அதிரையில் அமர்க்களமான முறையிலே கல்வி விழிப்புணர்வு தந்த சாதனையாளர்களை பாராட்டிக் கொண்டிருக்கும் இதே வேளையில் ஜித்தா - சவூதி அரேபியாவில் மாணவச் செல்வங்களுக்கான அறிவுத்திறன் ,ஞாபக சக்தி , தனித்திறமை போன்றவற்றிர்க்கான அருமையான ஆளுமை விழிப்புணர்வு CHILDREN PROGRAM ஒன்று ஜெத்தா தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது .
மக்கா மதீனாவைச்சேர்ந்த துறை நகரமாகிய ஜித்தாவில் கணிசமான நம் சமுதாய குடும்பங்களும் ,மாற்று மதத்தினரும் சேர்ந்து நிறைய குடும்பங்கள் இங்கு வசித்தும், சிறார்கள் இங்குள்ள பள்ளிகளில் பயின்றும் வருகின்றனர்.இந்தியக் குழந்தைகளில் குறிப்பாக தமிழ் குழந்தைகள் அதிலும் குறிப்பாக எம் சமுதாய குழந்தைகளை மேம்படுத்த வேண்டும் " என்பது எமது அவா! (இந்தியத் தூதரகத்தில் நடத்துவதால் மதப் பற்றை காண்பிக்க இயலாது). போட்டிகளில் ஒன்று Dhum sheraat ,Who am I -தனித்திறமை , table topic (சீட்டுக் குலுக்களில் கிட்டும் தலைப்பில் 2 நிமிடப்பேச்சு ), மேலும் திரையில் 10 -15 பொருட்களை காண்பித்து விட்டு சற்று நேரத்தில் விளக்கை அனைத்து விட்டு சிறிது நேரத்தில் என்னென்ன - எத்தனை பொருட்கள் கண்டாய் ..? என குழந்தைகளிடம் வினவ அதிகமான பொருட்களை கூறும் குழந்தைக்குப்பரிசு.
TONGUE TWISTING (உதாரணம்-சாச்சாக்கு தச்ச சட்டை சாச்சிக்கு ஏத்த சட்டை ), திருக்குர்-ஆன் ஆயத்துக்களை ,திருக்குறள் அத்தியாயங்களை அதி வேகமாக ஒப்புவித்தல் போன்றவையாகும்.
மின்னஞ்சலில் போட்டி அறிவிப்பு பார்த்ததிலிருந்து பெற்றோர்களிடமிருந்து ஆர்வ மிகு அலைபேசி அழைப்புக்கள். மூன்று தினங்களுக்கு முன் போட்டிக்கான தெரிவும் ஒத்திகையும் நடந்தது .குழந்தைகைகளும் பெற்றோர்களும் முண்டியடுத்தி -நெட்டித்தள்ளிக் கொண்டு பெயர் கொடுத்தனர்.(படம் பார்க்க).
அதெல்லாம் இருக்கட்டும் ! வந்துள்ள விண்ணப்பங்களில் 80 சதவிகிதத்தினர் மாற்று மதத்தினர்.நம்மவர்களில் இருவர் தொலைபேசியில் 'எங்கே ஃ புட் ஆர்டர் கொடுத்துள்ளீர் ' என கேட்டு தெரிந்து கொண்டனர். சமுதாய சொந்தங்களே! கொஞ்சம் சிந்தியுங்கள். இது போன்ற மாணவர்களுக்கான ஏற்பாடானாலும் சரி ,பெரியவர்களுக்கான பெர்சனாலிட்டி ப்ரோக்ராம்,பப்ளிக் ஸ்பீகிங், ,கோல் செட்டிங் -கேரியர் டெவலப்மென்ட் ப்ரோக்ரம் எதுவானாலும் சரி 'நம்மடவன்' (ஒருமையில் விளிப்பதற்கு மன்னிக்கவும்-ஆத்திரத்தை இப்படித்தானே ஆதங்கமாக வடிக்க முடியும் ) எவ்வளுவு சிரமப்பட்டு ,அனுமதி பெற்று, உணவும் ஏற்பாடு செய்து இலவசமாக தரும் போதும் அதை பயன் படுத்திக் கொள்வதுமில்லை. அதற்கு ஆதரவு தருவதுமில்லை. நம்ப மாட்டீர்கள் நான்கைந்து அமைப்பாளர்கள் பெயருடன் இந்த குழந்தைகள் ப்ரோக்ராம் பற்றிய அறிவுப்பு மின்னஞ்சல்கள் மூலம் வெளியிட்ட பத்தாவது நிமிடம் ஒரு தாயிடமிருந்து தொலைபேசி அழைப்பு,உரையாடல்........
ஹலோ .....வணக்கங்கே..
எஸ். ..வாழ்க வளமுடன்! யார் பேசிறீங்க ,,?
அண்ணே ! எம் பேரு ரமா ..நான் மெயில் பாத்தேங்க ..
சந்தோசம்!
என்கொழந்தையும் கலந்துக்குன்னும்க..
நல்லதுங்க. அப்ளைப் பண்ணுங்க.
அண்ணே ...ஒரு சின்ன ரிகுவஸ்டுன்னே..எங்க புள்ளை எத்தனை போட்டிகளில்
கலந்துக்கலாம்..?
அத்தனைப் போட்டிகளிலும் கலந்துக்கலாம் அம்மா!
நன்றிங்க!
இது போன்ற ஒரு தொலைபேசி அழைப்புக் கூட நம் சமூகத்து தாயிடமிருந்தோ-தந்தையிடமிருந்தோ வந்ததாகத் தெரிய வில்லை இது போன்ற இன்று நல்ல நம் சமுதாயத் தலைமுறையினரை உருவாக்கினால் தானே நாளை அவர்களை திறமையுள்ள தலைவர்களாக / அதிகாரிகளாக /ஆட்சியாளர்களாக /நம் மீது பழி சுமத்துபவர்களுக்கு பதிலடி கொடுப்பவர்களாக / ஒவ்வொரு நிறுவத்தின் உயர் பதவி வகிப்பவர்களாக நாம் காண முடியும் .ஈசிச்சேரில் சாய்ந்து நம் முதுமைக் காலத்தை நம் நாட்டில் ஈசியாக / பாதுகாப்பாக கழிக்க முடியும்?
வாழ்க வளமுடன்.
--ராஃ பியா
17 Responses So Far:
ஹலோ அஸ்ஸலாமு அலைக்கும் ...
ஹலோ அலைக்குமுஸலாம்..
ஹலோ நான் துபாயிலிருந்து பேசுறேன்...
சொல்லுங்க...
உங்களின் நன்னோக்கு விழிப்புணர்வுக்கான அழைப்பு பதிவு கண்டேன்... சந்தோஷம் இப்படியாக தொடர்ந்து நடைபெற வேண்டும் இன்ஷா அல்லாஹ்...
இதைத்தானே நாங்களும் எதிர்பாக்கிறோம்..
ஆனா வருத்தமான விஷயம் எத்தனையோ நமது சமுதாய குடும்பங்கள் அங்கே இருக்கிறார்கள் //இது போன்ற ஒரு தொலைபேசி அழைப்புக் கூட நம் சமூகத்து தாயிடமிருந்தோ-தந்தையிடமிருந்தோ வந்ததாகத் தெரிய வில்லை// இப்படியாக இருப்பதை நினைத்து கவலைதான்..
இனிமேலும் இப்படியிருக்காமல் நம் சமுதாய மக்கள் விழித்தெழ இன்னும் நிறைய நடத்தப்பட வேண்டும்...
சரியாகச் சொன்னீர்கள்... நன்றே நடந்தேற வாழ்த்துகிறோம்..
---
நல்ல பகிர்வு..
//.நம்மவர்களில் இருவர் தொலைபேசியில் 'எங்கே ஃ புட் ஆர்டர் கொடுத்துள்ளீர் ' என கேட்டு தெரிந்து கொண்டனர்.//
//எங்க புள்ளை எத்தனை போட்டிகளில் கலந்துக்கலாம்..?//
எந்த சமுதாயம் எங்கு போகிறது என்பதின் மிகத்தெளிவான விளக்கங்கள்.
ஏன் நம்மவர்கள் மட்டும் இந்த அளவு சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பது பற்றி நம் ஊர் வலைத்தளங்கள் ஒரு ஆய்வு கட்டுரை எழுதலாம்.
நாளைக்கு கியாமத் நாள் மாதிரி இன்றைக்கே சாப்பிட்டுவிடும் "பரப்பு" மாறவேண்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
கல்வி விழிப்புணர்வுக்கு நிகழ்ச்சிகளுக்கு, விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டியுள்ளது.
நன்னோக்கு விழிப்புணர்வுக்கான தொடர்ந்து நடைபெற வேண்டும் இன்ஷா அல்லாஹ்...
//எவ்வளுவு சிரமப்பட்டு ,அனுமதி பெற்று, உணவும் ஏற்பாடு செய்து இலவசமாக தரும் போதும் அதை பயன் படுத்திக் கொள்வதுமில்லை. அதற்கு ஆதரவு தருவதுமில்லை.//
ரஃபியா காக்கா உங்கள் ஆதங்கத்துடன் நாங்களும் பங்குகொள்கிறோம், மாணவர்களுக்கு கல்வி விழிப்புணர்வு என்பதை மாற்றி பெற்றோருக்கு கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவேண்டும் காலமாகத் தான் உள்ளது.
காலம் மாறும்.. இன்ஷா அல்லாஹ்... துஆ செய்வோம்...
அஸ்ஸலாமு அழைக்கும்
நம்ம ஆளுங்களுக்கு முதலில் ஃ புட் மெனு கொடுத்துவிட்டுத்தான்
அடுத்த படியாக படிப்பு விசயங்களை விளக்கவேண்டும்.
இதனால் தான் நாம் படிப்பு விசயத்தில் கடைசி பென்ஜியில் இருக்கின்றோம்
அஸ்ஸலாமு அலைக்கும்.
----------------------------------------------------------
என்ன சமுதாயம் இது?
எங்கே போகப்போகிறது?
அறிவு பசிதேடும் போட்டிக்கு
வாய் ருசிக்க உணவு தேடிடும் அவலம்.
ஒரு கவளம் சோறுக்கு,
கேவளம் யாருக்கு?
தாய் போல பிள்ளை, நூலைப்போல் சேலை.
தந்தையின் சொல்மிக்க மந்திரமில்லை.
சொல்வதற்கு எளிது செய்வதில் கடினம்.
பந்திக்கு முந்து,படைக்கு பிந்து சொன்னவன்
பாட்ட,முப்பாட்ட துலுக்கனோ?
படிப்புக்கும் முந்து,படைக்கும் முந்து
இல்லையென்றால் எல்லாவற்றிலும்
புறமுதுகுதான்.
செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும்
ஈயப்படும்,ஆனால் இங்கோ
வயிற்றுக்கு உணவில்லாவிட்டால்
செவியேறாது நல் வார்தையும்.
சந்திததி சிறக்க செயல் இருக்கனும்.
சந்திசிரிக்க வைப்பது யாரது?
இனி ஒரு விதி செய்வோம்
படிப்பதை கட்டாய முறை செய்வோம்.
இல்லையென்றால் இனி நாய் கூட மதிக்கது,
ச்சீதூ....
இனி கல்வி இல்லாத கமுதாயம் வரும் என்றால்
கருவிலேயே அழித்து விடு ஒரு பாவத்துடனே
முடிந்துவிடும்.(யா அல்லாஹ் எங்களை மன்னிப்பாயாக)
வாழ்த்திய நெஞ்சங்களுக்கு நன்றி,
தம்பி தாஜ் கூறிய படி பெற்றோருக்கும்,உடன்பிரப்புக்குகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியுள்ளது .
காக்கா ப்ரைடு ரைஸ் வேண்டாம் குளிர்காலமாதளால் கீ ரைஸ் ஆர்டர் கொடுங்கள் என ஒரு சகோதரர் டிப்ஸ் கொடுத்தார் .அவருக்கு 2 +1 =3 குழந்தைகள் உள்ளன. எந்த பிள்ளையையும் ஆர்வமூட்டியதாகத் தெரிய வில்லை.நாம் நேரடியாகத்தொடர்பு கொண்டபோது 2 தேறியது. (தேவைதானா?)
ஷஹீத் பழனிபாபா அவர்கள் தொடக்க காலத்தில் சமுதாய விழிப்புணர்வு கூட்டங்களை பல ஊர்களில் போட்டிருக்கிறார். கூட்டம் கூடவும் இல்லை கண்டு கொள்ளவுமில்லை.
பொருத்து பார்த்தார் ஒரு ஊரில் கூட்டம் ஏற்பாடு செய்து, மேடைக்கு முன் எறுமை மாடுகளை கட்டி அதன் முன்பு பேச ஆரம்பித்தார். இதனை கண்ட இளைஞர்கள் 'இவர் நமக்காத்தானே பேசுகிறார்' என்று உணர்ந்து, கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
இதனை நான் இங்கு நியாபகமூட்ட காரணம், இவர்கள் நமது முன்னேற்றத்திற்காக வேண்டிதான் கூட்டம் ஏற்பாடு செய்கிறார்கள் என்று உணர ஆரம்பித்துவிட்டால் கலந்துக்கொண்டு பயன் பெருவார்கள். இன்ஷாஅல்லாஹ்!
அவர்களை உணர வைப்பதற்கு நிறைய வேலை திட்டங்களை செய்யவேண்டியுள்ளது.
என்று எழுவார்கள் நம்மவர்கள்.ஊர்ல தான் இப்படி என்றால் ஊரை விட்டு வெளியிலும் இப்படியா?ஸஹீத் பழனிபாபாவின் மறு உருவமாகிய சலீம் போன்றோரின் எழுச்சியுரை அடிக்கடி தேவை நம் சமுதாயத்துக்கு!
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோ. ரஃபியாவின் ஆக்கம் நம் சமுதாய எதிர்காலத்தூண்களின் கல்வி முன்னேற்றத்தில் பொடுபோக்காகவும், அக்கறையின்றியும் இருந்து வரும் பெற்றோர்களின் உள்ளங்களை தாக்கட்டும்.
பொதுவாக நம் சமுதாய சொந்தங்கள் முக்கியமாக காட்டும் விழிப்புணர்வு எதில் எனில் யார் வீட்டில் பணங்காசுகள் புழக்கம் அதிகம் உண்டு. அந்த வீட்டில் தன் மகனுக்கோ அல்லது மகளுக்கோ மணம் முடிக்க அதிகம் விழிப்புணர்வு உண்டு.
நகைகள் மற்றும் வீடுகட்ட மனைகள் வாங்கி போட அதிகம் விழிப்புணர்வு உண்டு.
படிப்பறிவு உண்டோ, இல்லையோ தொலைதூர மேற்கத்திய நாடுகளுக்கு தன் வீட்டு பிள்ளைகளை அனுப்பி வைத்து அதன் மூலம் அதிகம் வருமானம் பார்க்க அதிகம் விழிப்புணர்வு உண்டு.
அடுத்தவீட்டினர் அல்லது கலியாண வைபவங்களில் பிறர் அணியும் கண்கவர் ஆடை, அணிகலன்களால் ஈர்க்கப்பட்டு அதன் விலை, உருவாக்கம், கிடைக்குமிடம் போன்ற பல தகவல்களை பெறுவதில் அதிகம் விழிப்புணர்வு உண்டு.
பள்ளி செல்லும் சிறார்களுக்கு அவர்களுக்கு தேர்வுபற்றி விழிப்புணர்வு கொடுக்காமல் என்றோ நடக்க இருக்கும் அவர்களின் திருமணத்திற்கு வாழ்க்கைத்துணைகளை தேர்வு செய்து குடும்பம் விட்டு போய்விடும், சொத்து பிரிந்து போய் விடும் என்று காரணமின்றி பல காரணம் கூறி அவர்ளுக்கு மாப்பிளை, பெண் முன்பே பேசிவைப்பதில் அதிகம் விழிப்புணர்வு உண்டு.
வீட்டு கலியாண, வைபவங்களில் அரிசி, பருப்பு, காய்கறிகள், மற்றும் இறைச்சிகளை வெளியூர்களிலிருந்து நன்கு பதம் பார்த்து வாங்கி வந்து ஊர் சுவைக்க விருந்து படைக்க அதிகம் விழிப்புணர்வு உண்டு.
வாழ்வில் எல்லா நலன்களுடனும், வழமுடனும் வாழ வழிவகை செய்யும் உயர்க்கல்வியில் மட்டும் விழிப்புணர்வு இல்லை மாறாக மேற்படிப்பு என்றாலே விழிபிதுங்கி நிற்கும் சமுதாயமாகவே நாம் இன்றும் காணப்படுகிறோம்.
கஷ்டப்பட்டு படித்தவன் எதிர்காலத்தில் எதிலும் வெல்வான்;
கஷ்டப்படாமல் இஷ்டத்திற்கு பணிந்தவன் எதிர்காலத்தில் மூழ்கிப்போவான்.
வருடத்திற்கு இருமுறை அரசால் ஒரு குறிப்பிட்ட தேதி குறிக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து ஐந்து வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு நாட்டில் எல்லாப்பகுதிகளிலும் கொடுத்து போலியோவை அரசு முற்றிலும் ஒழிக்க முயல்வது போல் தன் எதிர்கால சந்ததிகளின் கல்வி மேம்பாட்டில் அக்கறையின்றி இருக்கும் அறுபது வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு (பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள்) கல்வி விழிப்புணர்வு மாநாடுகள் அடிக்கடி நடாத்தப்பட்டு விழிப்புணர்வு என்ற சொட்டு மருந்து மூலம் எதிர்காலத்தில் நம் சமுதாயத்தில் கல்லாமையை இல்லாமையாக்குவோம் இன்ஷா அல்லாஹ்.
தொய்வின்றி தொடரட்டும் நம் விழிப்புணர்வு பணி....
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
MSM(n) : மற்றொரு ஆக்கமாக வர வேண்டிய கருத்துக்களின் காரமும் அதன் வேகமும் நம் சமுதாய மக்களின் மனங்களின் கரையை துடைத்தெறிந்து நிமிர்ந்திருக்கச் செய்யட்டும் இன்ஷா அல்லாஹ்...
அஸ்ஸலாமு அழைக்கும் ...............
rafia காக்காவின் வருத்தம் ரொம்ப நிதர்சனமானது ,
விருந்து கள் பல நடத்தியே நம் மக்களின் சிந்தனை
எவ்வுளவு தூரம் மழுங்கி விட்டது .எப்பதான் வெளியே
வரப்போகிறோம்......
(rafia காக்கா உங்களை 1986 வருடம் என நினைகிறேன்
என் ராத்தம்மா வீட்டு காக்கா msm முஹமது ரபி வீட்டில்
சந்தித்தேன் ........நியாபகம் இருக்கிறதா ?)
உங்களுடைய வருத்தம் புரிகிறது. இன்சா அல்லாஹ் விரைவில் நம் சமுதாய மக்கள் முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்
//வந்துள்ள விண்ணப்பங்களில் 80 சதவிகிதத்தினர் மாற்று மதத்தினர்.நம்மவர்களில் இருவர் தொலைபேசியில் 'எங்கே ஃ புட் ஆர்டர் கொடுத்துள்ளீர் ' என கேட்டு தெரிந்து கொண்டனர். சமுதாய சொந்தங்களே! கொஞ்சம் சிந்தியுங்கள்.//
மற்ற விழிப்புணர்வுகளை விட சாப்பாட்டு விழிப்புணர்வு நம் மக்களிடம் அதிகமாக இருக்கிறது.
சமுதாயத்தை தட்டி எழுப்பும் ராபியா அவர்கள் மென்மேலும் விழிப்புணர்வு கட்டுரைகள் எழுத வேண்டும்
நம்மவர்களின் விழிப்புணர்வுக்கே ஒரு தனி விழிப்புணர்வு மாநாடு நடத்த வேண்டும்,
நல்லபடியாக நடந்தேற என் வாழ்த்துக்கள்
Post a Comment