Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பேசும் படம் பார்த்து வரைக ! 27

அதிரைநிருபர் பதிப்பகம் | August 25, 2013 | , , , , ,

அதிரைநிருபரின் பேசும் படம் யாவரையும் பேச வைத்தது உலகறிந்த விஷயம். படம் போட்டு காட்டியவரே தன்னுடைய நகைச்சுவையோட அந்தப் படங்களை பேச வைத்ததை இது நாள் வரை ரசித்திருந்தீர்கள். இந்தப் பதிவில் அதிரைநிருபரின் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவரான மு.செ.மு.நெய்னா முஹம்மது அவர்களின் வரிகளோடு உரையாடுகிறது நமது பேசும் படம்.


வயதான வாப்பாவின் வலிகள்
வருங்கால வாப்பாமார்களுக்கு
விளங்குவதில்லை.


மேல் குளிக்க விரும்பிய மரம்
உடல் சாய்த்து யாருக்கும் தெரியாமல்
குளிக்கும் காட்சி ஹமீத் காக்காவே அதற்கு சாட்சி


உயிரற்ற படகுகளுக்கு நல்ல நேர்த்தியான வீடுண்டு.
உயிருள்ள ஏழை மனிதவர்க்கத்திற்கு தங்க வீடில்லை


மலை மூலிகையில் புட்டு அவித்து ஆவியாய் பறக்கும்
வெண் பனிக்கூட்டம் யாருக்கு விருந்தளிக்கும்?


எட்டாத தூரத்திலிருந்து என்றும் கவிஞர்களை
கவி படைக்க வைத்த வெண் மேகம் தரையிறங்கி
கொஞ்சம் மண்ணை தாலாட்டிச்செல்கிறது.


புகைப்பிடித்தல் உடலுக்கு கேடு விளைவிக்கும்
பனிபிடித்தல் மலை முகட்டிற்கு நன்மைபயக்கும்


எங்கள் பச்சை சாயம் வெளுத்தாலும் நாங்கள்
என்றுமே பாருக்கு நன்மை செய்வோம். மழைக்கணவன்
எம்மை தொடும் வேளை பசுமை படரும் எம் மேனியில்.


எதையும் பிடித்து திண்ணும் மனிதனருகில் இருப்பதால்
பிளாஸ்டிக் வாத்துக்கள் கவலைப்பட தேவையில்லை.


மனிதன் எளிதில் பிடிக்க முடியாமல் போனதால் தான்
நாம் நாமாக இருக்கிறோம் என்றெண்ணி சந்தோசத்தில்
சிறகின்றி மலை முகட்டை முத்தமிட்டு பறக்கும் வெண்மேகக்கூட்டம்.


கலர் கலராய் இருக்கும் பூக்குஞ்சங்கள்
வரிசையில் நின்று குரூப் ஃபோட்டோ எடுக்குது
வருங்காலத்தில் யாரிடம் காட்டி மகிழும்?


கண்கவர் பெண்களின் பூப்போட்ட புடவை
கடையில் மட்டும் தான் கிடைக்குமென்றிந்தேன்
இங்கு பூவாய் மலர்ந்து உடுத்த உடையின்றி இருக்கும்
ஏழைப்பெண்களுக்கு இலவசமாய் தர காத்திருக்கிறது.


அன்பு என்றும் இதயத்திற்குள்ளேயே இருந்து விட்டால்
அது அறியாமலேயே போய் விடும் பாச உள்ளங்களுக்கு
அவை அம்பாய் வெளியில் காட்டி நிற்கும் பூக்கள் இவை.


தேன் உறிஞ்சும் குழல் தேனிக்களிடம் இந்த
ஈ வாங்க வேண்டும் கொஞ்ச நேரம் கடன்
செய்வதறியாது நிற்கும் ஈ வெண்ணெய்யில்
நின்று கொண்டு நெய்யிக்கு எங்கு செல்லும்?


குளத்தில் பூக்கும் தாமரை மொட்டு
மரத்தில் முளைத்து நிற்பது யாரிடம் இப்படி
சவாலிட்டு தோற்று தலைகுனிந்து நிற்கிறது?


நீ அழகான பூவாக இருந்தாலும் உனக்கு
ஆயுசு குறைவு தான் எனவே சட்டென
நீ விரும்பும் பெண்ணின் புடவைக்குள்
தஞ்சமடைந்து நிறந்தரமாய் தங்கிக்கொள்.





இப்படியே மேலேப் போனா உச்சிக்கு போயிடலாம் ! என்ன ஐடியா வைத்திருக்கீங்க !? மேலேதானே போகனும் அப்படியே சும்மா மவுசை உருட்டிகிட்டே மேலே பார்த்துகிட்டே கிளம்புங்க உச்சியில இருக்கிற வயசானவரைப் பார்க்கலாம் ! :)

மு.செ.மு.நெய்னா முஹம்மது
படங்கள் : Sஹமீது

27 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கீழேருந்து மேலே;

இப்படியே மலைகளுக்குள் ரோடுகளையும் வீடுகளையும் அமைத்தால் இந்த உலகில் மலையும், மழையும் குறைந்து விடுமே!

இந்த மாதிரியான பாதுகாக்கப்பட்ட மைதானம் கிரானி திடல் போன்ற இடங்களிலும் மேலும் சில பகுதியிலும் அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இந்த மாதிரி மலைமீது வீடு கட்டி சாதனை படைக்கிறீர்கள், நாளை கடல் மீதும் வீடு கட்ட அவசியம் ஏற்பட்டாலும் ஆச்சரியப் படுவதில்லை!

இந்த மாதிரி வண்ண சாலை, வடிவான அழகு கடைகள், வானம் பொய்க்காது அப்பப்ப குளிர்ந்த மழை அதிரையிலும் வாய்க்க வேண்டும்!

செந்தூர மொட்டாய் உருவெடுத்து அழகு நீல வண்ணமாய் வண்டுகளுக்கும் வண்ணாத்திகளுக்கும் "ஷோ" காட்டி "டச்" பண்ண அழைப்பது தான் மலர்களின் நோக்கமோ!

மற்றதுகளுக்கு நம்ம நெய்னா மச்சான் அருமை புதுக் கவிஞனாய் உருவெடுத்து இருப்பதற்கு வண்ணத்தமிழில் வரைந்திருப்பதே சாட்சி.

இன்னும் அத்தனைக்கும் மூலமாய் இயற்கை அழகை எங்களுக்கு அள்ளித்தந்த விஞ்ஞானியாக்காவுக்கு நன்றி, அருமை.

அன்று விதிமுறையில் வியாழனோடு கெடு விதித்து விட்டதால் அதற்கு முன்னே சபீர் காக்காவும் அழகாய் எழுதி விட்டதால் என்னால் கலந்து கொள்ளாமைக்கு வருந்துகிறேன். அதற்கு பகரமாய் இன்று முதலில் வந்து நிற்கிறேன்.

KALAM SHAICK ABDUL KADER said...

வான்மேகம்
காமிராவுக்குள்
புகுந்ததா?
நெய்னாவின்
கவிமேகம்
சொல்மழையில்
சொக்க வைத்ததா?

தங்கத் தாம்பூலமா
தங்கத் தமிழ்த் தோரணமா?
எங்கட்கு வழியின்றி
எல்லாமே சொல்லிவிட்டீர்!

மலர்களைக் கண்டதும்
மனத்தினில் மகிழ்ச்சி
புலரும் காலைப்
பொழுதின் வெண்பனிபோல்
குளிர்ச்சி!


sabeer.abushahruk said...

ஹமீதுவின் படங்கள் அழகு. அவற்றிற்கான நெய்னாவின் பாடங்கள் அருமை.

நிழற்படங்களாகவும் நிஜப்பாடங்களாகவும் ஹமீது நெய்னா கூட்டணி அறுதிப் பெரும்பான்மையில் அதிரை நிருபரில் ஆட்சியைப் பிடித்துள்ளது.

தொடர் என்று போட்டிருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சியாயிருக்குமே!?

sabeer.abushahruk said...

வாழ்க்கை:

முதுமைக்கும் வறுமைக்கும்
வசமாக வாய்ப்பது
தனிமை!

எதிர்பார்ப்புகள் அற்றுப்போய்விட்டாலும்
பயணப்பட வேண்டிய
தூரம் மிச்சமிருக்கும்

தேவைக்கேற்ப
சொத்துசுகங்களோடு
கூடவே
ஊன்றுகோல்களோடும்
கால்பரப்பி காத்திருக்கிறது காலம்!

sabeer.abushahruk said...

படுத்துவிட்டால் நெடுமரம்:

இந்த மரம்
ஏன் விவஸ்தைக் கெட்டுப்போனது?
நின்று நிதானமாக
நீரருந்தாமல்
ஆற்றின் குறுக்கே படுத்துவிட்டதே
இதற்கு
தாகமா மோகமா?

sabeer.abushahruk said...

மழையின் இருப்பு மலையில்!

மலையழகு
மனதிற்குள் அலையடிக்க
முகடுகளில்
கரை ஒதுங்கும்
நுரைநுரையாய் மேகங்கள்

நீர்த்திவலைகள் நெய்துவைத்த
நைலக்ஸ் தாவணிகள்
தழையத் தழையக் கட்டி
திளைக்கிறது மலை

தேநீர்க்கடைகளின் கீற்றுக்கூரையின்மேல்
பனிக்கால விடிகாலைகளில்
வழியும் புகையென
வென்மேகங்கள்

இந்தக்
குளிர்மேகத்திற்குள் சிலகாலம்
உள்ளிருப்புப் போராட்டம்
செய்யும் வரம் வேண்டும்!

sabeer.abushahruk said...

கொத்துக் கொத்தாய் சொத்து!

இந்த
மெல்லிய மொட்டுகள்
இன்னும் வெளியிடப்படாத
இன்னிசை மெட்டுகள்

பூக்கள் வடிவில்
படைத்தவன் எழுதியப்
பாக்கள்

வெயில்மழையின் பேரன்பேத்திகள்
வானவில்லின் வண்ணக் குழந்தைகள்

சுயத்தை விற்றாவது
கொத்துக் கொத்தான
இந்தச்
சொத்துசுகம் வாங்கிவிட வேண்டும்!

Ebrahim Ansari said...

இது ஒரு இயற்கைக் கூட்டணி.

கொடைக்கானலின் கொள்ளை அழகை கொள்ளையடித்த சாகுலின் கேமிராவின் முடிச்சுகளை அவிழ்த்து மு.செ. மு. நெய்னா அவர்கள் எடுத்துள்ள கவி அவதாரம் இருவருக்கும் வாக்குகளை வாரி வழங்கி இருக்கிறது.

அறுதிப் பெரும்பான்மையில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது என்ற ஆஸ்தானக் கவிஞரின் அங்கீகாரமும் ,

தொடர்ந்து " எங்களுக்கு வழி இன்றி எல்லாமே சொல்லிவிட்டீர் " என்கிற கவியன்பனின் ஒப்புதலும்

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாக்கெடுப்பு இன்றியே நிறைவேறிய மசோதா என்றே நான் கூறுவேன்.

Ebrahim Ansari said...

//கொத்துக் கொத்தாய் சொத்து!

இந்த
மெல்லிய மொட்டுகள்
இன்னும் வெளியிடப்படாத
இன்னிசை மெட்டுகள்

பூக்கள் வடிவில்
படைத்தவன் எழுதியப்
பாக்கள்

வெயில்மழையின் பேரன்பேத்திகள்
வானவில்லின் வண்ணக் குழந்தைகள்

சுயத்தை விற்றாவது
கொத்துக் கொத்தான
இந்தச்
சொத்துசுகம் வாங்கிவிட வேண்டும்!//

இந்தக் கவிதை வரிகளுக்கு இந்தக் கவிதையை எழுதத் தூண்டிய மலர்க் கொத்துக்கள் விளைந்த பூமியைப் பரிசாகத் தரலாமென்று மனதில் தோன்றுகிறது.

எதற்கும் சாகுல், அடுத்த முறை மகனைப் பார்க்கப் போகும்போது விலை விசாரித்து வா!

Ebrahim Ansari said...

//கொத்துக் கொத்தாய் சொத்து!

இந்த
மெல்லிய மொட்டுகள்
இன்னும் வெளியிடப்படாத
இன்னிசை மெட்டுகள்

பூக்கள் வடிவில்
படைத்தவன் எழுதியப்
பாக்கள்

வெயில்மழையின் பேரன்பேத்திகள்
வானவில்லின் வண்ணக் குழந்தைகள்

சுயத்தை விற்றாவது
கொத்துக் கொத்தான
இந்தச்
சொத்துசுகம் வாங்கிவிட வேண்டும்!//

இந்தக் கவிதை வரிகளுக்கு இந்தக் கவிதையை எழுதத் தூண்டிய மலர்க் கொத்துக்கள் விளைந்த பூமியைப் பரிசாகத் தரலாமென்று மனதில் தோன்றுகிறது.

எதற்கும் சாகுல், அடுத்த முறை மகனைப் பார்க்கப் போகும்போது விலை விசாரித்து வா!

Ebrahim Ansari said...

இது ஒரு இயற்கைக் கூட்டணி.

கொடைக்கானலின் கொள்ளை அழகை கொள்ளையடித்த சாகுலின் கேமிராவின் முடிச்சுகளை அவிழ்த்து மு.செ. மு. நெய்னா அவர்கள் எடுத்துள்ள கவி அவதாரம் இருவருக்கும் வாக்குகளை வாரி வழங்கி இருக்கிறது.

அறுதிப் பெரும்பான்மையில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது என்ற ஆஸ்தானக் கவிஞரின் அங்கீகாரமும் ,

தொடர்ந்து " எங்களுக்கு வழி இன்றி எல்லாமே சொல்லிவிட்டீர் " என்கிற கவியன்பனின் ஒப்புதலும்

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாக்கெடுப்பு இன்றியே நிறைவேறிய மசோதா என்றே நான் கூறுவேன்.

Unknown said...

காசு கொடுக்காமலேயே கண் கொள்ளா காட்ச்சிகளை கண்ணுக்கு விருந்தாக்கிய சகோ. சாகுல் ஹமீது அவர்களின் கேமராவுக்கு கண் விழுந்து விடாமல் இருக்கவேணும்.

வழக்கம்போல் அடுப்பங்கரை, மீன் மார்கெட், முச்சந்தி , பஸ் ஸ்டாண்ட், மற்றும் பலதரப்பட்ட மக்கள் புழங்கும் இடங்களில் உள்ள தமிழுக்கென்றே சிறந்த பேராசிரியர், எங்கள் குடும்ப உறுப்பினர் நைனா அவர்களின் போட்டோவுடன் பேசும் தமிழ் மாறுபட்டு மிக அருமையாக அதற்க்கு உயிர் கொடுத்திருப்பது இன்னும் சிறப்பு.

என் கண்ணான வாப்பா நைனாவின் கொஞ்சும் தமிழுக்கு கண் விழாமல் இருக்கணும்.

வழக்கம்போல், கவி வேந்தர் சபீர், கவியன்பன் கலாம் , கவிமழையில், போட்டோக்கள் நனைந்து மேலும் ஈரமாகி குளிர்ச்சி அடைந்திருக்கின்றது.

அபு ஆசிப்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

படம் : 16

மழைக்காக‌ கடை ஒதுங்கிய வண்ண,வண்ண‌ டீ சர்ட்டுகள்
காருக்கும் கொஞ்சம் ஒதுங்க‌ இடம் கொடுத்து தன் நட்பு வட்டாரத்தை பெருக்கிக்கொள்ள வேண்டியது தானே?

படம் : 17

காண்க்ரீட் மரங்கள் வான் மழையை ஓரம் கட்டச்செய்து
பண மழையை வெள்ளமாய் கொட்டச்செய்து கடைசியில்
ஒதுங்குகிறது எங்கோ இருக்கும் சுவிஸ் வங்கி எனும் அணையில்.

படம் : 18

தடுப்புக்குள் கால்பந்தாடும் காளையரை கண்டு
கைத்தட்டலின்றி குதுகலமாய் உற்சாகப்படுத்தும்
பசுமை மாறா பெரும் மரங்கள்.

ப‌ட‌ம் : 19

வான‌த்திற்கு செல்லும் வ‌ழியாத‌லால்
வாழ்த்தி வ‌ழிய‌னுப்பி வைக்க‌ வ‌ரிசையில்
நிற்கும் ப‌சுமை மாறா ம‌ர‌ங்க‌ள்.

எஸ். ஹ‌மீத் காக்கா அனுப்பிய‌ ப‌ட‌ங்க‌ளை பார்த்து சும்மா லைட்டா ட்ரைப்ப‌ண்ணினேன். அது என்ன‌ம்மோ அன்பான‌ நீங்க‌ளெல்லாம் இங்கு வாயார‌ வாழ்த்த‌ கொஞ்ச‌ம் செட்டாயிடிச்சி போல‌.....உங்கள் அனைவரின் உற்சாகத்திற்கும், உத்வேகத்திற்கும் அன்புக்கடன் பட்டிருக்கிறேன்.

க‌விதையின் ப‌க்க‌ம் அதிக‌ம் ஆர்வ‌ம் செலுத்த‌ ப‌ய‌ம் கார‌ண‌ம் க‌விவேந்த‌ரும், க‌விஅன்ப‌னும், க்ரவுனாரும் என்னை அவர்களின் கவிமொழியில் "அல‌ங்க‌ம‌ல‌ங்க‌"ப்ப‌டுத்தி விடுவார்க‌ளோ என்ற‌ அச்ச‌மே.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

sabeer.abushahruk said...

//பூக்களைப் பற்றியப்
பாக்களுக்கு
பூமியைப் பரிசளிக்கலாம்

அடுத்தமுறை
அங்கு செல்லும்போது
அப்பூமியின்
விலை விசாரித்து வா!//

இது மட்டும் என்னவாம்? கவிதைதானே?

கவிதையை ஹமீது பாணியிலும் படம்பிடிக்கலாம்; நெய்னா பாணியிலும் பாகம் குறிக்கலாம்; கவியன்பன் பாணியிலும் நேர்த்தியாக மதிப்பிடலாம்; தங்கள் பாணியிலும் தரம் பிரிக்கலாம்.

எல்லாவகையிலும் "அந்த" உயிரோட்டமும் உணர்வும், உள்ளத் தீண்டலும் இருந்தாலே அவையாவும் கவிதையே.

Unknown said...

சபீர்

கவிதைகள் தானாக வருவதா ?
அல்லது மற்றவர்கள் கற்றுக்கொடுத்து வருவதா ?
அல்லது அதற்க்கேனும் இலக்கண வரம்புகள் ஏதும் உள்ளதா ?

அதிரை நிருபரில் உள்ள கவிக்கூட்டங்களில் யாராகிலும் ஒருவர் கவி வரையக் கற்றுத்தாருங்கலேன்.

அபு ஆசிப்.

crown said...

படுத்துவிட்டால் நெடுமரம்:

இந்த மரம்
ஏன் விவஸ்தைக் கெட்டுப்போனது?
நின்று நிதானமாக
நீரருந்தாமல்
ஆற்றின் குறுக்கே படுத்துவிட்டதே
இதற்கு
தாகமா மோகமா?
-------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். கவிஞரே இல்லை மோக தாகமா?அப்படி இருக்கவும் வாய்பில்லை! மோகம் இல்லாதவன் யோகம் இல்லாத மரம்! இந்த மரம் தாகம் மிக்கது மட்டுமே! சரியா கவிச்சக்கரவர்த்தி அவர்களே!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

என்னிடம் இப்படித்தான் கவிதை சொன்னார் ஒரு நண்பர் !

பார்த்ததைச் சொன்னேன்
பொய் சொல்கிறாய் என்றார்

பார்த்தவர்களைச் சொன்னேன்
பொய் சொல்கிறாய் என்றார்

பார்க்காததைச் சொன்னேன்
உண்மையா? எனக் கேட்டார் !

இல்லை இல்லை என்றேன்!
பொய் சொல்கிறாய் என்றார் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அபூ ஆசிஃப் காக்கா...
கவிதை பிறக்கிறது !

அன்னாந்து பார்த்த நிலவை
அமைதியான நீரில் கண்டால் !

தூறலில் சொட்டும் துளிரை
கூரையின் நுணியில் கண்டால் !

ஓரப் பார்வையின் ஓவியம்
ஒளிந்து இருப்பதை கண்டால் !

மழலையின் மொழிக்கு அகராதி
போடும் தாய்மையின் பூரிப்பில் !

இன்னும் !

சமைக்கும் இடத்தில்
சுவையான வரிகள்
சீக்கிரம் பரிமாற
கைகள் விரைகின்றன !

மேலும் !

இருக்கிறது என்று சொல்ல இன்னும் வருவார்கள் !

இருட்டில் இருந்தவனிடம்...

"அங்கே இருட்டாக இருக்கிறது இங்கு வந்துவிடு" என்றேன்

"அங்கே வெளிச்சமாக இருக்கிறது இங்கு வராதீர்கள்" என்றான் !

இது என்னுடைய வரி / வார்த்தை என்று யாரும் சொந்தம் கொண்டாடாமல் இருந்தால் சரி !

ZAKIR HUSSAIN said...

இப்படி வரும் போட்டோக்களுக்கு எல்லோரும் கவிதை மழை பொழிந்தால் என்னைபோல் உள்ளவர்கள் என்ன செய்வது??

முதல் படம் சொல்லும் தத்துவம் [ வயதான பெரியவர் ] யாரும் எழுத்துக்குள் கொண்டுவர முடியாது.

Anonymous said...

படம் [1] -
படி இருக்கிறது;
படிஅளக்க ஆளில்லை !
நான் ஒரு பிள்ளையானேன்!
எனக்கு ஒரு பிள்ளையானவன்
அவனுக்கு என்னைத் தெரியாது!

படம் [2] -
ஒமரமே! ஒமரமே!
தவித்திருந்து தவித்திருந்து
வானம் பார்ப்பதை விட
பூமித்தாயின் மடியில்'
சாய்ந்து குடிப்பது மேல்'
என்று விழுந்தாயோ!!

படம் [3] -
Boatடுக்கு ஒருHouseகொடுத்தீர்களே!
ஓட்டுக்கு என்ன கொடுத்தீர்கள்?

படம் [4] -
ஒ! வெண்மேகமே!
அந்த மலைமீது கொண்டது கோபாமா?
இல்லை மோகமா?
எதுவானாலும்
உருகப்போவது நீயே!

படம் [5] -
ஒ! மேகமே!
பசுமைக்கு நீ வெந்நிர
ஆடையா கட்டப் போகிறாய்?!

படம் [6] -
நீ கொடுக்கப் போகும் பரிசும்
அதே வெந்நிர ஆடைதானோ!?

படம் [7] -
கோல் இன்றி என் கண்களில்
'பசு'மை'தீட்டுகிறாய்'
''ஆஹா!
என்னசுகம்!'

படம் [8] -
ஒ! வாத்துகளே!
படகில் மிதக்க
உங்களுக்கு வெட்க மில்லையா?
உடனே நீரில் குதியுங்கள்

படம் [9] -
ஒ! வெண் மேகமே!
மலையை முத்தமிடுகிறாயே!
அது உனக்கு எப்போது
மாலையா சூடியது?

படம் [10] -
எனக்கு இருப்பதோ
ஒரே காதலி!
இத்தனை பூக்களில்
அவளுக்கு எதை சூடுவது?

படம் [11] -
உன்னைச் சூடும்
அந்த அழகியின்
பெயறென்ன?

படம் [12] -
கொடியே ! பூங்கொடியே!
உன்னை நேசிப்பது
இத்தனை இதயங்களா?
அதில் என்னதை எடுத்துக் கொண்டு
மற்றதை திருப்பிக் கொடுத்திடு!

படம் [13] -
ஆசை ஆசை
அந்த ஈ இருக்கும் இடத்தில்
முத்தமிட ஆசை!

படம் [14] -
திருட்டுபோன என் இதயத்தை
திருடியது நீ தானோ?
திருப்பித் தரவேண்டாம்!
அது உன்னிடமேஇருகட்டும்

படம் [15] -
நீலம் பூத்த மலரே!
காலம் காத்த காதல்
பூத்திட நேரம் பார்த்து வந்தாயோ!
நெருங்கிவா!
சுணங்கினால் நொறுங்கிப் போவேன்!

படம் [16] -
இந்த ரோட்டுக்கு
யார் போட்டது
'ஷூ பாலிஸ்!

படம் [17] -
இந்த வீடுகளில்
எந்த வீடு என் சொந்தவீடு!
மறந்து போச்சே!

படம் [18] -
அடிடா! அடிடா!
அடே.......அடி.....டா.......!

படம் [19] -
இதுதான்
சிகரம் தொட்டவரிடம் செல்லும்
பாதையோ! ?

S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அருமையான படங்கள்...மிக அருமையான தொகுப்பு அசத்தல்

ஹமீது காக்கா உங்களிடமிருந்த சிறு துளியாய் நான் கற்றுக்கொண்டதை பார்த்து ஊக்கப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்

அதன் லிங்க் http://adiraithenral.blogspot.in/2013/08/3.html

மற்றவர்களும் பார்த்து கருத்திடுவீர்கள் தானே?


KALAM SHAICK ABDUL KADER said...

கவிதை மழைப் பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
அதிரைச் சுவை இனிக்கிறது
அதிரை நிருபரின் வல்லமையோ?
அதிரைப் பள்ளிகளின் திறமையோ?

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பு நண்பர் அப்துல் காதிர் , அஸ்ஸலாமு அலைக்கும்.

இயல்பாய் இருக்கும் அனைத்தையும் அதன் போக்கிலேயே சொல்லிச் செல்லும் எழுத்துக்கள் என்றுமே அழகானவை. இயற்கை, மனிதர்கள், அவர்களின் மன உணர்வுகள் எல்லாவற்றையும் சிறிது கற்பனையுடன் வடித்துப் படைக்கும் படைப்புகள் பாராட்டுக்குரியவை. .;இவைகள் தான் “கவிதைகள்” எனப்படும்.

கருவை மட்டும் மூன்றாம் வரியில் முத்தாய்ப்பாய் வைத்து விட்டால்= ஹைகூ
கருவுடம் சதையும் உணர்வும் அமைத்து விட்டால்= புதுக்கவிதை
கருவும், சதையும், எலும்பும் ஒரு வாய்பாட்டின் வடிவத்தில் உருகொடுத்தால்= மரபுப்பா.

இம்மூவகை வடிவங்களிலும் “உயிரோட்டம்” என்பதே அவசியம் என்பதை கவிவேந்தரின் தெளிவுரையில் காண்க.


Shameed said...

ஏழ்மையானவரின் கம்பீரம் தான் இந்த முதல் படத்தை எடுக்க தூண்டியாது

Adirai pasanga😎 said...

என்ன சாவன்னா பசியாறிட்டு, சாப்பிட்ட பின்பு எடுத்த படங்களா இவைகள்?

படங்கள் அருமை -

தம்பி மு செ மு நெய்னாவின் வர்ணனையும் நல்லா ஈக்கிது.

adiraimansoor said...

நான் யாரை பாராட்டுவது யாரை பாராட்டாமல் இருப்பது என்பதில் குழம்பி போய் இருக்கின்றேன்
இது என்ன
சபீருக்கும்
கவியன்பனுக்கும்
பாரூக் காக்காவுக்கும்
மட்டும்தான் கவித் திறமை
இருக்கும் என்று என்னிருந்தேன் ஆனால்
நெய்னாவுக்கும் இ.அ.காக்காவுக்கும், நெயனா தம்பிக்கும் ஆக
அதிரை நிருபரின் மகிமையோ என்னவோ
புத்துகளிலிருந்து கிளம்பும் பாம்புகள்போல்
ஒவ்வொருத்தரிடமிருந்து வெளியாகும்
கவிதைகளை பார்த்து மலைத்துவிட்டேன்

அதிரை நிருபரில் வலம் வரும் அத்தனை
பேரையும் கவிஞர்களாக காணும் காட்சி ஒர் அற்புதமே யாரும் யருக்கும் சலைத்தவர்கள் இல்லை என்பதை தெள்ளத் தெளிவாக தெரிகின்றது

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

எஸ். ஹமீத் காக்காவிற்காக இன்னொரு முறை முதல் படம் பற்றி:

வாழ்நாளெல்லாம் கம்பீரமாய் வாழ்ந்து முடித்ததால் தான் இன்றும்
வீதியின் நடுவே கம்பீரமாக தனிமையுடன் தரையில் வீற்றிருக்கிறேன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு