Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இன்று 10.01.2011 17

ZAKIR HUSSAIN | January 10, 2011 | , ,

அறிந்தது
சமீபத்தில் டாக்டர் கே வி எஸ் ஹபீப் முஹம்மது அவர்களின் வீடியோ [ மானுட வசந்தம்]பார்க்கும்போது அறிந்தது.அதில் ஒரு கிருஸ்தவ நண்பர் கேட்கும் கேள்விக்கு பதில் சொன்ன விதம் என்னை மிகவும் கவர்ந்தது.

கேள்வி: உங்கள் இஸ்லாத்தில் ஒரே இறைவன் ன்று சொல்கிறீர்கள். யாரையும் வணங்குவது தவறு என்று சொல்கிறீர்கள் [ அல்லாஹ்வைத்தவிற], ஏன் சில முஸ்லீம்கள் தர்காவுக்கு போய் சில வணக்கங்கள் செய்கிறார்கள்.?
Dr. K.V.S. Habeeb Mohamed பதில்: இது ஏன் என்று கேட்டால் அறியாமை என்றுதான் சொல்வேன். சரியாக மாக்கத்தை விளங்கிக்கொள்ளாததால் வந்த பழக்கம் என நினைக்கிறேன். சரி இதற்க்கு தீர்வு ன்னவென்று பார்ப்பதுதான் முறை; இதில் அனுகுமுறை எப்படி இருக்க வேண்டுமென்றால் ஒரு டாக்டர் நோயாளியிடம் காட்டும் அனுகுமுறை முக்கியம். நோய் மீது கோபம் வரலாம்
ஆனால் நோயாளி மீது கோபம் வரக்கூடாது. நம் ஆட்களின் பிரச்சினை என்னெவென்றால் நோயாளியிடம் கோபப்படுவது [answer complete]
" இவன் ஏன் இப்படி செய்கிரான்/..எப்படி செய்யப்போச்சு?' இது முக்கியமில்லை ..உனக்கு மார்க்கம் தெரியுமல்லவா.. எடுத்து சொல்...எது வரை எடுத்து சொல்வது..அவன் கற்றுக்கொள்ளும் வரை...பொறுமைதானே வாழ்க்கையின் மிகப்பெரிய பாடம்.
நமது நபி முஹம்மது [ஸல்] அவர்கள் கற்றுத்தந்தது அன்புதானே..ஆதிக்கம் இல்லையே.
...
கல்வி விழிப்புணர்வு மாநாடு
கல்வி விழிப்புணர்வு மாநாடு நடக்க இன்னும் சில தினங்கள் இருக்கிறது. இதுவரை நேரில் பார்த்திராத எத்தனையோ கோரர்கள் இதில் ஈடுபட்டு இறைவன் உதவியால் ஒரு நல்ல விசயத்தை ஊரில் உள்ள மாணவர்களுக்கு செய்ய இருக்கிறார்கள். தடைகள் இருக்கும் , விமர்சனமும் இருக்கும், நாம் நினைத்தது மாதிரி அவர் நினக்கவில்லை என்று வருத்தப்பட்டு மனம் சோரக்கூடாது.
 
“வருத்தகூட்டம்” எல்லாம் போடக்கூடாது. அப்படி உங்களைப்போல் எல்லோரும் சிந்திக்க வேண்டும் என்று வருத்தப்பட்டால்..கம்ப்யூட்டரில் எல்லோரும் ஒறெ மாதிரி பேக்ரவுன்டு படம் வைத்து கொள்ளவேண்டும் என்ற ஆசை மாதிரிதான் இதுவும்...இது சாத்தியமே இல்லை . அல்லது உங்களுடைய மூலையின் Memory Zone ஒறே மாதிரி கொண்டு வர சில தொழிற்சாலைகள் முன் வர வேண்டும்...அது ப்போதைய டெக்னாலஜி அவ்வளவு முன்னேற்றம் அடையாததால் இந்த சின்ன சின்ன வருந்தங்களை சில நூறு வருடங்கள் தள்ளிப்போடவும்.

வீடுகள்
  
இப்போது நமது ஊரில் வீடுகள் கட்டுகிறார்கள்.

..ஆனால் பல வருடங்களாக ஒறே மாதிரி ப்ளான் வைத்து கட்டுவதுபோல் உள்ளது தவிர்க்க முடியாததா?...கோடையில் மழை குறைவு எனத்தெரிந்தும் மழை நீர் சேகரிப்புக்காக எந்த ஏற்பாடும் செய்வதுபோல் தெரியவில்லை. சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் பேனல்கள் 26 ஆயிரம் ரூபாய் அளவு குறைந்தும் யாரும் அதை வாங்கி பயன்படுத்துவதுபோல் தெரிய வில்லை. இதில் பெருமளவு பணம் மிச்சப்படுத்த முடியும். வீடுகளில் வெளிச்சம் வருகிற மாதிரி வீடு கட்டாமல் ஒவ்வொரு மாதமும் எலக்ட்ரிக் பில் கட்டுவதில் பெரும் பணம் இழக்கிறோம். இப்பொது உள்ள வீடுகளின் மாதிரி டிசைன்ஸ் உங்கள் பார்வைக்கு...

--ZAKIR HUSSAIN

17 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அசத்தல் காக்காவின் பூஸ்ட்(டும்) இன்று காலையில் எழுந்ததும் பருகியது தெம்பே ! அதெப்படி காக்கா, இப்படி சட்டென்று உங்களுக்கு என்று சிந்தனை ஒய்யாரமாக ஓடியாடி விளையாடுது ! சூரிய ஒளி பற்றி சென்றவருடம் யோசித்தோம் அப்போது அதன் விலை நாற்பத்தி இரண்டாயிரம் என்று இருந்தது இப்போது அதனை முப்பத்தி நான்காயிரமாக குறைத்தெடுத்து வீட்டில் வைக்க ஏற்பாடும் நடந்தேறுகிறது என் கண்முன்னால் (பக்கத்தில் காட்டியெழுப் படும் விட்டில்தான் காக்கா)

ZAKIR HUSSAIN said...

To Bro;அபுஇபுறாஹிம்

உங்களைப்போல் உள்ள அன்பு உள்ளங்கள்தான் காரணம். ஊரில் இருப்பதுடன் நிறைய படங்கள் எடுத்து PICASA WEB ALBUM ல் UPLOAD செய்து வைக்களாமே

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

(ஜாஹிர்)காக்கா: முயற்சிக்கிறேன்... கிடைக்கின்ற நேரத்தில் பார்வைக்குள் வந்திடும் நிஜங்களை நிழலாக்கிட இன்ஷா அல்லாஹ்... மாநாட்டு வேளைகள் என்று கவனம் அங்கிருப்பதால் இன்னும் தேங்காய்கள் / பயிர்கள் தளிரும் தரைகளை நோக்கிடச் செல்லவில்லை காக்கா ! :)

கண்டிப்பாக புளிய மரத்தடி சுவடையாவது கிளிக் செய்யனுமே:))

இப்னு அப்துல் ரஜாக் said...

அசத்தல் காக்கா!

சகோதரர் தாஜுதீன்,ஜாகிர் காக்கா மற்றும் சகோதரர்களே,இந்த இணைப்பில் சென்று சகோ ஷா நவாஸ் உருவாக்கிய குறும்படம் பாருங்கள்.முஸ்லிம்கள் கல்வியிலும்,இன்ன பிற விஷயங்களிலும் எவ்வாறு பின் தங்கியுள்ளனர் என அழகாக படம் பிடுத்துள்ளார்.

சகோ தாஜுதீன்,அஹமத் சாச்சா,நெய்னா தம்பி காக்கா ஆகியோர்களுக்கு வேண்டுகோள்.இந்த குறும் படத்தை மாநாட்டில் போட்டுக் காட்டலாமே?செய்வீர்களா?

http://penaamunai.blogspot.com/2011/01/blog-post_5092.html

Yasir said...

காக்காவின் ஆக்கம் அஞ்சு கறி சோறு சாப்பிட்ட திருப்தியை தந்தது(அபு இபுராஹிம் காக்கா எத்தனை இதுவரை சாப்பிட்டு இருக்கிறீர்கள் .கல்யாண சீசனாமே இப்ப அதான் கேட்கிறேன் ) ....ஆனால் தாளிச்சா,தக்காளி சுவிட்டுடன் கூடிய கம கம கறி பிரியாணி போன்ற ஆக்கம் வேண்டும் உங்களிடம் இருந்து....(இந்நாள் வரைக்கும் இது வேல்லாம் அளவோடு சாப்பிட அல்லாஹ் கொடுத்து வைத்து இருக்கிறான் )

sabeer.abushahruk said...

ஜாகிர்,

இன்று - நன்று.

மூன்று பூக்களேயாயினும் அருமையாக கோர்க்கப்பட்டிருக்கிறது கதம்பம். உன் எழுத்து நடையால் வசீகரிக்கிறது இந்த இடுகை. அழகான வீட்டின் புகைப்படமும் சூப்பர்.
தர்கா மேட்டர் எப்பவுமே குடைச்சல்தான். ஆயினும், புது ஜெனெரேஷன் விழித்துக்கொண்டு விலகும் என நம்புவோம்.

மாநாடு மகத்தான வெற்றியடையும் என நம்புகிறேன் இன்ஷா அல்லாஹ்.

வெளியே எலிவேஷன் மாறுபட்டாலும் உள்ளே பெரும்பாலும் ஒரே மாதிரிதான் வீடு கட்டுகிறார்கள் நம்மூரில். புதுப்புது எண்ணங்கள்கொண்ட இளைய சமுதாயம் மாற்றி யோசிக்கும்.


அப்படியே www.thinnai.com ல் என் "இனிமையானவளே" ஒருமுறை வாசித்துவிடு.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அப்படியே www.thinnai.com ல் என் "இனிமையானவளே" ஒருமுறை வாசித்துவிடு.//

நீங்க அங்கே சொன்னாலும் நாங்க தலைய காட்டிட்டோம் அங்கே...

//நீயோ...
கிடைத்தும் கிடைக்காமல்
உண்டும் செரிக்காமல்
இரத்ததோடு
கலக்காத குளுக்கோஸாய்
என் சர்வமும்
வியாபிக்கிறாய்! //

கற்க கசடற கவிக் காக்காவின் வரிகளையும் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி யாசிர் : சீஸன் கலைப்பாரும் நேரத்தில்தான் வந்திறங்கியிருக்கிறேன் இருப்பினும் நடந்தேற இருக்கும் கல்வி விழிப்புணர்ச்சி மாநாடு வெற்றி முகம் கண்டிட களம் கண்டிருக்கிறோம் தூஆச் செய்யுங்கள் உறவுக்கும், அக்கம் பக்கத்திற்க்கு சொல்லியனுப்புங்கள்..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி அப்துல் லத்தீஃப்: கண்டேன் காணொளியை, பரிந்துரையை இங்கு மாநாட்டு குழுவிலும் வைக்கிறேன் முடிவை அவர்கள் எடுத்ததும் இங்கே மீண்டும் பதிகிறேன்

Yasir said...

//நடந்தேற இருக்கும் கல்வி விழிப்புணர்ச்சி மாநாடு வெற்றி முகம் கண்டிட களம் கண்டிருக்கிறோம் தூஆச் செய்யுங்கள்// Success favors efforts...we all trying our best and leave the rest to HIM...Insha Allah it will be one of the greatest & successful program in our Adirai history...and our new generation will open a new page in our history by this Education Awareness Conference...ALLAH BLESS YOU ALL WITH GOOD HEALTH AND GIVE MORE ENERGY TO DO THE FIELD WORK WHICH WE ALL WANT TO DO...BUT MISSING....

ZAKIR HUSSAIN said...

சகோதரர் அபு இப்ராஹிம் உங்களின் உடனடி பதிலுக்கு நன்றி.

சகோதரர் ஒருவனின் அடிமை : குறும்படம் பார்த்தேன்..உண்மையில் இதை விட முஸ்லீம்களின் பொருளாதார சீர்குழைவை தெளிவாக சமுதாயத்தின் முன் எடுத்து வைக்க முடியாது....முஸ்லீம்கள் "நன்னாத்தான் இருக்கா...பேஷா எல்லாம் கெடைக்கிறதுன்னு சொல்ரவா..வீட்டில் ஹாயாக நாற்காளியில்...அன்றாடம் வயிற்றுப்பசியை மட்டும் நிவர்த்தி செய்ய பாடுபடும் முஸ்லீம்கள் இரும்பு உருக்கும் உலையில் சட்டை இல்லாமல் வியர்வையுடன் சுத்தியல் எடுத்து இரும்பு வளைக்கும் கடினமான சூழ்நிலை...இது "பாய்' எடுத்த படம் ஆதலால் அரசாங்கம் அவ்வளவு முக்கியத்துவம் தராது.

இதே திரையுலக ஜாம்பவான்ஸ் எடுத்திருந்தால் திரைப்படக்கல்ல்லூரிக்கு பரிந்துரை செய்யப்படும்.

சகோதரர் யாசிர்...உங்கள் கமென்ட்ஸ்க்கு தேங்க்ஸ்...இருந்தாலும் சாகுல் கமென்ட்ஸ் போடாததை நிறைவேற்றி விட்டீர்கள்.[ your comments resembles his style of writing]

சபீர் உன்னுடைய கவிதை "திண்ணை.காம்' ல் படித்தேன். அந்த வெப் நடத்துபவர்களிடம் ஒரு கண்ணாடி வாங்கி தரச்சொல். படிக்காத பசங்களின் நோட்டுப்புத்தகம் மாதிரி நிறைய இடங்கள் 'சும்மா" இருக்கு. ஆனால் தேடும் எழுத்துக்கள் [ தலைப்பு ] மட்டும் புருசனுக்கு பயந்து பிறந்த வீட்டுக்கு எழுதும் பெண்களின் கடிதம் மாதிரி சின்ன எழுத்தாக இருக்கிறது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜாஹிர் காக்கா, வேலை பளு அதிகம் அதான் உடன் கருத்திட முடியவில்லை.

மொட்டதலைக்கும் முலங்காலுக்கும் முடிச்சு போடும் விமர்சனங்களை கண்டு வருத்தப்பட்டு வருத்தக்கூட்டமெல்லாம் போடக்கூடாது என்று ரொம்ப சிம்பிளான motivation message சொல்லியிருக்கிறீர்கள். டெக்னாஜியை வம்புக்கு இழுத்து சின்ன சின்ன வருந்தங்களை சில நூறு வருடங்கள் தள்ளிப்போடவும் என்று சொல்லும் திறமை ஜாஹிர் காக்கா உங்களால் மட்டுமே முடியும்.

தங்களிடம் ஒரு வேண்டுகோள் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக motivation தரும் சூவரஸ்யமான technology கலந்த ஒரு ஆக்கம் உங்க styleல கொடுக்க முடியுமா?

ZAKIR HUSSAIN said...

Thanx Thajudeen,

i will write as per your request..give me some time

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.தாமதத்துக்கு மன்னிக்கவும். பெரியவங்க,விசயதாரிகள் சொல்லி சென்றபிறகு நாம் சொல்ல என்ன இருக்கு? இருந்தாலும் எனக்குதோன்றியதை சொல்லி(எழுதி)விடுகிறேன்.அனுகுமுறை எப்படி இருக்க வேண்டுமென்றால் ஒரு டாக்டர் நோயாளியிடம் காட்டும் அனுகுமுறை முக்கியம். நோய் மீது கோபம் வரலாம்
ஆனால் நோயாளி மீது கோபம் வரக்கூடாது. நம் ஆட்களின் பிரச்சினை என்னெவென்றால் நோயாளியிடம் கோபப்படுவது.
----------------------------------------------------
மிகச்சரியாக சொல்லபட்ட வைத்தியம்.
---------------------------------------------
கல்வி மானாட்டைபற்றி அதை குறைகூருகிறவர்கள் பற்றி சொன்னவிதம் வழக்கம் போல் கலக்கல்.உங்களுக்கு என்றே ஒரு ஸ்டைல் அதில் எப்பொழுதும் பொது நலக்கருத்துக்கள்.
--------------------------------------
வீட்டைப்பற்றிய செய்தியில் தேவையானவைகளை செய்யவேண்டிய அவசியம் பற்றி சமூக அக்கறையும்,வெளிச்சம் ,காற்று புகாத வீட்டில் வைத்தியன் புகுவான் , வாழ்கையும்,வீடும் இருட்டாகிவிடும். மருந்துக்கும்,மின்சாரத்திற்கும் அள்ளிக்கொண்டு போய்விடும்.
--------------------------------------------

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
என்ன பாஸ் இப்படி ஒரே கட்டுரையில் மூன்று விசயங்களை போட்டு தாக்கினா கத்துக்குட்டி நாங்களெல்லாம் ரொம்பவே யோசித்து எழுத வேண்டி உள்ளது.

Shameed said...

//உங்களைப்போல் எல்லோரும் சிந்திக்க வேண்டும் என்று வருத்தப்பட்டால்..கம்ப்யூட்டரில் எல்லோரும் ஒறெ மாதிரி பேக்ரவுன்டு படம் வைத்து கொள்ளவேண்டும் என்ற ஆசை மாதிரிதான் இதுவும்...இது சாத்தியமே இல்லை//

அஸ்ஸலாமு அழைக்கும்

பேக்ரவுன்டு இருக்கட்டும் மார்கெட்டில் எல்லோரும் ஒரே மீனை வாங்கினால் நிலைமை என்ன ஆகும்ன்னு கொஞ்சம் "மாத்தி" யோசித்தேன்
நிலைமை ரொம்ப விபரீதமா போயிடும்

mohamed said...

அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லாஹ் இந்த மானாடு வெற்றி அடைய அல்லாஹ் விடம் துவா செய்தவனாக இருக்கிரேன்.

முகம்மது புகாரி
தமாம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு