Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உறுதியான நம்பிக்கையே வெற்றி வாழ்வின் அடித்தளம் 5

அதிரைநிருபர் | January 13, 2011 |

ஒரு கட்டிடம் எழுப்ப அடித்தளம் அவசியம். அதே போன்று வாழ்க்கையில் முன்னேற உறுதியான நம்பிக்கையே முக்கியம் என்ற கருத்தினை வலியுறுத்தி இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

இன்றைய நவீன உலகம் போட்டி நிறைந்தது. அதில்; யார் சவால்களை சமாளித்து எதிர்நீச்சல் போடுகிறார்களே அவர்கள் தான் வெற்றிக் கனியினை பறிக்க முடியும். யார் அடுக்கடுக்கான தோல்விகளை சந்தித்து சோர்வடைகிறார்களோ அவர்கள் வெற்றிப் பாதையினை கடக்க முடியாது. உங்களுக்குள் நீங்களே அறியாத ஒரு சக்தி புதைந்திருக்கிறது என நினைத்து தோல்வியில் துவளாது செயலில் இறங்கினால் நிச்சயம் வெற்றி உங்களுக்கு கதவினை திறக்கும். அத்துடன் உங்களுக்கு இறைவன் துணையிருக்கிறானென்று நினைப்பீர்களென்றால் நீங்கள் எவரையும் தோற்கடிக்க முடியும். உதாரணத்திற்கு கார் ஓடுவதிற்கு எனர்ஜி தேவைப் படுகிறது. மனிதன் இயக்கத்திற்கும் இறைவன் கருணை ஒவ்வொருவருக்கும் தேவைப் படுகிறது. காற்று பல அதிர்வுகளைக் கொண்டது என்கிறது விஞ்ஞானம். இறைவனைத் தொழுது இறைஞ்சும் போது ஏற்படுகிற அதிர்வுகள் இறைவனை அடைவது நிச்சயமே.

தோல்வியில் மனம் சோரும் போது ஒரு மனிதனை நிம்மதி இழக்கச் செய்கிறது. அந்த நேரத்தில் அமைதியாக சற்று இறைவனின் படைப்புகளையும் அவைகளின் செயல்பாடுகளையும் சற்றே சிந்துத்துப் பாருங்கள். ஓடும் நீரோடைகள் எவ்வளவு கரடு முரடுகளை கடந்து சல சலக்கும் ஓசையுடன் குளிர்ச்சியான தாகம் தீர்க்கும் தண்ணீர், வயல்களை செழிக்கச் செய்யும் ஆறுகளை உறுவாக்குகிறது என்றும், வானத்தில் சிறகடித்து வல்லூருகளிடமிருந்து தப்பித்து வாழ்வு நடத்தும் குருவிகளை நினைத்துப் பாருங்கள் அவைகளெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும் போது நாம் சில தோல்விகளை நினைத்து ஒடிந்து மூலையில் முடிங்கி விடலாமா? தோல்விகளை சந்திக்கும் போது இறைவனை குறை சொல்கிறோம். பாரசீக கவிஞர் உமர் கய்யாம் சொல்கிறார், ‘தோல்விக்கும், மனித குறைகளுக்கும் இறைவனை குறை சொல்லியே காலம் கடத்துகிறோம். இறைவன் களி மண்ணைத் தான் படைப்பான். குயவனான மனிதன் தான் அந்த களி மண்ணை பானையாகவும், பானையின் மூடியாகவும், சட்டியாகவும் செய்கிறான். அந்தப் பொருள்களில் ஒட்டையோ அல்லது நெளிவுகளோ இருந்தால் இறைவனை ஏன் குறை சொல்ல வேண்டும்?’ என கேள்வி எழுப்புகிறது நியாயம் தானே. இதயம் ஒரு மனிதனை இயக்கும் முக்கிய கருவியாக இருக்கிறது. அதனை வெற்றி வாழ்க்கைக்கு செல்ல வேண்டுமென்று ஆணையிடுட்டு செயலில் இறங்குங்கள் நிச்சயமாக வெற்றி உங்கள் பக்கம் வந்து சேரும்.

தோல்விகள் ஏற்படும் போது மனம் சஞ்சலத்தில் சஞ்சரிக்கும். கவலை ஆட்கொல்லும் நோய் என்று மனோத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கவலை பொருளாதார வீழ்ச்சி, வாழ்க்கை வெறுப்பு, மனம் சஞ்சலம், பயம், நோய், தனிமை, வேலையின்மை, கல்வியில் முன்னேற்றமின்மை போன்றவற்றால்; ஏற்படுகிறது என்றால் மிகையாகாது. சமீபத்தில் 100 வயது வரை வாழ்ந்த 450 பேர்களை வைத்து எவ்வாறு அவ்வளவு நாட்கள் வாழ்ந்தார்கள் என்ற ஒரு விஞ்ஞான அராய்ச்சியினை மேற்கொண்டார்கள். அதில் கண்ட முக்கிய கண்டு பிடிப்புக் கீழ்கண்டவையாகும்:

1) அவர்கள் சுறுசுறுப்புடன் வாழ்வினைக் கழித்தவர்கள்.

2) அளவோடு சாப்பிட்டவர்கள்.

3) எல்லோரிடமும் பாகுபாடின்றி நடந்து கொண்டவர்கள்.

4) இரவு சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுந்தவர்கள்.

5) சாவு பயத்தினை விட்டு நீங்கியவர்கள்.

6) தோல்வியினைக் கண்டு பயப்படாதவர்கள்.

7) இறை பக்தியுடன் வாழ்ந்தவர்கள்.

முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் எண்ணித் துணிக கருமம் என்ற தெளிவான கொள்கையினை வைத்திருப்பார்கள். அதனையே சமுதாயமும் மேற்கொண்டால் அனைவரும், அத்துடன் சமுதாயமும் வளர்ச்சியடையும். அதற்கு முக்கிய தேவையாக கருதப்படுவது:

1) நாணயம், 2) அறிவு, 3) நம்பிக்கை, 4) தெளிவான பாதை, 5) தயாளம், 6) பயமின்மை, 7) பொறுமை, 8) உண்மையினை ஒத்துக் கொள்ளுதல், 9) கிடைத்த பொருளை மட்டும் வைத்து மகிழ்ச்சியுடன் வாழ்வது, 10) குறித்த காலத்தில் வேலையினை முடிப்பது, 11) வேலை பளு கூடவே குடும்பத்தினை காப்பது போன்றவையாகும்.

வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்தும் போது மன அழுத்தம் எற்படுவது இயற்கையே. அதனை வாழ்க்கையின் ஒரு அங்கம் என எண்ண வேண்டும். நவீன உலகில் மன அழுத்தத்தினை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் செய்ய வேண்டும். நமது வீட்டிற்கு வேண்டாத விருந்தாளி வந்தால் எப்படி சமாளிக்கின்றோமோ அதே போன்று சமாளிக்கத் தெரிந்திருக்க பழக வேண்டும். அதனை விட்டு விட்டு அந்த விருந்தாளியினை விரட்டி அடித்தால் நமது எதிரி அவர்களைத் தவிர வேறு யாரும் இருக்க முடியா.து.

மன அழுத்தத்தினை கீழ்கண்ட அறிகுறி மூலம் தெரிந்து கொள்ளலாம்:

1) கவனக்குறைவு 2) சக்தி குறைவு 3) உற்சாகக் குறைவு 4) கோபதாபம் 5) எரிச்சல் 6) தலைவலி 7) வாழ்க்கையில் வெறுப்பு

மன அழுத்தத்தினை போக்க கீழ்கண்ட வழி முறைகளை பேணலாம்:

1) மன அழுத்தம் வாழ்வில் ஒரு அங்கம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

2) மன அழுத்தத்திற்கான காரணத்தினை ஆராய வேண்டும்.

3) மன அழுத்தத்தினை நீக்க முடியவில்லையென்றால் அதன் விளைவினை ஒரு காகித்தில் எழுதி மனதளவில் அதனை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும்.

4) நாம் எதிர்பார்த்த இழப்பினை விட மிக குறைந்த அளவே இழப்பிருக்குமானால் இறைவனுக்கு நன்றி சொல்ல தெரிய வேண்டும்.

5) உங்களுடைய மன அழுத்தத்தினை உங்கள் உள்ளத்திலேயே வைத்து அழுத்தி புழுங்க விடாமல் உங்கள் உற்றார,; உறவினர், நண்பர்களுடன் பகிர்ந்து அதற்கான தீர்வினை தேடுங்கள்.

6) எந்த காரியத்திலும் அவசர முடிவினை எடுக்காதீர்கள்.

7) ‘சிந்திக்க தெரிந்த மனமே உனக்கு சிரிக்கத் தெரியாதா’ என்பது எங்கோ கேட்ட பாட்டு. ஆகவே நீங்கள் சிறிது சிரித்துப் பழகவும் தெரிந்திருக்க வேண்டும்.

8) கோபாதாபங்களுக்கு விடை கொடுங்கள்.

9) பொது நல சேவையில் கவனம் செலுத்துங்கள்.

10) நடை பயிர்ச்சி, மெல்ல ஓடுதல், விளையாட்டுகளில் ஓய்வு கிடைக்கும் போது கடைப்பிடியுங்கள்.

உறுதியான நம்பிக்கை கொண்டவர்கள் ஏழைகளாக இருந்தாலும,; செல்வந்தர்களாக இருந்தாலும் குறுகிய எண்ணம் இல்லாதவர்களாகவும், சுயநலமில்லாதவர்களாகவும், புத்திக்கூர்மையுள்ளவர்களாகவும், விறுப்பு வெறுப்பில்லாதவர்களாகவும் இருப்பார்கள். அதே போன்ற கொள்கைகளை சமுதாயத்திலுள்ள பெரும்பாலோர் கொண்டிருந்தால் சமுதாயம் புத்துணர்வு பெற்று பொழிவுடன் விளங்கும.ல்லவா?

உறுதியான எண்ணம் என்பதிற்கு ஒரு சிறிய விளக்கம் தரலாம் என எண்ணுகிறேன். ஒருவர் ரயிலில் சென்னையிலிருந்து மயிலாடுதுறை செல்ல வேண்டும். அவர் புறப்படும் போதே ரயிலினை நான் தவற விட்டு விடுவேனோ என்ற எண்ணத்தில் வீட்டினை விட்டு புறப்படக்கூடாது. மாறாக நான் கண்டிப்பாக மயிலாடுதுறை ரயிலுக்கு குறித்த நேரத்தில் போய் சேர்ந்து விடுவேண் என்ற எண்ணத்தில் புறப்பட வேண்டும். நம்பிக்கையின்மை என்ற தொற்று நோயினை உங்கள் குழந்தைகளும் சீக்கிரத்தில் உங்களிடமிருந்து கற்றுக் கொள்வார்கள். அதற்கு நீங்கள் இடம் கொடுக்கலாமா?

1) நீங்கள் முன்னேற வேண்டுமென்ற ஒரு இலக்கினை நோக்கி பயணம் செய்யும் போது அதற்கான ஒரு விலையினை கொடுத்தே ஆகவேண்டும் அது தான் வாழ்க்கையின் அர்ப்பணிப்பாகும். உலகின் மாற்றத்திற்கேட்ப புதிய சிந்தனைகள், செயல்பாடுக்ள ஆகியவைகளை பயன்படுத்தி முன்னேற வேண்டும். நாம் காலில் செருப்பில்லாமல் நடந்தால் கால் கூசுகிறது, வலிக்கிறது, கல் முள் குத்துகிறது என்று புலம்புவோம். ஆனால் 1984 ஆம் ஆண்டு ஜூலா புட் என்ற தடகள வீரர் ஓட்டப்பந்தயத்தில் வெறுங்காலுடன் ஓடி உலக சாதனை புரிந்து புது சரித்திரம் படைத்தார் என்றால் அவர் எவ்வளவு மன உறுதியுடன் தனது காலுக்கு செருப்பு கூட இல்லாமல் ஓடுகிறோமே எண்ணாமல் உலக சாதனை படைத்திருக்கிறார் என்றால,; எல்லா வசதியும் பெற்ற நம்மால் தோல்வியினை எண்ணி புலம்பத்தான் வேண்டுமா?

2) உலக பொதுவுடமை பொருளாதார தந்தை என வர்ணிக்கப்பட்ட கார்ல் மார்க்ஸ் ஜெர்மனியில் பிறந்து பிரிட்டனில் தன்னுடைய உடைகளை விற்று தன் வறுமையினைப் போக்கி ஏழைகள் சமத்துவத்துடன் வாழ, ‘டாஸ் கேப்பிடல்’ என்ற பொதுவுடமை பொருளாதார பொக்கிஷமாக இன்றும் கருதப்படுகிற புத்தகத்தினை எழுதியினார் என்றால், ஏன் இறைவன் அருளால் ஓரளவு வசதி படைத்த நம்மாலும் நம்பிக்கையுடன் வாழ முடியாதா?

3) தூத்துக்குடி மாவட்டம் திருச்சந்தூர் வீரபாண்டிய பட்டணம் என்ற கிராமத்தில் உள்ள ஆதித்தநாடார் என்ஜினிரியங் கல்லூரியில் பேராசியையாக இருக்கும் “வைஸ்லின் பீவி’ கம்ப்யுட்டர் அவுட்சோர்ஸிங்கில் தொடர்ந்து மூன்று முறையாக அண்ணா பல்பலைக் கழகத்தின் சிறப்பு பரிசினை இந்த வருடமும் தட்டிச் சென்றுள்ளார் என்றால் நகரத்தில் வாழும் நல்ல கல்வி கற்ற பலரும் தோல்வியினைக் கண்டு மனம் சோர்ந்திடாமல் இருந்தால் உங்களாலும் பல சாதனை படைக்க முடியும் என்று நம்பக்கூடாதா?

4) விபத்தில் இரண்டு கால்களையும், இரண்டு கைகளையும் இழந்த பிரான்ஸ் நாட்டவரான பிலிப்பி குரோஸான் என்பவர் தனது ஊனத்தினை வெற்றி கொள்ள இங்கிலாந்தில் உள்ள இங்கிலிஸ் கால்வாயினை பதிமூன்றரை மணிநேரத்தில் நீந்தி சாதனை படைத்துள்ளார். அவர் தன்னுடைய சாதனையினை பற்றி போட்டி கொடுக்கும் போது அவர் சொன்னார், ‘தான் நீந்திக் கொண்டு இருக்கும் போது சற்றும் எதிர்பாரா விதமாக இரண்டு டால்பின் மீன்கள் சிறிது தூரம் அவருக்கு இரு புறமும் பாதுகாப்பாக வந்ததாம். அதனை இறைவன் செயலாக அவர் கருதினாராம’;.

ஆகவே எந்த காரியத்திலும் நீங்கள் உறுதியான நம்பிக்கையுடன் இறங்கும் போது இறைவன் உங்களுடன் துணை நிற்பான் என்ற நம்பிக்கை இருந்தால் நீங்கள் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி உங்களை தவழுவுவது நிச்சயமாகுமல்லா சகோதர சகோதரிகளே!

---டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)

5 Responses So Far:

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

தன்னம்பிக்கையை ஊட்டக்கூடிய கட்டுரை. ,

மனித வாழ்கையில் தன்னம்பிக்கை மிக முக்கியம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//1) அவர்கள் சுறுசுறுப்புடன் வாழ்வினைக் கழித்தவர்கள்.
2) அளவோடு சாப்பிட்டவர்கள்.
3) எல்லோரிடமும் பாகுபாடின்றி நடந்து கொண்டவர்கள்.
4) இரவு சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுந்தவர்கள்.
5) சாவு பயத்தினை விட்டு நீங்கியவர்கள்.
6) தோல்வியினைக் கண்டு பயப்படாதவர்கள்.
7) இறை பக்தியுடன் வாழ்ந்தவர்கள்.//

அஸ்ஸலாமு அலைக்கும்,

தன்னம்பிக்கையை தரும் நல்ல பதிவு, நேரமின்மை காரணமாக தற்போது தான் முழுமையாக படிக்க முடிந்தது, 100 வயது வாழ்ந்தவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட ஆராய்ச்சி பற்றிய செய்தி வியக்கவைத்தாலும் அதுதான் நடைமுறை உண்மை.

தன்னம்பிக்கை தரும் அருமையான ஆக்கங்கள் தரும் டாக்டர் முகம்மது அலி IPS அவர்களுக்கு மிக்க நன்றி

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். உடல் நிலை சரியில்லாததால் இந்த ஆக்கம் படித்து கருத்திட தாமதம் ஆகிவிட்டது. நம்பிக்கையின் டானிக் இந்த ஆக்கம்.அதற்கு மேற்கோளுடன் பேராசிரியர்களால் மட்டுமே எழுத சாத்தியப்படும். எல்லா புகழும் அல்லாஹுக்கே!பேராசிரியரின் ஊக்கமூட்டும் எல்லா கட்டுரைகளும் போற்ற தக்கது. அனால் படித்து கருத்திடுபவர்கள் மிக,மிக சொற்பமாக இருப்பதுதான் வேதனை.விழுமின்,எழுமின்.

அபு ஆதில் said...

"பேராசிரியரின் ஊக்கமூட்டும் எல்லா கட்டுரைகளும் போற்ற தக்கது. அனால் படித்து கருத்திடுபவர்கள் மிக,மிக சொற்பமாக இருப்பதுதான் வேதனை."
என்னுடைய ஆதங்கமும் இதுதான் சகோதரரே.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//"பேராசிரியரின் ஊக்கமூட்டும் எல்லா கட்டுரைகளும் போற்ற தக்கது. அனால் படித்து கருத்திடுபவர்கள் மிக,மிக சொற்பமாக இருப்பதுதான் வேதனை."//

என்னுடைய ஆதங்கமும் இதுதான்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு