Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

விலை! 54

அதிரைநிருபர் பதிப்பகம் | August 15, 2013 | , , ,


ஊருக்கு போக
யாருக்கு இல்லை ஆசை
வாழ்க்கை விற்று
சேர்த்தென்ன செய்ய காசை

திர்ஹத்திற்கும் தினாருக்கும்
தினம் படும் இம்சை
ரியாலுக்கும் டாலருக்கும்
இரவுபகல் பாரா ஆசை

துள்ளியோடும் வசந்தம்
திரும்ப வராதென்று அறிந்தும்
தொலைந்து போகிறோம்
திரும்பத் திரும்ப!

எந்நாடும் வேண்டாமென்று
வீடு திரும்பியும்
கோடியில் வீடு காண
நாடி மீண்டும் அடைக்கலம்

தங்கமெல்லாம் கொட்டிக் கிடக்கவுமில்லை
அங்கே காலம் கடத்துவது எளிதுமில்லை
காசு ஈட்டுவது கடினம்
காலம் தள்ளுவதோ கொடுமை

சொந்த மண்ணின் சுகங்களுடன்
சொந்த உறவின் பாசங்களுடன்
சோறு உண்பவன் எவனோ
சொல்லத்தக்க
இன்பம் காண்பவன் அவனே

பவுன்டை காண மண்டை காய்ந்து
டாலரை தேடி கண்டம் பாய்ந்து
தொலைந்து போவது வருடமட்டுமல்ல
கலை இழந்திடும் உடல் வளமும் கூட!

ஊருக்குப் பேர் போன
நா ஊறும்
நோம்புக் கஞ்சி கூட
நான் சமைக்க
களனி போலாகுதே
அவள் கை படா வாழ்க்கையில்!

இவ்வாழ்க்கையின் சில வேளை
இனிய பெருநாள் நன்னாள் கூட
முடிவு அறியா  அரிய வேளை
வான் வெளியிலும் கொண்டாடும் நிலை

கடல் கண்ட அனுபவத்தில்
கண்டதோ உப்பில்லா பத்தியம்போல்
இஞ்சியுமில்லா மஞ்சளுமில்லா
கண்டனத்துடன்  துண்டமாய்
"மந்தி" யே கண்டோம்

கடந்து செல்லும் இளமையும்
படர்ந்து வரும் வெண்நரையும்
காலம் விதித்த
விலை!

M.H.ஜஹபர் சாதிக்

54 Responses So Far:

sabeer.abushahruk said...

அருமை அருமை!

என்னதான் கேலியும் கிண்டலும் ஆங்காங்கே தூவி மறைக்க முயன்றாலும் உட்சோகம் நிரம்பி வழியவழிய பிழிந்தெடுத்த கவிதை.

திர்ஹத்திற்கும் ரியாலுக்கும் டாலருக்மும் பவுன்ட்ஸுக்கும் எந்த எக்ஸேஞ்சாலும் கொடுக்க முடியாத விலை நாம் கொடுத்து வருவது.

அதிகமதிகம் எழுதுங்கள் எம் ஹெச் ஜே!

வாழ்த்துகள்!

ஒருவழியாக ட்டீ வந்தே விட்டது, கமகமவென மணமணக்க!

Unknown said...

அயல் நட்டு கரன்சியை ஆர்வத்தோடு தேடி , இளமை என்னும் செல்வத்தை
விளையாகக்கொடுப்பதில் அர்த்தமில்லை என்ற ஒரு ஏக்கப்பெரு மூச்சு தெரிகின்றது.

வளைய்யல் கையில் தரும் நோன்பு கஞ்சிக்கு ஈடாகுமா இந்த டாலரும் , ஈரோவும்.

இளமை தொலையும் ஏக்கம் கவிதையில் பளிச்சென்று தெரிகின்றது.


அபு ஆசிப்.

adiraimansoor said...

அஸ்ஸலாமு அலைக்கும்
உன் கவிகண்டு கல் ஆகிப்போனேன்
உனக்குள்ளேயும் கவி நயம் காண்பதே எனக்கு முதல் அனுபவம்.

நண்பன் சபீர் கூற்றூக்கொப்ப
///என்னதான் கேலியும் கிண்டலும் ஆங்காங்கே தூவி மறைக்க முயன்றாலும் உட்சோகம் நிரம்பி வழியவழிய பிழிந்தெடுத்த கவிதை.///

பவுன்டும், டாலரும், ரியாலும், திர்ஹமும் நம் வாழ்க்கையில் விளையாடிவிட்டதை மிகவும் அருமையாக நயம்பட உறைத்திருக்கின்றாய் வாழ்த்துக்கள்

adiraimansoor said...

///துள்ளியோடும் வசந்தம்
திரும்ப வராதென்று அறிந்தும்
தொலைந்து போகிறோம்
திரும்பத் திரும்ப!///

இதையும் ஒரு தற்கொலை என்று சொல்லலாம் நமது உணர்வையும் இளமையையும் நாமாக கொஞ்ச கொஞ்சமாக சாவடிப்பதை என்ன வென்பது கஜினி முஹம்மதின் படையெடுப்ப மிஞ்சியது நமது படையெடுப்பு.

கொஞச நாட்களாவது ஊரில் இருக்க என்னம் வருகின்றதா
டாலரும், பவுன்டும், ரியாலும், திர்ஹமும் நமக்கு மை வைத்துவிட்டன அதனால்தான் நம் வாழ்க்கையை தொலைத்துவிட்டு இதற்கு பின்னால் அலைகின்றோம்

adiraimansoor said...

///ஊருக்குப் பேர் போன
நா ஊறும்
நோம்புக் கஞ்சி கூட
நான் சமைக்க
களனி போலாகுதே
அவள் கை படா வாழ்க்கையில்!///

ஜாபர் சாதிக்கின் ஏக்கமும் பெருமூச்சும் இந்த வரிகளில் விளயாடுகின்றன
கிளம்புங்கள் அதிரைக்கு.
அவள் கைபடாத வாழ்க்கையை கண்டிப்பாக பவுன்டு என்றும் தந்திடாது

ZAEISA said...

//சொந்த மண்ணின் சுகங்களுடன்
சொந்த உறவின் பாசங்களுடன்
சோறு உண்பவன் எவனோ
சொல்லத்தக்க
இன்பம் காண்பவன் அவனே//
100க்கு 100 உண்மை....கடல் கடந்த மனங்களின் ஏக்கம் கவிதையானது.வாழ்த்துக்கள்.
அதுசரி...கவிதை தெரிந்திருந்தால் கஞ்சி காச்ச தெரியாதென்று நிணைக்கிறேன்
உண்மையா...?

adiraimansoor said...

///சொந்த மண்ணின் சுகங்களுடன்
சொந்த உறவின் பாசங்களுடன்
சோறு உண்பவன் எவனோ
சொல்லத்தக்க
இன்பம் காண்பவன் அவனே///

புரிகின்றதா ஜப்பான் யென்னும் லன்டன் டாலரும் தராத இன்பம்
இப்போவாது தெரியுதா ஊரிலே நிரையபேர் வேட்டி பழுத்தும் சும்மா ஊர்சுற்றுவது எதற்கென்று?

நம்ம கொஞ்சம் நாட்கள் ஊரில் இப்படி தங்கிவிடக்குடாது என்பதில் அதற்கான கோட் வேர்டுகளை பயன்படுத்தி (அப்பமா? தோசையா?, வேட்டி பழுத்திடிச்சே கொமரு வளர்ந்துகிட்டே இருக்கே) போன்ற வார்த்டைகளால் நம்மை ஊரைவிட்டு துரத்த ரொம்ப அக்கரையுடன் செயல்படுவார்கள்.

நாம் நமது வாழ்க்கையை தொலைத்ததற்கு இவர்களும் ஒரு காரணம்
இது போன்றவர்களை அண்டால் கொஞம் உஷாராக இருங்கள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ZAEISA (காக்கா) சொன்னது....

///அதுசரி...கவிதை தெரிந்திருந்தால் கஞ்சி காச்ச தெரியாதென்று நிணைக்கிறேன்
உண்மையா...? //


ஹா ஹா !

கஞ்சியானாலும் அதனை
கொஞ்சிப் பார்ப்பார்வனும்...
கவிஞனே !

எல்லோரும் கஞ்சி காய்ச்சுவிட்டால், ருசித்து ரசனை பாராட்ட கவிஞனும் வேண்டுமே ! :)

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

எம் அயல்நாட்டு வாழ்க்கையின் துயரைத்தைக்கூட இங்கு அழகுற விளக்கும் மச்சானின் கவிதை.

"யாரைக்குத்தம் சொல்ல? எதை நினைத்து அழ?" என நம் நிலை கண்டு இரக்கப்பட்டு வாழ்க்கை யாருக்காகவும் நகராமல் இருந்ததில்லை.

ஊருக்குப்போய் கொஞ்ச காலம் இருந்து விட்டால் சில பொருளாதார‌ சிரமங்களை சந்திக்கும் பொழுது எங்கேயாவது எப்படியாவது மேற்கத்திய நாடுகளுக்கு தொலை தூரமாய் பொய் கை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று யாரும் எம்மை உசுப்பேத்தவில்லை என்றாலும் நம் மனது தானாகவே எண்ணத்தொடங்குகிறது.

சரி அப்படியே எண்ணம் போல் தூரமாய் சென்று ஒட்டு மொத்த குடும்ப நலன்களுக்காக வருடங்களை தனிமையில் செலவழித்த பின் விரைவில் ஊருக்கு செல்லவும், அங்குள்ள நீர் வற்றி மாடுகளும், ஆடுகளும் மேயும் செக்கடிக்குளக்கரை கூட கண்களுக்கு தேம்ஸ் நதிக்கரையை விட‌ அழ‌காக‌வே ஆன‌ந்த‌த்துட‌ன் காட்சி அளிக்கும்.

ரொம்ப‌ நாள் அங்கு த‌ங்கி விட்டால் கிட்ட‌ இருந்தால் முட்ட‌ப்ப‌கை என்ப‌து போல் அமைதிக‌ள் கொஞ்ச‌ம், கொஞ்ச‌மாக‌ தொலைந்து வீண் ச‌ண்டை சச்ச‌ர‌வுக‌ளுக்கும், வ‌ம்புதும்புக‌ளுக்கும், போட்டி, பொறாமை, கர்வம் என‌ வ‌ழிவ‌கை செய்யும்.

ச‌மீப‌த்திய‌ நிக‌ழ்வான தெருவில் நெருங்கிய‌ சொந்த‌த்திற்குள் ந‌ட‌ந்த‌ க‌த்திக்குத்து ச‌ம்ப‌வமே இத‌ற்கு சாட்சி.

என் தாய்நாட்டில் இருக்க‌ வேண்டும் ஆனால் பிற‌ந்த‌ ம‌ண்ணை விட்டு அக்க‌ம் ப‌க்க‌த்து ந‌க‌ர‌த்தில் ஏதேனும் வாட‌கை வீட்டிலாவ‌து த‌ங்கி வியாபார‌ம், ப‌ணிக்காக‌ அங்கேயே வாழ்நாட்க‌ளின் பெரும்ப‌குதியை செல‌வ‌ழித்து ஏதேனும் ந‌ல்ல‌நாள்பெரிய‌நாள், க‌லியாண‌ வைப‌வ‌ங்க‌ள், ஈத் பெருநாட்க‌ளுக்கு ம‌ட்டும் என‌ பிற‌ந்த‌ ம‌ண்ணை பார்த்து வ‌ர‌ வேண்டும் என்ப‌தே உள்ளூரில் ப‌ல‌ ம‌ன‌ப்புழுக்க‌த்துட‌ன் வாழ்ந்து வ‌ருப‌வ‌ர்க‌ளின் எண்ண‌மாக‌ இருக்கும்.

"ஊரு ந‌ல்லாத்தான் ஈக்கிது; ம‌ன‌சுக‌ள் தான் ப்லாகொண்டு போய் இருக்குது".

"67 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் நம் தாய்நாட்டிற்கு சுத‌ந்திர‌ம் கிடைத்து விட்ட‌து. இன்னும் அத‌ன் பிள்ளைக‌ளான‌ ந‌ம‌க்கு கிடைக்க‌வில்லை மச்சான்"

இந்தியா என் தாய்நாடு (ம‌த‌ துவேச‌வாதிக‌ளுக்கு எம் தாய்நாட்டு ப‌ற்றை நாடிப்பிடித்துப்பார்க்க‌ அருக‌தையில்லை. அன்று இவன்ங்க ஒழுங்க இருந்திருந்தா பாக்கிஸ்தான் பிரியாமல் நம் இந்தியாவுடன் இன்றும் இணைந்து பெரும் சக்தியாக விளங்கிக்கொண்டிருக்கும்). இஸ்லாம் எங்க‌ள் வ‌ழிபாடு.

அனைவ‌ருக்கும் சுத‌ந்திர‌தின‌ வாழ்த்துக்க‌ள்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

sabeer.abushahruk said...

பேரனும் அப்பாவும் இப்பவெல்லாம் இந்தப் பக்கம் வர்ரதே இல்லே, இதுல வெடப்பு வேற.

நான் அப்பவே சொன்னேன், "நான் கஞ்சி காய்ச்சுறத போடாதிய கூட்டம் கலைஞ்சிடும்' னு. கம்ப்பெனி கேட்கல. நான் என்ன பண்றதாம்?

ஹலோ Zaeisa bhai,

28வது பிறைல காய்ச்சிய கஞ்சியைக் குடிச்சுப் பார்க்காம அபாண்டமா பேசப்படாது. எனக்கு ரொம்ப புடிச்சிப்போச்சி தெரியுமா? எனக்கு மட்டுமா? சட்டிக்கும்தான்.

சரி கஞ்சியை விடுங்க, நெஞ்சைக் காய்ச்சுறமாதிரி எழுதுறமா இல்லையா?

வளைகுடா மோகம் -அது
மழைகொடா மேகம்
தொலைவிலே தோன்றும் - ஒரு
நிலையிலா காணல்!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ZAEISA (காக்கா) சொல்ற‌து நெச‌ந்தான்....

க‌விதை ப‌டைப்போருக்கு (யாரையும்) க‌ஞ்சி காய்ச்ச‌த்தெரியாது
கொஞ்சி ம‌கிழ‌ ம‌ட்டுமே தெரியும்........

Anonymous said...

தம்பி ஜஹபர் சாதிக்!

உங்கள் கவிதை வரிகள் அற்புதம்! அது உண்மையின் வெளிப்பாடு! ஆனால் ஒன்று, விசா இல்லாமலோ கையில் 'பசை' இல்லாமலோ ஊர் வந்தால் விசாரிக்க யாரும் வரமாட்டார்கள். கடல் தண்ணி 'உப்பில்லா பத்தியம்' காக்கும்!. பேய்க்கரும்பு இனிக்கும். கல்யாண பத்திரிகைகள் வீட்டு கதவை தட்டாது!. அவ்வளவு ஏன் ''அஸ்ஸலாமு அலைக்கும்!'' என்ற ஓசைகேட்க காதுகள் 'தவமாய் தவமிருக்க வேண்டும்!.

S.முஹம்மது பாரூக், அதிராம்பட்டினம்

Unknown said...

கஞ்சி காய்ச்ச தெரியாம தஞ்சம்புகுந்திருப்பதை, வானத்தில் கூட பெருநாள் கொண்டாடி இருப்பதை, மந்தி என்ற சுவை இல்லா உணவை வைத்து ஓஹோ என புகழ்வதையும் மிக அருமையாக அண்மயில் வந்த பின்னூட்ட அடிப்படையில் ச்கோதரர் அருமையாக கவி எழுதியதை வாழ்த்துகிறேன். அருமை!

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Jahabar Sadiq,

Nice poem which shows earning in far away countries are all disadvantages.

But, all are possible with good education and good careers.
A vital skill in international environment is English communication.

When we are becoming rich in foreign countries possibilities of higher life standards are limitless with so many advantages.

We(expatriates) all have decided to choose to earn in foreign countries by accepting the consequences. Ofcourse, no such things as free lunch. We have to pay. Thats halal business.

Our elder scholar Mr. Mohammed Farook's statement is absolute wisdom.

May Allah grant us rich and satisfying life. InshaAllah.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.

JAFAR said...

மிக அருமை

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//ஒருவழியாக ட்டீ வந்தே விட்டது, கமகமவென மணமணக்க!//

முக்கியமாக நம்ம மரியாதைக்குரிய இப்ராஹிம் அன்சாரி காக்கா அவர்களுக்கும் உபசரிக்க அழைப்பு கொடுக்கனும்.

Shameed said...

//இவ்வாழ்க்கையின் சில வேளை
இனிய பெருநாள் நன்னாள் கூட
முடிவு அறியா அரிய வேளை
வான் வெளியிலும் கொண்டாடும் நிலை//

நடப்பு சம்பவங்களை அப்படியோ கவிதையில் கொண்டுவந்து அதற்க்கு இஞ்சி பூண்டு கொடுத்து சுவை ஊட்டி கடைசியா செரிமானத்துக்கு இஞ்சி டீ கொடுத்த விதம் அருமை

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இதில் எழுதப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் நம் ஊரார்களின் (நாட்டைப்பிரிந்து பொருளீட்டுபவர்களின்) பொதுவான உணர்வுகள் அடிப்படையில் எழுதப்பட்டவையே தவிர, என்னை மட்டும் வைத்து அல்ல!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

// //இவ்வாழ்க்கையின் சில வேளை
இனிய பெருநாள் நன்னாள் கூட
முடிவு அறியா அரிய வேளை
வான் வெளியிலும் கொண்டாடும் நிலை//

நடப்பு சம்பவங்களை அப்படியோ கவிதையில் கொண்டுவந்து அதற்க்கு இஞ்சி பூண்டு கொடுத்து சுவை ஊட்டி கடைசியா செரிமானத்துக்கு இஞ்சி டீ கொடுத்த விதம் அருமை//

ஹமீதாக்கா
அஸ்ஸலாமு அலைக்கும்
உங்களை நினைத்துக் கொண்டே நீங்கள் கருத்திட்ட நேரத்தில் வேறொரு கருத்து பதிந்தேன். சரியா வந்துட்டீர்கள் மகிழ்ச்சி

sabeer.abushahruk said...

ட்டீ வர தாமதமானதால் கோபமாக எம் ஹெச் ஜேவுக்கு எழுதி வைத்தது கீழே பின்னூட்டமாக. சூப்பர் ட்டீயே வந்துவிட்டதால் இனி யாரிடம் ட்டீ கேட்பது என்னும் இமாலயக் கேள்விக்குக் கீழ்கண்ட நபர்களின் பெயர்கள் சட்டென நினைவிற்கு வந்தன:

- சகோ அஹ்மது அமீன்
- தம்பி யாசிர்
- ஷஃபி, விஷுவல் ட்டேஸ்ட்
-zaeisa
-அபு ஈஸா
-ஷஃபாத்

மெற்கண்ட அன்பர்களே,,,, ட்டீ ப்ளீஸ்.


(பி.கு.: எனக்குத் தோன்றியதுபோலவே எம் ஹெச் ஜேவுக்கும் தோன்றியருப்பதை கவனிக்கவும்.)



ட்டீ இன்னும் வரல:

ஊருக்குப் போக
யாருக்குத்தான் இல்லை ஆசை
வாழ்க்கையை விற்று
சேர்த்தென்ன செய்ய காசை

கல்லுடைத்து மண்சுமந்து
காசோலை வரைந்தனுப்பி
பல்லுதிர்ந்து மனம்சோர்ந்து
சேமித்த தென்னவென்று நினை

இழுத்துக் கட்டிய
நரம்பென விடைத்த உடல்
பழுத்துக் கொட்டிய
பழமென தளரும் உணர்

கருத்திருந்த கேசமெல்லாம்
வெளுத்துதிர்ந்தும் வழுக்கையுமாய்
பொறுத்திருந்து தேசம்வர
கழுத்துநகையின்றி - காலம்
காத்திருக்கும் பார்

கடல் கடந்து கரைசேர்ந்து
உடல் வலிக்க உழைத்ததெல்லாம்
கடன் அடைத்து கரையேறி
இடர் நீங்க வாய்த்ததுவா சொல்

தெளிவான படிப்பறிவோ
தொய்வில்லாத் தொழிலறிவோ
கற்றறிந்து பட்டுணர்ந்து
பயணப்பட்டால் பலனுண்டு அறி

அக்கறைப் பச்சைதான்
அதன்மேல் இச்சைதான்
அக்கறையில் இருப்போர்க்கோ
இக்கறைதான் பச்சை

கல்லுடைக்கும் மனிதனுக்கும்
கதவிடுக்கில் வெளிச்சம் வரும்
கடல்கடக்கும் நமக்கெல்லாம்
கனவுகூட கஷ்டம் தரும்

எத்தனை உழைத்திட்டும்
ட்டீ இன்னும் வரல
வாலிபம் வடிந்தபின்
வருத்தம் மட்டுமே சொல்லும்
வட போச்சே!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மனசுல ஒரு கோடிர்வாய்க்கி ஊடு கட்டனும்ண்டு ஆச வந்திரிச்சி. இனி சமாளிப்பிக்கேஷனுக்கு வேலை இல்லை முயற்சி மட்டும் ஓ.டி. பார்க்கனும்.

sabeer.abushahruk said...

ட்டீ தர வேண்டியவர்களுக்கெல்லாம் தலைவராக...

கிரவுன்!

ட்டீ ப்ளீஸ், கிரவுன்!

Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//ட்டீ தர வேண்டியவர்களுக்கெல்லாம் தலைவராக...

கிரவுன்!

ட்டீ ப்ளீஸ், கிரவுன்!//



அப்போ ட்டீ மாஸ்டர்ன்னு ஓங்கி சொல்லுன்கோ ஓய்ய்

Unknown said...

சபீர்

எதுக்கு எப்போ பார்த்தாலும் டீ கேட்டுக்குட்டே இருக்கிரே.
அது என்னடா அர்த்தம் ? ஒன்னும் புரியலையே, ஒவ்வரு பதிவுலையும் டீ கேக்குறே.

sabeer.abushahruk said...

காதரு,

ஏண்டா இதுகூடவா வெளங்கல?

ஹய்யோ...ஹய்யோ!

sabeer.abushahruk said...

சரி, முடியைப் பிச்சுக்காதே (அது சரி, பிச்சுக்க அங்கே என்ன இருக்கு) சொல்லிடறேன்.

வழக்கமாக அதிரை நிருபரில் எழுதுபவர்கள் பதிவுகள் அனுப்ப தாமதமானால் ஆக்கம் வரல என்பதைத்தான் சிங்கி மங்கி ஸ்டைலில் "டீ வரல" என்று நச்சரிப்போம்.

நச்சரிப்பு தாங்க முடியாமல்...டீ வந்திருச்சில்ல!

crown said...

sabeer.abushahruk சொன்னது…

ட்டீ தர வேண்டியவர்களுக்கெல்லாம் தலைவராக...

கிரவுன்!

ட்டீ ப்ளீஸ், கிரவுன்!
----------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். எப்பவுமே நமக்கு பார்மால்டீ பிடிக்காது!ஒரிஜினால்டீதான் பிடிக்கும்.இருந்தாலும் சின்சியாரிட்டீயாக பதில் எழுத வந்தேன், ஆனால் சகோ.ஜாஹபர் சாதிக்(கிறார்),ராயல்டீ கேட்கமாட்டாருன்னு கவிசக்கரவர்தியே நீங்க கியாரன்டீ தருவீங்களா? -
இப்படிக்கு ராயல் அப்துல் ரஜ்ஜாக் மகன், கிரவுன் தஸ்தகீர்.

crown said...

Abdul Khadir Khadir சொன்னது…

சபீர்

எதுக்கு எப்போ பார்த்தாலும் டீ கேட்டுக்குட்டே இருக்கிரே.
அது என்னடா அர்த்தம் ? ஒன்னும் புரியலையே, ஒவ்வரு பதிவுலையும் டீ கேக்குறே.
------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். என்ன மாமா நலமா? இப்ப(டி)டீ கேட்டதன் விளக்கம் உங்க நண்பர் சொல்லிட்டார்ல!

sabeer.abushahruk said...

காதரு,

பார்த்தியாடா? கேட்டது ஒரு ட்டீ. கிரவுன் தந்ததோ நெறைய ட்டீ.

அதிலும் எத்தனை வெரைட்டீ?

crown said...

ஊருக்கு போக
யாருக்கு இல்லை ஆசை
வாழ்க்கை விற்று
சேர்த்தென்ன செய்ய காசை

திர்ஹத்திற்கும் தினாருக்கும்
தினம் படும் இம்சை
ரியாலுக்கும் டாலருக்கும்
இரவுபகல் பாரா ஆசை

துள்ளியோடும் வசந்தம்
திரும்ப வராதென்று அறிந்தும்
தொலைந்து போகிறோம்
திரும்பத் திரும்ப!
--------------------------------------------
ஒன்றை விற்று மற்றதை பெறுகிறோம் அது நமகாகவல்ல பிறருக்காக!அது ஒரு தியாகம்தான்! பணத்தாகமும் உண்டென்றாலும் அந்த சின்னதியாகம் செய்வதில் கணக்கு பார்க்ககூடாது, குற்ற உணர்சி ஆகாது! நாம் இப்படி திரும்ப திரும்ப தொலைவதால்தான் நம்மை "கண்டுகொள்கிறார்கள்"இது சமூகத்தில் நமக்கு கிடைத்த அடையாளமே!கவலையைவிடுங்கள் மீண்டும் தொலைந்து போவோம், " நாம் கணப்பட வேண்டி""!

crown said...

சொந்த மண்ணின் சுகங்களுடன்
சொந்த உறவின் பாசங்களுடன்
சோறு உண்பவன் எவனோ
சொல்லத்தக்க
இன்பம் காண்பவன் அவனே
-----------------------------------------
ஆயிரத்தில் ஒருசொல் , நம்மை ஆயிரத்துல(பிடிங்கியெடுக்கும் நம்மூர் வட்டாரசொல்லின் பதம்)இந்த ஆகிரத்துல ஆட்கள் இல்லாதபட்சத்தில் ஆமாம் இது ஆயிரத்தில் ஒரு சொல்!

Unknown said...

இப்போதான் புரியுது இந்த வெளங்காத டீ -க்கு இத்தனைநாள அடிச்சுக்குட்டு விழுந்தியலோ,

அது சரி, சபீர், பேச்சோட பேச்சா என் தலையில் எதுக்கு கைய வச்ச
கைய்ய ஓடிச்சுப்புடுவேன் ஆமா ..

crown said...

ஊருக்குப் பேர் போன
நா ஊறும்
நோம்புக் கஞ்சி கூட
நான் சமைக்க
களனி போலாகுதே
அவள் கை படா வாழ்க்கையில்!
--------------------------------
நோம்பு கஞ்சியும் வேம்பு கஞ்சியாய் வீம்பு பன்னும் எதார்த்தமான உண்மை!
வஞ்சி வைக்காத கஞ்சி எப்படி பண்ணிவைத்தாலும் அவள் கஞ்சை விஞ்சி இருக்காது! சுவை நாவிலும் இருக்காது! நெஞ்சிலும் இருக்காது!.
அவள் அருகில் இருந்தால் ஆறிய கஞ்சியும் , நோன்பு கஞ்சியை விஞ்சி இருக்கும். பாத்திரத்தில் மிஞ்சி இருக்காது! அவள் கொஞ்சி, கொஞ்சி மகிழும் படி!
ஆனால், நாம் தனித்து காய்ச்சும் கஞ்சியை நாமே நமக்குள் கெஞ்சி, அஞ்சி,உட்கொள்ள வேண்டிய அவள நிலை!
இதிலிருந்தாவது சமூகமே அவளை நினை!காலமெல்லாம் வேண்டுவது அவளின் துணை!

Unknown said...

இனிமேல் என்னுடைய டீயையும் எதிர்பார்ப்பியோ ?

crown said...

இவ்வாழ்க்கையின் சில வேளை
இனிய பெருநாள் நன்னாள் கூட
முடிவு அறியா அரிய வேளை
வான் வெளியிலும் கொண்டாடும் நிலை
----------------------------------------------
இப்படித்தானே நம் காலில் சுமையைக்கட்டிக்கொண்டு ஆலாய்ப்பறக்கிறோம்.தனியாளாயிருக்கிறோம்.

crown said...

கடல் கண்ட அனுபவத்தில்
கண்டதோ உப்பில்லா பத்தியம்போல்
இஞ்சியுமில்லா மஞ்சளுமில்லா
கண்டனத்துடன் துண்டமாய்
"மந்தி" யே கண்டோம்
---------------------------------------
இஞ்சி போடாவிட்டாலும், அந்த மஞ்சள் போடாவிட்டாளும். அவள் அருகில் இருந்து கொஞ்சல் போட்டால் மந்தியும் எந்திரிக்கும், நாவில் நீர்வடியும்.பின் பிடித்த உணவாய் மந்தியும் மாறிப்போகும், பல் முறை உண்ண ஆவல் தூண்டும்.

crown said...

கடந்து செல்லும் இளமையும்
படர்ந்து வரும் வெண்நரையும்
காலம் விதித்த
விலை!
--------------------------------------------------
இருந்தாலும் நம் வாழ்கை "பொருள்"புதைந்த அர்தமுள்ள வாழ்கையாகத்தானே இருக்கிறது.????
----------------
நான் முன்பு எழுதிய ஒரு ஹைக்கூ
------------------------------------
"என்னுடன் தானே வந்தது என்னை விட்டுவிட்டு எங்கே
சென்றது என் இளமை"
-------------------------------
சகோ.ஜஹபர் சாதிக்(க)!தெரியும் அவர் சாதிக்க தெரியும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறார்!
இவரின் ஆக்கத்தில் இது ஒரு மற்றொரு'மைல்கல்"வாழ்த்துக்கள்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.எடிட்டராக்கா தயவு செய்து கவனிக்கவும், இங்கே கருத்துகளத்தில் உள்ள சபீர்காகாவின் கவிதையை தனி பதிவாய் சில வரிகள் கூடுதலுடனும், சிலவரிகள்( டீ சமாச்சாரம்) நீக்கியும் ஒரு முழு நீள கவிதை தரவும். இப்படிக்கு கவிச்சக்கரவர்தியின் தலைமை ரசிகன்.

ABU ISMAIL said...

இவரின் ஆக்கத்தில் இது ஒரு மற்றொரு'மைல்கல்"வாழ்த்துக்கள்.

Shameed said...

"துபாய்" படத்தை மட்டும் போட்ட எடிட்டரின் ஓரவஞ்சனையையும் அதற்க்கு ஜால்ரா தட்டும் UAE (குறிப்பா அதை கண்டு கொள்ளாமல் இருக்கும் அஜ்மான் காரரையும்) காரர்களையும் வன்மையாக கண்டிக்கின்றோம்

இப்படிக்கு
துபாய் தவிர்த்து பல்வேறு நாடுகளில் உள்ள AN வாசகர்களின் தலைமை செயலகம் தம்மாம்.

crown said...

Shameed சொன்னது…

"துபாய்" படத்தை மட்டும் போட்ட எடிட்டரின் ஓரவஞ்சனையையும் அதற்க்கு ஜால்ரா தட்டும் UAE (குறிப்பா அதை கண்டு கொள்ளாமல் இருக்கும் அஜ்மான் காரரையும்) காரர்களையும் வன்மையாக கண்டிக்கின்றோம்

இப்படிக்கு
துபாய் தவிர்த்து பல்வேறு நாடுகளில் உள்ள AN வாசகர்களின் தலைமை செயலகம் தம்மாம்.
-----------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.சகோ.சாகுல் தாம் ஆம் என்றால் ஆமாம்!

Ebrahim Ansari said...

சாலை விபத்தில் காயம்பட்டு தஞ்சை மீனாட்சி மிஷின் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருக்கும் நமது அன்புக்குரிய யாசிர் அவர்களின் மருமகன் முகமது ஆஷிக்கை கண்டு நலம் விசாரிக்க தஞ்சை சென்று வந்ததால் இந்தக் கவிதையை தாமதமாக படிக்க நேரிட்டது.

எனது விரிவான பின்னுட்டம் இன்ஷா அல்லாஹ் நாளை.

அதற்குமுன்,

முகமது ஆஷிக் நலம்பெற அனைவரும் து ஆச செய்யும்படிக் கோருகிறேன். ஒரு நல்ல வளர்ந்து வரும் பட்டதாரி இளைஞ்ர் லாரல் பள்ளி வேன் ஓட்டுனரின் கவனக் குறைவால் பாதிக்கப் பட்டுள்ளார்.

நலம்பெற வேண்டுவோம்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். சகோ.ஆஷிக் பூரணகுனமடைய வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன். அல்லாஹ்வின் சிபாத் கிடைக்க அல்லாஹ் போதுமானவன். யா அல்லாஹ் நீயே அருள் புரிவாய்.அமீன்,ஆமீன்.

Shameed said...

சகோ.ஆஷிக் பூரணகுனமடைய வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.

sabeer.abushahruk said...

யாசிருடன் பேசியதில் மருமகனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகச் சொன்னார்.

ஆனால், அவர் ரொம்ப மனஅழுத்தத்தோடும் வேதனையோடும் இருப்பதை குரலில் உணர முடிந்தது. நண்பர்களின் ஆறுதல் அவரைத் தேற்றும்.

ஆஷிக் விரைவில் பூரண குணமடைய துஆச்செய்யுங்கள்.

யாசிர் இந்தியாவில் 00918012754005

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அன்புள்ள சபீர் காக்கா,

//நச்சரிப்பு தாங்க முடியாமல்...டீ வந்திருச்சில்ல!//
ஆஹா நச்சரிப்பா இப்படி 'ன்னு சொல்வீங்க 'ன்னு தெரிந்திரிந்தால் எழுதாமலே உங்க கவியை பார்த்து வடெ போச்சேன் 'டு படிப்பினையாவது பெற்றிருப்பேனே!
ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி அறுவடையில் கொண்டு வந்து சபையில் பாராட்டச் செய்தமைக்கு மிக்க மகிழ்வு காக்கா. உங்க வடெ போச்சே பின்னூட்ட கவி பற்றி ராயல் ட்டீ தந்த கிரவ்னாரின் கூற்றை பரிசீலிக்க நானும் வேண்டுகிறேன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இன்னும் இப்போது களத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் காதராக்கா,

அதிரை தலங்களின் குறைகளை சுட்டி கலக்கி வரும் மன்சூராக்கா,

அப்பா பேரான்டி புகழ் ஜெய்சா காக்கா,

மந்தி மறக்குமுன் உடனடியாக பதிவிட்டு ஊக்கமளித்த நெய்னாதம்பி காக்கா,

மண்ணின் மகிமை குலையாமல் எழுதிக்கலக்கும் நெய்னா மச்சான்,

குடும்பத்துடன் கலக்கி களம் இனிக்கச் செய்திடும் விண்வெளியில் பெருநாள் கண்ட விஞ்ஞானியாக்கா, மரியாதைக்குரிய பாரூக் காக்கா, மரியாதைக்குரிய இப்ராஹிம் அன்சாரி காக்கா,போனில் வாழ்த்திய யாசிர் உங்கள்களுக்கு மிக்க நன்றி

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சாதாரண ட்டீயில் ஓடிகொண்டிருந்த சபையில் ராயல் டீ தந்து சுவை கூட்டி நாலு நாலு வரியில் எழுதியதை நீளமாக அழகாக தெளிவான தமிழ்சுவை, காதல் சுவை யூட்டி கலக்கிய ராயல் ப்ளஸ் கிரவ்னாரின் வருகை சபையோருக்கும் குறிப்பாக எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மேலும் ஆங்கிலப்புகழ் சகோதரர் அஹமது அமீன்,
சகோ. அமீன்,
சகோ. ஹசீனா,
சகோ.ஜபருல்லா,
இன்னும்
கண்ணுற்ற யாவர்களுக்கும் மிகுந்த நன்றி
&
அஸ்ஸலாமு அலைக்கும்.

KALAM SHAICK ABDUL KADER said...

அன்புத்தம்பி இளங்கவி இலண்டன் ஜாஃபர் ஸாதிக், அஸ்ஸலாமு அலைக்கும்.
தாமதமான வருகைக்கு மன்னிக்கவும். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உங்களின் ஆக்கம் என்னும் இந்த ஏக்கம் படிக்கப் படிக்கத் தொலைந்தது என் தூக்கம்.

\\பவுன்டை காண மண்டை காய்ந்து
டாலரை தேடி கண்டம் பாய்ந்து
தொலைந்து போவது வருடமட்டுமல்ல
கலை இழந்திடும் உடல் வளமும் கூட!\\

மில்லியன் டாலர் சொல்லழகு!

என்
வளைகுடா வாழ்கை!

விசாயிருந்தால் மட்டுமே
விசாரிக்கப்படுவார்!

திரும்ப்பிப் போவதாயிருந்தால்
விரும்பிப் பழகப்படுவார்!

தோசைக்குள்ள மரியாதை
அப்பத்துக்கும் இடியப்பத்துக்கும் இல்லை!
ஆசையை அடக்கி வைத்து
ஆகாயத்தில் பறப்பவனுக்கே பாசவலை!

வெள்ளைக் கைலியின்
வெளுப்பு மஞ்சளாகு முன்பு
முல்லைக் கொடி மனையாளை விட்டும்
முந்திப் பயணமாகினால் தான் அன்பு!

பசியாறுதலும் பலகாரங்களும்
பளபளப்பு இருக்கும் வரைக்கும் வருகை!
ருசியான உணவுகளும் குறையும்
ரொக்கத்தின் இருப்பும் அருக!

மீண்டும் மீண்டும் தொடரும்
மீளாப் பயணம் வரைக்கும்
வேண்டும் வளங்கள் கிட்டினாலும்
வேகமாய்ப் பறத்தல் படரும்!

வளைகுடா வாழ்க்கை
வரமா? சாபமா? இன்னும்
விளைந்திடா விடையறியா
வினாவாகவே மின்னும்!


சென்ற ரமலானில் இஃப்தார் விருந்தொன்றுக்காக வெளிச்செல்லும் வேளையில், என் கண் முன்னே இரு தமிழர்கள் (துப்பரவுத் தொழிலாளிகள்) தோளில் முதுகுப்பையையும் கையில் உணவுப் பையையும் சுமந்து கொண்டுச் சென்றதைக் கண்டவுடன், என் கண்கள் கண்ணீரை வடித்தன; என் கவியுள்ளம் உடன் கீழ்க்காணும் வரிகளைத் தானாக வடித்தன; (இப்படித்தான் கவிதைகள் பிறக்கும்;ஒரு மின்னல் வெட்டாய் மின்னும் சிந்தைக் கருவில்; பின்னர் வரும் கவிதை உருவில்)

என் எண்ணக் கருவில் உருவான அவ்வரிகள்:

தண்ணீரை முதுகில் சுமந்துத்
தள்ளாடி நடக்கும் பாலைவன ஒட்டகம்;
கண்ணீரையும் கவலைகளையும் முதுகில் சுமந்து
கடன்களை அடைக்க நடக்கும் நாங்களும்
ஒரு பாலைவன ஒட்டகம்;

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//ABULKALAM BIN SHAICK ABDUL KADER சொன்னது…
அன்புத்தம்பி ஜாஃபர் ஸாதிக், அஸ்ஸலாமு அலைக்கும்.//

வ அலைக்கு முஸ்ஸலாம் காக்கா

உங்களின் மேலான வாழ்த்துக்களுக்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

தங்கமெல்லாம் கொட்டிக் கிடக்கவுமில்லை
அங்கே காலம் கடத்துவது எளிதுமில்லை
காசு ஈட்டுவது கடினம்
காலம் தள்ளுவதோ கொடுமை/////

நம்விதியை
நாமே
வெந்துகொள்ளும்
முகாரி பாடலொன்று
கேட்ட மனச்சுமை

அருமை என்று
சொன்னால்
அர்த்தமில்லை
ஆழமான
வரிகளென்று சொல்வேன்

அப்துல்மாலிக் said...

சகோ ஜெ.சாதிக், வெளிநாடுவாழ் அனைவரின் ஒட்டுமொத்த உணர்வுகளை கட்டியெழுப்பிய வரிகள் அருமை, ஒவ்வொருத்தரும் படிக்கும்போதும் தனக்குதான் எழுதப்பட்டது போன்று உள்ளது.

வாழ்த்துக்கள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு