Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரைக்கு கிடைத்திருக்கும் பெருமை.. 17

அதிரைநிருபர் | January 03, 2011 | , ,

2010 ஆம் ஆண்டு வர்த்தக துறையில் சிறந்து விளங்கிய வர்த்தக நிறுவனங்களை கவுரவித்து, பாராட்டி விருதுகள் வழங்கி கெளரவிக்கும் விழா தமிழ்நாடு சினிமா கலை மன்றம் சார்பில் சென்னையில் 01.01.2011 நடைப்பெற்றது. இவ்விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு வர்த்தக நிறுவனர்கள் மற்றும் கலைஞர்கள் பலர் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் வர்த்தக ரீதியில் “வாட்டர் பியூரிவிகேசன் விற்பனை” மற்றும் சர்வீஸ் துறையில் சிறந்து விளங்கி சேவை செய்தமைக்காக “AMAZON WATER PURIFIER” நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது, 2010 ஆம் ஆண்டிற்கான "BEST WATER PURIFIER BRAND" என்ற விருதும்,  தமிழகத்தின் கிராமப்புறங்களில் சுகாதார விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்திவருவதற்காக  "சேவை செம்மல்" என்ற விருதும் நம் அதிரைப்பட்டினத்தை சேர்ந்த M. கஜ்ஜாலி முகம்மது MBA அவர்கள் தட்டி சென்றார். இவ்விழாவில் “AMAZON WATER PURIFIER” நிறுவனத்தின் நிர்வாகி M. கஜ்ஜாலி முகம்மது மற்றும் அவரது சகோதரர் M.அபூபக்கர் இருவர்களும் கலந்துக்கொண்டு இவ்விருதினை பெற்றுக்கொண்டனர்.

தஞ்சாவூர், அதிரைப்பட்டினம், கூத்தாநல்லூர் மற்றும் சென்னையிலும் இந்நிறுவனத்தின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இது ஒரு அதிரைப்பட்டினத்தின் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது

அதிரையில் இளைய தலைமுறைக்களுக்கு முதுகலைப் பட்டதாரியான சகோதரர் M. கஜ்ஜாலி அவர்கள் ஓர் முன் உதாரணமாக உள்ளார் என்பதை அழுத்தமாக சொல்லிக்கொள்ளவிரும்புகிறோம். அவரின் தன்னம்மிக்கை, ஊர்சாகம் நம் எல்லோருக்கும் வரவேண்டும்.  இன்றைக்கு "BEST YOUNGEST BUSINESSMAN OF ADIRAI"  இவராகத்தான் இருக்கவேண்டும்.

 வர்த்தகதுறையில் இந்த சாதனை விருதை பெற்ற "இளம் வர்த்தக நிறுவனர்" அதிரையை சேர்ந்த அன்பு சகோதரர் கஜ்ஜாலி அவர்களை வாழ்த்துகிறோம். தங்களின் வியாபாரம் மற்றும் தங்களின் சேவை மேன்மேலும் வளர துஆ செய்கிறோம்.

-- அதிரைநிருபர் குழு
 
புகைப்படம் நன்றி: adiraixpress

17 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வாழ்த்துகிறோம் மனமாற !

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்
மேலும் பலரையும் இது போல் வாழ்த்த இறைவன் அருள் புரிவானாக ஆமின்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரர் M.கஜ்ஜாலி, சகோதரர் M. அபூபக்கர் மற்றும் கஜ்ஜாலி அவர்களின் வியாபாரத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்துவரும் குடும்பத்தவர்கள், அவரின் நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்களின் வியாபாரமும் தங்களின் சேவையும்.

கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைப்பெறும் இவ்வேலையில் இது போன்ற நல்ல செய்திகள் நமக்கு மிக உற்சாகமூட்டுகிறது.

மேலும் பலரையும் இது போல் வாழ்த்த இறைவன் அருள் புரிவானாக.. ஆமின்.

Meerashah Rafia said...

வரும் AEAC மாநாட்டில், 'உள்நாட்டிலேயே படித்து உள்நாட்டிலேயே சாதிக்க முடியும் என்ற சாதனையாளர்கள்' பட்டியலில் இவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்..இவர்கள் போல் மேலும் பல வர்த்தக சிங்கங்கள் நமதூரில் பெருக ஆசைபடுகிறேன். கஜ்ஜாலி காக்கா&bro . உங்களைகொண்டு நானும் அதிரைவாசி என்று சொல்லிக்கொள்ள பெருமை படுகிறேன் இன்று. உங்கள் சாதனை தொடர எங்கள் துஅ உங்களை சாரும். இன்ஷா அல்லாஹ்.

Yasir said...

ஆறு தான் செல்லும் பாதைகள் அனைத்தையும் வளப்படுத்தி - செழிப்பாக்கி செல்லும் சகோ.கஜ்ஜாலி தான் செல்லும் இடங்கள் தோறும் பல பேர்களை தான் அன்பான பேச்சாலும்,ஆதரவான செயலாலும் வசப்படுத்தி விடுவார் ,சிலரை வசதி படுத்தியும் இருக்கிறார்..கடின உழைப்பிற்க்கு கஜ்ஜாலிதான்....அவரின் இறையச்சம்,உழைப்பு,நேர்மை அவரை இந்த அளவிற்க்கு கொணடு வந்து உள்ளது...அவர் மேலும் பல வெற்றிகள் பெற்று அதிரைப்பட்டினத்திற்க்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற துவாவுடன்..யாசிர்

Meerashah Rafia said...

கஜ்ஜாலி காக்காவின் அலைபேசி எண் யாருக்கேனும் தெரிந்தால் இங்கு இடுக்கையிடுங்கலேன்.வழ்துதல்கூட ஒருவர் வாழ்வை உயர்த்தக்கூடும்..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

Br. Meerasha, please note. Mr. Kazzali mobile: +919994488957

Unknown said...

அல்ஹம்துலில்லாஹ்....

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்ஹம்துலில்லாஹ்.. எனது நண்பரும், உறவினருமான எம். அபூபக்கர் மற்றும் அவரின் இளைய சகோதரன் எம். கஜ்ஜாலிக்கு வர்த்த ரீதியில் கிடைத்திருக்கும் இந்த சாதனை விருது நம் அனைவருக்கும் மிகுந்த சந்தோசத்தையும் தன் தாய்நாட்டிலும் சாதிக்க முடியும் என்ற ஒரு உற்சாகத்தையும் எம்மைப்போன்றோருக்கு இது அளிக்கின்றது. அவர்களின் வியாபார நிறுவனம் மென்மேலும் வளர்ந்து அதிரையின் பெருமை எங்கும் பரவ‌ எல்லாம் வல்ல இறைவனிடம் என்றும் பிரார்த்திக்கின்றேன். ஆமீன்.


மு.செ.மு. நெய்னா முஹம்மது.

RAFIA said...

மப்ரூக்! வாழ்த்துக்கள்.

இன்னுமொரு MSM.சாதைனயாளறாக.

பணமும் பண்ண வேண்டும். புகழும் பெறவேண்டும்.கூடவேமக்களுக்கு தேவையான சேவை செய்து அல்லாவின் பொருத்தத்தை பெருக.
புறப்படு! நிறைய விற்றுடு!! அடுத்த சாதனைக்கு வித்திடு!!!

noohu said...

அல்லாஹ்வுக்கே எல்லாப்புகலும் தொடருட்டும் இந்த சகோதர்களின் சேவை. இன்னும் எல்லா உலகிலும் அல்லாஹ் வெற்றியை நாடுவானாக ஆமீன்.

Saleem said...

சேவை தொடர எல்லாம் வல்ல இறைவன் போதுமனவன் வாழ்த்துக்கள்---- Saleem.M.F.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இந்த விருது இவர்களுக்கு மட்டும் கிடைத்ததல்ல.நம்மூருக்கே(நம்மூரு நிறுவனங்களுக்கு) கிடைத்த ஊக்க விருது.இதன் மூலம் நம்மூரு ஹலாலான நிறுவனங்களனைத்தும் நன்கு வளர்ந்து சாதனை பல பெற்று பெருமை(ஊருக்கும்) சேருங்கள்.இப்போதைய சாதனையாளர் கஜ்ஜாலி,அபூபக்கருக்கு வாழ்த்துக்கள் வாழ்க! வளர்க! மென்மேலும்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.ரஸ்தாலி வாழப்பழத்திற்கு ஒரு தனி சுவை. அந்த வாழப்பழம் போல் சகோதரன் கஜ்ஜாலி.வாழைபழம் உடலுக்கு ஊட்டச்சத்து, நாம் வாழ, பணம் ஊட்ட சத்து. நல் வழியில் உழைத்து பெறும்(பெரும்) பணம் மிகப்பெரும் மதிப்பு மிக்கது. சகோ.கஜ்ஜாலியுடன் பழகிய நாட்கள் நிசமாக ஜாலிதான். என்னை விட சிறியவர் என்றாலும் அதிக பழக்கம் நாங்கள் பழகிய விதம்,இதம்.இவரை சிறு வயதில் பலர் கேலி செய்ததுண்டு அதையெல்லாம் தகர்த்து இன்று சாதனை நாயகனாக இருக்கிறார்.இமாம் கஜ்ஜாலி அறிவின் ஊற்று. இந்த கஜ்ஜாலி அந்த நீர் ஊற்றை சுத்தப்படுத்தி அதன் மூலம் வெற்றி பெற்றுள்ளார்.கல்வி ஊற்றை ஊண்றி குடித்து, உயந்தத நிலையில் நீர் இன்றி அமையாது உலகு என்பதுபோல், நீர் முயற்சிக்காமல் இந்த வெற்றி வந்து இருக்காது சகோதரனே! உன் அனுபவ பாடம் நம் வரும் கால இளைஞர்களுக்கு நல் ஒரு உதாரணம். வாழ்த்துக்கள்.எல்லாப்புகழும் அல்லாஹுக்கே அவனை போற்றி வணங்கியவனாக உம்மை மருபடியும் வாழ்த்துகிறேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இது நம் அதிரைக்கு கிடைத்த பெருமை என்பதை அழுத்தமாக சொல்லவேண்டும்.

சகோதரர் யாசிர் சொல்லியது போல் சகோ.கஜ்ஜாலி தான் செல்லும் இடங்கள் தோறும் பல பேர்களை தான் அன்பான பேச்சாலும்,ஆதரவான செயலாலும் வசப்படுத்தி விடுவார்.

இது போன்ற திறமைகளை ஒவ்வொருவரும் உருவாக்க வேண்டும். அதை நல்வழிக்களுக்காக பயன்படுத்திவரவேண்டும்.

Meerashah Rafia said...

கஜ்ஜாலி காகாவை தன் சாதனையின் ரகசியத்தை,கடந்து வந்த பாதைகளை ஒரு கட்டுரையாக எழுதச்சொன்னால் மிக்க நன்றாக இருக்கும் என நம்புகிறேன்..அவரை அளைபேசியில் தொடர்புகொள்கையில் நம் இடுக்கைகளை கண்டு நெகிழ்சியுற்றதாக கேள்விப்பட்டேன்..மேலும் அவர்கள் வெற்றியின் ரகசியங்களையும் பகிர்ந்துகொண்டார். விக்கிலீக்ஸ் மாதிரி நா லீக் பண்ண விரும்பல.. அவரையே வா(மே)டர லீக் பண்ண சொல்லுங்க.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு