நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடிய ஊர்.
நல்லவர்கள், பெரியவர்கள் பலர் அதிகம் வாழ்ந்த ஊர்.
சொந்த,பந்த உறவு முறை கூறி உள்ளத்தில் மகிழ்ந்த ஊர்.
முற்போக்குச்சிந்தனையுடன் சில மூடப்பழக்க வழக்கங்களும் புழக்கத்தில் இருந்து வந்த ஊர்.
சொந்தங்களை பிரிந்து வருடங்கள் பல வெளிநாட்டில் வேண்டா வெறுப்பாய் வாழ்ந்து காட்டிய ஊர்.
பெரும்பாலும் வாலிபத்தை வெளிநாட்டிற்கே சொந்தமாக்கி நொந்து போன காலத்தில் வந்து சேரும் ஊர்.
படிப்பறிவு குறைவே ஆனாலும் இப்பாருலகை சுற்றிப்பார்க்க விரும்பும் ஊர்.
தேவையின்றி வரும் தெரு சண்டைகளை அவ்வப்பொழுது கண்ட ஊர்.
பல கட்சிக்காக கொடி பிடித்து அதன் மூலம் எதையுமே சாதிக்க இயலாமல் தளர்ந்து போன ஊர்.
மின்வெட்டுக்களால் கின்னஸ் சாதனை தாண்டி சாதனை படைத்த ஊர்.
ஒரு இறையில்லம் கட்டி முடிக்க பல அல்லல்களை சந்திக்கும் ஊர்.
அந்நியச்செலாவணியை நாடு நமக்கு என்ன செய்தது என்று கேட்காமல் நம் நாட்டிற்கு அள்ளித்தரும் ஊர்.
அப்பாவிகள் அதிகம் வாழும் ஊர்.
கல்விமான்களும், கொடை வள்ளல்களும் ஒரு காலத்தில் கம்பீரமாக வாழ்ந்து மறைந்த ஊர்.
மண்ணில் நீர் வற்றாமல் வருடம் முழுவதும் வாரி வழங்கிய ஊர்.
ஊர் விரிந்து சில சமூகவிரோதிகளின் உள்ளம் சுருங்கிய ஊர்.
தேர்தல் காலங்களில் ஆசையுடன் திரும்பிப்பார்க்கப்படும் ஊர்.
தேர்தல் முடிந்ததும் அரசியல்வாதிகளால் தலாக் சொல்லப்படும் ஊர்.
சுத்தம் செய்யப்படாத கழிவு நீர் சாக்கடைகளால் கொசுக்கள் குதூகலம் காணும் ஊர்.
ஊர் நலனில் ஒரு சிலரே அக்கரை காட்டும் ஊர்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்..
--மு.செ.மு. நெய்னா முஹம்மது.
22 Responses So Far:
இதுதாங்க எங்களுடைய மற்றும் MSM(n) உடைய ஊர் !
அதெப்படிங்க MSM(n) அப்படியே ஊர்ந்து வருது வழக்கு மொழியும், அன்றாட நிகழ்வுகளும் வசப்படுகிறது உனக்கு மட்டும் !
//சுத்தம் செய்யப்படாத கழிவு நீர் சாக்கடைகளால் கொசுக்கள் குதூகலம் காணும் ஊர்.//
தமிழ்நாட்டில் முன்பு கும்பகோணம், தி.நகர் [ சென்னை] கொசுக்களுக்கு முதலிடம் இருந்தது. அந்த ஊர் கொசுக்கள் தவறாக நம் ஊருக்கு பறந்து வந்து நம் ஊர் கொசுக்களை பார்த்து விட்டு பயந்துபோய் சத்தம் போடாமல் திரும்பி போய்விட்டதாம்.
நோய் பரப்புவது, கூட்டம் அதிகமாக உள்ளது , கொடூரமானது , இன்னும்பல வில்லத்தனங்கள் கொண்டது நம் ஊர் கொசு...[ அது சரி எத்தனையோ படித்தவர்கள் இருந்தும் இந்த விசயத்தில் அரசாங்கத்திடம் ஒரு உதவி கூட வாங்க முடியவில்லையா?]
எனக்கு மட்டும் ஒரு 3 நாள் ஊரில் தங்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் ஒரு ஆய்வுக்கட்டுரையுடன் பெட்டிசன் அனுப்புவது நிச்சயம்.[To Health Ministry]
இதைப்படிக்கும் யாராவது ஊரில் இருந்தால் ஒரு டிஜிட்டல் கேமராவில் எங்கு சுத்தக்குறைவான இடங்கள் , கொசு உற்பத்தியாகும் இடங்கள், தண்ணீர் தேங்கி நிற்க்கும் இடங்கள் இருந்தால் உடன் போட்டோ எடுத்து அனுப்புங்கள். நான் இங்கிருந்து டெலிபோனில் செய்தி சேகரித்து அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்புகிறேன்.
My email; zakirhussain.zakirkl@gmail.com
மிகக் குறைந்த கால அளவில் ஊருக்கு வந்த எங்களால் முடியவில்லை ஆக ! அன்பின் அதிரைநிருபர் வாசக நேசங்கள் ஊரில் இருப்பவர்கள் ஜாஹிர் காக்காவின் அத்தியாவசிய வேண்டுகோளை முன்னிருத்தி செய்ய்யுங்களேன்...
அன்பின் அசத்தல் காக்கா:
எனது பங்கிற்கு நட்புகளிடம் இன்றே இதனைத் தேடி எடுத்திட முயற்சிக்கிறேன் இன்ஷா அல்லாஹ்..
அஸ்ஸலாமு அலைக்கும் ஜஹீர் காக்காவை நானும் வழிமொழிகிறேன்.
பெருமையிலும் சிறுமைகள் பல நிறைந்த ஊர்.
இத்தனை கலவையான நம்மூரிலிருந்து எதிர்மறை விஷயங்களை களைய முடிந்தால்...ஆஹா!
ஜாகிர் தொட்டு வைத்ததை தொடர்வதே சரி.
வாழ்த்துகள் மு.செ.மு.நெ.மு.!
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் நெய்னா முகம்மது,
ஒவ்வொருவரிகளும் சிரிக்கவைத்தாலும்.
ஊரில் இன்றைய நிலையை எண்ணிப்பார்த்தால் நகைச்சுவையைவிட வேதனையே அதிகம்.
நல்ல பதிவுக்கு மிக்க நன்றி.
ஜாஹிர் காக்காவின் முயற்சியில் ஒன்றினைவோம் ஒத்துழைப்போம்.
உள்ளச் சுத்தத்துடன் ஊர் சுத்தத்தை ஏற்படுத்தலாம்.
\\சொந்தங்களை பிரிந்து வருடங்கள் பல வெளிநாட்டில் வேண்டா வெறுப்பாய் வாழ்ந்து காட்டிய ஊர்.//
இவ்வரி தலையில் குட்டியது போன்றொரு விழிப்புணர்வு...ஒரு கணம் சிந்திக்க வேண்டிய வரி
உணர்வுப்பூர்வமான உண்மையை அழகாக வடியமைத்துள்ளீர் பாராட்டுக்கள் சகோ.நெய்னா
அஸ்ஸாமு அழைக்கும்
ஊர்காரணனாய் இருந்தும் உள்ளதை உள்ளபடி சொன்ன விதம் அருமை
அஸ்ஸலாமு அலைக்கும்,
இன்ஷா அல்லாஹ் மு.செ.மு.நெ.மு நீங்கள் உம்ரா சென்று திரும்பும்போது உங்களின் ஆக்கத்திர்க்கு ஒரு தாக்கம் சகோதரர் ஜாஹீர் வாயிலாக கிடைக்கும் என்பதை ஆதரவு வைத்து நானும் அனுக வேண்டியவர்களை அனுகி புகைப்படங்களை சேக்ரிக்க முயற்ச்சிக்கிறேன்.
ZAKIR HUSSAIN சொன்னது…
//இதைப்படிக்கும் யாராவது ஊரில் இருந்தால் ஒரு டிஜிட்டல் கேமராவில் எங்கு சுத்தக்குறைவான இடங்கள் , கொசு உற்பத்தியாகும் இடங்கள், தண்ணீர் தேங்கி நிற்க்கும் இடங்கள் இருந்தால் உடன் போட்டோ எடுத்து அனுப்புங்கள். நான் இங்கிருந்து டெலிபோனில் செய்தி சேகரித்து அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்புகிறேன்.//
அஸ்ஸலாமு அழைக்கும்
நம் ஊரில் உள்ள தூய்மையான இடங்களையும் போட்டோ எடுத்து
நமதூர் மக்களுக்கு காட்டினால் அதுவும் ஒரு முன்மாதிரியாக இருக்கும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
இங்கு வந்து தன் உண்மைக்கருத்துக்களை பகிர்ந்து கொண்ட சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், துஆவும்.
கெட்டுப்போன பழங்களைக்கூட கொஞ்சம் இனிப்பிட்டு, கலர் சேர்த்து அத்துடன் ஐஸ் கட்டிகளையும் கொஞ்சம் கரைத்து பட்டுக்கோட்டை பஸ் ஸடான்டில் எடுப்பாக விற்கப்படும் "ஃபுரூட் மிக்ஸ்சர்" போல் தான் நம்மூர் விசயங்களை பகிர வேண்டியுள்ளது.
பள்ளிப்படிப்பை பாஸ்போர்ட்டாக மாற்றிய ஊர்.
துள்ளிக்குதித்தவனை கொண்டுபோய் திருமணப்பந்தலில் அமர வைக்கும் ஊர்.
என்னவென்று வாழ்த்த என் மண்ணே, மணியே உன்னை.
சந்தோசப்பட ஒரு சில விசயங்கள் இருந்தாலும் வேதனைப்பட பல விசயங்கள் இல்லாமல் இல்லை.
நீங்களுவொ தான் மேக்கொண்டு சொல்லனும்....
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
\\பள்ளிப்படிப்பை பாஸ்போர்ட்டாக மாற்றிய ஊர்.
துள்ளிக்குதித்தவனை கொண்டுபோய் திருமணப்பந்தலில் அமர வைக்கும் ஊர்.//
இன்னும் உங்களிடமிருந்து வரிகள் வற்றாத அருவி போல் வந்து கொண்டுதான் இருக்கிறது,
இந்த தலைப்பிலையே இன்னொரு பாகம் பதியலாம் சகோ.நெய்னா
நீங்களுவொ தான் மேக்கொண்டு சொல்லனும்....
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
-------------------------------------------------------------
தஸ்தகீர் இன்னும் என்ன தாமதம் ............
தார தப்பட்டை கிளியவேனாமா ?
கொசுக் கடியும் சாக்டையும் எங்கவாசல்ல
அதப் பத்தி செய்தி போட்டா
வம்படிப்போம் நாங்க முதல்ல
சுத்தமில்ல சுகமில்லன்னு பொழம்பி தீப்போம்
எங்க கவுன்சிலரு ஓட்டு கேட்டா திரும்பவும் போடுவோம்
அதப்பத்தி உனக்கென்ன விசனமுன்னு வலைதளத்தில் எழுதிவெப்போம்
ஊருக்குள்ள ஒன்னப்பத்தி தப்பா சொல்லி வப்போம்
எங்கவூட்டு புள்ளக்கி காச்சவந்த உனக்குயென்பா?
எங்களுக்கு தேவையெல்லாம் சலுகதாம்பா;
தேவையான கையழுத்துதாம்பா
மஞ்சல் ரேஷன் காடுதானப்பா.
அன்பு காக்காமார்களே சென்ற வருடம் அதிரைபோஸ்டில் போட்ட செய்திக்கு இதுதான் பதிலாக கிடைத்தது.நிலை இன்னும் மாறியபாடில்லை. ஜாஹிர்ஹுஸைன் காக்காவின் முயற்சியில் இணைந்திருப்போம். இன்ஷாஅல்லாஹ் தேவையான புகைப்படங்களை அனுப்பிதருகிறோம்.
ஊரில் உள்ள குறை நிறைகளை தொட்டு பார்த்த வரிகள்
சுனாமியை தடுத்த அளயாத்தி காடுகள் நிறைந்த ஊர்
"கம்பன் எனும் புகை வண்டி கள்ளம், கபடம் இல்லாமல் ஓடி ஓய்ந்த ஊர்" இதையும் சேத்துக்கிங்கெ...
ஊரில் அதிக குப்பைகள் இருக்கும் இடம்:வாய்க்கால்தெருவில் உள்ள பள்ளிக்கூடம் சமையல் கொட்டகை முன்? எவ்வளவு பூச்சிகள் அதன் முன்,பள்ளி பிள்ளைகள் நலனில் அக்கறை வேண்டும்.
தம்பி சலீம், கண்ணால் கண்டதை கலர் படமாக எடுத்து அதிரைநிருபருக்கோ அல்லது ஜாஹிர் காக்காவிற்கோ zakirhussain.zakirkl@gmail.com அனுப்பி வைத்தால், விரித்திருக்கும் வலையில் சிக்கியதை நம்மோடு கூட்டு சேர்த்து படையெடுப்போம் சுகதாரத் துறையை நோக்கி கொசுவோடு புகராக !
எடுத்திருக்கும் காரியத்தின் அவசியம் அறிந்து தயவு செய்து இந்த முயற்சிக்கு உங்களால் ஆன புகைப்படங்களை அனுப்பி வைக்கவும் அதோடு பாலிதீன் பைகளின் ஊர்வலங்களை கண்டாலும் படம் எடுத்து அனுப்பவும்.
Please !
சகோதரர் சலீம்...இப்போதுதான் செல்போனில் கூட போட்டோ எடுக்கலாமே..எடுத்து எனக்கு அனுப்புங்கள்.
zakirhussain.zakirkl@gmail.com
அசத்தல் காக்கா: கொஞ்சம் சிரத்தை எடுத்து ஃபோட்டோ எடுத்து அனுப்புங்கப்பான்னு சொன்னா இன்னைக்கு அவர் என்னிடம் சொன்னது இப்படி "என்னங்க எவ்வளவு சூப்பரா கலர் ஃபோட்டோ எடுத்தா அது என்னடான்னா ஒரே குப்பையா இருக்கு, சாக்கடையா இருக்கு, ஒரே கொசுக்களா இருக்குன்னு" அப்போ எதத்தான் எடுக்கப் போன்னாராம் இவர் !? (எனக்குள்ளே நானே கேட்டுகிட்டேன்) இந்த அந்தா என்று வந்திடும் போல பார்போமே !
Post a Comment