கேமராவின் வகைகளையும் ஒவ்வொரு காலகட்டத்தில் அதன் வளர்ச்சியையும் பட்டியலிட்டால் குறுந்தொடர் நெடுந்தொடராக நீண்டு விடும் அதனால் ஃபிலிம் ரோலை சுருக்கிக் கொள்வோம். முன்னொரு காலம் புகைப்படம் (ஃபோட்டோ) எடுத்து விட்டு ஃபிலிம் ரோலை பிரிண்ட் போட்டு புகைப்படமாக பார்ப்பதற்கு சென்னை அல்லது துபாய்க்கு, சிங்கப்பூருக்கு அனுப்பி விட்டு (தோன கானா அவர்கள் நம்ம வீடு தேடிவரும் முன் நாம் தோன கானா வீடு தேடி அலைந்தது பற்றி ஒரு தனி பதிவே போடலாம் ) அது பல நாட்கள் கழித்து துபாயில் இருந்து பிரிண்ட் போட்டு திரும்பி வரும்போது (சில சமயங்களில் வராமலும் போகும்) நாம் எடுத்த ஃபோட்டோக்கள் நமேக்கே மறந்து போய் இருக்கும் வயல் வெளியில் எடுத்த ஃபோட்டோ அது திரும்பி வரும்போது அந்த வயல் மனைகட்டாகி வீடு கட்டப்பட்டிருக்கும்.
கல்யாணத்தில் எடுத்த ஃபோட்டோ திரும்பி வரும்போது கல்யாண மாப்பிள்ளை வாப்பாவாகி இருப்பார் ஆனால் இப்போ நிலைமை தலைகீழ் அதற்கு காரணம் டிஜிட்டல் தொழில் நுட்பம் ஃபோட்டோ எடுத்த அடுத்த வினாடியே ஃபோட்டோவை பார்த்து விடலாம் (ஃபோட்டோ நல்லா இல்லாட்டி கமுக்கமா டெலிட்டும் செய்துவிடலாம் ).
இந்த டிஜிட்டல் டெக்னாலஜில் ஃபிலிம் ரோல் பிரிண்ட் போடுவதற்கான செலவீனங்கள் கால விரயம் எல்லாம் ஒழிந்து போய் விட்டன அது கூட ஃபிலிம் தயாரிப்பு கம்பெனிகளும் சேர்ந்து அழிந்து விட்டன (கோடக் கம்பெனி நஷ்ட்டத்தில் தள்ளாடுவதாக ஃபோட்டோவுடன் செய்திகள் வருகின்றன )
டிஜிட்டல் கேமராவில், அவ்வளவாக செலவுகள் கிடையாது (அதுக்கெல்லாம் சேர்த்துதான் கேமரா விலையில் கடுகு உளுதம் பருப்பெல்லாம் போட்டு தாளிச்சு தள்ளிர்ரானே). ஆயிரக்கணக்கில் படங்களை க்ளிக் செய்து தள்ளலாம். அதில் பிடித்த சில படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அச்சிடலாம். (பெரும்பாலும் யாரும் பிரிண்ட் போடுவதில்லை) இல்லை என்றா ல் அப்படியே கேமராவில் பார்க்கலாம் , கம்ப்யூட்டரில் பார்க்கலாம், சீரியல் ஓடாத நேரம் பார்த்து டிவியிலும் பார்க்கலாம் தப்பித் தவறி சீரியல் ஓடும் நேரம் டிவியில் பார்த்தால் அது என்னதான் நல்ல போட்டோவா இருந்தாலும் போட்டோ நல்லவே இல்லை என்ற டிஜிட்டல் சவுண்டில் ஒரு ஆடியோ சர்டிஃபிகெட் உடனே கிடைக்கும் இப்படி எல்லாம் தொந்தரவு இருக்கும் என்பதை அறிந்துதான் பாதிக்கப்பட்ட யாரோ ஒரு புண்ணியவான் இதற்கு என்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்ட ‘டிஜிட்டல் போட்டோ ஃப்ரேம்’ எல்லாம் வடிவமைத்து கொடுத்துவிட்டார்.
முக்கியமாக, டிஜிட்டல் போட்டோக்களை நாம் யாருக்கு வேண்டும் என்றாலும் உடனே அனுப்பலாம். குறிப்பாக அதிரை நிருபர் எடிட்டருக்கு டிஜிட்டல் கேமராக்களின் தேவை அதிகமாகி விட்டதால், இப்போது மொபைல் ஃபோனிலேயே ஒரு கேமராவையும் தூக்கி சொருகி விட்டார்கள் அதில் போட்டோ எடுத்து உடனுக்குடன் நாம் அனுப்பிக்கொள்ளலாம் (கேமரா மொபைலை வைத்துக்கொண்டு ஒருசிலர் செய்யும் அலப்பரை தாங்க முடியல) இந்த டிஜிடல் தொழில் நுட்பம் பற்றி மற்றுமொரு தனி பதிவாக பிறகு பார்த்துக் கொள்வோம்.
ஜாலிக்காக ஃபோட்டோ எடுக்கிற கூட்டம் ஒரு பக்கம் குருட்டாம் போக்கில் ஃபோட்டோ எடுக்கும் கூட்டம் ஒருபக்கம் இதை ஒரு கலையாக நினைத்து அக்கறையோடு கற்றுக் கொண்டு ஃபோட்டோ எடுக்கும் கூட்டம் ஒருபக்கம். இதில் நீங்கள் எந்தப்பக்கம் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் புகைப்பட தொழில் நுட்பம் பற்றி தெரிந்து கொள்ள விதவிதமான புத்தகங்கள், பயிற்சி வகுப்புகள், இன்டர்நெட் தளங்கள், போட்டிகள் என்று ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. எது எப்படியோ போட்டோ எடுக்க முதலில் ஒரு நல்ல கேமரா தேவை என்பது ரொம்ப முக்கியம்.
இந்த பதிவு சுருங்கிவிட்டதே என்று கவலை வேண்டாம் எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டதால் இந்தப் பதிவும் சுருங்கிவிட்டதாக நினைத்துக் கொண்டல் கவலைகள் பிடறியில் கால் அடித்துக் கொண்டு ஓட்டமெடுக்கும் !
தொடரும்...
S.ஹமீது
12 Responses So Far:
\\இந்த பதிவு சுருங்கிவிட்டதே என்று கவலை வேண்டாம் எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டதால் இந்தப் பதிவும் சுருங்கிவிட்டதாக நினைத்துக் கொண்டல் கவலைகள் பிடறியில் கால் அடித்துக் கொண்டு ஓட்டமெடுக்கும் !\\
சுஜாதா பாணியில் சுருங்கச் சொல்லியும், அறிவியலை விருப்பமுடன் கற்கும் வண்ணம் நகைச்சுவை கலந்தும் எழுதும் உங்களிடம் நல்ல எழுத்தாற்றலும் உண்டு.
மாஷா அல்லாஹ்! பாராட்டுகள்! வாழ்த்துகள்!
முதலில் இங்கே எட்டிப் பார்க்கும் பாப்பா'வின் பார்வையை டாப்பாக எடுத்த உங்களுக்கு ஒரு சொட்டு !
டிஜிட்டல் கேமாரா தொழில்நுட்பத்தினைப் பற்றி எழுத வேண்டும் என்றால் நிறைய இருக்கிறது ! விரைவில் அதுபற்றி நீண்டதொரு தொடர் அடிப்படை செயல்பாட்டிலிருந்து இன்றைய புத்தம் புது டெக்னாலஜி வரை எழுத வேண்டும் ! (எல்லோரும் எழுதலாம்னு சொல்லிட்டாங்களே - ஆதாரம் ஜாஹிர் காக்கா ஆர்டிகல் !).
ரமளானுடைய காலங்களில் வேலையும் வணக்க வழிபாடுகளிலும் நம்மை ஆட்படுத்திக் கொண்டதால் இன்ஷா அல்லாஹ் ரமளான் நிறைவுற்றதும் அதனையும் செய்வோம் !
எது எப்படியிருந்தாலும் நல்ல கேமரா வேனும் அதோடு கிரியேட்டிவிட்டியுடன் கூடிய ரசனை செரிவும் வேண்டும், எதற்கெடுத்தால் ஸ்மைல் ப்ளீஸ் என்பதும் எல்லோரும் ஸ்டடியா நில்லுங்க ஃபோட்டோ எடுக்கப் போறேன்னு மிரட்டுவதும் நானும் ஃபோட்டோ எடுத்துட்டேன்னு கிளிக்குவதில் கிக் இல்லை !!
இயல்பானவைகளை அதன் போக்கிலே விட்டு ரசனைகேற்ற தோற்றத்தில் அமையும் வரை காத்திருப்பான் புகைப்பட கலைஞன், இயல்புக்கேற்ற நியதியில் இருப்பதே சிறந்த புகைப்படம். அதற்கு உறுதுணையாக ஒத்துழைப்பதே கேமராக்களின் வேலை !
எவ்வகை கேமராவானாலும் அதனைக் கையாளுவதில் பொறுமையும் நேர்த்தியும் இருப்பின் அனைத்து படங்களும் ஆயிரம் அர்த்தங்களோடு உறவாடும் !
என்னுடைய சின்ன மாமா, கா.மு.கல்லூரியில் நடக்கும் விழாக்களில் அவர்களால் எடுத்த படங்களை அவர்களே டெவலப் செய்வதை என் சிறுவயதில் அவர்களோடு அந்த இருட்டரையில் சிவப்புக் கண்ணாடி பேப்பர் போர்த்திய குறைந்த வெளிச்சமே உள்ள லைட் வெளிச்சத்தில், ஆப்பரேஷன் தியேட்டரில் இருக்கும் வெள்ளைப் பீங்கான் போன்ற தட்டில் வேதியல் திரவங்களை இட்டு கைகளில் படாமல் அதில் விட்டு விட்டு எடுக்கும்போதும், நெகட்டிவில் எதிர்பார்க்கும் தெளிவு வரும் வரை அந்த கழுவியெடுக்கும் வேலைத் தொடரும்.
அதன் பின்னர் வீட்டில் துணி கழுவி காயப்போடுவது போன்று கட்டியிருக்கும் கயிற்றில் கிளிப் போட்டு காய வைக்கப்படும் (இருட்டிலேயே)... குறிப்பிட்ட நேரம் கழித்து மீண்டும் அதனை பாஸிட்டிவாக மாற்ற பிரத்தியோகமான பேப்பரைக் கொண்டு அடுத்த கட்ட வேலை தொடங்கும் !
இப்படியாக ஆரம்ப காலங்களை பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கு !
ம்ம்ம் பார்ப்போம் !
நகைச்சுவை இழையோட ட்டெக்னிக்கல் விஷயங்களைச் சொல்வது சிரமம். ஆனால், நீங்கள் அதை அநாயசமாகவே செய்கிறீர்கள்.
இருப்பினும், இந்த அத்தியாயத்தில் ட்டெக்னிக்கல் விஷயங்களைக் குறைத்து கலாய்ச்சிருக்கிறீர்கள். இதுவும் நல்லாத்தான் இருக்கு.
சபீர் சொன்ன கருத்துக்களையே நனும் பதிகின்றேன்
நகைச்சுவை இழையோட ட்டெக்னிக்கல் விஷயங்களைச் சொல்வது சிரமம். ஆனால், நீங்கள் அதை அநாயசமாகவே செய்கிறீர்கள்.
இருப்பினும், இந்த அத்தியாயத்தில் ட்டெக்னிக்கல் விஷயங்களைக் குறைத்து கலாய்ச்சிருக்கிறீர்கள். இதுவும் நல்லாத்தான் இருக்கு.
கேமராக் கலைஞரின் உயர்தரமான குசும்பலுடன் அருமை அறிவியல் தகவல்கள்!
வார்த்தையில் பிழையிருப்பின் மன்னிக்கவும் : வாப்பாவும் மொவனும் அதிரை நிருபரில் சிறப்பான கலக்கல் செய்து கொண்டிருக்கிறீர்கள். இது தொடரட்டும்.
தம்பி ஜாபர் சாதிக். அஸ்ஸலாமு அலைக்கும்.
வாப்பாவும் மொவனும் ? மாமனை மறந்து விட்டீர்களா அலது மாமன் கலக்கவில்லையா?
//சபீர் சொன்ன கருத்துக்களையே நனும் பதிகின்றேன்
நகைச்சுவை இழையோட ட்டெக்னிக்கல் விஷயங்களைச் சொல்வது சிரமம். ஆனால், நீங்கள் அதை அநாயசமாகவே செய்கிறீர்கள்.
இருப்பினும், இந்த அத்தியாயத்தில் ட்டெக்னிக்கல் விஷயங்களைக் குறைத்து கலாய்ச்சிருக்கிறீர்கள். இதுவும் நல்லாத்தான் இருக்கு.//
அடுத்த தொடரில் ஃபுல்லா டெக்னிக்கல் மேட்டர் வருவதால் இந்த தொடர் கொஞ்சம் நகை சுவையா அமைந்து விட்டது
மீண்டும் மன்னிக்கவும் மகா பிழை
வாப்பா மகனுக்கிடையே மாமன் என்றும்
இருக்கனும்.
மரியாதைக்குரிய இ.அ. காக்கா வ அலைக்குமுஸ்ஸலாம்.
Ebrahim Ansari சொன்னது…
//தம்பி ஜாபர் சாதிக். அஸ்ஸலாமு அலைக்கும்.
வாப்பாவும் மொவனும் ? மாமனை மறந்து விட்டீர்களா அலது மாமன் கலக்கவில்லையா?//
மாமா பேத்தியை மறந்து விட்டீர்களே (பேத்தியின் ஒரு கட்டுரை அதிரை நிருபரில் வந்துள்ளது )
//மாமா பேத்தியை மறந்து விட்டீர்களே (பேத்தியின் ஒரு கட்டுரை அதிரை நிருபரில் வந்துள்ளது )//
பேத்தியை மறக்கவில்லை. பேத்தி அடிக்கடி எழுதவில்லையே. ஒரு கட்டுரை மட்டும் கலக்கல் என்ற பட்டத்துக்கு ஏற்க முடியாது என்று தம்பி ஜகபர் சாதிக் அவர்களின் அனுமதியுடன் கூற விரும்புகிறேன்.
எனவே உன் மகளும், தம்பி சபீர் அவர்களின் மகளும், கிரவுன் அவர்களின் மகளும் இன்னும் நமது பதிவாளர்களில் யார் யார் பிள்ளைகளுக்கு எல்லாம் முடியுமோ அவர்களால் முடிந்த மழலைப் பதிவுகளை தரலாம். இல்லையா தம்பி அபூ இப்ராகிம்?
//மாமா பேத்தியே மறந்துட்டியலே//
போற போக்கை பாத்தா 'அதிரைநிருபரும் 'தி.மு.க. ஆயிடும் போல் இருக்கே! :)
S.முஹம்மது பாரூக், அதிராம்பட்டினம்
Post a Comment