Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

விழிப்புணர்வின் முதல்'படி' 17

அதிரைநிருபர் | January 11, 2011 | , ,

கனவு மெய்ப்பட வேண்டும் - உயர்
கல்வி வசப்பட வேண்டும்!
கற்க நினைப்ப தெல்லாம் - நாம்
கற்று நிறைவுற வேண்டும்.

கற்றவ ரெல்லாம் வென்றார் - இதை
கருத்தினில் ஏற்றிட வேண்டும்
கல்லாதோரே தோற்றார் -என
கவனத்தில் கொண்டிட வேண்டும்!

பட்டம் படித்திட வேண்டும் - அதில்
பதக்கம் கிடைத்திட வேண்டும்
விட்ட உரிமைக ளெல்லாம் - நாம்
மீட் டெடுத்திட வேண்டும்!

தொழிலுக் கென்று கல்வி - நாம்
தேடிக் கற்றல் வேண்டும்
பதவிக் கென்று படிப்பை - இனி
பார்த்துப் படித்திட வேண்டும்!

ஆட்சி அதிகாரம் வேண்டும் - நமக்கு
அரசாங்க வேலையும் வேண்டும்
அன்றாடங் காய்ச்சியேயாயினும்-நாம்
வென்றாள கல்வியே வேண்டும்.

அதிக மதிப்பெண் வேண்டும் - அதை
அடைய முனைப்பு வேண்டும்
சிகரம் தொடும் வித்தை - நாம்
சேர்ந்து பயில வேண்டும்

கல்லாமை வெளியேறவேண்டும்-உடன்
அறியாமை புறந்தள்ள வேண்டும்
கற்றுத் தெளிந்து நாமும் - எதிர்
காலத்தை வென்றிட வேண்டும்!

மகத்துவம் மிக்க மருத்துவம் - கற்று
மக்களைக் காத்திட வேண்டும்
மடைமை போக்கிடும் அறிவியல் -படித்து
மாட்சிமை பெற்றிட வேண்டும்

சதிகளை எதிர்த்திட சட்டம் - நம்
விதியென படித்திட வேண்டும்
சமூகம் காத்திட அரசியல் - முழு
சாஸனம் கற்றிட வேண்டும்!

கல்வி விழிப்புணர்வு வேண்டும் - அது
பல்கிப் பெருகிடவும் வேண்டும்!
கற்ற மூத்தவ ரெல்லாம் - வந்து
கைதூக்கி கரையேற்ற வேண்டும்!

-- சபீர்

17 Responses So Far:

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

/// கல்வி விழிப்புணர்வு வேண்டும் - அது
பல்கிப் பெருகிடவும் வேண்டும்!
கற்ற மூத்தவ ரெல்லாம் - வந்து
கைதூக்கி கரையேற்ற வேண்டும்! ///

நீ சொன்ன அனைத்து கல்விகளையும் கற்ற இளைஞர்கள் ஒவ்வொரு ஊரிலும் அதிகம் பேர் உருவாக வேண்டும். ஊரில் உள்ள அனைவரும் இதற்காக தியாகம் புரிந்திட முன் வர வேண்டும்.

சட்டம் , மருத்துவம்,
அரசியல், தொழில் முனைவோர்
வழக்கறிஞர், காவல் அதிகாரிகள்
மாவட்ட ஆட்சியர்கள்
இப்படி எல்லாவற்றிலும்
நம் சமுதாய இளைஞர்கள்
அமரும் நாள் வெகு தூரத்தில்
இல்லை! இன்ஷாஅல்லாஹ்!

இப்படி அனைத்து துறைகளிலும்
உருவாகும் மாணவர்கள்
மார்க்கத்தையும் கற்று
இறையச்சம் உடையவர்களாய்
இருப்பது மிக மிக மிக முக்கியம்.

Unknown said...

ஐநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளும் எழுதியுள்ளார்கள் டாக்டர் ஹிமானா சையத் அவர்கள். நல்ல நாவன்மை மிக்க பேச்சாளர்,சமூக மேம்பாட்டு ஆலோசகர் இப்படி பல ஆளுமைமிக்க அவர்கள் 10அல்லது 12 வருடங்களுக்கு முன் அதிரையில் நடை பெற்ற ஒரு மாநாட்டில் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். அதன் இறுதியில்
"தங்கச்சி நீ கொஞ்சம் படிச்சுக்கோ -உன்னுடைய
தகுதிய இன்னும் கொஞ்சம் உயர்த்திக்கோ" என்று தொடங்கும் ஒரு பாடலை பாடினார்கள். அது என்னை மிகவும் கவர்ந்தது மட்டுமில்லை நினைவு வரும்போதெல்லாம் இந்த இரு வரிகளை மட்டும் முனுமுனுப்பதுண்டு.(அதற்கு மேல் நியாபகமில்லை)

கல்வி மாநாடு நடை பெறவுள்ள சூழலில் டாக்டர் ஹிமானா சையத் அவர்களை தொடர்புக்கொண்டு, கல்வி விழிப்புணர்வு மாநாட்டு தகவலை எத்திவைத்து இந்த பாடலையும் நினையூட்டி பாடல் வரிகள் முழுவதையும் கேட்டேன். அல்ஹம்துலில்லாஹ் சிங்கப்பூரில் பல்வேறு பணிகளுக்கிடையிலும் பாட்டை அனுப்பித்தந்தார்கள். அவர்களுக்கு எமது நன்றிகள்.
அந்த பாடல் வரிகளையே எங்கள் கவி காக்காவின் 'விழிப்புணர்வின் முதல்'படி' கவிதைக்கு "கருத்தாக" பதிகிறேன்.

தங்கச்சி நீ கொஞ்சம் படிச்சுக்கோ -உன்னுடைய
தகுதிய இன்னும் கொஞ்சம் உயர்த்திக்கோ - 2முறை

உன்னுடைய முன்னோர்கள்
ஒரு நாள் உலகாண்டார்
உயர்வின் உச்சியிலே
ஓங்கும் புகழ் சேர்த்தார்
நீ ஏன் தாழ்ந்துவிட்டாய் தங்கமே
எழுந்திடு எழுச்சி பெறு செல்வமே! (தங்கச்சி)

ஒன்னுமில்லா மாப்பிள்ளைக்கு
ஒரு லட்சம் கைக்கூலி
உன்னுடைய உம்மா வாப்பா
சொத்துப்பத்து எல்லாம் காலி!
இந்த நிலை மாறனுன்னா
உந்தன் நிலை உயரவேணும்
உலகம் உன்னைப்பத்தி
உசத்தியா பேசவேணும்!
அதற்கு ஒரே வழி கல்விதான்...
அவசியம் செல்லனும் நீ பள்ளிதான் (தங்கச்சி)

ஒரு அடி நினைவுக்கு வரவில்லை... முயன்று பார்த்து அனுப்புகிறேன் இன்ஷா அல்லாஹ்
- ஹிமானா சையத்

Unknown said...

கல்வி விழிப்புணர்வு மாநாட்டிற்கு டாக்டர் ஹிமானா சையத் அவர்களின் தகவல்:

Dhua salam
PLEASE ACKNOWLEDGE RECEIPT.
I AM VERY HAPPY YOU REMEMEMBERED ME.
IT IS AN EXAMPLE THAT TRUE FIELD WORK NEVER DIES AND IT IS REMEBERED ATLEAST IN SOME QUARTRES AT ALL TIMES; ALLAAHU AKBAR! ALHAMDHULILLAAH.

PLEASE CONVEY MY SALAM AND AFFECTION TO ALL THE PEOPLE WHO ATTEND THE CONFERENECE.
WASSALAM
HIMANASYED

Unknown said...

கல்வி விழிப்புணர்வு மாநாட்டிற்கு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வாழ்த்து! http://adiraipost.blogspot.com/2011/01/blog-post_6668.html

crown said...

நம் கல்வி மானாட்டைபற்றி விஞ்ஞானி மயில் சாமி அவர்கள் இதற்கு வாழ்த்து அனுப்பியதைப்பற்றி படித்ததும் என் மனதில் தோன்றிய எண்ணஓட்டம் இப்படி எழுந்தது.
(கவிதை?????)
நம் மண்ணில் இன்று
கல்வியின் விழா எடுக்க உள்ளோம்.
(win)விண்னைப்பற்றி படித்த
அந்த பெருமகன்
நம் விழாவைப்பற்றி பெருமையாக பாராட்டினார்.
இது நம் மண்ணுக்கும்
ஒருநாள் வின்னில் வாய்ப்பு வரும் என்பதை காட்டுவதாக படுகிறது.
ராக்கெட் விட கவுன் டவுன் சொல்வது உண்டு.
நாம் முன்னேற கவுன் அப் ஆரம்பித்து விட்டது.
இனி வானமே எல்லை.
www.adiraipost.blogspot.com

crown said...
This comment has been removed by the author.
crown said...

கனவு மெய்ப்பட வேண்டும் - உயர்
கல்வி வசப்பட வேண்டும்!
கற்க நினைப்ப தெல்லாம் - நாம்
கற்று நிறைவுற வேண்டும்.
------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆமின்

crown said...

கற்றவ ரெல்லாம் வென்றார் - இதை
கருத்தினில் ஏற்றிட வேண்டும்
கல்லாதோரே தோற்றார் -என
கவனத்தில் கொண்டிட வேண்டும்!
------------------------------------------
கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. கல்லாத ஒருசிலர் அதிர்ஸ்டமெனும் மாயையில் வென்றிருக்கலாம்.ஆனால் கல்லாதவன் பணமென்னும் வெளிச்சத்தில் நடந்தாலும் வெற்றியை கான முடியாத கபோதியே!(கண் தெரியாதவரே).

crown said...

பட்டம் படித்திட வேண்டும் - அதில்
பதக்கம் கிடைத்திட வேண்டும்
விட்ட உரிமைக ளெல்லாம் - நாம்
மீட் டெடுத்திட வேண்டும்!
----------------------------------------------------------------------
பல நூல்கள் படித்து பயன் பெற படிப்பு அவசியம் .அந்த படிப்பு படித்தபின் பட்டம் வாங்கி(வர்தகம்,வருமானம்....) வெற்றி காற்றில் பறக்கும் நாளில் நம்மை வீழ்தவரும் டீலை(Deal ) நூல் பல கற்ற அறிவு பயன் படுவது போல் அந்த நூலிலேயே(வழியிலேயே) நாமும் டீல் போட்டு வெற்றி பெறலாம்.

crown said...

தொழிலுக் கென்று கல்வி - நாம்
தேடிக் கற்றல் வேண்டும்
பதவிக் கென்று படிப்பை - இனி
பார்த்துப் படித்திட வேண்டும்!

ஆட்சி அதிகாரம் வேண்டும் - நமக்கு
அரசாங்க வேலையும் வேண்டும்
அன்றாடங் காய்ச்சியேயாயினும்-நாம்
வென்றாள கல்வியே வேண்டும்.
------------------------------------------------------
கு மேல் எளிதாக சொல்ல முடியாது. மொத்தத்தில் நல்ல துறை தேர்ந்தெடுத்து படி !படித்து நல்ல இடம் பிடி! எனபதை நல்லவிதமாய் புரியும் படி இலக்கியவழியில் விளக்கிய விதம் பளீச்....

crown said...

அதிக மதிப்பெண் வேண்டும் - அதை
அடைய முனைப்பு வேண்டும்
சிகரம் தொடும் வித்தை - நாம்
சேர்ந்து பயில வேண்டும்

கல்லாமை வெளியேறவேண்டும்-உடன்
அறியாமை புறந்தள்ள வேண்டும்
கற்றுத் தெளிந்து நாமும் - எதிர்
காலத்தை வென்றிட வேண்டும்!

மகத்துவம் மிக்க மருத்துவம் - கற்று
மக்களைக் காத்திட வேண்டும்
மடைமை போக்கிடும் அறிவியல் -படித்து
மாட்சிமை பெற்றிட வேண்டும்

சதிகளை எதிர்த்திட சட்டம் - நம்
விதியென படித்திட வேண்டும்
சமூகம் காத்திட அரசியல் - முழு
சாஸனம் கற்றிட வேண்டும்!
--------------------------------------------------------------------
வேண்டும்...வேண்டும்...வேண்டும் என உயந்திட தூண்டும் தூண்டுகோளாக இந்த கவிவரிகள் ஊக்கம் தருவதாய் உள்ளது.

crown said...

கல்வி விழிப்புணர்வு வேண்டும் - அது
பல்கிப் பெருகிடவும் வேண்டும்!
கற்ற மூத்தவ ரெல்லாம் - வந்து
கைதூக்கி கரையேற்ற வேண்டும்.
------------------------------------------------
கல்லாத மூத்தவர்களையும் ,படித்த இன்னும் படிக்க போற இளைஞர்கள் வரும் காலத்தில் கைதாங்கி(தூக்கி)அவர்களை காத்துப்போற்றிட உங்கள் கல்வி பயன் பெற வேண்டும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கல்வித் திருவிழா ஊரிலா அல்லது உங்கள் யாவனின் உள்ளக் கிடங்கிலா... மடை திற்ந்த வெள்ளம் போல் தடைகள் அற்ற ஆறாக பெருக்கெடுத்து ஓடும் உங்கள் யாவரின் எண்ணங்களுக்கு களப்பணியாளர்கள் யாவரும் கடமைப்பட்டிருக்கிறோம்.

கவிக் காக்கா: ஒரே வரிதான்... எங்கள்(உங்களையும் சேர்த்தே) அகத்தின் அழகு உங்கள் கவியின் முகம் !

தம்பி ஹிதயத்துல்லாஹ்: உன் முயற்சியும், சிந்தனையும் பல்கிப் பெருகிடவேண்டும் அதனைக் கொண்டு நம் சமுதாயம் பலன்கள் குறைவின்றி கண்டிட வேண்டும(டா)ப்பா !.

கிரவ்ன்(னு)sr: என்னை என்ன சொல்லச் சொல்றே... :)

அதிரை முஜீப் said...

என்கவிதைக்கும் "ஏட்டிக்குப்போட்டி" என, ஏற்றமென கவிதை புனைந்து,
ஆரோக்கிய போட்டிதனை அதிரைக்கு வழிகாட்டி,

நாளடி வென்பாவையும், நாற்பதடி வென்பாவாக்கி, கல்வியின் மகத்துவத்தினை, கவிதை நடையில் நையப்புடைத்து,

காற்றால் மட்டும் போதாது என்குலமே, அதில் நீ
கல்விப்பதக்கமும் கண்டிடவேண்டும்,எனக்கவலையும் அதில் கொண்டு

கற்றோரான கவிபுயல்கள், அதிரையில் கண்டிடும் கல்வி மாநாடு,
மற்றோருக்கும் வழிகாட்டும் வழிதனை கண்டிட்ட,

ஐயம் இனி இல்லை என, அதிரையை ஆரம்பமாக்கி,

"கற்ற மூத்தவ ரெல்லாம் - வந்து கைதூக்கி கரையேற்ற வேண்டும்!"
என்ற கவிதையையே, செயல்முறையாக்கிட்ட கல்விமாநாடே,
கவிதையின் கலப்பொருளானபின், கவிக்காக்கா ஷபீருக்கும் இனி கவலையுமுண்டோ?......

Yasir said...

”வேண்டும் வேண்டும்” என்ற வேட்கை இருந்தாலே வெற்றி நமதாகும்...அதன் இறங்கி விட்டோமே...இன்ஷா அல்லாஹ் வெற்றி காணாமல் விடப்போவது இல்லை,கவிக்காக்கா மற்றும் சகோ.முஜிப் அவர்கள் வேட்கை நெருப்பை பற்ற வைத்து விட்டார்கள் அதை அணையவிடாமல் பாதுகாத்து செல்வோம்..தடைகளை சுட்டெரிப்போம்
//இனி வேண்டியதை கற்ற மூத்தவ ரெல்லாம் - வந்து
கைதூக்கி கரையேற்ற வேண்டும்!/// அதான் வந்துட்டமுல...உத்தரவிடுங்கள்.செயல்படுத்துகிறோம்

அப்துல்மாலிக் said...

எழுச்சிக்கவிதை, தேவையான நேரத்தில் அருமை சகோதரா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு