Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பெருநாள் சாப்பாடு எப்படி !? - கருத்துக்களம் ! 25

அதிரைநிருபர் பதிப்பகம் | August 08, 2013 | , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

குல்லுஆம் வஅன்த்தும் பின் கைர் !

அல்ஹம்துலில்லாஹ் ! இந்த வருடம் ஹிஜ்ரி 1434 ரமளான் மாதம் மிகச் சிறப்பாக நம்மிடையே ஒன்றி உலாவி நம் அமல்களை வலுப்படுத்தி உள்ளத்தாலும் உணர்வுகளாலும் தூய்மையை நம்மிடையே நிலைத்திருக்கச் செய்துவிட்டு நம்மை விட்டு விடைபெற்றுக் கொண்டது !

இன்று வளைகுடாவில் பெருநாள், ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னர் ஒருமணி நேரத்திற்கு முன்னர் எழுந்து தூய்மையான குளியல் பின்னர் தொழுகை, தொடர்ந்து நபிவழி பெருநாள் தினத் துவக்கம் அதிகாலைப் பொழுது புலரும் அற்புதமான தினம் அஜ்மானில் விடிந்தது !

பெருநாள் தொழுகைக்கும் கூடினோம், தொழுதோம், இறைஞ்சினோம் வல்ல இறைவன் அல்லாஹ்விடமே !

அடுத்து என்ன !?

அதிரையின் வாசம் அமீரகத்தில் வீசாமல் ஒரு பெருநாளா ?

அதிரைப் பெருநாள் என்றாலே நம்மில் பெரும்பாலோர் மூக்கிலும் நாக்கிலும் வேர்க்கும் ! அதுதான் மண்வாசனை தூக்கலுடன் இருக்கும் காலை பசியாறவும் அதனைத் தொடரும் பகல் சாப்பாடும் கலைகட்டும் !

இடியப்பம் இல்லாத இல்லமா ? வீட்டில் செய்யா விடினும் (அன்னபூர்னாவுக்கு) தேடிச் சென்று எங்கே கிடைக்குமோ அங்கே காத்திருந்து விழித்திருந்து வாங்கி வந்து சாப்பிடும் வேகம் நம்மவர்களிடையே அதிகம்.

இன்று பெருநாள் (காலைச்) சாப்பாட்டில் கலந்து சிறப்பித்தவைகள் !

மலேசியா பரோட்டா
சிங்கப்பூர் இடியப்பம்
இந்தியா ஆட்டுக்கறி
துபாய் ரவ்வா
சைனா கடப்பாசி
சவுதி வட்டிலப்பம்
பன்னாட்டு இனிப்பு புளிப்பு துணையுடன்...

அதிரையர்களாகிய எங்களை சுவைக்க வைத்தது இன்றைய சிறப்பம்சம். !

அடுத்தென்ன பகல் சாப்பாடு(தான்)...!

பின்னூட்டத்தில் பகல் சாப்பாட்டின் முன்னோட்டம் இன்ஷா அல்லாஹ் தொடரும்... !

அது சரி உங்கள் பெருநாள் எப்படி !? [அதிரையில் நாளைக்காமே !?]

அதிரைநிருபர் பதிப்பகம்

25 Responses So Far:

sabeer.abushahruk said...

நாளைக்குப் பெருநாள்


பெருநாளுக்கு முதல்நாளே
பிறைசிரிக்கும் கீழ்வானில்
குளக்கரையும் படித்துரையும்
குதூகலிக்கும் சிறுவர்களால்




தெருவெங்கும் தீன்கமழும்
வீடெங்கும் விளக்கெறியும்
விடியவிடிய சிரிப்பொலியும்
விடிந்தபின்னால் புதுப்பொலிவும்

பள்ளியெங்கும் நறுமனமும்
பாங்கொலிபோல் தக்பீரும்
பெருநாளைச் சிறப்பிக்கும்
முழுநாளும் முகமன்களோடு

புத்தாடை மொருமொருக்கும்
அத்தர்களின் மணமிருக்கும்
சட்டைப்பையில் பணத்தோடு
மடித்திருக்கும் கைக்குட்டையும்
வட்டிலப்பம் வெட்டெடுக்க
வாய்க்கிணற்றில் நீரூறும்
தட்டிலதை இட்டுவைக்கும்
தாய்க்குணத்தில் தேனூறும்

முட்டைவடிவ கடற்பாசி
மொட்டவிழ்ந்த வடிவத்திலும்
பிட்டுவைத்த கண்ணாடியாய்
கட்டுடைந்து கரைந்துவிடும்

பொறிச்ச ரொட்டி பொசுபொசுக்க
பூவிதழாய்ப் பிய்ந்து வரும்
எறச்சாணக் கூட்டணியில்
எச்சிலூறும் நினைத்துவிட்டால்


இடியப்பச் சிக்கலொன்றே
இலகுவாக அவிழுமன்றோ
சவ்வரிசி கஞ்சியூற்ற
சப்புக்கொட்டும் முழு நாக்கும்

விடியும்போதே மணத்துவிடும்
வீட்டில் செய்யும் உணவு வகை
பசியாற அமர்ந்துவிட்டால்
ருசியாலே கவர்ந்துவிடும்

பிரியாணிப் பிரியருக்கு
பெரும்விருந்து எமதூரே
விருந்துணவை நிறைவுசெய்ய
இனிப்புவகை ஏராளம்

ஊர் மணக்கும் பதார்த்தங்களால்
எங்களூரின் பேர் மணக்கும்
உளம் மகிழும் பழகிவிட்டால்
நாங்கள்பேணும் நன்னெறியால்!

Aboobakkar, Can. said...

லேபில் கிழித்த வெள்ளை கைலியில் இடியப்பத்துடன் கூடிய இறைச்சி ஆனம் பட்டுவிடும் அந்த கைலியை ரின் சோப்பு போட்டு கழிவினால் அது ரோஸ் கலராக மாறிவிடும் இதுதான் அதிரை பெருநாள் .

Unknown said...

அதிரை நிருபரின் International பெருநாள் சாப்பாடு ஒரு பக்கம் எங்களை ருசிக்க
வைத்திருக்கும் அதே கணம்

சபீருடைய கவிதை ஒரு படி மேலே போய் அறுசுவை விருந்து படைத்து , பெருநாளை போக விடாதே பிடி என்று சொல்வது போல் கவிதையில் அதிரையின் சுவைகுன்றா மணத்தை வரிக்கு வரி தந்து எங்களை அறுசுவை என்னும் ஆறு கைகளை கொண்டு ஆரத்தழுவியது போல் இருக்கின்றது.

காலை, பகல் இரண்டு சாப்பாடுமே எனக்கு தேவை இல்லை என்று தோணுகின்றது , அதிரை நிருபரின் பெருநாள் சாப்பாட்டிலும் , அதற்க்கான சபீரின் கவிதை பின்னூட்டத்திலும் என் கண் பதித்த பிறகு.

அபு ஆசிப்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இங்குள்ள (தம்மாம்) பெருநாள் சாப்பாடு நலம். அங்குள்ள பெருநாள் சாப்பாடு நலம் காண ஆவல். இடியப்பம் சுகக்குறைவால் விருந்தில் கலந்து கொள்ளவில்லை. கோழி சால்னாவுடன் நன்கு விளையாடியது. பாதாமும், பிஸ்தாவும் ஜவ்வரிசியுடன் குதூகலமாக இருந்தது. கடப்பாசி கொஞ்சம் எளச்சாப்புல இருந்தது. பொறிச்ச ரொட்டி கோவத்தில் கொஞ்சம் பொலிவிழந்திருந்தது. கடைசியில் இஞ்சி டீ வந்து மனதை ஆசுவாசப்படுத்தியது. இவை எல்லாம் தாண்டி உள்ளமோ புனித ரமழானை இழந்து அமைதியுடன் வாடியே காணப்பட்டது. அதிக புழுக்கமும், உஸ்ணமும் இல்லாமல் ஈத் பெருநாளின் காலை தட்பவெட்ப நிலை எம் அனைவருக்கும் ஒரு இனம் புரியா சாந்தியை இறைவன் கிருபையில் தந்தது. அதற்குப்பின் ரூமில் போட்ட குட்டி தூக்கமும் அதிரை மன்சூர் காக்காவிடம் நீண்ட நேரம் நேருக்கு நேர் உரையாடலும் உற்சாகப்படுத்தியது. அல்ஹம்துலில்லாஹ்.

என் அன்பிற்கினிய அனைவருக்கும் உளம் கனிந்த ஈகைத்திருநாள், ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

KALAM SHAICK ABDUL KADER said...

\\வட்டிலப்பம் வெட்டெடுக்க
வாய்க்கிணற்றில் நீரூறும்
தட்டிலதை இட்டுவைக்கும்
தாய்க்குணத்தில் தேனூறும்\\

வட்டிலப்பத் தட்டில் வடிவாய் அமைந்தது
கட்டிவைத்தப் பாவடிவம் காண்

தனிமையில் ஓர் இனிமை இம்முறை என் பெருநாள் விடுமுறை. நீண்ட நாட்களாக என் எண்ணம் விரும்பிய வண்ணம்: நான் மட்டும் சமைத்து
இடியாப்பம், இறைச்சி ஆனம், வட்டிலப்பம், கடற்பாசி, சேமியா என்று ரசித்துச் சமைத்தேன்; ருசித்துச் சுவைத்தேன். பகலுணவுக்கு முன்னர் ஓர் ஆழ்ந்த உறக்கம்; ஓடி விட்டது ஒரு மாத தூக்கமில்லாத கிறக்கம். பக்கத்து அறை நண்பனின் அன்பான அழைப்பை ஏற்று பகலுணவு பிரியாணி சாப்பிட்டதால் , இன்ஷா அல்லாஹ் நாளைக்குத் தான் நம்ம பிரியாணி. நாக்குச் சுவைமிக்க நல்லுணவை வழங்கிக் கொண்டிருக்கும் அல்லாஹ்விடம், இவ்வகையான உணவுகள் கூட இல்லாமல் அல்லற்படும் ஏழைகளை எண்ணிக் கொண்டேன்; அல்லாஹ் நமக்கு அருளிய ”நிஃமத்” என்னும் பேறுகட்கு என்றென்றும் நன்றி மறவாமல் அதே நாக்கு “தக்பீர்-தஸ்பீஹ்” செய்யட்டும்; மனமும் என்றும் ஷூக்கூர் செய்யட்டும்.

இன்பம் பொங்கும் ஈதுல்ஃபித்ர் வாழ்த்துகள்.

KALAM SHAICK ABDUL KADER said...

மல்லிகைப்பூ வாசமும்
மருதாணி கரங்களும்
இல்லாமல் பெருநாளா;
இல்லறத்தில் வெறுநாளே!

adiraimansoor said...

இவ்வருட ஈகைத்திருனால் ஈத் பெருனாள் தொழுகை
சவுதி அரபியாவின் தலைநகரை தள்ளிவிட்டு கிழக்கு மாகானதில் உள்ள தமாமில் கிடைத்து
என் இனிய நன்பர் சலீமின் துணைவியாரின் இரவு நேர முழு உழைப்பில் உறுவான இடியாப்பமும், சைனா கடல்பாசியும் அதிரை வட்லாப்பமும், சவுதியிலே உயிர்விட்ட ப்ரஷ் கோழிக்கரியும் என் நாவுக்கு சுவையழித்து வயிற்றுக்கு உணவழித்து என்சிதைக்கு புத்துயிர் அளித்த பெருனாள் காலை பசியர கொஞ்சமும் அதிரை சுவை குறையாமல் சக நன்பர்களுடன் உண்டு மகிழ்ந்தேன் அல்ஹம்துலில்லா வளையல் போட்ட கையால் சமைத்தது சொல்லவ வேண்டும். பாதிப்பெருனாள் முடிந்த நிலையில் மீதிப்பெருனாளின் பனை பெற நண்பர்களின் சந்திப்பில் செ.மு.செ நெய்னாமுஹம்மதை சந்தித்து அதிரை நிருபரின்
ஆக்கங்கள் பற்றியும் பங்களிப்பாளர்களின் ஆக்கங்கள் பற்றியும் மிகவும் பெருமையாக பகிர்ந்து கொண்டோம் மிகவும் சந்தோஷமாக இந்த திருனாள் மெல்ல மெல்ல நம்மை விட்டு நகர்கின்றது

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

இங்கு பெருநாள் சாப்பாடு நலம்.
அங்குள்ள பெருநாள் சாப்பாடு நலமாக இருந்தது சொல்ல தெரிந்தது.
ஊரிலும் நாளை ருசியாகத் தான் இருக்கும்.
இடியப்பமும் பசியாற கிடைத்து . பாதாம் முந்திரி கலந்து இளம் ஆட்டுக்கறி சால்னாவுடன் நன்கு விளையாடியது.
கடப்பாசி கொஞ்சம் எளச்சாப்புல இருந்தது. பொறிச்ச ரொட்டி கோவத்தில் கொஞ்சம் பொலிவிழந்திருந்தது.
மஸ்த்தை தரக்கூடைய வட்டிலப்பமோ ரொம்ப டேஸ்ட்டாக இருந்தது. கடைசியில் இஞ்சி டீ வந்து மனதை ஆசுவாசப்படுத்தியது.
இவை எல்லாம் தாண்டி உள்ளமோ புனித ரமழானை இழந்து அமைதியுடன் வாடியே காணப்பட்டது.
அதிக புழுக்கமும், உஸ்ணமும் இல்லாமல் ஈத் பெருநாளின் காலை தட்பவெட்ப நிலை எம் அனைவருக்கும் ஒரு இனம் புரியா சாந்தியை இறைவன் கிருபையில் தந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

என் அன்பிற்கினிய அனைவருக்கும் உளம் கனிந்த ஈகைத்திருநாள், ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.



Unknown said...

நைனா முஹம்மத் ,

நன்றாக கவனியுங்கள் . மன்சூர் நம்ம குடும்ப விலாசத்தையே ( மு.செ.மு.)
செ.மு.செ. என்று மாற்றி எழுதி நமக்கு சந்தேகத்தை ஏற்ப்படுத்தி விட்டான் கவனியுங்கள். பின்னூட்டத்தின் மூலம் ஒரு பிடி பிடியுங்கள்.

அபு ஆசிப்.( மு. செ. மு. )

adiraimansoor said...

சபீரின் கவிதையிலே மீதிப்பெருனால் முடிந்துவிட்டது

கலாமின்
மல்லிகைப்பூ வாசமும்
மருதாணி கரங்களும்
இல்லாமல் பெருநாளா;
இல்லறத்தில் வெறுநாளே!

வளைகுடா நாட்டினிலே தனிமையில்
ஈகைத்திருனாளை கொண்டாடுவோருக்கு
பெருனாளாக இருந்தாலும்
வெறுனாலே

adiraimansoor said...

செ.மு.செ.என்று தவறான விலாசமிட்டதை மு.செ.மு என்று திருத்தி படித்துக்கொள்ளவும்

KALAM SHAICK ABDUL KADER said...

மன்சூர் இன்னும் “உண்ட மயக்கம்” தீராமல் விலாசத்தையே மாற்றி விட்டார்! ஆயினும், நான் எழுதிய நாலு வரிகள் மட்டும் நச் என்று அவர் மனத்தினில் பசையாய் ஒட்டிக் கொண்டு அதனை ஒட்டியும் பேச வைத்தன; ஏன் தெரியுமா? அதான் மன்சூர்!

sabeer.abushahruk said...

//மல்லிகைப்பூ வாசமும்
மருதாணி கரங்களும்//

மன்சூருக்கும் கவியன்பனுக்கும் இடைதில் உள்ள சவூதி கால மந்திரம் எப்ப வெளிவரப்போகிறதோ :-)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அல்மைட்டி அர்ரஹீம் நாடியதால் அங்கே "நாளைக்கு பெருநாள்" அதனை இங்கே இன்றே பெருநாள் சாப்பட்டில் பின்னூட்டமாக !

கவிதை எப்படி பிறக்கிறது என்று கருவுக்கு அருகில் இருந்து கவனித்ததில் கண் சிமிட்டும் நேரத்தில் கரு தரித்து மூச்சிழுத்து விடும் நேரத்திற்குள் உருவெடுக்கிறது !

நான் சொன்னேன் "வீட்டில் செய்தோம் பரோட்டா" என்று பெருநாள் சாப்பாடு என்னவென்று கேட்ட அமெரிக்கா காரனிடம் அதையே அவனிடமும் கேட்டேன் அவன் சொன்னான் "wheat-டில் செய்கிறோம் பரோட்டா"

இப்படிச் சொன்னவன் மற்றொன்றையும் சொன்னான் "ஆடு அறுத்து தொங்க விட்டால் ஆடும்" என்றான் !

இன்னும் அவன் சாப்பாடு என்னவென்று சொல்ல இங்கே வரவில்லை இதுவரைக்கும் (காத்திருக்கிறேன்).

டு : எம்.எஸ்.எம்(என்) & எம்.ஹெச்.ஜே,

பெருநாள் சாப்பாட்டின் நலன்களையும் அவற்றின் பங்களிப்பையும் அழகுற சொன்னதோடல்லாம் வாய் விட்டுச் சிரிக்கவும் வைத்தது உங்கள் இருவரின் கடிதம் !

பகல் பிரியானி சாப்பிட்டவர்களுக்கு போட்ட கண்டிஷன் எந்த மருந்து மாத்திரையும் முன்கூட்டியோ அல்லது பின்னரோ போடாமல் சாப்பிட வேண்டும் என்பதே ! அப்படியே செய்யவும் வைத்தது மாத்திரைக்கு திரை போட்டுவிட்டு சாப்பிட்டதும் தானாக நித்திரையும் குத்தியது முத்திரை எங்கள் முகத்தில் !

உண்ட மயக்கம் வளைகுடாவை விட்டு இன்னும் அகலாத இத்தருணத்தில் அடுத்து அதிரையில் மஸ்தும் மந்தாரமாக மேகமூட்டம் சூழ்ந்திருப்பதால் ஊரிலும் மஸ்துக்கு குறைவிருக்காது, ஆக ! காத்திருப்போம் அங்கே எப்படி சாப்பாடு என்று யாரேனும் பதில் போடும் வரை...

Ahamed irshad said...

இடியாப்பாம்லேர்ந்து வட்லாப்பத்திற்க்கு இடையில்

ரொட்டிய அஞ்சு நிமிஷம் ஊறவெச்சு எதுல ஆங்.......இறைச்சி ஆனத்துல...போன ஜென்ம நன்மையோ என்னவோ லூலூ’வில் இண்டியன் மட்டன் கிடைத்துவிட்டது... 29 நாள் காலை சாப்பாடே மறந்த நிலையில் கொஞ்சம் புதுசாத்தான் இருக்கும்... சமாளிச்சு சாப்பிட்டாச்சு... கடப்பாசிக்கு இந்த தடவை ரோஸ் கலர்... அல்ஹம்துலில்லாஹ்..

துபாய்,சவுதி மக்கள் தொழுகை முடிஞ்சு கூட்டாக ஃபோட்டோ எடுத்து போடுகிறார்கள் அஎக்ஸிலும்,அநிருபரிலும்... நாமும் ஏன் எடுத்து போடக்கூடாது ரெண்டு வருஷமா நினைச்சுட்டு இருக்கிறேன்... இன்ஷா அல்லாஹ் வர்ற ஹஜ் பெருநாளை சங்கு மார்க் கைலியோடு நம்மூர்வாசிகளை ஃபோட்டோ எடுத்து போடுறேன் அல்லாஹ் நாடினால்....

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

அனைவர்களுக்கும் எனது அன்பான சலாமும் ஈத் நல் வாழ்த்துக்களும்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

பெருநாள் (காலைச்) சாப்பாட்டில் கலந்து சிறப்பித்தவைகள் !

மலேசியா பரோட்டா
சிங்கப்பூர் இடியப்பம்
இந்தியா ஆட்டுக்கறி
துபாய் ரவ்வா
சைனா கடப்பாசி
சவுதி வட்டிலப்பம்
பன்னாட்டு இனிப்பு புளிப்பு துணையுடன்...

அதிரையர்களாகிய எங்களை சுவைக்க வைத்தது

Shameed said...

//அது சரி உங்கள் பெருநாள் எப்படி !? [அதிரையில் நாளைக்காமே !?]//

எங்கள் பெருநாள் ஊரிலும் இல்லை சவூதியிலும் இல்லை விமானத்திலேயோ பெருநாள் கழிந்தது

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கு [வரஹ்]

அதிரைநிருபர் அன்பர்கள் உலக இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் என் மனங்கனிந்த ஈதுல்பிதர் நல்வாழ்த்துகள் உடலாலும், சொல்லாலும் செயலாலும் யாருடைய மனம் புண்படும்படி நான் நடந்திருந்தால் அல்லாஹ்வுக்காக மனம் பொருத்து கொள்ள வேண்டுகிறேன்.

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//விமானத்திலே பெருநாள் கழிந்தது//

ஆமாம் விஞ்ஞானிகளுக்கு ஏற்ற இடம் வான்வெளி

சிறப்பான வாழ்த்துக்கள்!

Ebrahim Ansari said...

அன்புச் சகோதர்கள் அனைவருக்கும் எங்களின் ஈகைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.

அப்துல்மாலிக் said...

அதிரைக்காரர்களுக்கு பெருநாள் என்றால் “வட்லாப்பாம்” மட்டுமே, மற்றதெல்லாம் நார்மல்தான்... சுகர்காரவங்களெல்லாம் பெருநாள் அன்றுமட்டும் லீவு போட்டுவிட்டு வட்டலாப்பத்தை லபக்குவாங்க...

இனிதே கழிந்தது... எல்லாபுகழும் இறைவனுக்கே..

அமீரகத்துலே நோன்புக்காலங்கள் மட்டுமே நல்லாயிருக்கும் ஆனால் பெருநாள் சவுத்த பொரிச்ச ரொட்டிமாதிரிதான்.. அதனாலேதான் மக்களெல்லாம் 27 நோன்பிற்குப்பிறகு ஊருக்கு போறாங்க..

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அன்புச் சகோதர்கள் அனைவர்களுக்கும் எனது அன்பான சலாமும் ஈத் நல் வாழ்த்துக்களும்

Anonymous said...

மலேசியா புரோட்டா/ சிங்கப்பூர் இடியப்பம் / இந்தியா ஆட்டுக்கறி / துபாய் ரவா / சீனா கடப்பாசி / சவூதி வட்டுலப்பம் / எப்போ பாத்தாலும் / பெருநாளைக்கு பெருநா / பெருநாளைக்கி பெருநா / பெருநாளைக்கி பெருநா
இதையே திண்டு திண்டு திண்டு நாக்கு செத்தே போச்சுங்க! இதுலேயாவது நாம
புதுசா எதாச்சும் Invent பண்ணி நோபல் பரிசு வாங்கி காட்டனுங்க!

S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு