Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரைமணம் திரட்டி – ஓர் அலசல் 19

அதிரைநிருபர் | January 25, 2011 | , , ,


அல்லாஹ்வின் திருப்பெயரால்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பான அதிரைப்பட்டினம் சகோதர சகோதரிகளே, உங்கள் அன்பு ஆதரவுடன் கடந்த 2010, மே மாதம் 30ம் தேதி முதல் அதிரையின் வலைப்பூக்களின் திரட்டியான அதிரைமணம் http://adiraimanam.blogspot.com/ இணையக்கடலில் மிதந்து உலகெங்கும் பிரிந்து கிடக்கும் நிறைய அதிரை மனங்களை இணைத்து வருகிறது என்பது உலகமறிந்ததே.

அதிரைமணம் திரட்டியில் 95% அதிரை வலைப்பூக்களும், மற்றவை நம் நட்புவட்டாரத்தின் வலைப்பூக்களும் அலங்கரித்து நம் வாசக நெஞ்சங்களின் அறிவு பசியை தீர்த்துவருகிறது என்றால் மிகையில்லை.

ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை அதிரைமணம் அதிக வாசகர் வட்டத்தைப் பெற்றிருக்கிறது மேலும் அதிரைமணத்திற்கு அதிரைவாசிகள் மட்டுமல்ல மற்ற ஊர் அன்பர்களும் தொடர்ந்து வருகை தருகிறார்கள் என்பதை நமக்கு வரும் மின் அஞ்சல்களும், மற்றும் அதிரைமணத்தின் இலட்சினையை (logo) தங்களின் வலைப்பூகளின் முகப்பில் பெருந்தன்மையுடன் வைத்திருக்கும் அதிரை வலைப்பூக்களுமே சாட்சி. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

அதிரைநிருபர் குழுவின் அங்கமான அதிரைமணம் திரட்டி மற்ற அதிரை வலைப்பூக்களை போட்டி வலைப்பூக்கள் என்று ஒதுக்கிடாமல் அனைவரும் நம் சகோதரர்கள் என்று எண்ணி ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை தன் நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்து எந்த பாகுபாடும் இல்லாமல் அதிரை வலைப்பூக்கள் அனைத்தையும் தன் முகப்பில் வைத்து சமூக அக்கறை உணர்வை நிலைநிறுத்தி வருகிறது.

அதிரைப்பட்டினத்தின் திறமைமிக்க எழுத்தாளர்களை இவ்வுலகுக்கு அடையாளம் காட்டுவதற்காகவும் மற்றும் தனித் தனியாக வலைப்பூக்கள் வைத்து எழுதி வந்தவர்களை ஒன்றாக ஒரே தளத்தில் காட்டவேண்டும் என்ற நோக்கத்தில் அதிரைமணம் திரட்டி உருவாக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனைத்து அதிரை வலைப்பூக்களிலும் நிறைய பதிவுகள் அன்றாடம் வெளிவந்தது, ஆனால் இன்றைய சூழலில் ஒரு சில வலைப்பூக்கள் மட்டுமே அன்றாடம் தொடர்ந்து பதிவுகள் பதிந்து வருகிறார்கள். இது மிகவும் வருத்தப்படவேண்டிய தகவலே. நிறைய திறமையாளர்கள் நம்மூரில் இருக்கிறார்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தங்களின் எழுத்துத் திறனை நல் வழிகளில் உபயோகித்து நம் சமூகத்திற்கு ஏதாவது ஒரு வழியில் நன்மைகள் செய்திட முயன்றிடலாமே. மாதக் கணக்கில் புதுப்பிக்கப்படாத வலைப்பூக்களை அதனை நிர்வகிப்பவர்கள் புதுப்பிக்க அன்புடன் வேண்டுகிறோம், குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒரு பதிவு அல்லது மாதமிரு பதிவுகளாவது பதியவேண்டுகிறோம். மாதக்கணக்கில் ஒரு பதிவுகூட இல்லாமல் இருக்கும் வலைப்பூக்கள் வரும் மே மாதம் 2011 முதல் நீக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த முடிவு எழுத்தாளர்களை ஊக்கப் படுத்துவதற்காக மட்டுமே தவிர அவர்களின் ஆர்வத்தை குறைப்பதற்காக அல்ல என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். அதிரைமணம் தறவிறக்கம் ஆவதற்கு அதிக நேரம் எடுப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்படுகிறது.

அன்பார்ந்த அதிரை வலைப்பூக்களின் எழுத்தாளர்களே, வலைப்பூக்களை நிர்வகிக்கும் அதிரைச் சகோதரர்களே முன்வாருங்கள் சமூக ஒற்றுமையை நிலை நிறுத்த குழப்பம் இல்லாத உங்கள் சமூக விழிப்புணர்வு ஆக்கங்களை உங்களது வலைப்பூக்களிலே பதியுங்கள் அல்லது சகோதர வலைப்பூக்களிலும் பதியுங்கள், நம் சமுதாயத்தை தட்டி எழுப்புங்கள். உங்களை ஊக்கப்படுத்துவதில் அதிரைமணம் என்றைக்கும் முன்னின்று வழிநடத்தும். வாருங்கள் உங்கள் அறிவுத் திறனை, உங்களின் எழுத்தாற்றலால் நம் சமுதாயத்தின் நண்மையை நாடி இறைவனுக்கு பயந்து செயலாற்றுங்கள். சொந்த வலைப்பூவை வைத்து பராமரிப்பதற்கு நேரமில்லை என்றால் உங்கள் எழுத்துப்பணியை மட்டும் விட்டுவிடவேண்டாம் மற்ற வலைப்பூ சகோதரர்களுடன் ஒன்று சேர்ந்து இறையச்சத்துடன் உங்கள் எழுத்துச்சேவையை தொடரலாமே.

வாசகர்களின் கருத்துக்களால் தான் இன்று அதிரைமணம் ஒரு நல்ல முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. சரி,இப்போது சொல்லுங்கள் அதிரைமணம் திரட்டி எப்படி உள்ளது ? உங்களின் பார்வையில் ! இனி இதில் என்ன மாற்றம் செய்யலாம்? அதிரைமணத்தில் இணைக்கப்படுள்ள அதிரை-டிவி வலைத்தளத்தில் இஸ்லாமிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பயன்தரக் கூடியதாக உள்ளதா? மற்றும் இந்திய, உலக செய்திகளை அறிந்து கொள்ள மற்ற செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உபயோகமாக உள்ளதா? அன்பு கூர்ந்து உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

முகப்புப் பகுதியில் உள்ள அதிரை செய்தி, இஸ்லாம் செய்தி, தமிழக செய்தி, இந்திய செய்தி போன்ற பகுதிகள் இன்னும் காலியாகவே உள்ளது, கல்வி விழிப்புணர்வு மாநாட்டு ஏற்பாடு வேலைகளால் கடந்த சில மாதங்களாக நம் அதிரைநிருபர் மற்றும் அதிரைமணம் இணைந்து இருந்ததால் அதிரைமணத்தின் மெருகேற்றுவதில் கவனம் செலுத்த முடியவில்லை. இன்ஷா அல்லாஹ் இனி அதிரைமணம் வெகு விரைவில் புதிய பகுதிகள் சேர்க்கப்படும், பழையவைகள் நீக்கப்படும்.

அதிரைமணத்துக்கு தொடர்ந்து வாருங்கள் சங்கமிக்கும் மனங்களுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள், உங்களுக்கு என்று ஒரு நல்ல வாசகர் வட்டங்களை உருவாக்கிக்கொண்டு நற்செய்திகளை பகிர்ந்து விழிப்புணர்வுகள் மீண்டும் மீண்டும் ஏற்படுத்தி வாருங்கள், அதிரைமணமும் அதற்கு துணை நிற்போம் என்பதை உறுதியுடன் தெரிவித்து எழுத்தாளர்களுக்கு நம்பிக்கையூட்டுகிறோம்.

அதிரைமணம் தொடர்பான இந்த ஆக்கம் முழுக்க முழுக்க நம் அதிரை வலைப்பூ ஆர்வளர்களை ஊக்கப்படுத்துவதற்காக மட்டுமே எழுதப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். உங்களின் ஆக்கங்கள், ஆலோசனைகள், கருத்துக்கள், விமர்சனங்களை எங்கள் மின்னஞ்சல் adiraimanam@gmail.com அல்லது adirainirubar@gmail.com என்ற முகவரிகளுக்கு அனுப்பலாம்.

அதிரைமணம், அதிரை வலைப்பூக்களின் தரவரிசைகளை (RANK) ஒவ்வொரு நாளும் உயர்த்திக் கொண்டிருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இனி நம் அடுத்த பதிவில் அதிரை வலைப்பூக்களின் உலக மற்றும் இந்திய தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறோம்.

இணையத்தால் நல்ல இதயங்களை இணைப்போம். மார்க்க விசயங்களிலும், கல்வியிலும், சுகாதாரத்திலும் அதிகம் அதிகம் தொடர்ந்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி கூட்டாக இணைந்து அதிரைப்படினத்தில் சமூக ஒற்றுமைப் புரட்சி நிகழ்ந்திட எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் துனையிருப்பானாக. ஆமீன்.

தொடர்ந்து இணைந்திருங்கள்..

-- அதிரைநிருபர் குழு

19 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இது அதிரைப்படினத்து மண்ணின் மைந்தர்களின் மனங்களை சங்கமிக்க வைக்கும் சமுத்திரம்...

அதிரைமணம் வென்ற மனங்களின் சங்கமம் !!!

அபூ சுஹைமா said...

அதிரைமணம் அண்மைய நாள்களாகத்தான் எனக்கு அறிமுகம். அதிரை பதிவுகளை ஒருசேரக் காணும் வசதி நன்று.

அதிரைமணம் அதிரை வலலைத்தளங்களை எந்த வகையில் வரிசைப் படுத்தியுள்ளது என்பது தெரியவில்லை. தொடர்ச்சியாகப் புதுப்பிக்கப்படும் வலைத்தளங்களை மேல் பகுதிக்குக் கொண்டு வாருங்கள்.

தவிர, தொடர்ச்சியாக பிற தளங்களில் வெளியான கட்டுரைகளை மட்டும் மறுவெளியீடு செய்யும் தளங்கள் மற்றும் தாமதமாகப் புதுப்பிக்கப்படும் தளங்கள் போன்றவற்றை கீழே கொண்டு செல்லுங்கள்.

நன்றி!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். இன்சா அல்லாஹ் இனி என் வலைத்தளம் முன்போல் இயங்க உள்ளது. கவிகாக்கா போன்றவர்களின் கவிதைகள் வாங்கியோ,மற்றதளத்திலிருந்து திருடியோ, நம் சமுதாயத்திற்கான தினச் செய்தியில் வரும் பாதிப்புதாக்குதலுக்கு மறு அடி கொடுப்பதாகவோ இருக்கும். சில செய்திகள் அப்படியே வெளியிட்டு கீழே நம் கருத்து வெளியிடப்படும். துஆசெய்யுங்கள்.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

"உசு பேத்தியாச்சி"
இனி மாற்றங்கள் நிறைய தென் படும்
இன்ஷா அல்லாஹ்

sabeer.abushahruk said...

ப்ரான்ட் முடிவு பண்ணாமல் பெர்ஃபூய்ம் வாங்கப் போனால் டெஸ்ட் பண்ணுகிறேன் என்று ஒவ்வொரு சென்ட்டாக அடித்துப்பார்த்துட்டு அப்புறம் வெளியே வந்தால் நம்மேலே கலந்துகட்டி ஒரு வாசம் வீசும் அல்லவா அப்படி ஒரு வாசம் வீசுது அதிரை மணத்திலே.

கிரவுனும் ஹமீதும் மரமாத்து வேலை செய்ய முனைவது ஆரோக்கியமானது.கிரவுன்: நான் ஏற்கனவே சொன்ன உங்க ஹைக்கூக்கள், சொள் விளையாட்டுப் பின்னூட்டங்களின் தொகுப்பு என சுவாரஸ்யப்படுத்தலாம். கவிதையெல்லாம் எழுதிடலாம் நோ ப்ராப்ளம் (திண்ணையில் உள்ள 'பயணி கவனிக்கிறாள்' மாதிரி இருந்தாலும் பரவால்லயா?)

ஹமீது, உங்களின் ஆக்கங்கள்போல செறிவாகத்தான் இருக்கவேண்டுமென்றில்லை, நாம மீன்பிடிக்கப் போனது, கோழி சுட்டது, அரட்டையில் கலாய்த்தது போன்ற நேரங்களில் நீங்கள் சொன்னவற்ரை எழுதினாலே ஆட்டம் களைகட்டும்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். வாத்தியாரே என்வீடு வந்து பாடம் எடுத்தால் கொடுத்துவைத்தவன் நானே!அதிரை நிருபரில் எழுதுவதுதான் எனக்கு அலாதிப்பிரியம்.இருந்தாலும் நான் இருதினத்திற்கு முன்பே எடுத்தமுடிவுதான் இன்று அதிரை மணத்தில் பார்தது. ஆசானே வருக , நல்ல பல கவிதை அள்ளித்தருக.www.crownthasthageer.blogspot.com அவசியமாய் ஒரு "கொலை"படித்து கருத்திடவும் இது நான் முன்பு சமைத்த கவிதை????

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். இன்று என் வலைத்தளம் மருதிறப்பு விழா! எல்லோரும் வாங்க வந்து கருத்து பறிமாறிவிட்டு போங்க.குறிப்பா முதல்ல நான் எதிர் பார்ப்பது அபு இபுறாகிம் காக்காவத்தான் காரணம் அவஹதான் முதல் மொய் வைக்கிறவஹ!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்ன்(னு): அந்த கொலை(யும்) உண்ட மீண் என்னான்னு சொல்லவேயில்லையே...

அதிரை முஜீப் said...

அதிரைமனம் மூலம் 01/10/2010 அன்று முதல் என் இணையத்திற்கு வந்தவர்களின் எண்ணிக்கை 897 ஆகும். என் இணையத்திற்கு அதிகளவில் வாசகர்களை அள்ளித்தந்த அதிரைமனத்தை வாழ்த்தாமல் சென்றால் நன்றி மறந்தவனாவேன்.இந்த நேரத்தில் அதிரைமனதிற்கும் முஜீப்.காமிற்கும் நடந்த மினஞ்சல் பரிமாற்றத்தினை தங்களின் பார்வைக்கு தந்தால் சிறப்பு சேர்க்கும்.
M Thaj to me show details 10/1/10
அன்பு சகோதரரே,அஸ்ஸலாமு அலைக்கும், அல்லாஹ்வின் உதவியால் நீங்கள் உங்கள் குடும்பம் நலம் என்று நம்புகிறோம். தங்களின் வலைப்பூ http://adiraimujeeb.blogspot.com/ நன்றாக உள்ளது, தற்செயலாக சென்று பார்த்தோம், உங்களின் வலைப்பூ எங்களின் அதிரைமணம் http://adiraimanam.blogspot.com/ வலைப்பூக்கள் திரட்டியில் இணைக்கப்பட்டுள்ளது. சென்று பருங்கள், உஙகள் கருத்தை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.நம் அதிரைமணம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களின் வலைப்பூவில் இணையுங்கள்.
நட்புடன் தாஜுதீன்
அதிரைமணம் மற்றும்
அதிரைநிருபர் குழு

mujeeb to M Thaj. show details 10/4/10
அருமை சகோதரர் தாஜுதீன் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) தங்களின் மின்னஞ்சளுக்கு மிக்க நன்றி. தாங்களும், தங்களின் குடும்பமும் நலமுடனும் இறைஅருளுடனும் என்றும் வாழ அல்லாஹ்விடம் துவா செய்கிறேன். சில மாதங்களுக்கு முன் தங்களின் இணையத்தில் என் இணையத்தினையும் சேர்க்கும்படி ஏற்கனவே தங்களுக்கு மின் அஞ்சல் அனுப்பி இருந்தேன் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம் என கருதுகின்றேன். தங்களின் இணையத்தில் என் இணையத்தினையும் இணைத்ததற்கு மிக்க நன்றி.தங்களின் இணையத்தினையும் என் இணையத்தில் லிங்க் கொடுத்துள்ளேன்!.

தங்களின் அதிரைமனத்தில் எவ்வாறு பலவகையான இணையங்கள் ஒன்றிணைந்து ஒரு கதம்பமாக காட்சியளிக்கின்றதோ அதேபோல் நம் இஸ்லாமிய இயக்கங்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து ஒரே கயிற்றை பற்றிப்பிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் என் போன்று நீங்களும் துவா செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடனும், இந்த சமுதாயத்திற்கு உள்ளும் புறமும் இருந்து வரும் பல விதமான பாதிப்புகளுக்கு தாங்களும் ஒரு கேடயமாக விளங்குவீர்கள் என்ற நம்பிக்கையுடனும் இந்த மின் அஞ்சல் தங்களை சந்திக்கட்டுமாக. ஆமீன்.
தங்களின் துவாவை எதிர்பார்த்தவனாக....
அதிரை முஜீப்.

M Thaj to me. show details 10/4/10
அன்பு சகோதரர் முஜீப், வ அலைக்குமுஸ்ஸலாம்,
தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி, மிக்க சந்தோசம். நீங்கள் மற்றும் உங்கள் குடும்பதவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் உதவியால் நலம் என்று நம்புகிறேன். இது போல் எங்கள் வீடுகளில் அனைவரும் நலம்.
"அதிரைமனத்தில் எவ்வாறு பலவகையான இணையங்கள் ஒன்றிணைந்து ஒரு கதம்பமாக காட்சியளிக்கின்றதோ அதேபோல் நம் இஸ்லாமிய இயக்கங்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து ஒரே கயிற்றை பற்றிப்பிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் என் போன்று நீங்களும் துவா செய்வீர்கள்" என்ற ஏக்கம் நிறைந்தவர்களில் நீங்களும் எங்களைப்போன்று ஒருவர் என்று எண்ணும்போது மிகவும் சந்தோசமாக உள்ளது. உங்களில் எண்ணத்தில் உள்ளதை எழுத்தில் புரட்சிகரமாக எடுத்துச்சொல்லும் திறமையை நிச்சயம் பாராட்டப்படக் கூடியவைகளே.

அப்துல்மாலிக் said...

ஆஹா அதிரை மக்கள் அனைவரையும் ஜும்மா தினத்தில் சந்திக்கும் சந்தோஷம் இந்த அதிரை மணம் கொடுத்திருக்கிறது. இன்னும் விடுபட்டவர்களோ, புதிதாக வலைத்தளம் தொடங்கியவர்களோ இருந்தாலும் அதிரை மணத்துக்கு தெரியப்படுத்தி அவர்களும் தாங்களை இணைத்துக்கொள்ளலாம், பகிர்வுக்கு நன்றி அதிரை நிருபரே

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.என் வரவேற்பை ஏற்று
வந்து கருத்திட்ட காக்காமார்களுக்கு நன்றி!இல்லாத சுதந்திரம் படித்து பார்த்து
கருத்திடவும்.

mkr said...

அஸ்ஸலாமு அலைக்கும்.... அதிரை திரட்டி உண்மையில் நல்ல முயற்சி.அதிரை சகோதரர்கள் இத்தனை பேர் எழுதுகிறார்கள் என்பது மகிழ்ச்சி தர கூடிய விசயம்.மற்ற இதழ்களிலிருந்து,இனையங்களிருந்து எடுத்து படைப்புகளை போடுபவர்களை காட்டிலும்.சொந்தமாக எழுதுபவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாமே(அதற்காக நல்ல படைப்புகளை அனைவருக்கும் சென்றாடையும் விதத்தில் போடுபவர்களை தவறதலாக சொல்ல வில்லை)

வாய்ப்பு இருந்தால் அதிரை பதிவர்கள் சந்திப்பை ஏற்படுத்தலாமே.....சமிபத்தில் நடந்த கல்வி விழிப்புணர்வு போல் பல நல்ல விசயங்கள் பதிவர்கள் சந்திப்பின் முலம் முயற்நி செய்யலாம்.(இயக்கத்தை காட்டி மாரடிக்கிறாதுக்கு இயக்கம் பாரது ஊர் நன்மைக்காக ஒன்று சேரலாம்.)

abdur rahman said...

அஸ்ஸலாமு அழைக்கும்,
நமது ஊருக்கு முதல்முதலாக வந்த நம் தாய் வலைத்தளமான அதிரை எக்ஸ்பிரஸ் முன்நிலை படுத்தாமல்
மிகவும் கீழே வைத்திருப்து நன்றாக தெரிய வில்லை.
நமது தாய் வலைத்தளமான அதிரை எக்ஸ்பிரஸ் முதலாவதாக வைக்க வேண்டுகிறேன்

அதிரைநிருபர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் மிக்க நன்றி.

தங்கள் அனைவரின் கருத்துக்கள் கவனத்தில் கொண்டு செயல்படுவோம்.

அதிரை வலைப்பூக்களின் ALEXA தரவரிசையை விரைவில் வெளியிடுகிறோம்.

அதிரைவலைப்பூக்கள் நடத்துபவர்கள் அனைவரும் நம் சகோதரர்கள் என்ற எண்ணம் எங்களிடம் உள்ளது என்பதை மீண்டும் உறுதிபடுத்துகிறோம்.

சகோதரர்கள் அபூ சுமையா, MKR ஆகியோரின் ஆலோசனைகளோடு சர்ச்சையற்ற, சமுதாயத்திற்கு குழப்பம் ஏற்படுத்தாத நல்ல செய்திகள் தரும் வலைத்தளங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். மேலும் அதிரைமணத்தின் இலச்சினை (LOGO) தங்கள் வலைத்தளங்களில் வைத்திருப்பவர்களுக்கும் முன்னிறிமை தரப்படும். இன்ஷா அல்லாஹ்.

சில அதிரை வலைப்பூக்கள் நடத்துபவர்கள் யார் என்ற விபரங்கள் இன்னும் தெரியாத நிலையிலும் இங்கு பெரியது, புதியது, பழையது, என்ற பாகுபாடு இல்லை என்பதை அன்புடன் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்..

crown said...

abdur rahman சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்,
நமது ஊருக்கு முதல்முதலாக வந்த நம் தாய் வலைத்தளமான அதிரை எக்ஸ்பிரஸ் முன்நிலை படுத்தாமல்
மிகவும் கீழே வைத்திருப்து நன்றாக தெரிய வில்லை.
நமது தாய் வலைத்தளமான அதிரை எக்ஸ்பிரஸ் முதலாவதாக வைக்க வேண்டுகிறேன் .
---------------------------------------------------------------------

abdur rahman சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்,
நமது ஊருக்கு முதல்முதலாக வந்த நம் தாய் வலைத்தளமான அதிரை எக்ஸ்பிரஸ் முன்நிலை படுத்தாமல்
மிகவும் கீழே வைத்திருப்து நன்றாக தெரிய வில்லை.
நமது தாய் வலைத்தளமான அதிரை எக்ஸ்பிரஸ் முதலாவதாக வைக்க வேண்டுகிறேன் .
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அதிரைஎக்ஸ்பிரஸ் முதல் வலைத்தளமல்ல.
அதிராம்பட்டினம்.காம் தான் முதலில் வந்தது.என்னிடமே ஆரம்பத்தில்
4 வலைதளம் இருந்தது.அது சிலரின் முதுகு தோலை உரிக்கவும்,சிலவிசயத்தை
கையளாவும் பயன் படுத்தினோம். சிலதும் உலக அளவில் நம் தமிழர்களால்'
இன்றும் மதிக்கப்படும் தளமும் என் சகோதரனால் நடத்தப்பட்டும் வருகிறது.அல்லாஹ்
எல்லாம் நன்கு அறிந்தவன் அதெல்லாம் நாம் வெளியில் சொல்லிக்கொள்ளாத
காரணம் சில கெடுவான்கள். மொத்தத்தில் நம் சமுதாயத்துக்காக எல்லா வேசமும்
போட நாங்கள் தயார்.இப்படிதான் என்னற்ற நம் சகோதரர்கள் வலைத்தளம்
நடத்துகிறார்கள் என்பதை இங்கே பதிகிறேன். (கணக்கில் வராத சுவிஸ் வங்கி பணம் போல)

Unknown said...

அதிரைமணம் அதிரை மக்களுக்கு மட்டுமின்றி, இணைய கடலில் நீந்துவோரையும் கவர்ந்துள்ளது.

நேரத்தை மிச்சப்படுத்தி அதிரை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள சிறந்த ஏற்பாடு என்றால் மிகையல்ல.

அதிரையின் எழுத்தாளர்களையும் வலைஞ‌ர்களையும் அடையாளப்படுத்தி, அவர்களுக்கு ஊக்கமளித்து வருகிறதென்பதில் எல்முனையளவும் சந்தேகமில்லை.

இப்போதுள்ள வடிவமும் செயல்பாடுகளும் நன்றாக உள்ளது என்ற போதும் இன்னும் சிறப்பாக்குவதற்கு அதிரை வலைப்பூக்கள் மட்டுமின்றி வாசகர்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்.

அதிரைமணத்தின் இலச்சினையை சில வலைப்பூக்கள் இன்னும் இணைத்துக்கொள்ளாமலேயே உள்ளன. அதனை அவர்கள் சேர்த்துக்கொள்ளவேண்டும்.இது எமது அன்பான வேண்டுகோள்!

சகோதர‌ர் எம்கேஆர் சொன்னது போல், அதிரை பதிவர்கள் சந்திப்பை ஏற்படுத்தலாம், அந்த சந்திப்பை ஏற்பாடு செய்யும் ஆற்றல் அதிரை நிருபர் குழுவிற்குதான் உள்ளது. இதன் மூலம் இன்னும் பல நல்ல சேவைகள் செய்யமுடியும்! அதிரை போஸ்ட் வலைப்பூ சார்பாகவும் இந்த கோரிக்கையை வைக்கிறேன்.

அத்துடன் இன்னுமொரு கோரிக்கையையும் அதிரைநிருபர் குழுவிற்கு வகைக்கிறேன். அதிரை வலைஞர்களை பக்குவ படுத்தவும் நெறிப்படுத்தவும்
ஆக்கப்பூர்வமான வழியில் ஆற்றலை செலவிடவும் 'அதிரை வலைஞர்கள் கூட்டமைப்பு' என்றோ அல்லது வேறு பெயர்களிலோ ஒன்றை ஏற்படுத்தி, அதற்கு அதிரை அஹ்மது சாச்சா அவர்களும் அதிரை ஜமீல் காக்கா அவர்களும் தலமையேற்று வழி நடத்தவேண்டும்.

இந்த கோரிக்கையை அதிரை நிருபர் குழுவும் அதன் வாசக நேசங்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சகோதர வாஞ்சையுடன் கேட்கிறேன்.
அன்புடன்
ஏஆர்ஹெச்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். please visit http://www.crownthasthageer.blogspot.com "ஆதம் மகனே நியாயமா"?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு