பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான்னிர் ரஹீம்.
வாழ்வில் எந்த ஒரு விசயமாக இருப்பினும் நல்ல வழி காட்டுதல் இல்லாவிடின் பெறக்கூடிய நன்மைகளையும், பயன்களையும் பெற முடியாது. கடலில் சென்றவர்களுக்கு எப்படி கரையில் உள்ள கலங்கரை விளக்கு வழி காட்டி சரியான திசையை சொல்வது போல், சமுதாயத்தில் ஏற்றம் பெற சரியான வழி காட்டி அவசியம். மன்னர்களுக்கு அமைச்சர்கள் இருந்ததுபோல், அரசாங்கம் நடைபெற ஆலோசகர்கள் இருப்பதுபோல், சமுதாயத்தில் குறிப்பாக நல்ல கல்வியை தேர்ந்தெடுக்க அதை படித்து பயன் பெற ஆதரவுடன் கூடிய வழிகாட்டி அவசியம் அது நம் சமுதாயத்தில் சரிவர அமையாதது நம் துரதிஸ்டம். படிச்சி என்ன கிழிக்கப்போகிறான்? படித்தது போதும் பொழக்கிற வழியப்பாரு. பொம்பள புள்ள படிச்சி இன்ன ஆகப்போவுது இந்த நாட்டையா கட்டி ஆளப்போகிறாள்? கால, காலத்துல கல்யாணம் கட்டிகிட்டு குடும்பம் நடத்த போகிறவதானே? என்று மூத்தவர்களே நம் இளைய தலைமுறைக்கு தடை போடுகின்றதன் விளைவாக மாற்று மததில் படித்தவர்கள் அதிகமாகி, நமக்கு வர வேண்டிய உரிமைகளும், சலுகைகளும் கை மாறிவிடுவதுடன் எதற்கு எடுத்தாலும் மருத்துவர், வழக்கறிஞர், காவல் துறை அதிகாரி, கிராம அலுவலர் என்று பலரிடம் பல்லை காட்டி நிற்க வேண்டிய சூழ்நிலைகளும், சட்டம் ஒழுங்கு நமக்கெதிராய் மாற்றப்படுவதும் அன்றாடம் நடக்கும் அவலங்கள். இவையெல்லாம் களைய கல்வி அவசியம் அதுவும் நம் இஸ்லாம் வலியுறுத்திச் சொல்லி உள்ளன. பெருமானார் ரசூல் (ஸல்)அவர்களும் சொல்லியதுபோல் சீனத்து தேசம் சென்றேனும் கல்வி பயுலுங்கள் என்றதை ஆதார உதாரணமாக கொண்டு கல்வி கற்பது அவசியம் என கொள்வோமாக. அது ஏன் சீன தேசம்? அரபியா சீனத்துக்கு மிகத்தொலைவு ஆக, தூரா தேசம் சென்றாலும் கல்வி அவசியம் கற்க வேண்டியாதிவிடுகிறது! அதுவும் இஸ்லாம் போதிக்கும் வழியில் இஸ்லாத்துடன் கூடிய வகையில் நம் கல்வி அமைய வேண்டியது அவசியம். மேலும் சிறு பருவத்திலிருந்தே இஸ்லாம் நெறிகளுடன் கூடிய ஆரம்ப கல்வி அவசியம் என்பதே நம் கொள்கை எண்ணமாக இருக்க வேண்டும். கல்வி கற்று விட்டால் என்ன, நற்பண்புகள் நம் வாழ்வில் வரும் என்பதை ஆராய கீழே சில விளக்கங்கள்:
குழந்தைகள் குடும்ப அமைப்பைத் தழைக்கச் செய்யும் குலக்கொழுந்துகளாவார்கள். குடும்பக் கட்டுமானத்தின் வாரிசுகள் மட்டுமின்றி, சமுதாய, தேச சீரமைப்புகளுடைய வருங்காலச் சந்ததிகளாகத் திகழ்கின்றனர். அவர்களால்தான் மனித வாழ்வு இனிமை பெறுகிறது. அவர்கள் மீதே நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஏற்படுகிறது. மேற்கூறிய அனைத்தும் சிறந்த இஸ்லாமிய முறையிலான குழந்தை வளர்ப்பின் மூலமும் அவர்களுக்கு ஊட்டப் படும் இஸ்லாமிய ஆரம்பக் கல்வி மூலமும் தான் சாத்தியமாகும்.
குழந்தைகளை நல்லொழுக்கமுடையவர்களாக வளர்ப்பதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானதாகும். குழந்தைகளுக்கு மிகச்சிறந்த கல்வியளித்து, உயர் பட்டதாரிகளாக அவர்களை உருவாக்கி மகிழ்வதற்காகப் பெற்றோர் காலமெல்லாம் படாதபாடு படுகின்றனர். செல்வமும் கல்வியும் சேர்த்துக் கொடுத்தாலுங்கூட நல்லொழுக்கமில்லாவிட்டால் அதனால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. நல்லொழுக்கம் என்னும் அடித்தளத்தின் மீது, கல்வி, செல்வம் முதலியவற்றை அமைத்துக் கொடுத்தல் வேண்டும். அப்போது தான் குழந்தைகள் மட்டுமின்றி குடும்பமும் சமுதாயமும் பெரும் பயன் பெறும். இன்ஷா அல்லாஹ்.
"ஒரு தந்தை தன் குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தை விடச் சிறந்ததாக வேறு எதையும் விட்டுச் செல்வது கிடையாது" [அறிவிப்பாளர் : ஸயீத் பின் ஆஸ்(ரலி); நூல்: திர்மிதீ].
காணும் திசையெங்கும் இப்போது ஒழுங்கீனங்கள் மலிந்து காணப்படுகின்றன. இவை பள்ளிக் குழந்தைகளின் சின்னஞ்சிறு வயதிலேயே அவர்களுடைய மனதில் பதிந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சினிமா, டிவி, பத்திரிகைகள், விளம்பரங்கள் போன்ற கலாச்சாரச் சீரழிவு சக்திகளால் இக்காலக் குழந்தைகள் பெரிதும் கவரப்படுகின்றனர். இவற்றிலிருந்து பெற்றோர் தங்களைக் காத்துக் கொள்வதோடு, தம் குழந்தைகளையும் காத்து வளர்க்கக் கடமைப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்லாமிய அடிப்படைக் கல்விதான் ஒரே தீர்வு. குழந்தைகளுக்குப் பிள்ளைப் பருவத்திலேயே தொழுகையைக் கடைப்பிடிக்கக் கட்டளையிடவேண்டும்.
"குழந்தை ஏழு வயதை எட்டி விடும்போது, தொழுமாறு ஏவுங்கள். பத்து வயதை அடைந்தும் தொழுகையைத் தவறவிட்டால், அடியுங்கள். மேலும், படுக்கையைத் தனித்து அமையுங்கள்" [அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி); நூல்: முஸ்லிம்].
"நிச்சயமாகத் தொழுகையானது, மானக்கேடான, கேவலமான செயல்களிலிருந்து மனிதனைப் பாதுகாக்கின்றது" எனத் திருமறை குர்ஆன் (29:45) கூறுகின்றது.
நமக்கெல்லாம் பேரருளாக இறைவனால் வழங்கப் பட்டுள்ள திருமறை குர்ஆன் பற்றிய கல்வியையும் நபி(ஸல்) அவர்களின் நல்வாழ்க்கை பற்றிய வரலாற்று அறிவையும் குழந்தைகளின் மனதில் பதியுமாறு எடுத்துரைத்து, அவர்களை இளம் பருவத்திலேயே இஸ்லாமிய வார்ப்பில் வடித்தெடுக்க வேண்டியது பெற்றோரின் இன்றியமையாத கடமையாகும்.அவ்வாறு வார்தெடுத்த பிள்ளை என்றும் தீயவழியை நாடாது இன்சாஅல்லாஹ்.
20 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும்
எங்கள் அன்பினிய சகோதரர் தஸ்தகீர் அவர்கள், அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைபெறுவதறகு முன்பு, சில மாதங்களுக்கு முன்பு நமக்கு எழுதியனுப்பியிருந்தார்கள். சரியான தருணத்தில் அதை பதியலாம் என்று காத்திருந்தோம்.இந்த கட்டுரையையை இப்போது பதிவது தான் சரி என்பது எங்களின் முடிவு.
தொடர்ந்து இணைந்திருங்கள்....
கட்டுரையாளரின் கூற்று போல இஸ்லாமிய அடிப்படையுடன் கூடிய நவீன கல்வி முறை அவசியம். இதெல்லாம் நம்மூரில் முஸ்லிம் பெயர் தாங்கிய பெரும்பாலான கல்வி நிறுவனங்களுக்கு பத்தாது. அனைத்தும் உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டிய நல்ல விழிப்புணர்வு தருணம்.
சகோ. சலீம் போன்றவர்களின் அதே சிந்தனையை இக்கட்டுரையில் காண்கிறேன். 'என் சமூகம் படிக்கவேண்டுமே, அத்திடன் மார்க்க அறிவின் அடிப்படையில் கற்க வேண்டுமே' என்கிற கவலை இழையோடுவது கட்டுரையாளரின் சமூக அக்கறையை கச்ட்டுகிறது.
நேர்த்தியாக எழுதப்பட்டிருகும் இக்கட்டுரை அனைத்துப் பெற்றோர்களும் அறிந்து செயல்படுத்தவேண்டிய ஒரு கட்டாயத் தேவை.
நன்றி க்ரவுன், வாழ்த்துக்கள்!
கிரவ்ன்: அடிப்படைக் கல்வி என்பதை நாம் தவறாக புரிந்து வைத்ததன் விளைவே விட்டோம் கோட்டை... மார்க்கம் சார்ந்த கல்வியை ! இதைத்தான் தாமும் சொல்லியிருக்கிறாய் ! கவிதைக்குத்தான் உன் விரல்களை சொடுக்குவாய் என்றிருந்தேன்... கட்டுரையும் கைவந்த கலையாகி கலக்கு(டா)ப்பா !
//அடிப்படைக் கல்வி என்பதை நாம் தவறாக புரிந்து வைத்ததன் விளைவே விட்டோம் கோட்டை... மார்க்கம் சார்ந்த கல்வியை !//
உலகக்கல்வியும் மார்க்க கல்வியும் வேறு வேறு என தனியாக பிரிக்கப்பட்ட விசயம் என்பதாக நம் முன்னோர்கள் தவறாக புரிந்து கொண்டதின் விளைவு நாமெல்லாம்.
Bro Crown...you have exposed most of the matters in this article...well done
சொல் விளையாட்டுக்காரரின் கட்டுரைக்கு பின்னூட்டம் எழுதியது வெள்ளிகிழமை காலை துபை உறக்கத்தின் நடுவே என அமைந்ததால் சொற்களில் எழுத்துப் பிழைகள் இருப்பதை துபை ஜும் ஆக்காக விழித்தபிறகே கவனிக்க முடிந்தது.
வெள்ளிகிழமை காலையும் மதிய பிரியானிக்குப் பிறகும் ஒட்டுமொத்த அமீரகமும் நிலநடுக்கம்கூட அசைக்கமுடியாத உறக்கத்தில் இருக்கும் என்பது எழுதப்படாத விதி.
அஸ்ஸலாமு அழைக்கும்
எல்லோரும் மாணவர்களுக்கு அறிவுரை சொல்லிகொண்டு இருக்கும் போது நம்ம crown மாணவர்களின் பெற்றோர்களுக்கு சொல்லிய அறிவுரை ஆக்கம் அருமை
எப்போதுமே crown சிந்தனை ஒருபடி மேலேதான் இருக்கும் என்பதற்கு இந்த ஆக்கம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) கல்வியை உலக கல்வி, மார்க்க கல்வி என்று பிரித்ததன் காரணத்தால்தான் நல்லொழுக்கும் என்பது கேள்விக்குறியாகி போனது.
மாநாட்டு சிறப்பு பேச்சாளர் சலீம் அவர்கள் கூறிய கல்வி முறையை மார்க்க கல்வியோடு உலக கல்வியை சேர்த்து தருவதற்கு கல்விக்கூடம் ஆரம்பிக்க வேண்டும் என்ற முயற்சியில் சில ஆண்டு காலம் சில சகோதரர்களோடு முயற்சி செய்து அறக்கட்டளையெல்லாம் தொடங்கி எங்களுக்கு அதன் ஆரம்பத்தை தொடக் கூட முடியாத நிலையில் முயற்சியை கைவிட்டு விட்டோம்.
இருந்தாலும் கல்விக்கூடம் தொடங்க வேண்டும் என்ற லட்சியம் மட்டும் கனவாக இருக்கிறது. நல்ல சகோதரர்கள் ஒன்றிணைந்தால் இந்தக் கல்விக்கூடம் சாத்தியம் இன்ஷாஅல்லாஹ்.
எங்களின் லட்சியத்தை கட்டுரையாக வெளியிட்ட சகோதரர் தஸ்தகீர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
சகோ.கிரவுனிடம் இருந்து வந்து இருக்கும் இந்த ஆக்கம் நம் நோக்கத்தை பறைசாற்றுகிறது...மார்க்க/உலக கல்வியுடன் ஒழுக்கத்தையும் கொடுக்க வேண்டும்,ஒழுக்கம் இல்லார் எதை கற்றாலும் அது வீணாபோகும் என்ற வலுவான உண்மையான செய்தியை சொல்லி சென்று இருக்கிறார்...அவரின் மணிமகுடத்தில் சூட்டப்பட்ட மற்றொரு ரத்தினம் இந்த ஆக்கம்.
this article has the same wavelength of CMN SALEEM's thoughts...and ofcourse ours too...............one of the best article from thasthakeer
அஸ்ஸலாமு அலைக்கும்
இந்த கட்டுரை மாநாட்டுக்கு முன்பே பதியப்படவேண்டியவையாக இருந்தாலும் அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் சகோதரர் சலீம் அவர்களின் உரைக்கு பின்னர் இந்த கட்டுரையை படிப்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் சலீம் அவர்களின் எழுச்சியுரையை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும் என்பதில அய்யமில்லை.
சகோதரர் தஸ்தகீர் எப்போதுமே அசத்தல் தான். வாழ்த்துக்கள்.
கல்வி தொடர்பாக தங்களின் உணர்வுப்பூர்வமான கவலையுடன் நாங்களும் ஒன்றினைகிறோம்.
எங்கே ஜூனியர் கிரவுன் ARH?
//எங்கே ஜூனியர் கிரவுன் ARH?//
அதானே, ரயில்ல தனியா பயணம் போகிற மாதிரி ஒரு வெற்று உணரப்படுவதைத் தவிர்க்கமுடியவில்லை. குட்டி க்ரவுனை உடனே கூப்பிடுங்கள் ராயல்ட்டி கொடுத்தாவது.
அஸ்ஸலாமு அலைக்கும். கருத்து தெரிவித்த அந்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி. அல்லாஹ் நமக்கு அளப்பறிய வெற்றி தந்தருள்வானாக. மேலும் இத்தருனத்தில் இங்கே ஒரு கோரிக்கை வைக்கிறேன். எதிர் வரும் சட்டசபைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் பிச்சைகாரர்கள் நம்மிடம் பங்காளி வேசமிட்டு பிச்சை கேட்டுவருவாங்க. ஒவ்வொரு முறையும் இளிச்சவாய சமுதாயம் நாம அவங்களுக்கு ஓட்டுபோட்டு ஏமாறுகிறோம்.இனி அவ்வாறு ஓட்டு போட நமக்குத்தேவையானதை நிறைவேற்ற சொல்லி ஓட்டு புறக்கனிப்பு போன்றவை செய்தால் அரசு நம் கதவு தட்டும். பின் நம் ஓட்டை பதிவோம்.இங்கே ரத்தின சுருக்கமா எழுதியிருக்கிறேன். பெரியவங்க, அதிரைனிருபர் வளைத்தளம் பொதுமக்கள் விழிப்புனர்வை ஆரபிக்குமா? அஹமது சாட்சா,ஜமில் காக்கா, சபீர் காக்கா,ஜாஹிர் காக்கா, சாகுல் காக்கா, நைனாதம்பி காக்கா மற்றும் ஏனைய சகோதரர்கள் இது பற்றி கலந்து நல் முடிவெடுப்பார்களா? இதற்காக கடந்த காலங்களில் நான் பல முறை முயற்சித்து மூக்கு உடைபட்டதுதான் அதிகம். நான் சும்மா கோடுதான் இழுத்துள்ளேன் பெரியவங்கதான் நல்ல பாதை போடனும்.அல்லாஹுக்கே எல்லாப்புகழும்.
அஸ்ஸலாமு அலைக்கும். கருத்து தெரிவித்த அந்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி. அல்லாஹ் நமக்கு அளப்பறிய வெற்றி தந்தருள்வானாக. மேலும் இத்தருனத்தில் இங்கே ஒரு கோரிக்கை வைக்கிறேன். எதிர் வரும் சட்டசபைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் பிச்சைகாரர்கள் நம்மிடம் பங்காளி வேசமிட்டு பிச்சை கேட்டுவருவாங்க. ஒவ்வொரு முறையும் இளிச்சவாய சமுதாயம் நாம அவங்களுக்கு ஓட்டுபோட்டு ஏமாறுகிறோம்.இனி அவ்வாறு ஓட்டு போட நமக்குத்தேவையானதை நிறைவேற்ற சொல்லி ஓட்டு புறக்கனிப்பு போன்றவை செய்தால் அரசு நம் கதவு தட்டும். பின் நம் ஓட்டை பதிவோம்.இங்கே ரத்தின சுருக்கமா எழுதியிருக்கிறேன். பெரியவங்க, அதிரைனிருபர் வளைத்தளம் பொதுமக்கள் விழிப்புனர்வை ஆரபிக்குமா? அஹமது சாட்சா,ஜமில் காக்கா, சபீர் காக்கா,ஜாஹிர் காக்கா, சாகுல் காக்கா, நைனாதம்பி காக்கா மற்றும் ஏனைய சகோதரர்கள் இது பற்றி கலந்து நல் முடிவெடுப்பார்களா? இதற்காக கடந்த காலங்களில் நான் பல முறை முயற்சித்து மூக்கு உடைபட்டதுதான் அதிகம். நான் சும்மா கோடுதான் இழுத்துள்ளேன் பெரியவங்கதான் நல்ல பாதை போடனும்.அல்லாஹுக்கே எல்லாப்புகழும்.
கிரவுன் அதனாலென்ன நீ சொல்லியதையும் கவனிக்கலாமே !
அபு இபுறாகீம்,
வந்தாச்சா?
க்ரவுனின் கோரிக்கை தொடர்பாக ஏதாவது திட்டம் வரைவோமா? எதுவாயிருந்தாலும் விரைந்து செயலாற்றவேண்டும். அனால், நம்மூரில் கட்சி, இயக்கம் என்ற பாகுபாட்டிலிருந்து வெளியே வந்து இதை சாதிக்க முடியுமா என்ன?
sabeer சொன்னது…
அபு இபுறாகீம்,
வந்தாச்சா?
க்ரவுனின் கோரிக்கை தொடர்பாக ஏதாவது திட்டம் வரைவோமா? எதுவாயிருந்தாலும் விரைந்து செயலாற்றவேண்டும். அனால், நம்மூரில் கட்சி, இயக்கம் என்ற பாகுபாட்டிலிருந்து வெளியே வந்து இதை சாதிக்க முடியுமா என்ன?
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நல்ல சான்றோர்கள் கூட்டத்திடம் தான் நான் வைத்த கோரிக்கை ஆகையால் தெருவிற்கு தெரு ஒரு பிரதினிதையை நியமித்தால் , நாம் இன்சாஅல்லாஹ் வெற்றி பெருவோம். இது முதல் அடிதான் இனி வரும் காலம் எல்லாம் கூடி வரும் .அமீன் .காக்காவின் உடனடி அழைபிற்கு நன்றி.
//அபு இபுறாகீம்,
வந்தாச்சா?//
வந்துட்டேன் கவிக் காக்கா ! :)
நேர்த்தியாக எழுதப்பட்டிருகும் இக்கட்டுரை அனைத்துப் பெற்றோர்களும் அறிந்து செயல்படுத்தவேண்டிய ஒரு கட்டாயத் தேவை.
நன்றி வாழ்த்துக்கள்!
www.kannandt90.com
D.T.KANNAN.
kannandt90 சொன்னது…
நேர்த்தியாக எழுதப்பட்டிருகும் இக்கட்டுரை அனைத்துப் பெற்றோர்களும் அறிந்து செயல்படுத்தவேண்டிய ஒரு கட்டாயத் தேவை.
நன்றி வாழ்த்துக்கள்!
www.kannandt90.com
D.T.KANNAN.
--------------------------------------------------------
நன்றி! கண்ணன். சற்று தம்முடைய விசுவல்(VISUAL) கையார்வம் பார்த்தேன்,கலையின் மன்னனாக கண்டேன். கோபியர் இல்லாமல் கண்ணன் இல்லை என்பர் .கோபிக்க கூடாது. கோபியர் இல்லாமலே சோபிக்க முடியும் என்பதை சொன்ன விதம் அருமை.தன் ஆர்வம் புரிகிறது. அதிரை நிருபருக்கும் கட்டுரைகள் அனுப்பலாமே? அது சரிபார்த்து வெளியிடுவார்கள்.சகோதரனே கண்ணனே! உன் அண்ணாக பாவித்து கொள்(என்னைவிட இளையவனாகத்தான் இருக்கிறாய் சகோதரனே!) நல்ல சமூக நோக்கம் கொண்ட ஆக்கம் வெளியிட அ. நி என்றும் தயங்குவது இல்லை.மாற்று தோட்டத்து ரோஜாவையும் ரசிப்பவர்கள் , நேசிப்பவர்கள் நாங்கள்.
Post a Comment