Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பொறு! 35

அதிரைநிருபர் | January 30, 2011 | ,

அடுத்த உதயம் வரை
அஸ்தமன இருளைப் பொறு,
விருட்சம் விளையும் வரை
விழுந்த விதையைப் பொறு!

பூக்கும் காலம் வரை
பூங்கா மொட்டுகள் பொறு,
பூப்பூத்த காலங்களில்
பிள்ளைகளின் பிழைகள் பொறு!

கைகளில் கனியும் வரை
கிளையில் காயைப் பொறு,
கண்ணுக்குள் உனைக் காத்த
வயோதிகத் தாயைப் பொறு!

மரணத்தின் அருகில் வரை
மூத்தவர் முனகல் பொறு,
இறுதிநாள் இருக்கும் வரை
இதயத்தின் இச்சை பொறு!

திறக்காத கதவில்லை
திறக்கும் வரை திசைகள் பொறு,
திறக்க நீயும் முயன்றுவிட்டால்
திக்குகள் துளங்கும் பொறு!

பச்சைக்கு மாறும் வரை
'சிக்னலில்' சிகப்பைப் பொறு,
உனக்கான நேரம் வரை
உலகிலே காலம் பொறு!

கொள்கையில் நிலைக்கும் வரை
கொடிய உன் கோபம் பொறு,
தொட்டது துளங்கும் வரை
சுட்டுவர் சொற்கள் பொறு!

உண்மைகள் ஜெயிக்கும் வரை
உருப்படா பொய்யை பொறு,
நண்மைகள் நிலைக்கும் வரை
தீமையின் தீங்கைப் பொறு!

உழைக்கும் உடல் இருக்கும் வரை
தோளில் உன் சுமையைப் பொறு,
பிழைக்க வழி கிடைக்கும் வரை
படைத்தவனின் சோதனை பொறு!

நினைத்ததை முடிக்கும் வரை
நகைப்பவர் நக்கல் பொறு,
காரியம் கைகூடி
கயமையும் அழியும் பொறு!

பொறு!
புயலின் பொறுமையே
பூந்தென்றல்,
பூகம்பத்தின் பொறுமையே
பூமித்தாய்,
தீயின் பொறுமையே
தீபம்,
மனிதா உன்
மனதின் பொறுமையே
மனிதம்!

-Sabeer

35 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்காவின் கவிதை வரிகள் அசத்தல் காக்காவின் வயசுக்கு முன்னுரை !

// மரணத்தின் அருகில் வரை
மூத்தவர் முனகல் பொறு,
இறுதிநாள் இருக்கும் வரை
இதயத்தின் இச்சை பொறு!///

இதயங்களை களவெடுக்கும் கலை உங்களிடம் மட்டுமே கவிக்காகா ..

" அருமையான வரிகள் " :)) வழக்கமாக சொல்வதுதான் இருந்தாலும் உண்மை என்றும் உண்மைதானே...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஒவ்வொரு வரிக்கு தர்ஜுமா எழுத வருவான் தம்பி (crown) தலையில் இருப்பதை எழுத்தில் கொட்டிட !

Yasir said...

கவிக்காக்காவின் கவிதைக்கு கருத்தெழுத உடல் நிலை தேறும்வரை பொறுத்து இருக்கமுடியாது

//உழைக்கும் உடல் இருக்கும் வரை
தோளில் உன் சுமையைப் பொறு,
பிழைக்க வழி கிடைக்கும் வரை
படைத்தவனின் சோதனை பொறு// ரசித்த வரிகள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

யாசிரைக் காணோமேன்னு ஒரு பதிவு போடலாம்னு நெனச்சேனா திடு திப்புன்னு இப்போ கருத்து போட்டுட்டு நிக்றாப்ள இங்கே... அதிருக்கட்டும் எப்படி நலம் !?

Yasir said...

சுக்ரன் காக்கா என்னை நினைத்து பார்த்தற்க்கு...நலம் நலத்திற்க்காக ஏங்கி நிற்கிறது....உங்கள் துவாவில் மேம்படும்

Unknown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கவிக் காக்கா உங்க கவிவரிகளை தனியே சொல்லதெரியல. எல்லாவரிகளுமே 'நச்'. 'எனர்ஜி டிரிங்' குடிச்சமாதிரி ஒரு தெம்பு!
கவிக்காக்கா ஒரு "சிறு கதை" தாங்களேன்! ப்பீஸ்...

தம்பி அதிரை என்.ஷஃபாத் "ஆஹா. அருமை..!!"னு இருவார்த்தை சொன்னா போதுமா? உங்க கவிதைகளால் நிறைய சொல்லனும்.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

"தக்தீரை(விதியை) நம்பு
அல்லாஹ்வை திக்ர்(தியானம்) செய்
முயற்சியை விடதே
பொறுமையுடன் இரு
காலத்தை எதிர்பார்" என்று எங்கள் வாப்பா(எம்.அப்துல் ரஸ்ஸாக்) அடிக்கடி சொல்வார்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி ஹிதாயத்துல்லாஹ்... இங்கே கதையல்ல எல்லாமே நிஜம் ! :) நீ அறியாததா ! ஆக புணையப்படும் கதைகளுக்கு பதில் புத்துயிர் தரும் காவியங்களும் கவிதைகளும் அனுபவங்களும் களைகட்டும் களமன்றோ ! அறிந்திருப்பாயப்பா !

Unknown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)அபுஇபுறாஹீம் காக்கா நலமா?
உங்கள் கூற்று 100சதம் உண்மையே. இலக்கியத்தில் எல்லா வடிவங்களைவிடவும் 'கவி'வடிவமே மன உணர்வுகளையும் சமுக அபிலாஷைகளையும் பதிவு செய்ய சிறந்த வடிவம்.

கவிஞர்கள் சிறுகதை எழுதினால் அதில் ஒரு நேர்த்தி இருக்கும். புதிய வார்தைகளும் வட்டார சொற்கள் நிறைந்தும்,தேவையாற்ற வார்த்தைகள் இருக்காது. அதிலும் கவிக் காக்கா என்றால் மொழி ஆளுமை கூடுதலாக இருக்கும். அதனால்தான் காக்கா கவிக் காக்காவிடம் சிறு கதை கேட்டேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சிறு கதம்பமாக கேட்போமே தம்பி ! உன்னுடன் நானும் சேந்து நம்ம கவிக் காக்காவிடம் !

Shameed said...

அஸ்ஸலமு அழைக்கும்

அணுவை துளைத்து அதில் ஏழு கடலை செலுத்தியதுபோல் உள்ளது

"பொறு"

sabeer.abushahruk said...

தம்பி ஹிதாயத்துல்லாஹ்,
உங்கள் அன்பிற்கு நன்றி. நேரம் வாய்க்கும்போது நீங்கள் கேட்கும் சிறுகதையை முயல்வோம் இன்ஷாஹ் அல்லாஹ். இதற்கிடையே, www.thinnai.com ல் கவிதைகள் பகுதியில் "பயணி கவனிக்கிறாள்" ஒரு சிறுகதைபோல்தான், வாசியுங்களேன்.

sabeer.abushahruk said...

தம்பி ஹிதாயத்துல்லாஹ்,
உங்கள் தந்தையார் சொன்னது வெறும் அறிவுரையல்ல; வாழ்க்கையில் வெல்வதற்கான சூத்திரம்; ஏறத்தாழ அதைச் சொல்லத்தான் நானும் முயன்றிருக்கிறேன்.

சரியாகச் சொன்னேனா இல்லையாவென்று அறிய 'உங்கள் மூத்தவருக்காகப்' பொறுத்திருக்கிறேன்.

Shameed said...

//சரியாகச் சொன்னேனா இல்லையாவென்று அறிய 'உங்கள் மூத்தவருக்காகப்' பொறுத்திருக்கிறேன்//

அஸ்ஸலாமு அழைக்கும்

யானை வரும் பின்னே (கிரௌன்)மணியோசை வரும் முன்னே (ஹிதாயத்துல்லாஹ்)

Unknown said...

//உண்மைகள் ஜெயிக்கும் வரை
உருப்படா பொய்யை பொறு,
நண்மைகள் நிலைக்கும் வரை
தீமையின் தீங்கைப் பொறு!//
------------------------------------------------------------

யதார்த்தமாகா ஜெயித்தவர்களின் ரகசியம் இதுவே ........

அதிரைநிலா said...

இந்த கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு

Unknown said...

அபுஇபுறாஹீம் சொன்னது…

சிறு கதம்பமாக கேட்போமே தம்பி ! உன்னுடன் நானும் சேந்து நம்ம கவிக் காக்காவிடம் ! //
நன்றி காக்கா. ஏற்றுக்கொண்ட கவிக் காக்காவிற்கும் நன்றி
கவிக் காக்கா சிறுகதையை ஆவலும் காத்துள்ளோம்.
"சரியாகச் சொன்னேனா இல்லையாவென்று அறிய 'உங்கள் மூத்தவருக்காகப்' பொறுத்திருக்கிறேன்." கவிக் காக்கா உங்கள் முன் நாங்கலெல்லாம் சிறுசுதான் கீரடமாயினும்.

யானை வரும் பின்னே (கிரௌன்)மணியோசை வரும் முன்னே (ஹிதாயத்துல்லாஹ்)

யானை இன்னும் தூக்கம் என்று நினைக்கிறேன்.இன்னும் விடியல...முகநூலிலும் ஸைக்பிலும் கானோம். ஷாஹுல் ஹமீத் காக்கா.

கவிக் காக்கா "பயணி கவனிக்கிறாள்" திண்ணையில் அமர்ந்து சுவைத்தேன்.அருமை. உங்கள் மொழி கூர்மையாக இனிக்கிறது.

crown said...

அதிரைpost சொன்னது…
அபுஇபுறாஹீம் சொன்னது…
சிறு கதம்பமாக கேட்போமே தம்பி ! உன்னுடன் நானும் சேந்து நம்ம கவிக் காக்காவிடம் ! //
நன்றி காக்கா. ஏற்றுக்கொண்ட கவிக் காக்காவிற்கும் நன்றி
கவிக் காக்கா சிறுகதையை ஆவலும் காத்துள்ளோம்.
"சரியாகச் சொன்னேனா இல்லையாவென்று அறிய 'உங்கள் மூத்தவருக்காகப்' பொறுத்திருக்கிறேன்." கவிக் காக்கா உங்கள் முன் நாங்கலெல்லாம் சிறுசுதான் கீரடமாயினும்.
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.முன்னுரையுடன் ஆரம்பிக்கிறேன்.என் இளவல் சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன். தலையில் உள்ள கிரீடத்தை நீங்கள் நிலவில் கொண்டு வைக்கிறீர்கள்.அன்பின் அமுதம் நித்தம் பருகி உருகிபோகிறேன். எல்லாபுகழும் அல்லாஹுக்கே!.

crown said...

அடுத்த உதயம் வரை
அஸ்தமன இருளைப் பொறு,
விருட்சம் விளையும் வரை
விழுந்த விதையைப் பொறு.
-----------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்.
உதயம் வரை இருளை பொறு.
இருளில் கூட இன்பம் இருக்கும். அந்த இன்பத்தின் விளைவே நாம் மற்றும் நம் குழந்தைகள். எனவே துன்பத்திலும் பொருமை வாழ்வின் பெருமை.
ஒருவிதைக்குள் அடைபட்ட பெரும் மரம் கூட பொருமையின் பின் தான் வரும்.அதன் பலன் வளர்ந்து தரும்.பொருத்தால் தான் விதை முளைத்து நாளை நிழலாகவோ,பழமாகவோ பயன் தரும்.பிள்ளை விழுந்து எழுந்து பின் தான் நடக்கும் அதுவரை சிறு சிறு சிராய்புகள் வரத்தான் செய்யும். நல்ல சிந்தைனை,விதையின் மூலம் கவிதை தூவி இருக்கிறீர்கள். வார்தைக்கு காத்திருக்கும் கவிபோல்,
காத்திருந்தால் புவியில் பிறர் மனம் ஆளலாம். ஆள்பவரே ! தொடரட்டும் இந்த சிந்தைனைகள்.

crown said...

பூக்கும் காலம் வரை
பூங்கா மொட்டுகள் பொறு,
பூப்பூத்த காலங்களில்
பிள்ளைகளின் பிழைகள் பொறு!

கைகளில் கனியும் வரை
கிளையில் காயைப் பொறு,
கண்ணுக்குள் உனைக் காத்த
வயோதிகத் தாயைப் பொறு!
--------------------------------------------------------------------
-என்னவொரு வார்தை கோர்வை! அல்ஹம்துலில்லாஹ்.அதிரையில் இதுபோல் எத்தனை ஞானிகளோ!!!!விதையில் ஆரம்பித்து,மொட்டு அவிழ்ந்து,பின் மலர்ந்து ,இலை,கிளையாகி.மெல்ல காய் தோன்றி கனியும் வரை பிள்ளை பருவம் அதன் உருவம் வளர்ந்து நிற்கும் நிலை ஒப்பிடல் அருமையிலும் ,அருமை.அதில் கனி போல் அன்னையும் அவளை காத்திடுவதே தலையாய கடமையும் என அருமையாய் வாழ்கை தோட்டத்தை மணக்க,மணக்க சொன்னவிதம் அருமை. காத்திருந்தோம் கவி கனி சுவைத்தோம்.

crown said...

மரணத்தின் அருகில் வரை
மூத்தவர் முனகல் பொறு,
இறுதிநாள் இருக்கும் வரை
இதயத்தின் இச்சை பொறு!

திறக்காத கதவில்லை
திறக்கும் வரை திசைகள் பொறு,
திறக்க நீயும் முயன்றுவிட்டால்
திக்குகள் துளங்கும் பொறு!

பச்சைக்கு மாறும் வரை
'சிக்னலில்' சிகப்பைப் பொறு,
உனக்கான நேரம் வரை
உலகிலே காலம் பொறு.
------------------------------------------
சகோதரர் ஜாஹிர் எழுதிய "வயசு"ன் தாக்கமா இந்த ஆக்கம்? எல்லாமே அவர் சொன்னதுடன் ஒத்துப்போகிறது. ஒரு வீடு இரு வாசல்.ஒன்று அவர் கட்டிவாசல்,இது நீங்கள் கட்டிய வாசல்.இரண்டும் கடமையையும், மனிதாபிமானத்தையும் ,பொருமைமையும்,கடமையையும்.முயற்சியையும் தான் பேசுகின்றன.இதில் ஒரு ஆச்சரியம் நான் என்ன மேற்கோள் காட்ட இருந்தேனோ எங்கள் வாப்பா இயற்றிய வாழ்கை பா (வாப்பா -இயற்றியதால் மட்டும் வாழ்கை பா அல்ல நிசமாகவே )அதை என் தம்பி முன்பே பதிந்துவிட்டுச் சென்றுவிட்டான்.அதை ஒருமுறை வழி மொழிகிறேன்.

crown said...

கொள்கையில் நிலைக்கும் வரை
கொடிய உன் கோபம் பொறு,
தொட்டது துளங்கும் வரை
சுட்டுவர் சொற்கள் பொறு!

உண்மைகள் ஜெயிக்கும் வரை
உருப்படா பொய்யை பொறு,
நண்மைகள் நிலைக்கும் வரை
தீமையின் தீங்கைப் பொறு!

உழைக்கும் உடல் இருக்கும் வரை
தோளில் உன் சுமையைப் பொறு,
பிழைக்க வழி கிடைக்கும் வரை
படைத்தவனின் சோதனை பொறு!

நினைத்ததை முடிக்கும் வரை
நகைப்பவர் நக்கல் பொறு,
காரியம் கைகூடி
கயமையும் அழியும் பொறு!
-------------------------------------------------------------
ஆத்திர காரனுக்கு புத்தி மட்டு."(பயபக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக்கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் தவறு)களை மன்னிப்பார்கள்." (அல்குர்ஆன் 3 : 134).
னம்மை சுட்டுவர்
இங்கே சுட்டுவது எடுத்துச்சொல்வது,தவறை சுட்டி காட்டுவது.ஆனால் சிலனேரம் நம்மை நையாண்டி செய்வது, ஏளனம் செய்வது. தீயினால் சுட்ட புண் ஆரும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.ஆனால் ஆரும் இஸ்லாம் வழிவாழ்ந்தால்.
அவர் அவர் சக்திக்கு மீறி அல்லாஹ் சோதிப்பதில்லை என்பதை அல்குரானில் சொல்லியுள்ளான். ஆகவே பொருமையே வெற்றியின் ரகசியம் அது மிக,மிக அவசியம்.

crown said...

பொறு!
புயலின் பொறுமையே
பூந்தென்றல்,
பூகம்பத்தின் பொறுமையே
பூமித்தாய்,
தீயின் பொறுமையே
தீபம்,
மனிதா உன்
மனதின் பொறுமையே
மனிதம்!
---------------------------------------------------------------
பொறுமையின் மொழி பெயர்ப்பு,அது ரொம்ப சிறப்பு ஈர்ப்பு.வார்தையின் வார்ப்பு.மனதின் பொறுமையே மனிதம். ஆனால் எல்லாவறையும் விட,பொறுமையின் பொறுமை.பொறுமைக்கே பெருமை.இந்த மொத்த உலகத்தின் பொறுமை. அருமை அன்னலார்(ஸல்) அவர்கள் தான். அவர்களின் பொருமையும் அதன் அடுத்த படிகளில் அவரின் வழித்தோன்றல் சகாபாக்களின் பொறுமையும் எந்த பாக்களிலும் எளிதில் வடித்திடவோ வாழ்ந்திடவோ முடியாது.அல்லாஹ் நம்மை பொறுமையாளர்களின் கூட்டத்தில் சேர்ப்பானாக ஆமீன்.

crown said...

அதிரைpost சொன்னது…

"தக்தீரை(விதியை) நம்பு
அல்லாஹ்வை திக்ர்(தியானம்) செய்
முயற்சியை விடதே
பொறுமையுடன் இரு
காலத்தை எதிர்பார்" என்று எங்கள் வாப்பா(எம்.அப்துல் ரஸ்ஸாக்) அடிக்கடி சொல்வார்கள்.
------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சிலது விடுபட்டு இருக்கு.
தக்தீரை(விதியை) நம்பு. அல்லாஹ்வை திக்ரு,தியானம் செய்.பொறுமையுடன் இரு,கடுமையாக உழை,முயற்சியைவிடாதே.காலத்தை எதிர்பார்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும் . நல்ல எழுத்தர்கள் தங்கள் ஆக்கத்தினை mthasthageer@yahoo.com க்கு அனுப்பி தந்தால் பரிசீனைக்குப்பின் பிரசுரிக்கப்படும். எழுத்தர் ஊக்கமே எமது நோக்கம்.http://www.crownthasthageer.blogspot.com.(அறிச்சுவடி).

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்."கவிகன்னல்"(கரும்பு) சபீரின் "பயணி கவனிக்கிறாள்".படிக்க,ரசிக்க www.crownthasthageer.blogspot.com.

crown said...

பொறு!
புயலின் பொறுமையே
பூந்தென்றல்,
பூகம்பத்தின் பொறுமையே
பூமித்தாய்,
தீயின் பொறுமையே
தீபம்,
மனிதா உன்
மனதின் பொறுமையே
மனிதம்!
------------------

அஸ்ஸலாமு அலைக்கும். புயலின் பொறுமை பூந்தென்றல்,
பூகம்பத்தின் பொறுமையே பூமித்தாய்,திரியின் பொறுமை தீபம்????.இப்படி மாற்றிப்பார்தேன் கவிகன்னல்தான் சரியா?தவறா?ன்னு சொல்லனும். மேலும். நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது,பட்டுகோட்டை "ராசா" எழுத்தாளருரின் கதைக்கு நான் எழுதி கொடுத்த பாடலின் வரி இப்படி ஆரம்பமாகும். அது நினைத்துக்கொண்டேன்.
அந்த வரி.

காதல் ஜோதியே என்மேல் கோபமா?
நான் திரியாய் எரிவது உந்தன் சாபமா?

sabeer.abushahruk said...

'பொறு'மையாய் வாசித்த அ.நி.யின் வாசக வட்டத்திற்கும் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட 

அபு இபுறாஹீம் (நீங்கள் முடுக்கிவிட்டால் எவரும் எதுவும் வெல்வர்), 

அதிரை போஸ்ட்(உங்கள் அண்ணன் முழுப் பரீட்சை எனில் நீங்கள் அரைப் பரீட்சை என பயப்பட வைத்தது உமது மொழி அறிவும் சிந்தனையும்), 

ஹமீது,(மனதைத் துளைத்து மதியை அடைந்து மகிழ்ச்ச் தருது உங்கள் விமரிசனம்)

harmys (ஒரே அலைவரிசையை காண்கிறேன் உங்கள் எண்ணங்களிலும்; உமது இளமையாய்...எனது சற்று முதிர்ச்சியாய்), 

யாசிர்(எல்லாம் பின்னூட்டாமெனில் உமது புரோத ஊட்டம். உடம்பு தேவலாமா?),

அதிரை என்.ஷஃபாத் (அழகிய மழைக்காலம் என சொக்க வைத்துவிட்டு இப்படி அமைதியாய் இருந்தால் எப்படி?)

அதிரைநிலா (இது மட்டுமல்ல, உங்களுக்குப் பிடிக்குமளவுக்கு வாசிக்க நிறைய இருக்கு இங்கே)
ஆகியோருக்கும் நன்றி!

sabeer.abushahruk said...

தம்பி கிரவுன்,

வழக்கம்போல் பரீட்சையில் பாஸாக்கியதற்கு நன்றி. உங்கள் விளக்கவுரை இருந்தால்தான் கவிதை முழுமையடைந்ததாக இங்கொரு கூட்டம் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறது. அத்தனைச் செறிவானது உங்கள் விமரிசனம். 

தவிர, நானும் முதலில் திரியின் பொறுமையே தீபம் என்றுதான் எழுதினேன். பிறகு, பொறுமையின்மையின் வீரியம் உணர்த்தவே 'பூகம்பம், புயல்' போலவே தீ என்று மாற்றி எழுதினேன். காரணம், திரி, முட்டை விளக்குக்குள்ளும் அகல் விளக்குக்குள்ளும்கூட அடங்கிப் போகும் ஆனால் தீ? உக்கிரமல்லவா?(ஸ்ஸ்ஸ்...இப்பவே கண்ண கட்டுதே. அபு இபுறாஹீம், கிரவுன ஒத்துக்கச் சொல்லுங்க)

//காதல் ஜோதியே என்மேல் கோபமா?
நான் திரியாய் எரிவது உந்தன் சாபமா?// 

தயவு செய்து இந்த சுந்தர தமிழை நீட்டித்து முழு கவிதையாக்கவும் அல்லது தொடர என்னை அனுமதிக்கவும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அபு இபுறாஹீம், கிரவுன ஒத்துக்கச் சொல்லுங்க)

//காதல் ஜோதியே என்மேல் கோபமா?
நான் திரியாய் எரிவது உந்தன் சாபமா?//

அங்கே என்னத்த கேட்கிறது தொடருங்கள் கவிக் காக்கா அவர்களே !

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.பாஸ் பாஸாவது என்ன அதிசயமா? ஒருமாணவன்
திருத்திய வாத்தியாரின் பரிட்சை என கொள்வோமா?
இப்ப திருப்தியா? திரியின் விளக்(கு)கம் என்னை திரிசங்கு நிலைக்கு தள்ளிவிட்டி
ட்டீங்க!சரி நீங்க சொல்றத கேட்டுக்குறேன்.தயவு செய்து செந்தமிழ்.அந்த தீந்தமிழை
தொடரவும் அதை என் பிளாக்கில் பிரசுரிக்க அனுமதி தரவும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சபீர் காக்கா,

புத்தி சொல்லுவதற்கு எவ்வளவு வழிகளில் இருந்தாலும், நீங்கள் பொறு என்று புத்திமதி சொல்லியவிதமே தனி சிறப்பு.

பொறுமையோடு வாசித்த எனக்கு வேலை பளு காரணமாக பொறுமையுடன் கருத்திட நேரமில்லை.



//உண்மைகள் ஜெயிக்கும் வரை
உருப்படா பொய்யை பொறு,
நண்மைகள் நிலைக்கும் வரை
தீமையின் தீங்கைப் பொறு!//

//நினைத்ததை முடிக்கும் வரை
நகைப்பவர் நக்கல் பொறு,
காரியம் கைகூடி
கயமையும் அழியும் பொறு!//

எனக்கு ரொம்ப பிடித்த வரிகள், மற்றும் எனக்கு பொருத்தமான வரிகள் என்று சொன்னால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

பொறு பொறு என்று (நாங்கள்) செய்ய வேண்டிய வேலையை பொறுமையாக்கி இப்"பொறு"மை வரிகளை பழ தடவை பொறுமையாக பார்க்க வைத்துவிட்டீர்,

அருமையாக பொறுமையுடன் யோசித்து உங்கள் எண்ணங்களை பொறுமையாக வெளிப்படுத்தியதற்கு நன்றி.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு