Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் பெருநாள் மறுநாள் மந்தி எனும் வீண் விரயம் ! 56

அதிரைநிருபர் பதிப்பகம் | August 11, 2013 | , , , , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… 

அருட்கொடையாளன் அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால், இந்த வருட ரமளான் மாதம் மிகச் சிறப்பாக அமைந்ததற்காக நம்மை எல்லாம் படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ்வின் உதவியால் வெளிநாடு மற்றும் வெளியூர்களில் உள்ள நம் அதிரைச் சகோதர சகோதரிகள் தங்களின் நண்பர்கள், உறவுக்கார சொந்தங்களுடனும், அவர்களோடு தங்கியிருக்கும் சக முஸ்லிம் சகோதரர்களோடும் பெருநாளை சந்தோசமாக கொண்டாடி மகிழ்ந்திருப்பார்கள். இதற்கு மேல் ஊரில் உள்ள நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகள் குடும்பத்து சொந்தங்கள், நண்பர்கள் அனைவருடன் அன்பும் நட்பும் பாராட்டி வழக்கம் போல் ஈகைத் திருநாளை கொண்டாடி மகிழ்ந்திருப்பார்கள் அல்ஹம்துலில்லாஹ்!

'ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'இஸ்லாத்தில் சிறந்தது எது' எனக் கேட்டதற்கு, '(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்' என்றார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.  புகாரி 12.  Volume :1 Book :2

அதிரையில் நம்மோடு நெருங்கிப் பழகும் சகோதரர்களின் நட்பு பாராட்டும் ஏற்பாட்டால், பெருநாள் விருந்து என்று 300க்கு மேற்பட்டவர்களுக்கு விருந்து பரிமாறி தங்களின் உணவு உண்னும் நிகழ்வை நடத்தி ஈகை திருநாளின் புனித நோக்கத்திற்கு மாற்றாக அமையப் பெற்றதை ஒட்டு மொத்த அதிரை முஸ்லீம்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த ‘மந்தி’ விருந்தோம்பலில் கலந்து கொண்ட 90% சதவீதத்திற்கு மேற்பட்ட சகோதரர்கள் தங்களின் அன்றைய உணவுக்கு திண்டாடுகிறவர்களா? 

பெருநாள் தினத்தன்று அதனைத் தொடரும் விடுமுறை நாட்களில் தாய் தந்தை, மனைவி, குழந்தைகள், உடன்பிறந்த சகோதர சகோதரிகள் என்று ஒன்று கூடி சந்தோசமாக கொண்டாடப்பட வேண்டிய நாட்கள், இந்த மந்தி விருந்திற்கு அழைக்கப்பட்டவர்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் தங்களுக்கென்று வீடு குடும்பம் இல்லாமல் இருப்பவர்களா !?

குடும்பங்கள் ஒன்றும் கூடும் வீட்டில் தாய், தந்தை, சகோதர சகோதரிகள், மனைவி, குழந்தைகளை விட்டு விட்டு இவ்வாறான விருந்தோம்பல் அவசியம் தானா ?

ஒன்றுகூடல் பெருமைக்கும் பகட்டுக்காகவும் இவ்வகை விருந்து வீண் விரையங்கள் நடைபெறுகிறதே, இதனை எடுத்துக் கூறி நல்வழியில் செலவிடச் சொல்ல ஊரில் எந்த ஒரு ஆலிமுக்கும் தோன்றவில்லையா? அல்லது வெளியூர் ஆலிம்(கள்) சொன்னால் கேட்போம் என்று கொடிதூக்கும் சகோதரர்களும் இந்த மந்தியில் கலந்து கொண்டதை கண்டித்து அந்த வெளியூர் ஆலிம் அவர்களும் இதற்கு வாய் திறக்கவில்லையா?

அனாச்சாரங்களை தட்டிக்கேட்க வேண்டியவர்களே பம்மிக் கொண்டு நமக்கொரு அழைப்பில்லையே என்று ஏங்கிக் கொண்டிருகிறார்களா ? அவர்களெல்லாம் எங்கே ? பொதுக் காரியங்களில் ஈடுபடும் சகோதரர்கள் இவ்வாறான பகட்டுக்காக புகைப்படமெடுத்து விளம்பரப்படுத்தப்படும் விருந்துகளில் கலந்து கொள்வது அவர்களின் பொதுநலச் சேவைகளை கேள்விக் குறியாக்காதா ?

பெருநாள் பகல் தினத்திலோ அல்லது பெருநாள் முடிந்த அடுத்தடுத்த நாட்களிலோ ஏழைக் குடும்பங்களின் திருமணத்தை நடத்தி வலிமா என்ற பெயரிலா இவ்வாறான மந்தி விருந்து கொடுக்கப்பட்டுள்ளது !?

கடந்த சில வருடங்களாக தங்களின் பொருளாதாரத்தை அர்த்தமற்ற இது போன்ற பொழுதுபோக்கு மற்றும் பகட்டுக்கான விருந்துகளுக்கு பண உதவி செய்பவர்கள் அதற்கு உடந்தையாக செல்பவர்கள் பின்வரும் இறைவசனத்தை கொஞ்சம் நிதானமாக வாசித்துப் பாருங்கள்.

மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. குர் ஆன் 4:36. 

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. குர் ஆன் 7:31

ஒருவேளை உணவுக்கு அண்ணல் நபி(ஸல்) அவர்களும், அவர்களின் குடும்பமும், சத்திய சஹாபாக்களும் எவ்வளவு கஷ்டப்பட்டிருபார்கள்? அந்த கஷ்டத்தில் ஒரு துளி உணவின்றி நாம் கஷ்டப்பட்டிருப்போமா? நம் கண்களின் கண்ணீர் வர வைக்கும் அந்த சம்பவங்களை  சிறிதளவேனும் அறிந்து கொள்ள இங்கே சுட்டிப் பாருங்கள் http://adirainirubar.blogspot.in/2013/05/8.html

இது போன்றவைகளுக்கு செலவுகள் செய்யும் பணத்தில், ஊரில் எத்தனையோ பேர் வட்டி என்ற கொடுமையால் அறிந்தோ அறியாமலோ விழுந்து கஷ்டப்படுகிறார்கள், அவர்களில் வருடத்திற்கு ஒருவரையாவது மீட்டெடுக்க முன் வரக்கூடாதா?

ஊரில் எத்தனையோ எழை கன்னிப் பெண்கள் தங்களது திருமணச் செலவு செய்ய நாதியற்று இருக்கிறார்களே, இது போன்ற பெருநாள் தினத்தில் மந்திக்காக ஒன்று கூடுபவர்கள் அந்த ஏழைகளுக்கு பெருநாள் தினத்தில் திருமணம் நடத்தி வலிமா விருந்தை அல்லாஹ்வுக்காக ஒன்றுகூடி மந்தி சமைத்து அந்த ஏழை குடும்பங்களிடம் மகிழ்ச்சியை வரவழைக்க  முன்வரக் கூடாதா?

அனாதை பிள்ளைகள் உள்ள நமதூர் எத்தீம்கானா மதர்ஸாவுக்காகவது அன்றைய தினம் இது போன்ற மந்தி சமைத்துக் கொடுத்து அந்த அனாதைகளின் முகத்தில் மகிழ்ச்சியை மிளிரவிட்டு நன்மையை அள்ள முந்தக் கூடாதா?

பல வருடங்களாக இஸ்லாமியர்கள் ஏற்றம் பெறவும் முஸ்லீம் ஏழைகளுக்கு உதவுவதற்காகவே இயங்கி வரும் அதிரை பைத்துல்மாலை அணுகி நாங்கள் 300 ஏழைகளுக்கு உணவளிக்க இருக்கிறோம் என்று சொல்லி அவர்களின் ஆலோசனையின் பேரில் ஏழைக் குடும்பங்களுக்கு பெருநாள் தினத்திலோ அல்லது அடுத்த நாளோ மந்தி சமைத்து உணவளிக்க முன்வரக் கூடாதா?

ஊரில் பெருளாதார ஏற்றத்தாழ்வுகளாலும், குலப்பெருமையாலும் பிரிந்து கிடக்கும் பிறதெரு சொந்தங்களை அழைத்து ஒற்றுமையின் அவசியத்தை வழியுறுத்தி உறுக்கமான, கவலையான மார்க்க உபதேசங்கள் செய்து சந்தோசமாக ஒருவருக்கு ஒருவர் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த மந்தி சமைத்து ஊர் ஒற்றுமையை நிலை நாட்ட முயற்சிகள் செய்யக் கூடாதா?

முஸ்லீம்கள் என்றால் பிரியானி, ஆட்டுக்கறி திங்கிறவர்கள் என்று சொல்லும் பிற மத்தத்தவரை அழைத்து, பெருநாள் விருந்து என்று நம்முடையை அழகிய விருந்து உபசரிப்பை காட்டி, அவர்களுக்கு நாங்கள் இஸ்லாத்தில் இருப்பதால் எவ்வளவு சந்தோசமாக உள்ளோம் என்பதை சொல்லி தூய இறை மார்க்கத்தை எத்தி வைக்க ஓர் வாய்ப்பாக மந்தி சமைத்து முந்திக் கொண்டு நன்மையின் பக்கம் அழைக்கக் கூடாதா?

உணவுப் பழக்கமோ அல்லது சுகாதரச் சூழலோ எதன் விளைவோ அல்லது வேறு எதனாலோ ஊரில் நிறைய பேர்உயிர்கொல்லி நோயான கேன்சரில் பாதிக்கப்பட்டுள்ளார்களே, அவர்களை கண்டறிந்து அவர்களின் நோய்கான செலவுகளுக்கு இதுபோன்ற அனாச்சார செலவுகளுக்கு கிடைத்த தொகையை கொடுத்து உதவ முன்வரக் கூடாதா?

வசதி வாய்பின்றி கல்வி பயில கஷ்டப்பட்டு வெளியில் சொல்ல முடியாத எத்தனையோ இஸ்லாமிய சொந்தங்கள் உள்ளார்கள், ஏன் சில தினங்களுக்கு முன் கல்வி உதவி கேட்டு வலைப்பூக்களில் நிதியுதவி வேண்டி கோரிக்கை வைத்துள்ளார்கள், இது போன்றவர்களின் கல்வி செலவுக்கு மந்திக்கு ஆகும் செலவை கொடுத்து நன்மையை அள்ளிக் கொள்ளக்கூடாதா?

ஊரில் எத்தனையோ மனநோயாளிகள் சரியான பராமரிப்பின்றி அன்றாடம் சிரமத்துக்கு உள்ளாகிறார்களே, குறைந்த பட்சம் பெருநாள் தினத்திலாவது நல்ல உடையுடுத்தி, நல்ல உணவு கொடுத்து கவுரவித்து சந்தோசப்படக் கூடாதா?

எத்தனையோ நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் பல சிரமத்துக்கு மத்தியில் உள்ளார்கள், இது போன்ற பெருநாள் தினத்தில் அவர்களை சந்தித்து நலம் விசாரித்து, அவர்களுக்கு உணவோ அல்லது உதவியோ செய்து, இஸலாமியர்கள் இவ்வளவு கருணையாளர்கள் என்று அவர்களின் சிந்தனையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி தூய இஸ்லாத்தை நாடி அவர்கள் நம் வழி நாடி வர ஒரு தூண்டுகோலை ஏற்படுத்தக்கூடாதா? 

என்னதான் நடக்கிறது ஊரில்? 

என்ன ஆனது நமதூர் ஊர் செக்கடிமேடு நண்பர்களுக்கும், இளைஞர்களுக்கும் எத்தனை நாட்களுக்கு இப்படியே சாப்பாட்டையும் அரட்டையையும் முன்னிருத்தி பெருமையடிப்பார்கள்? இன்னுமா திருந்தவில்லை? ஏன் இந்த அவசியமற்ற பெருமை? நாளை நமது பிள்ளைகள் இவ்வாறே தொடர்ந்தால் அதன் விளைவாய் ஏற்படும் அந்த வலியை சொல்லிக்காட்ட ஆள் இருக்காது கிள்ளிப் போடத்தான் சுற்றியிருக்கும் கூட்டம்.

தேர்தல் நேரத்தில் கட்சிகளுக்காக ஓட்டு கேட்கவும் கூட்டுகளை உடைக்கவும் பல கூட்டணிகளில் பங்கெடுக்கும் நம் சகோதரர்கள், மந்தியென்றதும் முந்திக் கொண்டு இந்த சாப்பாட்டுக் கூட்டணி ஏன்? [ஒற்றுமையின் அவசியம் அறிந்துதான் செயல்படுகிறோம் என்றால் இதில் மட்டுமல்ல இன்னும் ஏனைய காரியங்களிலும் முன்னிருத்தி காட்டுவதுதான் சிறந்தது].

வீண் பெருமை, வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை என்று தனது திருமறையில் தெள்ளத்தெளிவாக அறிவித்து விட்டானே, வீண் பெருமைக்காக, தேவையின்றி வீண் விரயமாக செய்யப்படும் இவ்வாறான செயல்களால் அல்லாஹ்வின் நேசம் நெருங்குமா என்பதை நம் சகோதரர்கள் அனைவரின் சிந்தனைக்கே விட்டு விடுகிறோம்.

மேற்கண்ட கேள்விகள் உங்களின் சிந்தனையை சிதைக்கவல்ல, சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயே எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த மந்தி உணவு விருந்துக்கு மட்டுமல்ல, நோன்பு காலங்களில் இஃப்தார் நிகழ்ச்சி என்று, வீட்டில் நோன்பு திறக்க அல்லது பள்ளிவாயில்களில் எல்லா வசதி வாய்ப்புகள் உள்ளவர்களுக்கு தெருக்களிலும், பொது இடங்களிலும், விளையாட்டு திடல்களிலும் வீண் பெருமைக்காக ஏற்பாடு செய்து விளம்பரங்கள் தேடும் நம் சகோதரர்கள் அனைவருக்குமே இங்கே பதிக்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் பொருந்தும்.

அன்பான எங்கள் நண்பர்களே, சகோதரர்களே மேலே சொன்னவை எந்த ஒரு தனி நபர்கள் மேல் வெறுப்பு கொண்டு எடுத்து வைக்கப்பட்டது அல்ல. மாறாக நாம் எங்கே செல்கிறோம்? நம்முடைய வருங்கால சமுதாயத்திற்கு எவ்வகை அனாச்சார செயலை நற்செயலாக முன்னுதாரனமாக காட்டுகிறோம்? நாளை நமது பிள்ளை இதே வழியை நாடினால் பெருமைப்பட்டுக் கொள்ளும் நிலையில் இருப்போமா ? அல்லது அவர்களின் நேர்வழி வேண்டி இறைஞ்சுவதில் இருப்போமா ? என்பதை சிந்தித்துப்பாருங்கள்.

நோன்பு காலத்தில் நீங்கள் கேட்ட மார்க்க சொற்பொழிவுகளில் நபி(ஸல்) அவர்களும், சத்திய சஹாபாக்களும் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை ஒரு கணம் சிந்தித்து பாருங்கள். பர்மா, சிரியா, பாலஸ்தீன், ஈராக் போன்ற நாடுகளில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டு நாளுக்கு நாள் உண்ண உணவிற்கு எண்ணிலா துயரங்களை சந்திக்கிறார்களே என்று எண்ணி, அல்லாஹ் நம்மை இந்த அளவுக்கு வைத்திருக்கிறானே என்று அவனுக்கு அதிகமதிகம் நன்றி செலுத்துங்கள்.

இது போன்ற வீண் விரய விருந்துகளை புறக்கணியுங்கள், நீங்கள் அறிந்தோ அறியாமலோ இதற்கு ஆதரவு கொடுத்திருந்தால் அதற்காக, அல்லாஹ்விடம் தவ்பா செய்யுங்கள். இந்த வீண் விரய உணவு உபசரிப்பில் கலந்து கொண்டிருந்தால் அதற்காக பரிகாரம் தேடுங்கள். இந்த வீண் விரய விருந்தை முதன் முதல் ஆரம்பித்து வைத்த சகோதர்களுக்கு இதன் தொடர் பாவங்கள் அவர்கள் கணக்கில் சேர்ந்து வருகிறது என்பதை உணர்ந்து அவர்களும் அல்லாஹ்விடம் பரிகாரம் தேடட்டும். இவ்வாறான விருந்து உபசரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட அந்த வீட்டின் பெறுப்பாளர்கள் அல்லாஹ்விடம் தவ்ஃபா செய்யட்டும்.

அல்லாஹ் நம் எல்லோரையும் இது போன்ற வீண் விரையங்களை ஏற்படுத்தும் விருந்து உபசரிப்புகளிருந்து தடுத்து பாதுகப்பானாக. ஆமீன் !

அதிரையின் செய்தி ஊடகங்களில் பங்கெடுக்கும் சகோதர்களுக்கு அன்பான வேண்டுகோள், நீங்கள் ஊரின் அன்றாட நிகழ்வுகளை சுடச் சுட செய்திகளாக பல இன்னல்களுக்கு மத்தியில் வெளியிட்டு வருகிறீர்கள் மாஷா அல்லாஹ்!, இதனை மிகப்பெரும் நற்பணியாக செய்து வருகிறீர்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இஸ்லாமிய மார்க்கத்துக்கு விரோதமான இது போன்ற விரயங்களை, புறம்பான நிகழ்வுகளை வெறும் செய்தியாக மட்டும் போடாமல், அந்த அனாச்சாரங்களை மனத்திடத்துடன் கண்டித்தும் வெளியிடுங்கள். இதுதான் இஸ்லாமிய ஊடகக்காரர்கள் செய்ய வேண்டிய துணிச்சலான செயலாக இருக்க முடியும். சமுதாய பெறுப்புணர்வுடன், எதிர்கால சந்ததிகளுக்கு நாம் எதை பதிந்து வைக்கிறோம் அவர்களுக்கு வரலாற்றில் ஏடாக எதைக் கொடுக்கப் போகிறோம் என்ற கவலையுடன் செய்திகளை வெளியிடுங்கள். கேடுகெட்ட தினசரிகளைப் போன்று இஸ்லாமியர்கள் பங்கெடுக்கும் ஊடகங்களும் அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதை வேண்டுகிறோம்.

ஊரில் நடைபெரும் இது போன்றவைகளை சுட்டிக்காட்ட உங்களுக்கு வாய்ப்புகள் இல்லையா? தாராளமாக அதிரைநிருபர் தளத்தின் நெறியாளரோடு மின்னஞ்சல் வழி (editor@adirainirubar.in) தொடர்பு கொள்ளுங்கள், விரைவில் அல்லாஹ்வின் உதவியுடன் உண்மையை ஊராருக்கு எடுத்துரைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறோம். இஸ்லாமிய மார்க்கத்திற்கு ஆதரவாகவும் உங்களுக்கு பக்க பலமாக இருந்து செயல்பட தயாராக இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ். [தனி மனித தரக் குறைவு, வார்த்தை தாக்குதல் அவர்களின் நடத்தைகள் பற்றிய விமர்சனம் தவிர்த்திடுங்கள்].

இது போன்ற விரயங்களை தற்பெருமையாக இணையத்தில் வெளியிட்டு இதனை படிப்பவர்கள் சந்தோசமடைவார்கள் என்று தவறான நோக்கத்துடன் இருக்கிறார்கள் மந்தி விருந்து ஏற்பாட்டாளர்கள். இதற்கு விதிவிலக்காக அதிரையில் மார்ர்கத்திற்கு புறம்பான வீண் விரயங்களை சுட்டிக்காட்டி அதிலிருந்து நம்மக்களை தவிர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படும் இன்ஷா அல்லாஹ். இதனை பிற வலைப்பூக்கள் செய்யத் தவறினாலும் நாம் அதிலிருந்து பிறழாமல் எவருக்கும் அஞ்சாமல் செயல்படுவோம், மவுனமாக இருக்க மாட்டோம் என்பதற்கு இந்த பதிவும் முந்தைய பதிவுகளும் சாட்சி பகரும் என்பதை நினைவுருத்துகிறோம்.

இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மிக நெருக்கமானவர்களே அவர்கள் ஒவ்வொருவரையும் நேரிலோ அல்லது அலைபேசி வாயிலாகவோ அழைத்து எடுத்துச் சொல்வது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால் இதனை ஒரு கண்டன பதிவாகவே பொதுவில் உங்கள் அனைவரின் முன் வைக்கிறோம். 

இஸ்லாமிய சமுதாய, நம்மக்களுக்கு ஒவ்வாத, புறம்பான செயல்கள் எதுவாயின் அதனை விமர்சிக்கவும், அவற்றிலிருந்து நம்மக்களை தவிர்த்திட வைக்கவும் அதிரைநிருபர் தளம் தயவு தாட்சனைகளின்றி செயல்படும் இன்ஷா அல்லாஹ் !

அதிரைநிருபர் பதிப்பகம்

56 Responses So Far:

Unknown said...

சிந்திக்க வேண்டிய பதிவு.பசித்தோருக்கு உணவளிக்க வேண்டிய நம்மவர்கள் பெருநாள் விருந்து என்று பகட்டுக்காகவும் பெருமைக்காகவும் ஆடம்பர செலவுகளில் கவனம் செலுத்தாமல்
இல்லாதவர்களுக்கு ஈதால் எனும் இஸ்லாமிய கோட்பாடு படி வாழ வேண்டும்.இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் இது போன்ற விசயங்களை தவிர்ப்பது நல்லது
------------------------------------
இம்ரான்.M.யூஸுப்
மக்கள் தொடர்பு செயலாளர்
அமீரக சமூகநீதி அறக்கட்டளை

Yasir said...

சிந்திக்க வேண்டிய பதிவு.பசித்தோருக்கு உணவளிக்க வேண்டிய நம்மவர்கள் பெருநாள் விருந்து என்று பகட்டுக்காகவும் பெருமைக்காகவும் ஆடம்பர செலவுகளில் கவனம் செலுத்தாமல்
இல்லாதவர்களுக்கு ஈதால் எனும் இஸ்லாமிய கோட்பாடு படி வாழ வேண்டும்.இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் இது போன்ற விசயங்களை தவிர்ப்பது நல்லது

Unknown said...

நம் சமுதாயத்திலேயே பொருளாதார ரீதியாக எத்தனையோ ஏழை எளிய மக்களின் கண்ணீரை துடைக்க இந்த மந்திக்காகும் செலவு பயன் பட்டால் என்ன என்ற கேள்வி கொஞ்சம் சிந்திக்கத்தான் தூண்டுகின்றது.

சாப்பிடும் அனைவரும் சாப்பாட்டுக்கு ஒன்றும் வழி இல்லாதவர்கள் அல்ல.
நம் சமுதாயத்தில் எத்தனையோ ஓட்டை உடைசல்கள் , சரி செய்யப்படவேண்டிய நிலையில் இப்படி மந்திக்கு ஆகும் செலவை கொஞ்சம் சிந்தனை செய்து மாற்று வழி யோசித்து இந்த பணத்தை இந்த பதிவில் சொன்னது போல் பல இன்னல்களுக்கு இடையில் சிக்கி தவிக்கும் குடும்பங்களின் துயர் துடைக்க அல்லது

மாற்று மத நண்பர்களை ஈர்க்கும் வண்ணம் ஏதாவதொரு இஸ்லாத்தை ஈர்க்கும் விஷயங்களுக்கு பயன்படுத்தலாம்.

இனி வரும் நாட்களில் மந்தி ஏற்ப்பாட்டாளர்கள் யோசிப்பது சாலச்சிறந்தது.

அபு ஆசிப்.

Shameed said...

ஏதோ செவ்வாய் கிரகத்திற்கு 8 வது ராக்கெட் விட்டது போல 8 வது மந்தி விருந்து என்று மார் தட்டிக்கொள்வது கொஞ்சம் கூட நல்லா இல்லை

Anonymous said...

sariyana kelvi

adiraimansoor said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அருமையான பதிவு

////முஸ்லீம்கள் என்றால் பிரியானி, ஆட்டுக்கறி திங்கிறவர்கள் என்று சொல்லும் பிற மத்தத்தவரை அழைத்து, பெருநாள் விருந்து என்று நம்முடையை அழகிய விருந்து உபசரிப்பை காட்டி, அவர்களுக்கு நாங்கள் இஸ்லாத்தில் இருப்பதால் எவ்வளவு சந்தோசமாக உள்ளோம் என்பதை சொல்லி தூய இறை மார்க்கத்தை எத்தி வைக்க ஓர் வாய்ப்பாக மந்தி சமைத்து முந்திக் கொண்டு நன்மையின் பக்கம் அழைக்கக் கூடாதா?/////


மாற்று மதத்தாரிடம்
தமது சந்தோசத்தை வெளிப்படுத்துமுகமாக மந்தி சமைத்து விருந்தோம்பல் செய்வதாக இருந்தால் மேலே கொடுக்கப்படுள்ளதை நடைமுறை படுத்தினாலும் பிரையோஜனமாக இருக்கும்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இது போன்ற அர்த்தமற்ற வீண் விரைய விருந்துகள் முற்றிலும் புறக்கணிப்பட வேண்டியவைகளே...

நான் சென்ற வருடம் ஊரிலிருக்கும் போது இது வீண் விரையம் என்று இந்த விருந்துக்கு சென்ற ஒரு சில சகோதரர்களிடம் எடுத்துச் சொன்னேன். ஆனால் அவர்கள் இத்தனை வருடமாக செய்து வருகிறோம், யாரும் சொல்லததை இவன் சொல்ல வந்துட்டான் என்று ஏளனமாக பேசினார்கள்.

இது போன்றவைகளுக்கு செலவுகள் செய்யும் பணத்தில், ஊரில் எத்தனையோ பேர் வட்டி என்ற கொடுமையால் அறிந்தோ அறியாமலோ விழுந்து கஷ்டப்படுகிறார்கள், அவர்களில் வருடத்திற்கு ஒருவரையாவது மீட்டெடுக்க முன் வரக்கூடாதா?

ஊரில் எத்தனையோ எழை கன்னிப் பெண்கள் தங்களது திருமணச் செலவு செய்ய நாதியற்று இருக்கிறார்களே, இது போன்ற பெருநாள் தினத்தில் மந்திக்காக ஒன்று கூடுபவர்கள் அந்த ஏழைகளுக்கு பெருநாள் தினத்தில் திருமணம் நடத்தி வலிமா விருந்தை அல்லாஹ்வுக்காக ஒன்றுகூடி மந்தி சமைத்து அந்த ஏழை குடும்பங்களிடம் மகிழ்ச்சியை வரவழைக்க முன்வரக் கூடாதா?

அனாதை பிள்ளைகள் உள்ள நமதூர் எத்தீம்கானா மதர்ஸாவுக்காகவது அன்றைய தினம் இது போன்ற மந்தி சமைத்துக் கொடுத்து அந்த அனாதைகளின் முகத்தில் மகிழ்ச்சியை மிளிரவிட்டு நன்மையை அள்ள முந்தக் கூடாதா?

பல வருடங்களாக இஸ்லாமியர்கள் ஏற்றம் பெறவும் முஸ்லீம் ஏழைகளுக்கு உதவுவதற்காகவே இயங்கி வரும் அதிரை பைத்துல்மாலை அணுகி நாங்கள் 300 ஏழைகளுக்கு உணவளிக்க இருக்கிறோம் என்று சொல்லி அவர்களின் ஆலோசனையின் பேரில் ஏழைக் குடும்பங்களுக்கு பெருநாள் தினத்திலோ அல்லது அடுத்த நாளோ மந்தி சமைத்து உணவளிக்க முன்வரக் கூடாதா?

ஊரில் பெருளாதார ஏற்றத்தாழ்வுகளாலும், குலப்பெருமையாலும் பிரிந்து கிடக்கும் பிறதெரு சொந்தங்களை அழைத்து ஒற்றுமையின் அவசியத்தை வழியுறுத்தி உறுக்கமான, கவலையான மார்க்க உபதேசங்கள் செய்து சந்தோசமாக ஒருவருக்கு ஒருவர் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த மந்தி சமைத்து ஊர் ஒற்றுமையை நிலை நாட்ட முயற்சிகள் செய்யக் கூடாதா?

முஸ்லீம்கள் என்றால் பிரியானி, ஆட்டுக்கறி திங்கிறவர்கள் என்று சொல்லும் பிற மத்தத்தவரை அழைத்து, பெருநாள் விருந்து என்று நம்முடையை அழகிய விருந்து உபசரிப்பை காட்டி, அவர்களுக்கு நாங்கள் இஸ்லாத்தில் இருப்பதால் எவ்வளவு சந்தோசமாக உள்ளோம் என்பதை சொல்லி தூய இறை மார்க்கத்தை எத்தி வைக்க ஓர் வாய்ப்பாக மந்தி சமைத்து முந்திக் கொண்டு நன்மையின் பக்கம் அழைக்கக் கூடாதா?

உணவுப் பழக்கமோ அல்லது சுகாதரச் சூழலோ எதன் விளைவோ அல்லது வேறு எதனாலோ ஊரில் நிறைய பேர்உயிர்கொல்லி நோயான கேன்சரில் பாதிக்கப்பட்டுள்ளார்களே, அவர்களை கண்டறிந்து அவர்களின் நோய்கான செலவுகளுக்கு இதுபோன்ற அனாச்சார செலவுகளுக்கு கிடைத்த தொகையை கொடுத்து உதவ முன்வரக் கூடாதா?

வசதி வாய்பின்றி கல்வி பயில கஷ்டப்பட்டு வெளியில் சொல்ல முடியாத எத்தனையோ இஸ்லாமிய சொந்தங்கள் உள்ளார்கள், ஏன் சில தினங்களுக்கு முன் கல்வி உதவி கேட்டு வலைப்பூக்களில் நிதியுதவி வேண்டி கோரிக்கை வைத்துள்ளார்கள், இது போன்றவர்களின் கல்வி செலவுக்கு மந்திக்கு ஆகும் செலவை கொடுத்து நன்மையை அள்ளிக் கொள்ளக்கூடாதா?

ஊரில் எத்தனையோ மனநோயாளிகள் சரியான பராமரிப்பின்றி அன்றாடம் சிரமத்துக்கு உள்ளாகிறார்களே, குறைந்த பட்சம் பெருநாள் தினத்திலாவது நல்ல உடையுடுத்தி, நல்ல உணவு கொடுத்து கவுரவித்து சந்தோசப்படக் கூடாதா?

எத்தனையோ நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் பல சிரமத்துக்கு மத்தியில் உள்ளார்கள், இது போன்ற பெருநாள் தினத்தில் அவர்களை சந்தித்து நலம் விசாரித்து, அவர்களுக்கு உணவோ அல்லது உதவியோ செய்து, இஸலாமியர்கள் இவ்வளவு கருணையாளர்கள் என்று அவர்களின் சிந்தனையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி தூய இஸ்லாத்தை நாடி அவர்கள் நம் வழி நாடி வர ஒரு தூண்டுகோலை ஏற்படுத்தக்கூடாதா?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும் மன்சூர் காக்கா,

நீங்கள் குறிப்பிடும் யோசனை மிகச் சரி.. பிற மதத்தவரின் அன்பை பெற நல்ல வாய்ப்பாக அமையும். இந்த விருந்தி கலந்துக்கொண்ட உங்களுக்கு தெரிந்த அந்த விருந்து அலைப்பேசி மூலம் அழைத்து சொல்லுங்கள் அடுத்தவருடம் நீங்கள் எடுத்துக்காட்டிய விருந்து உபசரிப்பு முறையை கடைப்பிடிக்க சொல்லுங்கள். ஊரில் உள்ள அந்த விருந்தில் கலந்துக்கொண்ட என்னுடைய நண்பன் ஒருவரிடம் பேசினேன் இது தொடர்பாக.

Adirai pasanga😎 said...

வரவேற்கத்தக்க பதிவு -

///நோன்பு காலத்தில் நீங்கள் கேட்ட மார்க்க சொற்பொழிவுகளில் நபி(ஸல்) அவர்களும், சத்திய சஹாபாக்களும் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை ஒரு கணம் சிந்தித்து பாருங்கள். பர்மா, சிரியா, பாலஸ்தீன், ஈராக் போன்ற நாடுகளில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டு நாளுக்கு நாள் உண்ண உணவிற்கு எண்ணிலா துயரங்களை சந்திக்கிறார்களே என்று எண்ணி, அல்லாஹ் நம்மை இந்த அளவுக்கு வைத்திருக்கிறானே என்று அவனுக்கு அதிகமதிகம் நன்றி செலுத்துங்கள்.///

இதனை நம் சகோதரர்கள் ஒரு நடுனிலை நோக்கோடு சிந்தித்து சீர்தூக்கி செயல்பட்டால் நோன்பினால் பெற்ற பலன் தொடரும் என்பது திண்ணம்.

sabeer.abushahruk said...

இது போன்ற வீண் விரய விருந்துகளை புறக்கணியுங்கள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//முஸ்லீம்கள் என்றால் பிரியாணி, ஆட்டுக்கறி உண்பவர்கள் என்று சொல்லும் பிற மதத்தவரை அழைத்து, பெருநாள் விருந்து என்று நம்முடையை அழகிய விருந்து உபசரிப்பை காட்டி, அவர்களுக்கு நாங்கள் இஸ்லாத்தில் இருப்பதால் எவ்வளவு சந்தோசமாக உள்ளோம் என்பதை சொல்லி தூய இறை மார்க்கத்தை எத்தி வைக்க ஓர் வாய்ப்பாக மந்தி சமைத்து முந்திக் கொண்டு நன்மையின் பக்கம் அழைக்க வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும்.//

சிறப்பான யோசனை.
ஏதோ நட்பை மகிழ்விக்க செய்யும் உணவுச் செலவின் அதே அளவுக்கு மாற்று மதத்தவருக்கும் பகிர்ந்து நம்மை அவர்களுக்கு உணரச் செய்து அவர்களுடன் நட்புடன் எத்திவைக்கவும் செய்வதற்கு எதிர்காலத்தில் சிந்திக்க வேண்டும்.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.
மிகவும் அவசியமான எச்சரிக்கைப்பதிவு!"மந்தி"யின் பந்தி"க்கு ஆன அழைப்பை "தந்தி" போல் பாவித்து"முந்தி இருப்பதும், ஓர் இடத்தில் "குந்தி"அனைவரும் குதூகலிப்பதும், வீன்விரயம் செய்வதும் நம்மவரிகளின் நடத்தையை பிறர் கான "சந்தி" சிரிக்கவைப்பதும் நிறுத்தபடாவிட்டால் பிந்திவரும் நம் நாளைய சமுதாயத்திற்கும் இந்த மந்தி(குரங்கு)மந்த புத்தி தொத்தி வரும். இப்படி மந்தி பந்தியின் மிச்சம் "தொந்தி" பெருத்ததைத்தவிர்த்து வேறேதும் உண்டா?

adiraimansoor said...
This comment has been removed by the author.
m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// நான் சென்ற வருடம் ஊரிலிருக்கும் போது இது வீண் விரையம் என்று இந்த விருந்துக்கு சென்ற ஒரு சில சகோதரர்களிடம் எடுத்துச் சொன்னேன். ஆனால் அவர்கள் இத்தனை வருடமாக செய்து வருகிறோம், யாரும் சொல்லததை இவன் சொல்ல வந்துட்டான் என்று ஏளனமாக பேசினார்கள். //

நம்மவர்கள் எதில்தான் பேசவில்லை ! இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சொன்னால் இதே போன்ற கேளிக்கைகளில் தோளுக்குமேல் தனது பிள்ளை வளர்ந்த பின்னரும் தொடரும் நண்பர் சொன்னது மகன் வீட்டுக்கு நேரத்திற்கு வருவதில்லை, வீட்டிலுல்லோரை எதிர்த்தே நடந்து கொள்கிறான் என்று... திருப்பிக் கேட்காமல் கண்ணாடி பின்னால் நின்று கொள் அந்தக் கண்ணாடி முன்னால் உன் மகனை நிற்கவைத்து பார்க்கச் சொல் ! என்றேன்...

இதே நிலைதான் மருமகன் எடுத்தவர்களின் நிலையும்... !

ஏற்கனவே பலமுறை தனிப்பட்ட முறையிலும், கூடியிருக்கும்போது காட்டமாகவே எதிர்த்தும் இருக்கிறோம். இந்தப் பதிவு மிகவும் வெளிப்படையாகவே பதிக்கப்பட்டுள்ளது, இதில் கலந்து கொண்டவர்களின் வீட்டிலுள்ளவர்களின் பெண்களும் வாசிக்கத்தான் செய்வார்கள். இன்னும் மல்லுக்கட்டாமல் விருந்தோம்பலை சிறந்த முறையில் நண்பர்களுக்குள் வைத்துக் கொள்ளுங்கள், பகட்டுக்காக சாப்பாட்டில் இருக்கும் எல்லையோர் முறுக்குக் கம்பிபோல் நெஞ்செலும்பை படம் பிடித்து காட்டாதீர்கள் !

கிரவ்னு சரியாத்தான் சொன்னே !

மந்தி"யின்
பந்தி"க்கு
முந்தி-க்கொண்டு
குந்தி-யிருப்பதோ
சந்தி-க்கும்
மந்தி-புத்தியோடு
தொந்தி-மிச்சம்

adiraimansoor said...

ஈத் மிலன் என்று சொல்லக்கூடிய பெருநாள் சந்திப்பு என்று மாற்று மதத்தின் முக்கியஸ்த்தர்களையும் அரசாங்கத்தில் முக்கிய பொறுப்புகளில் பனிபுரியும் அலுவளர்களையும் அழைத்து இதுபோன்று மந்தி போட்டு விருந்தோம்பல் செய்தால் அவர்களிடம் இஸ்லாம்பற்றி இருக்கும் குரோத மனப்பான்மை அவர்களை விட்டொழியும்
பாசிச சக்திகளை வேரோடு வெட்டி எறியலாம்
நாம் எப்பொழுதும் சாப்பிடக்கூடிய இப்படிபட்ட விருந்தோம்பல்களை ஏன் இஸ்லாத்திற்காக செய்யக்கூடாது பெரும்பாலும் அரசாங்க பொறுப்புகளில் பனிபுரியும் அலுவலர்களை நாம் அரவணைத்தால் நம்மையும் அவர்கள் அரவணைக்க வாய்ப்புகள் கூடுமல்லவா முத்துப்பேட்டையில் நடக்கும் சம்பவங்கள் போன்று நம்தூரில் நடக்காமல் பாதுகாத்துக்கொள்ளலாம் அல்லவா
இதை தயவுசெய்து சம்பந்தப்பட்டவர்கள் ரொம்பவே சிந்திக்கவேண்டும் சீர்தூக்கிப்பார்க்கவேண்டும் நம் வயிற்றுக்குள் செல்லும் மந்தி விருந்தோம்பல் அவர்கள் வயிற்றுக்குச்சென்றால் அந்த மந்தி நமக்காக வேளை செய்யும் வாய்ப்புகளை நாம் ஏன் ஏற்படுத்தக்கூடாது

மந்தி
தந்தி
பந்தி
குந்தி
தொந்தி
வா வா வா
க்ரவுன் மச்சான்
அசத்திரியலே

crown said...

100'/, Fact... Great A N.
---------------------------------------
Great A.N.

adiraimansoor said...

மந்திபோடும் சகோதரர்கள் சிந்தனைக்கு

ஜபருல்லா முஸ்தபா என்ற சகோதரர் ADTக்கு எழுதிய மடலில்

சோமாலியாவில் உணவு கிடைக்காமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர். பஞ்சமும், பட்டினியும் தலை விரித்தாடுகிறது. பல லட்சம் பேரின் உயிர்கள் இன்று ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பஞ்சம் பெரிதாகியுள்ளது, நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்த மக்களுக்கோ சரியான உணவு கூட கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். பசியால் அழும் குழந்தைகளுக்கு கால் வயிறு உணவு அளிக்கக் கூட வழியில்லாமல் பெற்றோர்கள் சாப்பாட்டுத் தட்டுடன் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர்.

புனித ரமழானுடைய நாட்களில் நோன்பை நோற்ற நிலையில் அல்லாஹ்வின் மார்க்கத்துக்காக போராடும் எகிப்திய சகோதரர்கள்- என உலகில் பல பகுதிகளிலும் சொந்த நிலத்தையும், சொந்த பந்தங்களையும் கலவரங்களில் இழந்து விட்டு வயதான பெற்றோரையும் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு ஒதுங்க இடமில்லாமல் நாடோடிகளாக அலைந்து கொண்டிருக்கும் மக்களுக்காக புண்ணிய மிகு மாதத்தில் உடனடியாக நாம் செய்ய வேண்டியது

Meerashah Rafia said...

இதைச்சொன்னா நம்மள முட்டா பயல்னு சொல்லுவானுக..

இது வீண் விரயமா இல்லையா என்பதைப்பற்றி ஒவ்வொரு பெருநாள் குத்பா உரையிலும் சொல்லவேண்டிய அவசியம் வந்துவிட்டது என்றே தோன்றுகின்றது. இதுபற்றி விழுப்புனர்விற்கு யாரவது ஆலிம்களிடம் பத்தவைத்தால் நலம்..

Meerashah Rafia said...

Eid extravagance is 'unIslamic', say scholars
http://www.arabnews.com/news/460999

Unknown said...

இளம் வாலிபர்களே,

மந்திக்கு முன் கொஞ்சம் சிந்தியுங்கள்.

அபு ஆசிப்.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

மந்திக்கு முந்து என்பார்கள் இங்கு என்னடானா மந்தி விருந்தை திட்டுவதில் முந்திக்கொண்டு இருக்கின்றீர்கள் நல்ல விஷயம்
ஏழை குமர் விஷயத்தோடு மந்தியை ஒப்பிடுகிறோம்
நாம் அணியும் நல்ல ஆடையை பார்த்து ஒருவன் சொல்வான் இவ்வளவு விலை உயர்ந்த ஆடை அணிய வேண்டுமா? 2 ஏழை பசங்களுக்கு ஆடை கொடுக்கலாமே என்பான் (அதுவும் நாம் கொடுத்து இருப்போம் என்பது அவனுக்கு தெரியாது]வாய்க்கு வந்ததை சொல்வார்கள் [காசா பணமா]
நாம் 4 கல்யாண வீட்டில் நல்லபடி விருந்தது உண்டிருப்போம் நாமும் நம் பிள்ளைக்கு அதுபோல் செய்து இருப்போம் இதை குறை கூறி 2 பேர் இப்படி செலவு செய்வதற்கு பதிலாக 2 ஏழைக்கு திருமணம் செய்து இருக்கலாம் என்பான் [காசா பானமா]எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள்
உணவு உண்பது வீண் விரையமா [உண்ணுங்கள் பருகுங்கள் வீன்விறையம் செயாதிர்கள்]இது தானே நாயகத்தின் கூற்று
நிச்சயமாக சொல்கிறேன் அந்த விருந்தில் 10 சதவிகிதம்பேர் [மாடிவீட்டு ஏழை]சிறமப்பட்டவர்கள் உண்டிருப்பார்கள் [உங்களுக்கு தெரிய சான்ஸ் இல்லை]
கை நிறைய சம்பாதித்து தம் குடும்பத்தை கவனித்த ஒரு நண்பன் தமது நண்பர்களுக்கு விருந்து உபசரிக்க நினைத்தான் அவன் என்ன செய்ய வேண்டும் [கருவாட்டு மெலகுதண்ணி கொடுக்கலாமா]
குரிப்பு; இந்த விருந்தில் நான் கலந்து கொள்ளவில்லை[i am in tirupur]

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) சொன்னது…

[காசா பணமா]//

மந்திக்கு முந்து என்பது தவறு பந்திக்கு முந்து என்பது தான் சரி..

நீங்கள் சொல்லும் காரணம் இதற்கு பொருந்தாது. இந்த பதிவில் சொல்லப்பட்ட நியாயமான காரணத்தை பற்றி கருத்திடுங்கள் காக்கா.. இது போன்று அர்த்தமற்ற விருந்துகளை தயவு செய்து ஊக்கபடுத்த வேண்டாம்.

//உணவு உண்பது வீண் விரையமா [உண்ணுங்கள் பருகுங்கள் வீன்விறையம் செயாதிர்கள்]இது தானே நாயகத்தின் கூற்று.//

சரியாகத்தான் எடுத்துச் சொல்கிறீர்கள் ! அர்த்தமற்ற அந்த மந்தி விருந்து வீண் விரையம் என்பது சிறு பிள்ளைகளிடம் கேட்டால்கூட சொல்லுவார்கள் காக்கா..

உணவுக்காக கஷ்டப்படும் மக்கள் ஊரில் ஏராளம் இருக்கிறார்கள் அவர்களுக்கு அந்த மந்தி விருந்து கொடுத்திருந்தால் நிச்சயம் பாராட்டு வந்திருக்கும்.

//நிச்சயமாக சொல்கிறேன் அந்த விருந்தில் 10 சதவிகிதம்பேர் [மாடிவீட்டு ஏழை]சிறமப்பட்டவர்கள் உண்டிருப்பார்கள் [உங்களுக்கு தெரிய சான்ஸ் இல்லை]//

அப்போ 90% கணக்கு சரியாகத்தான் கணித்து இருக்கிறீர்கள் !

//கை நிறைய சம்பாதித்து தம் குடும்பத்தை கவனித்த ஒரு நண்பன் தமது நண்பர்களுக்கு விருந்து உபசரிக்க நினைத்தான் அவன் என்ன செய்ய வேண்டும் [கருவாட்டு மெலகுதண்ணி கொடுக்கலாமா] //

கருவாட்டு மிளகு தண்ணியோ 5 ஸ்டால் ஹோட்டல் சாப்பாடோ உணவு உணவு எதற்காக கொடுக்கப்பட்டது? யாருக்கு கொடுக்கப்பட்டது? என்பது தான் கவனிக்கபட வேண்டியது. உணவு உபசரிப்பு ஏற்பாடு செய்வதற்கு ஒரு அர்த்தமுள்ள காரணம் இருந்தால் தான் அந்த விருந்து அல்லாஹ்வின் திருப்தியும் மக்களின் திருப்தியையும் பெற முடியும் என்பதில் உங்களுக்கு மாற்று கருத்திருகாது என்று நம்புகிறேன்.

நண்பர்கள் (300 பேர்) தாராளமாக கொடுக்கலாம் மாஷா அல்லாஹ் ! ஏன் இந்த பெருமை. இது போன்ற அர்த்தமற்ற விருந்துகள் நம் முஹல்லா இளைஞர்களை "--------" என்ற வார்த்தையை கொண்டு அழைக்க ஒரு தவறான முன்னுதாரனமாக வருங்காலத்தில் சித்தரித்து காட்டும் என்பது என்னவோ மறுக்க முடியாத உண்மை.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சபீர் காக்கா,

இங்கு உணவு உண்டதை வீண் விரையம் என்று சொல்லுவது தவறு. விருந்து உபசரிப்பு யாருக்கு கொடுக்க வேண்டும் என்ற குர் ஆன் வசனத்தையும், ஹதீஸை ஞாபகப்படுத்துகிறேன்.

'ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'இஸ்லாத்தில் சிறந்தது எது' எனக் கேட்டதற்கு, '(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்' என்றார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். புகாரி 12. Volume :1 Book :2

மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. குர் ஆன் 4:36.


இந்த விருந்தில் எத்தனை ஏழைகள், எத்தனை வழிப்போக்கர்கள், எத்தனை அனாதனைகள், எத்தனை வீட்டு வேலைக்காரர்கள் இருந்தார்கள்? புகைப்படத்தில் என் பார்வைக்கு தெரிந்து, வந்திருந்த அனைவரும் அன்றய உணவு வீட்டில் சாப்பிட 100% தகுதியானவர்கள்.

பின் வரும் காரணங்களுக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்.

முஸ்லீம்கள் என்றால் பிரியானி, ஆட்டுக்கறி திங்கிறவர்கள் என்று சொல்லும் பிற மத்தத்தவரை அழைத்து, பெருநாள் விருந்து என்று நம்முடையை அழகிய விருந்து உபசரிப்பை காட்டி, அவர்களுக்கு நாங்கள் இஸ்லாத்தில் இருப்பதால் எவ்வளவு சந்தோசமாக உள்ளோம் என்பதை சொல்லி தூய இறை மார்க்கத்தை எத்தி வைக்க ஓர் வாய்ப்பாக மந்தி சமைத்து முந்திக் கொண்டு நன்மையின் பக்கம் அழைக்கக் கூடாதா?

பல வருடங்களாக இஸ்லாமியர்கள் ஏற்றம் பெறவும் முஸ்லீம் ஏழைகளுக்கு உதவுவதற்காகவே இயங்கி வரும் அதிரை பைத்துல்மாலை அணுகி நாங்கள் 300 ஏழைகளுக்கு உணவளிக்க இருக்கிறோம் என்று சொல்லி அவர்களின் ஆலோசனையின் பேரில் ஏழைக் குடும்பங்களுக்கு பெருநாள் தினத்திலோ அல்லது அடுத்த நாளோ மந்தி சமைத்து உணவளிக்க முன்வரக் கூடாதா?

ஊரில் எத்தனையோ மனநோயாளிகள் சரியான பராமரிப்பின்றி அன்றாடம் சிரமத்துக்கு உள்ளாகிறார்களே, குறைந்த பட்சம் பெருநாள் தினத்திலாவது நல்ல உடையுடுத்தி, நல்ல உணவு கொடுத்து கவுரவித்து சந்தோசப்படக் கூடாதா?

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

தம்பி மு.செ.மு. சபீருக்கு,

உங்கள் விலாசத்தை சேர்ந்த மு. செ.மு. அப்துல் காதர் ( என்ற ) அபு ஆசிப் எழுதிக்கொள்வது என்னவென்றால்,

இதிலருந்தே தெரிகின்றது, நீங்கள் இந்த பதிவு முழுவதையும் படிக்கவில்லை என்று. ஒருவர் நண்பனுக்கு விருந்து கொடுப்பதில் தவறு இல்லை. இதன் இடம், பொருள், ஏவல் கவனிக்கப்படவேனும் . நண்பனுக்கு கொடுத்த அந்த விருந்தை உண்டவர்கள் அனைவரும், ஒரு நாளைக்கு முன்புதான், இடியாப்பம், ரொட்டி, இறைச்சி, கோழி பொரியல், கடப்பாசி, வட்டிலப்பம், இன்னும் என்னென்ன கொலஸ்ட்ரால் அயிட்டங்கள் உள்ளனவோ அனைத்தையும் ஒரு சேர உள்ளே தள்ளிவிட்டு, அது வயிற்ருக்குள் செரிமானம் அடங்குவதற்கு முன் ஒரு ஆடம்பர விருந்து என்பது கொஞ்சம் யோசிக்கவேணும் என் குடும்ப உறுப்பினரே.

இந்த பதிவில் சொன்ன எத்தனையோ சமதாய மற்றும் , இஸ்லாமிய விழிப்புணர்வு விஷயங்கள் என்று இந்த பணத்தை அந்த நபரோ அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்டவரோ செலவு செய்தால் கண்டிப்பாக அது இறைவனிடத்தில் உங்கள் நன்மைகளை கூட்டித்தர வாய்ப்பாக அமையும்.

இதுவன்றி, பசி என்றால் என்னவென்று அறியாதவர்களும், செரிமானக்கொலாறினால் அவதியுருபவர்களும் தான் அநேகமாக இதில் கலந்து கொண்டு இருப்பார்கள் ஒரு சிலரைத்தவிர. பசியின் அருமையை அறிந்த எத்தனை ஏழைகள் அங்கு விருந்துக்கு அழைக்கப்பட்டார்கள் ?

இதையெல்லாம் கொஞ்சம் யோசித்து, இத்தனை ஆலிம்கள் உலமாக்கள் உள்ள நம் ஊரில் எத்தனையோ போதுமான பொருளாதார விடியலின்றி அல்லலுறும் குடும்பங்களை கணக்கெடுத்து இந்த நிதியை அந்த குடும்பங்களின் செலவுகளுக்கோ அல்லது இன்ன பிற சமுதாயத்தில் களைந்து எடுக்கப்படவேண்டிய தீய விஷயங்களை அப்புறப்படுத்தவோ பயன் படுத்தலாம் என்ற அதிரை நிருபரின் ஆரோக்கியமான , வரவேற்க்கத்தக்க
ஆலோசனைகள் , கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கப்பட வேண்டிய வையே
என்பது என் எண்ணம்.

அன்புடன் தங்கள் குடும்ப உறுப்பினர்,

அபு ஆசிப் (மு. செ. மு. )

தாஜுதீன் (THAJUDEEN ) said...

(மு.செ.மு. )சபீர் காக்கா,

இந்த வீண் விரய மந்தி விருந்தை வலிமா விருந்தோடு ஒப்பீடு செய்து கருத்திடமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

பல நாள் பசியில் நபி(ஸல்) அவர்கள் வயிற்றி கல்லை கட்டி வைத்த சம்பவங்களையும், தன் மகள் பேரப்பிள்ளைகள் பல நாட்கள் பசியால் இருந்துள்ளார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லி அழுத சம்பவங்களையும், விருந்து கொடுத்த உங்கள் நண்பருக்கு ஞாபகபடுத்துவது நம் எல்லோருடைய கடமையல்லாவா காக்கா?

Shameed said...

//குரிப்பு; இந்த விருந்தில் நான் கலந்து கொள்ளவில்லை[i am in tirupur]//

"மந்திக்கு பிந்தி வந்தாலும், தந்தி போல் [காசா / பணமா] தகவல்கள் !

அதானே முந்திக்கிட்டவங்களுக்கு அதெப்படி தெரியும் !? - சரி சரி மீண்டும் ஒருமுறை தலவுலேயிருந்து வசிச்சுடலாம்... !

சகோதரர் மு.செ.மு.ச.அ. அவர்கள் வித்தியாசமாக யோசிப்பவர்கள் ! நல்ல வேளை அவர்கள் மந்திக்கு முந்திக் கொள்ளவில்லை, இருந்திருந்தால் அதன் சிறப்புகளை அருமையான கட்டுரையாக வடித்திருப்பார்கள் ! மாஷா அல்லாஹ் !

அப்துல்மாலிக் said...

நிறைய சிந்திக்க வைத்த பதிவு..
குறிப்பாக பெருநாள் கொண்டாட வெளியூர்/வெளிநாட்டிலிருந்து வரும் அன்பர்கள் குடும்பத்துடன் இருப்பதையே பெண்கள் விரும்புவர்.

வெளிப்படையான பதிவுக்கு என் பாராட்டுக்கள் அ.நி.

குறைந்தது 5 பேராவது இது பற்றி யோசித்தால் அது மிகப்பெரும் வெற்றிதான்..

Shameed said...
This comment has been removed by the author.
M.I.அப்துல் ஜப்பார் said...

\\ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. குர் ஆன் 7:31\\

விருந்துகளிலேயே கேட்ட விருந்து ஏழைகளை புறக்கணிக்கும் விருந்து
இந்த அடிப்டையில் வேண்டுமானால் இந்த விருந்தை கண்டிக்கலாம் தவிர மற்ற படி மார்க்க அடிப்படையில் இதை தவறு என்று சொல்லமுடியாது

நபி (ஸல்) அவர்களை சஹாபாக்கள் பல முறை விருந்துக்கு அழைத்ததாகவும் அவர்கள் விருந்தில் கலந்துக்கொண்டதாகவும் நாம் ஹதிஸ்களில் பார்க்க முடிகிறது.

Unknown said...

//மற்ற படி மார்க்க அடிப்படையில் இதை தவறு என்று சொல்லமுடியாது//

சகோ. அப்துல் ஜப்பார்,

விருந்தை யாரும் தவறென்று சொல்ல முடியாது. அது சுன்னத்.
இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.

இங்கே சொல்ல வருவது என்னவென்றால், இப்பொழுது அதிரை உள்ள சூழ்நிலையில் இந்த செலவை செய்ய வேறு ஒரு ஆக்க பூர்வமான , சமூக தீமைகளில் ஏதாவது ஒன்றை களைந்தெடுக்க பயன் படுத்தி இருக்கலாமே என்ற ஆதங்கம் தான் இந்த பதிவு என்பது என் கணிப்பு.

அபு ஆசிப்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

M.I.அப்துல் ஜப்பார் சொன்னது…

//........இந்த அடிப்டையில் வேண்டுமானால் இந்த விருந்தை கண்டிக்கலாம் தவிர மற்ற படி மார்க்க அடிப்படையில் இதை தவறு என்று சொல்ல முடியாது//

விருந்தோம்பலை யாரும் கண்டிக்கவில்லை மாறாக ஏன் இந்த பகட்டும், அதெற்கென வசூலும், பந்தியை படம் போட்டு பாருங்கள் என்று காட்டுவதையுமா சுட்டிக்காட்டக் கூடாது !?

Meerashah Rafia said...

M.I.அப்துல் ஜப்பார் சொன்னது…
// இந்த விருந்தை கண்டிக்கலாம் தவிர மற்ற படி மார்க்க அடிப்படையில் இதை தவறு என்று சொல்லமுடியாது.

நபி (ஸல்) அவர்களை சஹாபாக்கள் பல முறை விருந்துக்கு அழைத்ததாகவும் அவர்கள் விருந்தில் கலந்துக்கொண்டதாகவும் நாம் ஹதிஸ்களில் பார்க்க முடிகிறது.
//

ஆம்.இதையும் கருத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்..
இசுலாத்தில் ஆடம்பரம் கண்டிக்கப்பட்டுள்ளது.. விருந்து வரவேற்கப்பட்டுள்ளது.. அது ஏழைக்குத்தான் கொடுக்கவேண்டும் என்ற வரையறை இல்லை.. விருந்தோம்பலோடு ஆடம்பரமும் தெரிந்தால் தவிர்க்கவும்..

இருப்பினும், நம் கண்முன் ஏழை மக்கள் நிறைந்து கிடக்க அவர்களையும் கொஞ்சம் பார்ப்பது நல்லது.. உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஜகாத்தை முறையாக தத்தமது ஊரில் பைத்துல்மால் அமைத்து கொடுத்திருந்தால் ஏழ்மையை விரட்டிருக்கலாம்.. ஒவ்வொரு அடுக்குமாடி கட்டிடத்தின்கீழும் அரைகுறை ஆடையுடன் பிச்சைக்காரன் இருந்திருக்கமாட்டான்..

ZAKIR HUSSAIN said...

பிசினஸ் டிப்ஸ்: அதிராம்பட்டினத்தில் கூடிய விரைவில் Gastroenterologists ஆக க்ளினிக் திறக்கிறார்களோ நல்ல வருமானம் பார்க்கலாம்.

அளவுக்கு அதிகமான விருந்துகள்....அளவுக்கு அதிகமான மாத்திரைகளில் கரையும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

விருந்துகளில் கேட்ட விருந்து ஏழைகள் இல்லாத விருந்து என்றால், அந்த கேட்ட விருந்தை நிச்சயம் இஸ்லாம் ஆதரிக்காது, அப்படி இஸ்லாம் ஆதரிக்காதது அது மார்க்க விரோதம்தானே..

மனித இனத்தின் முன்மாதிரி, அகிலத்தின் அருட்கொடை, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஜனாதிபதி, இஸ்லாமிய போர்படைத் தலைவர், பொருளாதார மாமேதை, கண்ணியமான குடும்பத் தலைவர், இறைத்தூதரர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறந்த பின்பு அவர்களிடம் இருந்தது “பைலா என்ற வெள்ளை நிற கோவேறி கழுதை மற்றும் அங்குமிங்குமாக ஒட்டப்பட்டிருந்த போர்வை இவை மட்டுமே ரசூலுல்லாஹ்வுடைய கடைசி சொத்து." உலக வரலாற்றில் எந்த ஒரு தலைவரும் இவ்வாறு வாழ்ந்து மரணித்ததாக எந்த ஒரு சரித்திர ஏடுகளிலும் காணமுடியாது. நபி(ஸல்) அவர்கள் போல் இனி ஒரு மனிதர் யாரும் வரப்போவதும் இல்லை.

நபி(ஸல்) அவர்களிள் வாழ்வில் படிப்பினை பெறவில்லை என்றால் வேறு யார் வாழ்வில் படிப்பினை பெறப்போகிறோம்?

Unknown said...

//பிசினஸ் டிப்ஸ்: அதிராம்பட்டினத்தில் கூடிய விரைவில் Gastroenterologists ஆக க்ளினிக் திறக்கிறார்களோ நல்ல வருமானம் பார்க்கலாம். //

அதிரை தற்போது சென்றுகொண்டிருக்கும் சூழ்நிலயில் நல்லதொரு
வியாபார டெக்னிக்.

Zakir , நீ முதல் போடறியா அல்லது நான் போடவா ?

யார் போட்டால் என்ன வியாபாரம் அமோகமா நடக்கும் .

அபு ஆசிப்.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

/////இது போன்ற வீண் விரய விருந்துகளை புறக்கணியுங்கள், நீங்கள் அறிந்தோ அறியாமலோ இதற்கு ஆதரவு கொடுத்திருந்தால் அதற்காக, அல்லாஹ்விடம் தவ்பா செய்யுங்கள்/////
அல்லாஹ் விடம் தவ்பா செய்யும் அளவிற்கு இது மோசமான செயலா?
கல்யாண விருந்திலாவது உணவு விரையமாக்கப்படும் நிச்சயமாக இந்த மந்தி உணவு இதுவரை [௮ முறையாம்]வீணாகியது இல்லை பத்தாமல் வேண்டுமானால் போகிருக்கும்

////அதிரையின் செய்தி ஊடகங்களில் பங்கெடுக்கும் சகோதர்களுக்கு அன்பான வேண்டுகோள், நீங்கள் ஊரின் அன்றாட நிகழ்வுகளை சுடச் சுட செய்திகளாக பல இன்னல்களுக்கு மத்தியில் வெளியிட்டு வருகிறீர்கள் மாஷா அல்லாஹ்!, இதனை மிகப்பெரும் நற்பணியாக செய்து வருகிறீர்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இஸ்லாமிய மார்க்கத்துக்கு விரோதமான இது போன்ற விரயங்களை, புறம்பான நிகழ்வுகளை வெறும் செய்தியாக மட்டும் போடாமல், அந்த அனாச்சாரங்களை மனத்திடத்துடன் கண்டித்தும் வெளியிடுங்கள்////
அதற்குத்தான் நீங்கள் இருக்கிறீர்களே! ஹ ஹ ஹா[சீரியஸ் வேண்டாம்]
தம்பி தாஜுத்தீன் சொன்னது//// பல வருடங்களாக இஸ்லாமியர்கள் ஏற்றம் பெறவும் முஸ்லீம் ஏழைகளுக்கு உதவுவதற்காகவே இயங்கி வரும் அதிரை பைத்துல்மாலை அணுகி நாங்கள் 300 ஏழைகளுக்கு உணவளிக்க இருக்கிறோம் என்று சொல்லி அவர்களின் ஆலோசனையின் பேரில் ஏழைக் குடும்பங்களுக்கு பெருநாள் தினத்திலோ அல்லது அடுத்த நாளோ மந்தி சமைத்து உணவளிக்க முன்வரக் கூடாதா?////
இந்த விருந்ததை ஏற்பாடு செய்தவர்கள்[பொருள் உதவி]நிச்சயமாக நீங்கள் சொல்லும் பைத்துல் மாலுக்கும்,எழைகுமருக்கும்,மற்றும் சதக்கா,ஜக்காத் அனைத்தையும் சரியாக செய்தவர்கலாகத்தான் இருப்பார்கள் என்று நம்புவோம்

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

மு.செ.மு அப்துல் காதர் [காகா]சொன்னது ////// இந்த பதிவில் சொன்ன எத்தனையோ சமதாய மற்றும் , இஸ்லாமிய விழிப்புணர்வு விஷயங்கள் என்று இந்த பணத்தை அந்த நபரோ அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்டவரோ செலவு செய்தால் கண்டிப்பாக அது இறைவனிடத்தில் உங்கள் நன்மைகளை கூட்டித்தர வாய்ப்பாக அமையும்.////// நீங்கங் சொன்ன சமுதாய நலனுக்காகவும் பல நல் செயல்கள் புரிந்தவர்கள்தான் அவர்கள் நம்புங்கள் வெளியூர் பிச்சைகாரர்களுக்கு தெரியும் செக்கடிமோடு போனால் 1௦௦-5௦௦ உறுதி என்று சிலசமயம் மொட்டு நண்பர்களே துண்டு ஏந்தி முசாபர்களுக்காக வசூல் செய்து இருக்கிறார்கள்[நீங்கள் அறிவீரோ]

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

[அ முறையாம் ]திருத்திக்கொள்ளவும் 8 வது முறையாம்

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

//////'ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'இஸ்லாத்தில் சிறந்தது எது' எனக் கேட்டதற்கு, '(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்' என்றார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். புகாரி 12. Volume :1 Book :2////////
பசித்தோர்க்கு உணவளிப்பது தர்மம்[சிறந்தது] நன்பர்களுக்கு உணவளிப்பது விருந்தோம்பள்[ஏழை,பணக்காரன் பாகுபாடு இல்லை]முஸ்லீம் ஒருவர் விருந்துக்கு அழைத்தால் செல்லாமல் இருப்பது தவரென்று நபி]ஸல்]அவர்கள் கூரிய்ருக்கின்றார்கள்

ZAKIR HUSSAIN said...

//Zakir , நீ முதல் போடறியா அல்லது நான் போடவா ?//

ஏதோ சர்பத் கடைக்கு முதலீடு போடுவது மாதிரி எழுதியிருக்கே.....இப்போது உள்ள ஒரு என்டோஸ்கோபிக் மெசினினை 'பத்திரம் முடிக்க" பெருவாதி செலவுஆகுமப்பா..

FLASH NEWS!!!

மந்தி சாப்டவங்க எல்லாம் வீட்டுக்கு போய்ட்டாங்க




m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//FLASH NEWS!!!
மந்தி சாப்டவங்க எல்லாம் வீட்டுக்கு போய்ட்டாங்க//

அதற்குள்ளாட்டியுமா கடைய சாத்திட்டாங்க ?

பிந்தி வந்தவங்கதான் சஹனை கழுவ வந்த மாதிரி இருக்கு !

M.I.அப்துல் ஜப்பார் said...

அபு ஆசிப்.சொன்னது
//விருந்தை யாரும் தவறென்று சொல்ல முடியாது. அது சுன்னத்.
இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.

இங்கே சொல்ல வருவது என்னவென்றால், இப்பொழுது அதிரை உள்ள சூழ்நிலையில் இந்த செலவை செய்ய வேறு ஒரு ஆக்க பூர்வமான , சமூக தீமைகளில் ஏதாவது ஒன்றை களைந்தெடுக்க பயன் படுத்தி இருக்கலாமே என்ற
ஆதங்கம் தான் இந்த பதிவு என்பது என் கணிப்பு.//

இப்படி பார்த்தால் யாரும் கார் வாங்க முடியாது, வீடுகட்ட முடியாது, யாரும் தரமான பள்ளியில் சேர்க்க முடியாது ஏன் என்றால் அந்த பணத்தையும் ஆக்க பூர்வமான வகையில் செலவு செய்யலாம் தானே.

நபி (ஸல்) அவர்கள் சொன்ன எளிமையான திருமணம் பரக்கத் நிறைந்த திருமணம் என்று சொன்ன பிறகும் அதிகமான பணத்தை செலவு செய்து வலிமா நடத்துகிறோம், அதில் கலந்துக்கொள்ளுகிறோம் இதை யாரும் தவறாக எடுத்துக்கொள்ளுவதிலலை

இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவைகள் கொஞ்சம் அனுமதிக்கப்பட்டவைகள் அதிகம் ஒன்றை தவறு என்று சொல்லுவதாக இருந்தால் அதை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடுத்திருக்க வேண்டும் அப்படி இதற்கு தடையிருந்தால் சொல்லுங்கள்.

எனக்கு தெரிந்த வரையில் விருந்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் ஏழைகளுக்கும் பள்ளிகளுக்கும் தாராலமாக நன்கொடை அளிப்பவர்கள் தான்



மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

மந்தி ஒரு[செலவு] விரையாமான உணவல்ல அதில் இஞ்சி சேர்பதில்லை[இஞ்சி விலை ரூ 3௦௦]விலை கூடுதலான சீரகம் சோம்பு கிராம்பு போன்ற மசாலாக்கள் கிடையாது இதற்க்கு தாளிச்சா,வெங்காய சட்னி தேவையில்லை கருத்திட்டவர்களில் எத்துனைபேர் மந்தி சாப்பிட்டு இருக்கின்றீர்?[எங்கே என்று கேட்கமாட்டேன்]ஹ ஹ் ஹ ஹ் ஹா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மு.செ.மு.சபீர் காக்கா: :) :) சரியான கேள்வி !

'மந்தி'ன்னா எல்லாமே குறைவாகத்தான் இருக்குமோ !?

Shameed said...

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) சொன்னது…
//மந்தி ஒரு[செலவு] விரையாமான உணவல்ல அதில் இஞ்சி சேர்பதில்லை[இஞ்சி விலை ரூ 3௦௦]விலை கூடுதலான சீரகம் சோம்பு கிராம்பு போன்ற மசாலாக்கள் கிடையாது இதற்க்கு தாளிச்சா,வெங்காய சட்னி தேவையில்லை கருத்திட்டவர்களில் எத்துனைபேர் மந்தி சாப்பிட்டு இருக்கின்றீர்?[எங்கே என்று கேட்கமாட்டேன்]ஹ ஹ் ஹ ஹ் ஹா//



எல்லாத்தையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு எறச்சி துண்டு பெருசு பெருசா போட்டு இருக்கே (PER KG 400) காக்கா ஹ ஹ் ஹ ஹ் ஹா

Meerashah Rafia said...

அனைத்து பின்னூட்டங்களையும் படித்தபிறகு இப்பொழுது மூன்று மட்டும் புரிகின்றது..

- பந்திக்கு மந்தி போடுவதுதான் வீண் விரயம் என்பதுபோல் சிலர்.
- பந்தத்திற்கு ருசியாக ஆக்கி போடுவதும் இபாதத் என்று சிலர்..
- இந்த பதிவு எதற்கு என்று யோசிச்சுகிட்டே பின்னூட்டமிட யோசிக்கும் சிலர்...


மொத்தத்தில், நடைபெறும் விருந்துகள் உபசரிப்பா, பாச பிணைப்பா, வீண் விரயமா என்பது அல்லாஹ்விற்கும் அதை செய்பவர்களுக்கும் இடையில் உள்ள விஷயம் என்று விட்டுச்செல்வதே சிறந்தது..

இல்லாவிடில் இதை எதிர்பவர்களுக்கு எதிராக சிலர்,
உங்கள் வீட்டு கல்யாணத்திற்கு தேங்காய் பால் புளியானம் செய்யாமல் வெறும் புளியானம் செய்து தேங்காவை ஏழை வீட்டுக்கு கொடுத்து உதவ வேண்டியதுதானே! என்று கேட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...

ஆதலால் குண்டக்கா, மண்டக்கா என்று இரு தரப்பு வாதங்களும் வீண் விரையம் என்ற தலைப்பை தாண்டி வீண் பேச்சுக்கு இட்டுச்செல்லும் என்பதேன் என் ஐயம்..

மொத்தத்தில் இது பித்அத்தோ, ஷிர்க்கோ அல்ல. இதில் உடன்பாடில்லாதவர்கள் ஆதரிக்காமல் தவிர்க்கலாம், அல்லது எடுத்துச்சொல்லலாம்.

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

இதற்கான செலவை இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடத்திலிருந்து நல்ல காரியங்களுக்கு செலவிடுங்கல்

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

கடைசியாக சொன்ன மந்தி செலவு மேட்டர் [joly]க்காக shameedஅர்களின் kg 4௦௦/- விஷயம் பிரியாணி யோடு ஒப்பிடுகையில் அதற்கும் இதற்கும் மட்டன் பொது ஆனால் இஞ்சி,மசாலாக்கள் வித்யாசம்
மருமகன் மீராஷா வின் கருத்திற்கு அனைவரும் வாருங்கள் இன்ஷா அல்லாஹ் வரும் ஹஜ் பெருநாள் அன்று உங்களில் யாரும் ஊர் வரவிருந்தால் தெரிய படுத்துங்கள் மந்தி சாப்பிடலாம் என் செலவில்


'மந்தி'ன்னா எல்லாமே குறைவாகத்தான் இருக்குமோ !? /////[இது நெய்னா தம்பியின் வாதம்]

ஆனா ஒன்னு மட்டும் நீலம்

crown said...

ஆனா ஒன்னு மட்டும் நீலம்
-------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நீலம்? என்பது ஒருவகை வண்ணம், நீலம் என்பது விசம்! இதில் எது?

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

மந்தி பற்றிய கூடுதல் தகவல்கள்;
மொத்த செலவு Rs 38௦௦௦/-
பரிமாறப்பட்ட சகன் 82 [82*4=328 நபர்கள்]
உணவருந்தியவர்களில் 50க்கும் மேற்பட்டோர் மிக ஏழ்மை நிலையில் உள்ளோர்கள்[பதியப்பட்ட புள்ளி விபரம்]
4 நபர்கள் ஸ்பான்சர் செய்து இருக்கிறார்கள்
அந்த நிகழ்வில் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு ஆலிம் அவர்களுக்காக வசூல் செய்யப்பட்டது தொகை Rs 14௦௦௦
வரும் ஹஜ் பெருனாள் அன்று மீன் பிரியானி என முடிவு செய்யப்பட்டதாம்[செரிமான பிரச்சனைகள் பற்றி கவலை பட்டவர்களுக்கு மீன் பிரியானி பற்றி உங்கள் கருத்தென்ன]
இந்த அனைத்து தகவல்களும் உங்களுக்காக இன்று சூடாக பெறபட்டதாக்கும்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மந்தியின் சுவையான தகவல்கள் மச்சான் சொல்ல இங்கே இன்னும் சுவை சேர்க்கிறது..
ஆக
15 சதவீதத்துக்கு மேல் ஏழைகளும் கலந்துள்ளனர்.
செலவிட்ட தொகை கணக்கில் 37 % தனிப்பட்ட ஏழைக்கும் சென்றுள்ளது.( இன்னும் கூடுதலாக வசூலாகனும், விருந்தில் மனித நேய இந்துக்களையும் கலந்திடச் செய்யனும்)
அப்ப நல்ல செயல் தானே!

ஹஜ்ஜுப்பெருநாளைக்கு மீன் ஒத்து வராது, தக்பீர் முடியலென்னு வீட்லெ திட்டுவாக!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த பதிவை முழுமையாக வாசித்திவிட்டுத்தான் அர்த்தமற்ற இந்த மந்தி விருந்துக்குஆதரவு குரல் கொடுக்கும் சில சகோதரர்கள் கருத்திடுகிறார்களா என்பது தெரியவில்லை.

நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த விருந்தோம்பலை தவறான முறையில் எடுத்துச் செல்லுவதாகவே இது போன்ற அர்த்தமற்ற மந்தி விருந்துகளை கருத முடிகிறது. பெருநாள் முடிந்து பலரிடம் காசு வசூலித்து தான் நபி(ஸல்) அவர்கள் சஹாப்பாக்களுக்கு விருந்து கொடுத்தார்களா? இப்படித்தான் விருந்தோம்பல் பற்றி ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளதா?

இப்படித்தான் ஹத்தம் விருந்து, கத்னா விருந்து, ஒப்பிச்சு பார்க்கிற விருந்து, அது விருந்து இதுக்கு விருந்து என்று மார்க்கத்தில் இல்லாதவைகளுக்கு விருந்தோம்பல் என்று வீண் விரையம் செய்பவர்களும் நியாயம் கற்பித்தார்கள்.

மு செ மு சபீர் காக்கா,

50 நபர்கள் ஏழ்மை நிலை என்ற வாதம் தகவல் எல்லாம் செய்துள்ள வீண் விரையத்துக்கு சொல்லும் சாமளிப்பு செய்தி.

38,000 ஆயிரம் ரூபாய் செலவு செய்து 14,000 ஆயிரம் ரூபாய் உதவி செய்தோம் என்று சொல்லுவது வேடிக்கையாக தெரியவில்லையா?

சென்ற வருடம் நோன்பு பெருநாளிலும் ஹஜ்ஜ்ப் பெருநாளிலும் ஊரில் இருந்தேன். இந்த மந்தி விருந்துக்கு எப்படி எல்லாம் வற்புறுத்தி வசூல் செய்கிறார்கள் என்ற விபரத்தை நான் சொல்ல ஆரம்பித்தால், இதன் பின்னனியில் உள்ளவர்கள் யார்? யார்? என்ற பெயர் குறிப்பிட்டு சொல்ல வேண்டிவரும். ஆனால் நடைபெறுவது வீண் விரையம் என்பதை அறியாமல் நம் சகோதரர்கள் செய்கிறார்கள், தயவு செய்து இதை ஊக்கப்படுத்த வேண்டாம்.

இப்படிச் சொன்னால் கார் வாங்க முடியுமா, சட்டை வாங்க முடியுமா என்ற கேள்வி எல்லாம் அர்த்தமற்றது.

ஹஜ்ஜுப்பெருநாளைக்கு மீன் விருந்து என்பது பெருமையின் உச்சக்கட்டம்.

அல்லாஹ் கொடுத்திருக்கும் செல்வத்தை பெருமைக்காக செலவழிக்க வேண்டாம், அவன் கொடுத்த செல்வத்தை வீண் விரையம் செய்தவர்களிடமிருந்து எப்படி அவன் பிடுங்கி எடுத்துள்ளான், என்பதற்கு பல நபர்களின் வாழ்வு ஆதாரங்களாக அதிரையில் உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்வோம்.

அல்லாஹ்வுக்கு பயந்துக்கொள்வோம்..

என்னுடைய அனுபவத்தில் பல வருடங்களாக நடைபெரும் இது போன்ற அர்த்தமற்ற விருந்து, பெருமைக்காக கொடுக்கப்படும் விருந்து. இது வீண் விரையம். தவிர்ப்பது நல்லது.

M.I.அப்துல் ஜப்பார் said...

மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விருந்துக்கள் இல்லாமல் போனததால்தான் பித்ஹத்தான விருந்துகள் பலக்கத்தில் வந்தன ஒருவர் தன் நன்பர்கள் உறவினர்களுடன் சேர்ந்த சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதற்கு ஒரு நிகழ்ச்சிவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் ஹத்தம் விருந்து, கத்னா விருந்து, ஒப்பிச்சு பார்க்கிற விருந்து, பெயர் சூட்டும் விருந்து, அதிக செலவில் வலிமா விருந்து சமிபத்தில் ஒரு தவ்ஹீத் மார்க்க அறிஞர் தன்னுடை மகன் திருமணத்தில் 5000 அதிகமானவர்களுக்கு வலிமா விருந்தளித்தார்கள் அதற்கு அவர் சொன்ன காரணம் என் மேல் பாசம் வைத்திருப்பவர்களுக்கு விருந்தளிப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தை விட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காது என்று சொன்னதாக நன்பர் சொன்னார்.

நபி (ஸல்) அவர்கள் சொன்ன எளிமையான திருமணம் பரக்கத் நிறைந்த திருமணம் என்று சொன்ன பிறகும் அதிகமான பணத்தை செலவு செய்து வலிமா நடத்துகிறோம், அதில் கலந்துக்கொள்ளுகிறோம் இதை யாரும் தவறாக எடுத்துக்கொள்ளுவதில்லை

நபி (ஸல்) கண்டித்த விருந்துக்களை புறக்கணிப்போம்

பரக்கத் நிறைந்த திருமணம் (எளிமையான திருமணம்) - வீடியோ
http://www.adiraitntj.com/2012/01/blog-post_19.html


இப்னு அப்துல் ரஜாக் said...

இது போன்ற வீண் விரய விருந்துகளை புறக்கணியுங்கள்.
சோமாலியாவை சேர்ந்த ஒருவர் ஒரு உலமாவிடம் கேள்வி கேட்டார்.

ஆலிம் அவர்களே,நாங்கள் சஹர் செய்யவும் உணவில்லை,அதே போன்று இப்தாருக்கும் - நோன்பு திறக்கவும் உணவில்லை.எங்கள் நோன்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா ?என்று.

அதற்கு அந்த ஆலிம் பதில் சொல்ல முடியவில்லை.

கண்ணீர் வடித்து - கதற மட்டுமே முடிந்தது.

நமக்கு படிப்பினை உள்ளது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு