அதிராம்பட்டினத்தில் 1961ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு-மூன்றாம் இராசராசனின் கல்வெட்டாக கருதப்படும் எழுத்தமைதியைக் கொண்ட கி.பி.12-13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு(ARE 1961:310) இப்பட்டினத்தை வீரசோழன்பட்டினம் எனக் குறிப்பிடுவதோடு தமிழகத்தின் முக்கியத் துறைமுகமாகவும் இருத்ததையும் அது, இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டில் இருத்தது என்பதையும் தெரிவிக்கிறது.
கல்வெட்டு(ARE 1961:311) அதிராம்பட்டினம் இடைக்காலத்தில், பெரும் வணிகர்களின் செயல்படுகளைக் கொண்ட சிறந்த துறைமுகமாக விளங்கியதை உறுதிப்படுத்துகின்றன.
கி.பி.11ஆம் நூற்றாண்டில் சென்னைக்கு அருகில் உள்ள கோவளமும் வீரசோழன்பட்டினம் என அழைக்கப்பட்டதை முதலாம் வீரராசேந்திரன் கல்வெட்டு காட்டுகிறது. ஆகவே, அதிராம்பட்டினத்திற்கு வீரசோழன்பட்டினம் என்ற பெயர் மேற்சுட்டிய அரசனது பெயராலோ அல்லது முதலாம் குலோத்துங்கன் கொண்டிருந்த வீரராசேந்திரன் எனும் சிறப்புப் பெயராலோ வந்திருக்கவேண்டும்.
அர.ஹிதாயத்துல்லாஹ்
ஆதார நூற்கள்:
1) தமிழகத் துறைமுகங்கள்-பா.ஜெயக்குமார்
2) கடல்வழி வணிகம்- நரசய்யா
2 Responses So Far:
அண்மைக்கால சில வெறியர்களின் ராமர் பட்டினம் என்னும் கோஷம் எழுந்து ஊரின் ஒற்றுமை என்னும் கயிறு கிழிவர்தர்க்குள்,
இஸ்லாமியர்களின் வணிக துறைமுகமாக இருந்ததின் அடையாளமாக ஒன்று
ரஹ்மத் பட்டினம் அல்லது தாங்கள் குறிப்பிட்டது போல் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டின் அடிப்படையில், வீர சோழன் பட்டினம் அல்லது வீர ராஜேந்திரன் பட்டினம் அன்று அழைக்கப்படட்டும்.
இந்த மூன்று பெயர்களில் ஏதோ ஒன்று ஊர் ஒற்றுமையின் அடையாளமாக இருந்து வரட்டும்.
அபு ஆசிப்.
அதிராம்பட்டிணத்திற்கு ஆரம்ப பெயர் செல்லிநகர்
அதன் பிறகு
அதிவீர்ராமபட்டினம் இதுவே மறுவி அதிராம்பட்டினம்
ஆனது
Post a Comment