகாமாக முன்னேறி நமது பேபரை உருவி ஐந்தே நிமிடங்களில் ப்ராக்டிகலை முடித்து வெளிவந்து கேண்டினில் டீ வடை சாப்பிட்டுவிட்டு ஹாய்யா போனால் நல்லா படித்து 3 மணி நேரம் ப்ராக்டிகல் செய்தவர்கள் 93 தான் நம்ம 96 பஸ்ட் மார்க் யாம்ப்பா சாகுல் அண்ணன் இந்த உண்மையை எல்லாம் N A S அண்ணன் ட்ட போட்டுவிற்றாதியப்பா
M.B.A.அஹமது சொன்னது…
//நல்லா படித்து 3 மணி நேரம் ப்ராக்டிகல் செய்தவர்கள் 93 தான் நம்ம 96 பஸ்ட் மார்க் யாம்ப்பா சாகுல் அண்ணன் இந்த உண்மையை எல்லாம் N A S அண்ணன் ட்ட போட்டுவிற்றாதியப்பா //
தெரிந்த ப்ராக்டிகல்கே வெறும் 96 மார்க் தானா !!
ஆஹா...
மிகவும் துல்லியமான தொழில்நுட்பத் தகவல்கள் ஹமீதுக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு விளக்கப்பட்டிருக்கிறது.
சிரமமான வேலையை மிகவும் இலகுவாகச் செய்திருக்கிறீர்கள் ஹமீது.
கலக்குங்கள்.
(ஆர்ட்ஸ் படிச்சவிங்ககூட உங்களின் இந்தக் கட்டுரையை ஆர்வமாகப் படிக்கிறாய்ங்கன்னா அது உங்களின் narrationன் நேர்த்திக்கான வெற்றி)
//அடுத்த பதிவிலும் கலர் பார்க்கலாம் ! (1985-95 கலர் அல்ல)…//
இது எனக்கா?
sabeer.abushahruk சொன்னது…
//அடுத்த பதிவிலும் கலர் பார்க்கலாம் ! (1985-95 கலர் அல்ல)…//
//இது எனக்கா?//
தென்றல் காற்றுக்கும், புழுதிக் காற்றுக்கும் கலர் போட்ட காலம் அது எல்லோருக்குமே
//தென்றல் காற்றுக்கும், புழுதிக் காற்றுக்கும் கலர் போட்ட காலம் அது//
என்னாச்சு? எல்லோரும் கவிஞர்களாக நாட்டமா? சும்மா ஜிவ்வுன்னு இருக்கே!
அந்த அசத்தலான அடுத்த அத்தியாயத்தை இப்பவே சொல்ல மாட்டீங்களான்னு இருக்கு.
நன்பர் ஹமீது எடுத்திருக்கும்
தலைப்பு மிகவும் ஆர்வமிக்க தலைப்பாகும்
மிகவும் துள்ளியமான விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன. வாழ்த்துக்கள் ஹமீது.....
கண்ணில் காணும் காட்சியெல்லாம் நிமிடத்திற்கு நிமிடம் மாறுபட்டாலும் அணைத்து காட்சிகளும் இறைவன் நமக்களித்த மெமொரி கார்டில்(மூளையில்) பதிவாகின்றது இது எத்தனை கோடிக்கணக்கான ட்டெரோ பைட் மெமொரி கார்டு என்பது யாரலும் கணக்கிடமுடியாது. இது இறைவன் நமக்களித்த அரும்பாக்கியம்.
நமது கண்ணையும் (லென்ஸ்) அதன் மூலியமாக பதியப்படும் மூளையும்(மெமொரி கார்டு) இவை இரண்டையும் மூலதனமாக வைத்து உருவாகியதே கேமராவும் அதன் பதிவுகளும்.
அது ஒரு கலை. நன்பர் ஹமீது அவர்களைப் போன்று அந்த கலையை கற்றவர்கள் மிகவும் துள்ளியமாக காட்சிகளை சிறைபிடித்துவிடுவார்கள்
ஒரு அழகான போட்டோ அமைய வேண்டும் என்றால், சரியான நேரம், சரியான இடம், சரியான கோணம் இத்தனையும் சரியாக இருந்தால் ஒரு போட்டோ அழகாக அமையும். எல்லோரலும் அப்படி துள்ளியமாக எடுத்துவிடமுடியாது, இருந்த போதிலும் சிலபேர் எடுக்கும் காட்சிகள் அவர்களை அறியாமலே ரொம்ப துள்ளியமாக அமைவதும் உண்டு.
நமது கடந்தகாலங்கள் அல்லது நம் முன்னோர்கள், வரலாறுகள் இவைகளை பற்றி தெரிந்தகொள்ள அந்தந்த காலகட்டதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பெரிதும் உதவுகிறது. இவைகள் கேமரா இல்லாமல் சாத்தியமில்லை. ஏனெனில் நாம் காணும் காட்சிகள் யாவும் நமது மூலையில் பதியப்பட்டாலும் அதை அடுத்தவர்களுக்கு காட்டவேண்டுமென்றால் மூலையை கழற்றிக் காட்டமுடியாது என்பதால் கண்ணையும் மூளையையும் மூலதனமாக வைத்து கேமரா உருவாகியது.
கேமரா உருவான காலம் முதல் இன்று வரை பல்வேறு பரினாம வளர்ச்சிகளை அடைந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டின் டெகுரோடைப் முதல் இன்று உள்ள டிஜிட்டல் கேமரா வரை போட்டோகிராபியில் பல மாற்றங்கள் வந்துவிட்டன. டிஜிட்டல் எஸ்எல்ஆர் (Digital SLR) இதுவே தற்போது உள்ள கேமராவின் புதிய தொழில்நுட்பம். டிஜிட்டல் சிங்கிள் லென்ஸ் ரிப்லெக்ஸ் கேமரா என்பதே டிஜிட்டல் எஸ்எல்ஆர் (Digital SLR) கேமராவாகும்.
எக்ஸ்போஷர் மீட்டர், இது லைட்டின் அளவை கணக்கிட உதவுகிறது. போட்டோகிராபியில் மிகவும் முக்கியமானது வெளிச்சம்(லைட்) தான். அதிலும் முதலில் முக்கியமானது ரெப்லெக்டேட்(reflected light) லைட் இரண்டாவது இன்ஸிடென்ட் லைட் (incident light). இதை கணக்கிடவே எக்ஸ்போஷர் மீட்டர் உதவுகிறது. அடுத்து கேமரா பில்டர்ஸ்(filters), இது படங்களை மெருக்கேற்ற உதவுகிறது. கேமரா பில்டர்களில் பல வடிவங்கள் உள்ளன. யுவி பில்டர், என்டி பில்டர் என பல வகைகளும் உள்ளன.
///தென்றல் காற்றுக்கும், புழுதிக் காற்றுக்கும் கலர் போட்ட காலம் அது ///
இது ஒன்று போததா ஹமீது அவர்களுக்கு கலைஞானி பட்டம் கொடுக்க.
காற்றுக்கே கலர் அடிக்க யாரால்முடிந்தது கலைஞானிக்கு எத்தனை கர்ப்பனைகள்
வண்ணமயமாய் ஒளிரும் தகவல்கள்!
இது போன்ற நுணுக்கமான விஷயங்கள் என்றால் கற்றுக் கொள்ள காத தூரம் ஓடும் என் போன்றவர்களை இருந்த இடத்தில் அமர்த்திப் படிக்க வைக்கும் பதிவு.
ரசனை இருக்க வேண்டும்
விரசம் இருக்க கூடாது !
ஆர்வம் இருக்க வேண்டும்
சோர்வு இருக்க கூடாது !
தெளிவு இருக்க வேண்டும்
சுளிவுகள் இருக்க கூடாது !
பிடித்த படம் எடுக்க
எடுத்த படம் பிடிக்க !
புகைப்பட மெடுத்தாலும்
புதைத்து வைக்கவும்
பொக்கிஷமென காக்கவும்
அறிந்திருக்க வேண்டும்
எடுக்கத் தெரிந்த எனக்கு
அடுக்கி வைக்கத் தவறிவிட்டேன் !
தேடல் தொடர்கிறது !
நல்லபதிவு மட்டுமல்ல, மீட்டெடுக்கிறது பழைய நினைவுகளையும் இன்றைய நுட்பங்களை நுகர்வதையும் !
நானும் கேமரா விழிகொண்டு ரசிப்பவனே !
//தெரிந்த ப்ராக்டிகல்கே வெறும் 96 மார்க் தானா !!//
நம்ம அடிக்கிற ஒ பி க்கு 100க்கு 96 மார்க் பத்தாம கிடக்கு அதுக்கு மேல எடுத்தாலும் சந்தேகம் வந்துருமுள்ள 96 கே இவன் எப்படி எடுத்தான்னு N A S அண்ணன் கண்ணுல வெலக்கன்னையை விட்டுக்கிட்டு பார்த்தாங்க 99 ஒ 100 ஒ எடுத்தோம் சிபிஐ விசாரணை தான் அதுக்கல்லாம் போகாமே
ஏதோ தப்பிதமே அதுவே பெரிய விஷயம் நம்ம மெயின் சப்ஜெக்ட்ல ஜஸ்ட் 40 எடுத்து பாஸ் செய்ததால் அந்த 96 ம் ப்ராஜெக்ட் ஒ பி ல 200க்கு 196 எடுத்ததும் நம்மள 1 ஸ்ட் கிளாசில் பாஸ் பண்றதுக்கு எவ்ளோ ஹெல்ப் புல் லா இருந்தது தெரியுமாண்ணன்
ஒரு காரியத்தை விளக்கும்போது சிலருக்கு கடியாக இருக்கும். அதையெல்லாம் மீறி நகைச்சுவையோடு சொன்னால் (ஐபேட்லே புளு கேட் கார்ட்டூன் காமிச்சி குழந்தைக்கு சோறு ஊட்டுவது போல்) எல்லோருமே விரும்பி ஆர்வமா படிக்கிறாங்க என்ற உண்மையை தெரிஞ்சிவெச்சி எழுதுறாய்ங்க நம்ம்ம மக்கள்.. அதுலே இயற்பியல் பாடம் நடத்தும் இந்த பதிவும் அடங்கும்...
அப்துல்மாலிக் பாய் கலர் பற்றிய கட்டுரைக்கும் கருப்பு வெள்ளை புகைப்படம்தானா ? (எப்போ உங்க ப்ரோபைல் போட்டோவை கலரா போடுவீங்க!)
Post a Comment