Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

முக்கிய அறிவிப்பு ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | August 22, 2013 | , , , ,

அதிரை சகோதர சகோதரிகள் அனைவருக்கு ஓர் கணிவான வேண்டுகோள் !

அமெரிக்காவில் மரணம் தழுவிய சகோதரி முஃப்லிஹா (முஹம்மது இபுராஹீம் -மு.இ.- அவர்களின் மூத்த மகள்) அவர்களின் நல்லடக்கம் இன்று (21-08-2013) லிவர்மோர், கலிஃபோர்னியாவில் நடைபெற்றது. சகோதரர் மு.இ. அவர்களின் இரண்டாவது மகளின் உடல்நிலையில் நல்லதொரு முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ். விரைவில் மு.இ.அவர்களின் இரண்டாவது மகள் குணமடைய அனைவரின் பிரார்த்தனையை வேண்டுகிறோம் இன்ஷா அல்லாஹ்!

உருக்கமான வேண்டுகோள் அவசியமற்ற யூகத்தினடிப்படையில் தகவல்களை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள், அவ்வாறு உங்களிடம் யாரும் தெரிவித்தால் அவர்களிடம் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ள அறிவுறுத்துங்கள். தவறான தகவல் பறிமாற்றங்களினால் குடும்பத்தினர் மிகவும் மன உளச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர் அவர்கள் இந்த பாதிப்பிலிருந்து மீண்டெழ அல்லாஹ்விடம் நாமும் துஆச் செய்வோம் இன்ஷா அல்லாஹ் !

இப்படிக்கு,

தமீம் அன்சாரி
கலிஃபோர்னியா

5 Responses So Far:

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

பெரும்பான்மையான மக்களின் நிலை எப்படி இருக்கிறதென்றால் அல்லாஹ்வின் நாட்டத்தில் எங்கேனும் ஒரு வீட்டில், இடத்தில் யாருக்கேனும் ஏதேனும் விபத்து அல்லது விபரீதம் சம்பவிக்குமேயானால் அதை ஏதேனும் வழியில் கேள்விப்படும் மக்கள் வெறும் பரபரப்புக்காகவும், அது பற்றி மேலதிக விவரங்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்திலும் தான் கேட்டறிய விரும்புகிறார்களேயொழிய அதிகம் வருந்திக்கொள்வதற்காக இருப்பதாக தெரிவதில்லை.

நம் உள்ளங்களின் இருப்புக்களையும், ஊசலாட்டங்களையும் படிகத்தெளிவோடு எவ்வித உபகரணங்களும் இன்றி தெள்ளத்தெளிவாக அறியக்கூடியவன் அந்த இறைவன் ஒருவனே.

சகோதரர் மு.இ.வின் பாதிக்கப்பட்ட இன்னொரு மகளும் வஃபாத்தாகி விட்டதாக ஊரில் செய்திகள் விளங்காத‌, ப‌க்குவ‌மில்லாத‌ ம‌க்க‌ளால் ப‌ர‌ப்ப‌ப்ப‌ட்டுள்ளது அறிந்து வேத‌னைப்ப‌டுவ‌தை விட‌ வேறொன்றும் செய்வ‌த‌றியாது த‌விக்க‌வே முடிகிற‌து. அல்லாஹ் அக்குழ‌ந்தைக்கு ப‌ரிபூரண, விரைந்த‌ சுக‌த்தையும், நீடித்த ஆயுளையும் த‌ந்து மூத்த‌ ம‌க‌ளை திடீர் விப‌த்தால் இழ‌ந்து த‌விக்கும் அப்பெற்றோர்க‌ளுக்கும், குடும்ப‌த்தின‌ர்க‌ளுக்கும், ந‌ல‌ம் விரும்பும் ந‌ட்பு வ‌ட்டார‌த்திற்கும் அல்லாஹ் அழ‌கிய‌ பொறுமையைக்கொண்டு ந‌ல்ல‌ருள் புரிவானாக‌...ஆமீன்.

எந்த‌ வேத‌னையும் த‌ன‌க்கு வ‌ராத‌ வ‌ரை எந்த‌ ஆன்மாவும் துல்லிய‌மாக‌ அத‌ன் வ‌லியை உண‌ருவ‌தில்லை.

அல்லாஹ்வே ந‌ம்மையெல்லாம் காத்த‌ருள‌ட்டும்....

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

ZAKIR HUSSAIN said...

இப்படி வதந்திகளை பரப்புபவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் மட்டும் எப்போதும் வசந்தம் வீசிக்கொண்டே இருக்கும் என்று நினைக்கிறார்களா?...எவ்வளவு பெரிய அறியாமை .

இறைவன் மீது கொஞ்சம் கூட பயமில்லாமல் இப்படி நடக்கிறார்கள் என நினைக்கிறேன்.

Unknown said...

எந்த வலியும் அதை யார் அடைந்தார்களோ அவர்கள் நிலையில் நின்று பார்போமேயானால், நல்லதையே சிந்திக்க தோன்றும்.

இறப்பெய்திய குடும்பத்தின் இழப்பின் வேதனையை நம் குடும்பத்து வேதனையைபோல் நினைத்தால். இன்னலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன் என்று சொல்லியபிறகு, அந்தக்குழந்தைக்காக அல்லாஹ்விடம் துஆ கேட்பதையடுத்து வேறு எந்த சிந்தனையும் மனதில் தோன்றாது.

ஊர்ஜிதம் இல்லாமல் ஒரு செய்தியை நம்பி அதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதில் முனைப்பு காட்டுவது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் தண்டனைக்குரிய விஷயமாகும்.

அல்லாஹ் வதந்திகளை விட்டும் நம் எல்லோரையும் பாதுகாக்கட்டும்.

அபு ஆசிப்.

adiraimansoor said...

சில பேருக்கு வெரும் வாய்க்கு அவள் கிடைத்தமாதிரி. இதே வேலையாக வீடு வீடாக அலையும் கூட்டம் நம்முரில் பஞ்சமில்லை. எதாவது பேசியாகனும் அல்லவா இன்றைய சப்ஜெக்ட் இது. குறிப்பாக பென்களிடம் அதிகம்

வதந்திகளை பரப்புவோர் சமுதாயத்தின் எதிரிகள். இப்படி வாய் கூசாமல் வதந்தியை பரப்புவதினால். அல்லாஹ்வின் தண்டனையை தவிற வேறு என்ன கிடைக்கும் என்று எதிபார்க்கின்றார்கள்.

ஒவ்வொருவரின் உள்ளத்தை ஊடுருவக்கூடியவனின் தண்டனையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்
இப்படி இல்லாத செய்திகளை இட்டுக்கட்டி பேசினால் அந்த செய்தி நாளை அல்லாஹ் நமக்கு திருப்பி விடமாட்டான் என்று என்னுகின்றார்களா?
அல்லாஹ் எல்லோரையும் காப்பற்ற வேண்டும். யாருக்கும் இப்படி பட்ட சம்பவங்கள் நடக்காமல் அல்லாஹ் எல்லா மக்களையும் காப்பற்றவேண்டும்

இபுராஹீம் குடும்பத்தாரையும் நம்மையும் துக்கத்தில் விட்டுச்சென்ற முப்லிஹாவை ஹூர்லீன்களோடு சொர்க்கத்து கன்னியாக இருக்கும் பாக்கியத்தை அல்லாஹ் அருள்வானாக.
தன் பிள்ளயை இழந்து நிலை குலைந்து மன உளைச்சலில் இருக்கும் இபுராஹீம் குடும்பத்தாருக்கு அல்லாஹ் பொறுமையை கொடுத்து இரண்டாவது பிள்ளை நல் சுகத்துடன் வீடு திரும்பி இந்த பிள்ளயை கொண்டு மீண்டும் அந்த குடும்பத்தில். நல்ல மகிழ்ச்ச்யை ஏற்படுத்துவானாக
ஆமீன்

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

ஒருவர் வேதனையில் இருக்கும் பொழுது அவரின் பாவங்கள் மன்னிக்கப்படுவதுபோல் அவருக்கு ஆறுதல் கூறுபவருக்கும் அல்லாஹ் மன்னிப்பளிக்கிறான்
மு.இ.அவர் மனைவி மற்றும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் மன ஆறுதலை அளிப்பானாக
இறந்த பெண்ணுக்கு மறுமையில் நற்பதவி அளிப்பானாக


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு