There are
certain main lessons
we have learned as children.
As time passes
and we get older
we tend to forget those lessons.
Those lessons can be
morals and principles of life.
Allah subhana huth'ala helps us
in reminding those lessons
by creating situations .
ya Allah!
forgive my disgusting behavior if any
that must have displeased you.
There are certain things
in my heart
that must be killed.
Help me battle those
"evil part of me " ya Allah.
People praise me
claiming
‘I am Imaanic’ and all.
But
I know
what’s going inside my heart.
Therefore
I ignore those comments...
surely because
no one can enter heaven
with a single drop of PRIDE
inside his/her heart.
Shahnaz Sabeer Ahmed, MBBS II year
|
பிள்ளைப் பிராயத்தில்
பயின்ற
பிரத்யேகப் பாடங்களே
பிரதானமானவை
காலங்கள்
கடக்கும் தன்மையன
வயதும் வளர்ந்துயரும்போது
பயின்றவற்றை
நாம் நம் வசதிக்கேற்ப
மறக்க முனைகிறோம்
அன்று கற்றவையே
வாழ்க்கையின் குறிக்கோளாகவும்
வாழ்வியல் நியதியாகவும்
இருந்துவிடுகையில்
அல்லாஹ் சுபுஹானஹுத்’ஆலா
அவற்றை நினைவூட்டவே
சூழ்நிலைகளை
உருவாக்கி உதவுகிறான்
யா அல்லாஹ்
என்
நடத்தைகளில் ஏதேனும்
நீ வெருக்குமளவுக்குக்
தப்பிதமாக இருப்பின்
மன்னிப்பாயாக
என்
இதயத்திருப்பில் தொத்தியிருக்கும்
சிலவற்றை நான்
கொன்றழிக்க வேண்டும்
அந்த
சாத்தானியத்தை
என்னிலிருந்து அழித்து
வெற்றிகொள்ள
உதவிடுவாய் யா அல்லாஹ்
என்னை
மிகச்சிறந்த
இறைநம்பிக்கைவாதியாகவும்
நல்ல முஸ்லிமாகவும் பாராட்டும்
அவர்களுக்குச் சொல்வேன்
‘என்னுள் நிலவும் எண்ணங்களை
நானறிவேன்’
எனவேதான்
அவர்கள் கருத்துகளை
அப்படியே உள்வாங்கி
வினையாற்றுவதில்லை
ஏனெனில்
நிச்சயமாக
இந்தப் பாராட்டும் சீராட்டும்
ஒரு துளி பெருமையை
என்னுள்
விதைத்து விடுமானால்
நான்
சொர்க்கம் புகுதல்
எங்ஙனம்?
தமிழில் : சபீர் அஹ்மது அபுஷாருக்
|
40 Responses So Far:
வாப்பாவும் மகளும்
வல்லோனை புகழும்
வார்த்தை ஜாலங்கள்
எமக்கெல்லாம் வரனும்
ஆங்கிலமும் தமிழும்
ஆங்காங்கே மகிழும்
அற்புதம் செய்தீர்
ஆனந்தம் தந்தீர்
ஈமானை பருகி
இறைவனிடம் உருகி
எப்படித்தான் வரைந்தீரோ
உள்ளங்கள் கரைந்தோடும்
உம் எழுத்துக்கள் கவிபாடும்
அவை அனைத்தும் நலம் தேடும்
கச்சாமுச்சா வென்றெழுதும்
என்னையும் இங்கு கிறுக்க வைத்தீர்
ஏதேதோ எழுத வைத்தீர்
அதை படிப்பவரும் பரவசமடைந்து
உள்ளமும் கொஞ்சம் உற்சாகம் கண்டு
ஒரு ஓரமாய் பிறகு ஓய்வெடுக்கும்
எழுத்துக்கள் தொடரட்டும்
எங்கும் அமைதியே நிலவட்டும்....
(ராத்திரி நேரத்ல என்னால ஏன்டதை திடீர்ண்டு எழுதிப்புட்டேன். பிழையிருப்பின் பொறுத்தருள்க)
Assalamu Alaikkum
Dear sister Ms.Shahnaz Sabeer Ahamed,
Nice lines on honest true concerns.
The only solution to nip the pride from mind is always to submit(or forward) all praise to Almighty Allah.
Jazakkallah khairan
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com
If I try to greet your line
It will become pride as you said
what shall I do then
take it as our prayer side.
சின்னச் சின்ன செயலுக்குக்கூட அடுத்தவரைப் பாராட்டிப் பழக வேண்டும். வீட்டையோ அல்லது அலுவலகத்தையோ நன்றாக பெருக்கித் துடைக்கும் வேலையாளை; விரைந்து சமைத்து சாப்பிடத்தரும் தாயை அல்லது மனைவியை; சொன்ன நேரத்தில் தனது வேலையை செய்து முடிக்கும் நண்பனை; அவன் நேர்த்தியாக உடை உடுத்தும் பழக்கத்தை; தேர்வு நேரத்திலாவது சீக்கிரம் எழுந்து படிக்க அமர நினைக்கும் பிள்ளையை; குழந்தையின் அழகான கையெழுத்தை என்று எதையும் பாராட்டலாம்.
தந்தை என்னும் சூரியக்கதிரின் துணைகொண்டு, புதல்வி என்னும் செடியின் வளர்ச்சியை நாம் கண்டு பெருமிதம் அடைகின்றோம்; அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம் “இப்படிப்பட்ட அறிவாற்றலை வழங்கியதற்காக”
16 x 16 யாருக்காவது புரிகின்றதா
அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் சொன்னது…
//தந்தை என்னும் சூரியக்கதிரின் துணைகொண்டு, புதல்வி என்னும் செடியின் வளர்ச்சியை நாம் கண்டு பெருமிதம் அடைகின்றோம்; அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம் “இப்படிப்பட்ட அறிவாற்றலை வழங்கியதற்காக”//
கொஞ்சம் மாற்றி யோசித்தேன் இதை
தந்தை என்னும் சூரியக்கதிரின் துணைகொண்டு,"புதல்வி என்னும் சந்திரன் பிரகாசிப்பதை" நாம் கண்டு பெருமிதம் அடைகின்றோம்; அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம் “இப்படிப்பட்ட அறிவாற்றலை வழங்கியதற்காக”
அஸ்ஸலாமு அலைக்கும் மு.செ.மு. நெய்னா முஹம்மது தம்மாம் வந்ததாக கேள்விப்பட்டேன்
இந்த மொபைல் நம்பரில் என்னை தொடர்பு கொள்ளுங்கள்
0508856627
Shameed சொன்னது…
16 x 16 யாருக்காவது புரிகின்றதா
---------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.தந்தை பதினாறுஅடியும், மகள் பதினாறு அடியும் சேர்ந்து பாய்ந்துள்ளார்கள்.
கொஞ்சம் மாற்றி யோசித்தேன் இதை
தந்தை என்னும் சூரியக்கதிரின் துணைகொண்டு,"புதல்வி என்னும் சந்திரன் பிரகாசிப்பதை" நாம் கண்டு பெருமிதம் அடைகின்றோம்; அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம் “இப்படிப்பட்ட அறிவாற்றலை வழங்கியதற்காக”
-------------------------------------------------------
அல்ஹம்துலில்லாஹ்!பளிச்சென மிளிரும் யோசனை!விஞ்ஞான மூளையல்லவா? யாராலும் விஞ்சமுடியுமா?
அஸ்ஸலாமு அலைக்கும். எம் இதயத்தை வென்றெடுத்த உடன் பிறவா சகோதரரின் மகளே! உன் இதயத்தில் வீற்றிருக்கும் சில தீயவைகளை கொன்றழிக்க அல்லாஹ்வை நாடி நீகேட்டிருக்கும் துஆ எல்லோருக்கும் பொருந்தும், அந்த துவா!பொதுவா!அமையக்கூடிய அளவில் நாம் எல்லோரும் ஏதோஒரு வகையில் பதுவா!வாங்கி இருக்கிறோம், மெதுவா! நீமட்டும் கேட்டிடாமல், பொதுவா! எல்லாருக்கும் கேள் என்றேன்!காரணம் உன் போல் சிறியவர்கள்(இப்ப கொஞ்சம் பெரியவள்)இதயத்தில் இருக்கும் கொஞ்சூண்டு தீய எண்ணத்தைவிட எங்களிடம் தான் அதிகம் உண்டு! உனக்கோ ஒத்துக்கொள்ளும் பெருந்தன்மை! எங்களுக்கோ ஈகோ!இந்த ஈகோ போகவும் தூஆசெய்வோமாக அல்லாஹ் நம் அனைவரின் தூவை கபுல் செய்வானாக ஆமீன்.
வ'அலைக்கும் முஸ்ஸலாம். எஸ். ஹமீத் காக்கா, பெருநாள் விடுமுறையில் நண்பர்களை சந்திக்க தம்மாம் வந்தேன். அல்ஹமதுலில்லாஹ் பெருநாளும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று பணியிடம் திரும்ப உத்தேசம். புறப்படுமுன் தங்களை இன்ஷா அல்லாஹ் தொடர்பு கொள்கிறேன். (ஊர்ல ஈப்பியண்டு நெனச்சேன்)
படைத்த இறைவனிடம்
தூய்மையான உள்ளத்தோடு சென்றடைய வேணும் என்ற ஒரு கோரிக்கையை அவனளவில் வைக்கும் ஒரு உள்ளச்ச வேண்டுகோள்.
ஒரு உண்மையான முஸ்லிமாகவும் , கடுகளவு பெருமையோ அல்லது, செருக்கோ இல்லாத களங்கமற்ற உள்ளத்தை கேட்டுபெரும் ஒரு அச்ச உணர்வுடன் கூடிய தூய்மையான் ஒரு மு'மினின் வேண்டுகோள்.
இவ்வேண்டுகோளை இறைவன் ஏற்றுக்கொள்வானாக !
( May Allah accept your invocation )
அபு ஆசிப்.
ஆமீன் ஆமீன் ஆமீன்
வல்ல இறைவன் தாங்களின் வேண்டுதலை நிறைவேற்றித்தருவானாக
ஆங்கிலமும் அமுதாக இருக்க அருகில் இருக்கும் தமிழோ எடுத்து கொடுக்கிறது எப்படி இறைஞ்சுவது என்று!
எம்.எஸ்.எம்(என்) : கவிதை அருமை !
crown சொன்னது…
Shameed சொன்னது…
16 x 16 யாருக்காவது புரிகின்றதா
---------------------------------------------
//அஸ்ஸலாமுஅலைக்கும்.தந்தை பதினாறுஅடியும், மகள் பதினாறு அடியும் சேர்ந்து பாய்ந்துள்ளார்கள்.//
ஆகா அருமையான கணிப்பு
//ஆங்கிலமும் தமிழும்
ஆங்காங்கே மகிழும்
அற்புதம் செய்தீர்
ஆனந்தம் தந்தீர்//
தனித்துவமான கட்டுரை வரைவதில் விற்பன்னரான சிந்தனையாளரின் கவிதை சந்தத் தமிழில் மயக்குகிறது. இதுபோன்ற சந்தக் கவிதைகள் மனம் கொத்திச் செல்ல வல்லவை.
லண்டன் எம் எஸ் எம்மிடமிருந்து "ட்டீ இன்னும் வராததால்" சவுதி எம் எஸ் எம் ஒரு பிரத்யேக உணர்வைப் பற்றி முழு நீள கவிதை எழுதித் தந்தால் நல்லாருக்கும்.
துஆவில் கலந்துகொண்டமைக்கு நன்றி, எம் எஸ் எம்!
//no one can enter heaven
with a single drop of PRIDE
inside his/her heart.//
இது போன்ற ஈமானியப்பென்மையை மகளாய் அடைந்ததற்கு
நீ உன் மனைவி இருவரும் கொடுத்து வைத்திருக்கவேணும்.
ஈன்றபொழுதினும் பெரிதுவக்கும் தன் மகளை
தூய ஈமானிய பெண் என பிறர்அறிய கேட்ட பெற்றோர். - காதர்
( திருவள்ளுவருக்கு மட்டும்தான் குறள் எழுதத்தெரியுமா என்ன ?)
அபு ஆசிப்.
ஷாருக்கின் சகோதரியின் ஆங்கில துஆ எனக்கு புரியாவிடினும் அப்படியே அதை சுந்தரத்தமிழில் தந்து மகளின் கருவூற்றை புரியவைத்த தகப்பனாருடைய பெருந்தன்மை பிரமிக்கவைத்தது அல்ஹம்துலில்லா சபீரின் மகளின் துஆவுக்கு வலு சேர்க்கும் விதமாக மு.செ.முனாவின் கவிதையும் க்ரவுனின் விளக்க உறையும் மிகவும் பிரமாதம்.
எல்லோருடைய உள்ளங்களையும் ஊடுருவக்கூடிய அல்லாஹ்
சபீரின் மகள் இறையச்சத்தோடு கேட்கும் இந்த துஆவை கபூல் செய்து கொள்வானாக
நாங்களும் இந்த துஆவை மனமுறுகி கேட்கின்றோம்
என்
இதயத்திருப்பில் தொத்தியிருக்கும்
சிலவற்றை நான்
கொன்றழிக்க வேண்டும்
அந்த
சாத்தானியத்தை
என்னிலிருந்து அழித்து
வெற்றிகொள்ள
உதவிடுவாய் யா அல்லாஹ்
//The only solution to nip the pride from mind is always to submit(or forward) all praise to Almighty Allah.//
Well said bro. Ahamed Amern.
aSSalaamu alaikkum varah...
i used to write sms for her whenever i strongly feel missing her. one sample is here for you to assume as to where she got the way of writing from.
***
missing you daughter :
Loads of identical days
falling on us...
you are not here
to diversify them
through your
nature and torture
smiles and cries
soothing and anguish!
memories are painful daughter
especially
when left with traces!
-dad
Assalamu Alaikkum
Dear brother Mr. Sabeer AbuShahruk,
//memories are painful daughter
especially
when left with traces!//
Absolutely...Missing our beloved ones makes a vast emptiness in the mind. But they all are connected through memories.
Brother...you are highly expressive through writings the feelings of those memories. Writing is therapeutic as it helps venting our pains and feelings out.
Jazakkallah khairan,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com
அஸ்ஸலாமு அலைக்கும்
நேற்று ஹமீதை நேரடியாக தமாமில் சந்தித்ததிலும் அதற்கு முந்திய தினம் மு.செ.முவை தமாமிலும் ஹாஜா இஸ்மாயிலை ஜுபைலிலும் நேரடியாக சந்தித்து அதிரை நிருபரை பற்றியும் அதில் பங்களிப்பாளர்களின் திறமை பற்றியும் பகிர்ந்து கொண்டோம் இந்த சந்திப்பு மூலம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
அதிரை நிருபருக்குள் பிரவேசித்த மூன்று மாதங்களில் இவர்களை நேரடியாக இவ்வளவு சீக்கிரம் இந்த சந்திப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவேயில்லை
அல்ஹம்துலில்லாஹ்
//குழந்தையின் அழகான கையெழுத்தை என்று எதையும் பாராட்டலாம்.//
ஆம் கவியன்பன்.
நல்லவற்றைப் பாராட்டுவதே ஒரு நாகரிகமான மனிதனுக்கு அடையாளம்.
அவற்றை ஓர் அங்கீகாரமாக மட்டும் எடுத்துக் கொண்டு பெருமையடிக்காத, அரிதான, அந்தப் பாராட்டுகளை அல்லாஹ்வின் அருளுக்குக் காணிக்கையாக அளித்துவிடுகிற மனத்தைக் கேட்கிறது இந்த துஆ.
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
adiraimansoor சொன்னது…
//அஸ்ஸலாமு அலைக்கும்
நேற்று ஹமீதை நேரடியாக தமாமில் சந்தித்ததிலும் அதற்கு முந்திய தினம் மு.செ.முவை தமாமிலும் ஹாஜா இஸ்மாயிலை ஜுபைலிலும் நேரடியாக சந்தித்து அதிரை நிருபரை பற்றியும் அதில் பங்களிப்பாளர்களின் திறமை பற்றியும் பகிர்ந்து கொண்டோம் இந்த சந்திப்பு மூலம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
அதிரை நிருபருக்குள் பிரவேசித்த மூன்று மாதங்களில் இவர்களை நேரடியாக இவ்வளவு சீக்கிரம் இந்த சந்திப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவேயில்லை
அல்ஹம்துலில்லாஹ்//
வலைக்கும் முஸ்ஸலாம்
இவ்வளவு சீக்கிரம் சந்திப்போம் என்று சற்றும் எதிர் பார்க்கவில்லை
மன்சூர் காக்காவை எதிர்பாராமல் சந்தித்ததில் திக்குமுக்காடிப்போனேன்
அதிரை நிருபர் தோன்றியதன் வரலாற்றை கேட்டறிந்த மன்சூர் காக்கா மிக சீக்கிரம் விடை பெற்று சென்று விட்டார்கள்
அடுத்த முறை வரும்போது கண்டிப்பாக உணவறிந்திவிட்டுத்தான் செல்லவேண்டும் என்பது என் அன்பான கட்டளை
அதிரை சொந்தங்களின் வட்டம் விரிவடைந்து கொண்டிருப்பது இதில் இருந்து கண் கூட்டாக தெரிகின்றது மாஷா அல்லாஹ்
அன்பு நண்பன் சபீருடைய புதல்வியின் கவிதை பூவிலும் மென்மையான வார்த்தைகளைக்கொண்டு படைத்தவனின் மனம் மகிழ ஏற்று கபூல் செய்யும் துஆ. புலிக்குப்பிறந்தது பூனையாக எப்படி இருக்கமுடியும் என்பதை தமது இரண்டாவது கவிதையிலும் நிரூபித்திருக்கிறார் Shahnaz. வாழ்த்துக்கள்.
உங்களின் துஆ கபூலாகட்டும்.
Well written by 2 Generations
/// நிச்சயமாக
இந்தப் பாராட்டும் சீராட்டும்//
நிச்சயமாக பாராட்டும் சீராட்டும் மனிதன் நரகத்துக்கு செல்ல பாதை காட்டும். உறுதி கொண்ட மனம் இருந்தால் மட்டுமே இதிலிருந்து தப்பிக்க முடியும். இன்றைக்கு பெரும்பாலான மனித மந்தைகள் பாராட்டுக்களை தேடி தேடி அலைகிறார்கள். பாராட்டு பாடல்கள் எழுத எழுத்தாணிகளை தீட்டிக்கொண்டு தாடிவைத்த புலவர்களை, இவர்களை தேடிக்கொண்டு இருகிறார்கள்//
கவிதை அற்புதமான கருத்துக்கோவை
S.முஹம்மதுபாரூக் அதிராம்பட்டினம்
//அந்த துவா!பொதுவா!அமையக்கூடிய அளவில் நாம் எல்லோரும் ஏதோஒரு வகையில் பதுவா!வாங்கி இருக்கிறோம், மெதுவா! நீமட்டும் கேட்டிடாமல், பொதுவா//
எதுவா இருந்தாலும் கிரவுனின் இதுவால்தான் தமிழை அலங்கரிக்க முடியும்.
// எங்களுக்கோ ஈகோ!இந்த ஈகோ போகவும் தூஆசெய்வோமாக அல்லாஹ் நம் அனைவரின் தூவை கபுல் செய்வானாக ஆமீன்.//
ஆமீன்.
//16 x 16 யாருக்காவது புரிகின்றதா //
புரிகின்றது ஹமீது. கிரவுன் முதலில் பஸ்ஸரை அழுத்திவிட்டதால் பதில் சொல்லும் வாய்ப்பு அவருக்கே வழங்கப்பட்டுவிட்டது.
இருப்பினும் நான் 16 அடி எப்பப் பாஞ்சேன்?
****
அப்துல் மாலிக் மற்றும் அபு இபுறாகீம்,
துஆவில் கலந்துகொண்டதற்கு மிக்க நன்றி.
****
அங்கே வாப்பா மகனை தொடர்ந்து இங்கே வாப்பாவும் மகளும் களைகட்டி இருக்கிறார்கள்.
பாராட்டும் சீராட்டும் வேண்டாம். அல்லாஹ் உங்களை அங்கீகரிப்பானாக!
நெய்னா! கவி பக்கம் தலைகாட்டுவதில்லை என்று தவறாக நினைத்தேன் அது தவறென்று இன்றுணர்ந்தேன்.
கவிகாக்கா அன்று போட்ட அன்புத்தூண்டிலுக்கு ரொம்ப லேட்டாகிவிட்டேன். காக்கா மன்னிக்கனும்.
உனக்கும் தூது விட்டிருக்கார்கள். யார் முதலில் என்று பார்ப்போம். நெய்னா.
அன்பின் சகோ. ஷாஹமீத், அஸ்ஸலாமு அலைக்கும்,
முதல்கவிதையில் (a sincere dua of a student) ,மருத்துவர் அவர்களின் கவிதையைப் பாராட்டி யான் எழுதிய பின்னூட்டத்தில் முன்னரே தாங்கள் கணித்த அதே கருத்தை எழுதி விட்டேன்; அதற்கு மருத்துவரின் தந்தையும் கவிவேந்தருமான சபீர் அவர்களும் ஏற்புரை வழங்கியுள்ளார்; (கீழே காண்க)
//You are the Moon
Who reflect your father
And you will light us soon
By spreading wisdom further!//
கவித்தீபம்/கவியன்பன்,
கவிதைக்குப் பொய் அழகென்பர். ஆனால், தங்களின் கவிதையில் விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்ட உலகளாவிய உண்மை (universal truth)மிளிர்கிறது.
நிலா, சூரியனின் ஒளியைத்தான் பிரதிபலிக்கிறது என்பது "அறிவியல்". இதை கவிதையில் இழைத்திருப்பது தங்களின் "இயல்பறிவு'.
ஏற்புரை வரை காத்திருக்க விடாமல் உற்சாகமூட்டியது தங்களின் ஆங்கிலக் கவிதை.
//ஈன்றபொழுதினும் பெரிதுவக்கும் தன் மகளை
தூய ஈமானிய பெண் என பிறர்அறிய கேட்ட பெற்றோர். - காதர் //
குழலினிது யாழினிது என்பர் காதரின்
குரலில் ஹனீஃபா கேளாதோர்
நாங்களும் எழுதுவோம்ல.
***
//சபீரின் மகள் இறையச்சத்தோடு கேட்கும் இந்த துஆவை கபூல் செய்து கொள்வானாக
நாங்களும் இந்த துஆவை மனமுறுகி கேட்கின்றோம்//
மிக்க நன்றி மன்சூர். நம் துஆவை அல்லாஹ் கபூல் செய்வானாக.
***
அன்பிற்குரிய மெய்சா,
//கவிதை பூவிலும் மென்மையான வார்த்தைகளைக்கொண்டு படைத்தவனின் மனம் மகிழ ஏற்று கபூல் செய்யும் துஆ.//
அழகாகச் சொல்கிறாய். ரொம்ப நன்றி.
//அடுத்த முறை வரும்போது கண்டிப்பாக உணவறிந்திவிட்டுத்தான் செல்லவேண்டும் என்பது என் அன்பான கட்டளை //
ஹமீது,
மன்சூருக்கு சாப்பாடு போடுவதோடு நிறுத்தாமல் சமைக்கவும் சொல்லி சாப்பிட்டுப் பாருங்கள். அப்புறம் மன்சூரைப் பார்க்கும்போதெல்லாம் நாக்கு ஆட்டோமாட்டிக்கா வெளியே தொங்கிடும்.
-இப்படிக்கு அனுபவஸ்தன்.
***
ஜாகிர்,
//Well written by 2 Generations//
ஒரு வார்த்தையில் ஒருநூறு விமரிசனங்களை உன்னால் மட்டுமே எழுத முடியும்.
எம் ஹெச் ஜே,
ட்டீ இன்னும் வரல
ட்டீ இன்னும் வரல
ட்டீ இன்னும் வரல
sabeer.abushahruk சொன்னது…
//அடுத்த முறை வரும்போது கண்டிப்பாக உணவறிந்திவிட்டுத்தான் செல்லவேண்டும் என்பது என் அன்பான கட்டளை //
ஹமீது,
//மன்சூருக்கு சாப்பாடு போடுவதோடு நிறுத்தாமல் சமைக்கவும் சொல்லி சாப்பிட்டுப் பாருங்கள். அப்புறம் மன்சூரைப் பார்க்கும்போதெல்லாம் நாக்கு ஆட்டோமாட்டிக்கா வெளியே தொங்கிடும்.
-இப்படிக்கு அனுபவஸ்தன்.//
ஆகா இது முன்பே தெரியாம போச்சே! அடுத்த பெருநாளுக்கு வரட்டும் வச்சிகிறேன்
//ட்டீ இன்னும் வரல
" ட்டீ இன்னும் வரல
" ட்டீ இன்னும் வரல//
ட்டீ இனி வரும்
ட்டீ இனி வரும்
ட்டீ இனி வரும்
சபீர்
முன்னாடி என்னிடம் ஹமீதை உனக்கு தெரியும் என்று சொல்லும்போதே சந்தேகப்பட்டேன்
பின்னாடி எதோ வில்லங்கம் இருக்குமெனு
நன்பர்ஹமீதிடம் என்னை நல்லா மாட்டிவிட்டு விட்டாய்
அடுத்த பெருநாளைக்கா?
தமாமுக்கா?
அதுவும் நன்பர் ஹமீது வீட்டிற்க்கா
ம்ஹூம்
கம்பேனியில் நிரைய வேளை இருக்குப்பா
நான்வரல
அட சாப்பிடவா/ கம்பெனியிலே ஒரு வேலையுமில்லை
இதோ வந்திறேன்
Alhamdulillah. I must thank to Allah as I have got an enthusiasm to open a new blog for ENGLISH POEMS now (please visit: http://gardenofpoem.blogspot.ae/) only after reading Dr.Shahnaz's poems posted here.
She is like an inducement for me too.
adiraimansoor சொன்னது…
//சபீர்
முன்னாடி என்னிடம் ஹமீதை உனக்கு தெரியும் என்று சொல்லும்போதே சந்தேகப்பட்டேன்
பின்னாடி எதோ வில்லங்கம் இருக்குமெனு
நன்பர்ஹமீதிடம் என்னை நல்லா மாட்டிவிட்டு விட்டாய்
அடுத்த பெருநாளைக்கா?
தமாமுக்கா?
அதுவும் நன்பர் ஹமீது வீட்டிற்க்கா
ம்ஹூம்
கம்பேனியில் நிரைய வேளை இருக்குப்பா
நான்வரல
அட சாப்பிடவா/ கம்பெனியிலே ஒரு வேலையுமில்லை
இதோ வந்திறேன்//
மன்சூர் காகா சாப்பாடு விசயமா கொஞ்சம் அடக்கியோ வாசிங்க ஏன்னா அடுத்த வந்துள்ள பதிவில் சாப்பாடு விசயமா உட்டு விலாசிட்டாங்க!!
மாஷா அல்லாஹ்!
எங்கள் இறைவனே! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!. அல்குர்ஆன் 25:74
Post a Comment