அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்டின் முதல் நாள் (14.01.2011) நிகழ்ச்சியில் இறுதி அமர்வில் VIDEO CONFERENCING மூலம் யுனிடெட் மீடியா நிறுவனர் சகோதரர் தவுவ்லத்கான் அவர்கள் ஊடக்துறை தொடர்பான உரையின் சில துளிகள்:
(குறிப்புகள் எடுக்கவில்லை நினைவிலிருந்து... விடுபட்ட தகவல்களுக்கு மன்னிக்கவும்)
* தனிமனிதனும் சரி ஒரு சமுகமும் சரி ஆளுமைமிக்கவர்களாக ஆவதற்கு ஊடகம் அவசியம்.
* ஊடகத்துறை பற்றி நமது சமுதாயத்திற்கு விழிப்புணர்வு இல்லை மாறாக எதிர் கருத்தே நிலவுகிறது. அந்த நிலை மாற்றபட வேண்டும்.
* ஊடகம் என்றால் தகவல்களையும் கருத்துக்களையும் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பித்து, மக்கள் கருத்தை உருவாக்குவது.
* அச்சு,வானொளி,தொலைக்காட்சியை தொடர்ந்து டிஜிட்டல் மிடியா என்ற இணைய ஊடகம் வந்துவிட்டது. இது இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் தொழிற்புரட்சியாகும்.
* இணைய ஊடகம் வழியாக வாசகர்களும் தங்களது கருத்துக்களையும் முன்வைப்பார்கள்.
* ஒரு ஊடகத்தை நாம் அடையாளம் காண்டுகொள்ளவேண்டும்.அது செய்தி நிறுவனம் உள்ளிட்ட எந்த ஊடகமாட்டும்.
*செய்தி கிடைக்கப்பெற்ற மூலத்தை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
* பிழையான, ஆதாரமற்ற செய்திகளை பரப்பும் ஊடகத்தை சமுகம் புறக்கணிப்பு செய்யும்போது அவர்கள் தங்களை திரித்திக்கொள்ள வாய்ப்புள்ளது.
* ஊடகத்தில் பணியாற்றுபவரின் சமுகத்திற்கு ஆதரவாகதான் இருப்பார் ஏனவே நாமும் ஊடகதுறையில் நுழையவேண்டும்.
* ஊடக நிறுவனம் அரசியல்,அறிவியல்,நிதி,விளையாட்டு உள்ளிட்ட எல்லா துறை எழுத்தாற்றல்மிக்கவர்களை வரவேற்கிறது.நாம் எந்த துறை சார்ந்து படிந்திருந்த போதும் ஊடகத்திலும் பணியாற்ற முடியும். ஏன்? உங்களின் துறை வேலைகளை கவனித்துக்கொண்டே, இல்லத்தில் இருந்துக்கொண்டே கூட பங்களிப்பு செய்ய முடியும்.
* ஊடகத்தில் நுழைய பேச்சாற்றல்,எழுத்தாற்றல் முக்கியமானது. இந்த ஆற்றல் பெற வாசிப்பு பழக்கம் வேண்டும். குறிப்பாக இலக்கிய நூல்கள் பத்திரிக்கைகள் தொடர்ந்து படிக்கவேண்டும்.சரளமாக பேசவும் கற்றுக்கொள்ளவேண்டும்.சொற்களை சரியாக பயன்படுத்தவேண்டும்.
* இதழியல் படிப்பு 3,6 மாதங்கள் 1,2,3 வருடங்கள் உள்ளது. நீங்கள் கல்லுரியில் படித்துக்கொண்டோ, வேலை செய்துக்கொண்டோ இதழியல் படிக்கமுடியும்!இதர துறை படிப்புகளுடன் இதழியலும் படித்து உங்கள் தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள்.
--ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ்
நேரலையில் அவதானித்ததிலிருந்து...
4 Responses So Far:
தம்பி ஹிதாயத்துல்லாஹ்: அருமையான வேலை செய்திருக்கிறாய் ! உன்னுடைய பத்திரிக்கை அனுபவத்தினை இங்கே காணமுடிகிறது, பொறுப்புடன் கோர்வையாக்கி எங்களுக்காக பகிர்ந்தற்கு நன்றிகள் நினைவில் இருந்திடும் என்றும்.
சகோதரர் தவ்லத்கான் அவர்களின் உரையை இங்கே என்னால் முழுவதுமாக அவதானிக்க முடியவில்லை காரணம் இடையிடையே பணிகளும் நேரலை கண்கானிப்பிலும் கவனமிருந்ததால்.
எப்படிப்பட்ட மாநாடு நமதூரில் நடாத்தப்பட வேண்டும் என்றும்; காலம் காலமாக நமதூர் பிள்ளைகள் அயல்நாட்டில் உயர்வான இடத்தில் அமர்வதற்கு ஆங்கில பேச்சாற்றல் தடையாக உள்ளதே என்ற எனது ஆதங்கமும் இப்படிப்பட்ட “விழிப்புணர்வு” மாநாட்டில் எடுத்துச் சொல்ல எனக்கும் வாய்ப்பு கிட்டாமல் போனதும் வருத்தம். கவிக்கோ அப்துற்றஹ்மான் அவர்கள் அபுதபி (அய்மான்) விழாவில் இப்படிப்பட்ட கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைபெற வேண்டும் என்று சொன்ன போழ்தே என் கற்பனையில் யான் உதித்த மண்ணில் இம்மாநாடு உதிக்கும் என்ற எண்ணம் நனவாகிப் போனது நான் பெற்ற பேரின்பம்
சகோ.ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ்...நல்ல தொகுப்பு..ஊடகங்களில் புழங்கும் நம்மை போன்றோர்க்கு உபோயோகியமான தகவல்..எழுத்து வடிவில் படிக்கும்போது இன்னும் சுவராசியமாக உள்ளது...
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் .ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் நேரலையில் அவதானித்ததை இங்கு எங்கள் அனைவருக்கும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
Post a Comment