Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

"கிட்டன்ஸ்ல ஊர் முச்சூடும்" – ஊடகங்கள் 19

அதிரைநிருபர் பதிப்பகம் | August 29, 2013 | , , , , , , ,

ஊடக தர்மங்கள் நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் செத்துப்போய் பல மாமாங்கம் ஆகி விட்டன. வெறும் கற்களை மட்டும் கையில் வைத்துக்கொண்டு கனரக பீரங்கிகள் முன் இழந்த தன் மண்ணை மீட்க சண்டை போடுவதால் பாலஸ்தீன மக்கள் மீது வானிலிருந்து பாஸ்பரஸ் கொத்து குண்டு மழை பொழியச்செய்து பச்சிளம் குழந்தைகள் என கூட பார்க்காமல் அழித்தொழிக்கும் இஸ்ரேல் அரசே முன்னின்று நடத்தும் அரசு பயங்கரவாதத்தை அமெரிக்கா மெச்சி உள்நாட்டு பாதுகாப்பு என அதை ஆதரித்து இஸ்ரேலுக்கு ஆதரவான தனது குரலை பிரகடணப்படுத்துகிறது ஒவ்வொரு முறையும். அதை அப்படியே அச்சு பிசகாமல் ஏற்று தன் அச்சுத்தொழிலையும், தொலைக்காட்சித் தொழிலையும் வளர்க்கும் ஊடகங்கள்.


சமீபத்தில் சிரியாவில் பஸார் அல் அசாத் என்னும் கொடிய மனித மிருகத்தின் அரசு அப்பாவி பொது மக்களின் மேல் ரசாயன விஷ குண்டுகளை போட்டு சுமார் 1300க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் என அந்த விஷக் காற்றை சுவாசித்த அனைவரையும் கொன்று குவித்தது. இதற்காக பச்சாதாபப்பட்டு அமெரிக்கா தனது போர்க்கப்பலை சிரியா எல்லையோர கடல் பகுதியில் பிரிட்டனின் உதவியுடன் எந்நேரமும் சிரியாவை தாக்க தயாராக உள்ளது. இது சிரியாவில் அரசுக்கு எதிராக போராடும் குழுக்கள் மற்றும் அங்குள்ள அப்பாவி பொது மக்கள் மேல் அனுதாபப்பட்டு செய்யப் போவதாக தெரியவில்லை. அதன் மூலம் எப்படியாவது ஈரானை நிலை குலையச் செய்யவே இந்த ஏற்பாடு.


தமிழகத்தில், இளவரசன் நல்லவனோ? கெட்டவனோ? அவன் காதலித்து கல்யாணம் செய்ததது சரியோ? தவறோ? ஆனால் அவன் இறந்த பின் அவனுடைய இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள அவனுடைய இனத்தின் தலைவரை ஏன் அரசு அனுமதிக்கவில்லை? சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி இருக்கலாம். சரி.

ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவருடைய ஊரில் பாஜகவின் தேசிய தலைவர்களில் ஒருவர் அத்வானி சேலம் வந்து ஆடிட்டர் ரமேஷுக்கு இரங்கல் தெரிவித்து பெரும் மாநாடே நடத்த அரசு எப்படி அனுமதித்தது? அங்கு சட்டம் ஒழுங்கு எல்லாம் லீவு போட்டு விட்டு வெக்கேஷனில் போய் விட்டதா?

கமலின் "விஸ்வரூபம்" படத்திற்கு ஆதரவாகவும், கருத்துச்சுதந்திரம் பற்றியும் ஓரணியில் திரண்டு கொக்கரித்த ஊடகங்களும், அதே கபோதிகளும் இன்று "மதராஸ் கபே" படம் ஒரு இனத்திற்கு எதிரானது என்று கூக்குரலிட்டு அதை தடை செய்தே தீர வேண்டும் என்று கூறி மரத்திற்கு மரம் நிறம் மாற்றும் பச்சோந்திகளையெல்லாம் ஓரம் கட்டி மரத்திலிருந்து அவைகளை வேடிக்கைபார்க்க வைத்து விட்டன. 

அன்று கட்சத்தீவை ஏகோபித்த முடிவில் தாரை வார்த்து இலங்கைக்கு கொடுத்து விட்டு இன்று அதை திரும்பி பெற்றுத்தீர வேண்டுமென சபதமெடுக்கின்றன அரசியல் கட்சிகள்.

ஊடகங்கள் சித்தரிப்பது போல் அல்லது உண்மையில் பாக்கிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடாக இருக்கலாம். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் அங்கு நடந்த குண்டு வெடிப்பில் நேரடி தொடர்பு என குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் பல வருடங்கள் வாடிக் கொண்டிருந்த சரப்ஜித் சிங்கை நேரில் சென்று பார்த்து வர அவர் குடும்பத்திற்கு பாக்கிஸ்தான் விசா கொடுத்தது. பிறகு சிறையில் ஏற்பட்ட சண்டையில் பலத்த காயமடைந்த அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு இறந்த பின் அவருடைய உடலை இறுதி ஈமச்சடங்குகளுக்காக குறைந்த பட்ச மனிதாபிமானத்தில் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது அந்த பயங்கரவாத நாடு. 

ஆனால் அஃப்சல் குரு என்ற இந்திய மாநிலங்களில் ஒன்றான கஷ்மீரத்து ஏழை இளைஞன் பாராளுமன்ற தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டான் (நேரடித் தொடர்பு இல்லை என்பது உலகறிந்த உண்மை) என்று காரணம் கூறி உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறிய "காவி பயங்கரவாதம்" பற்றிய சர்ச்சையில் அவரை பதவி நீக்கம் செய்யும் வரை ஓயமாட்டோம் என்று பாராளுமன்றத்தில் அமளி, துமளியில் ஈடு பட்ட பாஜகவின் வாயை அடைப்பதற்காக பிரணாப் முகர்ஜி மூலம் இரவோடு இரவாக அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு அவனுக்கு முன் எத்தனையோ பெரும் குற்றங்களில் ஈடுபட்டு மரண தண்டணை பெற்று (ராஜீவ் கொலையாளிகள் உட்பட) தண்டணைக்காக காத்திருப்போர் பட்டியலில் வரிசையில் நிற்க இவனை மட்டும் விடிகாலையிலேயே தூக்கிலிட்டு அவன் மனைவி, பிள்ளை குடும்பம் கடைசியில் அவனுடன் பேசி பிரியா விடைபெற வாய்ப்பு கேட்டும் அனுமதிக்காமல் அவனுடைய உயிரற்ற உடலை இறுதிச்சடங்கிற்கு அவனுடைய குடும்பத்திற்கு ஒப்படைக்காமல் திகார் சிறையிலேயே அவன் போற்றும் இஸ்லாம் மார்க்கம் கூறும் இறுதிச் சடங்கேதும் நடத்தாமல் புதைத்து நொடிப்பொழுதில் அமெரிக்காவின் நிகழ்வுகளை இந்தியாவில் காணும் இந்த தொழில் நுட்ப யுகத்தில் இரண்டு நாட்களுக்குப் பிறகு விரைவு தபால் மூலம் தூக்கு தண்டணை நிறைவேற்றம் பற்றி அவன் குடும்பத்திற்கு தபால் அனுப்பி தன்னுடைய (பாசிச மத துவேச பார்ப்பனக்) கடமையில் கண்ணாக இருந்தது நம் தாய் திருநாடாம் பாரத நாடு என்பதை நினைக்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது(!!!!???).

மாமியார் உடைத்தால் வெறும் மண் குடம்; மருமகள் உடைத்தால் அது பொன்குடமாகிப்போகும். உனக்கு வந்தால் ரத்தம் பிறருக்கு வந்தால் அது சும்மா தக்காளி சட்னியாகிப் போகும் நம் நாட்டில். 

வடக்கில் எல்லைப்படையில் ஒருவன் சண்டையில் இறந்தாலும் நாடே கொந்தளித்து ஊடகங்கள் தோறும் கூக்குரலிடுகின்றன. ஆனால் தினம் தினம் தமிழக மீனவனை கடலில் ஸ்டெம்பின்றி, பாலின்றி, பேட்டின்றி விக்கெட் வீழ்த்துவது போல் வீழ்த்துகிறான் இலங்கை கடற்படை என்னும் கடற் கொள்ளையர்கள். கேட்க நாதியில்லை. ஊடகங்களெல்லாம் உச்சி வெயிலில் மயங்கிக் கிடக்கின்றன. 

பிரதம நாற்காலிச் சண்டையில் (காங்கிரஸ்,பாஜக) நாட்டில் இன்னும் எத்தனை குண்டு வெடிப்புகள் நடக்குமோ? இராணுவ வீரர்களை இழப்போமோ? நீர் மூழ்கிக்கப்பல்கள் நெருப்பில் மூழ்குமோ? மதிய உணவில் விஷம் கலக்கப்படுமோ? எல்லை சீன, மியான்மர், பாக்கிஸ்தான், இலங்கை அட்டூழியங்களுக்கு எத்தனை உயிர், உடமைகள் பறிபோகுமோ? அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்படி மிதிபடுமோ? நாட்டில் அனைத்து பொருட்களின் விலைவாசியும் ராக்கெட் இன்றி எப்படி செவ்வாய்க்கிரகம் எட்டுமோ? சாதி, மதம் தாண்டிய பாலியல் பலாத்காரங்கள் டாஸ்மாக் கடைகள் போல் இன்னும் எப்படி பெருகுமோ? என இப்படி பட்டியல் நீளும் மாபாதகங்களை எண்ணி ஒவ்வொரு உண்மைக்குடிமகனும் நிச்சயம் அஞ்சாமல் அஞ்சி நிமிசம் கூட நகர்த்த முடியாது.

ஒரு இந்தியக்குடிமகனாக என் சொந்த கருத்து.

மு.செ.மு.நெய்னா முஹம்மது

19 Responses So Far:

adiraimansoor said...

மாஷா அல்லாஹ் நல்ல காட்டமான தக்குதல்

பீ தின்னி பஸங்களுக்கு ரோசம் மானம் சூடு சோறனை இருந்தால்த்தானே அதான் ஒன்னுமே இல்லையே.
ஊடகம் என்ற பெயரில் வேசித்தொழில் செய்யும் ஊடகக்காரர்கள்

KALAM SHAICK ABDUL KADER said...

\\கமலின் "விஸ்வரூபம்" படத்திற்கு ஆதரவாகவும், கருத்துச்சுதந்திரம் பற்றியும் ஓரணியில் திரண்டு கொக்கரித்த ஊடகங்களும், அதே கபோதிகளும் இன்று "மதராஸ் கபே" படம் ஒரு இனத்திற்கு எதிரானது என்று கூக்குரலிட்டு அதை தடை செய்தே தீர வேண்டும் என்று கூறி மரத்திற்கு மரம் நிறம் மாற்றும் பச்சோந்திகளையெல்லாம் ஓரம் கட்டி மரத்திலிருந்து அவைகளை வேடிக்கைபார்க்க வைத்து விட்டன. \\

எல்லாக் கட்சியினரும் ஒட்டு மொத்தமாக முஸ்லிம்களை ஓரங்கட்டி விட வேண்டும் என்று துடித்துக் கொண்டே ஓட்டு மட்டும் மொத்தமாக விழ வேண்டும் என்று நடிப்பதில் கில்லாடிகள்!

313 பத்ரு சஹாபக்கட்குக் கிடைத்த வெற்றியை நாம் ஏன் பெறவில்லை? அவர்கட்கு உதவிய அல்லாஹ் நமக்கு உதவவில்லையா? அன்றும், இன்றும் , என்றும் ஒரே அல்லாஹ் தான்; ஒரே குர்- ஆன் தான்; பின்னர் ஏன் இந்தப் பின்னடைவு?

குற்றம் நம்மிடம்; குறைகள் நம் ஈமானின் உறுதியில்;மார்க்கம் போதிக்கக் கூட்டம் கூட்டுபவர்களும், இயக்கங்களை வைத்து இளைஞர்களை இயக்கிக் கொண்டிருப்பவர்களும் “ஒன்றுபடவில்லையே” அது ஏன்? ஏன்?

ஈகோ என்னும் ஷைத்தானியம் கல்புக்குள் இருந்து விலகாவிட்டால், அத்தனை அழிவுகளும் நமக்குத்தான்! சஹாபாக்கள் (ரலி-அன்ஹூம்) அனைவரிடமும் இக்லாஸ் என்னும் உளத்தூய்மை இருந்தது; ஒற்றுமையுடன் வென்றார்கள்;அப்படியே நாமும் வெல்லுவோம் என்று விட்டுச் சென்றார்கள்; ஆனால், நடந்தது என்ன? நடப்பது என்ன? அந்த இக்லாஸ் என்னும் உளத்தூயமை இல்லை; வெற்றியும் இல்லை; அடுத்தவனை அண்டியிருக்கின்றோம்; அல்லாஹ்வை நம்பி இருக்கவில்லை; பின்னர் எப்படி வெல்லுவோம்?

உங்களின் அருமையான ஆக்கத்தைப் படித்ததும் என் உள்ளக் குமுறல்களைக் கொட்டி விட்டேன், அன்புத் தம்பி முசெமு நெய்நா!

KALAM SHAICK ABDUL KADER said...

அமெரிக்காவும், ரஷ்யாவும் மோதிக் கொள்ளுவதாகத் திட்டமிட்டுக் கொண்டு, முஸ்;லிம்களையும் அப்பாவிகளையும் ஒழிக்கும் கட்டம் நெருங்கி விட்டதை நேற்று உலா வந்த செய்திகளைப் படித்தது முதல் என் கண்கள் குளமாகி விட்டன!

அன்பு நண்பர் ஆளூர் ஷா நவாஸ் அவர்கள் முகநூலில் ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தார் இவ்வாறு:

/ அமெரிக்காவும் இரஷ்யாவும் வல்லரசுகள் என்ற முறையில் நேருக்கு நேர் மோதிக் கொள்ள மாட்டீர்களா? நீங்கள் மோதிக் கொள்வதற்கு பாய்மார்களை ஏன் கொல்ல வேண்டும்?\

அவ்வரிகளைப் படித்தால், உலக அரசியலும், உள்நாட்டு அரசியலும் ஒரே போக்கில்- முஸ்லிகளை அழிப்பது என்ற ஒரே நோக்கில் பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை உணரலாம்!

KALAM SHAICK ABDUL KADER said...

உலக அரசியலில் சுன்னி, ஷியா பிரிவுகள் மற்றும் குழுக்களைத் தூண்டிவிட்டுக் குளிர்காய அமெரிக்க, பிரிட்டன், இஸ்ரேல் முஸ்லிகளை முஸ்லிம்களை வைத்தே கொல்லுகின்றனர்!

உள்நாட்டு அரசியலில் இயக்கங்கள் என்னும் மயக்கங்களில் ஒற்றுமையைக் கைவிட்டு விட்டதை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு பகடை ஆடுகின்றனர் அரசியல்வியாதிகள்; ஆளுக்கொருவராகப் பிரித்துக் கொண்டு, சமுதாயத்தை கீறிப் போட்டும் - கூறு போட்டும் கடையில் நாறிப் போக வைத்து நாதியற்று அரசிய அனாதைகளாக்கி விட்டனர்!

இவற்றிற்கு உலகத்திலும் உள்நாட்டிலும் ஊடகம் என்னும் போதை ஊட்டப்படும் பாதையில் மக்களும் சுய அறிவின்றி முஸ்லிம்களைத் தவறாகவே விமர்சிக்கின்றனர். எவ்வளது தூய்மையான மார்க்கம்; எவ்வளவு வாய்மையான மார்க்கம் இப்படித் தலைகுனிய வைத்து விட்டதற்குத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அனைவரும் அல்லாஹ்விடம் குற்றவாளிக் கூண்டில் நிற்கின்றனர் என்பது மட்டும் உண்மையிலும் உண்மையாகும்.


ஊடகம் பற்றி ஓர் அருமையான கவிதையை எனக்கு என் அன்பு நண்பர் முதுவை ஹிதாயத் அனுப்பிய்ருக்கின்றார்; இதோ பதிந்துள்ளேன்; பாருங்கள்:

\\ஊடகம் — கவிமகன் காதர் (எ) மு.ச. அப்துல் காதர்
Posted by News on August 27, 2013 in இலக்கியம், கவிதைகள் (All) | 0 Comment

ஊடகம் !

நிழல்களை உரசுவதல்ல …

நிஜங்களை ஊடுருவிச் செல்வது !



எத்தனை முகங்கள் உனக்கு?

எழுத்தென, ஒலியென, ஒளியென,

காற்றில் கலக்கும் அலையென,

கல்லோ மண்ணோ எதுவுமில்லாமல்

கணிணியில் இணைக்கும் தளமென

இன்னும் எத்தனை முகங்கள் உனக்கு?



இருபக்கம் கூர்கொண்ட

இரும்புக்கத்தி !

இதயத்தைத் திறக்கவும்,பிளக்கவும்



இமைக்கின்ற பொழுதுக்குள்

இமயத்தை தகர்த்து விடும்

காகிதத்தில் செய்திட்ட

கனரக ஆயுதங்கள் !

இருந்தும் ஏன்

நடிகைகளின் கதைபேசும்

சதை வியாபாரியாக

அக்கிரமம் சமைக்கின்ற

அமெரிக்க அடிமையாக,

இஸ்ரேலின் காலடியில்

இழிநிலைக் குப்பையாக

இரைந்து கிடக்கின்றாய் !

சிச்சீ இறந்து கிடக்கின்றாய் !



ஏய் ஊடகதர்மமே ! உந்தன்

மற்றொரு பேரென்ன பாபரி மஸ்ஜிதா?

உன்னை இடித்து தகர்த்திட இலட்சம்

பேர்

ஆனால் கட்டி எழுப்பிட எவருமில்லை !



பெற்றவரே ஆனாலும்

பிறழாத நீதிதர

பகர்ந்திட்ட பெருமானார்

பொன்மொழிகள் புரிந்திட்டால்

அதுபோதும் ஊடகமே

உயிரோடு நீ வாழ !



நீதியின் வேர்கள் காயாதிருக்க

நெஞ்சுரத்தோடு செந்நீர் பாய்ச்சும்

நல்லசில ஊடகங்கள் மீது

நம்பிக்கை வைப்போம் ! அவற்றை

நம்பிக்கை வைப்போம் !

( நன்றி : மணிச்சுடர் ரமளான் சிறப்பு மலர் 2011 )\\


நன்றி; முதுவை ஹிதாயத்\ முதுகுளத்தூர் டைம்ஸ்

http://mudukulathur.com/?p=19827

KALAM SHAICK ABDUL KADER said...

ஊடகம் ப|ற்றி அடியேன் எழுதிய பா அடிகள்:

ஊடகம்

ஊடகம் பேசிடும் தன்மை

...ஊனமாய்ப் போகுதே உண்மை

நாடகம் போடுதல் கண்டு

...நாணமே நாணிடும் ஈண்டு

பாடமும் பாடலும் நம்மை

பார்த்திடும் தோரனை வெம்மை

...வேடமே போடுதல் என்றும்

வேகமாய்த் தீர்த்திட நின்று



தீவிர வாதியாய்க் காட்டி

...தீர்த்திட ஏனிதில் போட்டி?

மேவிடும் வேற்றுமை யாரால்?

...மேதினி கூறிட வாராய்!

பாவிகள் காட்டிடும் வஞ்சம்

...பாலினு லூற்றிடும் நஞ்சாம்

தாவிடும் ஓரினம் நம்மை

....தாழ்ந்திடக் கூவுதல் உண்மை


ஆயிரம் கைகளைக் கொண்டு

....ஆதவ(னைச்) சாடுதல் போன்று

ஆயிரம் பொய்களைக் கூட்டி

....ஆர்ப்பரி(க்கும்) ஊடகம் காட்டி

வாயினா லூதிடும் காற்றால்

....வாய்மையும் நீங்கிட மாட்டா

ஆயினும், வேற்றுமைத் தூண்டி

.....ஆணவம் தோன்றிட வேண்டா.



நாடுவோம் தாயக மென்றும்

.....நானிலம் போற்றிட வேண்டும்

சாடுவோம் ஊடகம் செய்யும்

.....சூழ்ச்சிகள் யாவுமே பொய்யாம்

கூடுவோம் நம்பலம் காட்ட

கூனலை நிமிர்த்திட வேண்டி

தேடுவோம் ஊடக வெற்றி

தேடினால் கிடைத்திடும் பெற்றி



http://kalaamkathir.blogspot.ae/2011/06/blog-post.html

குறிப்பு: இப்பாடல் (செவ்வாய், 7 ஜூன், 2011 அன்று) என் வலைத்தளத்தில் பதிந்தேன்; இப்பாடலை “சன் டிவி”க்கு எடுத்துச் சென்று என்னைப் பேட்டி எடுக்க மிகவும் அக்கறையுடன் பெரிதும் பாடுபட்டார்கள், என் அன்பு நண்பர் முதுவை ஹிதாயத் (ஊடக பொறுப்பாளர், ஈமான் டைம்ஸ், துபை). எதிர்பாரதவிதமாக, அவர்களின் முயற்சியும் வென்று என்னை சண்டிவி நிலையத்தார் அலைபேசியில் அழைத்த வேளையில் யான் விடுப்புக் கழிந்து திருச்சி விமானநிலையத்திலிருந்து அபுதபிக்குப் போக “லாஞ்சில்” காத்திருந்தத் தருணம்; வாய்ப்புக் கை நழுவி விட்டது. இன்ஷா அல்லாஹ் மீண்டும் வாய்ப்பு வந்தால் ஊடகம் நம்மை எப்படி எல்லாம் ஊனப்படுத்துகின்றன எனப்தைப் பேட்டி மூலம் ஊட்கத்தார்க்கே சொல்லுவேன்.

Shameed said...

இப்போ ஒரு நாடகம் போடுறாங்களே தீவிரவாதிகள் கடல் மார்க்கமா வந்து தமிழகத்தை தாக்க போவதாக அதற்க்கு( கையில் லத்தி கம்புடன்) போலிஸ் குவிப்பு என்று மீடியாக்கள் கதறுதே போலீஸ் என்ன குவிப்பதற்கு "குப்பையா" அல்லது "கூலமா" லத்தி கம்புடன் மீடியாவிற்கு போஸ் கொடுக்கும் போலீஸ் தீவிர வாதிகளுக்கு முன் தாக்கு பிடிக்க முடியுமா ? அல்லது போலீஸ் ட்ரைனிங்கில் ஓடி பழகியதை தீவிரவாதிகளை பார்த்ததும் பயன்படுத்திக்கொள்வார்களோ!! எல்லாம் மீடியாகளின் டுபாக்கூர் வேலைகள்தான்

KALAM SHAICK ABDUL KADER said...

எப்பொழுதெல்லாம் தேர்தல் நெருங்குமோ அபொழுதெல்லாம், விலைவாசி ஏற்றம், பணத்தின் மதிப்பு வீழ்ச்சிப் பற்றி எல்லாம் மக்களைச் சிந்திக்க விடாமல் இப்படிப்பட்ட நாடகம் நடத்துவதுதான் ஊடகம்!

Unknown said...

//313 பத்ரு சஹாபக்கட்குக் கிடைத்த வெற்றியை நாம் ஏன் பெறவில்லை? அவர்கட்கு உதவிய அல்லாஹ் நமக்கு உதவவில்லையா? அன்றும், இன்றும் , என்றும் ஒரே அல்லாஹ் தான்; ஒரே குர்- ஆன் தான்; பின்னர் ஏன் இந்தப் பின்னடைவு?//

அன்பு நண்பர் அபுல் கலாம் அவர்களுக்கு,

கேள்வி கேட்டு தாங்களே பதிலும் சொல்லிவிட்டபடியால் அதிகமா சொல்லத்தேவை இல்லை.

இருந்தாலும் சொல்கின்றேன். அன்றிருந்த சஹாபாக்களின் ஈமானின் தரம், உள்ளச்சத்தின் வெளிப்பாடு, இனி கியாம நாள் வரும் வரையிலும் யாருக்கும் வராது. அந்த அற்புத வெற்றிகளை பெறுவதும் முடியாது. அவர்கள் பயணம் செய்யும் குதிரையின் காலிலிருந்து கிளம்பும் தூசிக்கு கூட நாம் சமமாக மாட்டோம்.

அப்படி இருக்கையில் , அன்றிருந்த அல்லாஹ் இன்றிருந்தாலும் அன்றுள்ள , ஈமான், உளத்தூய்மை, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல், சகோதர மனப்பான்மை, உதவி ஒத்தாசை ,பிறர் கஷ்டத்தை தன் கஷ்டம்போல் நினைத்தல் என்ற எத்தனையோ மாணிக்க குணங்கள் மனதில் எங்கும் நிறைந்திருந்ததால் அந்த சொற்ப நபர்களுக்கு விஸ்வரூப வெற்றியைக்கொடுத்தான் அல்லாஹ்.

அந்த ஈமான் வரும் வரை அதைப்போன்ற அற்ப்புத வெற்றியும் நம்மை நெருங்குவது அரிதே.

அபு ஆசிப்.

KALAM SHAICK ABDUL KADER said...

விலைவாசி பற்றி ஒருவர் எழுதியிருக்கின்றார்:

NEED=ONIION= 100 RS

COMFORT= PETROL= 100 RS

LUXURY= ALCOHOL DRINKS= 100 RS

பொருளாதாரப் பாடம் படிக்கும் எங்கட்குச் சொல்லிக் கொடுக்கப்ட்ட பொருளாதாரத்தின் அடிப்படையான இந்த மூன்றும் வேறு வேறான நிலைகளாய் (படிகளாய்)த் தான் இருக்கும் என்று பாடம் படித்தோம். ஆனால், ஹார்டுவேர்டு பொருளாதார மேதையின் நிதிக் கணக்கில் இந்த மூவகைகளும் ஒன்றே என்றுச் சொல்லாமல் சொல்லி விட்டதற்காகவா ஹார்டுவேர்டு மேதையாக இருக்க வேண்டும். பொருளாதாரம் படிக்க பத்தாம் வகுப்பு அல்லது ப்ளஸ் டூ போதும் ;ஆனால், பொருளாதாரத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க என்ன படிக்க வேண்டும்?

“முன்னாள் நிதி அமைச்சர் தான் இன்னாள் பணவீழ்ச்சிக்குக் காரணம்” இது பசி போட்ட பிசி விமர்சனம்! ஒருவரை ஒருவர்க் குற்றம் சுமத்தி விட்டால் போதுமா? அல்லது சுவிஸ் வங்கியில் உள்ள கள்ளப் பணத்தைக் கொண்டு வந்து விட்டால் போதுமா?

உள்ளதை மறைத்து இல்லாததைப் பரப்புதலுக்கு மறுபெயர்தான்
ஊடகம்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மேலே குறிப்பிட்டவை ஒரு குடிமகனின் கருத்தல்ல, மனித நேயமுள்ள எல்லா குடிமகன்களின் கருத்தாகத் தான் இருக்கும்.

ஒன்னு மிஸ்ஸிங்
கட்சியில், இயக்கத்தில் புகழுக்குரியவர் இறந்துவிட்டால் யூகங்களோடு உடனுக்குடன் அவர்களின் வரலாறுகளை வெளியிடும் ஊனமுற்ற ஊடகங்கள் மர்ஹூம் அப்துல்லா இஸ்லாத்தில் இணந்தது, ஏன் எப்படி என எதையும் வெளியிடாமல் அதிலும் சுனக்கமாக பெரியார் தாசன் என்று பெயரிட்டு ஒரு பரபரப்பு இல்லாமல் சாதாரண செய்தியாகவே அவர் இஸ்லாமியர் என்றே காட்டிக் கொள்ளாமல் பெரும்பாலான மனித, மத நேயமற்ற பத்திரிக்கைகள் வெளியிட்டன.

Adirai pasanga😎 said...

//ஒரு இந்தியக்குடிமகனாக என் சொந்த கருத்து.//

தம்பி இந்த கருத்தை நான் ஒட்டு மொத்த நம் சமுதாயத்தின் உள்ளார்த்தமான கருத்தாகத்தான் நான் பார்க்கிறேன்.

தங்களின் இந்த பதிவினையும் நம் சகோதரர்களின் பின்னூட்டங்களையும் நாம் அனைவரும் அசைபோட்டு அதற்கு தீர்வு காணும் நிலையில் தற்போது இருக்கிறோம்.

முடிவற்ற ஓர் மறுமை வாழ்வு அது சொர்க்கம் அல்லது நரகம் இதில் ஏதேனும் ஒன்றாகத்தான் இருக்கும், ஆனால் நமது சமுதாயம் சத்திய வழிகாட்டல்களை அல்-குர் ஆன் ஹதீஸ் ஆகியவற்றில் முரண்பட்டும் செயல்படாமலும் இருப்பதால் நமக்கிடையே உள்ள பலகீனம் நம் வாழ்வின் சோதனையாகிவிட்டது. உலகம் முழுவதும் இதே நிலைதான் எதிரொளிக்கிறது.

ஒட்டு மொத்த சமுதாயமும் விழிப்படைந்து செயல்படத் தாமதமானால் விளைவு மேலும் இதுபோல் தொடர்ந்து நம் நிலை இதுபோல் புலம்பலாகவே இருக்குமோ என அஞ்சத்தோன்றுகிறது.

யா அல்லாஹ் நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்.

Adirai pasanga😎 said...

அல்லாஹ்வின் மீதுள்ள வலிமையான ஈமானின் காரணத்தினால் மிகக்குறைவான எண்ணிக்கையில் இருந்த சஹாபாக்களை அதிகமான அளவில் உள்ள எதிரிகளிடமிருந்து அல்லாஹ்வே காப்பாற்றினான்.

இன்றோ பலகீனமான ஈமானின் காரணத்தினால் அதிகமான எண்ணிக்கையில் இஸ்லாமிய சமுதாயம் உலகம் முழுவதிலும் பரவி இருந்தாலும் குறைந்த அளவில் உள்ள எதிரிகளால் பல சோதனைகளுக்குள்ளாக்கபடுகின்றோம் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

அல்லாஹ் பாதுகாப்பானாகவும்.

KALAM SHAICK ABDUL KADER said...

\\இன்றோ பலகீனமான ஈமானின் காரணத்தினால் அதிகமான எண்ணிக்கையில் இஸ்லாமிய சமுதாயம் உலகம் முழுவதிலும் பரவி இருந்தாலும் குறைந்த அளவில் உள்ள எதிரிகளால் பல சோதனைகளுக்குள்ளாக்கபடுகின்றோம் என்பது நிதர்சனமான உண்மையாகும்.\\

இதே கருத்தை இதே சென்ற வார இரவில் அபுதபியில் நடைபெற்ற பயானில் மவுலவி அப்துற்றஹ்மான் பாகவி (”ரியாலுஸ்ஸாலிஹின் “ நூல் ஆசிரியர்) அவர்கள் சொன்னார்கள்; உண்மையிலும் உண்மை.

மேலும் சொன்னார்கள்:

‘’படைத்தவனுக்கு அஞ்சாமல் படைப்பினங்கட்கு அஞ்சினால், அப்படைப்பினங்கள் நம்மை பயமுறுத்திக் கொண்டு இருக்கும்; பின்னர் அப்படைப்பினங்கட்கு இணங்கி வாழ வேண்டிய ஓர் அவலத்தை உண்டு பண்ணும்; அதனால், நாம் அல்லாஹ்வைக் கைவிட்டு விட்டால்; அல்லாஹ்வும் நம்மை கைவிட்டு விடுவான்”

“உலகத்தில் சிறந்த மேதைகள்/ அறிவாளிகள் யார்? “யார் தன்னை முழுமையாக அறிகின்றானோ அவனே அறிவாளி”


Ebrahim Ansari said...

தம்பி நெய்னாவின் எழுத்துச் சாட்டை ஒரு சுழற்று சுழற்றி இருக்கிறது.

இதை நமது பல்வேறு தளங்களிலும் பதிய வேண்டும். ஆழ்ந்த சிந்தனை. அற்புத ஒப்பீட்டு கருத்துக்கள்.





ZAKIR HUSSAIN said...

இது எல்லா இந்தியக்குடிமகனுடைய கருத்து

sabeer.abushahruk said...

கருத்து என்று சொல்லி மட்டும் நிற்காமல் இதை ஓர் இந்தியக் குடிமகனின் குற்றச்சாட்டு என்றே கொள்ளலாம்

அப்துல்மாலிக் said...

எல்லாமே திட்டமிடப்பட்ட (திட்டமிட்ட) நாடங்கள் அரகேற்றம் நடைபெருகிறது என்று தெரிந்தும் கையாலகதவர்களாய் நாம்..

தீவிரவாதிகள் இப்படித்தான் உருவாக்க(உருவாகிறார்கள்)ப்படுகிறார்கள்

சாமானியர்களான நாம் இப்படி வார்த்தைகளால் எழுதி மட்டுமே வெளிப்படுத்த முடியுது

KALAM SHAICK ABDUL KADER said...

இன்று ஒரு கவிதை வாசித்தேன். அருமையான கவிதை. எளிமையான வரிகளில் எத்தனை வலிமையான உணர்வுகள். (நன்றி வினவு)

*
வரைகலையில் ஒரு பாடம் - நிசார் கப்பானி
*
வண்ணக் கரைசல் பெட்டியை
எடுத்து வந்த என் மகன்
ஒரு பறவை வரையச் சொன்னான்.
சாம்பல் நிறத்தில் முக்கிய தூரிகையால்
பூட்டும், கம்பிகளுமாய்
ஒரு கூண்டினை வரைந்தேன்.
ஆச்சரியம் மின்னுகிறது
அவன் விழிகளில்.

“… ஆனால் அப்பா, இது சிறையாயிற்றே,
பறவையை வரைவது எப்படியென்று
உங்களுக்கு தெரியாதா?”
நான் சொன்னேன்:
“மகனே, என்னை மன்னித்து விடு.
பறவைகளின் உருவங்களை
நான்
சிந்தனையில் தொலைத்து விட்டிருக்கிறேன்”.

பிறகு
வரைகலை புத்தகத்தை எடுத்து வைத்து
ஒரு கோதுமைக் கதிரையாவது
தீட்டு என்றான்.
சரியென்று நானும்
கையில் ஏந்திய பேனாவால்
ஒரு துப்பாக்கியை தீட்டினேன்.
பொறுமையிழந்தவன்
என் அறியாமையை அதட்டுகிறான்,
“கோதுமை கதிருக்கும், துப்பாக்கிக்கும்
வித்தியாசம் தெரியாதா அப்பா உங்களுக்கு?”

நான் அவனிடம்
பொறுமையாக புரிய வைத்தேன்,
“மகனே,
ஒரு காலத்தில் கோதுமை கதிர்கள்
நான் அறியாததல்ல,
உணவுக் கவளத்தின்
வடிவமும் அறியாதவனல்ல,
நிச்சயமாய்
மலர்களின் வடிவும் தெரிந்தவன்தான்.

ஆனால்
உறைந்து இறுகிய
இந்தக் காலத்தில்
காட்டு மரங்கள்
ஆயுதப் படையினருடன்
அணி சேர்ந்திருக்கின்றன.
மலர்கள்
குதூகலமற்ற சீருடைகளை வரிக்கின்றன.
ஆயுதம் தரித்த கோதுமை கதிர்கள்,
ஆயுதம் தூக்கிய பறவைகள்,
ஆயுதம் எடுத்த கலாச்சாரம்,
ஆயுதத்தில் கரைந்த மதம்,…

இக்காலப் பெருவெளியில்
ஒரு சிறிய துப்பாக்கி
ஒளிந்திராத
ஒரு உணவுப் பொட்டலத்தைக் கூட
உன்னால்
பார்க்க முடியாது.
முகத்தை கீறிப் பார்க்கும்
முட்களை தவிர்த்து விட்டு
வயல்களில் பூத்துக் கிடக்கும்
மலர் ஒன்றை
உன்னால் பறிக்க முடியாது.
விரல்களுக்கிடையே
வெடித்துச் சிதறாத
ஒரு புத்தகத்தையேனும்
உன்னால்
வாங்க முடியாது”

பிறகு என் மகன்
படுக்கையின் விளிம்பில் அமர்ந்து கொண்டு
ஒரு கவிதையேனும் சொல் என்றான்.
என் விழிகளிலிருந்து
ஒரு சொட்டு கண்ணீர்
தலையணையில் விழுகிறது.
அவனோ
அதை நாக்கல் தீண்டி விட்டு,
“அப்பா, இது கவிதையல்ல,கண்ணீர்!”
வியப்புடன் கூவினான்.

நான் அவனிடம்
“மகனே!
நீ வளர்ந்த பிறகு,
அரேபியக் கவிதைகளில்
அலைபாயும் போது
சொற்களும் கண்ணீரும்
ஒட்டிப் பிறந்தவை என்று
கண்டு கொள்வாய்.
அரேபிய கவிதை என்பது
எழுதும் விரல்கள்
சிந்தும் கண்ணீறன்றி வேறில்லை
என்று அறிந்து கொள்வாய்”

இறுதியாய் என் மகன்
கூர்மையான பேனாக்களையும்,
வண்ணமயமான பென்சில்களையும்
போட்டுவிட்டு
நமது தாய்நாட்டை வரை என்றான்.

தூரிகையைத் தூக்கிய
என் கை நடுங்குகிறது
நான் விசும்பியபடி வீழ்கிறேன்.

- நிசார் கப்பானி

தமிழாக்கம்: செழியன்

KALAM SHAICK ABDUL KADER said...

நிசார் கப்பானிபின் குறிப்பு: நிசார் கப்பானி, சிரியாவின் டமாஸ்கசில் 1923-ம் ஆண்டு மார்ச் 21 அன்று பிறந்தவர். முழு நேர எழுத்தாளர் ஆவதற்கு முன்பு சிரிய வெளியுறவுத் துறையில் பணி புரிந்தவர். அவரது படைப்புகளில் 24 கவிதைத் தொகுப்புகளும், அல் ஹயத் செய்தித் தாளில் எழுதிய கட்டுரைகளும் அடங்கும். 1998-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி லண்டனில் தனது 75-வது வயதில் காலமானார்.

ஆங்கில மூலம் :

My son places his paint box in front of me
and asks me to draw a bird for him.
Into the colour gray I dip the brush
and draw a square with locks and bars.
Astonishment fills his eyes:
“… But this is a prison, Father,
Don’t you know how to draw a bird?”
And I tell him: “Son, forgive me.
I’ve forgotten the shapes of birds.”

My son puts the drawing book in front of me
and asks me to draw a wheat-stalk.
I hold the pen
and draw a gun.
My son mocks my ignorance,
demanding,
“Don’t you know, Father, the difference between a
wheat-stalk and a gun?”

I tell him, “Son,
once I used to know the shapes of wheat-stalks
the shape of the loaf
the shape of the rose
But in this hardened time
the trees of the forest have joined
the militia men
and the rose wears dull fatigues
In this time of armed wheat-stalks
armed birds
armed culture
and armed religion

you can’t buy a loaf
without finding a gun inside
you can’t pluck a rose in the field
without its raising its thorns in your face
you can’t buy a book
that doesn’t explode between your fingers.”

My son sits at the edge of my bed
and asks me to recite a poem,
A tear falls from my eyes onto the pillow.
My son licks it up, astonished, saying:
“But this is a tear, father, not a poem!”
And I tell him:
“When you grow up, my son,
and read the diwan of Arabic poetry
you’ll discover that the word and the tear are twins
and the Arabic poem
is no more than a tear wept by writing fingers.”

My son lays down his pens, his crayon box in
front of me
and asks me to draw a homeland for him.
The brush trembles in my hands
and I sink, weeping.


முகநூலில் எனக்கு அனுப்பப்பட்டது

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு