Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அலட்சியத்தால் வரும் அவஸ்த்தை. 6

தாஜுதீன் (THAJUDEEN ) | January 06, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அஸ்ஸலாமு அலைக்கும்..

வாங்க ஆவ்மியாக்கா (அஹமது முஹைதீன் காக்கா) எப்புடி ஈக்கிறியெ? பாத்து ரொம்ப நாளாச்சி...வேலெவெட்டி எல்லாம் எப்புடி போய்க்கிட்டு ஈக்கிது? இன்னெக்கி இந்த சைடு வந்திக்கிறெதெ பாத்தா ஊருக்கு போஹ நாளு நெருங்கிடிச்சி போலெ தெரியுது? ஆஹட்டும்..ஆஹட்டும்...

ஆமாடாத்தம்பி கொஞ்சம் ஊருக்கு சாமானுவொ வாங்கிஹிட்டு போஹலாம்ண்டு வந்தேன். ஊருக்கு சாமான்,ஹீமான் வச்சிக்கிறியா? ஈந்தா தா கொண்டு போய்க்கொடுத்துற்றேன். கவலெப்படாதே...

சரி ஹாக்கா... எதுவும் ஈந்தா கண்டிப்பா சொல்றேன்..

அமா.. என்னடா இது ஒன் ஒடெம்பை கொஞ்சம் கவனிக்கிறது இல்லையா? என்னா ஹாக்கா சொல்றியெ? வெளெங்கலெ...

இப்புடி வாயும், வயிறுமா நெறெ மாசா கற்பினி மாதிரி தொந்தி உழுந்து போயி ஈக்கிறியெ இந்த வயசுலெ? இது உனெக்கே அழஹா ஈக்கிதாடா வாப்பா? நீ மட்டும் தான் இப்புடி ஈக்கிறெதா நெனெச்சிக்கிடாதே...ஊர்லெ சின்ன,சின்ன வாலிப புள்ளெயெளுவோ எல்லாம் வாயக்கட்டாமெ களரி சாப்பாடு, கெளரி சாப்பாடுண்டு, பார்டி, ஹீட்டிண்டு கடுமையா வெளுத்துக்கட்டுறாங்கெ. அது சரி வயசு புள்ளெயெலுவோ நல்லா சாப்புட வேண்டியது தான். அதுக்கு ஏத்தெ மாதிரி ஒழைக்கனும் இல்லையா? ஊர்லெ வேர்வெ வர்ரத்துக்கெ வேலெ இல்லாமெ சும்மா இப்படி கொளத்துக்கரையிலெ உக்காந்துட்டு போனா எல்லாம் சரியாயிடுமா? அடுப்புளெ சோறு தான் ஏறிடுமா? யோசிக்கிர்ரது இல்லையா?

எப்பப்பாத்தாலும் ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, கோழிக்கறிண்டு வகைவகையா சாப்புற்றாங்கெ. அது அவங்கெ வசதிண்டு நீ சொல்றது என் காதுலெ உழுவுது...அப்படியெல்லாம் சாப்பிட்டு கொறைஞ்சது அரை மணி நேரம் காலையிலெயோ இல்லாட்டி சாய்ங்காலமோ கொஞ்சம் விளையாட்டு, உடற்பயிற்சி ஏதாவது தனக்கு ஏண்டெதெ செய்யிறது இல்லையா? அப்படியெல்லாம் மொறையா செய்யாததுனாலெ இன்னெக்கி கண்டெ,கண்டெ சீக்கு வந்து நம்மை தொல்லெ பண்ணுது. அதோடெ காசுபணமும் ஆஸ்பத்திரிக்கி அநியாயமா போய்ச்சேருது.

சின்ன,சின்ன புள்ளெயெளுவொலுக்கு கூட காலு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி, முதுகு வலி, கை கடுப்பு, தலை வலி, கேன்சரு, இனிப்பு நீரு, ரெத்தக்கொதிப்பு, உப்பு நீரு, கிட்னி ப்ராப்ளம் என்று எதேதோ வந்து அவங்களையும் தீராத தொல்லைக்கு ஆளாக்கி அத்தோடெ அவங்கெ குடும்பத்தையும் பொருளாதார ரீதியிலெ சீரழிச்சி கடைசியிலெ அவங்களையும் கப்ருக்கு கொண்டு போயி சேத்திடுது பாத்தியா? அல்லாஹாப்பாத்தனும்..ஹயாத்து, மொவுத்து அல்லாஹ் கையிலெ இருந்தாலும் செல விசயத்துலெ நாமெ அலச்சியமா ஈக்கக்கூடாது இல்லையா?

இது நா வாலிப, வயோதிக ஆம்புளெயெல்வொளுக்கு மட்டும் சொல்லல்லை. பொம்புளெயெலுவொளுக்கும் சேர்த்துத்தான் சொல்றேன். அவங்களும் தன் ஒடம்பைப்பேணுறெ விசயத்துலெ ரொம்ப அலச்சியமா, பொடுபோக்கா ஈக்கிறாங்கெ..முப்பது, நாப்பது வயசுலேயே பெரியம்மா, வாப்புச்சா ரேஞ்சுக்கு போயிற்றாங்கெ. நீ பாக்கலையா?

ஆம்புளெயெலுவோ விளையாட்டுத்திடல் போன்ற இடங்களிலும், வீட்டுப்பொம்புளெயெளுவோ வீட்டின் மறைவான இடங்களில் காலை இல்லாட்டி சாங்காலம் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அதற்கென ஒதுக்கி நடை பயிற்சியோ அல்லது சிறு ஓட்டம், கை, கால், தலை அசைவுகள் போன்ற சிறு,சிறு உடற்பயிற்சிகளை வயசுக்கும், தன் சக்திக்கும் உட்பட்டு தொடர்ந்து செஞ்சிக்கிட்டு வந்தாங்கன்னா சும்மா சின்ன, சின்ன விசயத்துக்கெல்லாம் ஆட்டோ புடிச்சி ஆஸ்பத்திரி போயி நிக்கிறதெ கொறைக்கலாம் இல்லையா?

நா ஒன்னு கேக்குறேன். நம்ம இஸ்லாம் மார்க்கம் நம் உடலை கட்டுக்கோப்பாகவும், நல்ல ஆரோக்கியமாகவும், வனப்பாகவும் வச்சிக்கிர்ரெத்துக்கு ஏதாவது தடை செஞ்சி ஈக்கிதா? இல்லை ஹராமா? மக்ரூஹா? தலை முடி நெரெச்சி போனதுக்கு டையி தான் அடிக்கக்கூடாதே ஒழியெ உடற்பயிற்சிக்கு எந்த தடையும் இல்லையே...இது யான் எல்லார்க்கும் வெளெங்க மாட்டிக்கிது.

ஊர்லெ செல வாலிபப்புள்ளையெலுவொளெ பாத்தா மனசுக்கு ரொம்ப சங்கடமா ஈக்கிதுடா தம்பி.. இவன் டயம் பாத்து சேடை உட்றானேன்டு நெனெக்காதே...செல பயலுவோ சட்டை போட்டு ஈக்கிறானுவோ தலவாணி ஒரையிலெ செரமப்பட்டு திணிச்ச தலைவாணி மாதிரி ஈக்கிது அவனுவொளெ பாக்கும் போது..ஒடம்பெ அப்படி உருண்டையா வச்சிக்கிறாங்கெ..அது பாக்க அழகாவா ஈக்கிது?

அன்னென்னக்கி கடுமையா வேர்வை சிந்தி ஒழெக்கிறவங்களுக்கு அவங்க வேலெயே ஒரு முழு உடற்பயிற்சி மாதிரி ஆஹிப்போவுது. அவங்கெ தனியே நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி எதுவும் செய்யனுங்கிறெ அவசியம் இல்லை. உடல் ஒழைப்பு கொறெஞ்சவங்க ஏதாவது ஒரு நேரத்தில் ஒரு மணித்தேரமோ அல்லது அரைமணைநேரமோ கண்டிப்பா உடற்பயிற்சி செஞ்சே ஆஹனுமப்பா...

என்னெக்காவது ஒரு நாளு இந்த துனியாவை உட்டுட்டு அல்லாட்டெ போஹத்தான் போறோம். ஈந்தாலும் உசுரு ஈக்கிறெ வரைக்கும் கொஞ்சம் ஆரோக்கியமா, நோய்நொடி இல்லாமெ வாழ்ந்தா நல்லது தானே? ஏதாவது தப்பா சொல்லிப்புட்டேனா?

செல பேரு சொல்றாங்கெ... மவுத்தா போற ஒடம்பு தானே, மண்ணு திங்கப்போற ஒடம்பு தானே எதுக்கு இதெல்லாம் செரமம் என்று.. நா ஒன்னு கேக்குறேன் அவங்கள்ட்டெ மவுத்தாபோற ஒடம்பு தானே, மண்ணுக்குப்போற ஒடம்பு தானேண்டு அவங்களுக்கு வர்ர காச்சல், கடுமையான தலைவலி, ஜுரம், சளித்தொல்லை, வயிற்று வலி, வாந்தி பேதி, இருமல், பல்லு வலி, இடுப்பு வலி, காலு வலி, கை வலி, இன்னும் பல நோய்களுக்கு சிகிச்சை பெற ஆஸ்பத்திரி போஹாமலா ஈக்கிறாங்கெ இல்லை ஊசி போடாமலும், மருந்து மாத்திரை திங்காமலுமா ஈக்கிறோம்? என்னா நா சொல்றது?

அதுனாலெ அவங்கவங்க தன் வயசுக்கும், உடலுக்கும், சக்திக்கும் தகுந்தாப்புலெ ஏதாவது ஒரு உடற்பயிற்சியை கண்டிப்பா தொடர்ந்து நாள் தவறாமெ செஞ்சே ஆஹனும். சரியா? அது ஆம்புளெயா ஈந்தாலும் சரி பொம்புளையா ஈந்தாலும் சரி..

கடைசியா இன்னொன்னும் சொல்றேமா கேட்டுக்கோ...அது செய்றேன் இது செய்றேன்டு சொல்லிப்புட்டு பொடுபோக்கா ஈந்து அஞ்சு வேளெ தொழுவெக்கி யாரும் வேட்டு வச்சிறக்கூடாது காரணம் அது மொதலுக்கே (சொர்க்கத்துக்கு) மோசம் செய்ற காரியம் இல்லையா? ஐங்காலத்தொழுகையுடன் உபரி நேரங்களில் எதையாவது நல்லவைகள் செஞ்சிக்கிட்டே ஈக்கனும் நம்ம உசுரு ஈக்கிற வரைக்கும்ண்டு சொல்ல வந்தேன்.

சரி வரட்டா ரொம்ப நேரம் பேசிப்புட்டேன் கோவிச்சிக்கிடாதே வாப்பா... இன்ஷா அல்லாஹ் இன்னொரு தடவை சந்திச்சி மத்தெதெ பேசுவோம்.

ஆவ்மியாக்கா ஊருக்கு போறது போறியெ வர்ர ஜனவரி 14, 15 சாரா கல்யாண மண்டபத்தில கல்வி விழிப்புணர்வு மாநாடு நடக்க ஈக்குது அதுல மறக்காம கலந்திட்டு வாங்க... நம்மூடு, பக்கத்தூடு அப்புறம் எல்லாவூட்ல உள்ள புள்ளைலுவ, பொம்பளைலுவ எல்லோரையும் கலந்துக்க சொல்லுங்க ஹாக்கா.. நிரப்பமா மாநாட்டு செய்தியை ஊருக்கு போயிட்டுவந்து சொல்லுங்க ஹாக்கா..  நல்லபடியா பரக்கத்தா ஊருக்கு போயிட்டு வாங்க....

--- மு.செ.மு. நெய்னா முஹம்மது



6 Responses So Far:

sabeer.abushahruk said...

//ஏதாவது தப்பா சொல்லிப்புட்டேனா?//

நிச்சயமா இல்லெ ஹாக்கா. நல்லதத்தானே சொல்லித்தர்ரீய. ஒட்டு மொத்த ஒலகத்திலேயும் இந்த உடல் பருமன் ஒரு ப்ராப்ளமாத்தான் ஈக்கிது? அதிலும் இளைஞர்களுக்கு ஒரு சவாலாகவே ஆகிப்போச்சி.

காலைல அல்லாஹ்வை திகிர் செஞ்சிக்கிட்டே நடைப்பயிற்சி ஒரு முறை செய்து பாருங்கள் அப்புறம் விடவே மாட்டீய.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.வழக்கம்போல் நைனாவின் அதிரடி ,ஆனாலும்
அவசியமான் விளக்கமும்,விளாசலும்.ஆரோக்கியத்தின் அவசியம் பற்றி தமக்கே
உரிய பாணியில் வெளுத்து கட்டியுள்ளார்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n): வேற என்னத்த சொல்றது ! - அலச்சியத்தால் அரவனைக்கும் அவஸ்த்தைகளே !

அலாவுதீன்.S. said...

சகோ. மு.செ.மு.நெய்னா முஹம்மது : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). சகோதரரரின் ஆக்கம் நல்ல விழிப்புணர்வுதான்: உடம்பை பாதுகாப்பாகவும், ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள ஆசைதான் 4-நாள் தொடர்ந்து நடைபயிற்சி சென்றால் 7-நாள் நடைபயிற்சிக்கு விடுமுறை ஆகிவிடும்படி சோம்பல் முன் வந்து நிற்கிறது. நல்ல செய்திதான்; இளமையாய் இருக்க முதுமையை விரட்ட நட என்று சொல்கிறார்கள். வயிற்றின் டயரை கரைக்க நட என்று சொல்கிறார்கள். தொடர்ச்சியாக செய்ய முடியாமல் துவண்டு விழுகிறோம்.

Meerashah Rafia said...

நல்லா சொன்னீக சாச்சா..
நம்ம ஊட்டு போம்புளைங்களா திருத்தவே முடியல.

வாரத்துக்கு 4 -5 நாள் அசைவம் சாபிட வச்சிற்றாக. சவூதி அராபிய வந்து ஆறு மாசத்துல
பேண்ட் சைஸ் 28 -30 இருந்தது,32-34 ஆகிடுச்சு..
5 கிலோ கிட்ட எடை கூடிடுச்சு..
இத்துணைக்கும் தினமும் கிட்டத்தட்ட 3 கிலோ மீடர் ஆபீஸ்லேர்ந்து நடந்துதான் வர்ரேன் .
வாய்வு சாப்பாடா சாப்பிட்டு கேட்டகேடுக்கு முதுகு வலிவேர..

_________________________________________________________________

நாம சுகாதாரம், அது இதுன்னு வீட்ல சொன்ன ஒன்னும் புரிஞ்சிகமாடிருகாஹ.. சங்கதி இப்படி இருக்க, நாம உடம்ப குறைக்க ஒரே வழி உடற்பயிற்சியும் இறையஞ்சி பிரார்திப்பதும்தான்..6 pack போடுரமோ இல்லையோ சிங்கிள் pack(தொந்தி) போடாம பாத்துகிட்ட சரிதான்.


MSM(MR)

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

வேலை பளு காரணமாக உடனே கருத்திட முடியவில்லை.

சகோதரர் நெய்னா, நாம் முன்பு போல் உடல் பயிற்சிக்கு கொடுத்த முக்கியத்துவம் இன்று கொடுப்பதில்லை என்பதை ஒத்துகொள்ளத்தான் வேண்டும்.

குறிப்பாக வெளிநாட்டு வாழ் சகோதரர்களுக்கு உடல் பயிற்சி அவசியம். ஊரில் இருக்கும் வாய்ப்புகள் வெளிநாடுகளில் கிடைப்பதில்லையே.

அதிரை தமிழில் வழக்கம் போல் அசத்தி ஈக்கிறது நன்றி...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு