Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஏன் 'கல்வி விழிப்புணர்வு மாநாடு'? கல்வியாளர்களின் கவலை 6

அதிரைநிருபர் | January 05, 2011 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

ஏன் 'கல்வி விழிப்புணர்வு மாநாடு'? யாரும் கேட்கலாம் இந்தக் கேள்வியை!

ஆர்வத்துடன் பலரும், கவலையுடன் சிலரும் எதிர்பார்க்கும் இந்த மாநாடு, இன்ஷா அல்லாஹ், நமதூரில் எதிர்வரும் ஜனவரி பதினான்கு மற்றும் பதினைந்து தேதிகளில் நடைபெறத்தான் போகிறது.

இந்த ஏற்பாட்டில் முயன்று உழைக்கும் நாங்கள் கடந்த சில மாதங்களாக, முனைப்புடன் சில வாரங்களாக, கல்வி நிலையங்களின் நிர்வாகிகளையும் அவற்றின் தலைவர்களையும் நேரில் சென்று கலந்துரையாடல் செய்த வகையில், அவர்களின் கலப்புக் கருத்தாடல்கள் கவலை தொணிப்பதாகத்தான் இருக்கின்றன!

"நம்ம சமுதாயத்துக்காகத்தான் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ஆனா, கவலைக்குரிய விஷயம், அவங்க இந்த வசதிகளை முறையாப் பயன்படுத்திக் கொள்வதில்லை. வாப்பா உம்மாடெ செல்லப் புள்ளையா பசங்க வளந்துட்டாங்க. அவங்க நெனக்கிரத்தை எல்லாம் சாதிக்கணும்னு விரும்புறாங்க – கல்வி முன்னேற்றத்தைத் தவிர!" என்று கவலைப்பட்டார் நிர்வாகி ஒருவர்.

"ஒம்பதாவது படிக்கும்போதே உம்மா-வாப்பா 'பைக்' வாங்கிக் கொடுத்தா, உருப்படுவானா புள்ளே? அப்பறம் ஊர் சுத்துறதுதான் வேலை." இது இன்னொருவரின் எதிர்வாதக் கவலை.

"பொதுவா காலேஜ் பசங்கல்லாம் கவலையில்லா வாழ்க்கைதான் வாழுறாங்க. ஏன்டா, வாப்பா ஃபாரின்லே சம்பாதிச்சு அனுப்புற பணத்தே உம்மாட்டே அடிச்சுப் புடிச்சு வாங்கி, அவன் இஷ்டத்துக்கு 'செல்'லும் வாக்மேனும் வாங்கி 'ஜோக்' கொண்டாடுனா, படிப்பு நம்ம பசங்களுக்கு எப்படிங்க வரும்?" கல்லூரிப் பேராசிரியர் ஒருவரின் கவலைக் குற்றச்சாட்டு இது.

"ராத்திரி பன்னெண்டு மணிக்கு அவனுக்கு ரோட்டில் என்னங்க வேலை? நான் வெளியூர் போய்ட்டு ஊருக்குள் வர்றப்போ, வண்டிப் பேட்டையில் ஒரு கூட்டம். வாகனத்தை நிறுத்திப் பார்த்தால், எல்லாம் என்கிட்டே படிக்கிற பசங்க! 'டேய் மேடம்டா!' என்று அவர்கள் சொன்னது காதில் விழுந்தது. 'என்னப்பா இந்த நேரத்திலே இங்கே நிக்கிறீங்க?' என்றதற்கு, 'சும்மாதான்' என்று ஒருவன் முணுமுணுத்தது என் காதில் விழுந்துச்சு. இந்த மாதிரி இருந்தா, எப்புடி சுபுஹுலே முழிச்சு, தொழுது, பாடங்களைப் படிக்கும் பழக்கம் நம்ம பசங்களுக்கு வரும்? வீனாலே நேரத்தைக் கழிக்கிறாய்ங்களே தவிர, வகுப்புகளில் கொடுக்குற 'அசைன்மென்ட்' பக்கம் கவனமே செலுத்துரதில்லை. மார்க்கக் கடமைகளைச் செய்வதிலும் 'பெயில்' மார்க்கு; படிப்புலேயும் 'பெயில்'. அப்புறம் இவன்ய்ங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்? பொம்புலேப் புள்ளேய்ங்க நல்லாப் படிக்கிறாங்க இந்த ஊர்லே" என்று மிகக் கவலைப்பட்டார் பள்ளித் தலைமையாசிரியை.

இப்படியெல்லாம் தத்தம் கவலையை வெளிப்படுத்திய கல்வியாளர் ஒவ்வொருவருக்கும், "அதனால்தான் இப்படி ஒரு கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்தும் முயற்சியில் முனைந்துள்ளோம்" என்று ஆறுதல் கூறினோம்.

"நல்லாச் செய்ங்கோ. இதுக்காக நான் என்னவெல்லாம் ஒத்துழைப்புக் கொடுக்க முடியுமோ, அதெல்லாம் தரத் தயார்" என்று கைகுலுக்கி விடையளித்த ஹாஜி முஹம்மது சாரின் ஆதரவைக் கண்டு மகிழ்ந்தவர்களாக நாங்கள் விடை பெற்றோம்.

-- அதிரை அஹ்மது
 
 

6 Responses So Far:

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சரியான நேரத்தில் பதியப்பட்டுள்ள செய்தி, கவலை கல்வியாளர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் தான். இன்ஷா அல்லாஹ் நம் மாணவர்கள் கல்வியில் பின் தங்கி இருக்கும் இந்த நிலைமை மாறும். மாற்றிக்காட்டுவோம். அல்லாஹ் துனையிருப்பான்.

//நல்லாச் செய்ங்கோ. இதுக்காக நான் என்னவெல்லாம் ஒத்துழைப்புக் கொடுக்க முடியுமோ, அதெல்லாம் தரத் தயார்" என்று கைகுலுக்கி விடையளித்த ஹாஜி முஹம்மது சாரின் ஆதரவைக் கண்டு மகிழ்ந்தவர்களாக நாங்கள் விடை பெற்றோம்.//

கல்விக்கு ஊக்கமும் உற்சாகமும் தருவதில் ஹாஜி முகம்மது சார் எப்போதுமே முதல் இடத்தில் இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. மீண்டும் அதை ஊர்ஜிதப்படுத்தியிக்கிறார் நம் ஹாஜி சார். இந்த ஆசான் போல் ஒரு 10 ஆசான்கள் அதிரையில் இருந்தால் அதிரையின் மாணவர்களிடையே நல்ல முன்னேற்றதை காணலாம்.

ஹாஜி முகம்மது சாரை நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்...

sabeer.abushahruk said...

அருமையான updates.

எம்மக்களின், குறிப்பாக சிறார்களின் பொடுபோக்கான மனநிலை கவலையளிக்கும் விதமாகத்தான் இருக்கிறது. பதினோறாவது விரலாகவே மறிப்போன அலைபேசியை வைத்து முழுநேரமும் எப்படித்தான் பொழுதுபோக்குகிறார்களோ அல்லாஹ் அறிவான்.

இந்த நம் கனவு மாநாடு நிஜமாகி ஜெயிக்கயில் அதற்கான பலனை பெற்றோரும் ஆசான்களும் மாணவர்களும் நிச்சயம் உணர்வார்கள் என்ற நம்பிக்கையில் தொடங்கி தொடர்வோம் இன்ஷா அல்லாஹ்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவலைதரும் ஆதங்கம், ஆசிரியர்களின் நியாயமான உணர்வுகள் !

எங்கள் ஹாஜி முஹம்மத் சார் ! உங்களின் பேராதரவும் எங்களுக்கு தேவை !

வாருங்கள் கைகோர்ப்போம் அன்று எங்களுக்கு ஊட்டிய உணர்வுகள் இன்றளவும் பசுமையே ! நாங்கள் மறக்கவில்லை !

வெற்றி காண்போம் இன்ஷா அல்லாஹ் !

அலாவுதீன்.S. said...

மாணவர்கள் தொழுகை, படிப்பு இரண்டையும் தவிர தவறான வழியில் செல்வதையும், பெற்றோர்கள் பிள்ளைகள் கேட்டைதையெல்லாம் வாங்கி (செல்லம்)கொடுத்து பிள்ளைகள் வீணாவதையும் – மாணவர்களும் - பெற்றோர்களும் உணரும் வகையில் – மாநாட்டில் - பேச்சாளருக்கு தனித்தலைப்பாகவே கொடுத்தும் மேலும் -

மாணவிகள் காதல் வலையில் வீழ்ந்து விட்டில் பூச்சிகளாய் மாறி வீணாவதையும் இந்த மாநாட்டில் எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.

Yasir said...

நியாமான கவலைதான்....வெகு சீக்கிரத்தில் இந்த நிலமை மாறி நாம் இளைய சமுதாயம் இன்ஷா அல்லாஹ் தலை நிமிர்ந்து நிற்க்கதான் போகிறது..அதற்க்காக தொடர்ந்து உழைப்போம்...உறுதி ஏற்ப்போம் அதற்க்கு இக்கல்வி விழிப்புணர்வு மாநாடு படிக்கட்டாக இருக்ககட்டும்

noohu said...

குறிப்பாக நம் முஸ்லிம் மாணவர்கள் தான் மிகவும் பொடுபோக்காக இருக்கிறார்கள் தந்தைமார்க்ள் எப்படி எல்லாம் சம்பாதிக்கிறார்கள் என்று தெரிவதில்லை இவர்களூக்கு இம்மாநாடு விழிப்புணர்வாகவே இன்ஷா அல்லாஹ் அமைய துவா செய்வோம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு