அல்ஹம்துலில்லாஹ் ஜனவரி 14 மற்றும் 15ம் தேதி நமதூரில் முதலாம் கல்வி விழிப்புணர்வு மாநாடு சிறப்பாக நடந்தேறியது கண்டு நமக்கெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சியும் இறைவனுக்கே எல்லாப்புகழும்.
அதில் பல உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து வந்திருந்த அறிஞர்கள் மற்றும் கல்வி, அறிவியல் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு தம் சிறப்புப்பேச்சால் நம்மையும், நம் இளைய சமுதாயத்தையும் சிந்திக்க வைத்து மேற்கொண்டு நாம் செய்ய வேண்டிய பல வழிமுறைகளையும் அழகுடன் சொல்லிச்சென்றுள்ளார்கள். அவர்களின் நல்ல பல எண்ணங்களையும், எதிர்கால எதிர்ப்பார்ப்புகளையும் அல்லாஹ் நிறைவேற்றித்தர போதுமானவன்.
ஆனால் இக்கல்வி மாநாடு சிறப்புடன் நமதூரில் நடந்தேறிட வித்திட்டவர்கள், பல்வேறு வழிகளில் அதற்கு உதவிய சமூக ஆர்வலர்கள், ஆதரவு கரம் நீட்டியவர்களுக்கு பல இயக்க சிந்தனைவுள்ளவர்கள் ஏதேதோ பல காரணங்களும், குற்றச்சாட்டுகளும் கூறி மாநாட்டிற்கு சரிவர ஒத்துழைப்பு கொடுக்காமல் இது யாருக்கோ புகழ்பாட ஏற்படுத்தப்பட்ட மாநாடு என்று கருதிக்கொண்டு அவர்களில் பலர் இதற்கு ஆதரவுக்கரம் நீட்டாமல் ஒதுங்கிப்போனது நிச்சயம் நாம் வருந்தத்தக்க செயலன்றி வேறென்னவாக இருக்க முடியும்?
பல இயக்க சிந்தனைகளால் நம் பகுத்தறிவை உற்பத்தி செய்யும் மூளை இயங்காமல் இருந்து விடக்கூடாது எச்சமயமும்.
நிச்சயம் நமதூரில் அண்மையில் நடத்தப்பட்ட மாநாடு எல்லா துறைகளிலும் பின் தங்கி போய் இருக்கும் நம் சமுதாயத்தின் கல்லாமையை இல்லாமை ஆக்குவதற்காக ஏற்படுதப்பட்ட ஒரு சிறு விழிப்புணர்வு முயற்சி தான்.
இது கூட நம் பழம்பெரும் கல்லாமையை புதிதாக நம்மூரில் மாநாடு நடத்தி விழிப்புணர்வு மூலம் நம் மக்களை படிப்பின் பக்கம் திசை திருப்ப முயற்சிக்கிறார்கள் இது நம் பாரம்பரியத்திற்கும், ஊர் வழக்கத்திற்கும் வேட்டு வைக்கும் செயல் என்று கூறி யாரேனும் காவல்துறையிடம் சென்று புகார் கொடுத்திருந்தாலோ அல்லது நீதி மன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு தொடுத்திருந்தாலோ ஆச்சரியப்படுவதற்கில்லை. (காரணம் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம்: சென்னையில் நடைப்பயிற்சியில் சென்று கொண்டிருந்த ஒரு வக்கீலை வழியில் ஒரு சேவல் கொத்தி விட்டதாக அவர் காவல் துறை சென்று வழக்கு தொடுத்து பின்னர் காவல் துறையும் அந்த சேவலை கைது செய்து பின்னர் சேவலின் உரிமையாளர் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தி அந்த சேவலை மீட்டுச்சென்றதை பத்திரிக்கையில் படித்திருப்பீர்கள்).
எனவே நாம் தான் பல வசதி, வாய்ப்புகள் இருந்திருந்தும் சரி வர படிக்க வில்லை. படிப்பில் ஆர்வமுள்ள இளைய சமுதாயத்தினர்களுக்கு வழி விட்டு அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவோம் எல்லாக்கருத்து வேறுபாடுகளையும் கலைந்து விட்டு.
இது போன்ற கல்வி விழிப்புணர்வு மாநாடுகளால் அதை நடத்தும் யாரும் பெரும் புகழ் அடைந்து நாளை நாடாளு மன்றத்திற்கு போய் ஜொலிக்கப்போவதில்லை. நிச்சயம் அம்மாநாடுகளால் பல அறிஞர்களும், கல்விமான்களும் எதிர்காலத்தில் இறைவன் நாட்டத்தில் உருவாக்கப்பட்டு அவர்கள் செல்லும் துறைகளிலெல்லாம் ஜொலிக்க வேண்டும் என்பது தான் அதன் நோக்கமன்றி வேறெதுவும் இருக்க இயலாது.
நிச்சயம் கல்விக்கு மதிப்பும், மரியாதையும் செய்தவன் ஒரு போதும் மதிப்பிழந்து போவதில்லை உலகில்.
அரைகுறை கல்வியால் அருகில் வந்த அழகான, அந்தஸ்தான வாய்ப்புகள் பலவற்றை நலுக விட்ட எத்தனையோ மனிதர்களுக்குத் தெரியும் கல்வியின் உண்மையான மதிப்பும், மரியாதையும் என்னவென்று. கண்ணீரின்றி உள்ளத்துக்குள் அழுவதைத்தவிர வேறென்ன செய்து விட முடியும் அவர்களால்?
எனவே இதுபோன்ற கல்வி விழிப்புணர்வு மாநாடுகள் யாராலும், எங்கு நடத்தப்பட்டாலும் நம்மால் இயன்றளவு அதில் நம் சமூகத்துடன் கலந்து கொள்ள முயற்சிப்போம் இன்ஷா அல்லாஹ் வாழ்வில் மேன்மையடைவோம்...
-- மு.செ.மு. நெய்னா முஹம்மது
22 Responses So Far:
MSM(n): இதுதான் இன்றைய வளைகுடா வாழ்வியலில் ஒரு சாயல் !
//அரைகுறை கல்வியால் அருகில் வந்த அழகான, அந்தஸ்தான வாய்ப்புகள் பலவற்றை நலுக விட்ட எத்தனையோ மனிதர்களுக்குத் தெரியும் கல்வியின் உண்மையான மதிப்பும், மரியாதையும் என்னவென்று. கண்ணீரின்றி உள்ளத்துக்குள் அழுவதைத்தவிர வேறென்ன செய்து விட முடியும் அவர்களால்?//
தனது தகுதி என்னவென்றுகூட நம்மவர்களால் புரிந்து கொள்ளக் கூடிய இயலாமையை நினைத்து வேதனைதான் வருகிறது !
நடுநிலையான நல்ல ஆக்கம் !
அவர்கள் ஒதுங்கிப்போனாலும் அதற்காக தளரத் தேவையில்லை.இதன் பலன் மாநாடு நடத்தப்பட்டவர்களுக்கல்ல.இதன் கனியை ஒட்டுமொத்த அதிரைச் சந்ததியே சுவைக்கும்.விதைத்தவர்களுக்கு நிச்சயம் மறுமையில் பலன் கிடைக்கும். அதுவே போதும்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பு சகோதரர் நெய்னா முகம்மது,
கல்வி மாநாடு தொடர்பான தங்களின் நடுநிலையான கருத்தை நிச்சயம் வரவேற்றே ஆகவேண்டும்.
//பல இயக்க சிந்தனைகளால் நம் பகுத்தறிவை உற்பத்தி செய்யும் மூளை இயங்காமல் இருந்து விடக்கூடாது எச்சமயமும்.//
நல்லா உச்சியில் ஆணி அடித்ததுபோல் உள்ளது.
பகுத்தறிவா? அது என்ன விலை? எந்த தொலைக்காட்சி சீரியலில் வரும்? அது எந்த online storeல் கிடைக்கும்? என்று மக்கள் கேட்கும் (கேட்கலாம்) நிலைக்குத்தான் இன்று பல நூறு இயக்கவெறி பிரிவினைகள் உண்டாக்கியிருக்கிறது என்பதை எல்லோரும் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். இதில் அல்லாஹ்வின் திருப்தியே மிக முக்கியம், மக்களின் முன்னேற்றமே முக்கியம், நமக்கு எதுக்கு இந்த கவுரவம்.. கத்திரிக்கா.. என்ற தூய எண்ணத்துடன் அனைத்து தரமக்களுடன் ஒன்று போகும் ஒரு சில இயக்கங்கள் விதிவிலக்காக இருக்கலாம்.
அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் கலந்துக்கொள்ளக்கூடாது என்று முடிவு செய்தவர்கள் பதில் சொல்லட்டும் ஏன் அவர்கள் எதிர்த்தார்கள் என்று?
தாஜுதீன் சொன்னது…அஸ்ஸலாமு அலைக்கும்.
அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் கலந்துக்கொள்ளக்கூடாது என்று முடிவு செய்தவர்கள் பதில் சொல்லட்டும் ஏன் அவர்கள் எதிர்த்தார்கள் என்று?
-----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் எதார்தமா இருக்கிறவங்க எடுக்குற முடிவில் ஒரு அர்தம் இருக்கும்.வம்பன் வம்புதான் செய்வான் அதற்கு காரணமெல்லாம் தேவையில்லை. எல்லாவற்றையும் அல்லாஹ் பார்த்துக்கொள்வான். நம் வழி நல்லது செய்வது. தொடரட்டும் நல் பணி மற்றும் சிந்தனை.
இதில் எழுதப்பட்ட விசயம் நல்லதாக இருந்தாலும்...பொது என்று வந்துவிட்டாலே பல விமர்சனங்களும் , எதிர்ப்புகளும் , ஆதரவும் இருக்கத்தான் செய்யும்.எதற்கும் மயங்காதவர்களே கடைசியில் வெற்றி அடைபவர்கள்.
நாம் வெற்றியடைபவர்களின் கொள்கையை தேர்ந்தெடுப்போம்.
Bro.மு.செ.மு. நெய்னா முஹம்மது எழுதியது எதிர்த்தவர்களுக்கு உண்மையை விளக்கட்டும்.
இந்த கல்வி மாநாடு எதிர்த்தவர்களின் வீட்டு பிள்ளைகளுக்கும் சேர்த்துதான நடத்தப்பட்டது.
இந்த வெற்றி மாநாட்டை அதே நாட்களில் கந்தூரியின் உச்சகட்ட கேளிக்கையான ஹத்தத்து ராவு கூட்டு ராவு என கொண்டாடிக்கொண்டிருந்தவர்க்ள்கூட அவர்கலுக்குச் செல்லும் கூட்டம் குறையும் என எண்ணி எதிர்க்கவில்லை. ஆனால், எதிர்த்த என் சகோதரருக்கும் எனக்குமான சம்பாஷனையின் சிலவற்றை கவனியுங்கள்:
"என்ன, கந்தூரிக்கு ஸ்பெஷலா வந்திருக்கிய" -அவர்.
"ஆமா, கந்தூரிக்குத்தான். கடற்கரைத்தெரு கந்தூரிக்கல்ல, கல்விக் கந்தூரிக்கு" -நான்.
"மாநாடுன்னு போட்டுட்டு மண்டபத்தில நடத்துறிய?"
"மாநாடு என்பதை மாற்றி எழுதுகிறோம். வந்து கலந்துக்கிறீங்களா?"
"நாங்க ஏன் வர்ரோம்!"
"எப்படி எழுதினாலும் நீங்கள் வரப்போவதில்லை என்பது தெறியும். அதெல்லாம் இருக்கட்டும், நான் நம்மை "நாம"என்றல்லவா நினைத்திருக்கிறேன். நிங்க "நாங்கள்" என்றல்லவா சொல்கிறீர்கள்? நீங்கள் யார்?" எனக் கேட்டேன்.
"நாங்க தவ்ஹீத்"
"நான்கூட உங்களோடு நின்று அதே இறையைத்தானே தொழுதேன்? நானும் தவ்ஹீதுதாம்பா. நிச்சயமாக முருகனையோ முனியான்டியையோ தொழுபவன் அல்ல. இப்ப சொல்லுங்க நாங்கள நாமா?"
"நாங்கதான்"
""சரிப்பா, நீங்க வாழ்க. எனக்கு குடும்பம் பொன்டாட்டி பிள்ளைங்க இருக்கு, பொழப்பு இருக்கு. சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாத்தனும் வர்ட்டா"
என்னையும் என் சகோதரனையும் பிரித்துப்போட்டது யாராயிருந்தாலும் அல்லாஹ் கேட்ப்பான் என்ற து ஆவோடு பள்ளியைவிட்டு வெளியேறினேன்.
சகோதரர் சபீர் அவர்களே!.
உங்கள் மனவருத்தம் நன்றாகவே புலப்படுகின்றது. ஆனால் இவர்களோ, தெரிந்திருந்தும் ஈகோ எனும் மாயையிலும், தலைமை எனும் மடமையிலும் சிக்கிக்கொண்டு வெளியில் வரமுடியாமல் திரிபவர்கள். வண்டியில் பூட்டப்பட்ட குதிரைக்கு தன் இரு கண்ணும் மறைக்கப்பட்ட காரணம் எப்படி தெரியாதோ, அது போல்தான் இவர்களும்!. ஒருநாள் வண்டிக்காரன் குதிரை இனி சுமை இழுக்காது அல்லது முரட்டுத்தனம் செய்கின்றது என்று தெரியவரும் நாள் வரும்போது, குதிரையை கழட்டி விட்டுவிடுவான். பின் வேறு குதிரை அந்த இடத்திற்கு வரும். இதுதான் இவர்களின் நிலை!.
இவர்களைப் போன்றவர்கள் தான், இன்று தக்க பாடம் படித்து இன்று வெளியில் வந்து கல்வி சேவை புரிந்து கொண்டிருப்பவர்கள். எனவே கவலைவேண்டாம்.
அஸ்ஸலாமு அழைக்கும்
செய்தால் நாங்கள் செய்வோம் எங்களுக்கு செய்யத் தெரியாத நல்ல விஷயத்தை வேறு யாரும் செய்தால் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் அல்லது செய்ய விடமாட்டோம்
நல்ல கொள்கை!!
இவர்களின் கொள்கையை பார்த்தால் நாய் வைக்கோல் போர் கதை தான் நினைவுக்கு வருகின்றது.
நெய்னாவின் நியாயமான பார்வை ........
சபீர் காக்காவின் நியாயமான வருத்தம் .....
சகோ முஜீபின் நியாயமான கோபம் .......
ஆனால் ஹமீது காக்காவின் அநியாயத்துக்கு நகைச்சுவை ..........
நல்ல கொள்கை!!
இவர்களின் கொள்கையை பார்த்தால் நாய் வைக்கோல் போர் கதை தான் நினைவுக்கு வருகின்றது.
//நிச்சயம் கல்விக்கு மதிப்பும், மரியாதையும் செய்தவன் ஒரு போதும் மதிப்பிழந்து போவதில்லை உலகில்.//
100% True
எதிர்த்தார்களா? நெய்னா இது என்னை ஆச்சரியபட வைக்குது. கல்வியை விட வேறு என்னா சொத்து தந்துவிட முடியும் இவர்களால். சிறந்த கல்வியில்லாமல் சிறந்த பதவி கைக்கு வந்து எட்டாமல் கண்ணீர் மல்க நம் சமுதாயம் இருக்கு. எதிர்ப்பு தெரிவித்தவன் தன் குடும்பத்தையே எதிர்த்தவனாவான், நாளை அவர்கள் சந்ததிகளுக்கும் சிறந்த வழிகாட்டல் வேண்டும். இந்த எதிர்ப்புகளெல்லாம் அடுத்த கட்டத்திற்கான வெற்றி மேடைகள், இன்ஷால்லாஹ் தொடரட்டும் இந்த விழுப்புணர்வுகள்
harmys சொன்னது…
//ஆனால் ஹமீது காக்காவின் அநியாயத்துக்கு நகைச்சுவை//
தம்பி harmys இன்னும் நகைசுவையாய் போடலாம் ஆனால் கொஞ்சம் அப்படியும் இப்படியுமா இருக்கும்.
அப்புறமா தம்பி தாஜுதீன் உடனே DELETE செய்து விடுவார் அதுனலே தான் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டி உள்ளது
அஸ்ஸலாமு அழைக்கும்
அடுத்த ஆக்கமும் மு.செ.மு. நெய்னா முஹம்மது இட்டால் அவருக்கு அதிரை நிருபரில் முதல் செஞ்சுரி கப் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
ஒரு சிறு கூட்டம் நம்மை எதிர்த்து கொண்டும்,விமர்சித்து கொண்டும் இருக்க வேண்டும்(அவர்களும் அப்படிதான் இருப்பார்கள் ,அவர்களுக்கு கிட்னிதான் மூளைபோல் வேலை செய்யும் ) ...நம்முடைய எனர்ஜி டானிக்கே அவர்கள் தானே..கப்பலை முன்னேற்றி செலுத்துவதற்க்கு...தண்ணீரை பின்னோக்கி தள்ள வேண்டும்...இந்த எதிர்ப்புகளை புறந்தள்ளி நாம் கொண்ட குறிகோளுடன் வருபவர்களை அரவணைத்து கொண்டு முன்னேறுவோம்
Shameed சொன்னது…
அஸ்ஸலாமு அழைக்கும்
அடுத்த ஆக்கமும் மு.செ.மு. நெய்னா முஹம்மது இட்டால் அவருக்கு அதிரை நிருபரில் முதல் செஞ்சுரி கப் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்///
சுத்தி சுத்தி அடிக்கிற மாதிரி இருக்கே Sஹமீத் காக்கா ! :)
மாநாட்டை எதிர்த்தார்களா? மிகவும் சந்தோஷப்படவேண்டிய விஷயம்!
அதுவும் அவர்கள் எதிர்த்தார்களா? இன்னும் சந்தோஷம்!!
மாநாட்டை எதிர்த்து 'எதிர்' மாநாடு போட்டால் மேலும் கூடுதல் சந்தோஷமே!!!
என்ன நூதனமா இருக்கா? இதான் உண்மை!
எதிர்க்கப்படாவிட்டால் நாம் எழ முடியாது. இது அவர்களும் அறிந்த நிஜம்தான்!
இதில் ஒரு வேதனை என்னவென்றால், ஆசானின் ஆசான்கள் நடத்தியதை மானவனின் மானவன் எதிர்த்ததுதான்! ((இதனை தெரிந்தவர்கள் பதிலளிக்க வேண்டாம்., பிளீஸ். அவர்கள் 'மேலே' கேட்டு தெரிஞ்சிக்கட்டும்!))
//என்னையும் என் சகோதரனையும் பிரித்துப்போட்டது யாராயிருந்தாலும் அல்லாஹ் கேட்ப்பான் என்ற து ஆவோடு பள்ளியைவிட்டு வெளியேறினேன்.//ஷபீர் காக்கா உங்களுடன் நானும் சேர்ந்து துஆ கேட்கிறேன்.
Yasir சொன்னது…
//கப்பலை முன்னேற்றி செலுத்துவதற்க்கு...தண்ணீரை பின்னோக்கி தள்ள வேண்டும்//
அஸ்ஸலாமு அழைக்கும்
படிப்பின் அருமை தெரியாதவர்களுக்கு"நியூடன் விதி " துப்பாக்கியின் பின் இயக்கம் பற்றியெல்லாம் சொன்னால் புரியாது என்று கப்பல் தண்ணீர் பின்னோக்கி தள்ளுதல் என்று சிம்பிளாக சிம்பாளிக்கா சொன்ன யாசிருக்க அவர்கள்தான் நன்றி சொல்ல வேண்டும்
அஸ்ஸலாமு அழைக்கும்
செஞ்சுரி என்பதை ஹாட்ரிக் என மாற்றி படிக்கவும்
அஸ்ஸலாமு அலைக்கும்.
இங்கு நல்ல பல கருத்துக்களை பிரித்து மேயாமல் பக்குவமாக பகிர்ந்து கொண்ட அனைத்து சகோதரர்கள் அபுஇபுறாகீம் காக்கா, தாஜுத்தீன், சபீர் காக்கா, யாசிர், தஸ்தகீர், ஹிதாயத்துல்லாஹ், அப்துல்ரஹ்மான், சாகுல் காக்கா, மச்சான் ஜஹபர் சாதிக், அதிரை முஜீப், மாலிக், ஜாஹிர் காக்கா அனைவர்களுக்கும் ரொம்ப தேங்க்ஸ்....
சாஹுலாக்கா உசுப்பேத்துறதுனாலெ கூடிய சீக்கிரம் செஞ்சுரியே போடவச்சுருவாஹெ போலெ ஈக்கிது. இன்ஷா அல்லாஹ் சீக்கிரம் எழுதாட்டி யாராவது வந்து இடையிலெ ஓவர் போட்டுடப்போறாங்கெ......
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
யான் வாப்பா மாருவலா,என்னமோ பேசிக்கிறியே கருத்து சொல்லுறிய,எனக்கு ஒன்னும் புரியலய?
பாத்திமா ஜொஹ்ரா சொன்னது…
யான் வாப்பா மாருவலா,என்னமோ பேசிக்கிறியே கருத்து சொல்லுறிய,எனக்கு ஒன்னும் புரியலய? ///
நன்மையை நாடி யார் நல்லதைச் செய்தாலும் ஒரு சிறு கூட்டம் தாங்கள் செய்வது மட்டும்தான் நன்மைகள் என்று வாதிட்டும்,மூர்க்கம் கொண்டும்,மூக்குடைந்தும் இருப்பவர்களைதான் மேலே மக்களின் கருத்துக்களின் கரு..
இருப்பினும் கட்டுரையோ பொதுவாக வைத்த ஒரு பஞ்ச் !
அது சரி, கேள்வி பட்டிருப்பீர்கள்தானே ஊரில் நடந்த கல்வி விழிப்புணர்வு மாநாடு அதன் நேரலையை அல்லது காணொளி தொகுப்பை இங்கே கண்டிருப்பீர்களே அதனைப் பற்றி உங்களின் கருத்துக்கள் என்னவென்பதை நீங்களும் பதியலாமே ! :)
இதில் எங்கேய்யா வந்த இயக்கம்.தங்களது பிள்ளைகளுக்கு சேர்த்து தான் என்பதை எதிர்ப்பவார்கள் மறக்க இயலாது.முடிந்தால் சலிம் பேச்சை சிடிக்களாக அனைவருக்கும் வினியோகம் செய்யுங்கள்.மாநாட்டிற்காக உழைத்த அனைவருக்கும் துவா செய்யுகிறேன்.
Post a Comment